koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Thursday, September 3, 2015

நடிகர் விஜய் & அஜீத் ஜாதகப்பலன்கள்

நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் ஜாதகங்களின் ஒற்றுமைகள்


                கடக ராசி, நம் இந்திய நாட்டின் ராசி. கடகம். நாட்டின் தலைச்சிறந்த தலைவர்கள், பொதுநலவாதிகள், ஆன்மீகவாதிகள், கலைஞர்கள் போன்றோர்களில் கடக ராசியினரே மிக மிக அதிகம். நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங், அப்துல்கலாம், கர்மவீரர் காமராஜர், கலைஞர் கருணாநிதி, கவியரசு கண்ணதாசன், ராமலிங்க வள்ளலார், ஸ்ரீ ராமர் ஆகியோர் கடக ராசி அல்லது கடக லக்கினத்தில் பிறந்தவர்களே ஆகும்.

                         தமிழ் திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களாகத் திகழும் நடிகர் விஜய் மற்றும் அஜீத் ஆகிய இருவரின்பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் பார்க்கும் போது இருவருமே மிகவும் சக்தி வாய்ந்த கடக ராசியில் பிறந்தவர்கள். இருவரும் ஒரே ராசியினர் மட்டும் அல்ல நட்சத்திரத்திலும் ஒரே நட்சத்திரக்காரர்கள். 

                        ஆம் 27 நட்சத்திரங்களில் மிகவும் வலிமை வாய்ந்த சக்தி வாய்ந்த நீதி, நேர்மை, உண்மை, கருணை, பாசம், பண்பு, பணிவு, கடின உழைப்பு எனும் நற்குணங்களை பெற்ற தேவ கணம் (தெய்வீக குணம்) கொண்ட சனீஸ்வர பகவானின் பூச நட்சத்திரத்தில் ஜனித்த புண்ணியவான்கள் நம் தல தளபதிகள். 

                     சனியின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் பட்ட கஷ்ட்டங்கள், தோல்விகள், அவமானங்கள், ஏமாற்றங்கள் ஏராளம் இருக்கும். பிறந்தது முதல் 30 ஆண்டு காலம் பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகி எந்த ஒரு காரியத்திலும் முதல் நிலையில் தோல்வியை தழுவி இரண்டாம் முயற்சியில் வெற்றியை அடைந்தவர்கள் அடையக்கூடியவர்கள்.

               சந்திரனின் ராசியில் உதித்த இவர்களின் மனது மென்மையானது, கற்பனை ரசனை மிக்கது, இனிமையான குளிமையான பேச்சை உடையது, கருணை கடல் போன்றது. பெண்களை மதிக்ககூடியவர்கள். தாயின் மீது அதீத அன்பு கொண்டவர்கள். பெண்களின் அன்பு ஆதரவு உதவிகளை வாழ்நாள் முழுவதும் பெறக்கூடியவர்கள்.

விஜய் ஜாதக கிரக அமைப்புகள் ;


                     விஜய் அவர்கள் கடக லக்கினம் கடக ராசி பூச நட்சத்திரத்தில் பிறந்தவர். லக்கினத்தில் சசி மங்கள யோகத்துடன் சந்திரன் செவ்வாய் கூட்டணி, 5 ல் ராகு, 8 ல் குரு, லாபஸ்தானத்தில் சுக்கிரன் கேது, 12 ல் சனி சூரியன் புதன் ஆகிய கிரக அமைப்பில் பிறந்த இவரது ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன், புதன் ஆகிய 3 கிரகங்கள் ஆட்சி (90 % பலம்) பெற்றுள்ளது.

அஜீத் ஜாதக கிரகஅமைப்புகள் :

         
                     அஜீத் அவர்கள் கன்னி லக்கினம் கடக ராசி பூச நட்சத்திரத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி புதன் 7 ஆம் வீட்டில் நீசபங்க ராஜ யோகத்தில் சுக்கிரனுடன் கூட்டணி. லக்கினத்தில் சந்திரனுடன் கேது, 3 ல் குரு, 5 ல் செவ்வாய் ராகு, 8 ல் சூரியன், பாக்கியஸ்தானத்தில் சனி ஆகிய கிரக அமைப்பில் பிறந்த இவரது ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆகிய 3 கிரகங்கள் உச்சம் (100 % பலம்) பெற்றுள்ளது. மேலும் சந்திரன்  ஆட்சி  (90 % பலம்).
விஜய் அஜீத் ஜாதகப்பலன்கள் :


                        விஜய் அஜீத் ஜாதத்தில் பல்வேறு யோகங்கள் மற்றும் திருப்புமுனைகள் காணப்படுகின்றன ஜோதிடம் படித்தவர்களுக்கு இவர்களது ராசி கட்டத்தை பார்த்தாலே அது தெரியும்.
                     ஆயினும் இவர்களது குணா நலன்கள் மற்றும் நடப்பு தசா புத்தி பலன்கள் மற்றும் எதிகாலத்தில் இவர்களின் வாழ்க்கை நிலை போன்ற முக்கியமான செய்திகள் குறித்து அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்..
                                                                                 நன்றி...                      (தொடரும்)