பாகம் 146
எக்காப்பு கலையை எவரிங்கு கற்றாலும் ஈடிலா தற்காப்புக்கு தண்ணதியை தலையில் தாங்கியோன் தகைசால் தயை மட்டும் பெறாது போயின் எத்தலையும் இயன்றெழா இடர்தலையாய் இத்தரையில் வீழுமே. தாதையிலி தருமரமாய் தரும் வரம் தங்கக்கவசம் போற் தாங்கியே தரணி ஆளவரும் எங்கள் கற்கியின் ஏறுதலைகாக்க பெருங்காப்பாயிருக்க எக்கலையும் கற்காதிருந்தும் எழில்மெய் காப்போர் எண்ணற்றோர் மேதினியிலிருப்பர். எமை பெற்றன்னை மேதகு மீன்விழியாளுடனிருந்து மீளிசிவன் மீட்டெடுக்க மென்முகத்து சிற்றன்னை வாலைக்குமரி வாரித் தந்த வரம் எதுவும் வற்றாது உடனிருந்து உயிர்மெய்க்காப்பளித்து ஒளிமகன் மெய்க்கே ஓயாது அரணமைப்பர்.
தலைவனைத் தேடித் தேடி தளர்விலா முயற்சியாற் சீதளக்குமரியாள் சீருறு செம்மடிமேற் சென்றங்கு குதம் பதித்து தகவல் பெற்று தடயம் தந்தோரில் தங்கங்கள் தப்பிவிடும். தகரங்கள் சிக்கிவிடும். அத்தகையற்றோர் தலைகள் மட்டும் தப்பாது வலையில் வீழ்ந்து வருடங்கள் உருண்டு போக வானமே இருண்டு வீழ வாதைகள் ஒன்று சேர அவர் வாசலில் விருந்து வைக்கும். காலனின் கைக்கயிற்றில் எவர் கண்டங்கள் தப்பினாலும் கோமகன் கொதித்தெழுந்து கொள்ளொண்ணா கோபம் கொண்டு கொழுந்திடும் தருணத்தில் கொலைக்களம் கண்டவரே கொடுமையாய் இருந்துவிட அன்று கொடியோர்க்கு உதவிவிட்டு பின் கொற்றவன் முன் கூனிக் குறுகியோர் கூப்பிய கரங்களுக்காய் கூர்வாள்தான் இரங்கிடுமோ ? கற்கிக்கு கண்ணி வைத்து கண்காணிக்க வந்த கூட்டம் கார்வண்ணன் கண்ணி தன்னில் காலிடறி வீழ்ந்த பின்னம் காலமெல்லாம் கண் சுரக்க கடுஞ்சிறையை அனுபவிக்கும். அன்று மாலனின் மைந்தன் வென்று மண்ணெலாம் இணைத்த பின்னர் காலனுக்கு என்ன வேலை. அவன் கடமையின்றி ஓய்வு கொள்ள கற்கியின் காலம் வெல்லும்.
மதமெனும் பேயீன்ற மாண்பறு நாய் மக்கள் நடுவீட்டில் அமர்ந்து கொண்டு நல்லறத்தை சிதைக்கக் கண்டு நறுஞ்சேளோ கொதிப்பதுண்டு. அன்பறத்தை அகற்றி விட்டு அகிலத்தில் பிறப்பொக்கும் மன்னுயிராம் பொன்னுயிர் பிறவிப்பேதம் பேணி காக்கும் பூம்பரத கண்டமதிற் நெஞ்செல்லாம் வஞ்சம் தைத்து நீணிலத்தில் நீதிக் கொன்று நான்மறையை நிறைவேற்றி நாகர்களின் குடி கெடுப்பர் நரகுறைய தகுதி கொண்டோர். தென்னகத்து தீயர்களை தீ கக்கும் துச்சர்களை தெருவெங்கும் தூண்டி விட்டு தேடித்தேடி தீரர்களை திறம்மாறா ஓருடையர் வன்மமுடன் உந்தப்பட்டு வாதையீன்ற வகுப்புடனே வரம்பு மீறி கொன்ற வண்ணம் வளவாழ்வை சிதைக்கும் எண்ணில் சீறிவரும் கனல் மாரி சிரங்களையே துளைக்கும் போது கண்காணாதிருக்காமல் கதிர்மகனோ கடுமைக்குமஞ்சாது கால் நொடியும் துஞ்சாது கலங்காது உதயமாவான். ஒடுங்காத ஒளிமகனாய் உமையாளின் உயிர்மகனாய் ஒப்பறிய வீறு கொண்டு ஓநாய்கள் கூட்டம் தன்னின் ஆணவத் தலை கொய்து ஆறாது குவிப்பானென அவன் மேலே மட்டுமின்றி எம் சிவன் மேலும் ஆணையிட்டேன்.
அண்ணலுக்கு விடம் வைத்த அரக்கியும் ஒருத்தியுண்டு. அவள் ஐயிரண்டு திங்கள் பின்னர் அங்கத்துள் வாதமுற்று அவளுற்ற விடக்கரமே அவளுக்கே முரண்படுமே. அகம் ஆணை பிறப்பித்தும் அத்து மீறி அக்கணமே தொண்டளிக்க மறுத்தபடி தோற்ற கைகள் எழாது இயல் உணவு பெறாது இன்னல் கோடியீட்டப்பட்டு என்னாளும் அழுது கெட்டு விதியது வென்றதாலே வெய்யரேவி வீழ்ந்து கெட்டு வீண்பாவம் விடுபடாது அறங்கொன்ற ஆடவளொரு அகவை அறுபத்திரண்டில் அழலுக்கு இரையாகி அதன்பின்னர் அடர் வனத்துள் ஆர்ப்பரித்து அலைவாளே . அப்பேய்மகள் பிறப்புறுப்பு பீடையாய் ஈன்றதொரு பெரும் பாவி ஒருவனுண்டு. பெம்மானை இல்லத்துள் இன்முகத்தால் இழுத்து வந்து இரக்கத்திற்கு எள்ளளவும் இடமின்றி விடமிட்டு விருந்து வைத்தே வேந்தனை வீழ்த்த எண்ணி வெற்றியிற் களிப்பான். பின்னமவன் பெரும்பாவம் வினைப்பயனாய் அறுப்பானது வீண்குற்றம் சுமத்தப்பட்டு விட்டிலொப்ப சிறைப்பட்டு புலாலுடல் சிதைக்கப்பட்டு பொழுதெல்லாம் செந்நீர் விட்டு செவ்வீரல் நொந்துகெட்டு சில திங்கள் நோய்வாய்ப்பட்டு சிறுகாலம் உயிர் வாழ்ந்து அவனுற்ற சேர்ப்பிடம் நமனரசன் நாடென எந்தன் நாதனே எனக்குச் சொல்ல நன்றி சொல்லி நான் பணிந்தேன்.
நெடுஞ்சாலை மெய்யென்றால் நீள்கரமோ உள்ளோடும். மீன் இறந்தும் மீண்டுவந்து மேனி விற்று பொன் குவிக்கும். மீட்பனன்னை ஆலயமும் ஆறைந்து கோலளந்தால் அருகிருந்து அருள்வீசும். கோற்கொடிக்கு இட்டுச் செல்லும் குடைவாயில் முன்னாலே குடக்கிருந்து குணக்கு வரின் இரு விரலில் வலமிறங்கும். எழுந்திறங்கும் கழுகுகளை இயக்கியதால் எரியாது இதயமற்றோர் கமலமொன்று வெடித்ததனால் வெந்திறந்த வேந்தனின் பெயர் தாங்கி எம்மானின் நகரமையும். கொள்ளுகின்ற வலப்புறத்தில் கோடாய் தெருவிறங்க இருவடம் இணைந்திருக்கும். இதன் மேலே இணைத்தபடி எண்ணற்ற தேரோடும். தருமனின் மனையளந்தால் தருங்கோலொரு பத்தாகும். நிறைமகனின் வீடங்கே மரைமகன் முதலீன்ற மாமுனிகள் எத்தனையோ அவ்விசைவெண்ணில் கடையாகும். எழிலையன் இருமாடம் ஏறெனவே எழுந்து நின்று வாடையை வரவேற்று வாயிற் படி காத்திருக்கும். வடக்கிருந்து தென்னோக்கி வானவரின் வசை குவித்தே வாதை மகன் வீற்றிருப்பான். மேதைகள் அறியாரே. மென்விழிகள் பதியாதே. பாதைகளை போட்டு விட்டேன். பாம்பணிந்தான் அருள் இருந்தால் பார்க்கும் விழி இருள் கிழித்தால் பக்கமுறை பைம்பொன்னை பார்க்கும் வரம் உடன் கிடைக்கும்.
பாகம் 151
அற்ற நீதி
அருள்பொழிந்து அகிலத்து நிதியறுந்து பெற்ற பயனத்தனையும் பெருங்குடிகள் வசம் வருமே.
உற்றதொரு நிதி குவித்ததும் உலகறியா வண்ணமவர் ஊடகங்கள் அத்தனையும் ஆடகப்பொருள்
கொடுத்து அடிவருட வைத்தபடி ஒளி பாய்ந்து ஊடுருவ ஒரு வழியுமில்லாத இருள் கோட்டம்
எழுப்பியவர் இயக்குகின்ற சின்னமதில் ஒற்றைக் கண் வீற்றிருக்கும் உள் முழுக்க
முள்ளிருக்கும். உத்தமராய் தோற்றமுற்று உறுபாவம் சுமப்போர்கள் உய்ய வரமில்லாமல்
உலகளந்தான் உயிர் பறிக்க வடபுலத்து வஞ்சினத்து வஞ்சகரை உந்திவிட்டு வானமே
எல்லையென்று தொகையேதும் நில்லாமல் தொட்டனைத்தூறுகின்ற தோற்காதோர் காசோலை
தனைமறைத்து அகம் இருண்டோர் கொண்டு வந்து அறம் சிதைத்த அடியவர்க்கும் மறம் புதைத்த
மாநிரைக்கும் மனம் போல் கொடுத்திடினும் மன்னர்மன்னன் மாவுடலை மண் மீது சாய்த்து
அவன் மரணத்தை வெல்வோர்கள் இன்னமும் இப்புவியில் எங்கேயும் பிறக்கவில்லை.
இதன் முன்னும்
பலபேர்கள் சிறப்பு கொள்ளாதிறப்பு கண்டார். இனி எவரும் இங்கிவனை வெற்றி கொள்ளும்
பிறப்பு கொள்ளார். முனியோர்கள் போற்றுகின்ற முக்கண்ணன் சாட்சி சொல்வான். இனியோர்கள் மாட்சி
கண்டு இழியோர்கள் சூழ்ச்சி கொண்டு இதனாலே வீழ்ச்சி கொள்வர். இருள் சூழ்ந்த எம்மானோ
இறையோனின் காட்சி கண்டு எளிதாக மீட்சி கொள்வான். மறையோதும் மாந்தர்களே மனிதத்தை
மறந்தீரே. புனிதனுக்கு எதிராக போர்வாளை சுழற்றியே பொறி கதிர் பொழிந்திடினும்
அறனுக்கு தலை வணங்கும் அண்ணலிவன் சிவத்திற்கே அடிபணிந்து செம்பணியை ஆற்றிடுவான்.
செப்பனிட்டே சீர்திருத்தும் செவ்வேளின் செயலனைத்தும் ஒப்பிட இயலாமல் ஓதுவோர்
ஓதுவார்கள்.
விஞ்ஞானம் விரைந்து சென்று விண்வெளியை கடந்து நின்று மீண்டுமது
மேன்மை கொண்டு மெய்ஞானம் தனையறிந்து மிக்கதொரு பயனமைக்கும். மிகையாகா வாக்கு இதை
மேதினியே செவி சாய்க்க சுவையூட்டி தருவேனே. மீட்டெடுக்க மீட்ப்பன் வந்தால் மீளாதோ
நரகுலகு. ஆளவந்தான் ஆளவந்தால் அகலாதோ அடிமைத்தளை அறுத்தெடுக்க அன்பு மகன் ஆர்ப்பரித்து
வாரானோ. குடிமைப்பணி கொள்கையுடன் குறையகற்றி கொள்ளாதோ. மடமை கண்ட மக்களாட்சி மண்
மீது சிறுமை தந்து மாசனைத்தும் குவிக்க கண்டே மாண்பு மகன் குமுறக்கண்டேன். ஆண்டி
கொண்டு அனைத்துலகும் அவனிசைவால் ஆண்டு கொண்டால் சிவனாட்சி பூமியிலே சிறிதளவும்
மாற்றமின்றி இவனாட்சி மலராதோ. அருமையான தூண்டில் கொண்டு அகத்துறைந்த அகந்தை மீனை
அபகரித்து அழித்தொழித்தால் பெருமையான ஆன்மீகம் பிறப்பறுக்க பயன்பட்டு பேரொளிதான்
மிளிராதோ. வெறுமையான வாக்கு அல்ல வேந்தனுக்குப் புலப்படுமே. வெண்டலையான் விருந்து
வைத்து வேண்டும் வண்ணம் அழைப்பதனால் விதி கிழித்து எமையறிந்து மதி மலர்ந்து
வாரானோ. மன்னர் மன்னன் மனமுவந்து மக்கள் பண்புதனை பொழிந்து மானிடத்தை வெல்லானோ.
உளம் கெட்ட அரக்கருக்கே உடன்பட்டால் அமரர் கூட அழித்தொழிக்க இயலாது
அண்ணலவன் அவதரித்தும் ஆதிசிவன் ஆதரிப்பான் என்றறிந்தும் அற்பரினம் ஒருபோதும்
ஒதுங்காது ஓயாது அவன் உலவை ஒண்டி வந்து ஊர் முழுக்க அண்டி வந்து பிண்டங்களாய் பின்
தொடர்ந்தும் பெருவலைகள் தொடுத்திடினும் சதிவலைகள் அத்தனையும் சரடறுக்கும்
மொத்தமுமே. சித்தரையும் தன்னுயிராய் சிந்தனையில் கொண்டவனாம் முக்கண்ணன் முலையழகி
முக்கடலாள் நகையழகி முறையான நடையழகி முடங்காத சொல்லழகி முல்லை மொட்டு பல்லழகி
மொத்தமாய் கொண்டவளின் முழு சொத்தே இவனெனவே பெற்ற மகன் பிள்ளை மகன் பிறைசூடன்
மறைமகன் பிறிதொருவன் விந்தணுவில் இருந்துதிர்ந்து விளைந்த மகன் வெற்றிக்கு வேதவதி
வீராப்பு திலகவதி புத்திக்கு புலப்படாத புவனத்து நாயகியாய் பூமுனிகள் புடை சூழ
மாமுனிகள் படையோடு பூங்கனியாம் பாதத்தில் புன்முத்தமிட்டபடி மாகடல்கள் ஒன்றிணைத்து
மஞ்சமிட்டு கொலுவிருப்பாள். மாதேவன் மனதிற்குள் மாளாது இடம் பிடித்தும் மணமாலை
மாற்றும் முன்னம் மங்கையவள் கரையுறைந்தாள். இவள் குஞ்சாய் ஏற்றெடுத்து
இன்னெஞ்சால் தத்தெடுத்து கற்கியென காத்தருளும் கமலமுகன் கனக நிலம் முழுமையுமே பாம்பரசன்
பள்ளிகொண்ட ஊர் முழுக்க படுபாவ அறுவடையால் பாரறிந்த மலை நாட்டு மார்புறை மாட்டுடல்கள்
பாவித்த போர்வைக்குள் பைம்பொன் நிதி குவித்த பன்னாட்டின் அமைப்புகளும் பற்பலவாய்
நிறுவியதால் நீசர்களே குவிந்துடுவர். நிறை ஞானிக் கற்கிக்கொரு நலக்குறையும்
வந்திடாது. நெடுநிலத்தில் நித்தம் குறி வைத்திடினும் கறை படிந்தோர் கல்நெஞ்சர்
கண்காணித்துலவுவதை கார் வண்ணன் கடும் சினத்து கதிர் விடும் நாள் எரிந்திடுவர்.
கயவர்களை கனல் பொசுக்கும் காலனவன் கைக்கயிறு கௌவியே பிடித்து விடும். ஓலமிட்டும்
பயனுயுமில்லை ஊழையிட்டும் விடுவதில்லை. காலாகாலம் ஞாலம் காக்கும் காலகாலன்
நல்லடியை கடை நொடியும் போற்று நெஞ்சே !
உந்திபூத்தோன் உதித்த மண்ணின் ஓநாய்கள் உட்புகுந்து ஒற்றுமையை
குலைத்திடுமே. உதிரமோடும் உடன்பிறப்பின் உயிர்களுக்கே மதிப்பின்றி சித்தர் புவி
சிதைந்திடுமே. அதை சீரழிக்கும் சிரெங்கெனவே செல்லரிக்கும் செயல் புரிந்து
வேரறுத்து வீழ்த்திடவே வேதமோதும் வேடந்தாங்கி முப்புரிநூல் தரிந்த வண்ணம்
முண்டகத்து முரணரெல்லாம் முத்தமிழர் வளர்த்தெடுத்த நற்குணத்து மாந்தர்கட்கு நலம்பறித்து
தீங்கிழைத்து நெஞ்சமுறை சூதில் விழ்த்தி நீதி கொன்றோர் நெடுங்கரத்தால் வளம் சிதைத்து
தமிழ் மறுத்து வக்கற்ற தெருமகளின் வரைவற்ற இலக்கணத்தை தெக்கணத்து வாசலுக்குள்
திணித்தபடி தேவாதி தேவன் நிலம் திண்டாடி திகைத்தபடி சிறுமொழிக்குள் சீரழிந்த
குறுமொழிக்கு சிறப்பு செய்து அதை தேவதையாய் தேரமர்த்தி வான்தமிழை வாடவைத்து
வக்கற்றோர் வகையற்றோர் வளவாழ்வு பெறும் நேரம் உலகாள்வான் உதயமுறும் உற்றகாலம்
உடன்வருமே. ஊர்மகனொருவன் வந்து உச்ச நகருறைந்தபடி நச்சு செயலத்தனையும் நாணமின்றி
செய்தபடி நன்றி கொன்றோர் ஒன்று சேர்ந்து நல்லறத்தை புதைத்திடவே பொல்லறத்தார்
புன்னகைத்து புற்றீசலாய் நிறைந்து புரைமனத்தால் ஒத்துழைப்பர். இழியோர்கள் இங்கு
வந்து இளவரசை மறைவாக்கி இனப் பிரிவை நிறைவேற்றி நீட்டோலை நீதியாக்கி
நித்தமொரு விதி திருத்தி நெறிகெட்டாண்டிடுவர். குறை மனத்தார் குறிப்பிட்டு
நரியினத்தார் திமிர் பிடித்து நம்பினோரை குழிபறித்து நாய் மக்களுடனிணைந்து
பேய்மக்கள் பீடம் ஏறி பெரு நிலத்தை பிடுங்கி ஆள ஒரு பாவமறியாத சிலுவையரை
சிதைப்பதோடு சிவன் தலையில் இருக்கின்ற சிறு பிறையை கண்கண்டு சிரம் தாழ்த்தி
தொழுகை கொண்டு தூயோனை துதிக்கின்ற துப்புரவு நெஞ்சர்க்கு தொடரின்னல்களை தந்து
தறுதலைகள் தூண்டிவிட்டு தாறுமாறாய் குருதியோடும். உறுகயவர் ஒன்றிணைந்து ஒளி
உமிழும் தென்னகத்து உறுதியுடை திரர்களை உய்யவிட மனமிலாது ஊர் மகளின் மகவுகளே
அத்துமீறி அன்புகொன்று எதிரிகளாய் ஆடும் ஆட்டம் அத்தனையும் அஞ்சனவன் எழுந்து
விட்டால் அவரை எல்லாம் பதர்களாக்கி அனல் கக்கும் அதிபனாக அடிவேரை
எரித்திடுவான். அஞ்சாத இனத்திற்கு அண்ணலே தலைதாங்கி ஆணையிட்டே சேனைநட்டால்
பிழையிலாத பேருலகில் களையேதும் காணாமற் காணுமிடம் கவின் நிலமே ! காண்போர்கள்
பெருநலமே !
பாகம் 152
ஈரமிலாள் இல்லத்து இழிவுடை முற்றத்துள் இணைத்த பொறி விழிகள் ஐந்தை
பொறிக்கச் செய்து பூமான் பொற்பதம் போகும் வரவுதனை புல்லாரறிய பொறியிணையம் பதியும்
புகலிடத்திற் புத்துயிரூட்டி வல்லூறெனவே வான்வழி வரைவை வாரித் தருவாள் வஞ்சித்
தொழுகி வாழ்வாங்கு வாழ விலைபோவாள் வெய்ய மகள். அண்ணலின் அருமனை அணைத்த ஆறாம்
அற்பக்குடியமைப்பாளலள் அடிக்குலம் ஆயிடினும் அரிக்குலம் தான் உதிப்பாள். ஐயன் தடையமதை
அரவமின்றி எடுப்பாள். செவ்வேள் தொடர்புடைய சேதிகளை சிதறாமல் சேகரித்தே சிறிதளவும்
பதறாமல் பரமன் எதிரிகளின் பார்வைக்கு பத்திரமாய் அனுப்பி வைத்த பாதகத்தின்
நன்றிக்கு நற்கொடையாய் அவள் பெற்ற பணியது அரசவை உதவியுடன் நீதியை அடக்கம் செய்தும்
மீதியை ஒடுக்க கொய்தும் அறநீதி கொல்லிடத்தில் அன்பிலார் கொள்ளிடத்தில் கீழமை மன்றத்தில்
கீழ்மகள் கிழவியென உட்புகுவாள். மூதேவி வடிவுடையாள் முடமாக்கும் நெறிகட்க்கு முன்பணத்தை
பெற்றவளாய் உயர்மகள் உருவெடுத்து உள் முழுக்க விடம்பதித்து உத்தமனின் எதிரிகட்க்கு
உதவிக்கரம் கொடுப்பாளே.
மண்ணகம் போற்றிடும் மரி மகனுக்காயிரமாயிரம் ஆலயம் கோடியாய் அருளொடு
அமையினும் அகிலத்தில் தெக்கணத் தென்முனை தந்தது திருமுடி கொண்டதோர் நாதரின் உயரிய
நாகருக்குரியதோர் தேடரும் ஆலயம் அருகிலே திரவியம் உறைந்து உலவியே ஓயும் காவியத்
கைதலம் கர்த்தரின் மெய்த்தலம் கண்ணது திறந்திட கண்டேன். அத்தலம் திருத்தலம்
அவதாரம் அமர்ந்திடும் அரியுடை பெயருடை அனகன் கை அம்பொடு அசுரனை மாய்த்தவன் அழகுறு
புதுப்பதி பொலிவுறக்கண்டேன்.
பாண்டவ செங்கலொன்று பாழாய் போகுமென்று ஆண்டவர்க்கும் ஆண்டவனாய்
அரவணிந்து ஆடுவோனும் அரவம் மேலுறங்குவோனும் அடியேனுக்கருள் வாக்கை அடியெடுத்துக்
கொடுத்த போது அம்பிகையும் உடனிருந்தாள். ஐந்தாகிச் சேர்ந்த கண்டம் அத்தனையும்
தோல்வியுறும். பரதன் புவி முழுக்க பசியெடுத்து பரிதவிக்க பஞ்சமே கொடி கட்டும்.
செல்வமது செழித்தது போல் சில காலம் காட்சி கொண்டும் சீக்கிரமே நிலமனைத்தும்
சிந்திக்க இயலாத சேதாரம் பலவுற்று ஆகாரம் கிட்டாமல் அல்லலுக்குள் அடைபட்டு
அலங்கோலப்படுமென்று அரவத்தை அங்கத்தில் ஆம்பலென அணிந்தவனே ஆசிரிய வாக்குதிர்த்தே அகவல்தனில்
அளவெடுத்து அனைவருக்கும் பாடச் சொல்லி ஆணையிட்டு மோனை தந்தான். பால் வண்ண
சங்கமொன்றை பத்திரமாய் கையிலேந்தி பழிதீர்க்க பதித்தோனும் பளபளக்கும் ஆழிதனை
விரல் தாங்கி விடுவோனும் வேண்டும் பக்தர் விரும்பும் வண்ணம் விரைந்தெழுவான்
என்பதனை மீண்டுமிங்கு மேம்படுத்தி மேதினிக்கு மெய்யுரைப்பேன்.
அன்னை தமிழுக்கோரருமுனியை அடிபணிந்தறிகின்றேன். அறம்பாடியல்லால்
இதையுரைப்பாரெவருளர். அறிவான் மாமுனிவன் அருட்பெயரைச் சொல்லிச்சொல்லி ஆரூடம் அள்ளி
வீசும் அற்பர்கள் பெருகும் நாளில் அண்ணலே வருவான் நேரில். சித்தர்கள் பொருளுக்காக
செவ்வரம் மீற மாட்டார். மொத்தத்தில் இவர்களெல்லாம் முரண்பட்டு வாக்குரைத்து
முக்திக்குள் மூழ்கமாட்டார். முடை நாறும் யோனி ஈன்று முக்கண்ணன் அருளிலாத முடமான
பிறப்பெடுப்பார். பித்தனின் வரத்தைப் பெற்றோர் பீடுடை வீடமைக்க பெரும்பாடு
படுவாரன்றி பீடைகொள் பிழைப்புக்காக பிழையுறு வாக்குரைத்து பொன் பொருள் புகழ்
குவிக்கும் பொல்லாதார் வேடம் போட்டு பொய் மூட்டை அவிழ்க்க மாட்டார். வற்றிய
அறிவிழந்து வரம்பின்றி வார்த்தை சேற்றை வாய்வழி இறைக்கமாட்டார். முற்றிய
பித்தலாட்டமிது முறைகெட்ட வெற்று ஆட்டம். அம்மூலவன் உதித்த பின்னம்
அம்முறைகெட்டோர் மூர்ச்சையற்று காலனின் கயிற்றில் பட்டு கண்கெட்டு கதறிதாலும்
எம்மாலனும் மன்னிக்கானே. மரணமும் உய்விக்காதே !
தலையுள் தெளிந்த தகவல் மையச் சோற்றிலேறி தன் நிலை மறந்து தள்ளாடும்
விளைவிற்குள் வீழ்த்தி விடும் விடநீரொப்ப விருந்தெதையும் மறந்தும் விரும்பா மன்னர்
மன்னன் மருந்தென்று கொண்டாடி மனம் களிக்கும் மாந்தரையும் மனமார கடிவானென்றால்
அண்ணலது அரும்பண்பை அடியேனன்றி அம்மையப்பனும் போற்றிப்புகழ்வாரே.
வரம் வாங்கி வந்தோனை வழிமறிக்கும் வல்லோர்கள் எவரிங்கு
உதித்திடினும் எரிகதிர்முன் எண்ணெயென இழந்திடுவர் இம்மையினை. அறம் காக்க வந்தோனை
அகல் விளக்கென நினைத்து அசுர இனம் அணைத்திடுமோ. பசுந்தொழுவில் பன்றிகள் தான்
பாழ்படுத்தும் திட்டம் வென்று பாதகங்கள் செய்திடினும் விழும் வேட்டு வேரோடு
விதைகளையும் அழித்திடுமே. வரும் பேய்கள் அத்தனையும் வரம் வாங்கி வந்தது போல் தரும்
தகவல் மெய்யென்று தரணியர்க்கு பொய்யுரைத்து புறமெல்லாம் புனுகு பூசி புரை நாற்றம்
மறைக்க யான் ஒருபோதும் தயாரில்லை. மெய் இழக்கும் காலம் வரின் மெய்யுரைத்து வாய் மலர்ந்து
மெய் சிலிர்க்கும் மேன்முனிவன் யானென்று மேதினிக்குத் தெரியவரும். பொய்யுரைக்க
யானில்லை. பொல்லாத நடுநிசியில் பொன்மகனை எழுப்ப எந்தன் புத்திக்கொன்றும்
பிணியில்லை. நலம் விரும்பும் நாதனவன் நாளை காலை தெரிவானே ! நளினியென
நாற்றிசையும் நலமோடு விரிவானே !
பாகம் 153
கருவுக்குள் கருவான காளகண்டன் கையருள் சேரும் கற்கி ஒருவனுக்கே
கண்டவெல்லாம் தலை வணங்கும்.
அருவமுடை அர்த்தனாரி அண்டமெல்லாம்
இயக்குகின்றான். பருவத்தே பயிர் செய்து பிண்டமெல்லாம் வளர்க்கின்றான். பாவிகளோ
பார்வை பெற்றும் பாராமல் நெடுவாழ்வில் நீதி கொன்று நிலமெல்லாம் நிறைகின்றார். உமையொரு பாகனுக்கு உள்ளத்தில் உருவம் வைத்து உலகத்தார் ஓதினாலும் ஒரு
மொழியும் உரைக்காது உமையோனை நினைந்தாலே உற்ற வினை அத்தனையும் ஒன்று விடாதறுபட்டு
நன்று செயும் நோக்கினிலே நறுவுடல்தான் நட்டப்பட்டும் நாதனுறை உயிர்பறவை சிறகடித்து
சேருவது அறனாரின் அவ்வுலகே. சிந்தை கொண்டு விந்தை காண செவி சாய்ப்பாய் கொண்டு
சேர்ப்பேன் சிவனாரின் சேவடிக்கே. பிறவிப் பயனடைவதற்கு பெருந்தொண்டு செய்ய
வேண்டாம். பரமனடி சேர்வதற்கு பாமரனாய் இருந்தபடி பக்தித்தொண்டு செய்தபடி பிறை
முடித்தோனிடம் பணிந்தால் பெருவெளிப் பயணம் கொள்ள பிடியாணை பிறப்பித்து பிரமன்
உன்னை பீடிக்கான்.
அகிலத்துள் இருளகற்றி அகலாது அருள்புகுத்தி ஆதவனாய் அவதரிக்கும்
அழிவறு அமுதன் தானென்று அகத்தளவும் நாணமின்றி தன்னையே பறைசாற்றும் தற்குறிகள் பல
தோன்றி தகுந்த ஆதாரம் தரணியர்க்கு குவிக்காது அடுக்கும் பொய்கட்க்கு
அளவிலாது கனா காணும் அலப்பறைக்கும் பஞ்சமில்லை. அரங்கேறயியலா அதி முயற்சி
திருவினையாக்காது தீவினையால்
முற்றும் இன்மையிட்டு முடங்கியே
மூடரின் முக்தியறுக்கும். வையத்தில் வளம் குன்றி வாழ வாய்ப்பிலாது வானம்
பார்த்து வாய் பிளந்து வாடும் விழல் விளைய எதுவும் இலதாய் வெய்யில் வாட்டும் வீண்
மெய்யை கொண்டது போல் விடுதலையடையாது மாளும். ஆதவன் முன்னது மார்கழி பனியெனவே
மரணித்து போக்கிடம் அந்த பொல்லார் புக்கும் கூக்குரல் உலகே. அகப்பிணி பீடித்து
அறிவிலாது யூகித்து ஆசை எனும் பயிர் வளர்த்து அனலுக்குள் உயிர் இழக்கும்
அற்பருக்குரைக்கின்றேன். உலகாள உருவெடுக்கும் உனக்கான உண்மையினை ஊரார்க்கு
சொல்வதைப் போல் உரக்கவே சொல்கின்றேன் உள்வாங்கி உணராயோ !
உற்றார் உறவினர் மற்றும் உலகத்தாரெவரும் உமையாள் மைந்தனாமிவன்
உதியமுன்னம் ஒருக்காலுமிவனை நம்பாரது நாதன் சிவனையே நம்பாதிருப்பதற்கு ஒப்பாய்
கண்டேன். கற்றார் எவரும் கண்டிடார் கற்கியை. காதலி கூடும் கண்கெட்டு கைவிட்டு எம்
கற்பக நெஞ்சனை காஞ்சன பஞ்சத்தால் கைமாறிப் போவாள். நாளற்று நலிவுற்று கோள் மக்கள் கொடை
செய்து கொற்றவன் குறையகற்றி கொள்ளொண்ணா நலந்தன்னை கூவியழைக்காது கூடி வருமது
கூத்தன் அருளால் கொழித்தே கோடியுறும் பொற்காலம் பிழையிலாது பொலிந்த பின்னே
பூமானிவனையே புருடோத்தமன் உருவென பொழுதெலாம் நினைந்தே நிலமாந்தர் துதித்தே
நெஞ்செலாம் நிறைப்பரே ! கண்டங்கள் காட்சிக்கு இவன் காவல் தெய்வமாய் காணவே ஞாலம்
நல்கும் நற்கணம் கனியவே கண்ணீர் சொரிந்தவர் காலடி வீழ்ந்தவர் கண் தெளிந்தவர்
கைத்தலம் இணைத்து கடவுளுக்கிணையென கண்ணொற்றி பணிவாரென காமனை கரித்து கனகசபை
மிதித்த காலகாலனெந்தன் காதோரம் சொல்லியே கற்கண்டு கவிதைக்கு சேதாரம் தவிர்த்ததை
செப்பிட கேளாய் .
அரியுடை முத்திரையை அங்கத்தில் கொண்டது போல் அண்ணல் தாமென்று அறங்கொன்றோர்
அறுதியிட்டு ஆருடம் பல சொல்வர். ஆணவத்தால் அறிவுகெட்டு அற்பர்களின் நிதி பெற்று
பீடைகளின் பின்புலத்தால் பேராசை பிடித்தபடி பிறப்பறுக்க இயலாமல் பிறந்து வரும்
ஓணான்கள் உறுதியுற்று உளறுவதை உடனிருக்கும் உற்றார்கள் ஓயாமல் ஆதரித்தும்
உளங்கெட்டு பேதலித்தும் தளமின்றி வீடு கட்டும் தரமற்றோர்க்குரைக்கின்றேன்.
தேவதேவன் அவனன்றி திண்ணமிங்கு எவனொன்றும் திருமாலின் திருமுடியுள் தெரிகின்ற
மயிருக்கும் இணையாகான் என்னாளும். தாமரையுள் அமர்ந்த படி தருவெனவே தானமிடும்
தாயாரின் தாலியற தளராது முயலுகின்ற தீயோரின் கைப்பாவை திறங்கொண்டோர் இவரென்றும் தான்தோன்றித்தனமாக
தனை எழுப்பி வினை விதைத்து வினையறுக்கும் வகை கெட்டோர் வரிசை கட்டி வாய்நிறைய
வரும் வாக்கை திருவாக்கென உதிர்த்து திக்கு முக்காட வைத்து அருள் வாக்கு பாடலென
அடியேனின் பெயரமைத்து அகிலத்தை ஏய்ப்பாரே. பிறகெதற்கு யானிதை பின்வாங்கா பீடுடனே
பிறழாமல் பாட்டில் வைத்தே பிசாகாமல் பகருகிறேன் பெம்மானே கேளாயோ !
பாமரனும் ஏமாந்து பாதை மாறி போகாமல் பரமனடி சேர்வதற்கும் பாவத்தின் சின்னமாகி
பாதாளம் விழ்ந்தபடி எமனது கோட்டத்தில் இன்னிரையாகாது ஈசனெனும் அமுதுண்டு இறைவனடி
ஈட்டுதற்கும் இன்னமிதை இங்கு எந்தன் இன்னிசை பாட்டில் வைத்து இம்மையிலே எம்மானை
எதிர்நோக்கும் இளவல்களை எச்சரிக்கும் நோக்குடனே எழுச்சிமிகு விழுச்சி கொள்ள
எல்லோர்க்கும் இங்கென்னை ஈடிலாது அர்ப்பணித்தேன் எம்மானே நீயறிக.
கண்டமாளுமுன் கடனேற்குமுன் கொற்றவன் குடையேற்று கொடை காத்து
குடிமாந்தர் குறை தீர்க்குமுன் குறுக்கிடும் கைம்பெண் கரம் கூட கற்கியின் கை பிணைய
கணமேவும் வரமிலாத போது கன்னிகழியா கனியிதழ்கள் கற்பகக் காமுகனின் கமல செம்முகை
கொட்டும் கொடைத்துளிகளேற்று கொண்டாடும் வினைக்குற்ற கொள்ளா விதியினுக்கு எள்ளளவும்
வலுவில்லா எம்மான் விதியிது. வானவர் நலனுக்காய் அவன் வளவாழ்வை அழித்திட்டு
மாலவனின் மெய்க்குற்ற மாறா ஊழ்வினையாய் மாமுனிவன் சாபத்தால் மண்ணகத்துள் வீழ வைத்து
மலருக்காய் மனம் ஏங்கி மாளாது துயர் தாங்கி மங்கை ஒன்றும் தேறாது தினம் வாடும்
தேய்பிறை போல் தீ தின்னும் தேகமென திண்டாடும் நிலை கண்டு அகப்பொருளை அளவிட்டு
அருள்வாக்குதிர்க்கின்றேன்.
அண்டையரும் இவன் அடையாளமறியாதே போயிடினும் அடுங்கயவர் அண்ணலை
அழித்திடவே இங்குதித்து இன்னல் பல எழுப்பக் காரணம் யாதெனில் இம்மைக்கு முன்னம்
இன்னொரு பிறப்பெஎடுத்து ஈழம் தகர்த்த எம்மான் எழில் கரமுறை அம்பாயுதம் அன்றழிந்த அரக்கன் தம்
பிறப்புறுக்காது பின்னும் பிறப்புற்று பீடையராய் சிறப்பற்று சிவனாரின்
செம்மொழியை சிறிதளவும் கேட்காத செவிடரென அறம் மீறி அருவருக்கும் அருளிலா
உடுப்பெடுத்து மறம் கொன்று மன்னுயிரில் மாண்பிலா எடுப்பமைத்து அகமற விடமுறைந்து
அன்பிலா அங்கத்துள் ஆறா துடிப்பெடுத்து அண்ணலின் அரும் விதியை பின்னி பிணைந்த வாறே
பீடிலா போய்மகவாய் நாடியே நற்றமிழ் பரப்பில் நாதருக்கும் எதிரியாய்
நகர்ந்த காரணத்தால் மாயோனே மண்ணிறங்கி மாய்ப்பது இறுதியே மரணமும் உறுதியே. சேயோனும் இவனெனவே
செவ்வரவு மலர் தரித்த சிவனாருமென் செவ்வாய் பூக்கும் சீரிய வாக்கை ஊக்குவித்து
உளம் பூரித்தான் .
பெருங்குழுக்கள் அண்ணலுக்கு பேரிடர் பல தொடுக்கும். சிறு குழுவோ
சேவடி சூழ்ந்து சீர்வளவன் சிரம் காக்க திருப்பணியை செவ்வனவே தாங்கும் . பரதத்தின்
பன்னகரில் படுபாவ பாதகரும் இமயம் இடம்பெற்ற இன்னும் பல நாட்டினரும் புதையும் வரம்
இருந்தும் புண்ணாக்கும் நோக்குடனே புறப்பட்டு பொதிகை தாண்டி பொன்னாட்டில் புரையோடி
போக்கற்று இடம் பெயர்ந்து தேசத்தின் சமன் கெடுத்து தீது செய்யும் நோக்கத்தில் சூது
கொள்ளும் தேக்கத்தில் நன்றாக உலவிவந்தும் நமனுக்கு உணவாகி நரகுலகம் எய்திடுவர்.
உத்தமனுக்கெதிரியாகி உருவுற்றோரனைவருமே உதிரம் கொட்டி உயிரிழக்கும்
ஊழிக்காலம் உதித்தவுடன் ஒளிமகன் மேல் பழியமைப்போர் ஒவ்வொன்றாய் உயிர் வதைத்து
உய்வதற்கு வழியின்றி ஊழ் வினைக்கு உணவாகும் உண்மைதனை அறிந்தேனே !
அதிகார மையம் கொண்டு அழிக்க ஒண்ணா அண்ணல் வந்தால் சதிகாரர்களும்
மலிந்து சண்டாளர்களும் குவிந்தால் உண்மை நீதி ஒரு நாளும் ஒளிராது போகுமன்றோ !
உத்தமர்கள் கைக்கு வந்து உதவி செய்யும் அடக்குமுறை உற்றதொரு நண்பனாகும். ஊர்
முழுக்க கலகத்தின் கட்டவிழ்க்கும் கை விரல்கள் கருணையின்றி வெட்டப்படும்.
அனைத்துலகும் தீநெறியர் அரங்கேற வழியேயின்றி அறம் தின்று அழிவாரன்றோ ! மனம் கொன்று
மதம் கொண்டோர் மறத்திற்கே இழுக்கென்று மரணத்தை கொடை செய்வான் மண்ணளந்த வரம்
கொண்டோன். ஆபத்தை விலைக்கி வாங்கி அனைத்துலகை தலையில் தாங்கி வீழ்ச்சியுறா
வேந்தனாகி வெற்றி கூறும் வரலாற்று விட்டுவின் வரமுடைத்து வீரவேள் வடிவெடுத்து
வையத்து வறுமைகொய்து வாழ்வாங்கு வாழவைக்க வந்துதித்த வான்மகனை வேதியரே வெளியிடாது
வீண் துயிலுள் வீழ்ந்திட்டாலும் நாதன் சொல்லி நானறிந்தேன். நஞ்சுண்டோன் நறுமுடிமேல்
நலமுடன் படமெடுக்கும் நல்லரவே சாட்சி சொல்லாய் !
பாகம் 154
கண்ணுற்றோர் எனக்கருதி பற்பலரின் காலடியில் கடை விரித்தும் கண்டிட
இயலா கண்கெட்டோரவர் காதுகட்கூட்டிய கனிரசம் கொழிக்கும் கற்பக உரையை கண்ணொற்றி
கொண்டிட கனவிலும் முயலா குறைமதி மூடர்கள் வந்திட்டு எங்ஙனம் வான்மதி சூடனின்
வளவாழ்வு பரத்துள் வரம் பெற இயலும். சிந்தனைத் துளிகளாய் சித்தன் வரிகளாலுன்
சித்தினை செதுக்கிட மொத்த அமுதையும் முனைந்து தந்தால் முரண்பிடித்து சோம்பல்
முறிக்காது சோர்வுற்று தூங்குவாய் என்றறிந்தே யான் சிறுகச்சிறுக நித்தமும் பாடல்
தந்து நிலாச்சோறூட்டிடுவேன். நிறை ஞானி நின்றனுக்கு நெஞ்சுக்கு நீதி தந்து
நீயொளிரயென்றே துஞ்சாத தாயெனவே தூய் மடியாள் போலிருந்து முன்னூறு நாள் சுமந்த
முறையென்றே யான் நினைந்து முலைப்பாலூட்டிடுவேன். மாண்பற்றோர் மறை மறைத்தும்
மண்ணிலிங்கு மறையாத மூப்பிலா முதன்மொழியாம் முத்தமிழை முறைப்படுத்தி
முக்கனியாயூட்டிடுவேன்.
மாதவன் மறுவரவை மாசற்றோர்க்குச் சொல்லுகின்றேன். மன்னாதி மன்னன்
முகம் மண்ணெலாம் ஒளிரும் நாளென்றைக்கு ஏற்றதென விட்டுவே விண்ணிற்குள் விருப்பமுற
விளம்பியதை கண்ணுக்குள் கதிரேற்றி காட்சி கண்டேன். காலமெலாம் அகலாது காய்ந்தருகே
அணுகாது கருணையொடு அமுதெடுக்க அனைத்துயிர்க்கும் படியளக்கும் பண்பழலோன் பன்முகத்தை
பால்நிலவு இடைமறிக்கும் பருவத் திங்களுள் தினகரன் தீக்குளிக்க திருமுக தரணியும்
தேடி வந்து அவ்வாதவன் காமுறும் அழற்கணைகள் அண்டாதிருக்க அருமகளாம் அம்புலியை
அன்னையென அங்கங்கொண்டு அரவணைத்து அண்டத்தை இருளாக்கும் அம்மாதம் அண்ணல் அரும்பியே
ஆயனாய் அமைய மண்ணுலகு முழுமையுமே மன்னவன் வசம் வந்து மனமகிழ்ச்சி கொள்ளையிடும்
மாந்தரின் நலம் கண்டேன்.
பூதலத்தார்க்கு புரியா புதிராக பொறி விழியமையா புண்விழியோர்க்கு
தெரியா கதிராக ஆடகத்தாள் அமர்ந்திருக்கும் ஆந்தையது அண்ணல் அலையும் நடுநிசியில்
அகலாது காவல் காத்து அனுதினமும் அயராது பறந்திடுமே. எம்மான் எழும் நேரம் எழிலுலகே
இன்னலுற்று பன்னாடுகள் பதை பதைக்கும் பார்ப்பதற்கே பாவையர்கள் பரிதவிக்கும்
கோலமுற்று இதயமே நொறுங்குகின்ற எலும்புக்கூடாய் காட்சி தரும்.
எம்மான் புவிக்குள் எழுவானென்றால் ஈசனருளும் இமைக்கும் பொழுதும்
இரியாதன்றோ ! பெம்மான் பிறவி தரிப்பானென்றால் பிழையே தோன்றா பிறையோன் காப்பும்
பிசகாதன்றோ. அண்ணல் அவனியுள் அலர்வானென்றால் அம்பையின் அணைப்பு அகலாதன்றோ. மறையோன்
மண்ணில் மலர்வானென்றால் மலைமகள் மற்றும் மரைமலரம்மை இருவரில் எந்தன் கலைமகள் அருளும் கனகம்
மொத்தமும் கைத்தொகை எடுத்த அலைமகள் முதலாய் அனைவரும் ஒன்றாய் ஆரத்தழுவி
அவர்கள் கொண்ட பேருயிரெனவே பெருமானுயிரை பெரிதாய் பேணி பிறவிக் கடனை மறந்தும் மறவா
மாகடன் எனவே மாதர்கள் போற்றும் திருமகனிவர்க்கு தெக்கணப் புவியே திகைக்கும்
படிக்கு தீதற காத்து திருப்பணி புரிவர். இறையோன் நினைந்தால் ஈரேழுலகிலும் இயலா கருமம் எவையெனும் உண்டோ.
இறைவிடு தூதர்
மட்டுமன்றி இயல்பொடு நாதனாய் இறைவன் இகத்துள் எழில் முகம்தன்னை ஏறென காட்டி
எழுந்திட இயலும். அடியேன் அழைத்தால் ஆழி வண்ணனும் அம்மையப்பனும் ஒளிக்கதிரொடுக்கி
உருவம் மாற்றி குளிர்முகமூட்டி குவலையமுதித்து அணையா விளக்காய் அவிழ்க்கா கணக்காய்
அவனியில் அரும்ப இயலாதென்று இருட்டு மதியுடன் குருட்டு விழியுடன் பிறவிப் பிணியோர்
பெரிதும் மறுத்து மடைமையில் சிறப்பர். இயலும் அவனால் எல்லாம் என்று இன்னமும்
நம்பும் யானே உனக்கு இனியும் பகர்வேன். இறைவன் இறங்கி இடருறு புவியில் உதிக்க இயலா
உற்ற நியதிகள் எதுவும் உண்டோ உரக்க சொல்வாய். பேரிறை பிறக்க வருவதை தடுக்க
யாருளரிங்கே என்றறி நன்றே. நிலமுதல் நெடுங்கோள் அனைத்தையும் படைத்து நெறிகளைப்
படைத்தவன் நிறையுடை ஆற்றலுக்கீடிணையுண்டோ ? நின்னறிவிற்கது நீர்த்திடா மந்தணம்.
தேடரும் தெய்வத்தின் திருவிளையாட்டெலாம் தீவிழியற்றோர்க்கு தென்படா தந்திரம். அரும்பாலொடு
ஆழிசூழ் அரவணையிட்டவன் அறிதுயில் கொண்டதெம் அஞ்சன் துணிச்சலை அளவீடு கொண்டுதான் அளக்க
இயலுமா ? பெருவெடிப்பிலும் பிறழாதோன் கருவறையையும் பேணும் பெரும்பணி கொண்டு
பிழையுறாது புரிந்து பெருமிதம் கொள்ளும் பீலி சூடியும் பிறை சூடியும் பேரண்டத்துள்
பிறக்க பெரிதும் கடவன். இது பீடை கண்ணிற்கு பிடிபடாது போகுமே ஊழிக் காலம்
உருப்பெறும் முன்னரே !
நல்லறிவிலா நாய்களாகி நன்றாய் பணிந்ததால் முகத்தில்
மலர்ந்தவன் முப்புரி தரித்தோன் என்றும் மூடனாயமைந்து முரண்படாதிருந்ததால் தோளில்
பிறந்து துளிர்த்தோன் துவளா வீரம் செறிந்த வேந்தனென்றும் வீணராய் இருந்து வேண்டிப்
பணிந்ததால் வெற்றுக்கதை கட்டி வணிகன் வந்தது வாய்ப்பே இல்லா தொடையில் என்று
தொடர்பிலா பொய்யை தொடர்ந்து ஏற்றதால் காலும் கருவுறை சூல் தரித்து கனிவாய்
ஈன்றதால் கருமம் புரியும் ஈனத்தொழிலோர் இங்கு தோன்றினரென்ற தொழுவில் தோய்ந்த
புழுவுறை பொய்யை புனைந்து பிற மாந்தர் தம்மை பெரு மடையராக்கி மனுநெறி என்று
மண்டைக்குள்ளே மண்ணை திணித்தனர். இறையோன் முகத்தில் இருப்பவர் எல்லாம்
இமைப்பொழுதுமின்றி எப்பொழுதும் எம்பிறையோன் பெயரை பிறவி முழுதும் பிழையுறாது
துதிப்போரன்றோ. பறையோடலைந்து பரமனைப் பாடும் பாமரன் கூட உறைய இயலும் உமையோன்
உள்ளில். மறையினை ஓதி மாண்பிலாது மாறிய கறையோரொன்றும் கமலன் முகத்தினில் கதிரொளி
வீசி தோன்றினரென்பது காலம் காத்த கட்டுக் கதையே. ஞானம் கொண்டு ஞாலம் ஏய்ப்பவன்
நாலும் சொல்வான். நற்செவிகொள்ளாய் நாதரின் மகனே.
புல்லையும் புண்ணாக்கான் புழுப் பூச்சியையும் கிள்ளாதான்.
கிள்ளைக்கனி உதட்டான் கேடெண்ணா நெஞ்சகத்தான் பிள்ளைப்பூச்சியாய் பிறந்ததொரு
பெருமான் மேல் பேயோர்க்கு அரும்பாத பேரருள் கருணையது ஆலகண்டன்
அகத்துள்ளே அலகிலாது அரும்புக்கண்டேன் ! அழுக்காறு அவா அலரும் அடி மூடர்
நிறைகொள்ளும் நரியுடை குலம் தன்னில் அரிமுக திருவுருவன் அகிலத்துள் அல்லி ஆம்பலென
அலர்ந்த அருமணம் யான் முகர்ந்தே முன்னேறி மூலவர் வாக்குரைப்பேன். நாகநாதர்
நறுந்தலை மேல் ஏதுயிர்கட்க்கும் இதயத்தை இயக்குகின்ற பிராணன் இல்லாத பிறை
நிலத்துள் பெருந்தடம் பதிப்பதற்காய் சிறுந்தட கால் பதித்த உறுகண்டம் கொண்டதொரு
உச்சம் தொட்ட துரை நிலத்தே அரும்பிய அறிவியலார் அயராது பாடுபட்டு முறையாக
பாதமூன்றும் முன்னமே முளைவிட்ட முத்தமிழர் பெட்டகத்தில் அகவையது ஐந்தும் அவனுக்கு
துவங்குமுன் ஐந்திணை தென்முனையில் அழற் குஞ்சாய் துளிர்த்தவனோ தொடக்க பயிலகம்
தொட்டிருப்பான் பூமியிலே.
பாகம் 155
ஆந்தை விழி அதிபனவன் அரக்க நெறி கொடுமையுடன் கிறுக்கர் வழி
வந்தோனாய் கேளாத மடமைதனை கீழ்மகனாய் புரிந்தவாறு பொதுமாந்தர் நலம் குறித்த புரிதலே
இல்லானாய் கெடும் கேட்டின் மகனாக
கேடுகெட்ட குணமுற்று கிடையா
கொடியோனாய் அலைமகளின் அங்கத்தை அலங்கரிக்கும் ஆடகத்தை அவமதிக்கும் அறிவிலியாய்
அல்லல் தரும் ஓரிரவில் உதவாத உத்தரவால் உயர் குடியும் தாழ்குடியும் உடமையுடை உயர்
நிதியை ஒப்பாரி வைத்தபடி குப்பைக்குள் கொட்ட வைத்து கூகையொப்ப கூவி நின்று கொள்கைகள்
வகுப்பதனால் கொல்லுகின்ற வலியெடுத்து கோடிகளில் குடி மாந்தர் குற்றுயிராய்
குமுறுவரே. குற்றத்தின் குன்றேறி குலம் நாறும் குறுந்தலையன் அற்பனாகும் அரசவையில்
அவலமே அணி திரண்டு அம்மணமாய் அலைபாயும். சொஞ்சமும் நீதிமான்கள் சூழாத நெடு
வீட்டுள் சூதுடை அவையத்தோர் அளித்த தீஞ்செயலால் அரண்ட நாட்டோரை அறுக்கும்
வறுமைக்கு அருசுவை விருந்தாக்கி அறனுற்றோர் நிலைகெட்டு நொந்து நொடிவதற்கு நூதனமறியாதோர்
பாதகன் பாவியாகி பரதரின் பிச்சை பெற்றும் பங்கைய சின்னமுற்றும் பாழும்
வயிறெடுத்தும் பாரா செழுமைக்குள் படிந்து பலனுற்றும் பலமாய் வேர்விட்டும்
பக்கபலமுற்று பாவியரென உற்ற தக்கர் தயவிழந்தோர் தழலுள் தகனமாக தற்குறி தலைமன்னன்
தானே சிதையமைப்பாள் .
புலால் தவிர்த்தவன் புலனடக்கிட இயலாதோர் பிரான் எம்மான்
பிணையற்றலைவதும் பெருந்துயரவனையே உண்டு உறைவதும் ஒருபோதுமவன் கலால் காமத்தால்
கடுகளவிலும் காயத்திலணியவே காதல் கொளானென கையிலையன் சொன்னதை யான் கைகூப்பி சிலர்
காதுக்கு சொல்வேன் . அன்று காத்தவன் இன்று காப்பதும் இனி என்றும் எம்முடன் நின்று
காப்பதும் நிறை கற்புடை நேரிழையன்னை உமையையே அவன் ஒளிர்காயத்தில் ஒருபாதியாய்
உற்றவனவனே. உயிர் மொத்தமும் பெற்றெடுத்தவன் பிறை தரித்தவன் எம் பெருமான்
நெஞ்சுறைந்ததுமன்றி நெடுவானத்தில் நெகிழ் அண்டத்துள் நிலையிலாமலே
அடர்ந்துறைந்ததும் துகள் துணுக்களில் தொடர் வடிவென படர்ந்தமைந்ததும்
பாம்பணிந்ததோர் பரம்பொருளெனும்
சிவனே !
வறுமையின் வாய்க்குள் வல்விருந்தாய் வீழ்ந்திட்டும் பொறுமை
இழக்காமல் புருடோத்தமன் பூம்பிஞ்சாய் புவியில் பிறப்பெடுத்தும் பொழுதும் பிசகாமல்
புண்ணியம் சேர்ப்பதற்காய் மண்ணுயிர்கள் எங்கெனும் மனம்வாட வழியமைக்கா மாண்பியல்
மாறாமல் மனுநீதி சோராமல் வாழ்வியல் வகுத்ததனால் வான்மதிசூடன் மேல் வரமகன் வாயார
வருந்தி ஏதும் பழி சுமத்தான். வல்விதியென்றெண்ணி பொருந்தி போவதென்று பூமகன்
முடிவெடுப்பான். தவத்துடன் பற்பல தடை தகர்த்தும் பொறிவிழியோர் அருள் சேர புவனம் பதினான்கிலும்
இல்லாதோர் ஈகையோடு இரக்கத்தின் இருப்பிடம் இவனுள்ளில் ஒளிர்ந்திடுமே. சிவன் நெஞ்சே
நிறைந்திடும் செம்பவள நகையிதழ் நளினமொத்த நாரணன் இவனென்றே நறுமண நற்குணர் நவின்றே
நன்றி சொல்ல நாநிலமே கண்டு கொள்வாய் .
ஆட்டிடை மீட்பன் போலவன் அன்னை அன்புடன் அரவணைப்பான். ஆளவந்தானவன்
ஆட்கொண்டால் ஆணவத்தால் அறிவிழந்து பூட்டிய நெஞ்சினை பொறி விழி பாய்ச்சி பூங்கோலிட்டு
புண்படாது திறப்பான். நாட்டொருமை மட்டுமன்றி நாடாதார் நாடெல்லாம் நம்பவைத்து
நடுங்கொடி இவன் கொடியே ஆயினும் மான் மரை கண்களால் மதன்கணை தைத்திட மன்னன் மனமலர்
மயங்கியே நிதம் கொள்ளை போயினும் ஊனுண்ணும் ஓநாயின் உயிர்பதைக்கும் வீரங்கண்டவன்
உளம் திகைத்தோனாயினும் ஆட்டு தோல்தனை பூட்டிய அவ்விட நாய்களை அண்டியே அணுகிடான்.
அண்ணலொருகணமும் அருளற்றவைகளை அயர்ந்தும் நம்பிடான்.
அம்மை அங்கன் எம்மையிங்கு அருள் பொழிந்து இருளகற்றி அழுக்காறு
அவாயின்றி அன்பகத்தில் இழுக்ககற்றி இம்மையிலே சீர்திருத்தி இணையிலாது செம்மையாக்கி
பெண்மை போற்றும் பெம்மானாக்கி பீடுடை சித்தனாக்கி பெருந்தவம் நோற்கவேண்டி பெருமான்
எந்தன் கற்கி தானே பிழையுறு மாந்தர் பற்பல கோடி தன்னில் பெருவாரி நல்லோர் முன்னில்
பிடைகள் கழித்த பின்னர் ஒருவாறு தேர்ந்தெடுத்து உலகிற்கு அகல் விளக்காய் ஒளியேற்றி
யான் மகிழ்வேன் ஒப்புக்கொள்வாரென் வாய்மொழி மலரை. வான் வண்ணன் வல மெய்யில் தேன்
குவளைக் கைத்தலத்துள் தெளிந்த ரேகையினை கூர்ந்து நோக்கினங்கு ஒதுங்கி வலத்தே உறு
விரலிடதே ஓங்கிய ஓரிதழ் கமலத்துள் ஒன்றை தலையாய் கொண்ட ஒளிமுகம் வீசிடும் உயர்
மயிலதன் கூரலகு கொத்தியதோர் கொடுநாகத் தலையைக் கண்டேன்ர அதனலகில் வால்தான்
வள்ளியொப்ப வந்திறங்கும் ஆயுள் கொடிக்கருகில் அதையொட்டி இணையாய் அடுத்து வலதாய்
அரைக்கொடி கம்பம் வரை அதுவே தொங்க கண்டு கூத்தனே சொன்னான் நன்றாய் குறையிலா கன்றே
கேளாய் ! கொன்றை வேந்தன் தந்த வாக்கு தான் தவறாய் போக வாய்ப்புதான் உனதோ சொல்லாய்
!
மனிதம் கொண்ட மாண்பு தெய்வம் மார்பணைத்துப் பால் பொழிந்த மாதர் குல
அன்னை செல்வம் புனிதமென்று பூங்கவிஞர் பொற்கவிதை பொழிந்தால் கூட அதுவும்
ஒன்றும் மிகையே இல்லை. அன்னையர்க்கு இணையுமில்லை. அவள் அன்பகத்திற்கீடுமில்லை. அவளின்றி
இவ்வுலகில் எவ்வீடுமொரு வீடேயில்லை என்ற உண்மையறிந்த எம்மான் எதிரிகளின்
அன்னையையும் எளிமையோடு வணங்கி வாழ்வான். பதிபக்தி பூணுகின்ற பாவையரை பார்க்கும்
தோறும் அவன் மதிமுகமே மலரக்கண்டேன். மாதொருபாகன் மனமுறைந்த அம்பிகையின் வடிவாய்
வந்த அரம்பையராய் கருதி நின்று அதிபக்தி மேம்படவே அகமகிழ்ந்து தன் ஆம்பல் மலர்
கைக்குவிய அருள் வாங்கி அவன் பணிவான்.
தாய் மடியை தந்தது போல் தரு மரமே வந்தது போல் தான தரும கொடையினிலே
வான்மழையை மிஞ்சியதோர் வாரித்தரும் வள்ளலவன் நோய் நொடிகள் இல்லாமல் நூறாண்டு காலம்
வாழ்ந்து பேய்விழிகள் அழுக்காறு பின் தொடர வழியே இன்றி நாய் மொழிகள் எவற்றுக்குமே
நற்காது கொடுக்காமல் நலம் விரும்பும் மக்களது நம்பிக்கையை தகர்க்காமல் தாய்
மொழியாம் தமிழ் மொழிக்கு தரணியிலே முடிசூட்டி தயங்காது தளராது தார்மீக
பொறுப்பேற்று எல்லோரும் இன்புறவே இணைகாணா பொற்காலம் இவனொருவன் அமைப்பதற்கே
தன்னருளைப் பொழிவேனென தழல் விழியன் சாட்சி சொன்னான்
அருட்பெரும் சுடர்தான் அழகாய் ஒளிரும் ஆம்பல் கைத்தலமுள்ளில்
பங்கைய மலரை காணும் தோறும் பார்த்திபன் முகத்தை கண்டதை போலே பேரின்பம் கொண்டு பெரு
நடனம் ஆடி ஆனந்த கூத்தன் அம்மையை அணைப்பான். அனல் விழி திறந்தே சிவனொளி பாய
அடியேன் கூட அவன் முகம் கண்டேன். பொற்காலம் அமைத்து புண்ணீர் துடைக்க அக்காலம்
உனக்கு அருகில் உளதே ! அப்பேறு அடைய அகிலமே நீயும் பொறுமையாய் இருப்பாய் பூமகன்
வருவான். எம்மான் புவியில் எழும்பும் நாளில் எக்காள ஓசையே எழில்வானில் முழங்க
எண்டிசை சிலிர்க்கும். கற்கால மாந்தர் கலாச்சாரமொன்றும் கடவுளுக்கெதிராய் அமைந்ததே
இல்லை. கவினுலகு என்று கண் கெட்டோர் படைத்த கனவுலகு என்றும் கறை உலகாய் நின்று
கலாச்சாரம் கொன்று கண்ணீர் குடிப்பதுதான் காலதேவனுக்கு கற்கண்டு பானம். தீயாம்
திருமெய்யாள் திரிபுரம் தனையெரித்த தாயாம் தேவிக்கு தன் தங்கமொத்த அங்கத்துள்
தயங்காது பங்கிட்டு தானம் தந்ததொரு தாளாளன் தருமருள் தரணியுள் நிறையோடு அவன்
தருமகன் உடலெடுத்து தளிர்த்த இடம் தாமிரம் வருணியாகி தகைசால் காவிரிக்கு மேவிய
தங்கையாக மீள் பிறப்பு கண்டெடுத்து மேதகு மதியன்னை மென்மரைக் காலடியை வானவர்
தாலாட்டி வந்திங்கு காப்பதன் காரணம் தான் கண் திறந்து யானறிவேன். அவள் காண கண்
பூத்து கற்பு நெறியோடு கற்கி பகவனையே வாழ்த்த வீற்றிருந்தும் வாரா தேவனுக்காய்
வாடிய பயிர் போலே வருந்திய பக்தர்களும் தேடிடும் முயற்சியெலாம் திருவினையாகிடுமே.
பாகம் 156
அதிகாலை ஆதவன் போல் அழகொளிரும் அவன் முகத்தை அவனியாள வருமுன்னம் ஒருமுறை யான் உற்று நோக்கி உற்றதையே உரைக்கின்றேன். கறுப்பன்று சிவப்பன்று கண்ட அவன் முகம் அன்று கமலக்கொடி கொண்டோனின் கற்பக மார்புறைந்தாள் அமர்ந்திருந்து அருள் பொழியும் மது சிந்தும் மரைமலரின் மயக்கும் வெளிர் நிறமுடனே மாநிறமும் கலந்தாற் போல் மஞ்சள் கொஞ்சம் உறைந்தாற் போல் தெக்கணத்தார் கலவையாக தேடரும் வண்ணமுடன் கண் கவரும் எழிலுடனே காமனையே மிஞ்சி நிற்பான். அறனாரருளாலே அடிவான் கீழ்தோன்றும் அலரி பூங்கதிர் வீசும். அரணாய் அவனிருக்க அனைத்துலகும் இருள் நீங்கும். திறனார் புருடோத்தமன் அமர் தேவப்பருந்தெமக்கு உரைத்த பதிலொன்றை உலகார் அறிய பதித்தேனிதை பற்றற்று பருதி விழி திறந்தறிய பரமனை பெற்றோர் அறிக. இனி பிறவிப்பெருங்கடலுள் இடறி வீழ்ந்து பின்னமும் இடருற்று பிணி தீண்டி பேரின்பமறியாது பின்தங்கி போகாமல் வேறொரு விந்தை தந்து என் வேத வாக்கமைக்கின்றேன்.
அருவமோ உருவமோ அனைத்திலும் அரங்கனின் அடக்கமுண்டு. அங்கெலாம்
அம்புலித் தலையனின் ஒடுக்கமுண்டு. தீவினை மலமெடுத்து தீர்த்தமாம் மனங்கெடுத்து
வாவியில் மணம் பரப்ப வருவதால் என்ன பயன் ? உருவத்தை நாவாலோதி ஊராரை உந்திவிட்டு
தேர் மீது திருவுடலை தினம் வைத்து வலம் வந்து இருகரங்கூப்பும் மாந்தர் புறம்
பேசும் பொய்மை கூட பொல்லா பாவமன்றோ ! அருவமாய் உறைந்தோனின் அருளொளி காணாது அவனடி
தொழச் சொல்லி அழைப்பதில் அர்த்தமுண்டோ ? அப்பனுடன் உறைந்தாளை அம்மையுடன்
நிறைந்தானை அறம் காக்கும் மனமமைத்து அனுதினமும் தொழுதெழுந்து அனலொளிரும் அகக்கண்ணை
அங்கத்துள் திறந்தாலே நிலையிலா உலகுணர்ந்து நிறை ஞானியாகிடுவர். நீசமதை
நெஞ்சகத்தில் நீக்கமற நீற்றினாலே நீலகண்டன் அழகெழிலை நின்றளக்கும் அலகு இந்த
நீணிலத்தார்க்கு உண்டோ ?
சுழுமுனையோ மலராது சூட்சுமமும் அகலாது சுடுகாடு புகும்போது சொல்லி எந்த
பயனுமில்லை. சூதுவாது கொள்ளுவதும் சொற்கேளா வஞ்சகரும் வாதை தரும் சூழ்ச்சி கொண்டு
வன்கொடியோர் துள்ளுவதும் பிறன் மனையை அள்ளுவதும் பிறன் வாழ்வை அவித்தபடி
பெரும்பாவம் குவிப்போரும் பரமனூர் கிடைக்காமல் பரிதவித்து நின்ற வண்ணம்
பாதாளமுற்றபடி காலனூர் புகுந்தழுவர். கண்கெட்ட பின்னர் நின்று கரம் கூப்பி கதிரவனை
கதறிக்கொண்டு வணங்குவதால் உந்தனுக்கு என்ன பயன் உற்றவனே உரைத்திடுவாய். பதராக
வாழுவதும் பாழ் கிணறாய் மாறுவதும் ஒருவிதத்தில் ஒன்றேயாம். ஒளிவுடலை உணராது
உச்சந்தலை மலராது உள்ளொளிந்த ஓர வஞ்சம் ஒருபோதும் நீறாது உய்வடைய வழியேது.
கழிவேற்ற இயலாமல் காமத்தை வெல்லாமல் பழியேற்று கொள்ளாமல் பாவத்தைக்
கிள்ளாமல் துளியளவு அமுதமும் தொண்டைக்குள் ஊறாது ஓதுவோர் இல்லாமல் உருக்குலைந்த
ஆலயமாய் ஒரு பயனும் ஒட்டாமல் உயிரெடுத்து என்ன பயன் ? உண்மையிதை ஒத்துக்
கொண்டு ஓய்வறியா தவம் நோற்று மெய் வழியில் மெய்யிட்டு மேன்மைகொள்ள வேண்டுமெனில்
ஆண்மைதனை முடக்கிவிட்டு அல்லியாம்பல் சண்ணமது அறவேதும் அதிராது சாறங்கே ஊறாது
சற்றுமே உதிராது விந்து மணி இறுக்கி கட்டு விடியல் இனி விரைவாய் எட்டும். நொந்து
வாழ வழி வகுக்கா நுட்பத்தினை கேட்டுக்கொள்வாய். நோய் நொடிகள் தீண்டாத நூதனத்தை
ஆண்டுகொள்வாய். வெந்து நீற வழி வகுக்கா வேண்டும் வரம் வேண்டுமெனில் விமலனை
வேண்டியே விடை கொடுத்து மீண்டிடுவாய் !
அகவை ஆறில் அருங்கரத்தான் அல்லியாம்பல் விரலெடுத்தான் கதலியொப்ப
கால் விரல்கள் அனைத்திலுமே அரும்பியது அங்கம் கொன்ற கரப்பான் தந்த அமைதி கொன்ற
சொறி சிரங்கால் அண்ணலன்று அவதிப்பட்டு கடின வாழ்வை கடந்து வந்து புதிய மேனி பொலிவு பெற்று
பூத்ததென்று சொன்னதெந்தன் பூந்தளிர்த்தாள் கூத்தன் என்பேன் . சொன்ன சொல்லில்
கொஞ்சம்கூட சுட்டிக்காட்ட பிழையேயில்லை. நண்டு தந்த மேனி கொண்டு நல்லதொரு பானம்
உண்டு பெண்டு ஒன்று செய்த தொண்டு பெரும் நன்று என்று சொல்லின் பெருமை அது மிகையாகா
பேரிறைவி வடிவில் வந்த சிற்றன்னை உடனிருந்து சீராட்டி சேவை செய்வாள். பெற்றன்னை
பணி நிமித்தம் பேரூர் பறந்ததனால் நற்றன்னையாயிருந்து நலம் காத்த நன்றி கூட
இன்றளவும் எம்மானின் இதயத்தில் இடம் பிடிக்க கன்றெனவே ஏங்கிடுவான். கனக நெஞ்சாள்
அவளென்றும் கனிவுடை அம்பையென்றும் இம்மையெல்லாம் நினைத்தபடி இறுதி மூச்சு இயங்கும்
வரை என்றென்றும் துதித்திடுவான்.
மொழி வளர்க்க அருள்பொழிந்தும் முக்கண்ணன் ஆணையிட்டும் முன்மொழிந்த
முத்தமிழன் முல்லையொப்ப மூளையுடை மூதறிவில் சித்தனவன். மொத்த உடல் அத்தனைக்கும்
முள் மகுடம் இட்டுச்சென்ற முறையற்ற வலியனைத்தும் முனங்கியே அவன் சுமந்தும்
மூண்டதுபோல் வலித்ததெந்தன் முண்டக பூவுடலே ! ஒளி முகத்தான் உடல் புகுந்து
உள்ளதெல்லாம் அளவெடுத்தேன். உளிகொண்டு சிதைத்தது போல் உற்றதவன் உள்மூலம் உதிரம்
கொட்ட உயிர் பிரியும் ஓயாத வலியும் கிட்ட எம்மாலன் இன்னுயிர்க்கு இன்னல்
வந்து வீடுகட்ட சில மாதம் வதை வதைக்க செய்தபின்னர் ஓய்ந்ததுதான் சிவனாரை
துதித்ததபடி சித்தருக்கு சித்தர் பிரான் சேயிளையாள் பொன்னிநதி சிலிர்த்து ஓட வைத்த
மகான் அளித்த கொடை ஔடதத்தை அருந்தியதால் அங்க நலம் கொண்டு சேர்க்க அல்லல் தந்த
அப்பிணியும் சொல்லாமல் பறந்ததுவே சூரியனார் ஒளிர்ந்திடவே. அகவையது அறுநான்கில்
அரங்கனுற்ற துயரனைத்தும் ஒருங்கமைத்து அருள்வாக்காய் ஒப்பு வித்து பாட்டிசைத்து உன்னினைவை
உசுப்பிவிட்டேன் உத்தமனே உணர்ந்து கொள்வாய் !
முன்னம் நோய் முற்ற முக்கண்ணன் ஆணையிட்டும் மூலை முடுக்கெல்லாம்
மூர்ச்சையற்று யாக்கை வீழ்ந்தும் பின்னமும் பிறழாமல் பிறவிக் குணம் மாற்றாமல்
இன்னமும் இடர் குவித்தும் எண்ணிலா இன்னல் தந்தும் மன்னுயிர்கள் மடமை செய்ய
மறுக்காத மறலிதேவன் மனமுவந்து மரணம் தந்து ஆசையற அள்ளிச்சென்றும் அழுத கண்ணீர்
அருவி கொண்டும் அதனாலொரு கழுதைகூட காதில் வாங்கி கொள்ளாது கயமையிங்கு மலிந்ததனால்
கையிலையன் கண் சிவந்து கடுங்கோபமுற்றதனால் பிண்டம் நாறி பிணம் குவிந்தே
பெருங்கண்டம் கதறி அழ கொடும்போரை அவன் எழுப்பி கொதித்தெழுந்தே சீதளத்தை
சிதைத்திடுவான். பன்னாடும் பகை வளர்த்து பக்கத்து நாடுகளும் வெட்கத்தை
விட்டுவிட்டு வீண் கருவமுற்று கெட்டு ஒன்றையொன்று கொன்றொழிக்க
உறுமியே பாய்ந்தோடும். புவி மகளின் நிலம்தோறும் புண்ணீர் ஒழுகியோட கருணையின்றி
காயங்களை கண்டபடி குவிப்பானே கண்ணில் கனல் கொண்ட காலகாலன் சினப்பானே. இனி காணாத
பெரும்பஞ்சம் காசினியின் கண்ணீர் குடிக்க வந்தும் நாசமுறு தீதேதும் நல்லோரை
நாளிகையும் தீண்டாது நம்பினோரை நாதனருள் நட்டாற்றில் விடாது நஞ்சுறை நெஞ்சோரை
நாளெல்லாம் மென்று தின்று நன்னில மடந்தை தன் மெய்யினை செம்மையாக்கி மேதினியில்
பதரறுத்து மெய்யறம் நிலைநாட்டி மேவிய பொறையோடு காத்திடும் இறைமைந்தன் கரங்களில்
ஒப்படைத்து அருள்மிகு அரவணிந்தோன் அகம் குளிர்வான் அறிவாயோ !
மன்னுயிர் துயரனைத்தும் மனம் நொந்துணர்ந்திடுவான். பிறர் மரண
வலியத்தனையும் தன்னுடலென்றே துடிதுடிப்பான். பெண்ணினத்தின் கண்ணீர்க்கு இடையூறாய்
எழுந்தோரை பிறவிக் கடன் பட்டவாறு இரு கூறாய் பிளந்திடுவான். உத்தமியர் பெயருக்கு
ஊறிழைக்கும் உறு கயவர் கூட்டந்தனை ஒன்றுவிடாதழிப்பதோடு உருத்தெரியாதொழித்திடுவான்.
கண்ணீர் பெருகியதோர் காலத்தே நன்றி செய்து காத்தோர்கள் கமல நெஞ்சை கலங்கடிக்கா
கற்கியவன் காலமெல்லாம் கடன் பட்டு கடுகளவும் பலன் நோக்கா பரிவுடனே பிற்பகலில்
பெருமைமிகு நலம் புரிவான். ஞாலத்தில் நடமாட நாதனையே ஈன்றோர்கள் நன்நெஞ்சை இம்மையிலும் இனி
எடுக்கும் மறுமையிலும் எள்ளளவும் நோகடிக்கா எம்மானை மும்மையிலும் பாட்டில் வைத்தே
மூப்படையா இன்பம் கொள்வேன். உத்தமனின் புகழ் பாடும் உண்மையிங்கு ஒருபோதும்
உறங்காது உறுதி செய்வேன். மூத்தோரின் முன்னமர்ந்து முறையற்றதாய் கருதி ஆன்றோர்கள்
அறிவுறுத்தும் அச்செயலாம் அவனுற்ற கால் மீது கால் போட்டு கருவமுற்று அமராதோர்
அருங்குணத்தை அமரர் போற்ற அடியேன் கண்டேன். காலதேவன் கண்ணியத்தான். கற்கி கொண்ட கால்
மலரை கற்பகமாய் கண்ணிலொற்றி கைகூப்பி அகன்றிருப்பான்.
பாகம் 157
அஞ்சான் அரிமா போலவன் அலைந்த அகவையிற் அங்கம் சமன் செய்ய அவன்
அருநீர் அருந்துவதிற் பங்கம் அரும்பி படும் குறையுற்றதன் பலனாய் மென்னீர் மேனியிற்
நிறைக்காது மேவிடும் நிலைகெட்டு சிறுநீர் சிறுக்க சிற்சில உபாதைகள் சிதைக்க வந்தே
செவ்வேள் செங்காயம் சீர்கெட்டு ஆதவன் கொடுங்கோலூன்றும் அனல் மீன் மாதங்களில் அழல்
நோய்க்காட்பட்டு அகம் சிதையும் நிலையுற்று வாடிய பயிர்போலவன் வதனம் கண்டதுமென்
நலம் நாடிய நயனமும் நனைந்ததை நோக்கியே புனல்சடையோன் பொன்மனமும் பொலிந்துருகிட
நல்விழி நான்முகி நிலையை யான் என் சொல்லுவேன்.
முகம் நோக்கி மோதிட புயமற்றோர் முப்புரியோரவர் மூளை வலுவில்லாதோர்
எப்பொழுதும் மூதறிவில் பொல்லாதோர் ஏற்றெடுத்த இழித்திட்டம் ஈசனுக்கு எதிரான சதித்
திட்டம் செவிக்குள் சிறை பட்டும் புவிக்குள் புதைபட்டும் போகுமென புகன்றேனென்
பூவிழி விரியாமல் பொறிவிழி விரிந்ததனால் வாய்மொழி வலுவாக வருவதை கேளாயோ.
அடியேனுக்கறிந்ததனை அமரர்க்கும் தெரிந்ததனை சதியேன் ஒரு நாளும். சாதிக்கும்
மாந்தருள்ளே போதித்த பேதமுடன் பூநெஞ்சிற் பிளவு வைத்தும் ஆதித்தன் அம்புலியான்
அவர் தம்மில் வழக்கில்லை. அகப்பேயுறை ஆணவ அந்தணர் சாதிக்க துப்பின்றி சாதிக்குள் சாணி வைத்த
சங்கதி எல்லாமும் சருகென தீக்குளிக்கும். ஆதிக்க குலம்
எல்லாம் அறிவார்ந்து அணுகியே அணைந்து வந்து இருமனம் கலந்து நறுமணம் புரிந்து இரு
குறி இன்பமுற இணைந்திடுமே. அதன் பின்னே மேன்மக்களால் இகழ்ந்து மேதினியில்
அமிழ்ந்து மதியற்றோராய் மரத்து விதி கெட்டோராய் விளைந்து வீண் கவலையால் வெந்தோர்
வேந்தனை வேண்டியே வரும் நாளில் விதிமாற்றி மேன்மையுற்று மிளிருவாரே. ஆதியிலே யாரும்
இங்கு தாழ்ந்தோரில்லை அந்தணம் ஆண்டு கொண்ட சாதிக் கொடுங்கோன்மை சருகெனவே எரிந்தே
போகும். வேதியராய் வாழ்ந்து வெறும் வெய்யருடம் சேர்ந்து பாவியராய் பரிதவிக்கும்
பண்புடை மாந்தரினும் பாசாங்கு புரியாமல் பகுத்தறிவோர் பகவனை இகழ்ந்து நாத்திகம்
பேசுவதே நன்று என்று ஆற்றுச் சூடியவன் ஆதரிப்பானென்பதனை அடியேனன்றி ஆரறிவார்.
ஒப்பனைக்கே உருவெடுக்கும் ஒருகோடி கற்கியரின் உள்ளம் கொள்ள
செப்பிடுவேன். செவ்வேளாய் உதிப்பதற்கும் செழுநிலத்தை பரிப்பதற்கும்
அவ்வேளுக்கமையாத அருளனைத்தும் அழகுற கிட்டிடுமோ ! அன்பிற்கலகிலா அறிவுக்கீடிலா
தொண்டர்க்குரிமையாய் தொழுவோர்க்கடிமையாய் நின்ற நிலவணி நெற்றி கண்ணனின் நேரிய
மைந்தன் விட்ட பிறப்பெடுத்து வேந்தன் சிறப்பெடுத்து வேண்டும் வெற்றி பெற்று உற்ற
பொறுப்பெடுத்து உலகை ஒருங்கிணைத்து நட்ட கொடி ஒன்றே நாதன் பெயரோங்க நன்றாய்
பறந்திடுமே. கெட்ட வேதங்களை கிழித்து கூழங்களாய் குப்பை கொட்டிடவே கோமான்
கிட்டிடுவான். அற்ற அகிலத்தில் அருமருந்திட்டிடுவான். தொட்ட வினை எல்லாம் துலங்க
நலம் கொள்ளும். அறனார் அகம் கொண்ட அருங்குணங்கள் அத்தனையும் பேறாய்
உள்ளமதில் பெறுவான் பெருங்கொடையாய் வலுவாய் பிறப்பெடுத்து வந்து நிலமாள நீதி
நெடுஞ்செழியன் நெறியுடை மாட்சிமையை கண்ணுற்ற வானவரோ கண்பட்டு வாயடைத்து கண்டபடி
அவர் கொண்ட கனிநெஞ்சம் நொந்தபடி வஞ்சம் கொஞ்சம் மிஞ்சிவிட வந்துதித்த
அழுக்காற்றால் பஞ்சுமனம் வெந்ததுபோல் படுமூச்சு வாங்கியதை ஒரு வீச்சில் யானிங்கு
உந்தனுக்கு உரைப்பதற்கு அரும்பாடு பட்டுத்தானே அருள் வாக்கு பாட்டை இங்கு வடிக்கட்டி
வாக்குரைப்பேன். வந்துதிர்ந்த வார்த்தையினை சிந்தைகொள்ளா மந்தை போன்று செவி
சாய்க்கயியலாது சந்தையிலே விலையுற்று சாகடிக்கும் நிலைபெற்று வெந்து நீ உணவாகி
விருந்திற்கும் சுவையூட்டி நன்றறியா நரகுலகில் நாளெல்லாம் சுழலாதே !
ஓநாய்க்கு காத்திருந்து ஒரு நாளும் தூங்காது ஓயாமல் விழித்திருந்து
உற்று நோக்கி ஒளிந்திருந்தால் ஓநாயும் வாராது. ஓரசைவும் தாராது. ஊளை சத்தம்
கேளாது. ஆயினது அரவணிந்த ஆதிமூல பெருமானின் அறிவிளக்கே அறியுமவன் அலருகின்ற
நொடிப்பொழுதை. அறம் கொன்றோருக்கே தெரியும் அவனிருக்கும் திருப்பதியை. ஓநாய்தனை மறந்து நீயும் உள் புகுந்து உறங்கும் வேளை உறுபசியால்
வீறு கொண்டு உன்னையுமே தின்றுவிடும். அதுபோலே அண்ணலவன் திகில் வரவு திருடன் வீடு
புகுவது போல் திடீரென நிகழ்ந்து விடும். நேசர்களின் புதிராக நெஞ்சமர்ந்த நெறிமகனோ
நீசர்களின் நினைவகன்றும் நிலமெல்லாம் நிழல் தொடர்ந்து வேடர்களே சூழ்ந்து நிற்கும்
விடியல் வீழும் நாழிகை முன் விபரீத வெய்யர்களும் வெற்று வேட்டு
வீணர்களும் விரும்பாத தீர்வுகளை நல்லதொரு நடுநிசியில் நல்லோர்க்கு வலுசேர்க்க
நல்வரவாய் அமைவதொடு வஞ்சி நில வளம் கெடுத்தோர் வாழ பிறர் நலம் பறித்தோர் யாவருமே
குலைநடுக்கம் கொண்டபடி குற்றவியல் குறையகற்றி கொழுந்துவிடும் கொற்றவனாய்
கிளர்ந்தெழுவான் கீர்த்தி மிகு மாலவனே ! இப்பெருமேதினியிற் இறையாட்சி எழுந்திடவே
இகழ்வோர் கதி இன்னலாக எம் ஈசன் எச்சரிக்க எம் வாக்குகளை விமர்சிப்போன் எம்
வான்மகனையும் எதிர்ப்போன் வரிசையிலே வந்து நிற்பான். இரவொடு இரவாக இரவலுக்கு
வந்தமர்ந்து உறவு கொண்டு உடலணைத்த உயிர் குருவி என்று கொள்ளும் ஊர்
குருவி பறந்து விடும். வான்குருவியாகுவதும் வலுவிழந்த வீண் குருவியாகுவதும்
விண்ணுலகம் விளையாமல் மண்ணுலகம் வந்து மீண்டும் மடை திறந்த வெள்ளமென மறலியெனும்
பருந்திற்கே மனம் விரும்பும் விருந்தாகி உறங்காமல் ஒயாது ஒப்பாரி வைத்தபடி ஊர்
முழுக்க கூட்டினாலும் கருநாளில் அழுகுரலை கல்கி அவன் கேட்க மாட்டான்.
நஞ்சரெல்லாமொன்றுகூடி நறுமரைக்கொடி பிடித்து நன்றாக வாழ்ந்திடினும்
குன்றத்து விளக்குகள் போல் கொலுவுற்று ஒளிர்ந்திடினும் நாற்றிசையும் கோட்டையாளும்
கொற்றவர்கள் கைகோர்த்து கூடமாட ஆண்டிடினும் நாதன் வரும் நாட்களிலே நாடாளும்
மன்னவராய் நடமாடும் துச்சர்களை நாகமென வீறிட்டு நடுங்கும் வண்ணம் படமெடுத்து
தேவநேயம் மேலோங்க தீயர்களை தீண்டிக் கொன்று தாகமற பழி தீர்த்து தழல் மூட்டி
சிதையெரிக்கும் தங்க மகன் கதையுரைப்பேன். தகையற்றோர் எச்சங்களை தயங்காது இழுத்து
வந்து இருக்குமவர் வழக்குகளை எஞ்சாமல் மிச்சமின்றி எதற்குமே கணக்கு தீர்த்து
எல்லாமும் களையெடுத்து எம்மானே தினையறுப்பான். கனிவுடையோர் பெயருக்கு களங்கம் பல
கற்பித்த கருணையற்ற காரணத்தாரனைவரையும் கடுங்காவல் சிறை பிடிப்பான்.
அருமாந்தர் பெருமக்கள் அவருற்ற கறையகற்றி அடுங்கயவர் அனைவரையும் கதறும்படி
கருவறுப்பான். கண்டமெல்லாம் பயனளிப்பான். சேர்வார் தோள் சேராது சேர்க்கத் தகா
சிற்றினத்தை சேர்த்தவாறு சூழ்ச்சிமிக்க சொல் விதைத்து சோரம் போன ஆட்சி கொண்டோர்
சுருட்டிய பொன்னனைத்தும் திரட்டியே அவன் தருவான். திருடருக்குத் திருடனாகும்
திருமால் பெருந் திருடனாகும் தெரிந்திடுவாய் அருமகனே ! அமுதனைய தமிழழிக்க அயராது பாடுபட்டு தளராது சீரழித்து தரம்
தாழ்த்தும் தகையற்றோர் தருகின்ற
தீதெல்லாம் அலகிலாது போயிடினும்
அண்ணலவன் அருந்தமிழை அணு அணுவாய் அறிந்ததனால் பெருங்கவனம் உடன் செலுத்தி பிறர்
மெச்ச வளர்த்திடுவான். செம்பச்சை சேருமிரு சீழ் நாறும் சீலையது தனை தாங்கி இன்பம்
தர சிதை விற்று தரங்கெட்டு தரை புதைந்து மக்குகின்ற சதை வளர்க்க மார்பணிந்த கச்சை
நீக்கும் மடப் பெண்கள் கற்பை விற்று கண்ணிழந்து அற்பருடன் காணாத வாழ்வு பெற்று கனி காய்க்க
துலங்கினாலும் சொற்ப காலம் சுகம் கொடுக்கும் சொப்பனத்து சுந்தரிகள் சித்தர்களின்
சாபம் பெற்று சேராத உலகு சேர்ந்து சிந்துகின்ற கண்ணீர் தான் ஆறாக ஓடுவது அவனுலகே
நமனுலகே !
பாகம் 158
போர் மூளும் அகிலத்தின் புவிமாதின் அல்குல்லுள் ஆழத்தே
அணிந்திருக்கும் அரிமாதின் ஆடகமாம் அருநீரை தீ தின்று ஆர்பரிக்கும் மையத்து
கிழக்குகளில் மரணப்படுக்கை பல கோடியாகும். அங்கு தீராத வஞ்சத்தால் தினமெழும்
வெஞ்சினத்தால் திசைமாறும் போராலே திருப்பரத நகர்கூட ஆறாத பசியாலே அடங்காது அயராது
அவதியுறும். அனைத்துலக மாந்தர்களில் அகதிகளோ கோடியாகி அழுது புரண்டபடி விளையும்
பட்டினியால் விதியுற்று பரிதவிக்கும். கதிர் விளையாதுயிர் மடிந்த கழனிகளின்
கண்ணீரை கண்டேனே கண்மணியே ! பாரெல்லாம் பயிர்ச்செல்வம் பாதிக்கும் நிலைபெற்று
பன்னாடுகளில்கூட பளு ஏற்றும் பணி தன்னை எருதுகளே ஏற்றெடுத்து இடுகின்ற எச்சத்தால்
ஆநிரைகள் கொடையாலே அடுப்பெரியும்
இரவுக்குள் இருள் கிழிக்கும் எண்ணற்ற
விளக்கெரிய உலகுக்கே ஒளியேற்ற ஒப்பிலா ஒளிமகனாயுதிப்பதனை உறு விழியால் யான் கண்டேன்.
மாநிரையில் காளைகளோ மகத்தான சேவை செய்யும் காலமினி திரும்பி வரும். கதிரவன்
உதயமாகி கழனியெலாம் பயிர் மணக்க கண்ணிற்கு குளிர்ச்சி தரும். பெற்றவர்கள்
புவிதன்னில் பேறுபெற்றோர் ஆனதாலே உத்தமர்கள் மத்தியிலே உதித்ததொரு அருமகனே.
சுற்றத்தார் என்பதனின் சூத்திரத்தை மாற்றியதால் உற்ற நல்லுறவாடும் உலகத்தாரனைவருமே ஒற்றுமையே உருவான
உலகத்தில் கருணை கொண்டோர் எஞ்சியும் கயமை கொண்டோர் துஞ்சியும் பொறுமை தந்தோர்
மிஞ்சியும் பொல்லுலகே விடைபெற்று புதுப்பொலிவு கண்டதோர் கனியுலகு விஞ்சியும்
கலகத்தார் இல்லாத காசினியை கண்டேனே கண்ணாளா கதிர்காமா கற்கியெனும் பெருமானே !
மலையொப்ப திடமுற்று மலையப்பன் மனமுற்று முளைவிட்ட மன்னாதி மன்னவனை
மாணாக்க நிலையாக்கி மதியூறும் சோற்றுள்ளில் மாளாத சலவைதனை மாற்றார்கள் புரிந்தபடி
மந்திரத்தால் இழுத்திருந்தும் மயக்கமுறா மரைமுகத்தான் மடத்திற்குள் நுழையவே
மறுத்த கதை யானறிவேன். மலை மண்ணை வளைத்தெடுக்க மாதங்க நிரை கொன்று மதம் கொண்ட அகம்
கெட்டோன் நிலம்விட்டு நிலம்வந்து நிலைபெற்ற நெடும்வரை கொங்குறைந்த கொலைகார நீசனவன்
விருந்துக்கு வேசிகளை வேடர்களாய் மூட்டி விட்டும் விளை முல்லை நிலம் தன்னில்
விதியெழுதி மண்ணாளும் முன்னிவனை மரணப்பொறி புதைத்து வைத்து மறைத்த பல சதித்திட்டம்
புவனத்தார் அறியாமல் போனாலும் போகட்டும். புதினத்தால் யான் இங்கு புதிரமைத்தேன்
அறியாயோ.
மாடுண்ணும் கண்டத்து மறம் மறந்தோர் பிண்டங்கள் நாடெல்லாம்
நிறைந்ததனால் நம்மண்ணல் நழுவாது காடெல்லாம் மேடெல்லாம் கால் தடங்கள் கண் பட்டு
கயவர்களின் காதுக்கு நாளெல்லாம் பொழுதெல்லாம் தவறாது சேர்ந்திடுமே. வழுவாத வரம்
பெற்றோர் வாய்மூடி மௌனியாக வெகுவாக வெய்யர்களே விளைந்ததொரு பூமியெங்கும் உருவான
மடத் தலைவர் பல பேரில் மனம் கெட்டு சினமுற்ற திடத் தலைமைகளிலிவளோ திகிலூட்டும் மலை
நாட்டின் சிறுகண்ட நகராண்டு உறு நகரை கையிட்டு உச்ச நகர் மெய்யுடைத்து
குறுநெஞ்சால் நஞ்சுடைத்து கோலக்கடலோரத்திலே கொடியதொரு காக்கையொப்ப யாக்கை தனை
காட்டாமல் கருணை வேடம் போட்டபடி வெள்ளாட்டுத்தோலுடுத்தி வெறியுடை சுறாவென
தறிகெட்டாடியவள் தலையிழக்கும் காலமது தடையிலாது வருமென்று தயங்காமல் பாட்டிசைக்க
தந்த வரம் யாரென்று தவறாது யானுரைப்பேன். தலைமீது மதிசூடி சரி பாதி மெய்யுள்ளில்
உமையாள இடங்கொடுத்தோன் உற்றதொரு சாட்சி சொல்வான்.
வலக்கர கைத்தலத்துள்ளில் வானவ திலகம் அரியுடையாழி வருகை தருமே !
சிறப்புறு மெய்யின் செம்மலர் கைத்தலத்துள்ளே சீருறு நிலவென மையம் கொண்டதன் விட்டம்
நின்ற விரலொன்றிடையுற்றோர் ஒப்பரும் பொற்குடம் போலதை பெற்றான் பேரொளி பொற்றாமரை
உடலின் இடக்கரமலருடை பள்ளம் தன்னில் இருக்கும் கால்விரலிடை ஆரந்தாங்கி இரண்டிற்கும்
மேல்புற ஓரம் பொற்கொடி வெட்டும் விட்டம் கிட்டும் ருத்திரன் உடுக்கை தொட்டே
உறங்கிட ஒன்றில் ஒன்றென உள்ளன கமலக்கைகள் இரண்டுடை தெக்கண சிங்கத்தின் அங்கம்
தெரிந்தே அளந்தேனவன் தேவரில் தங்கமவன் தேன் சுவை அங்கம் அதை புணர்ந்திடத்தானே
ஏங்கும் புவிமாதரின் பூவினும் மெல்லிய நெஞ்சம் பெரும் புண்ணியம் கொண்டதாய்
ஏற்கும். நறுவுடல் நாரணனாகுமதை நன்றாய் அறிவேன் யானும்.
எமனே நெருங்கா வல்லோனிங்கு எவர்தானுண்டு உலகில். சிவனை நினைந்தே
சேவடி தொழுவோர் அவனின் பாசம் அறுத்தெறிந்தே அறனாருடனே அணைந்திடுவர். இழியோன் யானே
நெருங்க ஒண்ணா இறுமாப்புடையோர் எண்ணரும் கொடியோர் குறிக்கோள் கொண்டே குதூகல பயணம்
கொள்ளும் உயிரையும் இனிதாய் குடித்து ஏப்பமிடுவான் கூற்றுவன் கூடியே வந்து வண்ணக்
கனவையும் சிதைத்து விடுவான். ஆலகால அரவம் போலே பிறர் அஞ்ச எழுந்து ஆடும் படமுடை
ஆணவ அகமுடை எத்தரைக் கூட இதயம் நடுங்கும் கோர விபத்தால் கொன்றே புசிப்பான் கொன்றை
வேந்தன். வேதம் விற்கும் வீணரில் கூட விழல்களைத் தேடி விடியல் வரும் முன் விறகாய்
எரிப்பான். சிவநெறியற்று சிந்தை முடமுற்று கபட மனமுற்று கலைகள் வரம்பற்று கருவம்
தலைதூக்கும் கறையுடை கயவரையும் தழல் கதிர் தனையன் மரிக்க விடாது மண்ணில் நிலைக்கவிட்டே
நெடுநாள் கண்ணீர் வடிக்க விடுவான். பரமனைப் பணிந்தே பாரினை கடப்பவன் எமன் முதல்
இங்கெவன் அண்ணலை மிரட்டினும் எரிகண்ணுடையோன் அரணாய் இருப்பதன் பயனாய் அனல்
குஞ்செனவே அணையாதிருப்பான் அறநெறி வழுவா நிலமிசை மைந்தன்.
உலகழிந்து போனாலும் உயிர் காக்கும் பொற்குஞ்சாய் உத்தமனை
ஏற்றெடுத்த பித்தன் ஒருவனே பிறப்பறுக்கும் பேரிறைவன். பிறைசூடனருளாலே பிறப்பெடுத்த பெம்மானை
இறைசூடனிவன் ஒப்ப இம்மையிலும் எம்மையிலும் இணைபிரிய மனமேயின்றி இமைப்பொழுதும்
இரியாது உமையாளுக்குவமையாகும் உயிர் காக்கும் தாய்க்கோழி உடனிருந்தே உற்ற தன்
சிறகடியில் மேனிக்கிதமாக மிதமாக அரவணைக்கும். ஆங்கே அரவம் காட்டாது அடங்கிய
அம்மையப்பன் தலை மீது வட்டமிட்டு தளராது அங்கும் இங்கும் தாழ்வாக பறந்தபடி வெறியோடு
வேட்டையாடும் வீறுடை பருந்தினையும் இரக்கமற்று இரைதேடும் இதயமற்ற புள்ளினையும்
எழுந்தேறி தாக்கிடுவான் ஈசன் நின்று காத்திடுவான். நீசர் கரம் நெறியிழந்து
நெடுங்காலம் ஓங்கிடாது. நீதியென்றும் நிலையிழந்து வருங்காலம் தூங்கிடாது.
நேசக்கரங்களையே அடக்கி பாவியர்கள் ஆடினாலும் பக்கபலம் கூடினாலும் பாசக்கயிற்றுக்கு
பதில் சொல்லி ஆக வேண்டும். கபடமுறை இடும்பனையே கந்தனவன் வதைத்ததைப்போல் கயவர்
கூட்டம் கதறி மாளும் கண்கொள்ளாக் காட்சி கண்டேன். எம்மானுக்கெதிராக எழுவோரனைவரையும்
பொறிவிழியால் பொரித்திடுவான் பூதங்களின் நாதனவன். காயமுறும் மாந்தருக்கு கருணையொடு
மருந்திடுமோர் காவல் தெய்வம் சிவனன்றி காசினியில் எவனுண்டு.
பாகம் 159
திங்களுள் மூத்ததோர் வெள்ளியன்று திருச்சபை கொண்டதோர் திரு மார்பனூரில் எங்களின் அண்ணலே இளமையினை இனிதாய் கழித்ததை இங்கு யார் அறியாதிருப்பினும் யானறிவேன். அங்கு கொங்கலர் மணங்களை கூட்டுண்டு கொலுவுற்ற தென்றலே சேதி சொல்லும். எங்கெலாம் ஐயம் எழுகின்றதோ அங்கெலாம் எந்தன் அமுதத்தேன் தமிழ் பாட்டில் கொள்ளும். மங்கள முகமுற்ற மாது வந்து மன்னனின் மனதை மயக்கிச் சென்ற விந்தையை கண்ட விண்ணவரும் வேண்டி நின்றதும் அம்மங்கையையே ! தங்கமே எனக்கது நினைவு வந்து தாளாத காதலை எனக்குத்தந்து உந்தனை எழுப்பியே உயிர்க்க விடும் உத்தமனே நீ
அறியாயோ !
முன்னமுன் பதின் பருவத்தில் மூவர் உறைந்த திருபுரத்தில் கன்னம் சிவந்தவள் காதல்
செய்தாள். கனியிதழ் உதட்டாள் காமம் கொள்ளாள். பின்னம் மலர்ந்தது இதுயென்று பிறை
முடிந்தோனே எனை அணுகி அன்னம் அவளை மணக்கச் சொன்னான். அவள்வழி பூவொன்றை காக்க
சொன்னான். அம்பையின் வடிவாய் அவளிருக்க ஆதி பகவனே சாட்சி சொன்னான். இன்னமும்
தயக்கம் உனக்கெதற்கு ! என்னுரை இங்கு விளக்கமைத்து இருளை கிழிக்கும் சிறப்பெடுத்து
முன்னுரை வழங்கும் விழி கொடுத்து மூத்தமிழொடு மூதறிவும் ஈடிணை சேர்வதால் நலன்
பிறந்து ஈரேழுலகமும் பெருமை கொண்டு வாழ்த்தி நின்று வணங்கிக்கொண்டு
வரங்களையெல்லாம் அள்ளித் தந்து யுகந்தனை மீட்கும் படி உன்னை ஓரணியில் பணிந்ததனால்
உலகே உய்ய வழிகாட்டு ஒப்பிலாதோர் பெருமானே.
பயிலகம் நடுநிலையில் பைந்தமிழ் உரை நிகழ்த்தி பதக்கங்கள்
குவித்தபடி பாராட்டும் பெற்றிருப்பான். ஒன்பதில் உச்சம் தொட்டு உயர்நிலை
பத்தில்கூட உயிர்த்தமிழ் உரை நிகழ்த்தி கரவொலியோசை கேட்டு கட்டிட கூரைகூட
அதிர்ந்திட அண்ணலவன் அருந்தமிழ் அரங்கம் வெல்வான். அறிஞர்கள் ஆங்கிருந்து
ஆதரித்தாரவாரம் புரிந்திடக்கண்டேன் அன்பே ! பொய்சொல்லி புகழ் குவிக்கேன் புறம்
பேசி அருள் இழக்கேன். ஆலயத்தான்றோர் கூட அழைத்ததன் பேரில் சென்று ஞானவான் நற்றமிழை
நறுமணம் கமழவைத்து வானவர் நுகரக்கண்டேன். வாயினில் தமிழருவி வார்த்தைகள் வந்து
கொட்ட பாவலர் கூட்டத்துடன் பாணரே திகைக்கக்கண்டேன். எம்மானின் இனிய நாட்கள்
இளமையாய் கனியும் தேன்கள் முழுமையும் மறைந்திருந்து முத்தமிழ் அவனுரைக்க முரணரும்
சலிக்கஒண்ணா எழில்நடை கேட்ட மாந்தர் கலைமகள் அவனின் நாவில் கட்டுண்டு கொட்டும்
இலக்கை இயம்பிட வந்தாளென்று ஏற்றியே போற்றிநின்றார். ஊழ்வினை அறுந்துபோக உள்விழித்
திறவுகோலை உமையொரு பாகன் பார்த்து உற்றதோர் நேரம் சேர்ப்பான் உலகமே
காத்திருப்பாய்.
காக்கையர் பற்பலர் தினம் குவிந்து காவலுக்கு மனமுவந்து காஞ்சனன்
மெய்யறிந்து காரிருள் இரவிலெல்லாம் கண்களும் துஞ்சாது கற்கியின் இல்லத்தை
காப்பதில் கடமையேற்பார். அவர் சொல்ல முயல்வது புரியுமென்றால் சொல்லிட எனக்கும்
இயலுமென்றால் சுழுமுனை திறப்பது உறுதி என்றார். சூட்சும தேகமே இறுதிக் கொண்டோர்
வாக்குகள் பொய்த்திட வாய்ப்பேயில்லை. வந்தது வான்மகன் வரவு என்றால் வாய்த்திட
எவர்க்குமே வரமும் இல்லை. வந்து எதிர்த்திட வலுவேயில்லை. அத்தகு ஆற்றலை அலகேயின்றி
ஆடலழகனே அருளி விட்டான். நம்புக நற்பெருங்கருணைகொண்ட முப்பெருந்தேவியர் முன்மொழிந்து முப்பத்து முக்கோடி தேவர்களும் முன்வந்து
காத்திடத் துணிந்தனரே. இதை எல்லோர்க்கும் பகரவே யானும் வந்தேன். இருள் ஆழ்ந்த ரகசியம்
யான் உரைப்பேன். இதைக் கேட்கும் அருமாந்தர் புருவங்களே உயர்ந்திட திகைப்பது உறுதி
என்பேன். முத்தமிழ் வேந்தனின் வருகைக்காய் சித்தர்கள் பற்பலர் முன்னர் வந்து சீரிய
கடமையை செய்வதற்காய் வனவாசம் வந்து புகுந்தபடி மண்ணுயிர் காக்க துணிந்தனரே.
திண்ணமிதையும் நம்புங்கவே திண்ணப்ப நாயனார் தேவனொன்றும் நமை திக்கு தெரியா
காட்டில் விடான்.
அணிச்சல் மெய்கொண்டு அரம்பையே வந்திடினும் ஆவலாய் எதையும் மெய்யும்
கொள்ளான். அம்பையை அங்கத்தில் அரை பாதி கொண்டோனும் அம்புலி சூடியே அறந்தாங்கி
நின்றோனும் அகிலாண்ட நாயகியோடாடும் அழகனும் அம்பைக்கு அழகூட்டும் ஆண்மை பொங்கியே
தும்பைப்பூ சூடிய தூயோனும் தொழுமுன் எனக்கருள் தந்தான். கொவ்வை இதழ் விரித்து குவலயத்துள்
குமரியர் குவிந்திடினும் விரும்பி அவன் செல்லான். விட்டுவிற்கு விண்ணவர் விதித்ததையே
விரும்பி அவனணைப்பான். வீண் முயற்சி கொண்டு விளைந்தோர் அனைவருமே பாழாய் போவரென்று
பாம்பை பத்மமாக்கி பரந்த மார்பெடுத்த பரம சிவன் எமக்கு பகர்ந்த உரை சொன்னேன்.
உச்ச நகர் உறைந்த பேய்கள் ஊரார்க்கு பிறந்த நாய்கள் ஓசையின்றி
உள்புகுந்து உலகளந்தான் உதித்தெழுந்து ஒப்பிலாது ஆளும் முன்னம் உண்மைக்கு ஊறு
வைத்து ஓநாயின் நோட்டமிட்டு உறுமி எங்கள் மன்னவனை ஒழித்திடவே திட்டமிட்டும்
திறனற்ற மகவுகளும் திண்டாடி வெற்றி கண்டும் வெகுநாட்கள் வாழாரே. வாசியேற்றும்
நாசிக்காரன் வாஞ்சை மிகு வேந்தனவன் வேசமிடும் நாசக்கார வீணர்களை வேரறுத்து
வெறியோடு போரடித்து வெண்கதிர் போல் உயிர்த்தெழுந்து உளமிழந்தோர் கூட்டத்துடன்
ஒட்டியே உறவாடி உண்மை கொல்லும் பூனையையும் புற்றத்துள் புதைந்திருந்து புதிராக
வினை புரியும் பூநாகப் படையனைத்தும் புறமிழுத்து உடலெரித்து உய்யவே விடாமல்
உரத்திற்கே சாம்பலாக்கும் வித்தைகளை அறிந்ததை யான் விழியிரண்டால் கண்டுகொண்டேன்.
எம்மானின் எழுச்சி தனை எதிர்நோக்கும் நல்லோரை முன்னமே விழுச்சி கொள்ள முயன்றவரை
மூட்டி விட்டு இயன்றதை யான் எடுத்தியம்ப எண்ணி வைத்தேன் கணக்கு தீர்க்க. காதல் கனி
உமையோடு காயம் சேர்த்து காமம் தீர்த்த நாகமுடி நர்த்தனாரே ! வாக்குரைக்க
வாயசைக்கும் வலுவிழந்த எந்தனுக்கு வலிமைமிகு வரம் தந்தே வெற்றிக்கு பொறுப்பேற்பாய்
! விதியினையே வெல்லுகின்ற வினையகற்றி வாழ்வமைக்கும் வியத்தகு சிறப்பேற்பாய். போக்கெல்லாம்
சிறப்பாக்கி புருடோத்தம விளக்கேந்தி புவியெங்கும் ஒளி கொடுத்து பொற்காலம்
அதிசிறக்க பொறிவிழியால் அருள் பொழிவாய் புலால் உண்ட பெருமானே !
பாகம் 160
நாவிற்காய் வாழ்வோரனைவரின் நற்காயம் நலிவுற நலமிழப்பர். நாதன் குடிகொள்ளும் நன்நெஞ்சுடை மேலோரென்றும் மேனி செழிக்க மனம் செலுத்தார். நாளும் கனிகொண்டு நன்றாய் காயுண்டு நறுங்காயம் காப்போர் பாழும் நரகிற்குள் பதிந்திட செல்லாது நாளும் நஞ்சொத்த ஊனும் உண்ணாது உலகு விட்டே உதிர்ந்தாலும் உதிரா கனியாகி உத்தமருறையும் உமையாள் பாகன் ஒப்பரும் உலகிற்குள் சிதறாது சென்றடைவது சிவவாக்கியமென தவவாக்கியர் தந்ததெல்லாம் தவறாய் போமோ ? பரமன் பதமலரடி பணிந்தாலே பாவம் செய்யத் தோன்றிடுமோ ? புவிநாதன் போற்றுதற்குரியோனவனை பொறிவாயில் ஐந்தவித்தே பொல்லுலகை கடக்கும் முயற்சி பொய்க்காது வாழ்வோர் வளமுடன் வாழ்வாங்கு வாய்ப்பது மெய்யே !
அறிந்தொருவன் அண்ணலவன் ஆம்பல் மனம் புண்பட்டு அல்லலுற ஆட்பட்டால் ஆணவத்தால் அத்துமீறி விட்டுநெஞ்சில் வேண்டுமென்றே வேதனை வித்துநட்டால் வீண் கருவம் வெற்றி கொண்டு களித்தவன் கரந்துநின்றால் விழித்திருக்கும் விமலனவன் வீணாய் விடானே. வெற்றிக்கோர் வேங்கையென விரிந்தவன் பெயருக்கு வேண்டுமென்றே களங்கமதை கண்மூடி கற்பித்தால் மறுமையிலா மாபாவம் மண்ணுலகில் பலர் பெறவே சிவன் சபித்து சீரழிப்பான். செவிகிழிந்து சிலையாகும் நிலையுற்று செறுபாவம் கோடியுற குலம் வீழும் என்னாளும். பெருமானின் பீலிக் கண் பெருக்கெடுக்க பிறப்பெடுக்கும் பெரும்பங்குதாரர்களின் கருமம் கெடும் கதை சொல்வேன். பீடையது பிறப்பெல்லாம் பின் வாங்கா பெருக்கெடுத்து பாடை தரும் பன்மடங்கு பழிவாங்கும் நோக்குடனே அழையாதார் வாயிற்படி அண்டிவந்து அல்லலுடன் அவலங்களும் அவனவன் தலைமுறைக்கும் வேர் விட்டு விழுதிறக்கி விதி முடிக்கும் கதை எழுதி விடாது தீங்கு செய்தே வாழையடி வாழையாக வந்த குலை நொந்து கெடும். ஆதிசிவன் அழல் மகனார் அழும் வண்ணம் அகம் சிதைக்க ஆளுனனே ஆழ்ந்து வரின் அனல் மலைக்குள் அகப்பட்டு அழுது கண்ணீர் குடித்திடுவான். கொற்றவன் இன்னல் கண்டு கொஞ்சமும் கருணை கொள்ளான் கூற்றுவன் உலகுக்குள் கொலை நடுங்கத் துயருறுவான். காலக்கெடு எதுவுமின்றி கனிகொட்டும் மன்னிப்பு கடுகளவும் காலன் தரான். அறவழியை அணுகுவோரின் அன்புமனம் கொல்பவர்மேல் பாவநாசன் சினமது பன்மடங்காயிடுமே. அர்த்தநாரி மகனிவனாம் அணைக்க ஒண்ணா அனல் குஞ்சாம் அணைவது மெய்யன்பிற்கே என்றறிந்தும் அகம் அழிந்தோர் இடைமறித்தால் குவலயத்தை கொண்ட பின்னம் குற்றமுற்ற குணக்கேடர் கவலையுற வைக்கும் வண்ணம் கதி கலங்கும் அத்தருணம். அறம் கொன்றோன் என்றெவனும் அடையாளம் கண்டுவிடின் ஆயுளுக்கும் சிறைவாசம் அதிவிரைவில் திண்ணமென திண்ணப்பன் நாதனவன் திருவிழிக்குள் எழுதியதை திருடாது கவர்ந்த வண்ணம் என்னப்பன் இசைவுடனே இங்குனக்கு பாட்டில் தந்தேன்.
ஆதவனும் அழுக்காகுமதை அமிழ்த்தவந்து நகைக்க தோன்றும் ஈரிலையும் இழுக்காகும். பாவிகளை முதற் தந்து பதவிவெறிக்கடிகோலியே ஓவிய கைத்தலமுற்று ஊழலுக்கு வித்திட்ட உயர் குடிகள் இடம் பிடித்த ஒரு கட்சி வலுவிழக்கும். பாதகமாம் பிரிவு வைத்து பரத மைந்தர் மனத்துள் தைத்து கொடும் சாதி கொண்டு பிரிவு வைத்து அதைநாலு குடியாய் வகுத்து ஆளவந்தோர் அன்பறியா பங்கயமும் இகழ்ச்சி கொண்டு பங்கமாகும். பன்னாடுகள் முதற்கொண்டு பதராகும் பலவண்ணக் கழகங்கள் மன்னுயிரின் வலியறியா மதம் கொண்ட கலகத்தை தென்முனையர் புறக்கணித்தும் தேவையின்றி ஆங்காங்கே தீயினை போல் வலுவடையும். மாதவனே எடுத்தாளும் மாபெரும் காலமதில் மடை திறந்து கரைபுரண்டு மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுக்கும். மன்னனவன் மண்ணாளும் முன்னம் பல மாநிலத்தில் மன்னுயிரின் குருதியோடும் மரணம் பல நூறு ஆகும் மணித்துளிக்கு காலம் வெகு தூரம் இல்லை இதை கண்டு அழும் போதினிலே என்னுயிரே உறைகின்ற இதய வலி யான் உணர்ந்தேன்.
அழிக்க வந்தோராயிரமாயிரமாயின் அரக்கர் கூட்டம் ஒழிக்க ஒண்ணா உடலுற்று ஒளிமகன் தோன்றின் பொறுப்பதெல்லாம் பூமகள் நீதிமான் வேண்டின் பொறுப்புடனே மாமகன் மண்ணேற்று வாரின் அறுப்பதெல்லாம் அறனுக்கஞ்சாது ஆர்ப்பரிக்கும் அடங்கா பதரினமனைத்தும் எரிப்பதெல்லாம் இன்னா செய்யும் இழியோரென எடுப்பதெல்லாம் என்றும் மிடுக்குடை கடனே என எல்லாமறியும் சிவனே நீ என்னுள் வந்ததை அறிவேன் !
கொல்லும் நஞ்சை தின்றாலும் கோமான் வல்லுயிர் போகாது மல்லுக்கட்டி நின்றிடுமே. மறவர் கோடி வந்தாலும் மறலி நாடி நின்றாலும் மரணம் தீண்ட இயலாது மண்ணில் சாய்க்க முடியாது. வில்லும் அம்பும் வேந்தனவன் விதி முடிக்கயியலாது. செல்லும் அரவம் யாவையுமே செவ்வேள் பாதையில் வாராது. வெல்லும் வினைகள் பல தாங்கி வீறுடை மாந்தர் எவர் வரினும் எல்லாம் அவன் முன் வீணாகும். எம்மான் எழும் முன் பாழாகும். எல்லோர் பகையையும் எருதேறி ஏற்றெடுத்து எரியூட்டி சூழ்ந்தவர் சூழ்ச்சியை முறியடித்து அதன் சினையைக் கூட சிதைத்திடுவான். மறையேன் எவற்றையும் மலர் முகத்தான் மரையடி பணிந்தே யானுரைப்பேன். முறையொடு நோக்கிய கைத்தலத்துள் மூலமே மையச் சின்னங்கள் இனிதாய் ஆங்கே இடம் பெற்ற எழிலுறு அரியமர் கருடனுடன் அழகுறு அறுமுகன் மஞ்ஞையுமே அருளொடு கரத்துள் இருப்பதனால் அண்ணல் செல்லும் தடமெங்கும் அடர்வனம் பூண்ட நிலமெங்கும் நாகங்களேதும் வாராது நடுங்கியே ஓடிடும் நாற்புறமும். அவன் தேவாதிதேவன் ஆனதனால் தீங்குகள் அவனை தீண்டாது. அவன் சேவடி வண்ணம் ஒப்பிடுவேன் அதை பின் வருமாறு செப்பிடுவேன். பிறையை பின்னி தலை முடித்து பேராற்றல் கொண்டோன் அடியொத்த கமலப் பதமலர் கொண்டவனை கருணை வடிவாம் மீட்பனென காடுகள் அறியும் நண்பனென. கல்லும் கனியும் நிலைபெற்று காணக் கிடையா அன்பனென சொல்லும் அவனது பண்பனைத்தும் சொல்ல ஒண்ணா புகழ் குறித்தும். இன்னலும் இன்பமும் இவ்வாழ்வில் எவரும் ஏற்கும் விதியென்றால் கொன்றை வேந்தனை பணிந்தாலே கொண்ட துயரங்கள் அகன்றிடுமே. விந்தையுள் விந்தை என்னவென்றால் விதியது வலியது என்றறிந்தும் சிந்தனை செய்ய வழியின்றி பொன் பொருள் மீது கண் விட்டும் பிறரின் பெண் மேல் மனம் நட்டும் மண்ணை ஆள நினைப்பதுவும் மரணம் வருமுன் மறப்பதுவும் மாந்தர்கள் செய்யும் பெருந்தவறாய் காலக்கணிதன் நகைப்பதனை கண்டு நகைத்தேன் மன்னவனே. விண்ணவரெனக்கு சொன்னதையே வேதனை அறுக்கும் மருந்தாக கன்னல் உந்தன் காதோரம் என்னால் இன்றதை எடுத்துரைத்தேன். எல்லாம் அவன் செயல் என்றறிக எதையும் தாங்கும் என்னுயிரே !
அண்ணலது ஆளுமைதான் ஆன்றதொரு அறிவுடமை உற்றதொரு உலகுடமை உயரியதோர் பொதுவுடமை முற்றிலுமே மாறுபட்டு மூதறிவு வேர் விட்டு அன்புடமை சீர் பெற்று அறம் தாங்கி வென்றிடுமே ! அகிலத்து அரசியலின் அச்சாணி முதற்கொண்டு அத்தனையும் அறிந்திருந்தும் அதையொன்றும் பின்பற்றான். அதை நம்பி கண்கெட்டோர் அறியாமை புண்பட்டோர். இதை விட்டு எம்மையன் ஏற்றமிகு ஆட்சி கொள்வான். நாற்றமிகு பொன்மலர்க்கு நன்று மேலும் வேண்டுவதோ ? அகன்றிடுமே அற்பர்களின் அடிப்படை கட்டிடமே. பொழிந்திடுமே புயல் வீசி தகர்ந்தது போல் பொல்லாட்ச்சி பொய்த்திடுமே. பூதலமே புகழ்ந்திடுமே பொன்னுலகில் புதுமை அவன் செய்ய கண்டு விண்ணுலக ஆட்சி என்றும் வேந்தனவன் மாட்சி என்றும் இவ்வுலகே புகன்றிடுமே. விழியெடுத்த ஊடகங்கள் விருந்தெடுத்து சுவைப்பது போல் விதையொன்று புதிதாக வீரியமாய் நட்டதொரு அருந்தமிழன் இவனென்று அனைத்துலகும் திகைத்திடுமே ! பிணியகற்றும் மருந்தெடுத்து பிறப்பறுக்கும் வழியமைத்து கயமை நெஞ்சில் இல்லாத கருமையற்ற காப்பனவன் கருணை சிந்தும் கனிமரம் போல் கண்டமெல்லாம் விண்டதனை கண்ணாரக் கண்டேனே.
பாகம் 161
பாகம் 163
பாகம் 164
காய்ந்த வயிற்றுக்கு கஞ்சித்தெளிவுகூட காணக் கிடையாது ஓய்ந்த உலகத்தார் உயிர்க்க இயலாமல் தோய்ந்த துன்பத்துள் துவண்டு வீழ்ந்திடுவர். மேய்ந்த மிருகத்தின் மிச்சம் எச்சமென ஆய்ந்த இலைதளையே அன்று உணவாகும். கற்பகத்தெளிவாலே கட்டிடம் கட்டியதோர் கருப்பர் கண்டத்தில் பொற்சிலை புணர்ச்சிக்காய் புசிப்பவர் உணர்ச்சிக்காய் விற்பனை கொண்டிடுமே விழிமீன் வெந்திடவே விடியலும் புலராமல் வீழ்ந்தவள் வருந்திடவே வேரது விரும்பிடவே வேந்தன் வருமுன்னே விளையும் விளைவுகளை வேதனை நுழைவுகளை விருந்தென விரும்பாதார் வினையறு மருந்தெனவே பருந்தின் பகவனவன் பகுத்து ஆய்ந்திடவே தொகுத்து யானளித்தேன் தூயோன் உணர்ந்திடவே ! மாயோன் இதைக் கொண்டு மனப்பால் தெளிந்திடவே தாயாள் உமை தந்த தரவை அருந்திடவே நாயேன் யானிங்கு நாவால் வரைந்திட்டேன். இன்றெழில் இல்லத்துள் இன்புறும் இனமெல்லாம் அன்றொளிய வழியின்றி ஆதரிப்பாரின்றி அலையென்றறிந்திருந்தும் அச்சமே தோன்றாது நிலமடந்தைக்குள் நீந்திச் சென்றடையும். சிவநெறி சிறப்பின்றி சோர்ந்திடும் பிழைப்பின்றி புவியின்று புசித்த பின்னம் புறமிடும் எச்சிலையும் பொல்லார்க்கு கிடையாது இல்லாமை கொல்லுமிங்கு எள்ளளவும் இரக்கமிலாது கொல்லாமை கடைபிடியார் கோட்டைக்குள் அல்லலுற்று ஆண்டி போலலைவதனை காலம் கடந்தாங்கு கடிகைப் பயணமிட்டே கண்ணீர் குடிக்கின்ற ஞாலம் யான் கண்டு நடுங்காதுரைக்கின்றேன்.
பாம்புக்கு பால் வார்த்து பட்ட துயரத்தனையும் பக்குவ படுத்திடவே பல்லாண்டு கையாண்டு பல்கலையான் கற்சிலையாய் பாறையொப்ப தாங்கி நிற்பான். பாரொளிர பயிற்சி பெற்றே பரந்தாமன் வேருறைந்த விதியறிவேன். விண்ணுலகே வியக்கின்ற எண்குணத்தான் இயல்புடையோன் ஈடிலா புகழடைவான். வெண்மனத்து வேங்கையவன் வெல்லுகின்ற பாங்கு சொன்னேன். வீழ்ச்சியுறா வேந்தனுடை வீறுகொண்ட வரலாற்றை பீடுடனே பாடவல்ல பேறு பெற்ற நல்லோர்கள் நடுவினிலே நாயோரும் வீற்றிருக்க பொல்லாப் பேயோரும் புண்ணிரண்டு கண்ணுற்று புறம் பேசித் திரிவோரும் பொசிங்கிடவே சூரியனே பிறப்பெடுத்து சூழ்ச்சிகளை முறியடிக்க வந்து சூழ்ந்த வல்வினைக்கு வாழ்வு சொற்ப ஆயுளென்று கண்டு சொன்ன கனல் கண்ணன் காப்பதிலும் மன்னர் மன்னனென்ற உண்மை எமையல்லால் ஈசனுக்கு இடமுறைந்த என்னருமை உமையன்னை எம்மானின் இதிகாசம் எல்லாமும் நன்கறிவாள்.
பாகம் 165
தமிழிசையமுதின் தீஞ்சுவை அறிந்தோன் தரணியில் செம்மொழி பிறிதொன்றை சொல்லி பைந்தமிழ் பழித்து பாவங்கள் குவிக்கான். தைத்திங்கள் முதல் நாள் தளிர்க்கும் ஆண்டென மெய்யறிவுற்று மேன்மகனாகி உய்த்திட வைக்கும் உண்மையை சொன்னேன். உனக்கதுவொன்றும் வியப்பில்லை என்றும் ஊரார்க்கதுவொரு கசப்பென கண்டும் பாரார் படிப்பினை பெற்றிட வேண்டி பதித்த வாக்கிங்கு பொய்யாய் போமோ. பூதலமெல்லாம் புதைத்த புதிரது நெய்யுரையாகும் பொதிந்த கைத்தலம் ஆவலை தூண்டி புவிசார் குறியென பொன்மான் ஒளிர்ந்திட ஏவல் புரிவேன் இன்னமும் கேளாய். வருவானெந்தன் வாயுரையேற்று வாழ்த்திடுமன்று வாய்மையே வெல்லும் வான்மகன் வருகை ஆண்மையுள் ஆண்மை ஆடவர் மேன்மை அகிலத்தாரின் கேண்மைக்கவனே கிடைப்பதற்கரிய கீர்த்திகொள் மகனவன் படைப்பதை எல்லாம் பட்டியலிட்டால் பக்கங்கள் பலகோடி தாண்டியே செல்லும். பாராதிருப்பது போலே இங்குன் பாசாங்கெதற்கு பரமனே வந்து பதிலுரைக்காயே !
இழிமகனூன்றி கிளி மகளீன்ற பழி மகனொருவன் ஒளிமகன் உதிக்கும் உயர்வுடை நாட்டை உய்ய விடாது நிதியினை கெடுத்து நேர்மையை புதைத்து கதியென பணிந்தோர் கனவினை சிதைத்து கருணை மறந்து கண்ணீர் கறந்து துயரமுறைய தொன்மை பரத துணைக்கண்டத்துள் தோன்றி கெடுக்கும் துட்டனாவான். வறுமைக்குள்ளே வழிகளை தொடுத்து வான்தமிழ் நிலத்தின் வளமையை சிதைத்து வாழ்க்கையை கெடுக்கும் வெறியுடை மகனை வீழ்த்த இங்கு வேல்முனை ஓங்கிட மாலன் பிறப்பு மண்ணில் வருமுன் மறுபடியொருவன் மௌனியாக மனங்கொன்றோன் பின்னம் இரண்டுடை சுழியம் ஈன்றததோர் இரண்டின் மகவென நான்காய் மலரும் ஆண்டில் மக்கட்பண்பே இல்லாதவனாய் மாபெரும் துறைகளை கையில் கொண்டு தொல்லியல் தமிழை தோண்டி புதைத்திட வல்லரக்கன் வட்டிக்குடியுள் வல்லூறெனவே வந்து பிறந்தும் வகைகெட்ட செயல்களை செய்து முடித்தும் தெக்கணமூன்றியே தீயோர் துணையுடன் தான்தோன்றிகள் தற்குறி நரிகளை தன்பாலிழுத்து துறவி போர்வையில் துடியிடை கிழுள்ள தூண்டிலில் வீழ்ந்தோர் இறைவிக்கெதிராய் இவனுக்குதவ பிறவிக்கெனவே ஒருநாற்பிரிவை பிரித்ததில் வந்த முதலாம் பிறப்பை முன்னணி வைத்து பின்னணி தன்னை பெருமையாய் வைத்து பெண் மணிமுத்தை பீடையாய் வைக்கும் பேதம் கொண்ட நீதி நூலை பேணி காக்கும் பேய்மகன் கொண்ட பேரகந்தையை பிய்த்தெடுக்க அண்ணல் கற்கி அனலென கொதிக்கும் அனற்சினமுற்று அனைத்தையும் அழிக்கும் முற்போக்காண்டினை மொழிந்தேன் கேளாய்.
கயவன் கசிந்த கன்னியாண்டு கழிந்ததும் கழுத்தை கயிற்றுடன் இழுக்க வைத்திடும் கண்டம்
சொல்வேன் காது கொடுப்பாய். மன்றம் தமிழது மலர்ந்திடும் தரையாம் மருதம் துவங்கிடும்
நெய்தல் நெடு நிலத் தலையின் மேலே நீர்நிலை கடலென நிறைந்த பெட்டகமுறைந்த நீசர்
கோட்டைக்குள்ளே கொணர்ந்து நீதி கொன்றவன் நின்று மடிய நேசன் கற்கி ஆணையிடுவான்.
காவலன் போர்வையில் காலனாய் இருந்தோன் கதையே முடிய வறுமையை விதைத்து வன்மத்தை
நிறைத்து கருமம் பிரித்து கடுமனமுற்றதும் வெண்மனமுற்ற வேந்தன் வருமுன் விருந்தென
வருவான் பருந்தென அறிய பல காலமில்லை. பரமனை பணிந்து பக்குவப்பட்டோன் பகலவன்
விழித்திறந்தறிந்திட வல்லோன் பாற்கடல் பெருமான் பதிந்ததையறிவான். வருமுன் வருவதை
வாக்குகள் மூலம் வார்த்த நாக்கு வரதையின் நாக்கு என்பதை அறிந்தோன் ஈசனை உணர்ந்தோன்.
அகத்துள்ளமர்ந்து ஆணையிடுவது அரவமணிந்தோனென்ற அடிப்படையறிக. அரவணையிட்டவன் அவன்
விதையிட்டதை அவனே அறியாதவன் வினை புதைய கண்களை மறைத்தது மங்கையர் கொண்ட பங்கய
குறியே. கங்கையைச் சுமந்தவன் கட்டளையிடும் வரை சங்கையே பிடித்தவன் சதுரங்கம் உள்ளே
சற்றும் வாரான். கார்முகில் சூழ்ந்து கவலையால் தோய்ந்த கற்கிக்கெனது கடனாயிருப்பது
காயமுரித்து கனலுடலெடுக்க கதிரென முடுக்கி ஆயத்தமாமதை அடுக்கி வைத்து அறம்பாடிடும்
அரும்பணியினும் பெரும் பணியென பீலிக்கண்ணன் பிறப்பை அறிய பேரருள் புரிக ஆருயிர்
சிவனே.
பொன்னையன்
வட்டத்துள் பூனைகளின் புற்றத்துள் நஞ்சுடையோர் உறவினிலே நாகர்தலைப் பூனைகளில்
பொல்லாதவை நடுவினிலே பூவிதயமுற்றவையோ வஞ்சகர்க்கு உதவாமல் வல்லிறைக்கு அஞ்சிடவே
வாழ்வியல் பணிந்திடுமே. நல்லியல் புனுகுகளோ நமக்கெதற்கு வம்பென்று நன்றுதீது
நாடாது நாதனது நயனத்துள் நாழிகையும் வீழாது நழுவியே நகர்ந்திடுமே. நளினியவள்
நாயகனின் நடுக்கண்டம் நறுக்க வந்து நடுங்கியே நகர்ந்து செல்லும்.
கொற்றவையை கைகூப்பி கும்பிடும் குழுமம்கூட குற்றப்பின்புலத்துள் குறையாதுற்றவராய்
மற்றவரும் மாற்றாராய் மனம் மாறி வந்தாலும் மன்னனவன் மடிமயிரில் ஒன்றைக் கூட மழித்திட வலுவிலாது
மரணபீதி ஏற்பட்டு மனமஞ்சி ஓடியோடி ஒளிந்திடுமே. அற்ற அவன் நண்பரெல்லாம்
அறிவுகெட்டு அறம் சிதைப்போர் உறவு பட்டு பரமுறைய இயலாமல் பாம்பணிந்தான் பாதம்பட்ட
காலனது கண்டத்துள் கண்ணீரருந்திடும் கண்கொள்ளாக் காட்சியினை கண்டதற்கு காளியொரு
சாட்சிசொல்வாள்.
கடுங்குளிர் பனியிற் கதியென்றமைந்த கதகதப்பூட்டும் கம்பளிப்போர்வைபோல் காணக் கிடைப்பான் கண்ணான கண்ணன். கடும் பசி கடித்து குதறி தின்னும் கொடுங்கொலைக்களத்துள் கொடை பெறும் உணவாய் குற்றுயிர் மீட்க்கும் கொற்றவன் அவனென குழந்தாய் அறியாய். அல்லல்பட்டு அழும் நிலைகளிலும் அயராதவனாய் அகிலம் அனைத்தையும் அறம்சார் முறையில் ஒன்றாய் திரட்டி நடும் நன்னிலமே நன்றாய் உயிர்க்கும். படும் நிலை இனி இப்பாருக்கில்லை. பாதகர் பலரும் போதகராகி பாவ கோட்டைக்குள் மேதையராகி தாய்நிலம் ஏய்த்திடும் பாழ் நிலை இனியெப்பக்கமுமில்லை. பண்புடையோரே பதிகளுள் நிறைந்து பார்க்க சிறந்து பரந்து மலர்வர். தொடும் துறை எல்லாம் துலங்கி நின்றிட தூயோன் இவனை தூங்க விடாது தொடுத்திடும் எந்தன் தாயோன் சிவனே தாதையென்றறிந்தேன். மாயோன் மருந்தாய் மண்ணிற்கு விருந்தாய் தேனாம் தமிழின் தீஞ்சுவையறிந்தவன் வானாய் உயர வாழ்வளிப்பானே. அருந்ததிக்களித்த அரும் வரம் என்று அகிலம் அறியும் நாட்களும் இங்கு அதிவிரைவாக வந்திடுமென்று விதி வரைந்தோனே விழிகளை திறப்பான் வீணாய் வார்த்தைகள் வீழ்வதுமில்லை. தானாய் தரணியில் தருமரம் தளிர்க்க ஆணாய் அவனை அனுப்பி வைத்தவன் அவனுக்குரத்தை அள்ளித் தந்திட மானே யானும் மடிவதன் முன்னே மன்னனின் முகத்தை கண்டபின் மடிவேன்.
பாகம் 166.
அண்ணல் அறம் தவறானவன் அடுத்தவர் அகம் நொந்து அழுகை முகம்
சிந்தும் கண்ணீர்க்கொருபோதும் காரணப்பொறுப்பாகான். அகத்தின் இயலழித்த அகந்தையரடி
வருடி இகத்தில் என்னாளும் இழிபொருள் ஈட்டானே. மதத்து மாண்பிழந்து மருளுறு பொருள்
தேடி மலமுண்ணும் விலங்காகி மானம் இழக்கானே. இறையோன் இட்ட வழி இவ்வழி என்றுணர்ந்து
இன்னா செய்வதையே எண்ணாதிருப்பானே. இறை பணிக்கற்பணித்து எதையும் நோக்காது மறை நூல்
உரைக்கின்ற மாண்புறு கண்ணியத்தை மதிக்கும் கடனேற்று காலம் சுமப்பானே. ஈனச்செயலேற்று
இன்னுயிர்களை மாய்த்து தன்னுடல் வளர்ப்பதற்காய் பொன்னுடன் புசிப்பவராய்
ஈசனுக்கெதிராகும் இழியோர்க்கெதிராவான். வேடமேற்காதோர் வேதியரானாலும் வேண்டிடும் தேவைகளை
வேண்டுமுன்னேயறிந்து விளையும் பயன் நோக்காதமையும் பண்பாளன். ஆர்க்கும்
குடியல்லானவன் அகன்ற அகிலத்தின் அனைத்துயிர்க்கும் அன்பின் உறவாவான். இனியோர்
ஏற்கின்ற ஈர்க்கும் வெண் மனத்தானவன் எளியோரிதயத்துள் இடம் பெறும் இன்முகத்தானவன்
சீர்கேட்டுடனொழுகும் சிற்றினமுடன் கூடா மேன்மகன் மேன்மையினை மேலும் மெருகிடவோ ? சிவனார்
செம்பணிக்கே சீர் செயும் குணக்கொளுந்தாய் இவனுக்கிணையாக இவனே இருப்பானே. இடையினம்
மயக்கமுற்று ஏங்கிடும் ஏறொப்ப நடை பயில் நல்லுடலான் நாட்டோர் மலைத்தபடி நாரணூருறைந்தோர்கள்
நல்வாழ்த்து மழை பொழியும் தேடரும் மலர் முகத்தான் திருவினையாகுமவன் மாமுயற்சியினை
மனமார உடனிருந்து மாதுறை பாகன் மறுக்காது நன்று செய்வான். அணங்கனுக்கற்பணித்த
அடியார் பதமலரை அனுதினம் தொழுதிடுவான். மதுவுடன் மாதுறையும் மனத்தால் சூதுறையும்
மன்மாநிரை கூடும் மாசுறு பொல்லிடத்தும் கொல்லும் கனலொப்ப குணத்தான்
கொதித்தெழுவான். வல்லான் சுடர்விடுவான். வாக்கால் போர் தொடுத்து வாக்கால்
வெல்வதற்கு வாய்ப்பே இல்லையென வெண்மதி சூடியவன் விண்மகன் மேன்மைதனை வீரிய ஆண்மைதனை
என் மனமுள்ளமர்ந்து இயம்பிட தந்தேனே. அழியா வரம் பெற்ற அறுமுகன் தம்பியவன்
அரும்பிய பூவனத்தை அணைத்த மண்மகளின் மரகதச் சோலையுறை மார்புப்பகுதி பற்றி மலைமகள்
சொன்னதனை மறுத்திட மனமில்லையே ! இன்னமும் சொல்வதென்றால் எவரும் அசைக்காதோர் எண்ணம்
வண்ணமிக்கோர் யார்க்கும் அசையாதோன். அச்சம் ஊட்டிடவே அகிலமெங்கிலுமே
ஆரும் அரும்பவில்லை. சுற்றம் துறந்து விட்டு சுழுமுனை திறவுபட்டு சுடர்விடும்
நெற்றி பொட்டு நேர்நிறை தீபமுற்று நிமிர்ந்த நிலையுடனே சீருறுசெங்கமலக் கைத்தலச்
சின்னமதை சிவனார் நன்கறிந்து செப்பியதறிவேனே.
உண்மையை உரைகல்லில் உரைப்பதென்றால் உமையொரு பாகனுரை உள்ளத்துள்
உறங்காத காதுகளுள் ஓயாது ஒலிக்க கேட்டேன். நன்மை செய்வோம் என்றுரைத்து நரி வேடம்
கலைத்தவர்கள் மென்மைக்கு பொருளறியா மிலேச்சரிலும் கொடியோராய் மேதினியில் ஆடுமந்த
அற்பர்களின் கூட்டத்திற்காட்பட்டு ஓர்வருடம் இரையாகும் தாய்நாட்டின் தரித்திரத்தை
தாரை வார்த்து தருமந்த மூதேவி மைந்தருக்கு முரண்பட்டு இருப்பவர்கள் பாரறிய பழிவாங்கப்பட்டுடலை
மாய்த்திடுவர். நீராவி போல் நிலையை நிதம் மாற்றும் ஓணான்கள் பாராளும் உடல்களுக்கு
பதம் வருடி உடன்படுவர். மானே எம் மண்மக்கள் மறுபடியும் அடிமைப்பட்டும் மாளாது துயர்
கிட்டும் தேனே அது இம்முறையோ திருநிலத்துக்கருநெஞ்சார் தீதுடனே சூதுகொள் வடகுடக்கு
வணிகருடன் வஞ்சகர் அணியமைத்து அந்தணருடனிணைந்து ஆலயத்தை கொள்ளையிடும் அவலமதை
அறிந்ததனை அர்த்தனாரி சொல்லித் தர அறம்பாடி அணுகுவது அம்பிகையின் அருள் நாக்கால்.
குடமுழுக்கு அத்தனையும் கோலத் தமிழ் தவிர்த்து குறைவிலாது கொத்தி தின்று
கொக்கரிக்கும் குலம் உதித்தோர்
மடமை பல செய்த வண்ணம் மண்மைந்தர்
உடன்படவே ஒருமைப்பாடு உருக்குலைந்து உள்நாடு சீர்குலையும் செழுமைப்பாடு செப்பனிட
செம்மலவன் வெளிப்படாது வறுமைப்பாடு வாய் பிளந்து வரவேற்கும் தாய் நிலத்தில்
வளமைப்பாடு வாசல் வர வான்மகனின் வருகையின்றி வரம் எதுவும் இல்லையென்று அழகுப்பாடு
ஆண் மகனாம் ஆதிசிவன் அடியெடுத்து அன்றாடம் கொடுத்தவாறு அருள்வாக்கை உறுதிசெய்தேன்.
நாய் மகனும் பேய் மகளும் நன்றிகொன்று நாணமிலா நாள் சுமந்து
நற்றமிழுக்கெதிராக நாற்றமுடை சிறுமொழிக்குறவாடி செவ்வேவல் புரிந்திடினும்
பெருங்குணங்களெட்டுடையோன் பேரின்பக்கொடையளித்து ஆலிங்கனமுற்று அரவணைத்த அம்மையொப்ப
சிவன் வளர்த்த அருமொழியாம் தருமொழியை தரமிறக்கி தகையற்ற மொழி கொண்டு தமிழடிமை நிலை
கொணர எவனாலும் எந்நாளும் இயலாது. உயர் தமிழை உருக்குலைத்து ஒழித்துக் கட்ட உடன்படும் ஓநாயை
உய்ய விடலாகாது செவ்வேளே சேதி சொல்வேன். சேரமான் சீர்கொடுத்த சிறப்புறு செம்மொழியை
வீரமான் வளர்த்தெடுக்க விரைவானே வீணர்களே. வானமாய் வனப்பிருக்க வரம்பெதற்கு
வண்டமிழே யாதுமாய் அவனிருக்க
இடரின்றி வளர்த்தெடுத்த நாமுமே
பொற்றமிழின் பூம்புகழ் முகராமல் நாற்றமுறு நீசருடன் நேசமற நடப்பதாலே நானிலத்தில்
மாற்றானின்றியே மண்மீது தமிழ் மறையும். மாப்பிலா மாணாக்கன் மாடுகட்க்கு ஒப்பாகி
மூப்பிலா முன்மொழியும் முறையான செம்மொழியும் காப்பிலாதென கருதுவதால் கன்னித் தமிழ்
கற்பிழந்து காதினிக்க வையாது கடந்து பலர் செல்கையிலே காலத்தால் கதியிழந்து
கற்கண்டு பொலிவிழந்து கதியற்ற மொழியாகும். கூற்றுவன் கூப்பிடும் முன் குற்றங்களை
திருத்தாது குற்றுயிராய் போகலாமோ. பெற்றவள் தான் பிழை செய்து பீடைசூழ் முற்றத்தில்
முறை தவறி மூடனுன்னை பெற்றாளோ என்றென்றோ பெருந்தமிழை கொடை செய்த பிறைசூடி
கேள்விகட்க்கு பதில் என்ன பகர்வாயோ.
ஆழிக்கப்பால் அரும்பொன்
அதிகமுடைத்தாட்சி கொண்டு மாட்சி கண்ட அடக்கமுடை குணக்கு திசை குறுநாடே கொற்றவன்
புகழறிந்து கோடிமுறை கும்பிட்டு குணமொடு அறம் பேண அமர்ந்திருக்கும் அரசனுடன்
அன்புக்கரங்கோர்க்கும் அந்நிலமோ அரிமா பெயரெடுத்து அதனுடனே ஊரமைந்து முழுமை
நாடமையும். அண்ணல் அங்கிருந்து ஆட்பல அனுப்பும்படி அரசாணை பிறப்பிக்க தோள்
வலுவுற்றவர்கள் துணிந்து வந்து சேர்ந்திடுவர். அஞ்சானுக்கடிபணிந்து அன்னை நிலம்
சேர்ந்தவர்கள் கொடுமா குணம் கொண்ட குற்றம் புரி மாந்தர்களின் கொட்டம் அடக்கிடவே
பெருங்குருதி பீச்சிடவே முற்றத்தில் நிற்க வைத்து முற்றிய புட்டமெல்லாம்
முரட்டுபிரம்படிகள் மூர்ச்சியாக்கும் நிலைவரையும் பதித்து சிதைத்ததனால்
பக்கமெல்லாம் உதிரம் கொட்டி
புண்ணாகி போகுமக்கோர காட்சியினை கூற
இங்கு வார்த்தை இல்லை. கிட்டும் ஊதியம் கிடைக்கப்பெற்ற பின்னழகோ உறைந்த தழும்புடனே
உயிர் வாழும் காலம் வரை உடலொடு உறவாடி உற்றார் போல் உறைந்திடுமே.
கடுங்குற்றமுற்றவர்கள் கண்ணீர் பெருகியோட கடுகளவும் குறைவிலாமற் கருணைமிக்க நீதி
வெல்லுமினி காட்டாட்சி நில்லாது கடன்படும் கணக்கு தீர்த்து உடன்படும் ஒழுக்கத்தை
உயர் நெறியாய் உணர்த்திடவே ஒளிமகன் ஓசையின்றி உலகிறங்கி வந்தானே !
கொற்றவனை ஒழிப்பதற்கும் குற்றுயிராய் சாய்ப்பதற்கும் மற்றுமொரு
மனம் இழந்தோன் மறலிநீதி மொழிமறந்தோன் முறை தவறி மூர்க்கமாக முல்லைநில முகுந்தனையே
முடக்கிப்போட்டு அடக்கியாள மொட்டு இதழ் விரியாமல் மூர்ச்சையாக்க திட்டமிட்டு
தாழ்ச்சியுடை தீயவர்கள் ஆட்சி கொண்ட அரவ மாந்தர் நீலகண்டன் மகனமர்ந்த நீலகண்டம்
பெயரமைந்த ஆலகாலர் பலரமர்ந்து அழல் வளர்த்து உடல் சிலிர்த்தும் ஆலகண்டன்
அருகிவொன்றும் அண்ட மாட்டானென்ற உண்மை ஆறுமுகன் நின்றறிவான். அமரர்களும்
நன்கறிவர். சங்கமித்த சதிகாரர் அங்கமைத்த வேள்வியொன்று திங்களையே சூடியோனை
திணறடித்து மங்கைகவி வழி மறித்தும் மங்காத தமிழருந்தி அங்கமந்த திருமுருகன்
ஆடையணிகலன் துறந்து திருநீற்று பட்டையுற்று திருமுடியும் உடன் விட்டு திகைப்புறும்
மொட்டையிட்டு திரி கண்ணன் உதிர்த்து விட்ட தெய்வீக கொட்டையிட்டு
தீஞ்சினத்தோடமர்ந்த அறுபடை வீடொன்றில் ஆளுமைக்கு உதவும் பலர் அரசனடி வருடுபவர்
அற்பநெறியுடையவர்கள் மலையணிந்த மாநிலத்தின் மனம் புழுத்த மக்களுடன் உடனமர்ந்து
அனல் வளர்த்து உள்ளூர அகம் களித்து ஓதியதை பாடியதை உலகத்தின் காதுகளுக்கொருபோதும்
கேளாது. அதை அறிவிழந்தோர் கண்களுக்கு அறிவுறுத்த இயலாது. ஆலகண்டன் மைந்தனுக்காய் அழற்
வளர்ப்பதாக சொல்லி ஞாலம் எல்லாம் நம்ப வைத்து ஞானியரை தள்ளி வைப்பர். ஆதவன்
உதயமென்ற அரசனது தலைமையிலே பாதகர் குழுமத்தில் பதிவு பெற்றோர் பலரிருக்க பூந்தோகை
பெயர் தாங்கி பொல்லாதார் பதரோங்கி தீமன்றம் வளர்த்துவிட்ட தெருநாய்களாயிருப்பர்.
மந்திரத்தை உள்வாங்கி மானிடத்தை எய்ப்பதற்காய் மன்னனையே சாய்ப்பதற்காய் தீயவர்கள்
திட்டமிடும் தீரமென யானறிந்தே அகிலத்தாரறிந்திடவே அருள்வாக்கின் வடிவில் தந்தேன்.
யார் யாரோ இறங்கினாலும் இடும்பை தந்து முழங்கினாலும் தேறாது தோல்வி கண்டு
தீக்குணவாய் போகிடவே தேவாதி தேவரெல்லாம் திருமனதால் சபிக்க கண்டேன். மாறாக மன்னவனோ
மணம்வீசி மாநிலத்தில் மடியாது மலரக்கண்டேன். கயவர்க்கு காதுறையும் கடும் வாக்கு
என்னவெனில் கற்கியவன் கதிர்வீசாதொடுங்கிப் போக கந்தவேளும் உதவ மாட்டான். காயத்தை
திரியாக்கி கனல் மூட்டி கதறினாலும் பாவத்தை கழுவ அந்த பரம்பொருளும் அருள மாட்டான்.
நலிவுற்றோர் நம்பும் மிகு நானிலத்தின் நெம்புகோலாய் நடுவண்
தண்டுகோலாம் நாதன் மகன் கற்கியென நாப்பொலிவு நடையழகில் நாளும் ஒரு தமிழிசையில்
நீளுமவன் நெறிகளையே நேர்த்தியுடன் பாட்டமைத்தேன். மேதினியின் மீட்பனாக மெல்லியல்பு
தாய்மை மகன் மேதைகளின் காப்பனாக மெருகுடையோன் யார் உளனோ. அவிக்கின்ற கயவர்களை
அருமாந்தரென்று எண்ணி அரிக்கின்ற கரையான்களை அணிப்பிள்ளை என்று சொல்லி தெறிக்கின்ற
செள்ளுகளை தேன் வண்டு என்று எண்ணி நினைக்கின்ற மாந்தர்களை நினைத்தாலே
நகைக்கத்தோன்றும். நீசருறை மானிடமே தின்று வாழும் மதுவாலே பொன்விரையம் ஆகுமிந்த
பொல்லாத அவனியிலே அண்ணலவன் ஆடகமாய் அருங்குணத்தோடனைவர் முன்னும் பெருங்குணத்து
பேரிறைவி பெயரை என்றும் பிழை இலாது வருமொழியில் நிலை மொழியாய் வாழ்த்து மழை
பொழியகண்டு விதை விதைத்து பொன்னறுத்து விடியும் வரை தீ வளர்த்து வெல்லும் எந்தன்
வீரர் வீரன் வீணானோர் நடுவினிலே வெற்றிமுகம் கொண்டதொரு வேந்தன் முல்லை வாய்
இனிக்கும் மொழிகள் பெறும் கவினழகை முன்மொழிவான் முக்கண்ணன்.
பாகம் 167
ஆயிரங்காலட்டையோடும் அது நின்று பயணியேற்றும் கூடமைய கொடியசையும்
நிலையமொன்று நிமிர்ந்து நிற்கவேண்டுமென்று அருகமர்ந்த மாந்தர்களும் அகமார வேண்டி
நின்றும் அண்ணலது அருளகம் அருகிருந்த காரணத்தால் அவன் மூழ்கி
மறைந்திடுவானங்கிருந்து தொலைந்திடுவானென்றறியா ஆர்வலர்கள் பாடுபட்டும்
அற்பர்களனைவருமே அவ்விடத்தை புறக்கணித்து ஆசான் விளையிருக்கும் ஆணவத்தார்
குடியிருக்கும் ஆயிரத்திலொன்று தேறும் அறம் புதைத்தோர் குறுநிலத்தில் ஆனை நிற்க
அரணமைத்து அயராது பாடுபட்டும் பெரும்பான்மை பயனுறாது பீடைமக்கள் வாகை
சூடி அஞ்சனையே வென்று நின்ற விடயமெலாம் விரல் விட்டு வெளியிடுவேன். வேண்டியே வினை
சுமக்கும் வீணர் குழுவிலுற்ற வெஞ்சினத்து வெய்யர்களின் வீரமிலா தலைவனவன்
விளைந்தயிடம் அளந்த கரை பொதிந்திருக்கும். அற்பனவன் பெயருள்ளில் ஆடகம்
பதிந்திருக்கும். அதன் பின்னே அவனன்பு ஆயிழையை சுமந்து நிற்கும் கண்ணனுடை
பெயரெடுத்து காரிகையர் கற்பு தின்று கைத்தலமும் பற்றாமல் கழட்டி விடும் கருணையிலா
கயவனென்றும் காலகாலன் கைபொதிந்து காத்து நிற்கும் கற்கிதேவன் ஞாலமேற்கும்
நாழிகைக்குள் நாளெல்லாம் ஊளையிட்டு நன்றாக கொட்டமிட்ட நரியினங்களத்தனையும் குழி பறித்த
காரணத்தால் கூட்டத்தோடு கொள்ளியேற்று குலம் தகர்த்து இனமழியும் என்றெந்தன் ஈசனவன் என்னாவால்
வாக்குரைத்து ஏற்றுக்கொள்ளென்று சொன்னான்.
அகிலமாண்டிடும்
ஆண்டையர் நாடொன்றின் அச்சொடிந்ததால் ஆடகம் வீழ்ந்த பின் அற்றழிந்திட அல்லலுறும்
நிலை பெருகுமே அன்றி அனைத்து நாடுமே அணைக்க மார்பின்றி ஆணவம் விட்டுதான் அழுது
புரள்வதற்காறுதல் சொல்லிட அம்மையப்பனை வேண்டினேன். ஏறுமுகமுடனிறங்கும் புகழுடன்
வாடும் முகமுடன் வருந்தும் மனமுடன் பஞ்சமென்னும் பருந்துக்குணவாய்
விருந்துக்கமையும் வேதனை கண்டேன். நொறுங்கும் நடுவடம் நொந்தும் நோயொடு நொண்டும்
நாள் வரும் என்றும் இயலாமல் துன்பம் வலுப்பெற ஆறா வறுமைக்குள் அடி எடுத்தபின்
ஆளும் மன்னவர் குஞ்சிக்குடியொடு குலை நடுங்கியே அஞ்சியோடியே அன்னிய கோட்டைக்குள்
அடைக்கலமாவரே. அவர் ஆண்ட அரசுமே அரை வயிற்றுக்கும் அற்பவுணவின்றி அழுது புரழ்வதன்
காரணமறிந்திட கதியென்றழைத்தது கனகசபையினை கவர்ந்த கனல் கண்ணன் நெஞ்சில் நிறைந்தவன்
நிலையாய் நின்றவன். கற்கி கன்றென வென்று வருமுன்னே வேண்டும் வித்தையை விளம்பி
உதவுவான். கொடிக்குறவாட கொடுத்த கொம்பென கொடையின் மழையினை கொன்றைவேந்தனே
கூட்டுவான். எம்மானுக்குதவாத எந்த வளவுமே இம்மைக்குதவாது எடுத்த சாபமாய் இந்நாட்டுக்கும்
அமையாது. இதுகாறும் காணாத ஏழ்மை வடிவுடன் இழிமை வருமென இயன்ற அனைத்தையும் எளிமை
வாக்கிலே முயன்று முன்னமே மொழிந்து யானிங்குணர்த்தினேன். நல்லானை யான் நம்பி
நாடும் எம்மானை நாளை இந்நிலம் காக்க பணிந்தேன். நாரணன் நற்பிறவி என்றறிந்தும்
நாயகன் சிறப்பறியாது வேந்தனுடை ஏற்ற வேடர்கள் நன்நெறி கொன்றதற்கு நாளெண்ணும் நிலை
துவங்கி பாரெங்கும் தலை உருளும் பாவத்தின் விலை பெருகும்.
பிறப்பொக்காதெவ்வுயிர்க்குமென்றே பிறவிக்கோர் பேதம் வைப்பதை
சிறப்பென்று செப்பியே செயலுறு சிறு நோக்கால் சிரமுறை சிந்தை சோற்றை சிறையெடுத்துச்
சிதைத்த புதைமணலொத்த பொல்லார் வேதமது புதைத்த பேருலகின் பீடையென பெருமான்
முழங்கியே பிறழ்பண்புற்றிருப்பான். அவனிவாழ் புள்ளினத்தில் ஆருயிர் உள்ளினமோ
ஆழிகள் பல கடந்து ஆவலுடன் இடம் பெயர்ந்து இல்லத்தின் இடனறிந்து எளிதாய்
திரும்புவது விந்தையிலும் விந்தையென்று விஞ்ஞானம் வியக்குகையில் இழியோர் என்றெண்ணி
எவரையும் ஏளனம் செய்திடவோ ! ஏட்டறிவில் எவரும் ஈட்டரும் எட்டாமறிவு எட்டுவது
இயன்றிடுமோ ? எழுத்தறிவே இல்லாமல் இணையிலா ஞானத்தை இயல்பிலே பெற்றவரின் பெரும்
பங்கால் தொட்டதெல்லாம் துலங்கிடுமே. கற்றதனால் வருவதல்ல கரையான் கலை வண்ணம்
கடும்பனியும் காற்றும் தீண்டா கவின்மிகு பதியம் போட்டு கொடும் பகையாம் வெப்பம்
தீண்டா கோட்டையொத்த புற்றமைத்து விளையும் பயிர் பெருக்குவது வேதமுரை ஆகமம்
கற்றதாலா ? அறிவிலி மாந்தரும் அகந்தை சூழ் வேந்தரும் பொறிவிழி பயனறியாது
பூவிழி பூத்திருந்தும் புண்விழியாகிடுமே. பொன்வழி தடமறிந்தே அதன் போக்கிடம்
நலமடைந்தே பெம்மானை பெறும் பேறு பிறவிப்பயன் பெற்றதாலே. எம்மான் வருகைக்கு
ஈரேழுலகே எழுந்துநின்று நன்றி சொல்லி வீழ்ந்தவன் பாதம் பணிந்து வேண்டும் நாள்
வருவதை மறந்து இன்றே திருந்தாது இனியும் பாருலகில் சுழன்று பாவப்பிணிக்குள் உழன்று
நாதரின் நகருறையாது நரகுறைந்து நமனுக்கே இரையாகலாமோ ?
அந்தணப் பாதகராய் அகமிருண்ட அற்பர்களும் சந்தணகுறியுமிட்டு
சாத்திரமுரைப்பவர்கள் சேர்த்திடும் பாவங்களை செப்பிட ஒண்ணாது. நீதியை கொன்றபடி
நிந்தனை கணைகளையே நேரிட்டு தொடுக்காமல் நிழல்மறைவில் நின்றவாறு நேரிழையர்
வாழ்த்தியோதும் எம்மான் இசையொடுங்க ஈனர்களுக்குடன்பட்டு என்றுமே செயல்படுவர்.
அண்ணலின் அருகாமையிற் ஆயிரம் பயிர் வளர்த்தும் அவ்வுலகடைவதற்கு அணுவளவும்
தகுதியிலா பொல்வினை பொதிந்தவாறு புன்முறுவல் பூத்தபடி நெற்றியில் நீறுயேற்றி
நெஞ்சார ஊறு சூட்டி நிறைமன வீறுகூட்டி வெந்தணல் மூட்டினாலும் வேத விற்பனரோ வேந்தன்
தினை வளர்க்க விரும்பியே திட்டமிட்டும் முளை கிள்ளி அதை முடக்கும் வீணருடன்
கைகோர்த்து வினை விதைத்து விரும்பா வினையறுத்து விமலனுக்கெதிராகி வீடுறைய
வழியேயின்றி அமரரும் அழுகைகொள அண்டாது அகன்றிடுவர் அழுக்காறு அந்தணர்கள்.
வாழவழியின்றி வக்கற்றோரானதனால் வடபுலத்திற் வரப்பறுத்து வந்தேறிய வஞ்சகர்கள்
வான்மகன் வாழ்க்கைக்கு வரம்பின்றி கொடுமை செய்தும் செந்தமிழன் சிரமறுக்கும்
செயற்தீயோர் கும்பலுக்கு சாரை பாம்புகளால் சரம்மாறி சரடு கட்டி வேரொத்த விண் மகனை
வீழ்த்திட சூழ்ச்சி செய்தும் காத்திட கதியுற்றோன் கண்டம் கருத்தயெங்கள் கதிர்காமன்
தாதையுண்டு. அண்டம் முழுமையுமே ஆட்சி செய்யும் அரசனென்று அம்மையப்பன் புகழ் பாடும்
அகத்திய வாக்குவொன்று வென்றே நிலைத்ததுண்டு. விட்டுவிற்கல்லால் வேறெவற்கவன்
விரும்பும் அரணாயுண்டு என்றே அறிவுறுத்தி ஈசனிளம் கன்றே நீதானென்று கருதியே
வாக்குரைத்தேன் .
மாமன்னன் மலர்வதன் முன் மண்மாதின் பரதத்தில் மன்றம் ஒன்று பொலிவு பெற்று ஒன்பான் எண்ணுடன் ஒட்டிய உருண்டை ரெண்டு முட்டையிட்டு உறைந்த அவ்விருக்கைகளோ ஓரெட்டு குறைவு பெற்று உலகாண்டார் கலப்பினத்தின் உரிமையது பறிக்கப்பட்டு ஈறாராய் இருந்தபடி ஏறாத எண்ணுறவே இருமாப்பு இடம் பிடித்த வட புலத்தின் வருகைகளோ வந்து கொட்டம் அடித்திடவே வாக்கெடுப்பில் வன்கொடுமை நடந்து விடும். வாயார அழுகின்றேன் வாழும் எம் தமிழுக்கு வாழ்விழக்கும் வழி பிறந்து தாழும் நிலை உருவாகும். வஞ்சகரும் நம்முடனே வாய்க்கினிய வாக்குதிர்த்து உறவாடி கெடுப்பதற்கு உற்றயிடம் தமிழ் நிலமாய் உலகறிய உரைக்கின்றேன். எம்மான் எழில் நிலத்தின் இயல்பினையும் ஈடிலாதெம் மொழியினையும் இருட்டடிப்பு செய்வதற்கும் இன்நிலத்தார் உரிமைகளை எளிதாகப் பறிப்பதற்கும் ஏட்டிக்கு போட்டியின்றி எம் மண்ணை சூறையாடும் காட்சிக்கு சொற்பமும் பஞ்சமில்லை. சுட்டெரிக்கும் சூரியனும் சொட்டிடும் கண்ணீர்க்கு சூழுரை ஏற்றவனாய் வானுயர கையுயர்த்தி வரம் பெறும் கற்கி வேந்தன் வருகின்ற அத்தருணம் அனலெனவே எரிவானே. அப்பொழுதே தெரிவானே
திருக்கண்ணமுதில்
எம் தேவனுக்கு திகட்டா தீஞ்சுவை தேன்பலாச்சுளைகள் நன்றாயிணைந்த நல்லமுதற்கடுத்து
சிறுபயிரிட்டும் செஞ்சுவை சிறப்புறுமது உடலை சுமந்து உடையை இழந்த கடலைபருப்புடன்
கன்னல் கரைத்த கற்பகக் கண்ணமுதும் அண்ணல் விரும்பும் ஆசை இன்னமுதிற்கடுத்தே
பிறிதெல்லாமென பெருமான் நாவின் பிழையிலா சுவையறிந்தேன். பெம்மானுக்கு பிடியா
பாலன்னமுதும் பாழடை பாயாசமும் பரந்தாமன் நாவிற்கினிய நன்னமுது அன்று
என்றறிந்துகொள் ஆருயிரே .
நாவிற்காய் வாழ்வோரனைவரும் தன் நற்காயம் நலிவுற நலமிழப்பர். நாதன்
குடிகொள்ளும் நன்நெஞ்சுடை நல்லோரென்றும் மேனி வளர்க்க மீனொடு இரையெடுக்கார். வேதம்
கற்பதினும் விரும்பும் உணவிற்குள் விடமொத்த முட்டை தவிர்ப்போர்க்கு மூலர்
விடுகின்ற மொத்த வாழ்த்துரையை முழுதும் பயின்றாயோ ! நாளும் கனிகொண்டும் நன்றாய்
காயுண்டும் காயம் காப்போர்கள் காலன் கயிற்றுக்குள் கழுத்தை செலுத்தாது நாளும்
நஞ்சொத்த ஊனும் உண்ணாது உலகிற் உதிர்ந்தாலும் உதிரா கனியாகி உமையாள் உலகிற்குள்
அமைவானென்பதெல்லாம் தவறாய் போயிடுமோ ? வாயில் ஐந்தவித்து வாழும் மாந்தர்களை
வணங்கி வலம் வந்தால் பாவம் தொலைந்தோடும் பரம்பொருள் உறவாடும் யாவும் நீயாவாய்
என்பதையறி மனமே !
புவியன்னை புடவை மாற்றி புது வண்ணம் போர்த்துமுன்னம் பூமாதின்
பைம்பயிர்கள் போதாத காலமுற்று புவியெல்லாம் பாடை கட்டும். பரிதாபமுற்றிருக்கும்
பாலை நிலம் பார்ப்பதற்கே கண் குளிர ஆடை கட்டும் பொழுதெங்கோ பொன்மேனி புதையுமிடம்
பொறிக்கருவி பொறுப்பேற்கும் பொல்லாத இடம் விட்டு புனையாத நிலம் கூட பொய்க்காது
புதைந்திடுமே. அறிவியலார் அடக்கியாளும் ஆணவத்தார் நிலங்களுக்கும் அணுவளவும்
உறுதியில்லை. பொறியியலார் புதையுமென்று புகன்ற இடம் கதையாகி திசை மீறும் விசையோடு
நிசையோடு நிசையாக நிலம் மாறும். நெறியாளன் வருமுன்னம் நேரிடும் அடையாளம் நிறைவாக
நிறைவேறும். பாருற்ற பன்னகர்கள் பசிக்குணவாய் புசிக்குமாண்டு ஈரிரண்டும் சேராமல்
இடைமறித்து கோள் தடுத்தும் எல்லை மீறி இருளுள்ளே இன்பமுற்றும் மறையாத கால் மொத்தம்
மறை எண்ணில் மறைந்திடுமே. அது கணவாய் கடந்து வந்தோர் கதையளந்த மறை என்று கண்டு
கொள்வாய் மானிடனே. எடுபடாத வாக்குரைத்து எவனடித்து கூறிடினும் சிவன் கணித்துக்
கூறியதை செப்புகின்றேன் கேளாயோ. எவர் பணிந்து வேண்டிடினும் இவ்வுலகம் உறுதியில்லை.
அவனொருவன் அரவணிந்தான் அரவணைத்தான் அவதரித்தால் நிலம் முழுதும் நலம் பெறவே நியதி
வேறு இடம்பெறுமோ. இறுதியுறும் இடங்களெலாம் எதிர் நோக்காதுயிர்விடவே இயல் தாயை
கணிக்க வந்த எதுவும் கூட இடனறிந்து துயர் தவிர்க்க இயலாமல் தோற்பதில்
எம்மாற்றமில்லை. பைந்தமிழை அடக்க வந்த பரத்தை மொழி பரந்து மேய்ந்த பரதத்தின்
நிலமழிந்து நின்ற முகம் நிறைவடைந்து நிமிர்ந்த நிலம் பொலிவு பெற்று கொண்ட இடம்
தமிழ் நிறையும். கொற்றவனுக்கடிகோலும் கூற்றுவனுக்காதரவாய் தெக்கணத்தை பிரிக்கும்
அந்த திரைகடல் நிலம் கிழிக்க ஈராழி இடை புகுந்து இந்நிலத்திற்கெல்லையிடும்.
போராளிக்கமையாத பொன்னிலத்தை பேராழி பெருங்கொடையாய் பிரித்தளிக்க ஈரேழுலகுடையோன்
இட்டதொரு கட்டளையே.
அவனியர் அவன் மீதிட்ட பற்று அகிலம் அழியினும் அசையாது. சிவனடி மீதே
ஆணையிட்டு செப்புவதை நீ கேளாயோ. எவனது நட்பும் இங்குன்னை ஈசனுலகிற்கிட்டுச்செல்லா
செல்லும் இவனுறு நட்பொன்றே ஏற்றமுறுமதில் மாற்றமுறாதென மன்னுயிர்க்கு சாற்ற
வந்தேன். புண்ணாக்கால் பொழியும் வாக்குகள் இப்புவனமெங்கிலும் பொய்த்திடினும் எப்புவனத்தை
பொற்கிழியாக்கிடினும் பொய்க்காதெந்தன் பூமானுற்ற பொன் நாக்கென புகலவந்தேன்.
அறனாரிடம் தனை அற்பணித்து அன்பை பெருக்கும் ஆருயிராய் அறிவுக்கோவில் செறிவூட்ட
இன்பப் பெருக்கின் ஈடற்ற எல்லா வளத்தின் ஊற்றாக இறையோன் ஆற்றலின் இருப்பிடமாய்
இருந்தும் எளியோன் தோற்றமுற்று எம்மான் என்றும் எப்பொழுதும் உண்மை கற்கி தானென்று
ஒருக்காலும் உரிமை கோரான். உலகம் முழுமையும் உவகை கூட்டி ஒரு கொடி கீழ் தன் பேரரசை
ஒங்கிணைத்தே பெருமை சேர்க்கும் அருங்காவலனிவனாக அன்பும் அறனும் வென்றபடி அகிலம்
முழுமையும் கொண்டபடி பண்பும் பணிவுமுற்றவனாய் பாரை ஆளும் மன்றங்களில் பஃறொளி
பாய்ச்சி பதிவானே. பணியை ஏற்கும் பரந்தாமன் பாதம் பணிய கோடியுறும் பிணியை போக்கும்
மருந்தாக பிறப்பறுக்கும் விருந்தாக சிறப்பமைக்கும் சேதியினை செவிக்கு மதுரமாய்
தருகின்றேன். பிறப்பெடுக்கும் பெருங்கயவர் பிறவிகள் தோறும் பின்னடையா உடுப்பு
எடுத்தும் வருந்தாது உழன்ற வண்ணம் உய்யாது உறைந்து நிற்பர் உலகினிலே. ஒப்பரிய
ஓம்காரன் உத்தமனகத்தை அளந்தபின்னம் ஒட்டுமொத்த நிலம் வியக்க ஒப்படைப்பான் ஊனுயிரை.
அம்மையப்பன் அகம் மகிழ அனைத்துயிர்களும் மனங்குளிர எம்மைப்போன்று இடைவிடாது
ஈசனுக்கே தொண்டு செய்தும் ஏழ்மை தின்று ஏப்பம் விடும் இன்மைச் செல்வம்
வளங்கொழிக்கும் இழிநிலையுற்ற அடியார்க்கே கற்கியின் கைத்தலம் பற்றுமந்த காஞ்சன
பேற்றினை என் சொல்வேன். கலைகளின் களஞ்சியம் அவனென்று கண்டவன் கண்களுள் யானுறைந்து
கண்டதை கதை அன்றென்றுரைத்து காதெனும் மலருக்குள் ஊதுகின்றேன்.
ஆறா சினம் பழுக்க ஆடும் தலை முழுக்க தேறார் அறம் கெடுத்து தெய்வ
பயம் விடுத்து மாறா மனம் புழுத்து மண்ணின் புகழ்கெடுத்து ஆளும் இனமமைத்து அகிலம்
முழுமையுமே அன்பின் வழி முழுக்க தீரா பகை வளர்க்கும் தீயோர் முகம் கடுக்க திணறா
முடிவெடுக்கும் தென்னர் தீக்கொளுந்து தோள்கள் தினவெடுத்து தொண்டால் கடனடைக்கும் மண்ணின்
மணக்கொழுந்து விண்ணும் வேண்டி நிற்கும் விட்டு எனும் பருந்து வேத விதி வகுத்து
வேந்தன் வடிவெடுத்து தேறா தலையகற்றி திருமால் உடையுடுத்தி தீரர் படை இயக்கி வீர நடை
முடுக்கி வெற்றி முரசதிர வீணர் உடல் குவித்து வென்று வலம் வருவான். சூழ்ந்த
துயரமெல்லாம் சொடுக்கும் நேரத்தில் மாண்ட நிலை பெறவே மகிழ்ச்சி மழைபொழிய ஆழ்ந்த
மனக்குமுறல் அகல பூமி எங்கும் அறமே ஓங்கிடுமே. மாந்தர் மன மகிழ மறவர் இனம் அதிலும்
மனிதம் உடையோர்கள் சேர்ந்து உடனிணைந்து சேரன் வழித்தோன்றல் வேய்ந்த வியூகத்தில்
வெற்றி கரம் பிணைத்து பாய்ந்து வருவதனை பார்க்க பேறு பெற்றோர் பாரிலிடம் பெறுவர்.
ஆழ்ந்த ஆர்வலர்கள் ஆய்ந்த என் வாக்கு அர்த்தம் இல்லாது அடங்கிப் போயிடுமோ ? ஓய்ந்த உள்ளங்களே ஒரு சொல் கேளீரோ !
உமையின் உடலுறைந்தோன் ஊதும் உயிராக ஒளியோன் உதிக்கும் கணம் ஒன்றும் தூரமில்லை.
பழியேன் பரமனை யான். பாத்திரம் அறிந்தபடி பசிக்கு உணவிடுவான். எண்ணித் துணிந்த
பின்னர் எண்ண நாட்கள் இல்லை. மின்னல் எழுவது போல் மிளிரும் காலமது அண்மை என்றறிக ! உண்மை விளம்ப வந்து
உலகை குழப்புவதாய் உள்ளம் குமுறுபவர் உரைக்கும் இழுக்கெல்லாம் என்னை தீண்டாது
எல்லாம் கடந்து போகும் தன்மை யான் பெற்றேன் தயைகூர் எம்மானே !
இன்மைக்கிரையாகி இயங்கும் வரை தாழ்ந்தோராய் பெருமையொடு
சொல்லிடத்தான் பிறிதொன்றும் இல்லையென அருமைக் கல்வியொன்றே அரவணைக்கும் என்றறிந்தே
ஆளுமைக்கு இடமளிக்கும் ஆயகலை அத்தனையும் அறிந்துயரவேண்டுமென அனைத்தினமும்
புறப்பட்டால் அந்தணர் குடிகளொடு ஆகமம் ஆட்டங்காணும் ஆலயத்தில் ஈயாடும்
அச்சுறுத்தல் இதுவாக பூமனங்கள் புற்றுடைத்து புவி காண வேண்டுமென தாய்மனங்
கொண்டோர்கள் தளராது குரைத்தாலும் தங்கமகன் எழும்வரையும் தகராறு தொடர்ந்த வண்ணம்
தரணியே தத்தளிக்கும். இடையிடையே மன்னுயிர்க்கு இடர்பாடு எழுந்திடினும்
சிறைப்பறவையாயுறைந்து செல்லாக் காசாகி சீரழிந்த ஆயிழை போற் நில்லாத பெயரெடுத்து
நீதிக்குள் தனை புதைத்து பொல்லாதார்க்கிரையாகி புவிவிட்டு போனாலும் பொறையுடையோர் போராடி
போட்டமைத்த படித்துறைகளாயிருந்து பதவிகளுக்கடிகோலும். ஊக்கமுற விதையூன்றி
உலகத்தார்க்குதவியதால் ஆக்கமுற்ற அடிமாடும் அதன் பயனறியாமல் அறம் கொன்றோர் கரம்
கோர்த்து நாணமிலா வாக்கு விற்று வயிறெடுக்கும். பகுத்தறியும்
பக்குவப்பட்டிருந்தும் பாதகர்க்கு துணைபோகும். வகுத்தான் வகுத்ததெல்லாம்
வாஞ்சையுடை மாந்தர்களுள் தொகுத்த பேதமென்று துஞ்சாது பொய்யுரைப்பர். இறையோன்
ஏற்பதெல்லாம் மறையெண் மதிப்புடைய மன்னுயிரின் வண்ணமென கலையை காத்தவர்கள் கதை
பலவும் சமைத்ததனை விதையாய் நட்டு வைத்து வேதமாய் விளையவிட்டு நாதன் பெயரை
வைத்து நன்றாக நம்ப வைத்து நடுசங்கை அறுத்த கதை யாரும் சொல்லியல்ல எம்மானும்
நன்கறிவான். இயன்றவரை எரிந்த அகல் விளக்கெனவே இடர்பாடுகளுள் சிக்கி எழுந்த பல
வெண்தாடி வேந்தர்களே மண்மூடி போன பின்னம் கண் மூடி பேசுவது கயவர்க்கு புதிதல்ல.
கடவுள்களை வைத்து இங்கு காசு ஈட்டும் கலைகளெலாம் கடல் கொண்டு அழிந்திடாது கற்கி
வந்து அழித்திடவே காத்திருக்கும் கொடியவரின் கடுமையான ஊழ் வினைக்கு உரிய விலை
கொடுப்பதற்கு உற்றவனே அக்கொற்றவனே.
பாகம் 169.
தெள்ளமுதினும் தெவிட்டா தேடரும் நாதனெண் குணந்தனில் நறுமணம்
குறைவுறா குமரனையொத்ததோர் குலமகன் இவனென கோடிட்டு காட்டிய கொடியிடை மலைமகள்
மெய்யுறை மேன்மகன் கைத்தலம் போர்த்தியே கண்ணென காத்தவன் கதிரென காய்வதும் புதிரென
பூப்பதும் அதிர்வலை வீசியே அண்டமே முழங்குமே. குவலயம் தன்னிலே குறைவிலார் யாரெனில்
மேதகு மாதவம் செய்த பின் மீண்டிடும் வேகா தலையுடன் வென்றிடும் வரமுடை போகா புனலொடு
பொறிகளை அவித்தவர் சாகாக்காலுற்று சறுக்காது ஒளிர்பவர் வெண்மனமுறைந்தவர் விண்மணம்
வீசிடும் வேந்தனை ஆய்ந்த நல்லார்வலர் அறிந்த பின் அரியென தெளிவரே ! அவன் எண்ணரும்
இயல்பினை இங்கு யான் பாடிட இவ்வொரு பிறவி தான் போதுமோ ? எத்தனை பிறவி தான்
வேண்டுமோ ! ஆலகாலம் அருந்தியே மகிழ்ந்தவன் அரவமாலை அணிந்ததால் சிறந்தவன் ஆயுள்
காப்பிட்டு அரும்பிய கற்கியும் „,விரும்பியே வினைகளை வேரொடு அறுத்தபின் வெற்றி களிப்புடன் விடை பெற
மட்டுமே இயலுமே.
பொற்காலம் பிறக்கும் பூப்போலே மணக்கும் கற்கால நியதியாம் கண் கெட்ட
நீதி கற்கியின் வரவால் காணாமல் போக காக்கின்ற நீதி கண்டங்கள் பரவி கருவையும்
காக்கும். தண்டமாய் இருக்கும் தவறான சட்டமே தருமனின் வரவால் தலையோடு தகரும்.
தாளாளன் தருமந்த தலை நிமிர் விதிகள் தரணியில் தவறாது என்றென்றும் ஒளிரும்.
வேளான் விரும்பும் வியத்தகு விடியலும் மேலான படிநிலை மெச்சிட அமையும். தாயாகி
சிவனும் தந்தையாய் இவனும் ஓயாது உலகில் உடலுற்ற உயிர் போல் உறவாடி இருப்பர். நாயாக
சிலரும் நன்றியோடமர நரியாக பலரும் நடுச் சங்கை கடிக்கும் பேயோரின் பிள்ளைகள் பிழையாக
தோன்றிய மழைபோல பொழிந்து மண்ணீதி அழிக்கும். என்னீதி சாய்ந்தாலும் எம்மானின்
சமநீதி இவ்வுலகை ஆளும் விண்நீதி வென்றிடும் வேந்தன் பேரரசையே வென்றிடத்தானினி
வீணர்க்கு இயலுமோ ?
தமிழமுதை முடக்கியாள தறுதலையாய் மொழியெழுமே. அது தெக்கணத்து
தீரர்களை தீரா துயரில் ஆழ்த்தி எக்கணமும் எரிமலையாய் எம்மானே வெடிக்க தோன்றும்
நீறு பூத்த நெருப்பென்று நெற்றிக்கனலுடையோன் நினைக்கின்ற நாழிகையை பிறர் நினையா
நாழிகையாய் நிலத்தாருரைப்பதெல்லாம் இனியும் செல்லாது இறையோன் இல்லாது எதுவும்
வெல்லாது. அப்பொற்கணம் வரும் என்றும் பொறையிழந்த புயலொத்த பெம்மான் புதர் விட்டு
ஏழக்கண்டு பூதலமே பூரிக்கும். வஞ்சிக்கும் மொழியொன்று வாடை வீசும் வரப்புகளில் வாழ்ந்திருந்த
சிறப்பு மொழிகளத்தனையும் தின்ற பின்னம் சில மொழிகள் செரித்துவிடும். தீராச்
சினமுற்று திமிரெடுத்தோர் தரணிக்கோர் தலைமொழியை தரமிறக்க முனைவதுடன் தேன்
மொழிக்கு தீர்வு கட்ட திட்டமிட்டு தீதுடையோர்களை இணைத்து வேரிறக்க வரும்போது வேங்கையென
வீறுகண்டோர் விழித்தெழுந்து வினை முடக்க கொதித்தெழுந்து தன்மானம்
மிக்கவர்கள் எம்மானுடனிணைவர். இன்னும் சிலர் இழிவான மொழியென்று எம் மொழியை வசைபாடி
வஞ்சகர்கள் தாழ் வருடி வருகைக்கு தலை தாழ்க்கும் தற்குரியர் பலரன்று தாயொத்த தமிழ்
தன்னை தரம் தாழ்த்த வருவாரே. அமுதுக்கு இணையாக அடுப்பங்கரி சுவை தருமோ ? கழுதைக்கு ஆதரவாய்
களமிறங்கும் கபோதியர் குதிரையினை புறந்தள்ளி கொட்டிலில் அவ்வேசரியை குடியமர்த்த
நினைப்பாரே ? கோட்டான்கள் ஒன்று கூடி குயில் பாட்டின் குரல் வளத்தை குறை கூற
வருவாரே கூகைகளை ஆதரிக்க குறை இனத்து குலம் கெட்டோர் மலம் உண்ணும் மாநிரையாய் மண்
மீதில் எழுவாரே ! மனம் சுழிக்கும் இயல் வரத்தும் மாளாத பன்றிகட்க்கு பசுந்தொழுவம்
இடம் கொடுத்து பக்கவிளைவுற்றிடுமே. கண்ணிருந்தும் மன்னுயிர்கள் கல்லறைக்கும்
கருவறைக்கும் பிரித்தறிய துணியாமல் பேதங்களை அறியாமல் சில்லறைகள் சிலிர்த்து வந்து
செம்மொழியை தவிர்த்திடுமே. இயல் கெடாமல் எம்மொழியை இறையோன் போல் காப்பதற்கும்
எம்மான் ஒருவனன்றி ஈரேழுலகினிலும் எவருமில்லை பரம்பொருளே !
தெள்ளமுதினும் தெவிட்டா தேடரும் நாதனெண் குணந்தனில் நறுமணம்
குறைவுறா குமரனையொத்ததோர் குலமகன் இவனென கோடிட்டு காட்டிய கொடியிடை மலைமகள்
மெய்யுறை மேன்மகன் கைத்தலம் போர்த்தியே கண்ணென காத்தவன் கதிரென காய்வதும் புதிரென
பூப்பதும் அதிர்வலை வீசியே அண்டமே முழங்குமே. குவலயம் தன்னிலே குறைவிலார் யாரெனில்
மேதகு மாதவம் செய்த பின் மீண்டிடும் வேகா தலையுடன் வென்றிடும் வரமுடை போகா புனலொடு
பொறிகளை அவித்தவர் சாகாக்காலுற்று சறுக்காது ஒளிர்பவர் வெண்மனமுறைந்தவர் விண்மணம்
வீசிடும் வேந்தனை ஆய்ந்த நல்லார்வலர் அறிந்த பின் அரியென தெளிவரே ! அவன் எண்ணரும்
இயல்பினை இங்கு யான் பாடிட இவ்வொரு பிறவி தான் போதுமோ ? எத்தனை பிறவி தான்
வேண்டுமோ ! ஆலகாலம் அருந்தியே மகிழ்ந்தவன் அரவமாலை அணிந்ததால் சிறந்தவன் ஆயுள்
காப்பிட்டு அரும்பிய கற்கியும் விரும்பியே வினைகளை வேரொடு அறுத்தபின் வெற்றி
களிப்புடன் விடை பெற மட்டுமே இயலுமே.
மெல்லக்கொல்லும் நஞ்சாலே மெய்யோன் மெய்க்கொன்றும் ஆகாது. சொல்லி
உணர்த்திட வேண்டுவானேன். சுட்டும் விரலால் காட்டுவேனே. யாண்டும் யானே கூறுயதை
மீண்டும் இங்கே தருகின்றேன். தோண்டும் குழிகளத்தனையும் தூயோன் வீழ்ந்திட
அமைந்தாலும் மாயோன் மறுவுடல் மாயாது. மரணம் என்பதே வாராது. தேய்பிறை வளர்வது
இயல்பென்று தெரியும் தானே அதுபோல வாய்மை வெல்லுமென நம்பி வாழும் தேவனை
வருத்திடினும் வாய்மொழி வாக்குகள் தவறாது வலுவாய் இருக்கும் தாக்குதலும். மெய்வழி
வந்தவன் மெய்யொன்றும் பொய்வழி வந்த புல்லர்களின் கைக்கருவிக்கா சாய்ந்து விடும்.
வெய்யோர் வீசிடும் வினைகளெல்லாம் வீணாய் போயிடுமென்றந்த மைவிழியேற்ற மலை மகளோ
மாதவன் ஊழ்வினை காப்பாளே. வேந்தனை வீழ்த்திடும் விடமேதும் மாந்தரின் கைகளில்
தோன்றவில்லை. வையம் தாங்கா துயர் தந்து வதைக்கத்தானே வழியுண்டு. வருவதையெல்லாம்
எதிர்கொண்டு வரம்பு கடந்த பொறை கொண்டு எம்மான் எளிதாய் கடப்பானே. வையம் வளமுற
வழியமைக்க வானிறங்கி வந்தோனை வஞ்சகர் அகற்றிட முயன்றிடினும் நெஞ்சுரம் கொண்டோன்
நேரிடுவான். நரியுடன் சேர்ந்த நாய் மக்கள் அரியினுக்கெதிராய் அமைந்தாலும்
பரிதியின் முன்விழும் பனித்துளி போல் பாழுடல் மாய்ப்பது விதி தானே.
உளங்கெட்ட அரக்கருக்கு ஒத்துழைக்க உடன்பட்டால் அமரராலும் அழிக்க
ஒண்ணா அண்ணலவன் அவதரித்தும் ஆதிசிவன் ஆதரிப்பான் என்றறிந்தும் இயலாத அற்பரினம்
ஒருபோதும் ஒதுங்காது ஓயாது அவனுலவை ஒண்டி வந்து ஊரெல்லாம் அண்டி வந்து பிண்டங்களாய் பின்
தொடர்ந்தும் பெருவலைகள் மொத்தமாய் தொடுத்திடினும் சதிவலைகளத்தனையும் சரடறுக்கும்
சடைமுடியான் வெண்டலையானவனன்றி வேறெவரோ ? சித்தரையும் தன்னுயிராய் சிந்தனையில்
கொண்டவளாம் முக்கண்ணன் முலையழகி முக்கடலாள் நகையழகி முறையான நடையழகி முடங்காத
சொல்லழகி முல்லை மொட்டு பல்லழகி மொத்தமாய் கொண்டவளின் முழு சொத்தே இவனெனவே பெற்ற
மகன் பிள்ளை மகன் பிறைசூடன் மறைமகன் பிறிதொருவன் விந்தணுவில் வீழ்ந்துதிர்ந்து
விளைந்த மகன் வெற்றிக்கு வேதவதி வீராப்பு திலகவதி புத்திக்கு புலப்படாத புவனத்து
நாயகியாய் பூமுனிகள் புடை சூழ மாமுனிகள் படையோடு பூங்கனியாம் பாதத்தில்
புன்முத்தமிட்டபடி மாகடல்கள் ஒன்றிணைத்து மஞ்சமிட்டு கொலுவிருப்பாள். மாதேவன்
மனதிற்குள் மாளாது இடம் பிடித்தும் மணமாலை மாற்றும் முன்னம் மங்கையவள்
கரையுறைந்தாள். அவ்வன்னை ஏற்றெடுத்த அழல் குஞ்சை இன்னெஞ்சால் தத்தெடுத்து எம்மான்
கற்கியென காத்தருளும் கனல் முகத்தாள் கனக நிலம் முழுமையுமே பாம்பரசன் பள்ளிகொண்ட
ஊர் முழுக்க படுபாவ அறுவடையால் பாரறிந்த மலை நாட்டு மார்புறை மாட்டுடல்கள்
பாவித்த போர்வைக்குள் பைம்பொன் நிதி குவித்த பன்னாட்டின் அமைப்புகளும் பற்பலவாய்
நிறுவியதால் நீசர்களே குவிந்திடுவர். நிறை ஞானிக் கற்கிக்கொரு நலக்குறையும்
வந்திடாது. நெடுநிலத்தில் நித்தம் குறி வைத்திடினும் கறை படிந்தோர் கல்நெஞ்சர்
கண்காணித்துலவுவதை கார் வண்ணன் கடும் சினத்தால் கதிர் விடும் நாள் எரிந்திடுவர்.
கயவர்களை கனல் பொசுக்கும் காலனவன் கைக்கயிறு கௌவியே பிடித்து விடும். ஓலமிட்டும்
பயனுமில்லை ஊழையிட்டும் விடுவதில்லை. காலாகாலம் ஞாலம் காக்கும் காலகாலன் நல்லடியை
கடை நொடியும் போற்று நெஞ்சே !
அணைந்த நிலவன்று அண்ணல் அயர்ந்துறங்கும் அன்றோர் தினம் கண்டு
அறையின் சாளரத்துள் ஆரவாரமிகு அரவம் புகுத்தி உடன் அண்ணல் கதை முடிக்க அற்பர்
நினைத்த அன்று அர்த்தநாரி கூட அக்கணம் கொதித்தெழுந்து அனைத்தையும் சிதைத்ததுண்டு. சிறையாய்
ஆக்கியதும் சீறா அரவமது சினமே கொள்ளாமல் சிட்டென ஓடியதும் தலைவன் தலைவிதிக்கு தவறு
நேராமல் தழல் விழி உடையோனே தருணம் காத்தானே. நெஞ்சை நிமிர்த்தாமல் நீதிதேவன் கூட
குன்றி நிற்கின்ற குணக்குன்றாய் இவனிருக்க கொன்றை வேந்தன் கூட கொள்வான்
பெருமையோங்க. எந்தை சிவனார்க்கு எல்லாம் கைவந்த வல்லா கலையன்றோ. நேர்மகனாமிவனை
நிலையா நீரகத்தில் நீத்தார் ஆக்கிவிட நினைப்பதே மடமையென்றும் நெஞ்சில் நஞ்சுடையோர்
நின்று வினைவிதைத்தும் நீர்த்து போயிடவே கொன்றை வேந்தனவன் கூட்டணி வென்றிடுமே.
பாகம் 170
கன்னியரின் கற்பகற்ற கைவைக்கும் கயவனவன் கடவுளின் கடவுளாகி
கர்வமுடன் திரிந்தாலும் கடும் சினத்தான் கற்கி தேவன் கனல் போலே கொதித்தெழுந்து
கையகற்றி மெய் முடக்கி காலம் தாழ்த்த விரும்பாமல் கழுத்துக்கு குறி வைத்து கழுகுக்கு
விருந்தமைப்பான். பெண்ணியத்தின் பெருமைதனை பிறழாமல் மதிக்குமவன் கண்ணியத்தை
என்சொல்லி காவியத்தை படைப்பேனே ! விண்ணையொத்த நீதி கண்டு வேந்தர்களே அஞ்சி ஓடும்
மண்ணில் எங்கும் மரண ஓலம் மனம் உடையோர் மகிழும் நாளும் அறம் கெட்டோர் அழியும்
கோலம் அதிவிரைவாய் விடியற்காலம் அமைய வெகு தூரமில்லை. கருணையற்றும் கயமை கொண்டும்
கதறும் மாந்தர் கோடியென கண்மூடி காட்சி கண்டும் கலங்காமல் இருந்திடவோ ? மண்ணில் எந்த
மறவர்களும் மனமார தவறு செய்யின் எவனாகயிருந்திடினும் சிவன் வந்தே தடுத்திடினும்
சேயிழையர்கெதிராக செய்த கொடும் வினையனைத்தும் சிரத்தையின்றி ஒதுக்கிடாமல்
முறத்தைக் கொண்டு புலி விரட்டும் முப்பாட்டி வழிவந்த சிறுத்தை மகன் மரணம் கண்டு
சிறிதளவும் ஒதுங்கிடாமல் சீற்றமுடன் ஒடுக்கிடுவான். செவ்வேளின் கரமிங்கு
சிற்பங்களை செதுக்கிடுமோ ! வல்வேளிங்குதித்து வளவாழ்வை துறந்ததெல்லாம் வானுறைந்து
நிலைப்பதற்கோ ! விரும்பும் இப்பிறப்பெடுத்து விண்ணிறங்கி வந்ததெல்லாம் விளையாடி
மகிழ்வதற்கோ ? தனக்குற்ற வினையறுத்து தான் மட்டும் விரைவதற்கோ ? இல்வாழ்வை
இழந்ததெல்லாம் இரும்புக்கரம் கொண்டு இங்கு எதிரிகளை ஒடுக்கிடவே ! காரிகையர்
வாழ்க்கைக்கு களங்கமெவன் செய்தாலும் கண்ணீர் விட்டபடி கண்டம் முழுமையுமே கதறியழ
வைப்பதற்கே ! பூக்காத பிஞ்சு என்றும் புடம் போடா குஞ்சு என்றும் பார்க்காமல்
பறிக்கின்ற பாவத்தின் சின்னங்களை பாழ் சிறைக்குள் தள்ளி நிதம் பக்குவமாய்
தீனியிட்டு பாரில் இங்கு காப்பதற்கு கற்கியொன்றும் புனிதனில்லை கற்கால மனிதனில்லை.
மேய்ப்பனாய் அன்று வந்து மீட்கவே முடியாமல் காப்பனாய் இன்று வந்து கண்கெட்டு
போவதற்கு கற்கியொன்றும் கயவனில்லை. ஆதலாலதன் பகரம் அறம் மாறும் அரக்கர்களை அன்பிலா
அழுக்குகளை இகல்வேந்தன் இழுத்து வந்து இழியோர் கழுத்தரிந்து இம்மைக்குள்
அவனெழுந்து இடும்பைக்கு தீர்வமைத்து எம்மைக்கும் இன்மையாகா ஈடற்று நன்மை
செய்யும் எம்மாந்தர் நலம் பேணும் மெஞ்ஞானம் தளைத்தோங்கும் மேனெறியை நிலைநாட்டி
நாநிலமே வாழ்த்தும் வண்ணம் நாணலற்ற விதியமைத்து நன்மாந்தர் நெஞ்சுறைவான் நாறும்
புகழுடனே .
ஆதவன் வந்துதித்த அன்னிலம் அருகமைந்த பூனிலமொன்றிருக்க பொல்லாதோன்
அகமுழுக்க பூநாக நஞ்சுறைந்த அந்தணன் பொன் குவிக்க அண்டியே மனையமைக்க புகுந்திட
விழா எடுக்க பொலிந்தனர் குலம் தழைக்க போதுமே நலம் கிடைக்க பெருமானை வந்தழைக்க
பிறழாமல் சென்றிருக்க தவறாது விருந்தமைக்க தலைவனும் அதில் கலக்க அறுசுவை
விருந்துடனே அதில் விடம் மறைத்து வைத்து கொல்லவும் திட்டமிட்டு கொன்றது
அறத்தையன்றோ வென்றது வெய்யராயின் விளைவது பார்ப்பனுக்கு என்றவன் அறிந்திடாது
இழியோரும் அழுத்திடவே கொண்டகம் மரத்துப்போனான் குணங்கெட்ட பார்ப்பனனும். சினம்
கொண்ட சிவனும் அவன் மேல் சிதறாது விழியை வைத்து இனம் கண்டு எரிச்சலுற்று
எம்மானுக்குதவினானே. இரக்கத்திற்கிருப்பிடமே இசைபாடி இடத்துமையோன் என்றும் எழில்
விழி நெருப்புடையோன் விடமதை வெற்றாக்கி வீரியம் அகற்றிவிட்டான். விதைத்த
அவ்வந்தணனின் முதல் மகன் மூன்றாம் திங்கள் புகைதரும் போதையிலை ஊதிடும் தோழருடன்
பூநிலா பொலிவுறும் பௌர்ணமி தினத்தன்று வாகனம் ஏறியே வாழ்வை இழந்தனன். அந்தணன்
அருமகன் ஆருயிர் முதல் மகன் தலையது சிதறியே தரையினில் படர்ந்ததும் செங்குருதியும்
சிந்தியே கூடினன் வானிலே. வேந்தனை கொன்றிட விடமிட்ட வீணனின் மைந்தனின் வினையினை மனமலர்
வருந்தியே வாக்கினை உரைத்திட்டேன். ஈரைந்து மாதங்கள் இன்னலை தாங்கியே தன்னலம்
மறந்த அத்தாயவள் கதறிய தருணத்தை எண்ணியே கண்களும் குளமென கொண்டவர் கூறிய கூற்று
தான் கொடியதோர் ஊழ்வினை என்பதை உணரவே இச்சொல் பகருவேன். அந்தணர் அறவோரென்றெண்ணியே
அண்ணலும் வாழ்ந்தனன். கலிமகன் கைதனில் கடிவாளம் இருப்பதால் கொடுமைகள் மறையுமோ !
குறையிலார் நிறையுமோ ! அம்மையும் அப்பனும் அறிந்ததோர் ரகசியம் அடியேனறிந்தது
அளப்பரும் பாக்கியம். உண்மையை செப்பிட ஓர் வரம் வேண்டுவேன். உதவுவாய் ஈசனே உமையொரு
பாகனே.
சிவனை நம்பி செந்தமிழெடுத்து சீருறு தளையுடன் யாப்பினையமைத்து
அவனரும் மைந்தனாம் அறுமுக தேவன் அருளை நினைந்து எவனும் இயற்றா இலக்கியம் சமைத்து
எம்மான் சார்பில் காப்பினை தொடுத்து நன்றாய் தேன் விழும் ஞாயிறு ஒளியுடன் கன்றாய்
கற்ற நற்றமிழ் பொலிவுடன் நற்றாய் போல நறுங்கவியூட்டிட நாதனெனும் என்னாவிக்குரியோன்
பாடல் கேட்பதில் அவனுக்கிணை அவனே ஆவான். சீறும் அரவம் சிவன் மெய் தழுவும் சிரமே
பணிந்து காலடி தொழவும் நமனே என்னை நாடுவதில்லை. நானும் நமனை தேடுவதில்லை. கணமும்
காத்த என் கண்ணில் கொண்டு கற்கியின் பூமுக காட்சியை ஊட்டு. காலமே என் மேல் கருணையை
காட்டு. நாளும் பொழுதும் நலமற உருளும் ஞாலம் மேம்பட நாயகன் நடுவே நகர்வலம் வரவே நடுநிசி
கூட நரிகளோட்டும் பரிகளோடும் பதியுடை நாதன் பக்க துணையாய் பவனி வரவே பரதத்தின்
பாதம் பதிந்த குமரியின் நிலத்தில் கொற்றவன் நிமிர்ந்து உண்டென கோடி வாக்கினை
கூவியுரைப்பேன். பேரரவம் மேல் பெருந்துயில் கொள்வதாய் அறிதுயில் கொள்பவன்
அறிந்துமறியாதது போலே அறிவிலியாவதும் புதிதில்லை என்றே அடியேனவனது திருவிளையாடல்
தெரிந்ததை சொன்னேன். உலகளந்தான் திட்டம் ஊரறியாதிருந்தும் உலகறியாதிருந்தும்
யாரறியாதிருந்தும் யாமறிவோமென்றே எவரும் அறிக !
எவ்வுருவில் எழும் புகையனைத்திற்கும் எம்மான் பகை வளர்ப்பான்.
அவ்வுரு அன்பகத்துள் ஒளிந்திருந்தாலும் அடுப்படியில் எரிந்திருந்தாலும் கண் பறிக்க
கானகத்தை கரித்திருந்தாலும் கடும் கோபமுற்று நெருப்பெனவே கொதிப்பான். அத்தகையோன்
அறம் தாங்கும் அம்மையப்பனரும் புதல்வனாகைலால் புகை இழுத்து புற்றமைக்கும்
புல்லருக்கும் பொன்னுரை நல்கி நல்லாசானாகி நாயகன் நவிலும் நல்லுரை எல்லாம்
கோடியுறுமாயினும் அதற்காரும் காது கொடுக்காதமைவது காலம் செய்த கருமம் என்றே கவலை
கொள்வான். புலாலிலா புனிதம் காக்கும் போதையிலா பொற்பாதை அமைக்கவே பண்பாளன்
பகுத்துண்டு பல்லுயிரோம்பவே பாழுமுலகில் படாத பாடுபட்டும் நகைப்போர் நடுவில் நாயென
பெயரெடுத்தும் பாரிலவன் வெளிப்படும் முன்னம் யாருக்கும் இன்னா செய்யாது இழியோன்
பெயரெடுத்து எம்மான் இடர் சுமப்பான் என்றே சுடர்விழி சுந்தரன் எனக்கு சொல்லித்தந்ததை
இங்கே அள்ளித் தந்தேன் அருள்வாக்குருவில் ஆருயிரே.
பதிற்றுப்பத்து பாதயோடமைந்த பரந்த சாலைக்கு பக்கமுறைந்ததோர்
பதியில் பரிதி உயிர்க்கும் திசைக்கு நேரே தெக்கணத் தீரன் தெளிவாய் அமர
பொறிவாய் பாகை ஒன்பானுடனொரு சுழியொடு சுற்றி பார்த்திபனில்லம் பார்வைக்குத்
தெரியும். ஓராண்டங்கவன் உறைவிடம் அமையும் தெருவுக்குள்ளே திருமால் வளவன் ஈரறை
கொண்டு இயங்கிய இல்லறம் அமைந்த வீட்டுள் அண்ணல் வருமுன் அங்கொரு குடியாய்
ஆயிழை வாழ்ந்தும் அவளது அன்னை சேயிளை இவளின் செல்லத் தலைவனை அள்ளி எடுத்து ஆகாத
உறவு கொள்வதை அறிந்த குணவதி உடைந்து குமுறிய நெஞ்சால் குரல்வளை நொறுங்க
கொடுங்கயிறொன்றால் குற்றுயிர் மாய்த்தாள். அறமதைக் கொன்றவன் அமர்ந்ததின் குடக்கே
அந்நிலம் கொண்ட ஆனையொத்த காய்கனிச் சந்தை கடலென குவியும் மாநிலமெங்கும் மற்றொன்று
பெரிதாய் யானறிந்திடவே இடமேயில்லை. பாரிமுனையது பதித்த பதியது பரதமுறைந்த பெருநகர்
நான்காய் நரகமுறைவோர் நன்றாய் வாழ்ந்து எமனை அடைவது இயல்பாமையும். அருகினிலமைந்த
கலிங்கத்து வேந்தனின் கவின்நகர் பெரிதாய் காதம் பார்த்தால் ஏழிற்கு சற்று
ஏறக்குறையும். அவன் பெயருற்ற இவன் நகர் சிறிதாம். அண்ணல் விட்ட அழகுறு
சிப்பிக்குள் அலர்ந்த ஆடவக்குஞ்சுடன் செம்மான் துணையுடன் எம்மானிருந்தது எண்ணிடும்
திங்கள் இருநான்காகும். தகாத உறவால் அத்தாயவள் வாழ தலைவிதியந்த தகைசால் பூங்கொடி
தன் விதி முடித்து தாரகையான காரிகை வயிற்றில் கருவும் கருகிய கதையை கேட்டு காலனும்
அன்று கரைந்ததையறிவேன். ஏதும் நடக்காததுபோல் ஏய்த்து இனிதாய் வண்ணம் எழிலுற தீட்டி
மண்ணுக்குடையோர் மனமது இருளாய் வெள்ளை அடித்த கல்லறை மாந்தர் வேந்தனுக்கெனவே
இல்லம் விட்டதும் எல்லாம் வல்லோன் வெளிச்சமாக்க திங்கள் இரண்டை தின்ற வருடத்துள்
தெரிந்தது அதுதான் பேய்வீடென்றே ! உண்மையை அறிந்து உளமே அதிர்ந்து மன்னன் மனையாள்
கதறி அழவே மாற்றுக்குடிலுக்கு தேற்றி அழைத்தான் மாண்பே மாறா தேற்றறிவாளன். திக்கு
தெரியா காட்டில் அன்று தீரன் புரியாதலைந்த நாட்களை அக்கு வேறு ஆணி வேறென அடியேன்
பகுப்பேன் அறையாயோ நீ !
காவல் புரிந்த வண்ணம் கயமைக்கு துணை போகும் ஏவல் பூனைகளாய்
இருப்பதினும் இழிதொழில் எதுமில்லை. ஆவலாய் செவி சாய்பாய் ஆருயிரே ! அதிகாரம்
கைக்கெட்டி ஆணவத்தால் அத்துமீறி அறத்தை கொல்வதினும் அருவருக்கும் பன்றி மேய்த்து
ஆன்ற குடிகாக்கும் அழுக்கன் மேன்மகனே ! இழுக்கா இயன்ற அறமேற்காதினியும் வருந்தாது
இன்றே திருந்தாதழியும் தீநாளில் தீப்பொருளுட்டி ஆடிடுமனைவருமே வழியும் கண்ணீரால்
வானுறைய வழியுமின்றி வாழும் உயிரினத்தின் வீழும் கழிவொப்ப வெளியேறும் பொழிவொப்ப
காலன் காலடியில் கருவாடாய் ஆயிடுவர். உண்மைக்கு உலை வைத்து உருக்குலைக்க
துணிந்தவரை இம்மையிற் மட்டுமின்றி எம்மையிலும் ஈசன் ஏற்காமல் எழுபிறப்பும்
ஒதுக்கிடுவான். செம்மை மனங்கொண்டு சிறு தீங்கும் செய்யாது வன்மை வார்த்தைகளை வாக்குகளாய்
உதிர்ப்பதினும் வாளாதிருப்பவனை வானுலகம் மறுப்பதில்லை வரலாறும் வெறுப்பதில்லை.
பன்மை வாக்குடையோன் பலவாறு நாக்குடையோன் தன்மையுடையோனை தான்தோன்றி கயவனையும்
உள்ளொன்று உற்றபடி உடுப்பொன்று இட்டபடி உள்ளத்தாலூனமுற்றோனை காணும் கணம் தோறும்
கற்கி வேந்தனவன் ஒதுக்கும் குணமென்று சபிக்க முற்படுவான்.
எவ்வுருவில் எழும் புகையனைத்திற்கும் எம்மான் பகை வளர்ப்பான்.
அவ்வுரு அன்பகத்துள் ஒளிந்திருந்தாலும் அடுப்படியில் எரிந்திருந்தாலும் கண் பறிக்க
கானகத்தை கரித்திருந்தாலும் கடும் கோபமுற்று நெருப்பெனவே கொதிப்பான். அத்தகையோன்
அறம் தாங்கும் அம்மையப்பனரும் புதல்வனாகைலால் புகை இழுத்து புற்றமைக்கும்
புல்லருக்கும் பொன்னுரை நல்கி நல்லாசானாகி நாயகன் நவிலும் நல்லுரை எல்லாம்
கோடியுறுமாயினும் அதற்காரும் காது கொடுக்காதமைவது காலம் செய்த கருமம் என்றே கவலை
கொள்வான். புலாலிலா புனிதம் காக்கும் போதையிலா பொற்பாதை அமைக்கவே பண்பாளன்
பகுத்துண்டு பல்லுயிரோம்பவே பாழுமுலகில் படாத பாடுபட்டும் நகைப்போர் நடுவில் நாயென
பெயரெடுத்தும் பாரிலவன் வெளிப்படும் முன்னம் யாருக்கும் இன்னா செய்யாது இழியோன்
பெயரெடுத்து எம்மான் இடர் சுமப்பான் என்றே சுடர்விழி சுந்தரன் எனக்கு
சொல்லித்தந்ததை இங்கே அள்ளித் தந்தேன் அருள்வாக்குருவில் ஆருயிரே.
பாகம் 171.
நன்நிதி குவித்தவள் நளினியுள் நிறைந்தவள் மென்விழி மூடியே
மெல்லவே துயின்றதால் வேதனை விளைந்தது வினையுறும் வையமே. யாதினி விடியலோ என்றவர்
வருந்திட யாவரும் பருந்தென வெற்றியின் விருந்தென வாழ்ந்தவர் இதுவரை வானக வரம்புடை
வரலாற்று புகழுடை வல்லமை நாடுகள் சாதனை புரிந்துமே சறுக்கியே வீழ்ந்திடும். சோதனை
சூழ்ந்திட சொல்லொண்ணா துயருடன் ஆடகப் பேழையோ அனுதினம் சுருங்கியே அரும்பாது
சிறுக்குமே. பொற்றம் குவிந்ததோர் பூநிலம் முழுமையும் பொருளற குனியுமே. புவிசார்
குறிகளில் இருசார் அணிகளும் இன்னமும் தேயுமே. வளர்பிறை என்பது வான்மகன் வந்தபின்
வளம் வரும் என்றறிந்தவர் வருகையை முடக்கிட வல்லவர் திட்டத்தை செல்லாதாக்குவான்
சிரசிலே புனலொடு சீறிடும் நாகத்தை கழுத்தினில் ஆரமாய் கட்டிய நாதனும் உடலொடு
தாரமாயுற்ற அத்தலைவியும் சினத்ததால் தரணியில் தரித்திரமாடிடும் தனித்துவம்
யாதெனில் பெரும்பசியுற்றிட வருமொரு
பஞ்சமே வாழ்க்கையே வெறுத்திட வளமுடன்
வாழ்ந்தவர் வீழ்ந்ததால் வறுமையை தாங்கிட வலுவிலா மனமுடன் வாழ்க்கையை முடிப்பரே.
இடரிலா இம்மையை எழுப்பிட என்மவன் இடனறிந்தெழுந்திட இறைவனை வேண்டுவேன். புதர் மனம் பூண்டவர்
பூநிலமுழுமையும் புரியும் அப்பாவத்தை விடருறை முனிவர்கள் வேந்தனை தீண்டியே
விழித்திட செய்வதும் வெளிவந்தவனிங்கு வேண்டும் வளம்பொழி மழையென வானவர் வாழ்த்தவே
புகழொடு பூத்தவன் புல்லொடு பூண்டுகள் விலங்கொடு பறவைகள் விபரமாய் நலம் பெற
விளங்குவான் அறிகவே. இலங்கு நூல் எவற்றிலும் இடம்பெற தவறிடான். எளிமையின்
சின்னமாய் என்றுமே இருந்திட ஒருமையை அழுத்தியே உண்மையை உடுத்தியே தன்னலம் துறந்திட
என்றுமே தயங்கிடான் . தென்னிலம் போற்றவே திருப்பணியாற்றவே எண்டிசை தாண்டியும்
எழும் திசை மேலோடு கீழென பத்துமே பதியுமே.
மென்மையரே இல்லாமல் மிகை குற்றம் புரிபவரும் கன்னியரின்
கற்புதனை களவாடி மகிழ்ந்த வண்ணம் கொலைக்களம் கண்டதொரு கொடுங்கோலுற்ற
கமலக்கொடியுற்றோர் குவிந்த அங்கு குருடர்களே மிகுந்து நிற்பர். திருடர்களும்
முரடர்களும் தெருப்பொறுக்கி புருடர்களும் திளைத்த வண்ணம் இனம் பகுத்து குலம்
அமைக்கும் இழிமாந்தர் என்பதனால் கல்மலை இடைவெளியில் கதிரவன் கனல் கக்கி
கொந்தழிக்கும் கொள்கைமிகு கூட்டத்தார் குற்றமுற்றோராயிடினும் குலம் பகுத்து மதம்
பிரித்து கொலை புரியா குணம் விடுத்து பொருள் திருடும் புல்லர்களாய் போயிடினும்
பொதுவாழ்வில் போலியென்றும் இனவாதமுற்றிருந்தும் எம்மாந்தர் இவர்களையும்
புறக்கணிக்க வழியே இன்றி பொன்மகன் பூநிலத்தில் வன்முறை வாக்கெடுப்பு வந்த வண்ணம்
வண்டமிழ் பரப்பு அன்று வடபுலத்தார் கைக்குபோக வகுத்துவிடும். சபை முடக்க அடிகோலும்
வஞ்சகர்கள் வந்தமர வழிகோலும் வரும் எல்லா அவை முழுதும் சிறுபான்மை உறுப்பினராய்
சென்றமர செய்வதுடன் பெரும்பான்மை குறைப்பதற்கு பீடைமிகு பிறழ்நெறிகொள் வடபுலத்தோர்
வந்திறங்க வரம்பு மீறி விதி திருத்த வந்த சபை உறுப்பினரை பொன்னளித்தும்
பொருளளித்தும் பொறுக்கியே இழுப்பதனால் வென்ற அந்த வேந்தனுக்கு வேதனை மிஞ்சிவிட
வந்தமர்ந்த சின்னாளில் வழுக்கி வீழ்ந்து வலுவிழப்பான். வரும் வினைகள் வன்முறைகள்
எழும் எங்கள் தென்னாட்டில் இடர்பாடு தலை தூக்க தெளிந்திருந்த இடமனைத்தும் தீ
மலரும். பூமலர்ந்து புகழ் மலர்ந்த பொன்னிலத்தில் பொறியாடும் இடுகாடு யெழுந்திடவே
துறையனைத்தும் துறந்திடவே துயருறுமே தமிழினமே. முடை வீசும் மூடர்மொழி திணிப்புக்கு
முரண்பட்டு முற்றுமாய் தமிழ் கொதிக்கும். வாடைவரும் திசையிருந்து வந்த பல
வணிகரினம் வான் நிலத்தை கவர்ந்து விடும். யாரிங்கே ஆண்டிடினும் எத்தீமை
சூழ்ந்திடினும் பாரெங்கும் பாதகர்கள் பல்லாண்டு பல்லிளித்து கொண்டாடி கொக்கரிக்க
குறுக்கு வழி குறிப்பு வழி எல்லாமும் முற்றுப் பெறும். எல்லார்க்கும் வேலியுண்டு
இழியோர்க்கும் கூலியுண்டு. எத்தீங்கும் செய்யாமல் ஈசனுக்கே கட்டுப்படும்
எளியோர்க்கே வாழ்வுண்டு. பொல்லார்க்கு பாடை கட்ட புல்லர்க்கு தீர்வு கட்ட
வல்லாண்மை வான்மகனே வந்தெழுவான் சின்னாளில். சிவனாரின் மகனாகி சிவகாமி குணமோங்கி
வரும் நாளில் வழி மறித்து வாராமல் இடைமறிக்கும் வலுவுள்ள நாய் மக்கள் எவரெங்கும்
பிறந்ததில்லை. இனியெங்கும் பிறப்பதில்லை. வான்மகனோ வரம்பற்ற வரம் பெற்று வலுவாக
எழும் நாளில் யானிறங்கி இணைவது எம்மானிடமே இதையறிவாய் மானிடமே !
சேரனின் நிலம் பிறந்து சீருற வளர்ந்திருக்க நெய்தலில்
பதிந்திருக்க நேடலில் அவன் கரத்தில் நீள்தந்தக் கரிமுகத்தான் ஓதலில் உளம்
நிறைக்க ஒரு விழி கவர்ந்திழுக்க தோகையாள் பிறந்திருக்க தொடுவிரல் தாழே அங்கு
அந்தணன் நிலம் கிடக்க கீழே அரிசங்கம் மின்னுமென்றும் வீடிலாதிருந்திடினும் வினை
இலாது உறங்கிடினும் சோறிலா சூழல் வாரா சோழநாட்டு சிவமிருக்கும் ஆளவந்நோன்
மூவேந்தர் அடையாள சின்னமது மொழியாது புதைந்திருக்கும் பாவேந்தர் கவியுரைக்கும்
பயன் தூக்கா பண்புடுக்கும் அருட்பெரும் சுடரொளிரும் அண்ணலவன் அடையாளம்
விண்ணவர்க்கும் தெளிவாகி விட்டிறங்கி மன்னவன் இவனுக்கு மறுக்காது தொண்டு செய்வர்.
கனகன்னை புறந்தந்தும் காஞ்சனம் கையாண்டும் அவன் மெய்யில் ஒருபோதும் ஆடகமோ தோடகமோ
அணுவளவும் ஒளிராது. நாடகமாடாதொரு நன்னன் முகம் ஒளிரும் கண் கவரும் கைநிறைய
கமலத்தாய் காகிதங்கள் கடலளவு குவிந்தாலும் பொன்மணிமேல் தவழ்ந்தாலும் பொருளாசை
இல்லாது புவியாசை கொள்ளாது அருளாசையுற்றிருப்பான் அர்த்தனாரி எளிமையோடு அன்னம்
பெறும் ஏழ்மையோடு அண்ணலென்றும் நிலையாமை உணர்ந்திருப்பான். நீதிமான் ஒளி முகத்தை
நேரெதிரே காணும் போது பித்தனின் பிள்ளை முகம் பிழைகாணா வெள்ளையகம் சித்தரின்
தாழ்மையோடு செய்நன்றி கொல்லாது மங்கையர் மனம் நாடும் பங்கைய பால்முகந்தான்
பரந்தாமன் பண்புதனை பாரறிய பகருகின்றேன்.
சிங்க கடலொன்று செக்கச் சிவந்திருக்கும் வங்கம் சீற்றமுற
வந்தடிக்கும் வரப்போரம் வலுவாக வாழுகின்ற தங்கத்தோடணிந்த தகரங்கள் துன்பமுற தளரா
இயக்கங்களோ தரை மீட்கும் நோக்குடனே வரலாறு காணா வன்போர்க்கு வித்திடவே வலுவான
கூட்டணியாய் வம்பிழுக்கும் வறுமைக்கு பிறந்தோர்கள் வான் பரப்பில் பிறை கண்டு
பேரிறையை அழைக்குமொரு பிழைகாணா மறை மாந்தர் பெருவாரி உருவாக்கும் குறைகாணா
கொடும்படைகள் கொந்தளிக்கும் கடும் நிலத்தை மறை நூல்கள் மறைக்காதுரைத்ததனை மன்னவனே
கேளாயோ ! மணற்மேட்டில் மாளாது மரணத்தை விலை பேசும் கனல் கக்கும்
கழுகுகளை கடும் சினத்தார் தொடுத்தபடி தழல் பறவை தறிகெட்டு தயையின்றி நிலம்
விழுந்து நீத்தாரின் நிலை உயர நிறையவே பிணங்குவியும். உயிரிழப்பு உச்சம் தொட
உலகத்தார் பீதியுற முகம் மூடும் மோகினிகள் முக்காடு போட்டபடி ஒப்பாரி
வைத்திடுவர். அழுக்கற்று அகம் வெளுத்த அறியாத பிஞ்சுகளும் பொறுப்பற்ற பேரரசால்
பொசுங்கிட நேரிடுமே. புண்ணீரும் தண்ணீராய் பீரிட்டு பெருகியோட உருக்குலைந்து
நிற்குமங்கு ஊசலாடும் வேந்தர்கட்க்கு உயிரோட்டம் வந்திடவே வெற்றிக்கு வழிகோலும்
வீழாதோர் செம்படைக்கு புகழ்போன உறு நாடாய் உலகத்தை அச்சுறுத்தும் ஒரு நாடு
உதவிடுமே. அப்பெருநாடோ உறைபனி உளியங்கள் உலவுகின்ற ஒப்பற்ற அணுநாடு என்று சொன்னால்
அது என்றும் மிகையாகா மேன்மையுடை மிளிருமொரு தலை நாட்டின் வரம் பெற்று வான்படைகள் வலுப்பெறவே
வீரியத்தோடனைவருமே வெற்றிமுகம் பெற்றிடுமுன் விதை விதைத்து வினையறுத்த கதை
கேட்கும் காதுண்டு. காஞ்சனம் ஊறுகின்ற
கண்டமெங்கும் கனிம நீர் காக்கும்
பெட்டகங்கள் பற்பல பிச்சைக்காரனைப்போல் பெரும்பசியால் ஏங்கிடவே விளை பொருளும் கலை
பொருளும் வேரொத்த பொறி பொருளும் விற்பனைக்கு ஓடாது ஓரிடத்தில் தேங்கியது
உலகத்தார்க்கு உதவாமல் ஒருவாறு சீரழியும். தரை முழுதும் உறை கிணற்றின் தமனிகளே
தகருமத்தருணம் அங்கு தழலேந்தும் கருமுட்டை அணு அணுவாய் சிதறுமென்றும் அதன்பின்னம்
அவனிக்கு அமைதி என்று ஒன்று வந்தால் அதுவே அம்மையப்பன் அருளாலே அண்ணல் வந்த
பின்னரென்று அகிலாண்ட நாயகியே அழுக வண்ணம் உரைக்கின்றாள்.
தோடக மாமலர் பதாகை ஏந்திய பாதகர் முகமதில் பாதுகை வீழவே பல்
கரம் ஓங்குமே. பரிசிலால் வீழுமோ பன்னரும் நீதிமான் பண்புடை மாமனம். நாட்டினில்
யாவரும் நாய்களை நிந்தித்து நயனமே ஊறிட நாயகன் கதிர் விட நல்லறம் தோன்றுமே.
மரணத்தை பரிசென மன்னனுக்களித்திட எவர் உளர் அவனியில் என்பது கேள்வியே. மாறும்
இவ்வுலகினில் மாறா நீதியை மன்னவன் தந்திட மன்னுயிர் வாழ்த்திடும் என்பதை அறிகவே.
உண்மையை அறிந்து யான் உள்ளதை விளம்பினேன். வென்றவன் வீழ்வதும் வந்தவர் வெல்வதும்
வாழ்க்கையில் வருவதும் இயற்கையே. யாக்கை தான் வீழ்ந்த பின் எடுத்திடும்
பிறப்பெல்லாம் மாந்தர்க்கு வரும் ஒரு சுழற்சியே. கொற்றவன் வென்றதை கொண்டிட
மண்ணினில் கூற்றுவன் கூடவே அஞ்சுவான். மற்றது யாதுமே மாற்றார்க்குற்றிடும்
மன்னனுக்குற்றிடாதறிகவே !
அகிலத்து அகல் விளக்கு அணையா திருவிளக்கு உலகிற்கொளியூட்ட
உதித்தெழுந்த கதிர் விளக்கு ஒளிரும் முன்னம் ஒத்தாரை இனம் கண்டு உற்றாருள் ஊனமுடை
உள்ளிருண்டு முள்ளுறைந்த கெட்டாரின் விடம் கண்டு கிடக்கையின் நிலை கண்டு
துடித்திடும் தோள்களுடன் தூங்கா புனுகுகளும் பூமானுக்குதவிடுமே ! அவை உளவு
விழிகளுற்ற ஒற்றர் பணி உடைத்து ஓசையின்றி உள்ளிறங்கி துப்பறியும் சேனைகளில் தூயவைகளாயிருந்து
ஒப்பரியோன் உயிர் காக்க உரிய பல்லுதவி செய்து செப்பரியோன் சிரம் நோக்க சேவையினை
செய்த வண்ணம் சாவு தீண்டா வழியமைத்து காவு வாங்கா காலனுக்கு கால் நொடியும்
வேலையின்றி யாவும் அவர் கடமையென்று இன்முகத்தால் நன்று செய்து எப்பயனும் எதிர்
நோக்காதிணக்கமுடன் வாழ்ந்திடுமே. உத்தமன் உடலுக்கு ஊறு பல விளைவித்து உயிருக்கும்
விலை வைத்து உண்மையின் வேருக்கு உருக்குலைக்கும் உலை வைத்து ஊர் முழுக்க
நிதியளித்து யாருக்கும் அஞ்சாமல் இறைமகனுக்கிடர் தந்தோர் இயல்புகளை அறிந்திட்டு
இடி முழங்கும் மின்னலென எம்மான் எழுந்த பின்னம் எமனார் விதிப்பதெல்லாம் சிவனார்
கைவிட்ட சிற்றினத்தின் ஊழ்வினையே. விழ்ந்திருக்கும் வேந்தனவன் வீறு கொண்ட
வேங்கையென பாரறிய எழும்போது வாய்மை கொன்று வாழ்ந்தவரின் வாழ்க்கை அன்று வறுமையின்
வாய்க்குணவாய் வந்து பசியாற்றிடுமே. செழுவாழ்வமைத்தவர்கள் செல்லா காசாகி சிந்தும்
கண்ணீரால் வெந்து வருந்திடவே தன்மானம் சுரண்டப்பட்டு தாழ்ந்தவராய் அமர்ந்தவரும்
மண்ணுரிமை மறுக்கப்பட்டு மன்னுயிரில் மலிந்தவரும் பொன்னுயிராய் பொலிவு பெற்று
புன்னகைப்பர் பூமியெங்கும். மாற்றான் பிறப்பெடுத்து மறுத்தவர்கள் முதற்கொண்டு
மாமனிதன் மாபிறப்பை மறித்தவர்கள் பலரென்று மரணமாலை அணிந்த வண்ணம்
மண்ணுறங்கப்போவாரே.
பாகம் 172
உலகிறங்கி உதித்த மகன் உமையன்னை உயிரியலாய் உறைந்த மகன் உலகறிந்து
அணைக்க வரும் உதயம் முன்னம் இரக்கமிலார் நடுவினிலே இழிமகன் போல் உலவிடுவான்
இரவுறக்கம் துறந்தவனாய் பழி பலவும் சுமந்தவனாய் பரிதிமுகம் காணாது பாதி நாட்கள்
கிடப்பவனும் பகவனவன் செய்துவைத்த பரிதாப ஊழ்வினையால் பங்கயமாய் மலர்ந்த முகன் பட்ட
துயர் பிறவியெலாம் பாதிப்பு தடை அமைக்க பாதகர்கள் இடைமறிக்க சாதிக்கும் கலை
இருந்தும் சாதிக்குள் நரிகளாலே சாய்த்திட சதி யமைத்தும் சண்டாளர்களே மிகுந்து
சலிக்காது பாவங்களாய் குவித்து வருமந்த இடமருகில் வளர்ந்த ஒரு வரையிருக்க அதன்
வலப்புறத்தில் வனத்திற்கு சிறப்பமைக்கும் சிறு நகரம் பலவற்றை சிதைத்து வந்த
மாரியம்மை செம்மலையே தீண்டியது மழலையாய் தவழ்ந்த காலம். மறுமுறையும் பிணி அதுவாய்
மன்னவனை அண்டாது பேரின்பம் அடைந்ததற்கு பிறைசூடன் நின்றாளும் அருவுடல் அமைப்புக்கு அவனுக்கே
நன்றி சொல்லி அயராது வாக்கிசைத்து அருளாளன் இடம்பிடித்தேன் அறிந்திடுவாய் ஆரமுதே !
நறுமகனே நன்றி கொன்றோரனைவருமே நல்லுரைக்கு செவி கொடாது நமனுலகுள்
இடருறுவது மட்டுமன்றி ; இன்னும் பலர் இருக்கும் இடம் தெரியாமல் கிடக்கும் கிடையறியாமல்
அகத்தில் எல்லாம் விடமுறைந்து அடியாட்கள் கரம் இணைத்து வெற்றி முகம் காண்பதுடன்
வேடன் என்ற வேடந்தனை வெளி உலகம் அறியாமல் நாடகங்கள் நவரசங்கள் நாளெல்லாம் அரங்கேற்றறும்
நாணமிலா நாய்மக்கள் நன்னெறியர் வாழ்க்கைக்கு ஊறிழைக்கும் காலம் சென்று
உயிரெடுக்கும் காலம் வந்து கலிகாலமாயினது கல்கிக்கு அதுயென்றும் புலிகாலமாயிடுமே
புவிமீது பாய்வதற்கே புதுமைப்பித்தன் போர் கலைகள் கற்றபடி புறமுதுகிற்கிடம்
கொடாமல் பொன்னான நிலை பெறுவான். ஆயிரம் காலத்து அரும் பயிர் அழிக்கும் வண்ணம்
பாவச்சுமை ஏற்றியவர் பதறாது உயிர் எடுக்கும் பாதகர்கள் வாழ்வழிக்கும் பைம்பொன்
காலமென்றும் கற்கி ஈசன் கை வண்ணம் காண்பதற்கே தவமிருந்தேன். கண்ணீரை வரவழைக்கும்
கன்னியரின் மேனிதின்னும் காமுகர்கள் காட்டினிலே கடும் மழை பெய்த பின்னம் கல்கி
வந்து கதிர் விட்டு கயவர்களை பொசுக்கிடுவான். காத்திருந்து கரங்குவித்து காலமெலாம்
நன்றி சொல்வேன் கனல் கண்ணா நன்று செய்வாய்.
நாளெலாம் அன்பேற்று நன்றிக்கு வித்தாகும் நாயென பிறப்புற்று நஞ்சுண்டோன் நறுமேனியில் நன்குறைந்த எண்ணெட்டாய் கஞ்சுகன்
நல்லூர்த்தி கடவுளொப்ப காத்திடவே கற்பக நெஞ்சுடை கதிர் முகனை கடக்கையிலே கால்மலரை
முகர்ந்து செல்லும். நன்றி கொன்றோர் நிறைந்ததொரு நயவஞ்சக நானிலத்தில் பன்றிகளே
மேன்மை என்று பழகப் பழக தெரியுமன்றோ. பண்புகளை படிப்பதற்கு பாரில் பிற உயிர்கள்
உண்டு. பண்பாடு சிதைப்பதற்கும் பகுத்தறியாதிருப்பதற்கும் கொண்டாடும் பிறப்பெதற்கு.
கூற்றுவனே வெறுப்பதற்கு கோடிப்பொருள் குவிப்பதல்ல. கோடானு கோடியினும் எம் கூத்தனது
அருள் குவித்து கூடை விட்டு கூடி விடு. சாற்றுவதை சலிப்பிலாமல் கேட்டு நீயும்
கிளர்ந்தெழுவாய் ! சேயோன் சிறப்பறிந்தும் சென்ற பல பிறப்பெடுத்தும் சேவிக்க தவறி
மீண்டும் வந்துதித்த இப்பிறப்பு வாரியே அணைத்தபடி வானவனை வணங்கிடவும் வரம் வாங்கி சேர்ந்திடவும்
கொண்ட கடன் அத்தனையும் கொற்றவனுக்குதவிடவே !
அகிலத்து அகல் விளக்கு அணையா திருவிளக்கு உலகிற்கொளியூட்ட
உதித்தெழுந்த கதிர் விளக்கு ஒளிரும் முன்னம் ஒத்தாரை இனம் கண்டு உற்றாருள் ஊனமுடை
உள்ளிருண்டு முள்ளுறைந்த கெட்டாரின் விடம் கண்டு கிடக்கையின் நிலை கண்டு
துடித்திடும் தோள்களுடன் தூங்கா புனுகுகளும் பூமானுக்குதவிடுமே ! அவை உளவு
விழிகளுற்ற ஒற்றர் பணி உடைத்து
ஓசையின்றி உள்ளிறங்கி துப்பறியும்
சேனைகளில் தூயவைகளாயிருந்து ஒப்பரியோன் உயிர் காக்க உரிய பல்லுதவி செய்து
செப்பரியோன் சிரம் நோக்க சேவையினை செய்த வண்ணம் சாவு தீண்டா வழியமைத்து காவு
வாங்கா காலனுக்கு கால் நொடியும் வேலையின்றி யாவும் அவர் கடமையென்று இன்முகத்தால்
நன்று செய்து எப்பயனும் எதிர் நோக்காதிணக்கமுடன் வாழ்ந்திடுமே. உத்தமன் உடலுக்கு
ஊறு பல விளைவித்து உயிருக்கும் விலை வைத்து உண்மையின் வேருக்கு உருக்குலைக்கும்
உலை வைத்து ஊர் முழுக்க நிதியளித்து யாருக்கும் அஞ்சாமல் இறைமகனுக்கிடர் தந்தோர்
இயல்புகளை அறிந்திட்டு இடி முழங்கும் மின்னலென எம்மான் எழுந்த பின்னம் எமனார்
விதிப்பதெல்லாம் சிவனார் கைவிட்ட சிற்றினத்தின் ஊழ்வினையே. விழ்ந்திருக்கும் வேந்தனவன்
வீறு கொண்ட வேங்கையென பாரறிய எழும்போது வாய்மை கொன்று வாழ்ந்தவரின் வாழ்க்கை அன்று
வறுமையின் வாய்க்குணவாய் வந்து பசியாற்றிடுமே. செழுவாழ்வமைத்தவர்கள் செல்லா காசாகி
சிந்தும் கண்ணீரால் வெந்து வருந்திடவே தன்மானம் சுரண்டப்பட்டு தாழ்ந்தவராய்
அமர்ந்தவரும் மண்ணுரிமை மறுக்கப்பட்டு மன்னுயிரில் மலிந்தவரும் பொன்னுயிராய்
பொலிவு பெற்று புன்னகைப்பர் பூமியெங்கும். மாற்றான் பிறப்பெடுத்து மறுத்தவர்கள்
முதற்கொண்டு மாமனிதன் மாபிறப்பை மறித்தவர்கள் பலரென்று மரணமாலை அணிந்த வண்ணம்
மண்ணுறங்கப்போவாரே.
அழியா சிறகெடுத்த அடங்கா அசுவமொன்று அகிலம் ஆண்டோரின் ஆறாய்
ஒன்றடுத்து அலரும் எழுத்தாகி ஏழாய் சொல்லுடுத்து ஈற்றில் ஒன்றடுத்த ஒன்பான்
எழுத்தாகும். கேளாய் அது இங்கு யவனர் பொருள் பொதிந்து இதமாய் புகுந்தபடி புரியா
மொழியுடுத்து புண்ணெனும் கண்ணொன்றை புருவத்துள் வைத்தவரின் மென்பொருள் வடிவோடு
மெல்லவே வந்துறைய சொல்ல வேண்டுமெனில் சூட்சும அங்கமுற செம்மை திறமோங்க செங்கடல்
சிங்கத்தின் சீரிய திட்டத்தால் பங்கயப் பாவியரால் பரதம் முழுமையுமே இங்குற்ற
கற்பகமாம் எழிற் கணினி முதற்கொண்டு கையுறு பேழைக்குள் மெய்யுற வைத்ததனை
மேதினி மீதினிலே யாவரும் அறியாது அயர்ந்தே உறங்கிடினும் அஞ்சனை ஏமாற்ற ஆருக்கும்
இயலாது என்பதையறியாயோ. மீட்பன் தேசத்தை மீட்டு அங்கு வந்து ஆண்டிடும் அறிவு மிக்க
ஆணவமுற்றோரும் அன்பகம் விட்டோரும் அண்ணல் தேசத்தை ஆண்டிடும் அற்பருக்கு அறிவுக்
கொடையளித்து அனைத்து எதிரிகளின் எண்ண ஓட்டம் முதல் எல்லா நாட்டத்தையும்
இருந்திடும் இடமுறைந்து உறிஞ்சிடும் ஓநாய்கள் உற்றிடும் மாநிலத்துள் பெற்றிடும்
ஒற்றர்களின் பிறழா உளவு தனை இட்டது யாருமில்லை. எல்லாம் அவர் தாமே பொல்லாதவர்
தானே. எம்மான் எழுந்த பின்னம் இழந்திடும் இழிமக்கள் இழப்பதற்கெல்லை யில்லை.
எச்சமும் மிச்சமில்லை ! தாயார் தரமானால் நாயோர் பிறப்பதில்லை. நாயே தாயானால்
நன்மக்கள் உதிப்பதில்லை. வானே எமக்கிங்கு வார்த்தை மழை பொழிய வரத்தை தந்ததனால்
தேனே தீஞ்சுவையால் தெவிட்டா யாப்பமைத்தேன். மானே கேளாயோ மன்னவன் மடியாது மண்ணில்
மலர்வானே !
வரம்பிலா வானிற்கு வையம் மீது வாஞ்சை நின்றால் வாழுமுயிர்
அனைத்துமே வாய்மொழிந்து சபிக்கப்படும். அவ்வாழுமுயிர் வாழ்வதற்கு வரமருளும் வளி
வலுவாய் வெகுண்டெழுந்தால் வரையொத்த மரங்களையும் வந்தடித்தே சாய்த்து விடும்.
அக்காற்றே சினம் விடுத்து சீர்கரத்தால் அகம் குளிர அரவணைத்தால் தென்றலாய் வீசி
நிதம் தெவிட்டா நலம் பெருகும். பொறையிறை பூமகளோ பொல்லா வெகுளி கொண்டால் பூவுடலால்
தாங்கியதை தன் பொறி வாயால் கண்டபடி புண்ணாக்காய் தின்றிடுவாள். நீரது நீதியின்றி
நிறையவே கோபம் கொண்டால் நிலமதை நிலையாமல் அலை கொண்டே நிறைத்திடுமே. நெருப்புக்கு
நேரமொன்று நேர்த்தியாக நேர்ந்துவிட்டால் அது நிலம் அனைத்தும் உண்ட பின்னும்
நிறையவே தீனி கேட்க்கும். ஐம்பெரும் பூதத்துள் அடங்கா பூதமென்ற அனல் பூதமொன்று
மென்றால் அண்டத்தை உண்டுவிட அரை நொடியே போதுமென்று ஆன்றோர்கள் வாக்கு ஒன்று
அன்றிருந்து வழக்கிலுண்டு ! மலர் பூக்கும் காலமன்று மண்மகளின் மேனியெங்கும் அழல்
பூக்கும் காலமொன்று அலர்வது உறுதியென்று ஆலகண்டன் முகம் நினைந்து அருள் வாக்கு
தருவதென்று அறம்பாடி செய்யும் தொண்டை ஆருயிரே அறிந்து கொள்வாய். நாலிலக்க
கலியாண்டின் நடுமெய்யுள் நாரணன் நாமமுற்ற ஆழ்வார்கள் அமர்ந்திருக்க பாண்டவர்கள்
முன்னின்று பார்த்தபடி புன்னகைத்து பண்போடு வரவேற்க வருகின்ற காலடியில் வாழும்
சுவை அத்தனையும் வந்திருக்குமென்றறிக. வார்த்தைகளால் சொல்வதென்றால் வான்மயில்
வாகனத்தில் வலம்வரும் தேன் தமிழ் தேவன் கொண்ட திருமுகத்தின் எண்ணமென்று தெளிவாக
சொல்லிவிட்டேன். கிறுக்கர்களின் போர்க்களத்தில் கிணறிருக்கும் கிழ் திசையில் கேடு
கெட்டோர் செய்வினையால் நெருப்புயர்ந்து நிலம் முழுதும் நேருகின்ற நிலையறிந்து
நெஞ்சுருகி நெறியுரைப்பேன். வடக்கினிலும் வரப்பெரிய வரும் தீயின் தீமைகளை வந்த
பின்னர் உணருவது கொண்ட ஊழ்வினையென்று குறிப்பிட்ட ஆண்டொன்றை கொட்டி யான்
தீர்த்துவிட்டேன். மதிப்பீட்டிற்கேற்றபடி மலர்ந்திடுவாய் மன்னவனே. தொகுப்பீட்டை
கேட்டபடி தெளிந்திடுவாய் தென்னவனே. எழுப்புவார் இல்லெனினும் இயலுனக்கு நல்லுளதால்
எழுந்திடுவாய் எம்மானே !
எட்டாக்கனியாய் இருக்கின்ற எல்லாமும் எம்மான் வருகையின் பின்
எளியோர்கள் பெற்றிடவே எளிதாய் கிட்டிடுமே ! வற்றாது வளங்கொழிக்கும் வான்பொய்க்கா
வல்லமையால் தான் பொய்யாதமைவானே தகை சால் மன்னவனே. கொட்டும் மழையெனவே கொடைக்குவமை
குன்றாத கொற்றவனின் பொற்றாழை புண்ணியம் பெற்றது போல் போற்றிப் பாடிடுவேன்.
தொட்டதெல்லாம் துலங்கிடவே பெற்ற துயர் விலகிடவே பெரும் பேறு கிட்டிடுமே. ஒட்டு
மொத்த உலகெங்கும் உருக்குலைந்தோருடன் சிதைந்தோர் உளமாற நலம் பெற்று உய்ய நல்வழி
வருமே. ஒட்டா மன்னவனின் உறு நாடு உதிர்ந்தாலும் அதன் உள்ளுறைந்த உதிரமது உதிராது ஓர் நாளில் உடலோடு
உயிர்த்தெழுமே. அது உலகிற்கே கருநாளாய் உருவெடுக்க அலகிலா திறனோடு அழிப்பரியா
பலமோடு ஆர்ப்பரித்து அங்கெழும்முன் அங்கம் சிலிர்த்தபடி அறிவியலில் செழித்தபடி
செங்கடல் சிங்கமொன்று சீறியெழுந்தாலும் செல்லாது அதன் முன்னே. சற்றும் சளைக்காது
சாவிற்கும் அஞ்சாது சரவெடியாய் சண்டையெழும். கிட்டியதோர் தேசத்தை கேளாதோர் சொற்கேட்டு
கெட்டே போகும்படி கேடிழைக்கும் விதி சுமந்து பேராசைக்கிரையாக பித்தம் தலைக்கேறி
பெரும் பரப்பை பறிகொடுத்து பிழையுணர்ந்தும் பயனிலாது சிறுபரப்புள் சிக்கியதோர்
சீர்மரபின் வழித்தோன்றல் சிந்துகின்ற கண்ணிற்கு சில காலம் விடை கிடையா செயல்
வடிவம் தோல்வியுறும். செஞ்சோற்றுக் கடன் மறந்து சிந்த வைக்கும் சென்னீர்க்கு
வந்துறைந்த வல்லோர்கள் வாழ்நாள் பொறுப்பாவார் ! செம்மலினை இழுத்து வந்து
சிலுவையிலே அறைந்து கொன்ற வல்வினையால் வலுத்ததொரு பாவத்தால் பல்லாண்டு பீடித்து
பார் முழுக்க வியாபித்து பட்டப்பாடு கொஞ்சமில்லை. நற்பெயரே இல்லாமல் நாடெல்லாம்
நாதியின்றி காடெல்லாம் கதறியோடி கடை நாளில் கொற்றமுற்று குணங்குன்றி கொக்கரிப்பர்.
நடுங்கியழும் பிறன் வலியை நன்றி கொன்றோர் கருதாமல் கன்று காலிகளின் உணர்வை கடுகளவும்
உணராது கல் மனமும் உருகாது என்றளவும் இனநலத்தில் ஈடுபாடு கொண்டபடி ஈன்ற நாட்டை
மீட்டெடுத்து எதற்குமே உதவாதோர் வன்பாற்கண் வற்றல் நிலம் வாழ்வு பெற வளநாடாய்
மாற்றியதோர் வரலாற்றை மாற்றியதும் மனமெல்லாம் பகை வளர்த்து மானபங்கம் செய்திடவும்
பன்னாட்டை கையிலிட்டு பங்காளிக்குற்றோரின் பாதி நாட்டை கொள்ளையிட்டு
பழிவாங்கப்பட்டோரை கொலைக்களத்துள் இழுத்து வந்து குற்றுயிராக்கிடுவர் மோசேயின் வழி
வந்த முரண்பட்ட மேதைகளின் ஆணவம் அலைபாய அங்கிருந்து அத்துமீறி நிலம் பிடித்து நெறி
மறந்த நெஞ்சர்களை நிலைகுலைய செய்ய வரும் நிறையெல்லாம் பெருக்கியே நில்லாதுருக்கியே
நெடும்போர் வெடிக்கவே நிலமது சிவக்கவே நிமிர்ந்தெழுந்த வரையொன்று நேரிட்டு மோத
வரும். திருக்குமரன் எந்திரத்தை திருக்கொடியில் தாங்கினாலும் அணுக்கருவை சுமந்தபடி
அச்சுறுத்தி ஓங்கினாலும் மையக்கிழக்குற்ற மாமேதை நாட்டிற்கு மரண அடி கொடுக்க மார்தட்டி
வருமந்த மாமன்னன் வன்படையில் மற்றொன்றும் ஒன்றிணையும். அது உறு நாடாய் அணு சுமந்து
உறுமி வந்து ஒருங்கிணைந்து உருக்குக்கரம் பிணைத்துவர உலகப் போர் உச்சந்தொடும்.
அப்பெருநாடு யாதெனில் பெரும் பரப்பை பனியுடுத்த கொடுங்கரடி நடமாடும் கொற்றவன்
தேசமது துருவத்தால் வடக்குறைந்து தொன்று தொட்டே தோன்றினாலும் துட்டர்களின்
வழக்குடைத்து தொட்டிலிடும் சமத்துவத்தை தொட்டெழுப்பும் பொதுவுடமை தத்துவத்தால்
தரையாளும் நோக்குடனே தளரா வல்லரசாய் தழலேந்தி வந்திணைய வான் பரப்பில் தீ பரவி
வையகமே அச்சமுறும். அன்றங்கு மண்ணீன்ற மைந்தர்களின் மனம் குமுற நிலம் பிடுங்கி
நெறி தவறி அறம் சிதைத்தோரனைவருக்கும் அழிவுகளை அள்ளித்தரும் அரக்க நாட்டின் கொடி
கண்டேன். அதன் கொண்டையில் வெள்ளையுற கொந்தழிக்கும் கடல் வண்ணம் கொண்டுறைய மையம்
வரும். செங்குருதி நிறமுடன் செம்பாதம் அடியில் வர சிரம் தாழ்த்தா சினத்துடன் வரம்
வாங்கி வந்தது போல் வல்லூறாய் வட்டமிட்டு வலுப்பெறுமே வரம்பின்றி வான் படையை
குவித்திடுமே. அன்றந்த நாட்களிலே அரும் பரதம் அனைத்தையுமே அடியோடு பாழாக்கி
நிதியனைத்தும் வீணாக்கி நிற்பவனும் அறுமுனைகள் அணிந்ததொரு அரசுடனே அணி சேர்ந்து
அரக்ககுணம் பெற்றிருப்பான். தெக்கணத்து பூமி எங்கும் தீரர்களாய் இருப்பவரை திரளாய்
எதிர்ப்போரை அக்கணமே அவ்விடமே அடையாளம் கண்டபடி தினை என்று தெரிந்திருந்தும்
தெரிவு செய்து இன அழிப்பு கொள்வதிலே இணையிலாதோனென்று சொல்வேன். இருட்டுலகில்
இருந்தபடி படிப்பறிவே இல்லாமல் இருப்பறிவும் கொள்ளாதோர் இரக்கமிலான் மதம் கண்டு
இனம் கொண்டு மன்னீதி கையாண்டு மரணத்தை ரசித்தவனாய் மண்மாதா சபித்திடவே
கூற்றுவனுக்குணவாகும் குடக்குலகில் நட்புகொள்ள கூட்டணியமைத்தே குற்றங்களை புரிந்து
தோற்றிடும் தோள் கொண்டு சாய்ந்திடும் நிலை கண்டேன். சரித்திரம் காணாத சறுக்கலும்
சம்பவிக்கும். இதுகாறும் காணாத இடுக்கண் இங்கு வந்து எல்லையில்லா தொல்லை தரும் !
பரியோடும் பருப்பொருளும் பாரமேற்றி பலகாதம் விரைந்தோடும் கரியோடும் கருப்பொருளும்
காண வெகு நாளாகும். நரியாளும் நெறியற்ற நாடாளுமன்றங்களில் நஞ்சுறைந்த நெஞ்சோரை
படிக்க ஒரு பாடம் வரும். உறை கிணறே தழலுக்கு உணவானால் தருகின்ற கனியமுது
எவருக்கும் கிடையாமல் இன்மைக்குள் நிதி செல்லும். இயங்கும் மொத்த ஆலைகளும்
ஈன்றெடுக்கும் பொருளனைத்தும் எடுத்துச் செல்வார் எவருமின்றி ஒருங்கே குவிந்தபடி
ஓரிடத்தில் நிறைத்திருக்கும் கருங்காலி கயவர்களை காணலாம் அத்தருணம். சுருங்கா
பட்டினியும் சொல்லொண்ணா பசி பிணியும் ஒருங்கே இணைந்தபடி ஊர் முழுக்க நிறைந்த படி தயங்காது
தாக்கிடுமே. கனிமங்கள் கையாளப்படுகின்ற பொருள் எல்லாம் கரை புரண்டு தறிகெட்டு விலை
உயர்ந்து தரணிக்கும் கண் கசியும். உண்ணும் பொருளனைத்தும் உயர்ந்த இடம்
சென்றுவிட்டு விண்ணை தொடுகின்ற விளிம்பு வரை சென்றிருக்கும். கண்டதையும் கண்மூடி
கனிவின்றி உண்ணுகின்ற மஞ்சள் நதி மண்ணினத்தார் மலை கடந்து மண்பிடித்து மரணத்தை
கொடை செய்வார். தீவு ஒன்றை திருவுடலாய் தேர்ந்தெடுத்த தீயோர்கள் பரதத்தின் பாதத்தை
பந்தம் வீசி கொளுத்திடவே பதறியே தென்னிலமனைதிலும் தேவையின்றி பீதியுறும்.
அன்னிலத்தில் அகப்போர்கள் ஆங்காங்கே வெடித்தபடி அளவிலாது பிணம் குவிக்க மதப்பேய்
பிடித்தவரின் மமதைக்கு இரையாகி மண் சிவக்கும் காலம் மாண்டு மலர்கின்ற பொன்னிலமே
பொலிவு பெற்று புத்துயிர் பெறுவதெல்லாம் எம்மவன் எழுந்த பின்னம் ஈசனால்
இயன்றிடுமே. இந்நிலம் ஈடின்றி நன்னிலமாவதும் நாடுகளுக்கெல்லாம் வன்னிலமாதலும்
வானவர் வரம் கொண்டு வையத்தின் திலகத்தில் வைரமாய் ஒளிர்வதும் மெய்ப்பொருள் என்பதை
மீண்டும் யான் உரைக்கின்றேன் மேதினி அறியவே. மூன்று தலைமுறையாய் முறையற்று ஆண்டு
அனுபவிக்கும் அப்பனுக்கு பிள்ளை தப்பாது பிறந்திருக்கும் தயை விடுபட்டு இருக்கும்
தான்தோன்றித்தனமாக தரையாளும் குறுநிலத்தான் தமையனையும் கொலைபுரியும் முரட்டு
பிள்ளையொன்று முரண்பட்டு பிறந்திருக்கும். தோன்றும் மலர் கூட துளிர்க்க இயலாமல்
தொடரும் அடிமைத்தளை சுமந்தே நலிந்திருக்கும். அது இரண்டாம் பெருவெடிப்பில் இரண்டாய்
பிரிந்தெழுந்து எல்லாம் வல்லதொரு இரும்புத்திரை நாட்டின் அரும்பும் நட்பு கொண்டு
அணையாதிருந்த வண்ணம் விரும்பும் நேரத்தில் வெடிக்கும் மின்னலென விந்தை
கண்டிடுவீர். அதன் அங்கம் அணு நாட்டின் அரணாய் தெற்குடுத்து அணுவை ஏற்றிருக்கும்
சிங்கம் வீற்றிருக்கும் செங்கோடி கீழ்திசையில். வீழா வேந்தனுக்கு வெகுவாய்
தொலைந்திருந்தும் பாம்பை மதுவுக்குள் பதமாய் ஊற வைத்து பக்குவமாய் குடித்தும்
ஆயுள் முடிந்தாலும் அன்பால் நன்றி கூறும் நாயின் அங்கத்தை நன்றாய் உண்பவனின்
நாறும் பண்பாட்டை நாணிச் சொன்னபடி நானே நடுங்கிடுவேன். மானே கேளாயோ மானிடக் கொலை
செய்ய மனமே அஞ்சாதோன் எரிக்க விட்டுடுவான் எண்ணற்ற தேசங்களை விண்ணை முட்டி வரும்
விபரீத கொட்டைகளால் விரியும் அணுப்பரலை விளையவிட்டிருப்பான். அது விழுந்த
தேசங்களின் விதியை முடித்தபடி பரந்த பரப்பளவை பாய்ந்து அழித்திடுமே. வெள்ளை
மாடத்துள் வீற்ற வேந்தனொரு வேடம் தாங்கியவன் கொள்ளை வெறிகொண்டு கொதித்து எழுவது
அக்கொலைஞன் மீதென்று கொங்கை ஒன்றினையே கொண்ட அங்கத்தான் கூற்றினை கேட்டபடி
கூற்றுவன் குறித்ததனை கோடிட்டுக் காட்டி விட்டேன் கொற்றவன் அறிந்திடவே. மற்றது
எல்லாமும் மரணம் தின்ற பின்னம் மண்முகம் மலர்ந்திடுமே. மன்னர் மன்னனன்று மண்ணில்
அமர்ந்து கொண்டு விண்ணை நினைத்த வண்ணம் வேதனை கொண்டதுமே நாதனின் நன்னெஞ்சம்
நன்றாய் இரங்கிடுமே. சோதனை சில காலம் சொல்லொண்ணாது அமைந்திடினும் சாதனை பெருகுவதை
சரித்திரம் எழுதிடுமே. எழுபது ஆண்டுகளாய் எதிரியை ஓட்டியவன் எதிரியாய் மாறி அங்கு
இமயம் வடமிருக்கும் எதிரிகள் இருவருடன் இணையும் நண்பனாவான். எல்லாம் பெற்றபடி
இரக்கம் இல்லாதோர் இருவர் தாக்கிடுவர். அதில் ஒருவர் முகமதை யான் உற்று
நோக்கியதில் ஒளிரும் வண்ணத்தில் மூன்றாம்பிறையிருக்கும். பிறிதோன் கொடிதன்னில்
பெரிய உடுமீனின் பிள்ளைகள் மறை எண்ணில் பிரிந்து வலமிருக்கும். கொடுமை என்னவெனில்
குருதிக் கறைபடிந்த கொடிச்சீலை பொதிந்திருக்கும். கொடியவன் கொண்டிருக்கும் கொம்பை
சீவி விட்டு வம்பை விலைக்கு வாங்கும் வளர்பிறை திரையிருந்து வனங்களின் நிறம்
உடுக்கும். அன்று வடபுலம் போர் மூலம் வளங்களை இழந்திருக்கும். அண்ணலின் தேசத்தை
அணைத்த கைகளன்று அவ்விருவரின் பின்புலமாய் இணைந்து நிற்பதனை இறையோன் உணர்த்தி
விட்டான். கண்ணே அறிந்திடுக கதை அல்ல கருத்தென்று கண்ணை திறந்து வைத்த கதிர்க்கண்
ஈசனிடம் கண்ணீர் விட்டபடி காத்திட சொன்னேனே !
பாகம்.174.
நாற்றம் தவிர்ப்பது போல் நாசியை மூடி நீயும் நலத்தை பேணினாலும்
நாதன் மனம் கொதித்தால் நடுங்கும் நானிலமே ஒடுங்கும் ஒரு நொடியில் உலகம்
அணுவுக்குள் உறைந்து போய் விடுமே. கேட்டின் மகனெழுந்து கிட்டும் கொடுமைகளால் பட்டே
போவதற்கே பாழும் விதி அமையும். நாட்டின் வளமனைத்தும் நலிய வைத்தபடி வாழும்
நிலையற்று வலுக்கும் வறுமை மென்று வாய்க்கு உணவாக்கும். நாய்க்கும் கிடைக்காதோர்
நாதி வாராமல் நன்று செய்வதற்கே நதியை சுமப்பவனோ நான்முகன் எழுதியதோர் விதியை
திருத்திவிட்டு வேந்தனை எழுப்பிடுவான். நடுவிழி தீவளர்த்தோன் நாளும் புரிகின்ற திருவினைக்கெல்லையுண்டோ
! சிவனினும் சிறப்பான செம்மல் யாரிங்கு தன் மகன்தனை சூழ்ந்துள்ள மர்மம் ஆழ்ந்துள்ள
வினைதனை வேரறுத்து களைகளை கருவறுத்து களைய முற்பட்டு கண்ணீர் துடைத்திடுவான்.
நினைத்தால் பதபதைக்கும் நேரம் வரும் அன்று நாளும் துயருற்று பேய்க்கு உணவாகும் பிணங்கள்
குவிந்திடுமே. பிழையை உணர்ந்தபடி பிறவி முடித்தபடி சிறகை விரித்தபடி சிவனில்
கலந்திடுவாய். தருமம் விதைப்பதற்கு தலைவன் வரும்போது தரணி எதிர்த்தாலும் தலைகள்
தகர்ந்திடுமே தகராதிருக்கவெனில் தங்கம் அகத்துள்ளே தகதகவென ஒளிர மங்காதருளேற்று
மறுக்காதறம் காத்து மண்ணில் மறவாது மனத்தால் முயன்றிடுக. வாயில் ஒன்பதையே வலுவாய்
அடைத்தபடி வாய் மேல் அமுதத்தை வரத்தி ருசித்தபடி புருவப் பூட்டினையே பூப்போல்
திறந்தபடி மலரும் மரையிதழ்களாயிரம் மலர்ந்தபடி மணிமுடி ஒன்றணிவாய். மருளில் வீழாது
மறுமையும் கொள்ளாது பருவப் பயிர் செய்து பரமனடி சேர்ந்து துருவனுக்கிணையாக
தோற்காதமைவாயே !
எல்லா ஊடகமும் இழியோர் குழுமத்தின் பொல்லாக் கைவிரலால் பொழுதும்
இயங்கிடுமே. பொய்யர் கண்ணொன்று புருவம் கீழுறையும் புண்ணாய் போனதனை பூவிதழ்
மிக்கோரும் பொறியிதழ் பெற்றோரும் போர்க்களம் புகுவோர் மேல் புகாரெழுப்பாரே.
சொல்லும் நாக்குகளை சுருட்டி வைத்தபடி உள்ளும் நஞ்சிணையாய் புறமும் வஞ்சனையாய்
கொல்லும் அறமெல்லாம் கொள்ளும் கபடமுறை உள்ளம் ஊமையாக ஊனமாவாரே. உலகை ஆளுகின்ற
இருளைப் போர்த்தியதோர் கேட்டின் மகனுக்கு கிடைத்த இல்லமது பரத பாகையெனும் இமயம்
குடக்கிருந்து எடுத்த தூரத்தால் கொடுத்த காதத்தை குறையாதுரைப்பதென்றால் அக்கொடியோர் கொடி
காணும் குற்ற தேசத்தின் தொலைவின் தொகை கேளாய். அது இரண்டை அடுத்தமைந்து இணையும்
முப்பதென எம்மானறிந்திடவே எதிரியின் கைத்தலமே பொதிந்த புதருக்குள் புகுந்து உழவு
செய்து ஒழிந்த ஓநாயின் உதிரம் சொட்டும்படி உதடு உதிர்த்துவிட்ட உளவுத்தகவல்களை
உனக்குத் தருகின்றேன். குன்றம் மீதெழுந்து குன்றாதருள் பொழியும் பொற்றம்
போர்த்தியதோர் பிதாவினாலயத்தை பெற்ற பின்பும் கூட பேயாய் பழிவாங்கும் குற்றம்
புரிவோரை குறிக்கும் சொல்லமைக்க கொள்ளும் மொழி குறித்தேன். அது அற்ற உடல் கொண்டு
அடுக்கியெடுத்தால்தான் வாக்காய் உயிர்த்தபடி நாக்கில் நடமாடும் நந்த வனமாகி
நன்றாய் பேச வரும் பரங்கியர் பயிரிட்டு பரந்த மொழியென்று பரமன் சொன்னதனை பதமாய்
சொல்வதென்றால் இருபத்தாறெழுத்துள் எழுந்த முதல்வனொரு ஒன்பான் மகனாவான். உடனே
ஒட்டிவந்து உடலை தழுவுகின்ற உமையாள் குமரனவன் உற்ற கரங்களையே பெற்ற எண்ணிக்கை
பின்னும் இரட்டையராய் பின்னி பிணைந்திடவே பின்னே ஒட்டுவது பிறக்கும் உயிரையெலாம்
மயக்கும் இசைக்குள்ளே மறைந்த எழுத்துகளை மணக்க அழைத்து வந்து வகுத்தால் மூன்றுடனே
வருமெண் வாக்காகும். அதை முத்தமிட்டபடி மொழிய வரும் எழுத்து முன்னே அமைந்ததொரு
அண்ணன் பத்தடுத்து அணைக்கும் மூன்றாக அங்கம் கொண்டிருப்பான். மொத்தம் பத்துடுத்து
முத்தாய் பதியமிட இன்னும் ஐவருண்டு எஞ்சிய அனைவரையும் இதமாய் அழைத்து வந்து
இடத்திலமர்த்திடுவாய் என்ற நம்பிக்கை எமக்கே மிக்க உண்டு. அரவை அணிந்தபடி அரணாய்
இருந்தபடி இமயமுடி தாங்கி இனிய குமரி வரை பாதம் பதித்தோனே உனை பாதுகாப்பானே.
அண்ணல் அமர்ந்திருக்கும் அருகாமையிடம் குடக்கே ஐயாயிரம்
அடியளந்தால் அவ்விடம் அதி சிறக்கும். பின்னும் ஓருண்மை பிறரறிய பகரவந்தேன்.
இன்னும் எளிமையாக எடுத்தியம்ப வேண்டுமெனில் மண்ணில் பெருமதமாய் மன்னிப்பை
உரித்தாக்கும் மன்னவனே வந்திறங்கி பாவத்தின் ஊதியத்தை பாடுபட்டு சுமைதாங்கும்
பண்பாளன் அறந்தாங்கி ஆண்டவனாய் உயிர்த்தெழுந்த அடையாளச் சிலுவையொன்றின் அழகெழில்
காட்சியுண்டு. உச்சி வகுக்காது ஒரு தலையாய் சிறுமலை குடக்கிருக்க அதன் சிங்காரம்
அறிவதெனில் செந்தூரத் திலகமிட்ட திரிசூலி வாயில் முதல் ஆயிரம் கோல் நடந்து அடியேன்
அகம் அளந்து அப்படித்தான் கணக்கிட்டேன். மரியாள் மடி ஈன்ற மடியா மீட்பனது மாசற்ற
மதிமுகம் முன் யாசிப்போர்க்கிடமளித்து இருப்பதனால் மனம் இனிக்கும் இடம் அளந்த
அடிகளெல்லாம் இசைத் தமிழ் பா சுரக்கும் திண்ணம் அதுயென்றும் தெவிட்டா தேன்மணக்குமிதை
தெரிய வந்தோர் ஆவலுக்கும் தெரியாதார் மோதலுக்கும் அடியேன் பொறுப்பல்ல
அறிந்திடுவாய் ஆருயிரே !
இடும்பையிலா எதிர்காலம் இனிமையொடு வளம் சேர்க்க எம்மான் ஒளிர்ந்த
பின்னே யாமுதிர்த்த வாக்கெல்லாம் ஈசனவன் வாக்குக்கு இணையான வாக்கெனவே அணையா
விளக்கேற்றும் அனைத்துலக மொழிகளாலும் ஆதரிக்கப்படுமென்றும் அலகிலா அழகுடனே
அலங்கரிக்கப்படுமென்றும் இசைத்தமிழால் இவையெல்லாம் எடுத்தியம்பப்படுமென்றும்
இறையோனுக்கிடமிருந்தே எமக்குற்ற ஊழினையே ஒன்றுவிடாதுரைத்தபடி உருவத்திருமேனியுடை
உமையாளே உறுதி தந்தாள். உலகமே கடன் பட்டு ஒற்றுமைக்கு உடன்பட்டும் அகிலமே ஓர்நாள்
அமைதியொடு அறம் பேணும் அன்னாளே நன்னாளாய் அவனிக்கோர் பொன்னாளாய் புதியதோர்
உலகமுற்று போர்ப்பூசல் கலகமற்று புதையல் பெற்று புன்னகைக்கும்
பூவிதழ் போல் மனங்களிக்கும்
விடியல் வந்து விளைந்திடவே
வெற்றிச்சங்கம் முழங்கிடுமே !
உடுமீன் உருளி நன்னாளில் உதித்தோனை உலகினை உதட்டுக்குள் ஒளித்து
வைத்தோனை உண்ணத்தகாததையே உண்டு களிக்கும் இருளிகளெவருமறியாரே. இன்னமும் அறியாயோ
இம்மை முழுமைக்கும் ஈடறு அறிவொடு ஆடகம் அள்ளித்தரும் அன்னையரிருவரும் அமரும்
அழகெழில் கமலம் காண கண் படைத்தேனவன் கைத்தலம் மோப்பக்குழையும் முகுந்தன்
முளரிக்கன்னம் சிவக்குமக்காலம் கனிய கருணை செய் காலகாலனெனும் கதிர் கண்ணே !
கதிர்காமன் கற்கிக்கு கடன்பட்டு வந்தோர்கள் களத்துள்ளே கால் வைக்க, நெடுமாறன்
முகங்கண்ட நேரத்தில் நெடுங்கூட்டம் நெருப்பெனவே நிலையாமை ஒற்றேதான் நீடூழி
நிலைக்குமென நினைப்போர்கள் நெருங்கிவர, நெஞ்சுக்கு நீதியன்றி நீதிக்கு குரல்
கொடுப்போர் நெஞ்சோங்க நிமிர்ந்து நிற்க, வினையெல்லாம் வேரறுக்க தலை தூக்கும்
தாளாளன் தலை கொய்ய தமையமைத்து தரை படர்ந்த தறுதலைகள் அனைவருமே விலை மாதர்
வெளியிட்ட மலம் உண்ணும் பன்றிகளே. மனம் கொன்று மாண்பற்று மரணத்தின் விலைபேசி வலம்
வந்த வஞ்சகனின் வண்டியொன்றின் முகவரியோ தமிழகத்தின் பெயர் தாங்கி தழுவி வரும்
ஈரெண்ணில் இடங்கொடுத்த எழுவருக்கும் இல்லாள்கள் நான்காகும். உடனீன்ற உலகாண்டோர்
உயிரெழுத்து முதலாகி ஒட்டிவரும் ஒன்றுவிட்ட உடன்பிறப்போ ஈரெழுத்தை சீரமைக்கும்
சிறப்புக்கு சிரசாகும். அடுத்துவரும் நாலிலக்கம் அமைவது தான் குறிப்பாகும். அறு
சுவையை தொட்டுவரும் அச்சு வண்டி சக்கரத்தை அணைத்துவரும் அறுபடையை அரவணைக்கும்
கோள்களையே உடுத்து வரும் ஓடு தன்னை உற்றுயான் நோக்கியதில் உள்ளிருக்கும்
உடும்புதனை ஓசையின்றி புதைக்காமல் ஊர் அறிய விதைத்திடுவேன். உறங்கா உடலெடுத்து ஒரு
மூன்று கடலுடுத்து ஒன்றிணையும் இடமடுத்த உமையாளின் வடிவெடுக்கும் ஊருக்கு ஒரு
காதம் குடக்கு வரின் திருமார்பன் பதியொன்று தெரிந்திருக்கும் தெளிவுடனே
திருக்குடும்பம் இருப்பதனை சிலுவையர்கள் தெரிந்திடும்முன் சிவனடியாரறிவதன்முன்
செவ்வேளங்கிருப்பதாக சிவகாமி உணர்த்தியதை சேதி சொல்லி உணர்த்திவிட்டேன். இயங்கா
வரமுற்று இருக்குமவன் இருப்பிடத்தை இரகசியமாய் அறிந்ததொரு இரக்கமற்ற அரக்கனுக்கு
இடுபெயரோ திருமாலொரு பிறப்பில் திருடனென்ற பெயரெடுத்து விழியன் என்றழைக்கும்படி
விதிப்பயன் பெற்றிருப்பான். விரியன் விடமுடைய வெறியன் மதம் பூண்டு வெற்றிக்குமரனென
வீழ்ந்த வடமொழியால் வெற்று வேட்டெனவே தொற்றும் நோய்தன்னை தொழுது பெயரெடுத்து
தொன்மைத் தமிழ் கெடுத்து இம்மையுற்றிருப்பான். முற்றும் வெறுமண்ணாய் மூளை
களிமண்ணாய் கிட்டும் விருந்தாளி கிடந்து வேரூன்ற கிடைத்த கேடுகெட்ட
கீழ்மகளுடனிணைந்து புணர்ந்து புறம் விட்ட பொல்லா மகன்களுமே பொலிந்து வருவதுடன்
கொல்லும் பாவியரும் கூடித் திரிகின்ற பட்டி தொட்டியெங்கும் பங்கயக் கொடி தாங்கும்
பன்றிக் குட்டிகளை பார்த்த மாத்திரத்தில் பாரார் சபித்திடவே நாளும் கிழமையுமாய்
நானே கொதித்தபடி சிவனை அழைப்பது போல் நமனை அழைப்பேனே !
கலைமகள் கண்டெடுத்தும் கருவங்கொள்ளாதோன் மலைமகள் மார்பருந்தி
மறப்பால் தேனருந்தி அலைமகளை முன்னிறுத்தி அழலாய் விரிந்த பின்னம் நிலமகள்
வளம்பெற்று நிம்மதிப்பெருமூச்சமைப்பாள். நீசருக்கு அஞ்சி நிதம் நெருக்கடியால்
உருக்குலைந்த நீதிமான் வீச்சனைத்தும் நீடுவாழ பொலிவடையும். விலையிலா உண்மைக்கு
வேரது வலுப்பெறவே தலையிலா வழக்கனைத்தும் தானாக தலையெடுத்து தருமத்தை முடிசூட்டும்.
நிலைகெட்ட மன்றங்கள் அகம் அழுகிப் போனாலும் அதை நலமடைய வைப்பதற்கு நன் மருந்தை
அவன் கொடுக்க நாடியதை சிவன் கொடுப்பான். துறைகெட்டு நாறினாலும் தூய்மையற்றோர்
ஊறினாலும் தரை தகர்த்து தூர்வாரி தரம் காக்கும் தலைவனுக்கு இனமேது மொழியேது
எல்லாமும் அவனுயிராய் இருப்பதெல்லாம் அவனுறவாய் இல்லாதோர் இல்லாமல் பொல்லாதோர்
வெல்லாமல் பூமிக்கு உரமாக்கும் வல்லாண்மை கொண்டவனே வாழ்க வாழ்க என்று சொல்லி
வானவரும் வாழ்த்திடும் அவ்வாய்மொழியை கேட்டவண்ணம் யானும் இன்பமுற எல்லாமே
நன்கமையும். நிலைகெட்டு அலைபாயும் நீரோட்டம் போலமையும் அயல்நாட்டு அகதிகளின்
அல்லலுக்கு தீர்வமைக்கும் ஆற்றலெல்லாம் அவனுக்கே சிவனளித்து அருளியதோர்
சிறப்பனைத்தும் அடியேன் யானறிவேன். அன்னியராய் இருந்தாலும் அவர் சிந்தும் கண்ணீரை
தன்னுயிர் உறவெனவே தயங்காது துடைத்திடவே அறம் நாடும் அனைத்துலகும் அவனாலே
தளைத்தோஙகும். நிறவெறியை மூட்டுகின்ற நேரெதிர் கயவர்களால் இனக்குருதி கொட்டுகின்ற
இடரனைத்தும் விடை பெறவே ஒரு குடைகீழ் உலகுறைய உலகாள்வான் உதித்த பின்னம்
உயிர் பறித்த போர்க்களத்தில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து கனவுகளை சிதைத்து
சென்ற கணைகளையே கண்டழுதோர் கண்ணீரை கனிவின் வடிவுடனே அண்டங்காப்பவனாய் அன்புக்கரம்
நீட்டியவன் அறவே துடைத்திடவே அலையாழி நடுவினிலே அரவம் மேல் அறிதுயிலும்
அரிபரந்தாமனுக்கு அடியேன் முதற்கொண்டு அனைத்துலகும் நன்றி கூறும்.
பாகம் 175:
மண்ணில் தாடகை மறுபடியும் முளைத்திடுவாள். மாசுறு அகம் படைத்து
மாந்தரின் மனமுடைத்து மரணக்கொடையளித்து வீழ்ந்ததன் காரணத்தை வினவிட விடையளிப்பேன்.
புண்ணீர் புசித்தவளோ புலிமகன் புகழ் நிலத்தில் புஞ்சை நஞ்சை என புறவழி புகுந்தபடி
புவியினை நிறைத்தபடி பொல்லார் துணையோடு பொன்மேனியமைத்திருந்தும் புகழ்மேனியடையாது
பன்னகம் அணிந்தோனின் பாவச்சின்னமென கற்கி மீதேதும் கருணை கொள்ளாது கடும் சினம்
நில்லாது பொறுமை பூணாது பொற்கிழி பரிசாக பொழிந்த காரணத்தால் பூதங்களின் நாதநாதன்
எழும் பகைக்கு எதிராக ஏராளம் வேட்டு வைப்பான். எழும்பாது எதிரிகளை இன்னலுற செய்த
வண்ணம் விரும்பாத விருந்து வைத்து வியாதிகளை உடல் திணித்து வேரோடு
சாய்த்திருப்பான். காப்பதற்கு
படையிருந்தும் கண்கலங்கி அவளழிவாள்
கதிகலங்கி தினமழுவாள். கைக்கு எட்டும் அரியணையும் கண்டு வந்த அவள் கனவும் கருக்கலைந்து
போவதற்கு தேவாதி தேவர்களே திகைக்கின்ற சாபமுடன் திரும்பி வரும் பெரும் பாவம்.
தேவையின்றி தீ வளர்த்து திருவினைகள் செய்தாலும் திருத்துறை பூண்டிருக்கும்
தேவியரும் கொதித்துடனே எழுந்ததுதான் தீவினையை கையாண்ட தீயவள் திருமகனின் தேரொப்ப
தலை கொய்ய தெருமகளின் மகவுகளை தினம் ஏவி தொடுத்ததுதான் என்றறிவாய் கண்மணியே !
அண்ணல் அனல் குஞ்சாய் மண்ணில் எழும் முன்னர் மறத்தமிழர் மாநிலத்தில் மணிவண்ணன்
துயிலுகின்ற நதிக்கரைக்கு சோற்றால் கரையமைத்த சோழப்பேரரசில் புண்ணீர் ஒழுக்கியே
பூதவுடல் ஆனவனின் பிணத்திற்கு காரணவர் அனைவருமே பின்னலுள் பங்கு கொண்ட
பாதகமுற்றோரும் எம்மான் கதை முடிக்க ஏராளம் குழியமைத்தும் எல்லாம் வீணாக ஈவிலா
பிடாரியும் இறையோனுக்கஞ்சியே இயலாமை ஏனென்று எல்லையோர மலைநிலத்தில் இருக்கும்
சூனியரை இருப்பிடத்திற்கழைத்து உண்மையறிந்ததுமே உளம் குமுறி துடித்திடுவாள்.
உந்திக்கமலம் உடையோனின் சிரம் அறுக்க ஓயாது பாடுபட்டும் ஒன்றும் நடவாது உடைந்து
போனதற்கு நந்தி காவல் காக்கும் நாதனன்றோ காரணமாய் சிந்தையது சொல்லிடுமே.
மைதிலியின் மணாளன் பெயருடனே மாபெரும் வெற்றியது இணைந்திருக்கும் அரசியலான் அடையாளம்
தெரியாமல் ஆணிவேரை அறுத்தவரை அனுப்பி வைத்து அண்ணலின் கதை முடிக்க ஆர்ப்பரித்த
கூட்டத்தை ஆதிசிவன் காட்டி விட்டான். பாற்கடலான் பகை வளர்த்த பாதகி பாழும்
அப்பிறப்பில் பணியாது போனதனால் மாதவன் மாநிலத்தில் மறுமை தரிப்பாளே. வெற்றி
குவித்தும் வேந்தை வீழ்த்தும் வலுவிலாள் பெற்ற நிழலொரு உண்டி பெருத்தோளின் உறை
வாளிவளாக உரிமைக்குரலமைத்து வலக்கையமைத்தபடி ஒண்ட வந்தவளே உயிர் தோழியானாலும்
உருக்குலைந்து போவாளே. துருவம் வெல்வோனை தொலைக்க திட்டமிட்டும் கருமம்
வீழ்ச்சியுறும் கற்கியின் ஆட்சி வரும் கதிரவன் கை விரல்கள் காரிருள் துகிலனைத்தும்
கழற்றியெடுத்ததுமே காரிகை யாரென்று காலையில் தெரிந்துவிடும் காத்திடுக கண்மணியே !
பொல்லா பண்பேற்கும் புலாலுண்போர் பொறிவிழிப் பலனறியா புலனின்பம்
கொள்வோர் இம்மைக்குள் இன்னலன்றி எழுபிறப்பும் இழிபிறப்பாய் இழுத்துச் செல்லும் ஊழ்
வினையே.
ஊனுண்ணும்
உலகெல்லாம் உருக்குலைந்து போகுமென்று உமையொரு பாகன் சொல்ல உளம் நெகிழ்ந்த உமையாளோ
உடனே குறுக்கிட்டு உலகுடையோனிடம் கேட்டாள். பிள்ளைக்கறி உண்டு பெருந்தவறு
செய்வதினும் கொடும் பிழை ஏதென்று கூறிடுவாய் கொற்றவனே என்றவள் குறிப்பிடவே குற்ற
உணர்வாலே கூனிக்குறுகியெந்தன் கொன்றை வேந்தன் நின்ற கோலத்தை நேரிட்டு யான் கண்டு
நிலையாமை அறிவுறுத்தும் நெறி கூறும் ரகசியம் கேள். பிஞ்சு கனியமுதை பெற்றெடுக்கும்
வலியுணர்ந்த பஞ்சமி பரிபூரணி பகர்ந்த வார்த்தைக்கு நஞ்சை நலங்காக்க நாடி உண்டவனோ
நாதி ஏதுமின்றி நாணி நின்றானே. ஒன்றீன்று புறந்தரவே உயிர்போகும் வலியெடுக்க
உலகீன்ற உத்தமியோ உணர்ச்சியற்றுப் போவாளோ ! கன்றுகாலி முதற்கொண்டு
காணுமுயிரனைத்தையுமே படைத்தியக்கும் பண்பியலாள் பங்கயப் பாதம் போற்றி பாடிட பேறு
பெற்றேன் பாராயோ மன்னவனே.
முன்னம் பிறப்பெடுத்த மோகனப் புன்னகையோன் இன்னும் ஏராளம் இணையிலா
பிறப்பெடுப்பான் என்னும் உண்மையினை ஏற்றிடுவாய் மன்னுயிரே. சண்ணம் மலர்முகையாய்
சந்தணமேனியுமே சுண்ணம் மணம் வீசி சுற்றும் பரப்பிடுமே. கன்னம் செங்கமலம் கைத்தலமோ
அக்கமலம் கதிரவனே விழியாகும். கன்னியரை மயங்கவைத்து காமப்பொறிவைத்து
காலச்சிறையாக்கும் கள்வனிவனென்றும் கலிகாலம் இதுவென்றும் இன்றும் எச்சரிப்போர்
இவனருகே ஏராளம் இகழ்ந்த வண்ணமிருந்தாலும் இணையற்ற நேர்மைக்கே என்றென்றும்
இடங்கொடுத்து ஈசனது நெஞ்சத்தில் இவனே இடம்பிடிப்பான். எம்மான் குறித்த வண்ணம்
ஏராளம் உண்மையினை இன்னும் சொல்வதென்றால் இயம்பிடுவேன் கேளாயோ ! அன்றோர் அரும்
பிறப்பில் ஆற்பரிக்கும் ஆறொன்றின் அழகு கரையமர்ந்து கழைக்குழல் ஊதியதால் கன்னல் சுவை
பெருத்து காதலியும் கூடியதால் காட்சியுற்ற தோழனது தொழுவாய் உதிர்த்துவிட்ட
தொல்சாபமொன்று வாட்டும் தோல்வியுற்று வாழ்க்கையில் இணையாது இருவரையும்
பிரித்துவிடும். அங்கு அலர்ந்ததொரு அல்லியிதழ் உடையாள் அழகுத்தமிழ் நடையாள் தன்னை
முழுமையுமே தயங்கா கொடையெனவே தந்து காதல் செய்த அந்த அமுதமகள் ஆயுள் அடங்கும் போது
அண்ணல் மடிமீது அவளோ தலைவைத்து இறுதி இசை கேட்டு இருந்த மூச்சடங்கி இன்னுயிர்
நீத்ததுமே நெஞ்சம் உருகிடவே நின்று கதறியவன் நிலையை என் சொல்வேன். அந்த நேரிழையாள்
ஆரென்றறிந்திடவே ஆர்வம் அதிகரிக்கும். முத்துநகையுடனே முளரி மீதமர்ந்து செல்வம்
பொழிபவளாய் இல்லம் முதற்கொண்டு எல்லா உயிர்களுக்கும் இரக்கம் மிகக்கொண்டு
அன்னமிடுபவளே அடங்கிப்போன போது
அமுத இசை பொழிந்த அம்மன்னன்
கைத்தலத்தை மணந்த குழலினையே சின்னா பின்னமாக்கி சிதைத்தெறிந்தானே. இன்றும்
இப்பிறப்பில் இயலான் குழலூத இடையூறு பெற்றிருப்பான். எம்மான் சாபமுற்று இருந்த
வினை கடந்தும் இம்மை வினையறுத்து இவளை துணையாக்கும் பிறவி இணை சேரும் கணமே அது
மாறி கைக்குழல் உயிர்ப்பேற்று கற்கண்டாக்கிடவே கயல்விழி
வந்தமைவாள் காலம் பொய்க்காது காத்திடு மன்னவனே !
காவல் பூனைகளுள் கனக காரிகையர் ஈன்ற பொன்மாந்தர் இருக்கும்
போழ்தினிலும் காசிற்கடிபணிந்து கற்பு நெறியிழந்து மானமிழந்தவரே மலங்கழித்து வந்த
மாசின் மகவுகளோ கடின மனங்கொண்ட கயமை இனம் சேர்ந்து கற்கி குடியிருந்து கடந்து
போயிருந்த கதவு இலக்கம் கண்டு கடமையென்ற பேரில் குடைக்கு கூலி பெற்ற குடிசை எல்லாமும் தலைக்கு
சீவுகின்ற தகர சீப்பினைப்போல் சலித்தும் பயனின்றி எடுத்த கருமமது இன்மை சேர்த்ததன்
மேல் இடப வாகனனே எண்ணி நகைத்ததனை யானும் ரசித்தபடி என்னுள் இயம்பியதை இங்கு
தருகின்றேன். பொற்றம் நாடானின் புண்ணிய கோடியினை முற்றுமுணர்ந்தவனே
முக்கண்ணனொருவனென கொற்றவையுமே கூப்பி கரங்குவித்து குனியும் கொற்றவனோ
குற்றமுற்றவனாய் குணங்கெட்டு திரிந்திருப்பான் ? மடமை திலகங்கள் மமதை கொண்டபடி
முற்றும் துழாவியே முதுகை வளைத்திருப்பர். வினைக்கு விருந்து வைத்து வேடம்
தாங்கியவர் விரைந்து அழைத்ததனால் முளைத்த மூடருக்கு முடிந்த முடிவுரையை முகுந்தன்
எழுதிடுவான். முனைந்து வந்த வண்ணம் முக்கண்ணனுடன் முப்புரமுமே இணங்கி துணையிருக்க
வணங்கி யானென்றும் வாழ்த்தி வாக்குரைப்பேன்.
குருதி கொட்டும் வண்ணத்திற் கொந்தளிக்கும் கடலடுத்த கோன் நகருள்
குடிபுகுந்த ஓநாய்கள் கொடிமை பல புரிவதனை நாதழுக்க நானுரைப்பேன். நாட்டுரிமை
கொண்டோர்க்கு நாயோர் கொளுத்திப்போடும் தீப்பிழம்பு கொட்டையொன்று தின்ன வந்து திணறி
நின்று குவலயமே கூர்நோக்கும் கோபுரத்தின் கூரை தன்னை குறி வைத்து தகர்த்து
விடும். அது பங்காளி மூவருக்கும் பத்திரமாய் அமைந்தயிடம் ஈசனின் மகனமர்ந்து
இறையோனை நினைத்துணர்ந்து இலக்கணம் வகுத்ததொரு வரலாற்றுத்திருத்தலம்
வேய்ந்திருக்கும் பொன்மகுடம் கீழரங்கில் வளர்பிறையின் வகையறிந்தோர் வந்தமர்ந்து
தொழுகையுறும் அதன் தொகையோ மூன்றுள் ஒன்றாகும். முரண்பட்டோர் முடமாக்கும் ஆலயத்தின்
முற்போக்கு பாதகத்தை பாவியர்கள் படுகொலைகள் பாதையிட பெரும்போரே உருவெடுத்து
பிரபஞ்சம் பிளவுபட்டு கொடும் பேய்கள் கொண்டாடும் குவலயமே திண்டாடும். இடும்பைக்கு
எவரேனும் இவ்வளவு விலை கொடுத்து இரக்கமின்றி வாங்குவாரோ ! எதிர்வினைதான்
என்னவென்று எள்ளளவும் அறியாது இழிமடமை புரிவதுடன் தறிகெட்டு ஆடுபவர் தலை மறந்து
செருக்குற்றும் விழி ஒன்றை புருவங்கீழ் விதையாக கொண்டிருக்கும் குறியொன்றை
கொண்டதொரு குடியொன்று குறிதவறாதெய்ததற்கு கொற்றப்படை முடுக்கி கொற்றவர்கள்
கொதித்தெழுந்து குவிந்ததனை கூறவைத்த கூத்தனவன் சுழுமுனைச் சுடரெரிய சூரியவிழி
திறக்க காரணவான் அன்னவர்க்கே கைகூப்பி நன்றி சொல்வேன் கண்மணியே அறியாயோ !
பாகம் 176.
அண்ணலை அழித்திடுவேன் அடையாளம் ஏதுமின்றி திண்ணமாய் ஒழித்திடுவேன்
தீயிட்டு கொளுத்திடுவேன் என்றே சூழுரைத்து ஈரமிலா நெஞ்சார் தேர்ந்தெடுத்த
நேர்த்தியிலா ஆடுகளம் அமைத்த அனைவருமே அல்லலுறும் நோயுற்று காயம் சாய்ந்துவீழும்
கதியுற்று கதி கலங்கி போவதுடன் கண்ணீர் கடலுள் கதறியே மூழ்கிடுவர். விதி யாரை
விட்டு வைத்து விரும்பியதை விளையவிட்டு கனவுகளை கனிய வைத்து கனகம் மீது
துயிலவைத்து காலனின் காலுடைத்து கயவர்கட்கு கைகொடுத்து கடமையோடு உதவியதாய் காவியம்
ஏதும் உண்டோ ! வன்கொடியோர் வசந்தமுற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி வகுத்து
கொடுப்பதென்று வாக்குறுதி தருபவர் யார் ? காணுமொரு பெயர் முன்னே காஞ்சன
திருமுடியும் காதலியின் பெயர் பின்னே கண்ணன் வரும் கருமனத்தான் நரியுடனே உறவு
வைத்து நன்றாய் ஊளையிட்டும் கதிர்மணிகள் குவித்து வந்த களஞ்சியச் சிறப்புமிக்க
வளவன் தேசத்தில் வந்துதித்த தாடகையும் கொங்கில் மலை திருடி குறவர்களின் நிலம்
திருடி எங்கும் ஈசனுக்கு எண்ணற்ற இறைபதியை எழுப்பிய இழியோனும் இன்னும் பல பேரும்
எதிரிகளாய் எழுந்திருந்தும் எம்மான் இழிமயிரை என்றளவும் தொட இயலாதுமையாள் உடல்
காத்து உலகுடையான் உயிர் காக்கும் உறுதிமொழி யான் தருவேன்.
புலால் உண்ணியினும் பொல்லான் உலகில் உண்டாமவன் விடா வெறியோடு
வேற்றுமை விதை விதைத்து வீணாய் தசை வளர்த்து வாழும் வேளையிலே வளமோடிருந்தாலும்
சாதி பேதம் வைத்து சண்டை மூட்டி விட்டு சாற்றைக் குடிக்கின்ற ஓநாய் போல் புகுந்து
உயிரின் மதிப்பரியாதுறவை கெடுப்போனே உயர் குடி அந்தணனாய் உலகம் அளந்தோனின் உடலை
தழுவிடினும் உயிரது பிரிந்த பின்னர் நரகம் தான் அவனை நன்றாய் கௌவிவிடும். அறியா
அறிவிலியே ஆணவம் கொள்ளாதே ! ஆடும் அரக்கியெல்லாம் அடி மாடாகி அழுது புலம்புவதை
அறிந்தும் திருந்தாமல் அடங்க மறுப்பதேனோ ? அம்மை அப்பனுமே அனைத்து உயிர்களிலும்
அணுவாய் குடியிருக்க உண்மை அறியாமல் உள்ளம் தெளியாமல் ஒழிந்து போகாதே ! சிவனார்
குடியிருக்கும் செவ்வுடல் சிதைத்த படி உயிர்வதை செய்வதையே உற்ற பணியாக உள்ளம்
நாடலாமோ ? உடலது ஊனமுற்றால் ஊன்றுகோல் உதவும். உள்ளம் ஊனமுற்றால் உய்ய
வழியுண்டோ ! பொய்யை மதங்களெலாம் புதிராய் அமைத்தாலும் மையக் கருவாக மனிதம்
மேம்படுமே. மெய்தான் அடங்கும் முன்னம் மெய்ப்பொருள் அறிவதொன்றே வையம்விட்ட
பின்னும் வானில் வாழவைக்கும் !
அண்ணல் கடன் பட்ட அந்த காலமொன்று அடியேன் கண் முன்னே வந்து போவதனை
வாக்கின் வடிவத்தில் வார்த்து உதவிடவே தாயே அருளிடுவாய் தமிழே உதவிடுவாய். ஐந்து
நான்காக அமைந்த அகவையிலே அலைந்தும் வேலையின்றி அலுத்த வேளையிலே தந்த வங்கி ஒன்று
தனத்தை கடனாக கொடுத்து தொழில் தொடங்கி கோமான் நடத்திடுவான். அன்று பொருள் தட்டு
அமைந்த காரணத்தால் எம்மான் உடன் பயின்ற நன்மான் நண்பனிடம் நாடிச் சென்றபடி ஒன்பான்
நூறுகளில் உற்ற கடனொன்று பெற்றும் அது இன்றும் பெருங்கடனாகிடவே கட்டயியலாமல் கற்கி
கறைபடிவான். ஆதவன் முகமுற்ற அவனது நண்பனுமே அடுத்த மதம் சார்ந்த அன்பு நாதனது அழகு
பெயரோங்க கர்த்தரின் சுமை தாங்கி கண்ணியமிக்கவனாய் நாதனின் நல்லூரில் நண்பனோ
செல்வந்தன். அங்கு தலைவனாகி அரியணை ஏறினாலும் அருங்குணம் கொண்டவனை ஆட்கொண்ட
கொடுநோயோ காலை முடக்கியதும் கையை அடக்கியதும் காயம் ஒடுக்கியதும் காலன்
அருகிருந்து காத்திருந்தபடி நோயில் படுத்தபடி நொந்து நூலாகி உலவ வலுவின்றி
உதிர்ந்த கோலத்தில் தோழன் மனை சென்று தோளில் அணைத்தபடி தேற்றி எடுத்ததனை தெரிந்த
எந்தனுக்கு புரிய வைப்பதற்கு பொறியை யான் வைத்தும் புரியாதிருப்பதேனோ ! பொன்மான்
நட்பினிலே பூப்போல் நட்புண்டு அம்மான் இறந்து விட அழுதான் எம்மானும். அந்தோ
அதன்பின்னும் அடையாக்கடன் தொடர அண்ணலை ஏழ்மை அன்று அழலாய் வாட்டியதே உண்மை
காரணமாய் உலகிற்கு சொல்லவந்தேன். உமையே அண்ணலுக்கு உயரிய வரமளித்து இமயம் போல்
எழுந்து எரிகதர்போலுதித்து அகிலம் ஆள்வதற்கு அழியா வரமளிப்பாய் !
உலகாளும் தகுதிக்கு உரியவர்கள் யாமென்றும் ஒப்பரியோர் தாமென்றும்
இறுமாப்பு உளம் கொண்டு எழுச்சியுடை இழிமாந்தர் இவ்வுலகை இயக்குவதை உலகாள வரும்
அண்ணல் ஒருபோதும் ஏற்காது உள்ளது உள்ளபடி உள்ளமதில் உதிப்பதையே உலகிற்கு
தந்திடுவான். உதவாத கொள்கையுற்றோர் ஓடிடவே வழிவகுக்கும் உலகிற்கே ஓரிறையாய்
உயிரெல்லாம் ஓர் நிறையாய் பயிரனைத்தும் மாந்தர்களின் பங்காளி ஆகையினால் ஊனுயிர்கள்
மீது அவன் உறவாடும் அன்புடனே உற்ற நண்பனாகிடுவான் அகிலத்தின் அடித்தளமே
அனைத்துயிரும் நலம் பெறவே. அங்கமுண்ணும் அரக்க குணம் அதையேற்று புலால் உண்ணும்
பொல்லாங்கை பூரித்து புரிபவர்கள் உடைமைகளை இழக்க வைத்து உற்ற நீதி வழங்கிடுவான்.
அதை மீறி அகப்பட்டோர் அண்ணலது அடும்பகையை ஆறாது வளர்ப்பதன்றி தேறாத இனமாகி
தீவினைக்கு இரையாகி தீ தின்றே அழிந்திடுவர்.
ஆடிப்பாடிய பருவமும் போய் அயர்ந்து தூங்கிய கருமமும் போய்
அயராதுழைக்கும் காலமொன்று அண்ணல் வாழ்வினில் வரும் என்று அம்புலித் தலையன்
சொன்னதையே அடி பிறழாது யானுரைப்பேன் ஆரமுதே கேளாயோ. தேடிப்போயும் தேவதையை
தீண்டயியலா ஊழ்வினையால் வாடிய பயிராய் ஆன விதி வல்விதி என்றே ஆனதனால் கூடிய
பெண்டிர் அனைவருமே கோட்டான் கூகையர் ஆயிடுவர். கொண்ட காசை கொடையளித்தே வந்த
ஞானமத்தனையும் வரதை வாரி வழங்கியதாய் கண்டேன் கற்கி ஈசனையே கண்டும் யானவன்
கமலமொத்த கண்கவர் தாள்கள் தனில் வீழ்ந்து வேண்டும் நலந்தான் வேறேது. வேந்தனின்
வெற்றிகள் குவிந்திடவும் வினைகள் திருவினையாகிடவும் வணங்கிய என்னிரு கைகளுடன்
வாழ்த்தி வந்து வலமிருந்து வரலாற்று வான்மகனின் கோலம் கண்டு கொண்டாடி குதூகலித்து
மகிழ்ந்திடுவேன்.
நாதர்முடி நல்லரவம் நன்காளும் நற்பரப்பில் நீதிநெறி நிலைப்பதற்கே
நெறியாளன் நேரிட்டு நாவன்மை போரிட்டு நன்மருந்தூட்டியவன் பாதி உயிரற்றதுபோல் படாத
பாடுபட்டு பரிதவித்து போயிடுவான். ஆர்வலர்கள் பலபேரும் அறவழி அறிந்திருந்தும் அவ்வழி
அணுகாது புறவழியில் பொய்மொழிந்து பொன்னொப்ப வாய்மை கொன்றும் புதுவசந்த வாழ்வு
கொண்டும் நாயீன்ற நரியினமே நடுநிலைமை கொடிசாய்த்து நாணமிலா குடி சேர்ந்து
மாநிலத்துள் வளர்த்துவிடும் மதப்பகைமை மட்டற்று மலர்ந்த வண்ணம் மிகைப்படுமே.
பூநிலத்துள் இதை புதைக்கும் பொல்லா அரக்கர்களால் பொய்த்துவிடும் மனிதமுமே.
மாண்புக்கு அணியாகும் மக்கட்பண்புதனை மண்ணுயிர்மேல் பொழியாமல் பேயீன்ற பிழை
மாந்தர் பிறவிக்கடல் கடந்து பிழைத்திட வழியறிந்தும் பிறப்பறுக்கா திமிரெடுத்து
பிறப்பொக்கும் பொன்னுடலை பேணும் ஊனுடலை பிய்த்துண்ணும் பேரின்ப பெருங்குடியாய்
போயிடினும் பிணந்தின்ற காரணந்தாற் படும் துயர் ஓயாது பாழாய் ஆக்கிடுமே
அடுந்துயர் ஆறாது அனைத்துலகுள் உறைந்தாலும் அலைக்கழித்தே அலையவிடும். அறனற்ற செயல்
புரிந்து ஆயன் முன் மது உண்டு மயக்கமுறும் காலிச்சிறுநெறியர் காலன் கயிற்றுக்குள்
வீழ்ந்த பின்பும் காலூன்றிப் பிறப்பதனை காதூன்றி கேளாயோ. காணும் கழிவனைத்தும்
கற்கண்டாய் மென்றுண்ணும் எறுழியாய் மீட்சியின்றி இங்குதித்து இழிவாழ்வை சுமந்து
நிற்கும் இம்மை இழந்த பின்னும் ஏறிட அருளின்றி இன்மை பலனுற்று எழுபிறப்பும்
பாழாகும். உண்மை உரைப்பேன் யான் உள்ளம் கொண்டொளிரும் உயர்ந்த மகவுகளை உதிர்த்த
சூலகங்கள் உறைந்த கருவறையோ கன்னன் கொடைமிஞ்சும் காவியக்கொடை தந்த கற்புக்கடம்
பூண்ட காரிகை தெய்வங்கள் ஈன்ற செல்வங்கள் பின்னம் எக்கொடையும் பெரிதாய் அமையாமல்
பெருமான் கற்கிக்கு அரணாய் அமைவதற்கு பொற்றம் பொலிவுற்ற அப்பூவையர் தொண்டிற்கு
பொழுதும் கடன்பட்டு நன்றி அவன் சொல்ல கண்டு மகிழ்ந்தோரும் காணாப் பேறு பெற்றோர்.
வானவர் பூமிக்கே வந்து ஆட்சி செய்ய ஊனது வீழ்ந்தாலும் ஊழ்வினை காத்திடுமே உரையிது
உண்மையன்றி உளறல் ஏதுமின்றி கதைக்கு கருப்பொருளே எதையும் அறிவானே.
பாகம் 177.
நாதன் புகழ் பாடும் நற்குழு ஒன்றமைந்து நன்றாய் தேடிடவே நாளும்
தொண்டாற்றி நாடி நலம்புரியும் நல்லோர் நடுவினிலே வேடந்தாங்கியவன் வேந்தன்
இனமுற்றோன் வெறியுடை ஓநாயாய் ஆட்டுத் தோலுடுத்தி அழகாய் உறவமைத்து ஊட்டும்
விடத்தாலே உடல் விழ உயிர் கொல்லும் கோட்டான் குஞ்சாக குறிப்பாய் சொல்வதென்றால்
கோதைத் தாயீன்று குழந்தை பருவத்தில் குடித்த கொப்பன் பெயர் கூறிட கேளாயோ !
மாதொருபாகன் மயங்கி வீழ்ந்தது மாதுடை கோலமெடுத்த மாலவனுடன் புணர்ந்து மதன கலை
புரிந்து ஈன்று வனத்துள்ளே இட்டு மறைந்த பின்னம் எடுத்து வளர்த்தது தான் சேரன்
நிலம் ஆண்ட சிறு நில மன்னவனும். சீரிய கண்டத்தில் சிறந்த மணி கொண்ட மழலையின்
பெயரெடுத்து மணமகனானதுமே மலரை மணம் புரிந்து மகனையும் கொடையளித்து தாலிச்சரடறுத்து
தலைவியை கைம்பெண்ணாய் மாற்றி அழவிட்டோன் மகனது பெயர் சொல்வேன். அது வெல்ல முடியாத
விட்டுவின் அவதார கண்ணனை குறித்திடுமே. ஒற்றைத் தொட்டிலிற்குள் உடன் மலர உறவின்றி
ஒற்றையாய் வாழ்ந்திருப்பான். விதவைத் தாயாரோ விதைத்த கண்ணீரால் மிதவை போலவனும் மிதந்து
கரை சேர்ந்தும் மேனியை தந்தவளின் மெய்யை வதைத்தபடி மிருகமாய் இருந்திடுவான்.
கருமம் இவன் கொண்ட கதையைச் சொல்வதென்றால் கற்கிக்கெதிராக காயை நகர்த்துவதில்
கைதேர்ந்தவனாய் கயவருடன் சேர்ந்து காக்க வேண்டியதை கசிய விடுவதுதான் கருப்பு
ஆடிவனின் கறையாய் கண்டேனே.
எதற்கும் அஞ்சிலான் ! இளமையிற் துஞ்சிலான் ! எவர்க்கும்
தீங்கிலாதெம்மான் வாழ்க்கையே உவர்க்கும் நிலமென உதவிகள் புரிந்திட்டும் வெறுக்கும்
நிலைகளே விரும்புவார் வெகுசிலர் ! பொறுக்கும் பூமியாய் புன்னகை மன்னனாய் இருக்கும்
எம்மரும் ஈடிலா அண்ணலை பழிக்கும் பாவியர் பாரினில் கூடிட படிக்கும் படிப்பினை
வாழ்வினில் கொஞ்சமோ ! பதர்க்கும் பாவியாய் பங்கயப்பெருமகன் சிலர்க்கே செம்மலாய்
சேயிழை சின்னமாய் ஆயிழை அன்பனாய்
ஆடவர் இனங்களில் அனைவரும் எதிரியாய்
அண்ணலை நோக்கிடும் அவலத்தை கண்டிட்டேன். அரவணை துயில்பவன் அடைதுயர் அனைத்தையும்
அரவணிந்தோனவன் அப்புறப்படுத்தினான் ! அனைத்துயிர்களையுமே அரவணைத்தடைக்கலம் கொடுப்பவன்
படும்துயரனைத்தையும் பார்த்துயான் மீண்டுமே பரமனை வேண்டுவேன். அமரனாய் ஆக்கியே
ஐயனை ஏற்றிடு ! அறனுக்கு வாழ்வினி அணுவளவில்லையேல் அகிலம் முழுமையும் அழல்
கொண்டெரித்திடு ! அதுதான் இங்கினி நீதி நெறியுமே ! ஈசனே ! என்னிடம் ஏற்றிய
வாக்குகள் இன்னும் இங்கினி இன்மையாய் போகுமோ !
பாண்டிய வம்சமென்றும் பகலவன் அம்சம் என்றும் வடமொழி வாக்கியங்கள்
வானை பிழந்து நிற்கும். ஆண்டையே வருக யென்றும் ஆட்சியை தருக யென்றும் அருந்தமிழ்
முழக்கங்கள் ஓங்கியொலித்தபடி உலகத்தார் ஊனை எல்லாம் உள்ளூர உருக்கிடுமே !
ஆண்டியாயிருந்தவனின் அழகுறு கைத்தலத்துள் ஓங்கிய மும்முலையாள் உமையின்
வடிவுடையாளுற்ற கயல்விழிதான் ஒளியை உமிழ்ந்த வண்ணம் காவியக்கற்கியென்று மேவிய
பெருமை சொல்லும். மேதகு மேன்மையுடை ஆதவன் அவனெங்கள் அடிவான் எழுவானே ! வேண்டிடும்
மாந்தருக்கே விரும்பிய நிறைவளித்து ஆண்டவனாயிருந்து அன்பர்களுக்கெல்லாம் அழலை
உமிழாமல் அன்பை பொழிவானே !
கடலே கண்ணென்றால் இமையை கரையாக்கி இயங்கும் துறையொன்று எழிற்தமிழ்
நாட்டினிலே நெய்தல் பெருநகரில் நெடும்படை இயக்கிடவே கேட்டின் மகனாக கிழவன்
கிடைப்பானே. கலைகள் பல கற்றும் கருவமுற்றவனாய் கற்கி ஈசனது கருமமுடன் இணைவான்.
முனைவன் ஆயிடினும் முகுந்தன் பிறப்பறியா மூடனாயிருப்பான். உருவம் பெரிதமைந்த ஓடும்
அட்டைகளில் உள்ளே அமர்ந்தபடி மனிதர் பயணிக்க மணியாய் தொடுத்தபடி இரும்பு வடங்களின்
மேல் இடியை இறக்கியதாய் அதிரும் முழக்கமிட்டு விரையும் வண்டிகளின் ஒளியும்
திருடர்களை ஒழித்துக்கட்டாமல் உண்மைவழி நிற்கும் உத்தம குணம் சிறக்கும் எம்மான்
இன்னுயிரை எடுக்க ஆள் அனுப்பும் இழிமகனாயிருந்தும் நெருங்க இயலாமல் நெஞ்சம்
குமுறிடுவான். அற்ற பணிகொண்டு அழகு மயில் கண்டு நித்தம் புணர்ந்திடும் நீசனவன்
கதையை நெஞ்சில் தோன்றிடவே நிறைவாய் வாக்குரைப்பேன். வான்தமிழ் மொழி இருக்க அவன்
வடமொழிப் பெயருடுத்து வாஞ்சை பெயரமைத்து வஞ்சகனாயிருந்து சிலுவை சுமந்தவனின்
சிறகுள் குடியிருந்தும் கொடுமை பல புரிந்து கொள்ளா பாவி ஆகும் கொலைக்கோர்
கலைஞனவன். பூனைப் பணிதன்னில் போற்றும் பட்டயத்தை அரசே அளித்தன்று அலகிலா
இழுக்கினையே அமைத்தது விதியென்பேன். கேளாய் அவன்கூட கீழ்மகன் ஆதலினால் மேன்மகன்
வணங்குகின்ற மெல்லறம் கொன்றோனாய் மறத்தை கொண்டிருந்தும் மனிதம் தின்றோனாய் நெறியை
மாய்த்ததனை நேரில் பார்த்தோர்கள் யாரும் இல்லையென்று எண்ணும் மூடனன்று கற்கி
ஈசனுமே கண்ணன் கடல்விழாவில் அலையுள் பலநூறு அடிகள் நீந்தியதை அறிந்த கயவனவன்
கையுள் அடங்குகின்ற காலன் கருவியினை கொண்டு வந்தமர்ந்து பருந்தில் பறந்தபடி பகலவன்
தலை நோக்கி விட்ட கணைகூட வீழும் குறிதவறி வேறு இடம்பாய திருவிழி தீயுடையோன்
தேவனைக் காத்தானே. தீதில் கைதேர்ந்த திருட்டுப் பூனைகளும் வாசல் அருகினிலே வரிசையாய்
வந்தாலும் வலுவாய் விரட்டிடுவான் எருதை வாகனமாய் ஏற்ற நாதனவன். மரையுள் மலர்ந்தோனை
மாற்றும் வலுவுள்ளோன் மண்ணில் பிறந்தோரின் மனதை அறியானோ ? மறையாண்மை மங்கா
எம்மன்னவன் மாற்றானோ கருங்கல் உள்ளெடுத்து கறையூர் உள்ளுதித்து கனகம் முதற்கொண்டு
கரும்பொருள் குவித்தவனாய் வணிகம் திரை மறைவில் வைத்து வளங்குவித்தும் வான்மகன்
வந்ததுமே சிறையுள் சிக்கியதால் சிறகை விரித்துவிடும் சிதைந்த உயிர் பறவை. செவ்வேள்
சீறிவிட்டால் சீதளம் தீப்பிடிக்கும் சேதியைச் சொல்லுகின்றேன். வல்வேள் வந்தபின்னே
வாளுக்கிடமன்றி வார்த்தைக்கிடமில்லை போருக்கிடமன்றி பூக்களுக்கிடமில்லை. இன்னும்
கூட அவன் எளிதில் திருந்தாமல் ஒற்றை கண்ணுடைத்து உலகை ஆழ்வோர்க்கு
உற்ற துணை இருக்கும் உளமற்ற கயவர்களில் ஒருவன் இவனாகும். எதற்கும் அஞ்சாமல்
எவர்க்கும் அடங்காமல் கற்கிக்கெதிராக கைகள் இணைத்தவனாய் கயவர் குழுவுறைந்து காலன்
காலடியில் கிடந்து அழுவானே ! வான்பிறை அணிந்தோனே வல்லாண்மையிற் சிறந்தோனே வரம்பிலா
மேன்மையொடு எம்மான் உயிர் காத்து எல்லா உயிர்காக்கும் இறையோன் பணி தன்னை என்சொல்லி
போற்றிடுவேன். என்னாட்டவருமே இடருறா வண்ணத்தில் இடைமறித்தே நின்றழிக்குமென்
நீலகண்டனது நெகிழா இறையாண்மை என்றென்றுமே ஈடற்ற மேலாண்மை. ஈசன் மகனாகும் எம்மான்
புகழ்பாட எண்ணற்ற பிறப்பெடுத்து இமைப்பொழுதெல்லாம் இடைவிடாதென்றென்றும் யாமே
முழங்கிடவும் மரைமகள் மனமுறைந்த மாலவன் மணமறிந்து மறுமை வந்தால் யான் பொறுப்பாய்
பரப்பிடவும் மாளாதருள் புரிவாய் மாதொரு பாகனே !
பாகம் 178
இருட்டில்
மெய்யற இழிபொருள் ஈட்டுவோர் யோனியுள் உதித்தோரெழுந்தெம் உத்தமன் உயிர்க்கு
ஊழ்வினை கெடுக்க கிடைக்கும் தோல்வியால் கேடுடை பாவியாய் துவண்டு போயிட தொலைவது
அவர்கள் குடிகளே. மாலவன் திசையினில் மறந்தும் தலை வைக்கா காலனின் அறம்
சொல்லி காரணம் யான் சொல்வேன். காசினி முழுமையும் கருணையே வீழினும் கால காலனின்
கைத்தலம் பொதிந்துமே கற்கி தேவனின் மெய்யுடல் காக்குமே. சூரியன் எழும் முன்னம்
சொல்லொண்ணா துயர்களும் ஆரிய பேய்களால் அலகிலாதமையவே அரக்கரின் அரசினால்
அநீதியே விளையுமே ! சூழ்ச்சியை கொண்டிவன் சுற்றத்தை வென்றவள் சுடுகாட்டுப்
பாதகி சூர்ப்பனகையுடன் சொல்லிடும் பகையில்லை. ஆயிழை ஆட்சிதான் அகன்றே போனதால் ஆர்ப்பரித்தவள்
அடங்கியே போயினள் ஆயினும் அவளது உறவுடை ஆடவர் உறுமிய நாய்களாய் புகுந்தவர்
பலர் வந்து பொறையுடை மலர்முகன் பூத்தவூர் முதற்கொண்டு புகுந்த ஊர் முழுக்கவே வான்மகன்
புகழற வதந்தியை பரப்புவர். வேதனை வீழ்த்தியே விட்டுவை செதுக்கிட சாதனை அவன் தொட
சரித்திரம் ஆகுமே ! வேடர்கள் முதற்கொண்டு விடமுடை நெஞ்சினர் வாழ்க்கையே
முடிவினில் கோரமாய் அமையுமே. செயற்பொறி அறிவுடன் செய்ததாய் கயமைகள்
இயற்கையென்றுதான் எவர்க்குமே தோன்றுமே. அது ஆழ்ந்த பொய்மையால் அண்ணல் உருவத்தை அமைத்த
மென்பொருள் என்பதே உண்மையே. தீய வழிகளில் தேர்ந்த மாந்தரால் நேர்ந்த இக்கலை
திரவியம் ஈட்டுவோர் குடிகள் முழுமையும் குற்றியுராக தகருமே.
காவிய தலைவன்
காலடிக்கே காலன் நெருங்கா ஊழினையே மாற்றி எழுத முயன்றோரின் மடமையை சொல்வேன் கேளாயோ
! போற்றி புகழுதற்குரியோனின் பொன்மனம் தன்னை அறியாதோர் மாற்றானுடலோ மண் உண்ண
மாசுடை உயிரோ விண்செல்லா கூற்றுவன் கோட்டைக்குள் குடிபுகுந்து குற்றுயிராக சிதையுமென்று
கோடியாய் சாபங்கள் குவிந்திடவே தேற்றறிவாளன் மெய் தன்னை தீண்ட எவர்க்கும்
இயலாது. தெரிந்தே தீயோர் தீமீது நடந்தே நரகம் செல்வாரே ! ஊற்றிவன் உண்மையின்
நாற்றாக ஊன்றப்பட்ட நாள் முதலாய் வேற்றுலகர் இவன்மீது விடிய விடிய விழிப்பாச்சி
விடிந்த பின்னும் காத்திடுவர் ! காசினி கண்ட கருவிகளில் கைவிசையின்றி துளைக்கின்ற
தோட்டாக்களையே தொட்டவரும் தொலைவில் இருந்து தூண்டிவிட்டு தூங்கப் போனோரனைவருமே
விட்டு விரித்த விதிவலையுள் வீழ்ந்து மரிப்பர் அறியாயோ ! கருணை
கொன்றோரனைவருக்கும் கடுஞ்சிறையோ புதிதல்ல கொடுங்கொலை பரிசாக கொடையொடு குடிகள் அத்தனையும்
கொல்வாரின்றி தகர்ந்திடவே அவனிடும் ஆணையினை அடியேன் யானும் அறிவேனே. வாட்டும்
துயரினை வகுத்திடவே வாழும் வஞ்சகர் முடிவுரையை கேட்டால் நீயும் வெடித்திடுவாய்
! கேளாதிருந்தால் துயின்றிடுவாய் ! பூட்டிய அவனது கருமத்தை பொறிவிழியோனே திறந்து
வைத்து காட்டிய அவன் வழி பயணித்து கண்டம் முழுமையும் கைப்பற்றி ஏற்றிய அவனது
செங்கோலே இறையோன் நீதியை காத்திடுமே. ஓங்கிய தமிழே உலகெல்லாம் ஒளிவிடும் காலம்
நெருங்கிடவே தேங்கிய தேவன் திறனெல்லாம் திறந்திட கடலாய் பொங்கிடுமே !
முத்தமிழை
மூர்ச்சையாக்க முயன்றவர்கள் அழிந்திடவே முருகவேள் நிலம் முழுக்க முழு வீச்சில்
கைப்பற்ற முழங்கியே இயங்குகின்ற உச்சநகர் முழுமையுமே ஓசையுடன் புதைந்திடுமே !
தொல்லியலின் கணக்கழித்து தோண்டிய பொருளழித்து துச்சர்களாய் தொடருகின்ற
வடக்கர்களின் வாழ்வழிய வானளவு பிணக்குவியல் பெருகுமென்று பிறைசூடன் உணர்த்தியதை
பிறழாது பாட்டில் வைப்பேன். தமிழ் குலத்தை தகர்க்கவரும் தகையற்றோர்
தாய்களெல்லாம் தாய்மைக்கே நகையான தன்மானம் இழந்தவரே ! முருகவேள் நெறியினுக்கு முரண்பட்டோர்
யாரெனில் மூன்றெழுத்து வடமொழியால் முடமான ஈருடலால் ஒற்றுடைத்து இழிமகளின்
தொற்றமைத்து இணைசசேரா பண்பாட்டை இணைத்திட முயன்றாலும் ஈராண்டு கடந்த பின்னம் யுக
மாற்றம் நிகழ்ந்த வண்ணம் முகமறியா சடலமாகி மொய்க்கின்ற ஈக்களுடன் பேய்க்கே விருந்தமைத்து
பீடையாகி போவரென்று வாய்க்கும் வாக்குதனை வலுவாக உரைக்கின்றேன். நாய்க்கும்
வாய்க்காத நாதியுடன் இவர்பிறந்து நற்றமிழ் சுவையறியா நாவுக்கே நீரருந்த நன்னீரே
இல்லாது நகரத்தில் திரிவரென்று நாகமணி நாதனுமே நந்தியிடம் செப்பியதை
சிந்தைக்குள் சேகரித்து சிதறாது தந்திடுவேன் ! முகுந்தனது இல்லத்துள் முப்புரியோர்
மூலமாக புகுந்ததொரு பூநாகம் பொறிகனலால் எரியுமென்று தகுந்ததொரு தரவினையே தந்தவனே
தழல்விழியன். பகுத்ததெல்லாம் பாதகமாய் பழுத்ததெல்லாம் கொடுங்கனியாய்
புசிப்பவர்கள் அனைவருமே புண்ணீர் ஒழுக்கிடவே வாய்த்திருக்கும் வளமனைத்தும்
வலுவிழக்கும் அத்தோடு வஞ்சகர்கள் அனைவருமே வாழ்விழக்கும் காலமது வருவதற்கு
வருடமில்லை. மெய்மையின் மேனியது மீண்டு வந்து திரிவரென்று நாகமணி நாதனுமே நந்தியிடம் செப்பியதை
சிந்தைக்குள் சேகரித்து சிதறாது தந்திடுவேன் ! முகுந்தனது இல்லத்துள் முப்புரியோர்
மூலமாக புகுந்ததொரு பூநாகம் பொறிகனலால் எரியுமென்று தகுந்ததொரு தரவினையே தந்தவனே
தழல்விழியன். பகுத்ததெல்லாம் பாதகமாய் பழுத்ததெல்லாம் கொடுங்கனியாய்
புசிப்பவர்கள் அனைவருமே புண்ணீர் ஒழுக்கிடவே வாய்த்திருக்கும் வளமனைத்தும்
வலுவிழக்கும் அத்தோடு வஞ்சகர்கள் அனைவருமே வாழ்விழக்கும் காலமது வருவதற்கு
வருடமில்லை. மெய்மையின் மேனியது மீண்டு வந்து முளைவிட்டு மின்னுகின்ற காலமொன்று மேன்மையுற
வந்தமைய ஆண்மைமிகு ஆடவனாய் அண்ணலின் அரும்பணியே அடிகோலும் என்பதற்கு அணுவளவும்
ஐயமில்லை அறியாயோ ஆரமுதே !
பாகம் 179
அன்னை நிலம் அழிக்க வந்த அற்பர்களின் இயக்கமதை அழுகுரலில்
சொல்வதென்றால் ஆர்ப்பரிக்கும் முதலெழுத்தின் அலையெழுப்பும் முதலிரண்டு ஆரம்ப
ஈரெழுத்தை அழுத்திய முதல் உயிரே அனைத்திற்கும் தாயாகும் அவளோடு மெய்யிணையும்
இரகரத்தின் ஒற்றுடைத்து ருசிக்காக ஒற்றடுத்து இணைபிரியாதொட்டி வரும் இனிய தமிழ்
உயிர் எழுத்தில் இருக்குமெழில் ஏழெழுத்து இணைவதுடன் இன்னும் ஒரு வடக்கெழுத்து
வந்திணையும் இயற்தமிழின் வழக்கறுத்தே வசை குவிக்கும். இதுவே தான் மீண்டும் வந்து
இழுக்கர்களின் தொழுவத்தில் முழுக்க மூன்று உறுப்பாக முற்றுப்புள்ளி இரண்டாக
முடிவடையும் முடமான அவ்வுடலை குறுக தறித்தபடி கொலுவிருக்கும் கோனாக அமர்ந்ததின்
கூனை நிமிர்த்திவிட்டால் நாட்டினது நாமம் சொல்லி 'நாடாது பிறரை அண்டி நாமே நம்
நாடமைக்கும் சங்கமென்று' நன்றாய் பொருள் அமைத்து விழி விற்று வரும் பொருளில் விதைகளையே
வாங்கி வந்து வீதியிலே விட்டெறிந்த பரிதாப பாவியரின் விதியினை குறை சொல்லி
வருந்துவதேன் பரம்பொருளே ! கலைநடனம் காணவந்தோர் கண்ணிழந்தோராதலினால் மதியிழந்த
மரத்திற்கும் மனமென்ற ஒன்றிருந்து மறுமைக்கே முயற்சி செய்யும். சதி நுழைத்தோர்
மத்தியிலே சதுரங்கம் வென்றதாக சரித்திரம் வந்ததுண்டோ ! கதியென்று சரணடைந்தோம்
காத்திடுவாய் பரம்பொருளே !
அனைத்துயிரை அடக்கம் செய்யும் அழிவுடைமை நெருங்காதோர் அண்ணலின்
அறிவுடைமை அனைவருக்கும் பொருந்தாது. சிவத்திடமே செய்தி விட்டு சேகரித்த சேதியினை
செவிக்குணவாய் நீ ருசிப்பாய். சவத்திடந்தான் செப்புவதில் சற்றேதும் பயனுண்டோ ? சாறில்லா சக்கை
பெற்றும் சார்ந்திருக்கும் குப்பையுற்றும் கதை கதையாய் சொன்னபடி கற்பனையில்
மிதந்தபடி கற்கி தேவன் தானென்றும் காக்கும் ஈசன் மகனென்றும் விதவிதமாய் விழியம்
தந்து விதியற்றோர் விளைந்திடினும் விடியலிலே வீழ்ந்திருக்கும் பொழிபனியை
பொசுக்குகின்ற எரிக்கதிர் முன் என்னாகும் ? எடுக்கப்படும் முன் அதுவே
எரிக்கப்படும் என்றுரைத்து எச்சரிக்கை தந்தவளே ஈரேழுலகாண்டு ஈசனையும் வலங்கொண்டு
எந்தனுக்கும் வரம் தந்து இசைத்தமிழ் உயிர் ஈந்து இன்னுமவள் இயம்புவதை இங்குரைப்பேன்
கேளாயோ ! விண்ணவரின் பண்பைக்கூட வேந்தன் மனம் வென்றிடுமே விளைவறியா வீணர்களே !
விளையாத பயிரெனவே பிழையான மயிரெனவே வளையாத கழையெனவே வன்கருவம் கொண்டபடி வானவனே
தானென்று வரம்பிலா வார்த்தையாலே வாதம் தான் வளர்க்கலாமோ ? ஆதவனுக்கிணையான
அம்மையப்பன் மகனான மாதவன் பிறப்பான மன்னர் மன்னன் சிறப்பான மன்னுயிர்க்காவலுக்கு
மீட்ப்பனாய் பொறுப்பேற்கும் மேன்மகனின் மலரடியை மிகைப்பட போற்றி போற்றி
தென்னிலத்தார் தெரிந்திடவே திருப்புகழை தேர்ந்தெடுத்து திருவாய் மலர்ந்தேனே !
எக்குலமது எம்மான் குலமென்று இறையோனிடம் இரந்தே யான்பெற்ற எல்லா
தரவினையும் இசைந்தே தருகின்றேன். கொடைக்குணம் மேலோங்கும் கோமான் குலமென்று
இடைகுலமொன்றினிலே எம்மான் எழுவானே ! ஈர்க்கும் முகத்தோடு ஈகை பண்போடு ஏற்கும்
ஈசனது எல்லா வினையையுமே காக்கும் கைத்தலமாய் கருதி நம்பிடுவான். முலைப்பால் மறந்த
பின்னே மொழியும் மழலையர்கள் அருந்தும் ஆவினமுதம் பொழிந்தே தொண்டாற்றும்
புண்ணியமொன்றேர்க்கும். அஃறிணையுள்ளடங்கும் ஆறறிவிலாது அமையுமுயிர் மேலே
அன்பைப்பொழியாது அகந்தை பொழிகின்ற ஆணவக் குலமெல்லாம் ஐயனுக்கு அயல் திணையே ! காமன்
கணையொடு காரிகை கண்ணெய்தும் காயமுறா கதிர்காமனை இழந்தது யார்
யாரோ ! ஒழிந்தும்
ஒழியாது ஒளிரும் பேரொளியே பிறவி கடல் கடக்க பெருந்துணை புரியுமென பெரிதும்
நம்பியதோர் அன்பகம் கொண்டவனை அறிந்தவர் அறிவாரே !
சரித்திர நாயகன்
வாழ்வினிலே சரடுபொருந்தா உடுமீனை
சார்ந்தது இல்லறம் என்றறிந்தே வார்த்தைகள்கொண்டு யான்பொதிந்து வார்த்ததை அறிந்தால்
விடையுண்டு ! மறுமொழி எதிர்மொழி பொருளோடு மலைநாட்டின் சொல்லாகி மயில்வாகனன்
கரங்களிலே கடைக்கை அதனின் நிலையாகும். கன்னியொன்றை அவன் மணந்து கொண்ட இல்லறம்
ஒவ்வாது கொள்ளா துயரால் வருந்திடுவான். வீட்டை தாங்கும் குடை மரமாய் ஓட்டை
தாங்கும் கிடைமரமாய் உதித்த முத்தினை காப்பவளாய் உறவால் கிடைத்த சொத்தினையே
பெற்றதும் சொற்படி கேளாமல் பிணங்கும் நிலையே வந்ததனால் பெருமான் பிரிதொரு பூவினையே
பிணைய நினைத்தும் பெயர்ந்திடுமே ! துணையாள் என்று நம்பினாலும் தொடர இயலா
தோல்வியினால் அகன்றது கற்கியின் காதலுமே ! விட்டுவின் நிலையை சொல்வதென்றால்
வேதம் போன்றவன் வார்த்தைக்கு விலையே இன்றி போனதனால் வேதனை வார்த்திடும் வேந்தனையே
! வெல்லும் காலம் வருமென்ற விடையும் கூட கிடையாமல் சொற்கள் கூட பயனின்றி சுட்டே
எரிக்கும் நிலையினிலும் சுடர் விழியோனே கதியென்றான். கற்ற சிவநெறி கைகொடுக்க
கமலப்பொய்கை அடியார்கள் கற்கியை கற்பகம் என்றாய்ந்து பொற்புடை தெய்வம் என்றே
போற்றிப் புகழ்ந்திடலானாரே !
ஆதவன் மாநிலத்தில் அடங்காமல் அடங்கியதோர் அந்தணப்பேழையாலே
அரும்பொன்னீட்டியவள் அமைச்சுகள் முழுமையுமே அடிமைத்தளையாக்கியவள் அண்ணலை அடக்கம்
செய்ய ஆசையுற்ற அரவுகட்கு அரசவைப் பணிகளைத்தான் அள்ளி வழங்கியவள் சந்தனத்தேவனையே
சாய்த்திட இயலாமல் சாத்தனின் மகளுமே சரிந்த கதை யானறிவேன். கள்ளிகளின் கைவரிசை
கள்ளழகன் கழிசடையை கடுகளவும் தீண்டிடுமோ ? குவலையத்து கொள்ளிகளை கொண்டவளே
கொதித்தாலும் கதிரவசெங்கதிர்தான் கண்கலங்கி போயிடுமோ ? இல்லத்தாள்
அடுப்பெரிக்கும் எரிதழலே எழுந்து நின்று எரிமலையை எரிக்க வந்து இயலாது போனதனை
ஈரேலுலகினரே எள்ளி நகையாடியதை ஈசனுக்கு இடமிருக்கும் ஈரநெஞ்சாள் சொல்லித் தந்தாள்.
ஊர் முழுதும் கழுகுகள்தான் ஓசையின்றி பறந்தாலும் உலகளந்தான் மனம் கனத்தால்
ஊசலாடும் உயிர்கள் எல்லாம். ஆதலால் நன்று செய்க அறங்காப்போர் அன்பு செய்க ! பூதலம்
முழுமையுமே பூமகன் புகழ் மணக்க பூபாள இசைமுழங்க ஆயனின் வருகையது அகலாது அணுகி வர
ஏதெவன் இகழ்ந்தாலும் எண்ணமற திகழ்ந்தாலும் வானமே சாட்சியாக வாக்குரைப்பேன்
பரம்பொருளே !
பாகம் 180.
தேவமைந்தன் எழும் நேரம் திறனற்ற தீயோர்கள் தேசங்களுள் பலம்
பெற்றும் திருடர்களின் மனமுற்றும் அன்பறியா மரம் போன்று ஆடவனின் மறம் விட்டும்
அறமகற்றி அருளறியாதடக்கியாளும் ஆணவத்தால் அனைத்துலகே அலறியழும். உலகாளும்
தகுதிக்கு ஒருவனுமே இல்லாது ஒழுங்கீனம் அல்லாது உயர்குணமே கொள்ளாத கொடுங்கோலர்
கோனாவார். குவலயத்துள் குடை சாயும் கொள்கையிலா வல்லரசும் கொள்ள நிதி இல்லாமல் கள்ள
பணம் குவித்திருந்தும் கண்டு கொள்வார் இல்லையென்று கொள்ளை மேல் கொள்ளையிட்டு கூறுகெட்டோர்
குவித்திருக்கும் காஞ்சனம் முதற்கொண்டு கண்ணீர் நாறுகின்ற கருமை பொருள் கண்டு
கற்கிதேவன் கொதித்திடுவான். அறிவுக்கு தொடர்பற்றோர் அரக்கருக்கு உறவுற்றோர்
அற்பருக்கே தலை வணங்கி ஆளுமை கொள்வதுடன் அள்ளிச் சுருட்டியே அவப்பெயர்
எடுத்தவண்ணம் ஒருவருக் கொருவர்மாறி உச்சப்பொறுப்பேற்றும் ஓயாது வெறி கொண்ட பேயாய்
இருந்த பின்னும் பிள்ளை முதல் பெண்டு வரை நாயாய் அலைந்த வண்ணம் நாற்காலி
நாடிடுவர். தூய்மை தூர்ந்தபடி வாய்மை வறண்டபடி பொய்மை பூத்தபடி வன்மை வாழ்ந்தபடி
வந்து ஆண்டிடினும் வாழத் தகுதியற்றோர் ஏழை குடிகளென்றே எவரும் அறிந்ததனால் உலகின்
பணியிடத்தில் உலவும் மனிதர்கள் போல் உருவம் பொதிந்திருக்கும் கருவி பல புகுந்து
கடமையாற்றிடுமே ! அகன்ற அகிலத்துள் அக்கறை இல்லாதோர் அலுத்தலேதுமின்றி அடங்கா
முதலைகளாய் கொழுத்த கோமான்கள் செழித்த சீமான்கள் பெருத்த செல்வந்தர் பேணி
காப்பவர்தம் பேழைப் பொன்களையே ! ஆளும் அரசர்களோ அந்தப்புரமமைத்து அள்ளியெடுத்திடவே
ஆசைநாயகியை அழைத்து அணைக்கின்ற பள்ளியறை முழுக்க பைங்கிளி பறந்திடுமே. பருவமுடிந்த
பின்னும் பல்கிப் பெருகிடுமே பால்வினை இச்சையெலாம் பிணமாய் ஆகும் வரை பிறவிக்கலை
தொடரும் பீடைக்கறையெனவே ! அனைத்துலகினிலும் ஆளும் வர்க்கமெல்லாம் பாழும் அரசமைத்து
பஞ்சம் விதைத்தபடி பசிபிணி நிறைத்தபடி பரிக்கும் பரிவுயின்றி. பைம்பயிர்
நிலமனைத்தும் கைம்பெண் நிலையுற்று காணாத் துயருற்று கண்ணை அழ வைத்து கண்ணீர்
கறந்திடவே கொடுமை கொண்டாடி குடிகள் தேம்பியழ அடிமை கோலமுற்று ஆண்டியின்
விலையற்று அல்லல் பலவுற்று அலையும் நிலை கண்டு அலைகடல் கூட அன்று அழுதே கரைபுரளும்
அறியாய் மன்னவனே !
சிவனே உள்ளத்தில் செதுக்கும் காவியம் செப்ப யான் தரும் சேவையாய்
வரும் கணமே கற்கியின் கதைகள் என்றெவன் கருதினாலுமே கண்டிடேன். பயமே கொள்வதில்
பயனே இல்லை என் பரமன் பாடிடும் பாடலாய் எடுப்போர் யாவரும் எல்லா நலத்தையும்
இறையோன் தந்திட யாசிப்பேன். தவமே நோற்றவன் தளிராய் பூத்தவன் உடலை ஏற்றுதான் அறமே காத்திடும் அறிகவே
! அவனை யாவரும் அழிக்கத் தோன்றியும் அழியாதொளிர்வதை அறிவேனே ! மலரை போன்றவன்
மனத்தை கொண்டவன் மக்கள் பண்பிலே பூத்தவன். பலரை யானிங்கு பாவியாய் கண்டும் ஒருவன்
மட்டுமே உலகாள்வான். மரையை உந்தியாய் மலரச் செய்தவனுடன் மறையைச் செய்தவன் அறிந்திட தினமும் தேவனின்
திருமுகத்தினை திரிபுரத்திலும் காண்கின்றேன். உளமே உருகிட உண்ண மறுத்திட அவனை
நினைத்து யான் பணிகிறேன். அகிலம் யாவையும் அடக்கி ஆண்டிடும் அர்த்தநாரியை அணிகியே மகனை
சீக்கிரம் முடுக்கி விட்டிட மன்றாடியே மடிகிறேன் ! கருணை கடலெனும் கற்கி ஈசனை
கதியென்றெண்ணியே அழைக்கின்றேன். அடிகளார்க்குமே அண்ணல் என்றுமே அழையா விருந்தாளி
ஆயினன். ஆதலால் அற்ற குளமெனும் அகிலமுள்ளில் யான் கொட்டியாயிங்கு கிடக்கின்றேன். கோடிக்கோடியாய்
கூப்பிட்டும் என் கூப்பும் கரங்களை காண்பித்தும் கோபமுற்றதாய் ஆனதேன் ! வாடி வீழ்கின்ற
பயிரை போல் பலர் வாழ்க்கை முழுமையும் வரண்டுமே தேடித்தேடியே ஆவி ஓய்ந்தது திருவுடை
எம் தெய்வமே ! பாடிப்பாடியே பரமன் சேவடி பதிந்து போயினேன் ஆயினும் நாடி நாடியான்
நலிந்து போயினும் நாளும் யாதொரு துயர் கொளேன் ! சுரக்கும் பாடலை அமைக்கும்
வாக்கினை அள்ளி அளிக்கின்றேன் சூடவே ! அனைத்து பிறப்பெலாம் அகலாதணுகுவேன் கூடவே !
இறைவன் புகழ்பாடி இனிதே மறையோதும் எல்லா மடங்களுமே இழுக்கை
சுமந்தபடி அழுக்கர் நிறைந்தபடி முழுக்க முரண்பட்டு முகுந்தன் முகவரியை மோப்பம்
பிடித்த பின்னம் மொழியில் தேன் விட்டும் விழியில் மை தீட்டும் மயில்கள் பல
விட்டும் மரணம் தழுவாத மன்னன் மார்பிற்கு மாறா குறிவைத்து மதன பாணமெய்து மயக்கி
இழுத்திடவே மண்ணில் முயன்றிடுமே. பொல்லாப்புடை சூழும் புழுக்கள் படை சேர
வல்லூறஞ்சிடுமோ ? வல்லா கற்கிக்கு வரத்தை தந்தவனோ வெல்ல இயலாமல் விதைத்த வில்லை
அன்று ஒடிக்க வைத்தானே விதியை சிறக்க வைத்து பதியாம் மிதிலையிலே பங்கைய மைதிலியை
நிதியாய் சேர்க்க வைத்து நெடுநாள் பிரிய வைத்து தொடும் நாள் அகல வைத்து தொகையை
முடித்தவனே இமயத் தலைதாங்கி இன்னும் நதிதாங்கி புவியை காப்பவனே பொறிவிழி
பொறித்தவனே ! பொன்மகன் திருத்தலத்துள் பூக்கள் மிகுந்ததனால் புழுக்கள் உட்புகுந்து
இரக்கம் ஏதுமின்றி எல்லாம் புசித்ததனை இறையோன் வல்லமையால் இயல்பை அறிந்திடுவான்.
தேளே உள்ளிருந்தால் திரியும் பால்வண்ணம். ஒளிர்ந்தே இருந்தாலும் ஒழிக்கும்
விடமருந்தை உண்ண வருவானோ. பாவம் பதித்தோரை பரமன் உணர்த்தியதால் பரந்த பூமியிலே
உயர்ந்த துறவியென்று ஒருவரும் இல்லையென்றும் பெருத்த முதலைகளை பெருமாள்
பெயர்த்தெடுத்து எரித்து சிதை முடிக்க ஈசன் துணை இருப்பான் என்றே காத்திருப்பேன்
இறைவா பரம்பொருளே !
பேரிடர் எழுந்த பின்னாலே பிறைசூடன் பின்புலத்தால் பிறவி பெருங்கடல்
கடந்திடவே நாவாயாக அவனமைந்து நலமுடன் கரை கண்டிறக்கிடுவான். நாடுகள் வீழ்ந்த
நாதியிலே நடுவிரலாக அவனமைந்து ஏடுகள் இணைந்து ஏற்ற வண்ணம் இழந்த நிதியினை
குவிப்பானே ! நாட்டு குடிகள் நலிந்த வண்ணம் மேட்டுக்குடியே மிளிர்ந்த பின்னும்
நூற்றில் ஒருவர் சிறை செல்லா நூதன திருட்டே வென்றுவிடும் சாதனை வந்து சேர்ந்தாலும்
நாரதர் குடிகள் நலமாக கீழவர் மடியும் நிலை கண்டு மேலவர் வரவே வழிவிட்டு மேதகு
மீட்பன் அமைவானே. இழியோன் அமர்ந்த கொடுமைகளால் ஈழம் அழுமே இன்மையுற்று எம்மானது
தன்மையாலே எல்லா நிலமும் சீர்படுமே ! நாணும் வறுமையுள் நாடுறைய நாடும் மாந்தரை
நசுக்கிவிட்டு நன்மையன்றி வேறெதையும் நாதனென்றும் நாடானே ! நன்னெறி மாய்ந்திட
நேராது நேர்வழியெடுக்கும் நெஞ்சோனை பாரது உயர்த்தி பார்த்திடுமே பரிதியாய் பரதம்
ஏற்றிடுமே. வேடம் தாங்கி வந்தவரால் விளையும் போரால் புவி கொண்ட தேசம் தோறும்
திருவோடு தெரியும் போதே அவன் வருவான். திருமகன் தெருவில் துயின்றாலும் திருமகள்
விட்டு அகலாது திரும்பி வருவாள் வளமுடனே ! கற்கியென்று கருதாதோர் கண்
திறக்கயியலாதோர் கபோதிகளாய் உருவானோர் கானகத்துள் நுழைந்தாலும்
கண்காணாதிருப்பதற்கே காலத்தின் விதியுண்டு. மன்னர் மன்னன் நுழைந்ததுமே
மறக்கொடியோர் மறவாது மாற்றான் வடிவில் உருவாகி வேற்றாளுடனே வெருகுகளே வீரியக்
காவல் புரிவாரே. காட்டுள்ளோடும் ஆற்றோரம் கழுகு கூட்டம் கண்டேனே. கூட்டணி சேரா
கூட்டத்துள் குருவி கூட்டம் நின்றிடுமே. கருவிக் கண்ணை பொறித்தபடி கணப்பொழுதும்
சிலிர்த்தபடி கடமையாற்றும் அரசர்களும் கவலை கொண்டு உறைந்திடவே கூர்வாள் கையில்
கொண்டவனே கொதித்தெழுந்து சினத்தாலே கூண்டோடெல்லாம் சிக்கிடவும் கொல்லப்படும்
நிலைகொண்டு குடியனைத்தும் நடுநடுங்க குணக்கேடர் அனைவருமே கொய்யப்பட வழி உண்டு
என்றே அவர்கள் பீதிகொண்டு இப்பிறப்பை அலைக்கழிக்க பீடை மாந்தர் இனமழிய பிதாமகனே
மேலேறி பேரொளியாய் வருவானே !
வள்ளல் முன்னம் அன்றொரு நாள் வாமனன் வடிவுடன் வந்தோனை கொல்ல
துணியும் விலங்கினுக்கே கொம்பு சீவி விடுவானேன் ! வம்பை வாங்கா ராமனுக்கு வரும் பெயரோ சாமியென்றால் வந்த
வடிவுடை செல்லம் தான் வாழ்ந்த பெற்றோர் இருவருக்கும் வயிற்றுக்குள்ளே மலம்
விளையும். அது வந்த பின்னும் இனம் தகர்க்க வெகுண்ட இடத்தில் கழிவிறக்கும் கண்டேன்
கயவன் இடம் தன்னை ! தாய் தந்தை நிலத்திலும் தவறில்லை தளிர்களின் மஞ்சமோ
குறைவதில்லை தணலும் தரையை கொஞ்சிடுமே தங்க நிலாவும் கெஞ்சிடுமே ! தயை தான்
சிறிதும் இல்லாதோன் தவழ்ந்த பூமியை சொல்வதென்றால் தலைவன் பதிக்கு தென்கிழக்கே
தெரியா புரியை தேடியதில் தெரிந்தது மாவிளை காதத்துள் கண்ட நான்கில் மூன்றாக நின்ற
மாற்றான் நெடும் பெயரை நீக்கி யானும் நிலைக்கவிட்டால் அந்தப் பெயரோ பரதத்தின்
அப்பன் பெயரை அமைத்திடுமே ! கண்டுகொள்வாய் அவன் கூட கற்கி ஈசன் வீழ்ந்திடவே
பொற்கிழி பெற்று புன்னகைத்த பொல்லாதவனாய் இருப்பானே ! தகைசால் தலைவனின்
பகையோர்க்கு தகுந்த பங்கை விளம்பியதோர் நாணும் பண்புடை நந்துருணி நன்னெறி மறந்த
அந்தணரின் நாவில் உதிரும் நாற்றுகள்தான் நாறுமென்று தெரிந்திருந்தும் நாட்டமுடனே
ஊன்றி வைப்பான். தீட்டும் திட்டமும் தேறாது. தேவனின் திட்டமும் மாறாது. தீயோன்
யாரென தெளிந்திடுவாய் தெருமகன் பெயரை அறிந்திடுவாய். பிறவிப்பேதம் வகுத்தவர்க்கு
பெருந்தொண்டன் போலிருந்து அறத்திற்கெதிராய் ஆள்பவரின் அடிவருடி அடைவதவன்
பெரும்பதவியும் பீடையென பீடுடை மாந்தரே கோபமுற்று கொடும்பாவியை குறிப்பாரே.
பாகம் 181.
சிலுவையினை அணிந்திருக்கும் சிற்றின்ப குருக்களுமே மயில்களின்
மார்புகளில் மஞ்சமிட்டு உறங்குவதை மனமார செய்தவண்ணம் மாதர்குலம் வணங்குகின்ற
மரியாள் மைந்தனுக்கு ஆலயங்கள் பல எழுப்பி ஆசையினை அடக்காமல் அலைபாயும்
நிலையெல்லாம் அடியேனே அறியும் போது அன்புநாதன் அறியானோ ? தோட்டத்து
கனியொன்றை தொட்டு புசித்தோரை தொழுநோயுற்றவர்போல் கெட்டுபோங்களென்று கீழே விட்டவனா
இத்தகு கொடியோரை இன்னமும் மன்னிப்பான் ? இயேசுபிரான் இட்ட பாதை இன்னதென்று
அறிந்திருந்தும் இன்னொரு பாதையினை ஏன்தான் தேர்ந்தெடுத்தார். ஈசன் பெயரேற்றபடி
இழிபொருள் ஈட்டுகின்ற கொடியோனை கொங்கறிய தவறினாலும் கொன்றைவேந்தன் நன்கறிவான்.
வான் பிறையை கண்டவரும் வளைந்தபடி இறை தொழுகை கொண்டவரும் அறம் மறந்து போனதனால்
அண்ணலே அகிலம் வந்து அறம் என்றால் என்னவென்று அனைவருக்கும் சொல்லித்தந்து மதம்
எல்லாம் ஒன்று என்றும் மனம் ஒன்றே மார்க்கம் என்றும் இனம் சேர்ந்து ஒன்றிணைந்து
இனிய வாழ்வு கொள்க என்றும் அவன் வந்து ஆணையிட்டால் அனைவருமே தாள்பணிந்து அதன்
பின்னே பூசலின்றி அனைத்துயிரும் உய்த்திடுமே !
பெண்மையிலா பேய் மகளிர் பில்லி வைத்து கொள்ளி வைத்து பீடைகளை அள்ளி
வைத்து தாய்மையிலா தரிசுகளாய் தகைகுடிகள் தகர்த்தது போல் மேதகு மெய்வழியான்
மெல்லுடலை சூரரை முடுக்கி விட்டு சுட்டெரிக்க முயன்றிடினும் சூரிய சந்திரனை சூடும்
நாதனவன் சொடுக்கும் நேரத்தில் அனைத்தையும் முடக்கிவிட சூத்திரம் பிழையாகி சூழலே பொய்த்துவிட
ஆத்திரமுற்றவளின் அடிகள் சறுக்கிடவே கேட்டின் மகளெனவே கெட்டுச் சீரழிய சித்தர்
காக்கின்ற செம்மலுக்கு செய்தவினை சிரசிற்கு வந்தபடி செதுக்காமல் செயலிழந்து
சென்றதற்கு உமையாளே உனையன்றி ஒருவருமே இல்லையடி ! ஊனுடலின் உயிர் பறவை மானுடத்துள்
மாறிடலாம். ஒப்பரியோன் உயிர்ப்பறவை உன்னுடலை சேர்ந்திருக்க யாருடலை சாய்த்திடினும்
இவனுடலை மாய்த்திடவே எண்ணவர்க்கு மட்டுமின்றி விண்ணவர்க்கும் இயலாது வேந்தன் உடல்
வீரியமே வெந்தணல் சூரியனே. அத்தகையோன் ஆருடத்தை அகிலத்தார்க்குரைக்குமுன்னே கோடானு
கோடி முறை கும்பிட்டு பணிந்திடுவேன். மந்தைகளின் சொற்கேட்டு மனசாட்சி நெறிகெட்டு
சிந்தையிலே கலியமர செய்வினையை ஏவி விட்டு செய்ததொரு தாடகையின் உளம் மரத்துப்
போனதனால் உருக்குலைந்து போகும்படி செய்தவர்க்கே செய்த வினை சீரழித்து
சிதைத்துவிடும். மாடுண்டு மலம் கழிக்கும் மறவரினம் ஒன்று வந்து விதிப்பயனுள்
வீழ்ந்திடவே மலைநாட்டுக்குடியொன்றும் மன்னனடி மண்ணளந்து மந்திரமோதுமொரு தந்திர
குடியொன்றும் மேட்டுக்குடியென்று மேன்மகன் அருகில் வந்து அந்தணர் புடை சூழ ஆவினது
நெய் பொழிந்து அனல் வளர்த்து அனுப்பி வைத்த அழுக்குடை செய்வினையும் அறங்கொன்றோர்
சூனியமும் செய்ய காரணமாய் செய்தவளை யானறியச் செய்தவனே செம்பிறை தலையுடனே சீறும்
நாகம் தரித்தவனே இருவிழியில் நடுவிழியை எரிகதிராய் ஏற்றிருப்போன்
பரந்தாமனென்பதனால் பதறியே அவனெழுந்து பாதகர் பாய்ச்சிய பண்பறு செய்வினைதான் பாழாய்
போகாமல் வீசிய கரங்களுக்கே விபரீதம் ஏற்படுத்த வினைமாற்றி அனுப்பியதால் மன்னன் கதை
முடிக்கவந்த மமதை கொண்ட மாதங்கம் மண்மூடி உறங்கிடவும் மற்றொன்று உறங்காமல் மரணப்
பயமுற்று வென்றதையும் வீணாக்கி கொண்டதையும் பாழாக்கி வேதனைதான் கருவறுத்து வீழாத
நடைபிணமாய் விளைவேற்ற காரணமே ஆறாதோர் ஆலகண்டன் அமைத்திருந்த ஆணையமே அணையாது ஆட்கொண்டு
அண்ணலினை அணைத்ததற்கு அவன் காத்த அறமன்றி அவனியில் வேறேது அறியாயோ ஆருயிரே !
மாங்கனி மணக்கும் பதியில் மலந்தனை எடுக்கும் குடியில் ஆண்மையே
இல்லாதவனை ஆளென தேர்ந்தெடுத்து அண்ணலின் நகர் புகுத்தி அமைதியாய் திட்டம் தீட்டி
கொன்றிட கூலியாக கொண்டதோர் பொற்கிழியை கூறுகள் போட்ட போது கூடவே இருந்ததைப் போல்
கூறியே கூத்தன் எந்தன் காதினில் வந்து சொன்னான். மார்பெல்லாம் கல்லுறைந்தோன்
மக்கட்பண்பிழந்தோன் மறவர்கள் எய்ததாலே மன்னவன் ஊரில் வந்தும் தீண்டிட இயலாமலேயே தீவினை
முடங்கக் கண்டேன். சந்தனம் மணக்கும் எங்கள் சாவிலா சிறுத்தை கொண்ட செம்மரையொத்த
சங்கை சீவிட வந்தும் ஆங்கே ஆனையாய் சறுக்கி வீழும் அற்பரின் பின்புலமாய்
அமைந்ததோர் இழிமகளை எங்கனம் இயம்புவேனோ ! தலைவனின் நிலத்தையாண்ட தறிகெட்ட
தாரகையின் தயவிலா தங்கையினை வாடையே வீசும் திக்கில் வாழுமோர் வல்லரசால் சேனையே
முடங்கிப் போக செய்தது ஊழ்வினையே. பருந்துகள் பறந்த இடம் பறிகொடுத்து சிதைந்து
வீழ விருந்தாக சிறையிருந்தும் விடிந்தபின் சிறகடித்தும் விளையாத நிலமாகி வெந்ததோர்
பிணமாகி ஆடவச் சரடறுத்து அடங்கிடின் என்ன பயன் ! ஆணவ போதையாலே ஆடிடும் அற்பர்களே
மாலனுக்கெதிராகி மரணத்தின் விருந்தாகி மலர் வளையம் ஏற்காதீர் ! தாய்மை இழந்தோரை
தயையிலா கொடியோரை பேய்களின் உற்றாரை பீடுடை அரியணையில் ஏறிட அனுமதிக்கும் ஏணியை
உடைத்திடுவான். ஈசனுக்கு அடங்காரை இரக்கமே இல்லாரை வேடனாய் வந்தவண்ணம் விட்டுவே வீழ்த்திடுவான்.
ஊன விழிகளொப்ப உள்விழிதானுறங்கலாமோ ! உய்ய வழியமைக்கும் உரையினை ஒதுக்கலாமோ !
தயைகொன்ற தலைமையெல்லாம் தரணியெங்கும் ஒன்றுகூடி முடிவொன்றை
எடுப்பதையான் முன்னரே அறிந்ததுவே ! மூத்தவளாய் பூத்திருக்கும் முதிராத கன்னியரின்
முடிபிடித்து தலையறுத்து காளிக்கு பலியிட்டு கற்கி ஈசன் கதிர்விடாது காலமெல்லாம்
முடக்கிடத்தான் கருணையின்றி முயன்றாலும் காளியும் கைகழுவி கண்கலங்கி போவாளே !
கயவரினம் கைகோர்க்க மலைநிலத்துள் மனமுறைந்து கல்லானோர்களை கொண்டு மந்திரங்கள்
சொல்லிச்சொல்லி எந்திரங்கள் எழுதுவதை இடைவிடாதேற்றிடினும் எந்த ஒரு பயனுமின்றி
இழியோர்கள் அழிந்திடுவர் என்பதை யான் இயம்புகின்றேன் எல்லோரும் அறிந்திடவே !
காலனவன் கண்மலர்ந்து கண்ட கண்ட மெய் கவர்ந்து போவதற்கு காரணமாய் பொல்லா வல்லரசர்
பொசுக்குமந்த வானமதில் போர்மேகம் வலுவாக பொழியும் பெரு அனல் மழையால் பொரித்த
குஞ்சி அத்தனையும் புண்ணீரை ஓடவிட்டு புன்னகையை கொன்றதனால் புரண்டபடி துடித்திடுமே
பூதலத்துள் மன்னுயிரே. தூங்காத மாந்தரெல்லாம் தொழுதவண்ணம் அழுதவண்ணம் தொட்டுவிடும்
வான் பிளக்க விட்டிடாது வெந்தணலும் வெந்ததனை தின்றபடி வெறியாட்டம் போட்டிடுமே !
அண்டமெல்லாம் அதிர்ந்திடவே அடர்ந்த பல காடுகளும் அங்குடுத்த பைம்பயிரும்
தொடர்ந்தவண்ணம் துயருறவே தொலையுமுயிர் உருகுவதை தொலைவிருந்தே யானுணர்ந்து
துச்சர்களுக்கெச்சரிக்கை இப்பொழுதே யான்விடுப்பேன். பக்தர்களை காக்கவரும்
பரந்தாமன் சீற்றத்தால் பரமனெனும் பகல்கண்ணன் கற்கிதேவன் கண்ணிடையில் காணாத
கதவினையே கண்டிடவே திறந்திடுவான் கயவர்கள் அழிந்திடவே கனிவுடையோர் அறிந்திடவே !
காப்பான் கள்ளன் வெறியாட்டம் கற்கி கொண்ட களியாட்டம். மோப்பம்
பிடிக்க இயலாதோர் மேய்ப்பன் எடுக்கும் அவதாரம் மீண்டும் மீண்டும் மண்ணில் வந்து
மேதினி உய்ய வழி வகுத்து காசினி கனகப்பூ பூக்கும் கற்பக தருவாய் ஆயிடுமே !
முத்துக்குட்டியாய் பிறந்திருந்தும் மூடர் வேதத்தை பழித்திருந்தும் வெற்றி சூட
இயலாமல் வேகா தலையுடன் விண்ணுறைந்து சித்துக்கூட்டி சீருலகில் செம்மலாக
வந்துதித்து இட்டம் போலே அவன் எரிவான். இந்துடன் இளங்கதிர் இயக்கிடவே எம்பெருமான்
வரும்போது இங்கே எழும்பும் இழியோர்கள் முற்பிறவியில் முத்தமிட்டும் மூவா முகுந்தன்
பக்கம் நின்றும் முக்தி வேண்டிய பக்தரெல்லாம் முரண்பட்டே வந்துதித்து மூடராக
அமைவதெல்லாம் பித்தன் செய்த விளையாட்டே பிழையென்றிவனும் பழிப்பானேன் ? முளைவிடும் நாள்
முதற்கொண்டு மொத்த விளைச்சலுக்குரியோனே முக்கண் முதல்வன் என்றறிவேன். மூதறிவை
முந்திச்செல்லும் மூழ்கிய காப்பியமத்தனையும் மூலவன் மூலம் முறைப்படுத்தி மாலவன்
மண்ணிற்களிப்பானே ! மாதவனாலே மண்முழுதும் மறுபடி தமிழின் புகழ் மணக்கும்
மூவுலகெங்கும் தமிழ் தானே மொழிகளில் தாயாய் இருந்திருக்கும். யாரினி தடுத்தும்
பயனில்லை எம்மொழியாகும் செம்மொழிக்கு ஈரேழுலகிலும் இணையில்லை. முத்தமிழ்த் தேனை
மொய்த்திடும் வண்டாய் பற்பல புலவர்கள் பைந்தமிழ் யாத்து தீஞ்சுவையோடு
தெள்ளமுதாக்கி பாகினிலூற்றிய பானம் போன்று பாரில் மீண்டும் புத்துயிர் பெற்று
பொலிவுறுமென யான் சத்தியம் செய்து வாக்குரைத்து அந்த சங்கரன் மீதும் ஆணையிட்டேன்
எம்பெருமானே கேளாயோ !
ஆண்டிட மகவின்றி அழிந்து போவதுடன் ஊன்றிட விதையின்றி ஒழிந்து போனவளா ஊறிய விதை விதைத்து ஊருக்கு சோறிடுவாள் ? உண்மை உரைப்பதென்றால் உயிரின் மதிப்பறியா ஊத்தை சடலமுடன் உலவிடும் ஓர் கொடியோள் ஆட்டை அறுப்பதொப்ப அண்ணல் கழுத்தறுக்க அவளும் முடிவெடுத்து அடங்க மறுத்ததனை ஆரும் அறியாது அயர்ந்து தூங்கிடினும் ஏன்... அண்ணல்கூட இங்கு அறியாதிருந்திடினும் கண்ணில் கனலுடையோன் கன்னல் துணையுடையோன் காலன் முதுகுடைத்து கருமம் மாற்றுபவன் காமன் கணையுடைத்து காதல் முடக்குபவன் கண்டு கொண்டிருந்து காலம் வரும்போது கயமை கொண்டவளை கதறவிடுவானே.
அறமே அவன்காப்பாய் ஆயுள் காத்ததனை அறியா இழிமகளே அழுதும் பயனின்றி அணையும் நேரம் இதோ அருகில் வருகிறது. கோட்டைக் கனவுடனே கொடியை இழந்ததுடன் ஏற்றமுறாவண்ணம் இன்னும் கேடுகெட்டு இடறி வீழ்வதுடன் நாற்றமுடை வீசும் நாயாய் பிறப்படுத்து நரகமுறாவண்ணம் நாளும் விடிவின்றி நைந்து போவதென நாதர் முடிமேலே நறுமணம் நுகருகின்ற அரவம் அருள்வாக்கு அள்ளித் தந்ததனை அழகு தேன்த்தமிழில் ஆய்ந்த பள்ளுடனே அதிரும் பறையோடு அடிப்பேன் இசை கேளாய் !
தோகை மீனாளின்
துடிக்கா விழியொன்றை தொகுத்த கைத்தலத்தால் வாகை சூடிடவே வந்த தருமசேனன் உதித்த வட்டத்துள் ஊளையிட்டபடி ஓடும்
கூட்டமேதும் உயிர்த்து நில்லாமல் ஒன்றும்
வைக்காமல் தீய்ந்திடும் நெய் போலே தீயோர்
அழிந்திடவே பேயாய் அவனெழுந்து பிண்டம்
கொய்தெடுத்து நாயோர் நரியோரை நன்றாய் துடைத்தெறிவான். ஆண்மையின்
சிகரமெனில் அறத்தை காப்பதென்று அறிவாய் மன்னவனே. மாண்பை கொல்லுகின்ற மக்கட்பண்பற்றோர் மறத்தை கொண்டதனால் மண்ணிற்கென்ன பயன்.
மேன்மையின் போர்வையிலே மிளிரும் பாவையரின் கேண்மையை கொள்ளானே. கிடைத்தோரனைவருமே கிடைக்கு ஆடுகேட்கும் கீழ்மக்களானதனால் படைத்தோனொருவனையே பணிந்து நின்றவண்ணம் பாரில் நன்றுசெய்து அணிந்த அருங்குணத்தால் அழியா காயமுடன் அணைக்கும் அன்னையைப் போல் அழுகின்ற மானிடத்தை அன்பொடு தேற்றிடவே அடுக்கும் தேவைகளை அன்றே பூர்த்தி செய்து என்புதோலைப் போல் இருக்கும் உறவமைத்து எல்லாம் வல்ல எந்தன் இறையோன் துணையிருக்க நல்லோர் வாழ்வமைக்க நானிலம் செழித்திடவே நாடும் வீடுறைந்து நாறும் பிறப்பறுக்க பேறே பெற்றபடி பேரின்பம் கண்டிடுமே !
கிழக்கின்
கிள்ளைக்காக கீழ்மகனொருவன் வந்து வழக்கை வளர்த்தவனாய் வரலாற்றை சிதைப்பவனாய் கணக்கை பிழையாய் போட்டு காணும் பிறை நிலத்தின் கையை கோர்த்து நின்று கொதிக்கும் கோபமுற்று கூற்றுவன்
தாபமுற்ற மாற்றான் யாரென்று மன்னவனே கூறுகிறேன்
! கரைகள் புரண்டோடும் கண்ணுக்கு மஞ்சளாகும் அரவம் ஆர்ப்பரித்து அழல்
கக்கும் அந்நாட்டின் அதிபனொருவன் உளியம் உலவுகின்ற உறைபனி உறுநாட்டின் உயரிய நட்பை பெற்று உத்தமன் தேசம் வந்து
வடக்கில் வாதை வீச தெற்கே தேய்ந்துவிடும்.
தெறிக்கும் வான்பரப்பில் தீயே காவு வாங்க
எரிக்கும் இந்நிலத்தில் எழில் தமிழர்
பொன்னிலத்தில் முத்து
குவிந்திருக்கும் மூதாதை நிலம் அருகில் சொத்தே இல்லாத சுடர் கூடும் குளமொன்று செத்து மடிந்திடவே தீப்பிடிக்க வைத்தவனே சிதைத்து வெற்றி கொள்ளும் சேதியை சொன்னபடி வாக்குரைக்க வந்தது தான் வாய்க்குள் நாக்காகி வார்த்தைகளை பொழியுமென் தாய்க்குள் தான் பாதி தக்க கொடை செய்தவனே நாய்கள் நாற்பதினாறாய் நல்லருள் புரிபவனே !
கருணை கொன்றோர் காணும் புவிதனில் கொளுத்தப்படுவதும் கூற்றுவன் வருகையும் கூடவே வருவதை குறித்து கொள்ளென கூறிட கேளாய்.
குவலயம் முழுமையும் கொழிக்கும் பொன்னினை உலவ விடுமன்னாடுடை பொற்றம் உதிர துவங்கி உரிமை இழந்திட வலமுடன் வாழும் வலுவென பாண்டவர் பலமுடன் பதிந்த செங்கல்
பாரில் வளமுடன் இருக்க ஆண்டவர் ஆள்பவர் அனைவரும் அவர் கீழ் ஆண்டிட வருவர். அதன்முன்னமைந்த அடங்கா நாட்டுடை குடக்குலகின் கொற்றவர் பலபேர்
குற்றுயிர் இழக்க கொலையுண்டு மடிவர். வருமுன் சொல்லும் வாக்குரைக்க வரத்தை தந்தவன் அகிலம் முழுக்க அரணாய் இருக்கும் ஆதிபகவன் சிவனே !
தரணியை தகர்க்கும் தழலொடு வருமே மூன்றாம் முறையும் முன்னரறியா முரட்டு பொழிவுடன் தாக்கும் அழிவினை தவிர்க்க இயலா தகர்ந்த நிலந்தனை தளிர்க்க வைக்கும் தருமரமெனவே தலைவன் வந்திடும் அன்னாள் பரணி பாடும் புகழை கேட்டு பாரே சிலிர்க்கும் பாராய். பைந்தமிழேற்று பன்னாடற்று பாரினில் இனிமேல் பொன்னாடொன்று பூப்பதை கண்டு பொறாமை கொள்வோர் புவிதனில் உளரோ !
பாடல் 183
உந்திக்கமலத்தை
ஒழித்து வைத்தோனின் உயிரை பறிப்போரை உந்திவிட்டதுடன் உதவிக்கரமிணைத்துன் உறவுமுறை பேணும் உளவுப்பூனைகளை ஒருக்கிவிட்டிருந்தும் ஒன்றும்
பயனின்றி உனக்கே கேடு வந்து உள்ளம் நடுநடுங்க உயிரைப் பிடித்துக் கொண்டு அலறியழுமோசை அண்ணல் காதுகளை அண்டாதிருந்திடனும் அகிலம்
அனைத்திலுமே அண்ட வெளியிலுமே கொண்ட காதுகட்க்கு கூத்தன் பொறுப்பேற்பான். கூடும் மன்றங்களில் கூவும் குயில் வைத்து
நீதிக்கு விலை வைத்து நீயே வாங்கிடவும் மேதகு இறைகீழே மேலவை நடக்கையிலே மீண்டும் கணக்கெடுத்து காலனை அனுப்பிவைத்தால் கதறும் நிலைவருமே !
புதர்களில் மறைத்து வைத்த பூனைகள் கணக்கெடுத்த பொறிவிழி பூண்டவன் முன் உன் புண்விழி பொய்த்துவிடும். நெறியொடு அறம்பேணும் நீதிமானேற்கும் பொறையுடை பூமகனின் புண்ணீர் புசித்திடவா நீ கண்ணீர் பிறப்பெடுத்தாய் ! கனகம் குவித்திருந்தும் காலன் காதல் கொண்டு கனிவொடு காப்பானோ ? கயவர் குழுவைத்தும் கண்ணில் மொழி வைத்தும் கட்டளை பிறப்பித்தும் பயனாய் பெற்றதெல்லாம் பாழும் நரகுலகே ! பாவமதன் அலகே !
ஆறுமுக பெருமானே
அழுத்தமாக சொல்லியதில் அனைத்துலகை அணுக்கதிர்க்கு ஆகாரமாக்கிடவே அடிப்படை வழிவகுக்கும் அவ்வினத்தார் அலைகடலுக்கப்பால் வாழ் செங்கடலுக்கிப்பால் சேர் செவ்வினத்தை ஆதரிக்கும் சிற்றினத்திற்கொப்பாகும்
சீர்மிகு பரதத்தில் அந்தணர் ஆணையிடும் அறம் இழந்த சங்கமது தெக்கணத்தை ஏற்காதோர் தீது செய்ய காத்திருந்து முப்புரியை
தரித்தாலும் மும்மலம் அகற்றாதோர் முயன்றது அத்தனையும் முத்தமிழர்க்கெதிராகும்.
முடை மலத்தில் மொழியமைத்து மூவேந்தர்
நிலம் புகுந்து வஞ்சிக்கும் தேசியத்தை
வரம்பு மீறி வளர்த்த வண்ணம் எழில் கமலக்கொடி தன்னை இழியோர்கள் ஏற்ற வண்ணம் எம்மான் திருமாநிலத்தை இயன்றவரை சிதைத்திடவே எக்கணமும் துடிப்பவர்கள் இன்னுமொரு தெளிவு தந்தால் இழிமகள்கள் ஈன்றெடுத்தும் எவன் தாதை என்றறியா எமனுலகுக்குற்றோர்கள் எம்மான் எழுந்த பின்னம் இருந்த இடம் தெரியாமல்
இறுதியாக இயலாமல் இயற்கையெய்தி போவதொன்றே உறுதியென்று இருளுலகில் இருப்போரை எண்ணற்று எச்சரித்து எல்லையில்லா
சாபமிட்டு ஈரேழுலகறிய இறையோனே ஏவி விட அருள்வாக்கை சொல்லிவிட்டேன்.
ஆதி சிவன் ஆட்டி வைத்து அடியேனை தூண்டிவிட்டு அலைகடல் போல் கொந்தழித்து ஆர்ப்பரித்து சீறவைத்தான். அரவணைக்கும் அம்பிகையே ! அண்டம் முதல் அந்தம் வரை அறம் சிதைத்த அனைவருமே அழிந்திடவே ஆணையிடு ! மறம் வளர்ந்த பூமியிலே மரம் வளர்ந்து நிற்கலாமோ ! மண்ணோடு மண்புதைந்து மாண்பற்றோர் அழிந்திடவே ஈவிரக்கம் இல்லாதோர் என்னோடும் ஒழிந்தாலும் எள்ளவும் கவலையில்லை. இறவாது இறந்த பின்னும் ஈசனது இன்னுலகில் இடமிருக்கும் உமையன்னை எனை அள்ளி அணைப்பாளே !
அண்ணலின் அன்பகமருகே ஐம்பதை கோலால் அளந்தால் அந்தணர்
குடியிருப்பாம். அரவங்கள் அகத்துள்ளுறைந்த அற்பர்கள் இணைந்திருக்கும் அஞ்சனின்
அருளகம் குறித்து முன்னரே சொல்லிவிட்டேன் முகுந்தனே முற்றிலும் சாட்சி. ஆண்டவள்
அரசியாக அண்டிய தங்கையுமே ஆணவம் அத்துமீற ஆண்டியின் கோலமுற்ற அண்ணலை கொல்வதற்கு
உறுமிடும் நாய்களை கொண்டு உயிரினை பறிக்கச் சொல்லி ஏவிய பின்னே அவளின் இருப்பிடம்
சிறையிலாகும் முன்னரே முடுக்கிடுமந்த மூடனாம் பார்ப்பனனோ சந்தனம் பூசியதோர்
சாக்கடையென்று கண்டும் சரிந்ததோ சாலையோரம் மார்பினில் அடைப்பு தோன்றி மரித்தவன்
மணியுடை கண்டன் மற்றுமோர் பெயருமுண்டு. மாலனின் பெயரின் முன்னே மறலியை உதைத்தவனின்
மணிமுடி சகரமாகி ரகரத்தில் இறுதியுறும் அங்கத்துள் நாலிருந்து அடுத்தது ஐந்தெனவே
அரவம் மேல் உறங்கியோனின் அழகுறு பெயரால் அமையும். சரித்திரம் சாய்த்து போட்டு
சாட்டையால் தோலை உரித்த கேட்டுடை மகளைப்பற்றி கிடைத்த நற்கீரனின் நாதர் கீர்த்தியை
பாடுதல் மூலம் கேட்டிட கடமைப்பட்டேன்.
கந்தலாய் அவனுடை கண்டுயான் உருகியும் கருணையின் கடலென உன்னுளம்
இருந்துமே கனிவு தானில்லையே கனலுடை கண்ணனே ! காலுக்கு பாதுகை ஏதுமே இல்லையே
கற்கியை சூழ்ந்தது கண்ணீர் வறுமையே ! கந்தனின் தந்தையே கரம் கொடு எந்தையே கதியென
பணிந்துமே கண்டிட வாய்க்குமோ ! கமலனை விடுத்தனை கணையென தொடுத்திட கைகளில்
வலுவின்றி சிவனுமே சிதைந்ததாய்
சிற்றினம் பழிக்குமுன் அறனொடு அண்ணலை
அழலென தொடுத்திடு ! சிங்கத்தின் நடையுடை செந்தமிழ் நிலமுடை செவ்வேள் வரத்தினை
அங்கத்தில் மாதுடை அரனார் அருளவே தங்கத்தின் தரமுடை தலைவனின் தலையினை
தயங்காதரிந்திட தாடகை கண்டிட்ட கனவெல்லாம் தகர்ந்திட தாளாளன் தரத்தினை
தாளாதுயருடன் இங்கு யான் செப்புவேன். தளரா முயற்சியால் தடவைகள் தவறியும் துவழா
பாவியாய் தோற்றுத்தான் போனதும் தேற்றறிவாளனை தினந்தினம் தீதுள மாநிரை தாமரை
தாங்கிய தறுதலை யாவரும் தலைமகன் தடங்களை தொடர்ந்திட நேர்ந்துமே தொட்டிடயியலுமோ
சூரியக்கதிர்களை சூழ்ந்தவர் எவரையும் சுட்டே எரித்திடும் சுடர்விடும் காலத்தை
சொல்லிடவேண்டுமோ துயருறும் போதெலாம் தோள்தரும் பரமனே !
ஈசனுக்கு அடுத்தாற்போல் ஈடிலா ஈரநெஞ்சை ஏற்றவனின் இருப்பிடத்தை
இறுக்கியே சூழ்ந்துள்ள சூத்திரதாரிகளின் சொல்லொண்ணா திட்டத்தை சுந்தரனே
அறிந்திடுவார். வேடன் தந்த விருந்தெடுத்து விழியையுமுடனளித்து வீற்றிருக்க
வலமளித்து விலையிலா வரமளித்து நாடகம் நடத்திய என் நாதர் தன் நன்நெஞ்சால் நல்லறிவை
நல்கிடுவார். உற்றார் உறவினரும் உடனுறைந்த மனையினரும் கெட்டோராயிருந்து கீழமை
பெயர் மறைத்து எட்டும் விழிகளைத்தான் எப்படி ஏய்த்திடினும் இவனை எவராலும்
ஏய்த்திடலியலாது. மன்னனுக்கு மாற்றான்கள் மாறுபட்ட கோட்டான்கள் எண்ணற்று
குடியிருந்தும் எல்லோரும் இழிபொருளை ஈட்டியதே எம்மான் தலைகொய்ய இயல்புடனே
வாழ்ந்தவண்ணம் வாலொடுக்க தவறிடவே வாயின் வார்த்தை எல்லாம் வசைபாடும் விசைகூடி
நாயின் குணத்தோடு நள்ளிரவும் பாராது வல்லினமாய் குரைத்திடுவர். சுந்தரன்
மைந்தனெதிர் சூரனாய் அமைந்தவர்கள் சுற்றமென அறிந்ததனை சொல்வதென்றால் சூதுவாது
வுற்றவரால் சீருற்ற செல்வந்தர் சேர்ந்தே ஒழுகுவதால் இல்லங்கள் குறித்தெவர்க்கும்
எள்ளளவும் ஐயமெழ யாதொரு வாய்ப்புமின்றி எழும் விழிகளத்தனையும் இடறிப் போயிடுமே !
காலன் கண்களிலே கார்மேகக் கறைபடிந்தும் கங்கைசூடி மங்கைசூடி கனல் கண்ணொன்று மூடி
கண்ணயர்ந்த காட்சி கண்டு இவனொரு ஏமாளியென்று மட்டும் எவருமே எண்ண
வேண்டாமென்றுரைப்பேன். எவனெவன் இரக்கமிலான் எவனெவன் அரக்கர் குழாமென்ற உண்மை
என்னினும் இறையோனே எல்லாம் நன்கறிவான். காலத்தின் கறையாகி கயவருக்கே விலை போயி
கண்ணீர் அறுவடையை கதறியே செய்பவரை உய்ய விடாது உலகுடையான் ஒழிப்பானே. அண்ணலது
உள்ளத்தில் அழியா ஒளியேற்றி மெய்யை மீட்டவண்ணம் மேதினியேற்போனும் வையம்
உயர்ந்திடவே வரங்களை அளிப்போனும் வஞ்சி நிலம் முழுமையுமே வளவனுயிர் காத்தவண்ணம்
வருந்துயரை சுமப்போனும் வான்பிறை அணிந்தோனே !
வாய்க்குள் வாக்கு தந்து வார்த்தைகள் கோடி தந்து ஆர்க்கும்
குடியல்லால் அமரரடி வந்தே அரிய வாய்ப்பு கண்டு அதனை முதற்கொண்டு அறத்தை
பாடுகின்றேன். தீர்ப்பை அவனெழுதி திருத்தாவிடிலெந்தன் திருமால் அவதாரம்
திருவுடலிழப்பதொன்றே தெரியும் வழியென்று தெள்ளத் தெளிவாக உள்ளம் உணர்ந்ததனால்
உமையுள் உறைந்தவனே ஊத்தை சடலத்தார் உற்ற வழக்கினையே உயிர்க்க வைப்பதற்கு சிலுவை
சுமந்தவனின் சீருறு வழிவந்தோன் அறிவை ஆயுதமாய் அணியவைத்ததுடன் அடித்த
ஆடகத்திற்களவே இல்லெனினும் அணியும் தண்டனையாய் ஆணி அடித்தானே. அறைக்குள் போனவர்கள்
அசைய வழியின்றி சிறைக்குள் தள்ளிவிட்டு சிறகை ஒடிக்காது சிரிக்க விட்டிருந்தால் செவ்வேள் சிரசென்றோ
சீவப்பட்டிருக்கும் செய்தியை அறிந்ததனால் கணக்கை புதுப்பித்து கையிலெடுத்தபடி
காலகாலனவன் கர்த்தர் கைப்பாவை யொன்றை தேர்ந்தெடுத்து கண்ணிய கோல் கொடுத்து
முடுக்கிவிட்டது தான் முற்றும் ஊழ்வினையே ! இல்லாவிடில் அந்த இரங்கா குழுமத்தை
எவர்தான் கடிவாளம் இட்டு அடக்கிடுவர் ! இழியோர் சொற்கேட்டு இனியோன் வழிமறித்து
இடும்மை எய்தவர்கள் இழக்க எல்லையின்றி இறந்தே போவதென்று சிரசில் அரவுடையோன் சீறும்
நதியுடையோன் செஞ்சடை வெண்டலையான் சேதி சொன்னதனை செவிக்குள் ஊதுகிறேன். அணுவை
ஆணையிட்டு அசைக்கும் அம்மையப்பன் அறத்தை பேணாமல் ஆடும் அரக்கிகளை ஒடுக்க அவனுக்கு
ஒருநொடி போதுமென்று உதவாக்கரங்களுக்கு உரக்கச் சொல்லுகிறேன் ! சூரிய சந்திரரே
சொல்வழி கேளாமல் சுற்றிவர மறுத்தால் சொடுக்கும் நேரத்தில் சுருண்டுவிழவைக்கும்
சூத்திரம் அறிந்தவன்தான் சுடர்விழி சுந்தரனார் ! சொன்னால் நம்புதற்கு உன்னால்
இயலாது. சொல்வதை நிறுத்திடவும் என்னால் முடியாது. பின்னால் வருமனைத்தும் பிறையை
சூடியவன் கண்ணால் காட்சி கண்டு காரணம் ஏதுமின்றி கயமை பெண்டிரைத்தான் கைவிட்டுப்
போவானோ ? பிணத்தை கண்டபின்னும் பிழையை திருத்தாமல் குணத்தை கொன்றவளா
கொடிக்கு அணிவகுத்து கோட்டையை பிடித்திடுவாள் ! பேயின் கொடுஞ்செயலால் பெருமாள்
உருகி விட்டால் பித்தன் இடமிருக்கும் பெண்கள் திலகமெந்தன் அம்மை உமையன்னை அவளை
காப்பாளோ ! உண்மை யானுரைத்து உள்ளதை உள்ளபடி உரைத்திட வழிவகுத்தோன் தன்மையை யான்
போற்றி தலைவனைப் பணிவேனே !
ஐயன் குறித்தந்த அரக்கிக்கு அனுப்பியதோர் ஆதார குறிப்பனைத்தும்
அப்பட்டமாயிருக்கும் அறிவற்றோர் பொய்யென்றும் அத்தன் அழிந்ததற்கும் அம்மை
அகன்றதற்கும் அருமனை இடங்கொடுத்தும் அவன் மனை இடம் கொடுக்க அகமிலாது போனதற்கும்
அவனும் அடிமையாக அழுத்தப்பட்டதற்கும் அவரவர் விதி என்றே அழலேந்தி நன்கறிவான்.
பொய்யர் பலபேர்கள் பூவாய் அகமுடையோன் பொல்லா இனத்துள்ளே புல்லுருவிபோலிருந்து
பொருட்பெண்டிருடனெழுந்து கொலைகாரர் களத்துள்ளே கொண்டு வந்து சேர்த்ததற்கு கோட்டான் மகளுடை
கொழுந்துவிட்ட ஊழ்வினையோ என்று யான் கேட்டதற்கு ஈசன்மொழியீன்றதையே இங்குளோர்க்கும்
இடுகின்றேன். உம்மை ஒன்றன்றி உதித்ததொரு இம்மையுமே இனிமையொடு வாய்த்திருந்தும்
இரக்கம் அகற்றியவள் எத்தர்களுக்குதவிடவே எழுந்திருந்த காரணத்தால் இவள் திருந்தாள்
என்றெண்ணி இறையோனே இடர்கதையை எளிதாய் முடித்து விட்டான். இதுகாறும் இழிமகளாய் இருந்தமைக்கு
இறங்குமுகம் கண்டிடுவாள் என்றவனும் எச்சரித்தான். சிவன் சினத்து சீறிவிட்டால்
இவளெழுந்து வருவதற்கு ஏதேனும் வாய்ப்புளதோ ! எமனுறவே இவளுக்கு இம்மை முடிந்த
பின்னும் எண்ணற்ற மறுமையுடன் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றபடி இதமாக உரை
முடித்தான். பரந்தாமன் பண்பறிந்தும் பாழ்விழியாள் பார்வையொடு அன்றலர்ந்த பங்கயமோ
பாவமுடை இலைகளுடன் பயணிக்க செய்ததுதான் பரமனது சூழ்ச்சியென்றும் கருமமதன்
காட்சியென்றும் கருணையினை கை கழுவி கற்கிதேவன் கண்டம் வெட்ட கயவர்கள் கைகோர்த்தும்
கதிரவன் இவனென்று அடையாளப்படும் போது சித்தர்கள் அருளாலே செவ்வேள் சிரம் காக்க
சிற்றினத்து தீமகளோ சிறகொடிந்த கிளி போலே சிறைக்குள் வீழும்வரை எல்லா பாதகமும்
இவளுக்கெளிதாகும் இன்னா செய்வதொன்றே இவளின் இயல்பாகும். பொல்லா பாவமுமே புடையொடு
சூழ்ந்தபடி இவளை அலைக்கழிக்கும் இன்னும் சொல்வதென்றால் எழுந்த பிறப்பனைத்தும்
எம்மான் எதிரணியில் இவளே இடம் பிடித்து எண்ணற்ற முறை இவனின் இணையை பிரித்தாலும்
ஈசனவன் இறுதியிலே இவளை முடமாக்கி இயலாதாக்கிடுவான். நேசம் என்னவென்றும் நேரியவழி
சென்றும் வாழ்ந்திட இயலாதாள் வரமல்ல சாபமென்றும் வாழும் பிணமென்றும் வார்த்தைகள்
வலுத்திடவே நெஞ்சார நீதிகொன்றால் நிலைத்திட இயலாது. மாசுறு மனமுற்று மக்கள்
பண்பற்று மாதர்க்கே இழிவாகி மண்ணுறங்கச் செல்லுகையில் மண்ணுயிரே கொண்டாடும்
மன்னவனே கேளாயோ !
புருவப் பூட்டினை திறந்தவன் எவனுமே பருவ பெண்ணின் பங்கயப்
பூங்குறியின்பம் நாடான். பொல்லார் கொள்ளும் புலாலின்பம் தேடான். கதைகளை கதைப்பவர்
கண் கவர் கன்னியை கண்டிடின் என்றுமே காமத்தை வென்றிடான். கல்லானாயினும் காலகாலனை
கண்ணுள் வைத்தே கணமெலாம் காத்திடான் கலால் மீதுதான் கண்களை பதித்தவன் விடா பேயினை
விரும்பி அழைப்பவன். எலாமறிந்த ஈடிலா கற்கியோ பொன்மனம் எதையுமே புண்பட்டு போகிட
பொல்லா வார்த்தையை பூவிதழ் தவிர்த்தவன் நல்லுறவையே நலமுடன் பேணுவான். அன்புடை
கழகமாய் ஆர்க்குமே அரணென அணைகளை கட்டுவான் என்றுமே ஈசனின் கன்றென இருப்பவன்
இன்முகம் இடர்தரும் மாந்தர்க்கு இரங்கிட என்றுமே இடம் தரான். கனிவுடை மாந்தரின்
கண்டனம் யாவையும் காதினில் வாங்கிடான். கயமைகள் புரிந்தவர் கருத்தினை கேட்டபின்
காலனின் சீற்றமாய் கனல்களை கக்குவான்.
பாகம் 185
குஞ்சரம் பற்பல கொன்று குவித்தவன்
கோட்டை சாமியாய் குறவரை.. காத்தவன் வந்திடும் பாதையில் வாதைகள் கூட்டியே மந்திகள்
குருதியை மகிழ்வுற குடித்தவன் மனமொரு மலையென மரத்துத்தான் போனதே ! கொடுங்காடு
மலைகளில் கொல்லாமை நோன்பற எல்லா உயிரையும் இன்சுவை உணவென ஏற்றுக்களித்தவன்
இருமாப்பு கொண்டதை ஏற்றிடா ஈசனோ இன்மகன் முகங்களை இயன்றிட சிதைத்தவன் தந்தங்கள்
பற்பல தட்டிப்பறித்ததால் தரணிக்கோர் தாதையின் சீற்றமோ தழலென தகர்த்தது. மாதுளம்
தோற்றிடும் மான்களை கொன்றுமே ஊன்கறி உண்டுத்தான் உடலினை பேணியே உருவான பாவமே
மணிமுடியாகுமே. வீரனாய் விளைந்திட்டும் வீணரின் அப்பனாய் வெண்டலையானுமே வெட்டியே
விட்டதும் இறையருள் சந்தன ஈகையின் மரங்களை எளிதென விற்றுதான் ஈட்டிய பொருள்களால்
இணைந்த பற்குடிகளின் ஏழ்மையை போக்கினான். இவ்வழி இழிவெனில் இவனுயிரெடுத்ததால்
இன்புற்ற எவருமே இவனிலும் இழிவென இருப்பதே தகுமென இயம்பிட தோன்றுமே. செவ்வழி
சென்றிடா செல்வியின் சீற்றத்தில் சிக்கியே சீருடல் சிதைந்துமே செந்தமிழ் மாந்தரின்
சிந்தையில் வந்துதான் சிவனென ஏறினான். இவனினும் அண்ணலை எளிமையாய் அழிக்கலாம்
என்றுதான் எண்ணிய இருபெரும் அரக்கியர் அடிகளை வருடிடும் அவரது அமைச்சக அற்பரின்
மூலமாய் அமைத்த பற்பாவியர் அண்டிட இயன்றிடாதகன்றதை புகன்றது அம்மையின் அப்பனே
அறனுக்கு அரணுமாய் ஐயனை காத்தவன் என்று யான் இயம்பிடின் எதுவுமே மிகையிலை.
பார்த்தனுக்கேற்றிட பாடிய கீதையில் பகன்றிடும் பகலொளி பண்புகள் ஏதுமே பளிச்சிடா
பாவியை பார்த்திடாதிருத்தலே பாவத்தை அகற்றுமே. ஈனரின் இயல்புகள் இடம்பெறும் இருளுள
குணமெலாம் இவளுக்கமைந்ததே இழிவென கண்டுமே ஈசனே வெறுக்குமோர் இழிமைதான் இறங்கியே
பார்ப்பனக் குடிக்குள்ளே படர்ந்ததால் பயனுண்டோ ! பாதகம் புரிவோர்க்கும் பாவமே
குவிப்போர்க்கும் பதவியோ பதக்கமோ பண்பிற்கு தூரமாய் பதிந்திடுமென்பதை
பகர்கின்றேன். வேதத்தின் வழியிலே வேடனின் மகளென வெற்றியை விருதென பெயரினில்
அணிந்ததில் வீரத்தை யான் சிறு வித்திற்கும் கண்டிலேன். வீணர்கள் பலரையும்
விளையவிட்டவள் வேரொடு சாயும் அவ்விதியினை வேய்ந்தவன் வேந்தனின் உயிரினை விலகாது
காத்திடும் வெந்தணல் விழியொடு விரிசடையானுமே வியப்பிற்கு வியப்பென வேதையுள்
வீழ்த்தியே சாவிற்கு கடன்பட சபித்தது நியாயமே !
அந்தணரே அறம் மறந்து அடியாள்கள் பல
வைத்து ஆநிரையை கொன்று தினம் அயல் நாட்டுக்கனுப்புவதை அனுதினமும் வணிகமென
அரசமைத்தோர் ஆதரிக்கும் அவலத்தை செய்திடவே அவர் கொடியில் மரை மலரும். ஆங்காங்கே
ஒரு சிலரும் ஆகாரம் உண்ணவேண்டி புலாலை புசித்தாலே பொங்கி எழுந்தவண்ணம் பொய் வேடம்
போட்ட பின்னம் புண்ணீர் ஓடவிட்டு மன்னுயிரை வதைத்திடுவார் மானமழிந்த மங்கையரின்
மகவுகளாய் மாசொடு மலந்தோர்கள். மாடுண்ணா அறம் காத்து தானுண்ணாதிருந்திடினும் மறை
வாழ்வு அமைப்பதிலே யாதொரு பயனுமிலை. வீடுள்ளே விளைந்தபடி விமலனுடன் விருந்துண்ண
ஏட்டுள்ளே எழுதியதை ஏற்றிடுவாய் எம்மவரே ! எவ்வுயிரை உண்பதுவோ எடுத்து புலால்
கொள்வதுவோ ஏவி அதை செய்வதுவோ எல்லாமே இழிவாமே ! ஏற்றுமதி செய்யுமந்த ஏற்றமிலா
மதியுடையோர் ஈட்டிய பொன்னனைத்தும் இழிபொருள்தான் என்பதிலே எள்ளளவும் ஐயமில்லை.
ஏவலாட்கள் துணையுடனே எந்திரத்தால் வாதை செய்து இறைச்சிக்கு பொறுப்பாகும்
இறையோனின் எதிரிகளாய் ஏற்க இடமின்றி இணையும் உலகமது இயமன் நரகமென இன்னும்
இயம்புவதோ !
குன்றின் மேல் விளக்கெனவே கொழுந்து
விட்டு ஒளி கொடுக்க வந்துதித்த கொற்றவனை வன்கொடிய கள்வரினம் வாழ்த்தி வணங்காது
வானவரே மெச்சுகின்ற வள்ளலவன் குணம் கொல்லும் கொடுஞ்செயலை கொண்டவள்க்கு கோடானு கோடி
கொட்டி கொடுப்பதோ குடிகெடுத்து வட்டி பெற்றோர் வளமாய் கொடையளித்து வந்த பணத்தொடு
வல்லமை திட்டமிடும் வஞ்சக நெஞ்சிணைத்தும் நஞ்சன்றி நன்றறியா நாய் மகளோ நாதனின்
நல்லியல்பை நாறடிக்கும் நோக்கினிலே பேதைமை தலைக்கேறி பிழையாகும் பொல்லியல்பால்
பண்பை கொலை செய்ய பக்கமுறை பார்வையற்றோர் பரந்திருக்க பாழான பழி போட்டு
பரப்பிடவும் பகலவனை முடக்கிடவும் பதியெங்கும் பாதகரை பதுக்கி வைத்தவள் பரம்பரைக்கு
பன்மடங்கு பொன்னளந்து பக்கத்து ஊர்வசிக்கும் பாவக் குடிகளுக்கு ஆனவரை
கொடையளித்தும் அணுவளவும் பயனற்று அழுது புலம்புவதை அத்தன் அனல் கண்ணன்
ஆர்ப்பரித்து எனக்குரைக்க பித்தன் பிறைசூடன் பெருமானுக்குதவுவதை
பெருங்கடனென்றெண்ணி பேரின்பம் கொண்டானே ! எவன் அடித்து வீழ்ந்தாலும் எழுப்பிவிட
மருந்துண்டு. நமனடிக்கும் வலிகூட நாளாக நாளாக நலம்பெறவும் விருந்துண்டு.
குகனடித்து கொன்றாலும் கூடுவிட்ட பின்னாலும் கொள்ள ஒரு கொடியுண்டு. தவப்புதல்வன்
என்றறிந்தும் தருமம் தகர்க்குமென்றுமறியாது தலைவனுக்கெதிராக தழல்வளர்த்தோர் தலை
தகர சிவனடித்த அடிக்கே செத்து வீழும் விதியன்றி சீருற வழியேது செப்பிடுவாய்
மன்னவனே !
அருந்தமிழெடுத்து அழகுறு விருத்தமமைத்த கவிஞன் அகமொடு போற்றும்
அம்புடை அனகன் அறநெறியுரைப்பது யாதென யானும் எடுத்தியம்பிட இகத்துடையோர் யாவரும்
கேளிர். இவனை ஓதியே இயல்பினில் பாவியர் மரைமலர் ஏந்தியே மண்ணாள வந்ததை
மறைக்காதுரைப்பேன். மானமழிந்து மறந்தனை மறந்த இழிமகளீன்றவர் சிவனை சீண்டியே
செயல்கள் புரிந்து செந்தமிழ் நிலத்திற்கெதிராய் நிற்போர் நெஞ்சறம் பேணாது அழும்
வலியுணராது அடுத்தவர் வடுவின் ஆழமறியாது ஆணவமோங்கும் ஆளும் அரசை அமைத்தவர் கொண்டு
ஆறாசினத்துடன் பாதகம் புரிவர். என்புடை இரத்தம் இணைக்கும் உறவினர் எவராயிருப்பினும்
இழிமை புரிந்திடின் ஏற்றிடலாகாதிகழ்ந்திட தகுமென எண்டிசை ஈசன் எம்பெருமானே
இகத்திற்கு இட்ட கட்டளையறிந்தே என்றும் எமது கடமைதவறேன். இன்குணத்தான்
பிறப்பெடுத்தான் இணையிலா இரக்க நெஞ்சான் இருளுக்கு இடமளிக்கா எழில்முகத்தானெனும்
மாலனெடுத்த மறுமையிலே மனையாளாய் இணைந்திருந்த மயிலாளை மனையொடு பெயர்த்தெடுத்து
மண்தொடா மார்க்கமுடன் மரகத ஈழம் சென்ற வன்குணத்தான் வள்ளலாகி வரையெடுத்த வல்லவனாய்
வளங்குவித்தாண்டிருந்தும் புகழ் குவித்து வாழ்ந்திருந்தும் வலமிருக்கும் ஈசனுக்கு
இடங்கொடுத்த இறைவியுடை இணையிலா வாழ்த்துமழை இவன் முன்னம் பெற்றிருந்தும்
வம்பெடுத்து அவன் மடிய வானவரும் உளமகிழ்ந்தார். எண்குணத்தான் அருளணிந்து ஈடிலா
அரம்பையர் எவளாயிருந்திடினும் கொன்றொழிக்க அவனுதிப்பான் கொற்றவனாய் கற்கி தேவன்.
ஈனர் எண்ணம் இருந்தவண்ணம் இழிவுடைய தாடகைக்கு கொற்றமொரு கேடாயென குமுறுகின்ற
மனமுடையோர் மன்னாதி மன்னன் பின்னே மாண்புடைய மாந்தர்களாய் மார்பெழும் மலையொப்ப
சிற்சிலரே நிற்பரென செப்பியதோ சீருறு செஞ்சடையான். கற்கிக்கு கடைநாள்
குறிக்க கனாக் கண்டோர் கழிசடை பெண்டிர்களீன்று கண்டம் தாங்கியே கண்ணீரருந்தியே
கமலமேந்திய கயவருடனே செவிலியாய் செல்விக்கு சீழடி வருடியே செயலாற்றிய சிற்றம்மை
நோயெனவே சிலிர்த்தெழுந்து தோற்கா வரமுடன் தொடர வழிவிடும் தோற்றப்பிழை தரும்
தொடுவானம் போலவன் தோன்றிட தோற்பாள் அவளுமே துவண்டிட இயலுமே. திருமால் திருத்தடம்
தெரிந்தெவர் தடங்கல் செய்யின் தேவதையாயினும் தீது கௌவும் தெருமகள் நிலையை பெறுவது
உறுதியே. பெருமாள் தலையை பெயர்த்திட கொதித்து அறிவாள் கொடுத்து அனுப்பிய
அரக்கிக்கோ அர்த்தநாரியே அலகிலா தண்டமளிப்பதும் தகுதியே. அடியேன் அருள் நாக்கில்
அலருகின்ற வாக்கனைத்தும் அரளி விதையொத்த அரக்கியின் விழி சென்றும்
அதிர்வூட்டாதேனெனில் அடும்பாவப் பிழையினை அவளே உணராது அழுதும் பயனின்றி அணை கடந்த
வெள்ளமென அத்துமீறி போனதுவே. அணையான் எம்மானை அணைக்க அல்குல் பற்பலவாய்
அனுப்பியவள் அறியாள் அண்ணல் அழுக்கு இதழுடன் ஆசையால் இணையானென்பதனை ஈரேழுலகறியும்
இவையுடனே எரிகதிர் அகலறிய எல்லாமும் நிலவறிய ஈசனே யானறிய ஏற்படுத்தித் தந்தானே !
சீறும் கடலுடுத்த சிங்காரச் சிரசாகும்
நெய்தல் நகரினையே சாரும் புறமாக சாற்றிடுவேன் அந்நகரோ சிற்றாள் பாக்கத்துள்
சிற்றினத்தேக்கமுடை முட்டாள் தலைவனது மூலப்பெயரினிலே முக்கண் முதல்வனது அரச
பரம்பரையாய் அணையும் சொல்லினிலே செக்கச் சிவந்ததொரு சிவனின் சீரிருக்கும். அவனின்
பெயர் கூட ஐந்தாய் எழுத்திணைக்கும் பித்தன் பெயரிருந்து வெட்கம் ஏதுமின்றி வீணர்
விழுதிறக்கி பழுதாய் ஆண்டவண்ணம் பாதகர் வாழும்வண்ணம் பாவத்தை குவித்த சின்னம்
பன்முகன் கதை முடிக்க பாதகிக்குதவிடுவான். அங்கு காடு கழனிகட்க்கு கதிர் வர
உதவிடவே கடும் பணியாற்றியவர் உயிருணவூட்டிடவே ஊருக்குக் கடன்பட்ட அம்மூடர்
இனங்களையே மொத்தமும் அடிமையாக்கி முக்குலப்போர்வை போர்த்தி முற்றிய கலிமகளாய்
முக்கிய வேடமிட்ட முதல்வியின் விளையாட்டு முழுவதும் யானறிவேன். அன்பே அரும்பாதோர்
ஆணவ அகமுடையாள் அத்தன் கொடியடைய ஆடிய ஆட்டத்தால் அழியா இழிவுடையாள் ஆர்க்கும்
அஞ்சாது அறம் மீறி ஆடியவள் அழுத்தம் மேல் அழுத்தமிட்டு அகமிழந்த அடியாரை அம்பெனவே
ஏவிவிட்டு அண்ணல் தலை கொய்தெடுக்க அனுப்பியதை அறிந்தவனோ அரவணிந்த ஆதிசித்தன்
அதிர்ச்சியுற்று அழுகைகொட்டி அவள் கதையை முடிப்பதற்கு எடுத்த இடம் எழில்தமிழை
இணைத்ததொரு இன்னிசை கிளைமொழிதான் இருளடைந்த வடமொழியை இரண்டற புணர்ந்த பின்னும்
எழிற்றமிழிற்கிணையாகா இரண்டாமின மழலையினை ஏற்றெடுத்த இன்னிலத்தில் பதிந்ததொரு
பாங்குள ஊரில் பார்ப்பனப்பதியுறை பாழும் கூண்டுள் பல்லுடைந்த பாம்பெனவே பக்க துணை
இல்லாமல் வெட்ககேடு வெந்தணலுள் வீழ்ந்தவளோ விடியலின்றி வெற்றிடமாய் ஆகிடவே வேதனையை
விருந்து வைத்த விழியுடை தழலீசன் வேரறுக்க வழிவகுத்தான். ஆர்க்கும் குடியல்லாது
அம்மையப்பன் அடிவருடி அடிமை பணியமைத்து அகங்குளிர்ந்து அறமணிந்தோம் ஆதலினால் அவன்
தயவால் அருள்வாக்கனைத்தையுமே அகிலத்தார் ஏற்றிடவே அள்ளித் தந்திடவே அருள் கூர்ந்து
ஆய்ந்திடுவாய் இருள் சூழ்ந்த இவ்வுலகே !
பாகம் 186.
குன்றாய் குணமுடையோன் கொல்லா நோன்புடையோன் கூடா நட்புடமை கொள்ளா
உயர்வுடையோன் எல்லாமவன் செயலாய் எண்ணும் அகமுடையோன் ஈகை செய்வதிலே இவனே மழை முகிலை
இரண்டாம் நிலையாக்கி எழுமோர் கொடை முடியான். கன்றை அறிந்தது போல் கற்கி பெருமானை
நன்றாய் அறிந்தவனே நாகம் அணிந்திருக்கும் நாதன் ஒருவனென கண்டேன் கண்ணாலே காதால்
கேட்டிடுவாய் ! குற்றப்பரம்பரைகள் கொதித்தே எழுந்தாலும் கொற்றம் முழுமையுமே
கூட்டணி சேர்ந்தாலும் பொற்றம் ஆள்பவளின் பூமனம் நிறைந்தவனை போர்த்தா மணவாட்டி
புவியின் குடை ஏற்ற பிறகே புணர்ந்திடுவாள். அட்டம் அருகமைந்து அச்சுற வைத்தாலும்
ஆருயிர் அம்மையப்பன் அவனே பொறுப்பாவான். விட்டம் விரிய வைத்து வேதியர் இணைந்தாலும்
விட்டுவின் வீரியத்தால் வீணாய் மரணிக்கும் விதியை ஏற்பாரே ! நட்டம் அதுவரையில்
நாநிலம் முழுமைக்கும் நாடும் நலமிழந்து நடுங்கும் துயர் பொதிந்து நீளும்
அதுவரையும் நெறியான் அருளாலே நெடுமான் வரும் வரையும். எக்குலமாயிடினும்
ஈசனுக்கெதிர் எழுந்தால் இம்மை மட்டுமன்றி எம்மை பிறப்பெடுத்தும் ஏதும் பயனிலையே.
முக்குலமாயிடினும்
முகுந்தனை முறைத்துக்கொண்டால் முற்றும் அழிவதுடன் முடிவுரை எழுதப்படும். இயமன் உலகிற்கே
இட்டுச் செல்லாத உமையோன் உளம் வெறுக்கும் ஒவ்வோர் மாந்தருக்கும் உதவிடுமெச்சரிக்கை
உரைப்பது என் கடனே. மூன்றாம் விழி திறக்க முறையொடு குரு சேர்ந்து முயன்று
பயின்றாலே மும்மலம் அகன்றபடி திருவினையாகிடுமே. இறையோடுறைந்திடவே எல்லாம்
கிடைத்திடவே ஏதும் கவலை கொள்ளாதிம்மை முடித்தபடி ஈசனடி கலந்தால் எம்மையும்
பயமில்லை எழுபிறப்பே எமக்கில்லை. வெண்மையோடகமிருந்தால் விண்ணவர் வீடென்ன விரிசடை
வெண்டலையான் வீட்டுக்குள் விருந்தேற்கும் மன்னுயிரறியாத மருந்தின் மணமறிந்து
மறுமையுள் மாட்டாத புதுமை வழி சொல்லி பொய்மைத்தளை கிள்ளி நலனை நட்டு வைத்தேன்
நாட்டமுடையோர்கள் நாளும் மகிழ்ந்திடவே !
கண்ணை இழந்தோர்கள் காலை வைக்குமிடம் கலியே கருவம் கொண்டு நின்று
உளங்களிக்கும் நீசர் கறை படிந்த பத்துள் கரைபுரண்டு பாவம் ஓடுமிடம் ஒன்றை
ஒளிவின்றி உரைப்பேன் கேளாயோ !
உள்ளம் அலைபாய உடலை விலை பேசி உறுப்பை
ரசிப்பதற்கு கற்புக்கடம் கழியும் காரிகை கூடமதில் காமுகர் புகலிடத்தில் கலியன்
ஆடுவதை கண்டே கண்ணியத்தான் கற்கி தேவனுமே பெண்ணியம் பிழையான பீடையர் முற்றத்தில்
எண்ணியும் பாராது இருந்திடல் நலமென்பான். இன்னுயிர் எடுப்பதற்கு ஏற்ற இடமென்று
இழியோருடன் புழங்கும் பொன்னுயிர் மதிப்பறியா புலால் விழும் பொய்யிடத்துள்
புக்கவும் அவன் நாடான். நல்லறம் உயிர்த்தெழவே நாதனுயிர் வேண்டின் நடுங்காது
அளித்திடுவான் நம்மரும் அண்ணலவன். நஞ்சின் விடமருந்தி நாயாய்
வீழ்ந்திடினும் நாடான் மதுக்கூடம். நாறும் புகழ் இழந்து நாளும் அறிவிழந்து சேரான்
சீரழிந்தோர் சேர்க்கையுடன் சிந்தையிலும் கூடான். சூதுடன் நிலை கொள்ளும் சொல்லொண்ணா
கலைகளுமே சீருறு கலையாகாதோர் சிற்றின கலையென்றும் சேரிடம் சேர்க்காது சோறிட
உதவாது சுற்றம் சிதைக்குமென கருதிடா கருநெஞ்சக் கயவர் நடுவினிலேயே காசினிக்குள்
கடுங்களமிதுயென்று கற்கி தேவனுமே கடந்தே போனதையே கண்ணாரக் கண்டேனே !
ஒற்றை வழியொன்றை உய்ய பரிந்துரைத்தே
உலகின் உயிரொளிர உரிய மருந்தெடுக்க உயரிய வழி சொல்வேன். அற்றை மகளாகி அறத்தை
கொல்பவளாய் அண்ணலுக்கெதிராகி அரசை இயக்கிடினும் அற்றைப் பொழுதெல்லாம் அம்புலி
அணிந்தவனே அரணாயிருப்பானே ! இற்றை பொழுதெல்லாம் இறையோன் உடனிருந்து எண்ணரும்
எதிரிகளை என்றும் எரிப்பானே ! உற்ற தோழமைகள் ஒன்றும் ஒட்டாமல் உறவு முறையனைத்தும்
உறையா வாய்ப்பமைத்து ஊற்றை சடலத்தாள் உயர்விலை கொடுத்திடினும் கற்றை பணம் கடத்தி
கயவர் தலைமையுறும் கடைமகள் காலடியில் எற்றை நிலமைகளோ இதுபோல் இருந்திடுமோ. முற்றும்
அறிந்தவனாய் மூலப் பரம்பொருளாய் முக்கண் மூர்த்தியுமே எக்கண் தவறிடினும் இருக்கும்
எரி கண்ணோடென்றும் எழுவானே. கொற்றைக்குடி பிறந்தும் கொலைகளில் தேர்ச்சியுற்றோள்
கொடுமைகள் புரிந்திடினும் குற்றம் நிகழாமல் குணத்தால் எண்ணியல்பை கொண்ட கூத்தனுமே
கொதித்தே அழிப்பானே. பிட்டை உணவாக்கி பிதற்றிக் கொண்டபடி பெருங்கடனாற்றாமல்
பெருங்கோன் பாண்டியனின் பிரம்படி வாங்கியவன் அட்டை போலுறைந்து அண்ணல் அருகமைந்து
அல்லல் தர நினைப்போர் அனைவரின் வாலையுமே ஒட்ட அறுத்துவிட்டு
ஒப்பருள் புரிவானே !
இருக்கும்
சாபத்தோடு இனியும் ஏற்காது இடபவாகனனை எண்ணி உருகாது கெடுக்கும் மனத்தோடு கீழமை
பண்போடு பெருக்கும் பாவத்தால் பெருமலை குவித்தவண்ணம் உதிக்கும் எண்ணமெலாம் உய்ய
விடாது உத்தமி பெண்டிரது உயரிய சரடுகளை உடைக்க முயன்றாலே உமைதான் விடுவாளோ !
மணக்கும் மாலனது மடியா உயிரினையே மலிவாய் எண்ணியதால் மன்ற தீர்ப்பேற்று மயிரினும்
இழிவுற்று பெற்ற தண்டத்தால் பிணையில் வெளிவந்தும் பெருமை என்றெண்ணி பெருக்கிய
கயமைகளால் பெறும் சிறைக்காலமென நான்கொடு பன்னிரெண்டை நன்றாய் பெருக்கிடவே வந்த
திங்களினை வாக்காயுரைக்கின்றேன். இரக்கமேதுமின்றி எய்த கணையாலே இழந்த உயிரோடு
உறங்கும் உடல்களெல்லாம் உறங்கத்தான் விட்டிடுமோ ! உயரே பறந்ததொரு ஒப்பற்ற பருந்தெனவே
ஊர்க்குருவிக்கச்சுறுத்தி உள்ளவரை வாழ்ந்தாலும் சின்னதொரு சிட்டனவே சிறகடிக்கும்
குருவியென செவ்வேளே இருந்திருந்தும் சிதைக்க முயன்றதுதான் சிக்க வைத்த ஊழ்வினையே.
தெரிந்தால் அவளும்தான் திருந்திடுவாளென்றெண்ணி தெரியாதிருந்திடவே துளிர்த்த தூயோனே
துணிந்தே நட்டு வைத்த தோற்றப்பிழை யொன்றை தொங்கவிட்டவண்ணம் தூங்கும் மன்னவனாய்
துஞ்சாதிருந்திடுவான். தெரியா தேசத்தில் தெரு நாய் நிறையுடனே திருவிளையாடலுடன்
திருவுடல் மறைத்தானே. கொதிக்கும் கொடுங்கனலின் கோரப் பசியொப்ப கொண்ட வெஞ்சினத்தை
கொழுந்தாய் விரியவிட்டு விழைந்த விதி கெட்டு விடாப்பிடியேற்று வேந்தன் வேரறுக்க
ஆண்ட குலமுதித்து அதிரும் அற்பருடன் அழிக்க எழுந்தாலும் அழிவு காலமொன்று அருகில்
வருகயென்று அழைப்பு விடுத்த வண்ணம் அறத்தை பாடுவேனே. அற்ற அறிவோடு ஆணவச் செறிவோடு
அடங்கா அரிமா போல் ஆடிப்பொழித்தவளோ சீறும் செங்கதிரை சீண்டி பார்த்ததனால் சருகு
போலவளும் சாவை அணிவாளே. சேரன் நன்னாட்டுள் சீப்பை செலுத்தியுமே சிக்கா சிரம் கொண்ட
செம்மலுக்கெதிராக சீறி எழுவதற்கே சீர்கள் பல தந்து செழுமை வளம் கொண்டு செய்யும்
துணிவு வந்து செயலை தடுத்தவண்ணம் சிதைத்து விட்டவனும் சிவனே ஐயமில்லை. நாதன்
முதற்கொண்டு நாய்கள் அனைத்தையுமே நடிக்க விட்டதனால் நாகம் அணிந்தவனை நகைக்க
தோன்றிடுமே. தூண்டி விட்ட வண்ணம் துவழா துட்டர்களை தூண்டில் போட்டிழுத்து தொங்க
விட்டிடுவான் கங்கைமுடிகொண்டு மங்கையுடல் நின்ற மாதொரு பாகனுமே. திணித்த
கொடுமையெலாம் திரும்ப தேடிவந்து தீர்க்கும் கணையெனவே தின்று ஏப்பம் விட துடைக்க
இயலாதோர் தூயோன் அவனென்றும் துளைக்க இயலாத தோட்டா போலென்றும் உரைக்க கடன் பட்டு உமையோன்
உரைத்தானே. திளைக்க இயலாத தீதின் வடிவாக தொலைந்து போயிடவே தோழிக்கமைந்தவளாய்
வருந்தா வன்கொடியோள் வகுத்த கணக்கெல்லாம் வான்பிறை அணிந்தவனே வந்தென் நாக்கமர்ந்து
வாக்காய் தந்திடவே வணங்கி நன்றி சொல்வேன் வாழ்க வளமுடனே !
சுற்றிச்சூழ்ந்த
பகைவர்களை சுட்டெரிக்கும் வல்லமையை விட்டுவுக்கு வழங்கிடவே விண்ணவர்கள் வாராமல்
விடியல் இங்கே வாராது. வெற்றி வாகை சூடிடவே வேந்தன் கருமம் ஓங்கிடவே கற்றை குழலை
முடியாமல் காத்திருக்கும் காளியுமே கடமை முழுமையும் புரிவதற்கே கண்ணீர்
பெருக்குடன் இருப்பதனை கண்டதால் யானும் கரைந்தேனே ! மறையோன் மண் விளையாட்டெல்லாம்
மன்னன் வடிவில் வந்ததனால் இறையோன் திருவினையாக்கிடவே ஈரேழுலகும் உதவிடுமே.
கூற்றுவன் கூப்பிடும் நாளருகே கூக்குரலிட்டு அழுதவண்ணம் கொன்றை வேந்தன் முன்வந்து
கோரும் கரமலர் குவித்தவண்ணம் கூனிக்குறுகி நின்ற பின்னம் காத்திடு என்றெவர்
கதறிடினும் கண்டுகொள்ளா கண்களுடன் காலகாலன் ஒளிவது தான் கால காலமாய் அரங்கேறும்
காட்சியாக கண்டேனே. கூட்டினை விட்ட குஞ்சுகளை கொத்தியெடுத்து குதறுகின்ற
கோட்டானொத்த கூற்றுவனின் கூத்தை யானும் கூறியுமே கொள்ளா செவியுடன் குதூகலித்தால்
கொடுத்தே சிவந்த கரம் கொண்ட கொடைகுண சிவனும் இடம் விடுவான். தேற்றறிவாளனை
தீர்த்திடவே தீவினையனைத்தையும் ஏவிவிட்டோர் தீக்கே உணவாய் ஆயிடுவர். சூனியர்
சூத்திரம் சுடர்விடினும் சூரியன் எழுந்து சுடர் விட்டால் ஆரிய வேதங்கள் அத்தனையும்
அடுப்பினை எரிக்கும் விறகாகும். சேரன் நாட்டு செய்வினையால் செய்த செப்படி
வித்தகரும் சிதைந்தேபோவார் என்பதனை சிவனே நன்னெறி புகட்டுவதை செப்பிட யானும்
கடன்பட்டேன். வேந்தன் வேருக்கு வெந்நீரை விட்டு மகிழ்ந்த வேடர்களை விடியா பாவ
இருள் சூழ மும்மை கணக்கையே முடக்கிடவும் முக்கண் முதல்வன் ஆணையிட்டான். வெம்மை
விழியான் வெண்டலையான் வெண்மை கொண்ட மனமன்றி வேறோர் மனங்களை அனுமதியான். கமலன்
முதலாய் கனிவுடைய காக்கும் தேவதேவியரும் கற்கி ஈசனுக்கருளிடவே காலம் கனியும்
நேரமதை கண்டேன் எந்தன் கண்ணாலே.
தங்கமகன் சிங்கமுகன் தமையன்தான் மால்மருகன் என்றிருந்தும்
தன்மானமிழந்தவளின் தனிவழியில் ஊடுருவி ஒரு பகையும் வளர்த்ததில்லை. வங்கக்கடலோரம்
வந்து வறுமையோடு வாழ்ந்த எங்கள் வானுலகின் அங்கம்தனை வஞ்சகியே வலிய வந்து
பங்கமேற்க எண்ணியவள் பாதையிலே அவனும் வந்து பாதகங்கள் செய்ததாக பார்த்தவர்கள்
யாருமில்லை. பின்னர் இப்பேய் மகள் ஏன் பிணம் தின்னும் கழுகாக பெருமானை கொல்ல வந்த
கொடுமைதான் என்னவென்று கூத்தனிடம் கேட்டபோது கூறியதை கேட்டு யானும் கொண்ட துயர்
கொஞ்சமல்ல. காவியத்தின் கதை முடிக்க கயவர்களை ஏவிவிட்ட காரிகையின் காதோரம் கண் இழந்தோர்
கூறியதோ அண்ணல்தான் அவதாரம் என்றறிந்த ஒரு கூட்டம் ஐயன் வந்த மறுகணமே அடங்கிடுமே
அவர் கொட்டம். கோலக்கமலத்தை கொடித்திரையில் கொண்டதோர் கூர்சரத்து விலை மகளிர்
குப்பையென கொட்டி விட்ட குணங்கெட்ட மகவுகளாய் கொடும் வட்டி வணிகம் செய்யும் படுபாவ
மாந்தர்களோ பாதகத்தை பல்லாண்டாய் பணியெனவே கொண்டவளை அடையாளம் கண்டபடி அரக்கியினை
பொறுப்பாக்கி அண்ணல் கதை முடிப்பதற்கு அவளையே ஆயுதமாய் அணுகியவர் அனைவருமே அலகிலா
பொன்னளந்து அதன் மூலம் அறிவிழந்து தமிழகத்து கயவர்களின் தாங்காத கைநிறைத்து அறம்
கொல்ல துணிந்தனரே ! சங்குடையோன் சங்கறுக்க சங்கரன்தான் விடுவானோ ! சங்கத்தமிழ்
வளர்க்க வந்த சிங்கத்தமிழ் வேந்தனது சிரமறுக்க சீறுபவர் சிறிதளவும் நிலைப்பாரோ !
ஈனமகள் வஞ்சமுடன் இப்பிறப்பை எடுத்த பின்னம் எம்மானை பழி தீர்க்க இரவுபகல் பாராது
எழுந்த பகை தீராது எண்ணரும் நாய்களையே இருந்தபடி ஏவி விட்டு எதிர்வினையாற்றியதால்
அமைந்த அவள் வாழ்வும் கூட அடியோடு தகர்ந்ததற்கு அக்கையுடன் சேர்ந்திணைந்து அவள்
செய்த கொடுஞ்செயலே. மண் மார்பின் மாண்பற்றோர் மரணமிலா மன்னவனை மாய்த்திடவே எண்ணி
எண்ணி மனப்பால் குடித்தாலும் மடையருக்கு விளைவதெல்லாம் விழிநீரும் வேதனையும்
விடியாத சோதனையும் உருவாகும் தோல்விகளே ஒப்பரும் சாதனையாய் உருத்தெரியாதொழித்து
விடும். உலகுடையான் உடனிருக்கும்
உயர் குடியே ஆனாலும் கயவருடன்
கைகோர்த்து கற்கிக்கு எதிரானால்
காலமெல்லாம் சபிக்கப்படும்.
காட்டெருமை வாகனனின் காலடியே ஒதுக்கப்படும். கருமமது ஓயாது காலத்தால் அழியாது
புதைந்த பின்னும் கூட வந்து பொல்லாத பிறப்பு தரும். தருமமே அகலாது தலைவனிடம்
விலகாது தழுவியே இருந்ததனால் தகராத சாவிலியாய் தளராத பேரொளியாய் அவனுமே ஆனதற்கு
அமரர் முதல் குமரன் வரை அனைவர்க்கும் நன்றி சொல்வேன். ஞானமதில் நலமிருந்தால்
நற்கதியே நன்று செய்யும். வானம் மீது ஆணையிட்டு வாக்குரைப்பேன் கேளாயோ !
நீதிநெறிகள் வழுவாத நேரிய பூனைகள் நிமிர்ந்ததனால் வாதிப்பூனைகள்
வலுவிருந்தும் வாலை முறுக்கியே வாழ்ந்தாலும் வன்முறை வழிகளை அடைத்துக் கொண்டு
வஞ்சகருடனே வாய்ப்பின்றி வாளாதிருப்பதை கண்டேனே. வீட்டை காக்கும் பூனைகளை விருதாய்
மாற்ற இயன்றிடுமோ ? விருதுகள் வாங்கிய பூனைகளை விரும்பி அவளும் சேர்த்ததனால்
வேலைக்காகா வீழ்ச்சியுடன் வீணன் மகளும் வீழ்ந்த வண்ணம் வெற்று வேட்டாய் வெடிக்காது
வேந்தன் வாழ்வையும் முடிக்காது பட்டுப்போன பனைமரமாய் பறவைகள் கூட பதம் பார்க்கும்
பாவி மகளும் படுத்தாளே ! இறையோன் விதியே இதுயென்று எல்லா உண்மையும்
அறிந்திருந்தால் இன்னா வழியை புறக்கணித்து இன்னொரு வாழ்வை தேர்ந்தெடுத்து இல்லற
வாழ்வில் ஈடுபட்டு நல்லறம் நல்கி நரகுறையா நாதனூரில் நன்று செய்து நாளும் இசைபட
வாழ்ந்திடவும் நல்வாய்ப்பாய் அமைந்திருக்கும். பாவம் அவளது ஊழ்வினைதான் பாழாய்
படுத்தி படியகற்றி பற்றி ஏறவே இயலாமல் பதவியில் அமரவும் முடியாமல் பாழும்
கிணற்றுள் விழவைத்து படுக்கை போட்டு சாய்த்ததுவே. வாய்க்கா வலிய வாய்ப்புகளை வாரி
அவளையும் எடுக்க வைத்து வானின் அளவு அதிகார வல்லமை கொண்டு பறக்க விட்டு தலைகீழே
தள்ளி விட்டு தழலீசன் சிரித்தானே. இனிய வாழ்வே இல்லாமல் எல்லா வழியும் அடைப்பட்டு
உரிய வழியே தடைபட்டு உடைந்து போனவளுடனிருந்தே ஊக்கப்படுத்திய உத்தமன் போல்
காப்பேன் என்றவன் காக்காது கமலம் தாங்கி நின்றவனின் காவல் தெய்வம் ஏதுமின்றி
களங்கம் தாங்கிய இயக்கமொன்று கையை இணைத்து வென்றதுவே. வற்றா செல்வம் வந்துறைந்தும்
வாக்கின் விலையோ வெற்றிகொண்டும் வாழ்ந்தது அது ஒரு கார்காலம். உற்ற செல்வம் ஊர்
முழுதும் ஒட்டி இருந்த போதினிலும் உயரே அவளை ஏற்றாமல் குற்றப் பின்னணியாயமைந்து
கொற்றம் தகர வழி வகுத்து குற்றுயிராக்கி போட்டதுவே. கெட்ட கேட்டின் மகளாக கீழ்
மகளெனவே பெயரெடுத்து பட்ட பனைமரமானதனால் பறவைகள் கூட பதம் பார்க்கும் பாரா முகத்தை
பெற்றதெல்லாம் பார்த்திபன் மீது பரிதாபம் பாராக் கயமையாற்றியதால் பரமன் விட்ட
சாபமென குமரன் அடியார் கூறியதை குறைத்து மதிப்பிடல் கூடாது என கொற்றவை எனக்கு
உணர்த்தியதை கொண்டிட தந்தேன் கேளாயோ !
அண்ணல் நலம்பெற அனைத்து நெஞ்சிலும் எண்ணம் நலமுடன் இருத்தல்
கொள்ளவே அம்மை உமையுமே இம்மை முழுமையும் இன்னலகற்றிட இணைந்து செயல்பட தெளியுமே.
இந்து சிகாமணி தந்த சேதியை யாருமறிந்திட எந்த தடைகளும் இல்லையே. இங்கு பொருள்படும்
இந்துயென்பதோ தங்கமதியினை தலையில் சூடிய எங்கள் ஈசனை இயம்பும் பெயரென எளிதில்
புரிந்துகொள் இன்பத் தமிழகம் ஈன்று புறம் தந்தும் எழுச்சிகொள்ளாததேன் வேங்கையே.
இந்து மதமென இந்த உலகினில் எந்த மதமுமே இல்லையே. இந்து என்றதோர் இன்மை மதம்தனை
ஈசன் ஏற்கவே இல்லையே. இந்து என்ற சொல் இந்த பரதத்தை ஆண்டுச்சென்றதோர் ஆண்டை
அன்னியர் அர்த்தமற்றதோ டளித்து சென்றதோர் அழகு சொல்லென அறிந்துகொள். சங்க நூல்
முதல் எந்த நூல்களும் சாற்றியுள்ளதாய் போற்றியுள்ளதாய் புலரும் பதிவுகள் இல்லையே.
அந்தணர்வழி வேத நூல்களுள் ஆய்ந்து பார்த்ததில் எங்கும் எதிலுமே இந்த சொல்லுமே
இல்லையே. சைவ வைணவம் சார்ந்த கணபதிம் சக்தி சூரியம் மற்றும் குமரனின் ஆறு
மதங்களாய் அமைந்த அனைத்தையும் ஆதிசங்கரர் அணைத்து பெயரிட்டு அங்கம் ஒன்றென அருளும்
தருமமாய் அறத்தைக் கொண்டுத்தான் ஆக்கினார். எனினும் இங்குதான் இந்து என்றதோர் இழிய
பெயரைத் தான் இட்டு வைத்ததோ காலம் செய்ததோர் கோலமே. வீணர் பெருமையை விரும்பி
பேசிடும் ஞானம் குன்றியும் நலமும் குன்றிய மனமும் உற்றவர் நம்மை ஏய்த்தது உண்மையே.
மடையர் பிழையினை மறுத்துப் போவதே மாண்பின் மணமுடை மாந்தரே அழுக்கு கூற்றென
அகன்றுபோவதும் அற்பப் பேய்களோ அணியும் சிறுமையை அழிக்க வந்தவன் அழகு பரதத்துள் ஆழி
மூன்றையும் அடக்கி ஆண்டிடும் அன்னை குமரியின் அழகு பாதத்தில் அமர்ந்து இருப்பதை
எமக்கு உரைப்பது ஈசன் பணியென அறிகவே !
நாய் மகள் மடியிருந்து நச்சு கொடியிறங்கி வந்து நாணமிலா கீழோனை
நட்டு விட்ட காரணத்தால் ஓநாயொருவனும் உள்ளத்தால் கள்ளமுற்று ஒளிந்து வந்தவனோ பேய்
மகள் ஏவி விட்ட பெண் பித்தனாமவன். மாபெரும் மலர்ச்சந்தை மன்னனூர் மண்ணளந்தால்
இருகாதம் இருக்குமங்கு கந்தனே குன்றம்மீது கவினுற கொலுவுற்று காத்திட கடன் பூண்டு
திருத்தொண்டாற்றுமொரு தெய்வீக தோரணையை கொண்டதோ வாளை முன்னம் கொள்ளுமொரு வல்லினமோ
கூடும் உறவெடுத்து கூவிளத்தின் நிரையெடுத்து கோர்க்கும் முதலெழுத்து கூட்டிவரும்
ஊரென யான் கூறியே வாக்குரைப்பேன். வாழ்பவனோ அங்குறைந்து வஞ்சம் தாங்கி வந்த வண்ணம்
வலுவாய் வான்தமிழில் தளவாய் பெயரினையே தலையிலவன் சுமந்த வண்ணம்
சுந்தரமாயிருக்குமென சொல்லியதோ சுடர் விழியான். துட்டனாய் அகங்கெட்டும்
தொட்டிடத்தான் தூய்மையுற்றும் தொல் குடியல்லாத வேளான் குடியுள்ளே விரிந்ததொரு
விலைமகனோ அண்ணனின் கொடி தாங்கி அரக்கிக்கு அடிபணிந்தே அண்ணலின் தலை கொய்ய
ஆட்களையும் மேய்ப்பானே. வாயினை வலுவாக்கி வழக்கினை தனதாக்கி வாழ்ந்ததுதான்
மன்றமுள்ளே பொய்யினை பிழையாக்கி மெய்யினை வளர்த்த வண்ணம் மெருகுற வாழ்ந்த கிண்ணம்
அமைச்சனாய் அமர்ந்ததெல்லாம் அவள் தயையென்று சொன்னால் அரசியலார் அறிந்து கொள்வர்.
நலமுறையா நஞ்சுறைந்து வலம் வரும் வஞ்சகனோ நிதம் பெரும் பொருள் குவித்து நிறைவாழ்வு
கொண்டதொரு வலுவான கழகமென வாழ்ந்த இலை இரண்டின் மூலம் வந்ததாலே கருவமுற்று பெருமான்
பாதைகளில் பேரிடரை விதைக்கவிட்டு பாதகரை பரப்பி வைத்த பாவச்சுமை தாங்கியோனின்
பாழுடலை பிணி தின்னும். சாகும் விதி தீண்டும் முன்னம் சாகாமல் சாகும்படி சங்கரனே
சாபமிட்டு சாட்சியாக எனை நிறுத்தி காட்சி காண வைப்பதனை கண்டு சொல்வேன் மானிடமே !
சோறிடும் தமிழகம் சூட்சியால் வீழ்ந்திடும் மாபெரும் வரிகளும்
மறைமுக கப்பமும் யாவையும் கறந்திடும் எண்ணெய்போல் பிழிந்திடும் இழிசெயல் இங்குதான்
இடர்தர நிகழுமே. சூதுடை அமைச்சகம் சுரண்டிடும் சூத்திரம் சொல்லிட மறுக்குமோர்
ஒன்றிய அரசுமே உதவிட தயங்கியே சொந்தமாய் ஆக்கிடும் சொத்தென வளங்களை சுருட்டிட
துணியுமே. ஆண்டகை அனைவரும் அன்பிலா வழியிலே அடிமட்ட குடிகளை அலறிட வைக்கவே
மாறிட வழியிலா மாற்றிடும் வல்லமை மன்னர்கள் அறிந்துமே மாற்றிடத்துணிவிலா மரமென
பண்பிலார் மறலிக்கு ஊட்டவே மரித்திடா மரிமகன் மன்னரின் மன்னனாய் எடுப்பது புவியையே
இன்னும் கேள் சொல்கிறேன். சிவனையே வணங்கியே தமிழையான் அணுகினேன். சேவையை செய்யவே
ஊனையும் உயிரையும் ஒரு நிலையாக்கியே ஓதிடும் கவிகளில் ஒளிந்துதான் இருப்பதோ
உமையினை உடலொடு இரண்டற கலந்தவன் உதவிட உலகினை உயர்வொடு ஆளவே உதித்திடும் கதிரவன் ஒளிவிடும் இடத்திலே
உறைவதென் கடமையே ! அம்புலி மலரையே அணிந்தவன் இருக்கையில் சிந்திடும் விழிகளில்
சிந்துநீர் வடிந்திடின் செவ்வரம் வந்து தான் சீக்கிரம் சேருமே. எங்கெலாம் நீதிமான்
இடரொடு உழன்றிடின் எண்ணிலா நன்மைகள் இன்புற திகழுமே. அறத்தினை பாடியே அழிக்கும்
ஓர் வரத்தினை அமைத்துத்தான் கொடுத்ததே அடிகளார் போற்றிடும் அப்பெரும் அப்பனே.
விழிப்பொடு அவனுமே வீதியில் தூயின்றுமே விரிசடையானுமே இருப்பது அவனிடம். இழிவொடு
பிறந்தவர் இடருற தீமைகள் ஏவியே செய்யினும் உறைவது நரகமே. உருவிலியாயினும் உத்தமன்
பகையெனில் உலகுடை நாதனின் ஒளிவிழி எரிக்குமே ! இருசுகள் ஈட்டியாய் எழுந்த அக்காட்டிலே இறையடி
யார்களை இருசுகொள் எழிலகன் இறைஞ்சியே வேண்டியே குருவென கொள்வதோ குறுமுனியாகுமே.
இருசுடர் கூடஎம் ஈசனின் கண்களாய் இடையிலோர் ஒளிச்சுடர் எரித்திட இருப்பதே ஈடிலா
அண்ணலை என்றுமே காக்கவே !
பாகம் 188.
ஒற்றை கண்ணுடையோன் உறவு கிளையொன்று பொற்றம் பொலிந்தோளின் புருடன்
பூத்தெழுந்த முற்றம் அருகிருந்து மூவிரண்டு காதமென முறையொடு முந்தி சென்றால்
முத்துநகர் முன்னே முத்தமிடுமூரில் முக்கும் இயல்புடையோர் முளைத்த கடலோரம் மணமொடு
வந்திணைந்து மனைவிபோல் பாடு நின்று பதியினையுரைத்தபடி பதறுகள் நிறைந்திருக்கும் பண்பிலார்
அறங்கெடுக்கும் அதிலுறை மாந்தர்களை பாவக்குவியல் கொண்ட பாதகி முன்வந்து பணமழை பல
பொழிந்து பகலவன் கதை முடிய பதறாது முயன்றதனால் முகுந்தன் மூச்சொடுக்க அமைந்த
அடிமைகளாய் அண்ணல் மனையருகே அரவப்புற்றமைத்து அலைந்து உயிரெடுக்க ஆவலாய்
அமர்ந்திருந்தும் அனைத்தும் பொய்த்துவிட அம்மையை அணைத்தவனே அணையா விளக்கெனவே
அனைத்தையும் தகர்த்தானே. கட்டிய அவர் கொடியோ கருமை செம்மையென கழகம் நின்றிருந்தும்
அண்ணன் விரலொன்று ஆளைகாட்டிடுமே. அம்புலி நாதன் மூலம் அறிவேன் அனைத்தையுமே அன்புக்
குன்றாகி அறிவுக்கொழுந்துவிட்ட அஞ்சன் அறியானே. கூடி குழுவமைத்தே குற்றம்
புரிந்தவரின் கொட்டம் அடங்கியபின் குடியை தகர்ப்பதாக கொன்றை வேந்தனுமே தந்த
வாக்குடனே தழலாய் எழுந்தேனே. அண்ணல் பகைக்குள்ளே அங்குலம் நுழைந்திடினும் ஆணவச்
செருக்குடனே அடங்காதிருந்திடினும் ஆடக மணிமுடியே அணிந்து ஆர்ப்பரித்தே
அரியணையேறிடினும் விண்ணவர் வீணர்களை வீணாய் விடமாட்டார் வேரொடு சாய்ப்பதைத் தான்
விதியாய் அவரமைப்பார். அளியனுக்கெதிரணியாய் அலைகடல் வெகுளுதல் போல் அந்தணர்
திரண்டாலும் அகப்பட்ட அனைவருமே ஆருயிர் வாழ்விழந்து அழிந்து போயிடுவர். பின்னமும்
சொல்வேன் கேள் பெருமான் குறித்தெனக்கு உதித்த வாக்கனைத்தும் ஒளிவு மறைவின்றி
ஒவ்வொன்றாய் தருவேன். வாதை வழிகாட்டும் வஞ்சக வணிகரெல்லாம் போதை பொழிகின்ற
கோரக்கர் கொழுந்தினையே கொடையாய் கொடுத்தனுப்பி கொலையை கலையாக கொண்ட மாந்தரையே குழுவாய்
அமைத்தபடி பழுதாய் திட்டமிட்டு பாழாய் நோட்டமிட்டு பார்த்திபன் பக்கம் வந்தால்
பரமன் சாபம் பெற்று இயமன் உலகத்துள் என்றும் கிடப்பாரே. இமயம் சாய்ந்திடினும்
எம்மான் சாயாது இருக்கும் முழுப்பலமே தேவதேவரொடு தெரியா தெய்வமென ஈசனிருப்பது தான் இவனது
பின்புலமே !
ஊருலகை கொள்ளையிட்டு உயர்ந்ததோர் வேடமிட்டு பாருலகை நம்பவைத்து
பாதகங்கள் செய்த வண்ணம் பாழ் புகழை பரப்பிடினும் பாற்கடலான் மீது கொண்ட பகை
வளர்த்த காரணத்தால் ஊழ் வினையே
ஊறு தந்து ஓலமிட வைத்துவிடும் உண்மையே
வெற்றி கொள்ளும். சூதுவாது கொண்டவர்கள் ஆதரவாய் அமைந்தாலும் சுடர்விழி சொக்கநாதன்
பாதகத்தாள் பக்தியினை பாசாங்காய் பார்ப்பானே. பாவமிலார் அனைவரையும் பாங்காக
பார்ப்பதுதான் பரமசிவன் பண்புகளில் பாரறிந்த தனித்துவமே. யாரையுமே ஏய்த்தாலும்
ஈசனையே ஏய்ப்பதற்கு ஈரேழுலகினிலும் எவருமில்லை என்பதனை எண்ணாத இழியோர்கள்
எண்குணத்து நாதனையே இழிவழிக்கு இழுத்து வந்து ஈடேற்ற முடியாமல் இழந்ததையே யான்
கண்டேன். பாழுடலாள் பதம் தவறி பண்பற்று ஆடியதை ஆற்றாத அர்த்தனாரி அந்தணத்து
விளக்கு மேலே அடித்த அடி விழுந்ததாலே அத்தனையும் அணைந்ததுவே. பண்பறத்தை பேணாதோர்
பாதகியை பாழாக்க பக்க துதி பாடுகின்ற படை ஒன்றே போதுமென்றும் பகைவர்யாரும்
புறத்திருந்து பாய்ந்து வரத் தேவையொன்று இல்லையென்று தில்லைநாதன் சொல்லி வைத்த திருவாக்கும்
இதுதானே. ஊழையிடும் நரியினங்கள் ஒத்துழைப்பு தந்தாலும் உடனிருந்தே குழிபறித்து
ஒழித்திடுவர் இறுதியிலே. பாழும் விதி வலுவிழந்தால் பார்க்கும் குறி பாம்பாகும்
பக்கமெலாம் பழமிருந்தும் படுத்துவிட்டால் முள்ளாகும். வாழும் வாழ்வின் வளம்
அனைத்தும் வந்த வழி அறிந்திருந்தும் சென்ற வழி செப்பாது செல்லுவதும் தப்பாது கொண்ட
பழி குறையாது கொதிக்கும் மாந்தர் அதிகரிக்க நின்ற நிலை நீடிக்க நிலையாமை
போதிக்கும். பந்தபாசம் எல்லாமும் பரிதவிக்க விட்டு விடும் பாடம் தான் பல்லாண்டும்
படிக்குமொரு மாணவமாய் படுக்கும் வரை நீடிக்கும். இவ்வளவு எளிதாக இழிவு தரும் அழிவு
வரும் என்றவளும் எண்ணாது இருந்ததனால் கருமமொன்றே கருவறுத்து மண்ணோடு மண்ணாக்கி
மகத்தான வெற்றி கொண்டு மார்தட்டி கழித்ததுவே.
கபடமுடையோர்கள் கண்ணியமுடையோரை காலில் விழ வைத்து களித்து
இன்புற்றால் அக்கயமையுடையோர்கள் காலே இல்லாமல் காயம் பழுதாகி கட்டிலில் கதறுகின்ற
கண்ணீர் காலமொன்றை கடக்க கடவதென்று கடமை தவறாத காலன் கதைக்காது கருத்தாயுரைத்தானே.
இழிய பண்பேற்று இப்படியும் வாழ்வோர்க்கு இழுக்காய் புகழ் குவிந்தும் எலும்பில்
வலுவிருந்தும் எழும்பி வந்திடவே இயன்ற ஆற்றல் கூட ஈசன் வழங்காது ஏய்த்தது ஏனென்று
இன்னும் உரைத்திடவோ. எல்லா தலைகளையும் இயக்கும் ஆற்றல் கொண்டு இழிமகள் எழுந்தாலும்
இறக்கும் தருவாயில் வல் லாற்றலுமே வலுவற்றுப் போவதென்று வாழ்க்கை பாடமொன்று
வழங்கிச் செல்வதுண்டு. ஆடவக் கற்கி முன்னே ஆணவப்பெண்ணவளும் அடங்காதாடியதால்
அடங்கிப் போன இடம் அலைகடல் கரையோரம் அமைந்த தோட்டத்துள் அண்ணன் கோட்டத்துள்
அயர்ந்து தூங்குவதோ அனைவரும் அறியும் வண்ணம். பன்மை மனமுற்றும் பாழும் பண்புற்றும்
எண்ணம் இயல்பற்றும் எல்லாம் யாமென்றும் எண்ணும் யாவருமே இன்மையுற்றபடி எழவே இயலாத
நிலையைப் பெறுவாரே !
உண்மையை உணர்ந்தவரோ
என்றும் உயர்ந்தவராய் ஈரேழுலகறிய பாரோர் மனதுறைவர். சிவனே ஏற்காதோர் செய்த
பாதகத்தால் அனலுள் அலைக்கழிந்து அல்லல் படும் இடமோ கொதிக்கும் நரகுலகே !
நன்று வேண்டுவோர் நன்கு செய்கவே நாடும் நலமின்றி நாடா தீதினை
நாளும் செய்திடின் நாறிப்புழுத்தபின் நமனும் அழைத்திடா நகைத்து வருவது நடக்கும்
திண்ணமே ! விதியை மாற்றியே வென்று விட்டதாய் நின்று களித்திடும் நீசரினமகள்
கொன்று குவித்ததோ கொலைஞர் பலரையே. கொற்றம் தகர்ந்தது கூட அத்தகு குற்றம்
புரிந்ததால் கொண்ட வினையல்ல. கொன்றை வேந்தனே கொடுத்த மகனெனும் நற்றான் கற்கியை
நறுக்கி கொன்றிட நினைத்த பாவமே நீறு பூத்ததோர் நெருப்பைப் போலவே நிகழ்த்தும்
ஊழ்வினை தகர்த்ததென்பதே தந்த உண்மையே ! நலியும் நிலையுற்றாள் நாட்டை இழந்திட்டாள்
நிகழ்ந்த அனைத்தையும் அறிந்த போதிலும் நெறியை மறந்திட்ட நேர்மை வழிகெட்ட நாயின்
மக்களாய் நளின பரதத்தை ஆளும் வர்க்கமே அத்து மீறியே ஆடி அடங்கிடும் ! இந்து சூடியே
எரிக்கும் விழியினை நன்கு மூடியே நலனைக் காத்த என் நாதன் ஈசனின் நற்றமிழக இனிய
உறவுகள் இடரை தாங்கியே இன்னல் ஓங்கிட ஒருவன் அமைவதை உரைக்க கடவன் யான். ஏழைத்
தாய்மடி ஈன்றுவிட்டதோர் இழிவை தாங்கிடும் கழிவு மகனவன் கயலின் வாயினை
காட்சிப்படுத்திடும் கண்டம் மேற்கிலே கசடு தோன்றவே கருணை கனிவின்றி உரிமை
பறிப்பதில் உச்சம் தொட்டதால் உருகும் மாந்தர்கள் கதறி அழுவதை கண்டு கொண்ட என்
கற்கி ஈசனும் கனலை கக்கிடும் எரியும் மலையைப் போல் எழுச்சி கொண்டிட ஏந்தி விடுவதோ
ஏறு வாகனன் என்று கூறியே எந்தன் வாக்கினை இனியும் எழுப்புவேன் நந்தன் நாதனை நாளும்
புகழவே !
ஆலொடு வேலெனவே அவை கொண்ட பண்பெல்லாம் அங்கத்தை காக்கின்ற
அரும்பெரும் மருந்தெனவே ஆயுளுக்கும் நலம்புரியு மது போலே நாலொடு இரண்டெனவே
நற்றமிழ் இலக்கியத்தில் நலமுடன் வளம் பெருத்து நன்னூல்கள் களம் குவித்து நன்றாக
அமைந்ததுவே. பாலொடு பண்புற்ற பரந்தாமன் மனமறிந்து பாடுகின்ற பாட்டெல்லாம்
பயனற்றுப் போயிடுமோ. நாளெல்லாம் பொழுதெல்லாம் நாதன் வர காத்திருக்கும் நலமிழந்த
நாட்டோரும் நிலம் கெட்டு நின்றதனால் நேரிழையாய் நீதியினை நெஞ்சகத்தில் அணிந்தவனை
காரிகையர் கண்கணைதான் காவு வாங்க இயலாத காவிறையாய் கற்கிதேவன் கதிர் வரவை கண்ணாரக்
கண்டதனை கண்ணறையர் காணாது கடந்ததுதான் கார்மேக கருமத்தின் கலிகால உருவம் என்றே
கருதுவதாய் உறுதிதந்தேன். நெறிமாந்தர் நீங்கலுற்று நீசர்களே தேங்கலுற்று தறிகெட்டு
ஓடிடுமோர் தகாத வாகனம் போல் நரகுறைய நாள் பார்த்து நானிலமே நகரும்வண்ணம்
வேளுக்கோர் வேண்டுகோளை விடியும் முன்னே விடுத்தவண்ணம் தாளுக்கோர் தலை வணக்கம்
தாழ்மையுடன் வைத்திருந்தும் தயைகாட்ட யான் இனியும் தரமிலையோ. தாங்காது இவ்வுயிரே தயங்குவதேன்
பாங்காக பட்டொளிரும் பொன்னம்பல பொறிவிழியே ! கயமைமிகு காசினியே கண்டிராத கொடுமை
வந்தும் வறுமை தின்றும் வாசல் தட்டி வாசம் செய்ய வாதை வந்தும் மாறாத மாந்தரினம்
ஆறா பஞ்சமுடன் அச்சமூட்டும் அழல்போரே ஆரம்பமாகி இங்கு அகிலத்தை எரிந்த பின்னம்
அகப்பட்ட தீயோர்கள் அடங்காது துடித்திடவே அகிலத்துள் அரவமென அநீதி தலை தூக்க
உருவமது தெரிந்திடவே உமை உருவன் உரைத்ததையே உலகிற்கு உரைத்தேன் யான். வளவன் வாராது
வாளாதிருந்திடினும் வானைத்தான் பார்த்து யாரும் வசை மொழிய வேண்டாமென வாயார
வேண்டுகின்றேன். விளைந்ததெல்லாம் நெருஞ்சியாக வேந்தனெழ தாமதிக்கும் விதி திருத்த
வேண்டும் என்று விழுப்பொருள் விழிச்சுடரான்முன் வேண்டியதை யான் பணிந்து
வெளியிட்டேன் கேளாயோ. தினமும் யான் புழுவாக தீதின்று துடிப்பது போல் கணப்பொழு
தெல்லாமும் கதறுவதை காதில் வாங்கி கங்கைகொண்டான் மங்கை கொண்டான் காவலன்போல் எமையே
கரை சேர்ப்பான் என்று யானும் காத்தவண்ணம் காலம் தள்ள அறம்பாடும் என் நாக்கில் அவனொருவன் குடியிருக்க
புறம்பாடி யானொன்றும் பொய்யுரைக்கப்போவதில்லை. நிதம் பாடி இதுவரை யான் நிறை
செல்வம் ஈட்டாத நெறியுடைய சிவனடியான். நீதிக்கு புறம்பாக நெஞ்சமே அரும்பாத
சாதிக்கே உரித்தான சாகா காலுடையோன். சாவுக்கும் அஞ்சாது சங்கரர்க்கே அஞ்சுகின்ற
சங்கை பிடித்தோனின் மங்கையுமே மதிப்பூட்டும் மாண்புக்கே உரித்தான மேதகு
மெய்யியலானாதலினால் நீதிக்கு ஆதரவாய் நெடுங்காலம் நின்றதனால் நெற்கதிர் போலென்
நெஞ்சமும் தளர்ந்ததில்லை. திருடனுக்கு தேள் கொட்டி திணறுகின்ற வலியெடுத்தும்
தெரிவிக்கயியலாமல் திண்டாடும் பொழுதிங்கே உறங்குபவன் உறங்கட்டும். உலகுடைய பெருமானே
உலகளந்த திருமாலை ஒளிவிளக்காய் ஏற்றிடுமுன் உண்மையென்றும் உரைகல்லுள் உள்ளூர
உறங்கிடுமே. உரிய கணம் வரும்பொழுது உருவெடுக்கும் நன்மையொடு எவர் தடுத்தும்
ஏற்காது எம்மானை ஏற்றிடுவான் இணையிலா ஆற்றணிந்தான். இவன் மீதே ஆணையிட்டு இயம்புகின்றேன்
ஏற்றிடுவாய் !
பாகம் 189.
கரும்புண்ண கைக்கூலி வேண்டுவானேன் ? கனல் கண்ணன் முன்னின்று கைத்தலம்
குவித்தவண்ணம் கண்ணீர் மிக ஊற்றி கனிவை பெறவே கனகம் வேண்டுவானேன் ? விரும்புவோர்
விரும்பட்டும் விமலனடி வீழாமல் வருந்துவோரை வாதை வத்துண்ணுதல் திண்ணமென தொகுத்தவனே
தினம் இங்கு துஞ்சாது தூண்டிடவே துடியிடை துறந்த வண்ணம் மடியும் வரை வேண்டுவதை
மனமார செய்வதென்றால் மறுமையுமே வாராது. மறுப்போர் மடமை கொண்டு மண்ணுலகில்
பிறப்பார் பின்னமும் பெருங்கடலுள் பேயெனவே மிதப்பாரென கண்டு மெய்யுள் பொய் விழியை
மீண்டும் முடக்கியவன் மெஞ்ஞானம் அடைவதொன்றே மீட்கும் வழி என்று மிடுக்குடன்
வாக்குரைத்து மீண்டும் தொடர்கின்றேன். பிறனுயிரை பறிப்பதற்கு பின்புலத்தை
தேர்ந்தெடுத்து பெருமளவு பொருட்செலவை பேய்மகளும் திணித்தவண்ணம் பெருமானை
பின்புறமாய் பெயர்க்க வந்த பேடியவள் பிழையுறா பெண்மையுறின் முளையொடு முன்புறமாய்
மொழிந்து வந்து முயன்றிருந்தால் முலைப்பால் வீரமென முறையாக அருந்தியதின்
அறிகுறிதான் அமைந்திருக்கும் ! அறம் காக்கும் அண்ணலது அருகில் வந்து சூளுரைத்து
சொடுக்கிடவே வலுவிலாத சூலிழந்த சூர்பனைக்கு சற்றேனும் சூடிருந்தால் அற்பமுறும்
அணுகுமுறை அமையாதிருந்திருக்கும். சொற்பமும் சொல்லெடுத்து சுட்டிடவே வாய்கூசும்
சுரணையிலாள் நேருக்கு நேர் நிற்க நெஞ்சுரமே நிறையாதொரு நெடுமா நீடுவாழவழியேயின்றி
சீரழியும் காலமொன்று சீக்கிரமே வந்துவிடும். ஆணையிது அதிரும் வண்ணம் ஆதிசேடன்
மீதடித்தும் அர்த்தனாரி பார்வையிட்டும் அனல் கக்கும் வாக்குரைப்பேன். அம்மையப்பன்
அருளற்றாள் அஞ்சனையே அணுகி வந்து அறிந்தபடி சூளுரைக்கும் ஆக்கமிலாள் அடிப்படையில்
அரிமாவின் ஊக்கமிலாள் அதிவிரைவில் அழிவதொன்றே உறுதி என்றும் அறிவேன் நம்பிடவே
பெருமான் புகழ் பாடும் பேராண்மை கொண்டவரே பிறப்பை அறுக்க ஒண்ணும் பேருண்மை
தானிதுவே ! உறுப்பை இழந்தாலும் உலகுடையோனுடனுற்ற இணைப்பை இழக்காமல் எழுபிறப்பின்
கடனறுக்க ஈடிலா திருத் தொண்டாற்றி ஈசனையே ஏற்றிடுவாய் !
முகத்தின் அழகெழிலை முதலென முடுக்கிவிட்டு முறையற்று
முயன்றிருந்தால் முரண்பாடற்றவண்ணம் முதல்மகளாவதற்கே தகுதி நின்னிலுமே தகரா
தரமுடைத்தே தங்கரதமாவேன். தருமம் மீறேன் யானென தருக்கம் தரம் தாழ்ந்து தரையைத்
தொட்டதனால் தகைசால் பூங்கொடியின் தாமரை முகம் சிதைய தலைவிதி அமைந்ததுவே. தகர்ந்த
முகம் முன்னம் தாய்மை சின்னமென நன்கு ஒளிர்ந்ததாலே நகைகள் எல்லாமும் நாணி
தோற்றுவிடும் அழகின் வடிவாக ஆடக மயிலாளும் அழுத விழிகொண்டு அலறித் துடித்ததற்கே
அகத்தால் மகிழ்வுற்று சிரித்த இழிமகளாய் சிறுத்த சேதியெலாம் செப்பிடத் தேவையில்லை.
அறத்தை மாற்றாது அல்லலேற்றெடுத்த அவ்வந்தண சிற்பத்தின் அம்புலியொளி முகமே
அலங்கோலமாகிடவே அழலுறை திராவகத்தை அடித்து துடிக்கவிட தேவதை போன்றோர்க்கு தினையும்
மனமெழுமோ ? இத்தகு ஈவிரக்கம் இல்லாள் என்பதுடன் அகமே சிலையுற்றோர் அரக்கியாய்
குணங்கெட்டோர் அனைவர் அகத்தினிலும் மிகவே மிளிருமென மெய்யுள் உமையுற்றோன் மிக்க
உரைத்ததொன்றும் பொய்யாய் போகாது இனி புவியே தாங்காது. பூமுகம் பலதையுமே புண்பட வைத்தவள்தான்
பால் மனம் கொண்டவனின் பண்பை அறிவாளோ ! ஆதவன் அகல் முகத்து அழகை சிதைப்பதற்கு
அழலுறை திராவகந்தான் சொரிந்திட ஆளனுப்பி சூழ்ச்சிகள் செய்தபின்னர் சுமந்தவன்
இயலாமல் அகன்றதன் கதையறிவேன். அறமே உடனிருந்து அவனுக்கடிபணிந்து ஆற்றும்
தொண்டனைத்தும் அற்றேபோயிடுமோ ?
அமையும் இடர்களுமே அருகே எட்டாது
அகன்றே நின்றிடுமே நில்லார் அவன் முன்னே நீசர் படைகளுமே நெருங்க பயப்படுமே. அவனின்
காவலுக்கு அப்பன் சிவனிருக்க அரணாய் அமரர்களும் உடனே ஒளிந்திருக்க எவனால்
எத்தீங்கும் இங்கே ஏற்படுமோ ?
ஈனச்செயல் வீரர் எண்ணிலடங்காமல்
எழுந்து வந்திடினும் இயமன் எட்டிச்செல்லும் இவன்முன் இவையெல்லாம் எளிதாய்
இயன்றிடுமோ ? எல்லா உயிரிலுமே இறையோன் புகுந்திருந்து இயக்கும் தத்துவத்தை இறவா
மாந்தருடன் அமரர் தயவாலே அவனும் அறிவானே. சொக்கன் சுட்டுகின்ற சுடர்மிகு
பக்திகொண்ட சொந்தம் அனைவரையும் சூழ்ந்தே அமர்ந்திருந்து சொல்லாதறம் காத்தே
சொல்லிடாதமைதி காப்பான். சுடராய் விழி இருந்தும் சுழுமுனை வழி இருந்தும் ஆவல்
இல்லாதோர் அறிய முடியாத அப்பன் சுந்தரனே அண்ணல் அருகிருந்து அடிமைப்பணி செய்வான்.
அன்னையின் பண்புடனே அனைத்து உயிர்களிடம் அகலா அன்புடனே பேணும் நாதன்முகம் பீடைப்
பெண்டிர்க்கு பிழையாய் தோன்றியதால் பாவம் புரியவிட்டு பார்த்திபன் கதையறியா பாவையை
பாயவிட்டு பரமன் ஏய்ப்பானே !
சிந்தையெல்லாம் சிறையெடுத்தும் சிவனே நீ இரங்கலையோ. மங்கையுடல்
பாகமிட்டு மதனநீர் வழிந்தோட மனம் மயங்கி முயங்கிடவோ மானிடர்கள் உனை பணிந்து
மாதேவன் என புகழ்ந்தார் ! அல்லற்பட்டு ஆற்றாது ஆதவன் வருகைக்காய் அகிலத்தார்
ஆவலெல்லாம் ஆயிரம் கோடியென அழுத விழி வழிந்தோடும் அன்பர்கட்கு ஆறுதலை யாரளித்து
அகங்குளிர அரவணைப்பார். எம்மானுக்கிணையாக எழில் வேலன் அன்றுதித்து எம்மவரை மீட்ட
போழ்து இனியான் வருவதில்லை இனியன் இன்னொருவன் ஈசனுக்கோர் இளம் மைந்தன் எரிமலைபோல்
எழுவதாலே என் பணிக்கு இடமிலையே. இறவாக் கலைப்பயின்று ஒளிர்வான் கற்கியென உலகு
முற்றாக ஒரு குடையும் அதன் கொடியும் உரித்தான ஒருவனுக்கே உரிமை தர உமையோனே கடமை
கொண்டான். உதயம் தரும் ஒளிமகனை ஒழிப்பதற்கு எவ்வொரு காரணமோ யாதொரு பாதகமோஎன்றுமே
அமைக்காதவன் இருந்தும் இருளுறும் உள்ளமே எரிந்திடும் எதிரியாய் எழுவது
கருமமொன்றென்ற கருத்துடனே யான் மொழிவேன். இருக்கும் பகைவருமே எண்ணிலாரானாலும்
கண்ணிலாரானதனால் கனிச்சுவையறிவதற்கு கனிவிலார் நாக்குகளோ களங்கம் மிக்க கொண்டதனை
கடமையொடு இயம்பிடவே கனத்த நெஞ்சம் வலிப்பதனால் காயத்திற்கு மருந்தளிப்பாய் தாயெனவே
விருந்தளிப்பாய் தக்க தொண்டனாயிருந்து நாயாக நானுழைப்பேன் நம்பிடுவாய் பரம்பொருளே
!
நரிகளும் நாள்களையே நன்றாக எண்ணும்படி நாதர்முடி மேலிருக்கும்
நல்லரவம் சொல்லியதும் நம்ப வைத்து கழுத்தறுத்து நன்றி கொன்ற காரணத்தால்
அடுங்குற்றம் புரிந்ததாக அவரையெல்லாம் அதிவிரைவில் அறம் கொல்லும் ஐயமில்லை.
ஆனையின் வாய் கரும்பு அரைபட வாய்ப்பின்றி அதனிடம் தப்பிடினும் அரக்கியின்
கைப்பிடிக்குள் அகப்பட்டு திரும்புவது அவ்வளவு எளிதல்ல. ஆதிசிவன் அள்ளி அருள்
மாரியென பொழிந்ததாலே மன்னர் மன்னன் காயமின்றி மறுமையெனும் மாயமின்றி மரிக்காது
ஒளிர்ந்திடவே அர்த்தனாரி ஒருவனுமே ஆற்றிய திருவினையென்று அடர் வனம் அரவணைக்க
அமர்ந்திருக்கும் முனிகளுடன் அடியேனும் அறிந்து கொள்ள ஆவன செய்ததனை அடுக்கடுக்காய்
வாக்குரைப்பேன் அகலாது கேட்டிடவே அணுகாது யானுரைப்பேன். ஆதவன் பெயருடைத்தான்
அரக்கியின் அக்கைக்கு அரவெனவே வந்துதித்தான். அறம் சாய்க்கும் அஞ்சானோ தயை மாய்க்க
தயங்காதோர் தால் தரமில்லானாய் தவறிடும் வாக்கனைத்தும் வாழ்வியல் வகை கெடுத்தே
வளர்ந்தவன் என்று சொன்னால் வாராது மிகையொன்றும். குணம் கொன்றோன் குடியுள்ளே
குவிந்தவர் இன்றளவும் கொலைஞர்களாய் இருப்பதெல்லாம் இங்கொன்றும் வியப்பன்று. மதம்
கொண்ட மாந்தருடன் மாதவன் மறுமையினை மரணத்திற்குள்ளாக்க மாளாது முயன்றதனால் ஆறாத
பாவமுமே அனுப்புமொரு திங்களென அண்டிட இயலாதோர் அயல் சிறைக்குள் அகப்பட்டு
அல்லலுற்றதற்கு அமைந்த காரணமோ அண்ணல் உறுபகைக்குள் ஆழ்ந்து ஆற்றியதால் தண்டனை
பெற்றதென்ற தகவலை தந்தவனோ தழலை விழியாக தந்தையிலியாக தருமன் நெஞ்சுறைந்து தகையுறு
சிந்தை தந்து சீராரும் தாயாகி செம்மையுடன் திகழ்ந்ததனால் நாயேன் யானென்றும்
நன்றிகள் பலகோடி நாளெல்லாம் சொல்லிடவே நலமருள்வாய் பரம்பொருளே !
மேவும் அம்மேதகையின் மிளிரும் மெல்லியல்பை யான் மிகைப்படுத்தி மெய்யறவோ பொய்யுறவோ
மேதினியில் ஒருபோதும் மேகமென பொழிவதில்லை.
ஆவின்பால்
நிறமெடுத்த அருங்குணத்தான் அன்பகமோ அணங்கனுறை திருத்தொண்டர் அருளொளிரும்
ஆலயந்தான். தில்லையன் தேன்கலந்து தெவிட்டா நடம் புரியும் தீந்தமிழர் தேன்களம்தான்
தினம் தினம் பொன்னளந்தும் தீராது மதிப்புறுமே தீரனவன் தெள்ளகந்தான். அடிபணியும்
அமரர்களை அகம் சிலிர்க்க வைத்து விடும் விடிவெள்ளி வேந்தனது விலைமலியா பெருமையினை
வீணன் என அன்றொரு நாள் விளைந்ததோர் ஆணவத்தால் வெண்டலையான் விரும்பமுடன் வேரடித்த
அண்ணலையே வேடமிட்டு ஏமாற்றி அவனில்ல கோட்டத்துள் ஆழ்குழாய் கிணறடித்து அதன் மூலம்
நீரேற்றும் கைக்கருவி வாங்கியபின் கறந்த பணம் ஐநூறை கவர்ந்ததொரு கருணையிலா
கள்வனினும் கயவனது கதையறிய காதுடைத்து கேளாயோ ! கன்றொன்று அவன் பெற்று கருவமே
தலைக்கேறி பரியினில் பறந்தோடி பதமொன்றில் வலதொடிந்து பட்ட வலி பதம் பார்க்க
பார்த்தவர்கள் பரிதவிக்க நெடுநகரம் நெய்தலிலே நிறைவோடு பணிபுரிந்தும் பகுதி விட்டு
பறந்து வர பரந்ததோர் கழுகுக்கு செலவிட்ட கடுந்தொகையோ காகிதங்கள் நூறு என்று
கைகளால் கணக்கு தர ஐந்தடுத்து நன்கமைந்த அழகுறு உலகத்தை நான்காய் நடவு செய்ய
நாடிவரும் நற்தொகையோ நல்லுடலை பேணிடவே நாளிதழ்கள் மலர்ந்ததொரு ஆறிரண்டு
திங்களென்று அரவணிந்தான் அறிவுறுத்த அறிந்து கொள்வாய் ஆரமுதே! ஆரை எவர்
எய்த்திடினும் அத்தகைய பாவமன்று. அண்ணலது அருமனதை அல்லலுக்கு இட்டுச் சென்றால்
யார் எவராய் இருந்திடினும் ஈசனே வெகுண்டெழுத்து இரக்கமின்றி உடன் சபிப்பான். பேய்
மகன் பிழை வாழ்வே பெரும் பாதகமானதனால் பின்னமும் பொறுக்காது பித்தனே சினத்ததனால்
பிற்பகலில் பகைவிடுத்தும் பிறப்பறுக்க இயலாமல் பீடையொடு பலபேரும் இன்னமும் ஏராளம்
எண் தருமே ஆதாரம். எம்மானை ஏமாற்றி இரங்கமற ஏய்த்ததனை இன்றளவும் இறையோனே எச்சரித்து
அழிப்பதெல்லாம் இழியோரை வீழ்த்திடவே இம்மையுள் வியப்பெனவே எம்மையே ஆழ்த்தியதே !
பாகம் 190
ஆட்டை கடித்துடன் மாட்டை கடித்தவள் அப்பன் சிவனுக்கும் அடங்க
மறுத்ததால் அறத்தை விடுத்துடன் ஆடவர் பலரது கழுத்தை அறுத்துத்தான் அருசுவை
அறிந்தவள் ஆழி வண்ணனே அரும்பி சிறப்புறும் அப்பாவி பிறப்பென அனைத்தும் அறிந்துமே
அவனது கழுத்தையும் அறுக்கத் துணிந்துதான் புண்ணீரருந்திட பொங்கி எழுந்த
அவ்விழிமகள் கீழொரு விழல்மகன் வேண்டியே பணிவிடை பதிக்குமோர் பாதகனொருவனை ஆளென
எழுப்பியே அனுப்பியும் வைத்தனள். அவன் கொடையுடை நாட்டினில் கொலைத் தொழில்
புரிந்ததால் சிறையுள்ளே புகுந்தபின் பிணையினில் வந்துமே பெரும் குற்றம்
புரிந்தனன். முற்பகல் அவனுமே அம்மூர்க்கன் அரவவள் மூலம் பற்பல பதவிகள் வகித்தும்
பிற்பகல் வந்ததும் பெரும் பழி சுமக்கும்முன் மரியாள் மைந்தன் மாண்புறு பணிபோல்
மரக்கலன் மூலம் மயக்கும் தொழிலென தச்சனாகி தரமொடு துவங்கியும் தயைகுணம் யாதும்
தரமிலாதமைந்தவன் காலத்துள் கைவினை செய்யும் அக்கடமையுணர்வை கண்டது யாரெனில்
கயமையின் சின்னமாய் கனிவிலா பெண்மையின் கைத்தடி ஆகியே மலைநிலம் முழுமையும் மடியா
மன்னனின் மலரடி பரவிடும் பரப்பினில் பாதகர் படையினை ஏவியே பரந் தாமனை மாய்த்திட
இயலாது மண்ணை கௌவியே மானமிழந்தனன். மலர் மகள் தலைவனை மலைமகள் மறத்தினை
மறுக்காதெடுத்த மாண்புடை புதல்வனை விலைமகளீன்ற வீணர்கள் கணையுமே விரும்பி
அழிக்குமோ ? சிலையென அகத்தினை சீர்கெட வைத்தவன் பெயரினை கூறிடின் நான்குடை
எழுத்துக்கள் நாடும் சொல்லுடன் நன்றாய் ஒலிக்குமுன்
முதல்வரும்
சகரமொலிப்பதை நிறுத்திடின் முத்தாய் வரும் அம்மூன்று எழுத்துகள் வடமொழி பொருளினில்
உயிரினை சொல்லியே ஓசையெழுப்புமே. கூடும்ஊரிலவன் குடியமர்ந்தாலும் குலம்
தளிர்த்ததுவோ கொஞ்சும் மலை நில மார்பாய் திகழும் திருவுடை ஊரில் தான்
உருவெடுத்தானென தரவுகள் தந்ததோ அரவம் அணிந்துமே ஆலகாலம் அருந்திய அன்பெனும் சிவமே.
உயிருள்ள பெயரினை உற்றவனோ ஒருக்காலும் உய்விலாது உலகாளும் எம்மையன் உதயம் பின்
உடலது கழுவேறும் உடன்பட்ட அனைவருமே பிணமாவது உறுதியென பிறை சூடி புகன்றதையே
பெரும்பாலுமுரைக்கின்றேன். வேந்தனையே வீழ்த்திட விரைந்தவள் எவளுமே விலைமகளொப்பவே
விரைவொடு அழிவதும் தகையிலாள் என்றுதான் இத்தரணியே உமிழ்ந்திடும் தருணம் அருகென தான்தோன்றித்தனமிலா
தாயுமானவன் உரைத்தானே !
ஒன்றான அறத்துடன் ஒழுக்கம் பேணிடின் உண்டாகும் அகமொடு புறமென
ஈரிதழ் தோன்றியே மூன்றான தமிழுக்கு முத்தாய் மின்னிடும் இயலிசை நாடகம் ஏற்றதோர்
நானிலம் குறிஞ்சியும் முல்லையும் குறைவிலா மருதமும் திரைகடல் தழுவிடும் தரையுடை
நெய்தலும் தீந்தமிழிலக்கினை இயம்பிடும் இலக்கணம் எழுத்தொடு சொற்பொருள் யாப்பணி
ஐந்தென உயிரொத்த தமிழுக்கு உண்பதோ அறுசுவை
கொண்டதோர் விருந்தினை வேண்டியே ஏழிசை
ஏற்றதோர் எண்ணரும் தானியம் ஒன்பான் உணர்வுடன்
ஒப்பிடும் போழ்திலே பைந்தமிழ் இனப்புகழ்
பரப்பிடும் திசையது பத்தென உற்றதோர் உயரிய பழம்பெரும் முதற்குடி உலகினில்
தமிழெனும் ஓரினம் என்பதை உரைத்திட மறுத்து யார் ஒழித்துதான் வைப்பினும்
உருக்கெனும் கோட்டையை உருக்கியே எழும்பிடும் உச்சம் தொட்டிடும் கதிரவக் கனலினை
எத்தடை தகர்த்திடும். காவல் சேவகன் அவனெழும் போழ்திலே கண்டம் முழுமையும் தமிழ்
மணம் கமிழுமே ! திறனையே தீட்டியே தேன்தமிழ்மொழியதன் திருப்புகழ் யாவையும்
தெரிந்திடும் இயலாமைவுற்றது தெரிந்துமே மறுத்தெவன் தீட்டென பழித்திடின் தெய்வமே
ஆயினும் ஆளுமையிற் அதிசிறந்து ஆற்றலொடு திகழினும் தெருநாய் இழிவுடன் திங்கள்சூடும்
தலைவனுக்கும் தீராப்பகை வளர்ப்பான். வான் தமிழ் வளங்கொழிக்க வாய்மொழிய பேறு
பெற்றோன் வாழ்வாங்கு வாழ்ந்த பின்னர் வானுறையும் வரமேற்பான். ஆதிமொழி யாதென்று
அறியாத மூடர்களே ஆண்மையென்று ஒன்றிருந்தால் அறிவுடமை வென்றிருந்தால் மேன்மகளே
ஈன்றிருந்தால் மேதகு மொழி கண்டு மேதினிக்குரைத்திடுவாய். அகத்தியமாமுனியே அதன்
பெருமை அறிந்ததனால் அறுபடையான் ஆணையிட்டு அமுதெனும் தமிழ் வளர்த்தார். சார்பிலா
தமிழ் குறித்து சவத்திடம் கேட்டெதற்கு ?
சிவத்திடமே கேட்டறிந்து உன் சிந்தையிலே
செந்தமிழை செப்பனிட்டு சீரமைப்பாய் ! மலத்திடம் கேட்டாலெம் மாமொழியின் மதிப்பறியா
மட்டிகளே நலத்துடன் வாழ்வதற்கே நறுமணத்தோடமிழ்திருக்க நாசிக்கு ஒவ்வாத நாற்றமிகு மொழியெதற்கு.
தெக்கணத்தமிழ் குவித்த திடப்புகழினை குறைக்க நற்றமிழ் நிலம் ஈன்ற நஞ்சர்
குஞ்சுகளும் தற்சார்பு தனிமொழியாம் தகைசால் திருமொழியை தன்மானம் இழந்தவனே தமிழ்
இனத்தில் பிறந்த வண்ணம் இனத்துரோகம் ஏற்பானே ! இணையிலா இலக்கணமும் எழிலழகு
இலக்கியமும் இவை தமிழின் தனித்துவமாய் இருக்கையிலே இயல் மறைத்து இகத்தினிலே
மறுத்தெவரும் இதயமின்றி பகருவாரோ ! தினந்தினம் திசை திருப்பும் திருடர்கள்
நிறைந்ததனால் தேடரும் புதையலினை திண்டாடும் குருடர்களால் திசைக்காட்ட இயன்றிடுமோ !
பாடிடுவேன் கேளாயோ பக்தி ரசம் வழிந்தோடும் பைந்தமிழை பருகிப்பார் பரமனகம் உருகும்
வண்ணம் பாமாலை படைத்துப்பார் பத்துப்பாட்டத்தனையும் பாகினிக்கும் படித்துப்பார்.
முக்திதான் வேண்டுமெனில் முத்தமிழ் வாய்மணக்க முருகன் புகழ் பாடி முத்த மழை
பொழிந்திடுவாய். முன்னுரையை என்னுரையாய் முழுவதையும் எழுதியதோ முக்கண்ணன்
வாய்மொழிந்து முகுந்தனே வழிமொழிந்து முவுலகே அருள்பொழிந்து முறையுடனே எழுந்ததுவே !
நெடுமால்தான் நெருங்கிடயியலா நெருப்பென்றறிந்த போழ்தும் நேரும்
அவலம் இதுவென்றுணர்ந்த காலும் சூழும் பாவம் சுட்டெரிக்குமென சொல்லிட யாருமே சுற்றி
இல்லாததும் தோழியும் தொலைந்திடும் நாள் வரும் அன்றே தோல்வியும் வேர்விட்டு
தொடரிடர் தழுவிடும் என்றே தெரிந்தாளாகிலும் கோபம் தணித்துடன் கொற்றவன் மீதுள்ள
குரூரம் தவிர்த்து பற்றிய பகைமை அனைத்தையும் விடுத்து பரிதாபமொன்றே பண்பெனயெழுந்து
பாராமுகத்துடன் பரிவினை பொழிந்து பலியிடும் எண்ணத்தை பட்டென விடுத்து குலப்பணி
கொள்ளாத கொலைவெறி கண்டு கூத்தனே அச்சுற கூறிழந்தோரே கொண்டாடும் கொடியோள் நீசம்
மாற்றாது நெடுங்காலம் தொடர்ந்ததுதான் நிலையுற்ற வீழ்ச்சிக்கு நிறையவே வித்திட்டு
ஆட்சியின் அழிவினை அழைப்பிதழ் அனுப்பியே அடித்தளம் நொறுக்கினள். அணைத்தவர்
அனைவரும் அகற்றியே அவளையும் அப்புறப்படுத்தினர். அற்ற குளமென அருநீர் பறவைகள்
அனைத்தும் ஒதுக்கிட உற்ற உறவுமே ஒட்டிய பொன்னையே உருவிட எண்ணிடும் உளவியல்
தெரிந்துமே ஊருலகத்துள் ஒருவரும் அறியா உலகியல் அறிந்துமே ஓங்கிய அவள் முன்னம்
ஊழ்வினை யாவையும் உறங்கித்தான் போகுமோ !
வெண்டலை யானுமே விரும்பும் நல்வேந்தனை
வீழ்த்திட முயன்றவள் வினையினை விதைத்தபின் தினையினை அறுவடை செய்திடயியலுமோ ? வீணென விளைந்ததோர்
விரிதலை நாகமே விடுதலையடைந்துமே விதியினை அறுத்திட விரிசடை நாதனுக் கொரு நொடி
போதுமே. உயிரெனும் பறவையை உள்ளினில் பூட்டியே ஊற்றை சடலத்தை உயர்வென காட்டியே
கேட்டை அவளுமே கேளாது கூட்டியே கோட்டையே கட்டியும் கோட்டான் குணமுமே குன்றென
மாறுமோ ? ஈட்டிய பாவமும் எண்ணரும் சாபமும் கூட்டிய கனகமும் கொண்டவளை
ஏற்றிய சிகரமும் என்றுமே அவளுக்கு காட்டிய வழியது காலதேவனின் கால்களில்
வீழ்ந்துதான் கதறிட வைக்குமே. கற்கியை சுற்றியே கார்முகில் போர்வையாய் கயவர்கள்
மூடினும் கருமம் தான் இறுதியில் காலத்தை வெல்லுமே ! கண்டங்கள் முழுமையும் கொண்டவன்
கொடியுற கரவாது சேர்ப்பது காலகாலனின் கடமையாய் ஆகுமே !
தெக்கணத் தென்முனையில் தேன்தமிழை ஊட்டிவிட தேவியென முலை நீட்டி
எக்கணமும் சீராட்டும் எம்மன்னை உமையாளே எம்மானின் தாயாகும். இடரெல்லாம் சுடரெனவே
ஏறொப்ப தலை தூக்கும் இன்னா பொழுதெல்லாம் இறையோனிடமிருந்தே இரியாது அருள்பொழிந்து
இமையெனவே காப்பதற்கு உயிரினையே உரித்தாக்கும் உறுதிமொழியேற்றிருப்பாள். அந்தணப்
போர்வைக்குள்ளே அறங்காவல் புரிவதென அனைவரையும் நம்ப வைத்து ஆடும் பாம்பெனவே
அருகிருந்து ஆவின் நெய் விடுத்து அத்துடன் அனல் வளர்த்து அயர்ந்துறங்கும்
அண்ணலெனும் கறைபடியா கன்னலினை காவுகொள்ள கண்ணி வைத்து கன்னியரை நேர்ந்துவிட்டு
கடமையென கொண்டாட கொலைக்களத்துள் கைதேர்ந்த கொடுங்கயவர் அருகிருந்து கண்ணற நீதி
கொன்றும் கண்ணீர் பெருக்கெடுக்கும் அல்லலினை புறத்திருந்து புகுத்திடவே பொன்மகனை
அழித்திடவே பூட்டுகின்ற செய்வினைக்கு மன்னிப்பருளாது மதிசூடன் எரிக்குமுன்னர் மலை
மகளும் சபித்திடுவாள். இல்லாமல் புகையாது இழுக்காமல் எப்பொருளும் அதுவாக நகராது.
அள்ள அள்ள குறையாத அன்பு மணிமேகலையின் அமுதசுரபி அடங்கினாலும் அடங்கிடாது
அலையடிக்கும் அடியேனின் அருள்வாக்கு. அழுந்தாத அரவமதின் அசையும் நாக்கெனவே ஆர்ப்பரித்து
ஆனவரை மெய் கக்கும் அறிந்திடுக. அவனியிலே பொய் கக்கும் வாக்காளர்
பொட்டெனவே வீழ்ந்தவுடன் புழுவுக்கு விருந்தாகி போகுமுயிர் பழுதுக்கு பெயர் போன
பாவம் சூழ் பாழுலகே. எம்மான் குறித்தெழுந்த இறையோனின் வாக்குகளை என்னாக்கு
ஈன்றதற்கு யானென்றும் பொறுப்பாகேன். சுந்தரத்தமிழ் காத்த சொக்கநாதன் சூத்திரம்தான்
சொற்களையே கொடையளித்து சிற்பமென செதுக்கியதை சேயோனும் செப்பாது சீருற அறிவானே.
நில்லாது நேரமுமே நெடும்பயணம் செய்தவண்ணம்
நெஞ்சமெலாம் நன்றி
காப்பான் நேரிய பண்பாளன் நிறையினை கண்டது போல் நஞ்சாக நீதி கொல்லும் நல்லகத்தின் குறையினை
யான் குறிப்பிடத்தான் குவலயத்துள் சான்றேயிலா கொற்றவனை கொண்டாடி கோடிமுறை
வணங்குவேனே.
திருமாலின்
திருமார்வை திருக்கரத்தால் தழுவிடத்தானிருமாதருடன்படுவர் என்பதை யான்
உரைப்பதொன்றும் உண்மைக்கு புறம்பன்று. ஒப்புவமையில்லாதான் உலகளந்த பெருமான் தான்
உடலொடு உயிர்த்தவுடன் ஊழ்வினை குறித்ததைத்தான்
உள்வாங்கி உமிழ்ததெல்லாம்
உமையொருபாகனெந்தன் வாயில் உமிழ்ந்ததனை வாக்கில் தந்தேனே. இம்மை வரம் வாங்கி ஈடறு
முகமேங்கி வையத்துள் வந்துதித்த வைணவி பெருந்தகையை வாழ்த்த வலம் வரும் அவ்வானவர்
திருவுளத்தை என்சொல்லி வணங்கிடுவேன். ஏந்திழைக்கு பொறுப்பேற்கும் எம்மான்
பதிலுக்காய் ஏக்கத்தோடவளிருக்க இயன்றவரை யுகம் சுமந்தே இணைபிரியாதுயிர்
கொடுப்பாள். இரண்டாம் மலராக இவளே உலகாள எம்மான் துணையாக முயன்றாள் முன்னவுமே.
முகுந்தன் பின்னரென முடக்கி போட்ட பின்னே முயன்று வெல்வதுடன் முறையொடு
வந்திணைவாள். கொற்றவன் வரும் முன்னே குழுக்களாய் குணங்கொன்ற புழுக்கள் பல வந்து
வெட்டி வீழ்த்திடவே விரைந்து அலைவதனை அற்றதோர் அகமுற்றோர் அறம் கொன்ற மாற்றான்கள்
மௌனமாய் நுழைவாரே. மற்றவர் ஒரு சிலரே மாசறு மனமுடனே மன்னனின் தொடர்புடனே கெட்டதை
விதைக்காமல் கேட்டினை ருசிக்காமல் விட்டதோர் முற்பிறப்பை வீணாக சிதைக்காமல்
விரும்பியே நலமடைவர். மட்டமாய் மனமுடையோர் மாநிரை பசுகாக்க மலையினை குடைபிடித்த
மாலனின் நடை சறுக்கி மண்ணிலே வீழ்த்த எண்ணி மொத்தமாய் முடக்கிடவே
முட்டுக்கட்டையிட்டும் முலையினம் மூலம் பல முயற்சிகள் ஆயிரமாய் முன்னோட்டம்
நகர்ந்தாலும் முளைக்குமுன் மன்னனுக்கு இழைத்த கொடுமைகளால் எய்து வீழ்த்திடவே
இயலாது போயிடுவரென்பதனை இயம்புவதோ இதயத்தில் அரசாளும் இந்துவே சிரசாளும் எண்குண
நாதனுமே !
பாகம் 191.
அஞ்சிடா அரிநடை அரியெழும் அறுதியில் அரியதோர் பிறப்புடை
அப்பழுக்கெதுவுமே அற்றதோர் அகமுடை ஆதவ ஒளியுடை அறுமுகன் பண்புடை பால்முக வடிவுடை
பார்த்திபன் தென்பட பாராதுடன்பட்ட பங்கய துணையுடன் பாதகம் செய்திட பாவமே உருவென
பண்பற நின்றவள் உமையினுக்கெதிரெனில் உயிர்த்திடலாகுமோ ! அம்மையின் ஆருயிர் அவனிடம்
இருக்கையில் ஆதிசிவனுக்கும் அகன்றிடத் தோன்றுமோ ! பாதகி அவளுடை பக்தியை கேட்கவே
பரமனே ஒரு கணம் பதறியே பகன்றதை பலருமே அறிந்திட பயமொடு உரைக்கவோ ! ஆர்க்குமே
அஞ்சிடாள் அண்டினால் அதிர்வுறும் வீறுடை வெறிமகள் விடவுளம் விதைத்தது யாவையும்
யானிங்கு அடுக்கியே அமைத்திட அட்டவணையொன்று அளித்திட வேண்டுமோ ! அண்ணலின் அறுசுவை
அழித்திட்ட உணவெனும் அன்ன ஆகாரத்தை அறங்கெட்டு தடுத்துமே அதில் ஆலகாலத்தை
அடியாட்கள் மூலமே விதைத்துமே அத்துடன் முடித்திடாதவள் அலங்கார உடையினை கந்தலாய்
கெடுத்துமே அகங்காரம் வென்றதாய் ஆணவப் பிறப்பவள் ஆற்றிய கொடுஞ்செயல்
அளவிலாதமைந்ததே. திண்ணைகள் தேடியே தீதின்னும் வயிறோடு தெருவெலாம் துயிலவே தீமைகள்
பலதையும் தினம்தினம் ஏவியே மனமகிழ் கொண்டதோர் மாண்பிலா இழிமகள் மறலியின் கைகளில்
புழுவென புக்குமுன்னவள் புன்னகைக்களவில்லை அன்றுமே. அக்கொடும்செயல் கொண்டுமே
கொற்றவன் கோணாதுற்றதோர் நாக்குமே கொள்ளிடை அளவும் கோடாமை காத்ததே கொன்றைப்பூ
கொண்டையை கொண்டதோர் எந்தையை கோடானு கோடிதான் கும்பிட்டு பணிதலால் குளிர்விடும்
அகம் கொண்டேன். பகைமையெதையுமே பாரில் விதைக்காதோன் பத்தரை மாற்று பைம்பொன் மகனென
பரமனின் புதையலை கண்டேனங்கு கொழுந்தென பகைவரும் கூடியே நின்றிட கொலைக்களம் நடுவிலே
கலைக்களஞ்சியம் கதியற்று நின்றதை கண்ட என் கண்களும் கடலலை போலவே கரைகளை உடைத்திட
மொழிந்ததை முற்றுமே கேட்கவே முகில்வண்ணன் முறையின்றி முளைவிட்ட கயவர்க்கு யாதொரு
துயருமே ஆற்றியதேயில்லை அப்பனே. அவனடி எங்குமே அளந்திட அலைந்தவர் யாவரும் பெருநகர்
முழுதுமே பீடையர் பலருடன் பெற்றவள் புணர்ந்ததால் பிழையுற பிறந்தவர் அவளுடை
நாக்குக்கு அடிமையாயுழன்றதாய் அகிலாண்ட நாயகி அடியேனுக்குணர்த்திட அறம் பாடி யான்
அழித்திட்டே அடங்குவேனவளையும் அதை அடைந்திடாவரை யான் வணங்கிட மறுப்பதோ சிவனையும்
சேர்ந்தே இயங்கும் உமையையும் என்பதே உண்மையே !
வேத விற்பனர்கள் வேந்தர்கள் பலரையுமே தூண்டி அறிவிழக்க
துவங்கும் முயற்சியாலே துலங்கும் வெற்றி கண்டு தொடர்ந்து உடன்படுவோர் விரும்பி
விழியிழந்து விதி மேல் பழிதொடுத்து வீணர் வேரிறக்க வேண்டி விருந்தளித்து யாண்டும்
மடமையினை ஏற்று இயன்றவரை இருக்கும் மதிப்புடமை எதையும் இழந்த வண்ணம் ஏற்கா
மருத்துவம் போல் இனத்தின் மானத்தை காக்கா கழிசடையாய் கண்ணீர்துளியெனவே மாண்பை
சேர்க்காது மாட்டு மந்தைகளாய் மண்ணில் வாழ்வதற்கு மன்னனுருவாகி மண்ணில்
மருதலிப்பான். நூலோர் நுழைந்திருக்கும்
நுட்ப இடமனைத்தும் வானோர் வரம் தந்து
வணங்கும் திருத்தலமாய் வாயால் வார்த்தைகளை வாரி வனப்பூட்டி தேனாய் செவியூட்டி
தித்திப்பாக்கிடவே நாதன் எழுத்து வந்து நாவால்
நவின்றதெல்லாம் நன்றன்றென்றிகழ்ந்து
நட்ட கல்லிலெல்லாம் நாதர் நிலைப்பதில்லை. நன்றாய் அகமுடையோர்க்குள்ளே சிரிப்பவனாய் கொன்றைவேந்தனுமே
கோவில் கொள்வானென்ற கொள்கையுடையோனாய் குன்றிய கோணம் கொண்ட குறையோர்
குறிப்பனைத்தும் கொள்ளாதிருப்பானே.
பட்டுச்சீலைக்களால் பதியம் போட்டபடி
பார்ப்பனவண்ணமுடை பாதக நெஞ்சோரை புத்திக்குரைத்திடவே பொழியும் அறிவுரையை புவியே
ஏற்றிடுமே !
எண்ணங்கள் இழிவாகி ஏற்ற இடம் பழுதாகி ஈனர்களின் விழுதாகி
ஈவிரக்கமில்லாமல் எவரெவர் இப்புவியில் எங்கெங்காண்டிடினும் இடருண்டு என்பதிலே
எள்ளளவும் வியப்பில்லை. இருள்சூழ் இவ்வுலகில் ஏநதிடவே சுடரில்லை என்றழுவார்
மகிழ்ந்திடவே ஈரேழுலகறிய ஈசனரும் பாசமலர் எம்மான் எழாமல் இவ்வுலகு உய்வதில்லை.
செவ்வேளின் சின்னவனாம் செம்மல் வந்து ஆளுகையில் சீதளமே மீண்டு வந்து சீருறும்
புவியெல்லாம் வெந்தணல் விலகியோட விரிநிலத்து பயிர்களெல்லாம் வீழ்ந்திட வழியின்றி
வாடாது வளம் சுமக்கும் கார்காலம் கடை நாளில் கற்கி வரும் பொன்னாளில் காசினிக்கு
வலம் வந்து காலமெலாம் நலம் தருமே.
குடும்ப நலம் கொள்ளாது குடிகள் நலம்
கொண்டாடும் கொற்றவனே வந்தாளும் குடியரசு நாடனைத்தும் கொற்றவனின் தயவோடு விண்ணரசே
மண்ணில் வந்து வேண்டும் நலங்கொழிக்கும். நன்மொழியாய் தமிழ் தளைக்கும் நாக்கிது
எனதன்று நற்றமிழ் வாக்கெடுத்து நம்பெருமான் பாடுவதை ஞானமுடன் கேட்டிடுவாய்
ஞாலமதில் நியாயமொடு நல்லுள்ள மானிடனே !
சேயிழை அழைக்கும் சிறைக்குள் வீழா
செவ்வரம் கொண்டோன் நன்மனமறிவது நாதன் தயவென நன்றி காப்பேன் ! சிற்றின்பம்
விற்றிடும் சிறுமலர் பலரையும் செவ்வேள் பாதையில் சுற்றி வந்தே துடியிடை மரையிதழ்
மலர்த்திட ஏவியும் மாசறு மன்னன் மனத்தொடும் கூடான். மானார் பலரையும் அனுப்பி வைத்து
மாண்பறு வேடர்கள் அமைத்த தேன்பொறி யாவையும் தோற்கும் என்றே தூண்டா விளக்கின்
சுடரொளியானே சொல்லில் எமக்கு உறுதிதந்தான். செப்படி வித்தைகள் செய்வினை யாவையும்
எத்தகையாயினும் எம்மான் முன்னே இயல்பாய் இழக்கும். சூதுடை மாந்தரின் சூழுரை ஏவலுள்
சீதளப் பூமுகன் சிக்கிடுவானென சிற்றறிவுற்றோர் மனப்பாலருந்த யாதவனேற்ற
இப்பிறப்பினிலே எத்தர்கள் எத்தகு இடர் தொடுப்பாரென மாதவம் செய்தவர் நன்கறிவாரன்றி
மாயையுள் வீழ்ந்தவர் கண்டறியார். மரணம் தழுவி மண்ணுள் அழுகி மாய்ந்தே போயினும்
உருவமிலாதவன் உறுவேரறிய உள்விழி திறவாதவர்க்கு எங்கனம் இயலும். வெற்றிடமற்ற
அவ்வீட்டிற்குள்ளே வேடர்கள் எவரையும் விடுவதேயில்லை விடமெனும் கபடம் உடையோர்
விரைவதை விதியது விடாது வல்லமையோடு வாயிற்கதவை வார்த்தவனொன்றும் வறியவனில்லை.
கொண்டாடிடும் கொட்டமும் அடங்கிட குடி தளைக்காது கெட்டவரடங்கிட அக்கூற்றுவன்
கொந்தளித்தணுகிடும் முறையில் குறையேதும் இருந்திடலாகாதென்பது இறையோன் நீதி. புலன்
வாயில் ஐந்தை அவித்தே புலால் தவிர்ப்போரெவரும் பொய்யுடல் போட்டு மெய்யுடலேற்று
பொன்னுலகடைய எல்லாம் வல்ல ஈசன் என்றும் இடைமறிக்கானிது என் மீதாணை விண் மீதாணை என்றே
அறிக இனியோர் மனமே.
தருமனம் தழுவும் தகைகுணம் ஒழுகும் தங்கமுகமது தவறாது தணிக்கும்
தயை மிக்க வெல்லும் தாளாளன் இல்லத் திருநடை முன்னம் இளங்கதிர் எழும்பி ஏறும்
திசையில் இணையென அமைந்த எதிரியின் மனையுள் இருக்கும் இருளுறை அறையுள் எவரும் அறியா
வண்ணம் எளிதாய் அறைந்ததோ அரக்கிக்குரிய அயல் விழிப்பொறிகள். அதை திறம்பட நட்டவன்
பின்னே பெருமாள் நின்றும் தொட்டதன் முன்னே நல்லவன் வந்தும் நாயாய் மடிந்தபின்
பேயாய் அலைந்த அப்பேரிடர் போன்றவன் ஆடைகள் விற்றிடும் அங்காடி கொண்டதன்
அமைவிடமுற்றது அகலிடமுள்ளில் அரவம் அரசென ஆளும் பதிக்கு தெற்கே தெரிந்ததை
திருக்கண் ஈசன் தெளிவாய் சொன்னான்.
தீதான் தின்ற தீயோன் கைக்கு தீதின் மகளே
வாரியிறைத்த வன்பொருள் எல்லாம் வடக்கர் விதைத்த பொன் பொருளெனவே புகன்றதை
பொழிந்தேன். நெடுங்கடலுடுத்த நெய்தல் நெற்றியில் நிறைநிலமொத்த பெருநகர் முழுதும்
பீழையைப் பாய்ச்சிய அப்பேய்மகள் தொடுத்த பெரும்படை முழுதும் பின்தொடர் நிழலாய்
கருவிடம் கக்கும் கருநாகமொக்கும் கயவர்கள் மூலம் கற்கியின் கதையினை கணத்துள்
முடிக்க கயமையின் உருவாய் கொடுமைகள் புரிந்தே கோரப் பசிக்கு கொற்றவன் இரையாய்
உற்றிடும் முன்னே உலகை காக்கும் ஒப்பிலா ஈசன் உமையை போலே உடமையாய் கருதி
இமைப்பொழுதுமே இயல்பொடு காத்தான். வாடை வீசும் வளமுடை திசையினில் வாதை ஊன்றி
வணிகம் ஏந்தி வருகை தரும் அவர் வட்டியின் தொகையது ஓடைபோல ஓடிவருவது உண்மையை நாளும்
ஒழித்துக் கட்டியும் பெண்மையை பிழையாய் பெற்றவளிங்கே வன்மையின் மூலம் வளத்தை
ஈட்டிய வன்னிடர் வஞ்சிக்கு வாய்த்த கருவூலம் கனகக் குவியல் கனக்கும் களஞ்சியம்
பெருக்கியதென்னவோ பெரும்பாவம் புரிந்தும் பெம்மானுயிரை எடுக்க ஏற்று இயலாமையிலே எல்லாம்
இழந்தாள். ஆதி மதங்களை அணைக்கும் அணங்குபோல் வேடம் தரித்தவர் வெறியது விலகாது
வேரறுத்திடும் வீணர் அமைப்புள்ளில் ஆரவாரம் ஆற்றியே ஆலகால விடத்தை அமைத்தவர்
அழுத்திய அழுத்தம் அரக்கியின் வாழ்க்கையை அழித்தது முழுமையும் அரும்பிடும்
அனைத்தையும் வேரொடு அறுத்து ஆடிய அவளின் அடிகளை அடித்து ஆடாதபடிக்கவள் கால்களை
ஒடித்து கைகளின் வலிமையை காட்டிய கயவரால் அடங்காதவளோ அடக்கமானாள். அநீதி என்பதே
அண்ணலின் வாழ்வில் அறியக் காணாது அறமே வாழ்த்தும் அவனரும் பண்போ அந்தணரிடமே
அணுவிற்கும் தேறா அத்தகு நெறியுடை அரும்பிறப்பெடுத்தே அமரருள் உய்க்கும்
அடக்கமுடையோன் அன்பகம் கொண்டு ஆணவம் துறந்தே நீதியைப் பேணும் நெடுமானுற்ற நேரிய
நெஞ்சமே திருமாலொப்ப திருவுடை நெஞ்சம்.
உலகாள்வான் உதட்டிதழ்கள் உதிர்க்கின்ற உரையாடல் ஒவ்வொன்றும்
உயிர்ப்போடு உருவெடுக்கும். அலையாகும் நூலிழை போல் அரவத்தின் கற்றைகள் போல்
அனைத்தையுமே கவர்ந்த வண்ணம் அடுத்திருந்து அசைபோட்டு அயராது ஒட்டுண்ணும்
ஆற்றல்மிகு அறிவாளி அவன் பெயரோ அப்பனுக்கு அறிவுரைத்த ஆறுமுக உளவாளி அள்ளியதும்
கிள்ளியதும் அரையலகும் அகலாது அப்படியே ஒப்படைக்கும் உரிமைக்கு உற்றவளோ ஓநாய் உளம்
கொண்டு ஒய்யார உருவெடுத்து கறையான கரங்களுடை கரையான் காரிகைக்கு கால் நொடியில்
சேர்த்த பின்னம் கதிர்வேளின் சிரம் சீவ கட்டளைகள் பறந்ததென கந்தவேள் தந்தையுமே கணக்குரைக்க
கேட்டேனே ! மரித்து வீழ்ந்தால் மறுகணமே மணக்கும் எம்மலருடலும் மண்ணிற் புழுவேற்று
மக்கும் கழிவாகும். மறத்திற்கிழுக்கான மாசுடையோள் அறத்திற்கிழுக்கான அற்ற குணம்
அலைபாய கொற்றவனை சீவிடவே கொலைஞர்களை ஏவிவிடும் குடிகெடுத்தாள் குறித்துவொரு
குறிப்பெடுத்தால் கொடியவளோ குடிபிறந்தாள் இல்லையென்று கூத்தனவன் கூறியதை கோடிட்டு
காட்டிடுவேன். மரை முகத்தோன் மாலனுக்கு மண்ணுலகில் மரணமில்லா வாழ்வு என்று
விதியறிந்த வேலனிடம் வித்தை கற்ற வீரபாகு விரும்பியே வேண்டியதை ஞாலத்துள் பலரறிய
நவின்றிடுவேன் கேளாயோ. எம்மான் வாழ்வின் இடர்களை விதைத்தெவர் இன்புற்றே உள்ளம்
மகிழ்ந்தால் இறையோன் அவரை எளிதே கடக்காது எரியும் மலையாய் வெகுளி சிவக்க இரவியை
இயக்கும் அணுவாய் வெடிப்பான். இருளே சூழ்ந்து இரையென எடுத்தும் எதற்கும் அஞ்சா
எழிலுறு அஞ்சன் கதியினை கண்டு கனல் விழி பொறித்த கடவுளன் அகமே இரும்பாய் இருந்தும்
எளிதில் கரைந்ததை எங்ஙனமுரைப்பேன் ! எல்லாம் கெடுத்தும் எண்ணரும் வெற்றியால் இமயம்
அமைத்தும் எல்லை கடந்து இணையைப் பிரித்தும் இரக்கம் விடுத்தே இன்புற களித்தும்
இருந்தவள் வாழ்வில் இசையை இழந்தே இழியோள் என்ற கறையே படிந்து கவலை முழுமையும்
காலமும் சுமப்பாள் என்றே செம்மான் மகளின் அம்மானுரைக்க சிதறா வாக்காய்
பதறாதுரைப்பேன்.
ஏறு வாகனன் ஊறு செய்யான் ஏந்தும்
கைகளுக்கு இடர் நினையான். எண்ணமது நலமென்றால் எழும் பிறப்பெல்லாம் இணைபிரியான்.
இல்லாமை வாட்டிடடும் இழிமையேற்றும் இரக்கமமாற்றும்
ஏழைகட்கே இன்முகத்தோடு கைமாறு செய்வான்.
அன்பே சிவமெனில் அகிலத்தாரின் அறத்திற்கு இணையானது வேறேது. ஆணவம் கொண்டோர்க்கு
அறிவுறுத்தி அதனால் கொள்ளும் பயனேது.
அற்பரினங்களுக்கெல்லாமுமிது அணுவளவேனும்
புரியாது. பண்பிற்கே படிநிலை அன்பென்ற பார்த்திபன் கொள்கையில் குறையேது உண்மையை
விளக்கும் விளக்கெனவே உமையொரு பாகனுரைத்ததுவே. உலகெழும் நாதன் உள்ளங்கையுள்
ஒளிர்ந்திடும்வண்ணம் உலகுடையானின் ஒலிக்காதொளிரும் உடுக்கையை இணைத்து இருக்கையை
பிடித்த எழில்மால் ஆழிகள் இயல்பொடு அமைந்து இரு கைக்குள்ளே இருளினை கிழிக்கும்
இளங்கதிர் போலே ஈர்ப்புடன் நிலைத்து கைத்தலமிரண்டுள் மையம்கொண்டு கண்படும் விதமாய்
மாற்றான் அனைவரின் மனம்படும் திடமாய் மரணப்பீதியுள் தினம் தினம் வீழ்த்தி மாளாத்
திகிலுள் அலறவே ஆழ்த்தும். ஆறா அறத்தை அகற்றார் அறிவர் அன்பை விதைத்து அறுவடையெடுப்போர்
அவரினும் மேலாய் நன்கு உணர்வர். மாறா மறுமையனைத்தையும் அறுப்பர் மண்ணை விடுத்து
மலர்மிசை தொடுத்து விண்ணோடுறைந்து விருந்தை புசித்து விமலனுடனே விலகாது நிலைப்பர்.
மதமேற்று மாண்பணிந்தால் மறுமையது இனிமையாகும் மதம் பிடித்து மனம் கொன்றால்
மறுசுழற்சி பிறப்பெடுத்து மலம் உண்ணும் பன்றிகளாய் மறுமையுள் சிதைவதென மறலி வந்து
அறிவுறுத்த இனம் வைத்து அகமெல்லாம் இறுமாப்பு கொள்பவர்கள் புழுநெளியும் பொல்லுடலை
புண்ணாகப்பெறுவாரே. மனமெல்லாம் பண்பிருந்தால் மண்ணுயிரே தலை வணங்கும் விடமோடும்
நெஞ்சிருந்தால் விடிவது தான் நரகுலகே !
பாகம் 192
கொன்றை வேந்தன்
குறிந்தெழும் நற்சிந்தையினை கூராக்கி கொள்ளும் மனமொருநிலையை வேராக்கி அள்ளுமவர்
அகத்துள்ளே அகலேற்றி அணங்கனொளி அருள் வீசி நனிசிறக்க நல்கும் நிலையெல்லாமும்
நலங்கொழிக்க நற்சித்தர் நன்றாக பயனெடுத்து நல்லுலகிற்கதன் மூலம் பயனளித்தர்.
நாளுமதன் நன்மையெல்லாம் நலியும் வண்ணம் நாட்டிலின்று இளவல்களே எடுத்தவண்ணம்
எக்கணமும் இனிமையோடு கழிப்பதனால் எல்லா வயதினரும் இழிமையுற பொல்லாங்கு புரையோடி
புவிமுழுதும் பூவையரின் பொன்னான வாழ்வுதனை பொசிக்கிடவே புறம்போன போக்கிற்கு
அடிகோலும் ஔடதப்பண்புடை அப்பயிரின் அருமையினை அறியாத அற்பர்களின் அணுகுமுறை
அத்தனையும் அழுத்தமுற அடிப்படை முழுமையுமே ஆட்டம் காண கோரக்கர் கொழுந்தறுத்து
கொள்ளுவதோ குடிகெடுக்கும் போதைக்கு என்றறிந்தும் கொள்ளற்க என்றுரைக்கும்
கொள்கையினை கொள்ளாது குணங்களையே சீரழித்து குலமாந்தரனைவரது வேரழித்து வளவாழ்வை
பாலையென பாழடிக்கும் வாதையினை வரவேற்க வரிந்துகட்டி வரவேற்பு கம்பளத்தை
விரித்தவண்ணம் வஞ்சகர்கள் விதைத்துவிட்ட வன்கொடுமை வாழையடி வாழையாக
தழைத்தாலும் வாளெடுத்து வானிறங்கி வந்தவனே வன்கொடியோரனைவரையும் வேரறுத்து
வாழ்வியலை விண்புகழ வைப்பதெனென வாக்குரைக்க வைத்தவன் வேறெவனுமில்லை. வான்பிறை
அணிந்தவனே வார்த்தை தந்து வார்த்திடுயென்றெனக்கு ஓரு நாக்கு தந்து வாயார என்னையுமே
வாழ்த்துகின்றான். செழுநிலத்தை சீரழித்தோர் இவரிவர் தான் என்றறிந்து சினமோங்க
அவரையெல்லாம் சிதைந்திடுவான் செவ்வேள் உதித்த பின்னே. சிந்தைகொள்ளும் மானிடத்துள்
சீறியெழும் சிங்கங்களும் சிரிக்காது செவிமடுக்க சிற்றினமே சிதைந்த பின்னர்
சீர்மிகு மாந்தருடை சிறப்புறு பேரினமே சிரசெடுக்கும் பேரரசில். இதை
மூதறிவுக்கெட்டிடவே முரசடித்து வாக்கிசைப்பேன். மூளைகளின் செயல்களுக்கு
முரணமைக்கும் போதையெல்லாம் முற்றுபெறும் நாளும் வரும் முகுந்தனவன் மலர்ந்த பின்னே
முறைப்படுத்த அவனுடனே முக்கண்ணன் துணையிருப்பான்.
காரிகையர் கற்புநெறி காற்றினிலே பறந்தபடி கேளிக்கை மையங்களால்
கெடுதிகள் எழும் நாளில் அழிவுகள் உச்சம் தொடும் அகிலமே அல்லலுற அறுதிப்
பெரும்பான்மை அறம் மீறும் செயல் என்று அர்த்தனாரி சொல்லுகின்றார். அன்னை நிலம்
முற்றுமிங்கு அலறியழும் ஓசை கேட்டும் ஆருமிங்கு மாறிவிடார். தென்னைவனம்
தீச்சுமக்கும் தீர்த்தக்கரை வற்றி விடும் தானியத்தின் தட்டுப்பாடும் தறிகெட்டு தலை
விரிக்கும் மண்ணை வாட்டும் பஞ்சம் வந்து மன்னுயிரை பதம் பார்க்கும். விண்ணவரே
விம்மி அழும் விபரீதம் அரங்கேறி வெறியாட்டம் போட்ட பின்னும் மக்களாட்சியென்று
சொல்லி மார்தட்டும் மன்னர்களும் மண்ணிலெங்கும் அது குறித்து மருந்தளவும் கவலை
கொள்ளார். மாவேந்தன் மனமெங்கும் மரணத்தின் வலியெடுத்து ஆறாது அது குறித்து அகமுருக
சிந்தை செய்தும் ஆலகண்டன் அமைதி காக்கும் அதன் பொருளை விளக்கிடும் என்னருள் வாக்கை
கேளாயோ. அநீதி காத்தவர்கள் அனைவரையும் அழிவு தின்று அன்னை நிலம் பொலிவு கண்டு
ஆயிரமாம் ஆண்டு காலம் அருமுனிகள் அரசாள அடிகோலும் மன்னனவன் ஐயிரண்டு ஆண்டு காலம்
அயராது ஆட்சி செய்து அமரர்களின் மாட்சியெய்து அவ்வுலகு எய்திடுவான். அதன்முன்னே
அழிவனைத்தும் புவி தாங்கா அழுகையோங்கும் பஞ்சம் வந்து விழுகின்ற பிணம் குவிக்க
வெந்தணல் சூரியனும் வேண்டுமென்றே அதைச் செய்வான். அகம் கனத்தோர் அன்பறியார்
அணுவளவும் கருணையின்றி படை அனைத்தும் தரையிறங்கி பலம் செலுத்தி பாவம் செய்ய
பேய்க்காற்று தலை விரித்து பெரும்புயலாய் பீதி தந்து பெயர்த்தெடுக்கும்
நெடுமரத்தின் பிள்ளைகளும் ஊசலாடும் ஊனிழந்து. அகிலத்தில் மிஞ்சுவது ஐந்தில்
ஒருவரென்று அறம்பாடி அறிந்ததனால் ஆவனசெய் என்றுசொல்லி அர்த்தனாரிக்கடி பணிந்தேன்.
அறிதுயிலும் அரங்கனுக்கு ஆற்றலேற்றி ஊக்குவித்து அகிலம் காத்து அருள் புரிவாய்
அம்மையப்பா என்றழுகுரலே அதிரும்படி அறநெறியர் உருகிடவே சிவன் பணியை அவன் பணியாய்
செப்பனிட அவனுதிக்கும் செழுங்காலம் அருகெனவே சேதி சொல்வேன் கேளாயோ !
ஏற்றம் தந்துதவிடும் எண்ணமிகு இயல்புடை ஏடன் எவனுமே எம்மானுக்கு
இல்லானாகிலும் ஏற்றமுற்றிட இனியோனவனால் என்றும் பயன் பெற இலைக்கறிவேம்பென இழுத்துக்
கொள்ளுமோர் நாசிக்கு விருந்தாய் நறுமணமூட்டிய நாழிகை முடிந்தபின் நாடாதெறியும்
கூடாக் கழிவென குப்பைக்குள்ளே கொட்டித்தீர்த்தபின் கொச்சைப்படுத்திடல் ஒப்பவே
இச்சை தீர்க்குமோர் இழிய நட்புக்கு இடம் தரும் முன்னமே இன்முகத்தோடு ஈகைபுரிந்து
நன்னலம் பொழிந்தவன் நாணும்படி நின்றவனுக்கென்று ஏற்றம் அமைத்திடவென்று இழுத்துச்
சென்றிட இணையும் கைகள்தான் இன்மையே. தோழர் பலருக்கும் தோழை கொடுத்துமே
தொண்டுக்கென்றவன் துவளாதலைந்துமே கேலிக்கென்றவன் ஆளாய் ஆகிட கீழ்மைப்படுத்திடும்
பண்புளோர் எள்ளி நகைப்பதில் என்பிலாரென்று யானியம்பவோ. அன்பணிந்தவன் அருள் செழித்தவன்
அறிவொளியவன் துட்டருலகினில் தோற்கும் நட்பினை தூற்றாதேற்றிடும் தூயோன் விழிகளில்
அழுகை வாட்டிடும் அழகு முகம்ததனை யானங்கு கண்டதே அலகிலா பெரும் சாபமே. ஈடனென்பவன் இயல்பை
கூறிடின் இறவா வேதமனைத்தையும் இறையோன் இன்னருள் கிடைத்துமே ஓதும் அவன் வழி உலகம்
அனைத்திலும் ஒருநாள் ஒலிக்குமே ! ஈசன் இயங்கிடும் இரக்க நெஞ்சனை இடரே கொல்லும்
அந்நெருடல் கண்டுதான் நெற்றிக் கண்ணுடை நேசனே வந்து நீங்கா ஏடனாய் அங்கேவல்
செய்வதால் அடியேனெந்தனின் அகமும் மகிழுமே. வேடன் விழிகட்க்கு விடியல் வார்த்தவன்
வேந்தன் இடர்களின் வேரை அறுத்திட்டு பாரை அவனிடம் பாரமாக்கிட பத்து நாளிகை மட்டும்
போதுமே. பத்தரைமிகு பைம்பொன் குறித்து யான் பரமன் முன்னிலே பாடிப்பாடியே குமரன்
அடிகளை கொண்ட கணமுமே வந்த பிணிக்கினி மருந்து வேண்டுமோ ! நாதன் அவனுக்கு நன்மை
நேர்ந்திடில் நாளும் உலகிற்கு நலங்கள் கோடியாய் வந்து பெருகுமே !
நயவஞ்சகம் நட்போடும்
நலம் கொல்லும் துப்போடும் அகம் அஞ்சிதம் அல்லாது அடித்தளத்துள் விடமூலம் வேரூன்றி
வீணாகும் நெஞ்சோராய் நடமாடும் நனிபேதையனைவருமே நமனுக்கே இரையாகும் நாளிகையுமறியாது
நாள் கிழமைதெரியாது நலமோடு நளத்துள்ளே அமர்ந்தோளின் அஞ்சனையே அரவணைக்கும்
அண்டங்களின் கோளறியா குறிப்பறியா கொடுக்கமைத்த தேளனையரென தெரிந்துமே திரு
விடுக்கும் தீயோராய் நாயோரின் நட்புறைய நாஞ்சிலார் பெரும்பாலும் நாடுவதோ நாதனுக்கு
குழிபறித்து நரிமாந்தருடனிருந்து அதில் அவரே விழுவரென அடைக்கலம் காத்தவண்ணம்
அடியார்க்கு நல்லான் ஆக்கிய அறத்திற்கு அயலானோர் அனைவரையும் ஆணவம் தின்றதன்றி
அத்தோடு நன்றி கொன்ற காரணத்தால் நாடோடும் நிலையுற்று நகர்விடங்கள் நகர்ந்த வண்ணம்
நன்னிலமே கொள்ளாமல் நாயினும் இழியோராய் நாடோடும் நிலை பெற்று நகைக்கின்ற வகையுற்று
ஒருநாளும் உய்யாதோர் ஊழ்வினைக்கு பொறுப்பேற்று உலகுடையான் சபிப்பானே உடன் உமையாள்
சிரிப்பாளே !
மதமெனும் பேயீன்ற மாண்பறு மனம் கொண்டு நடுவீட்டில் அமர்ந்து
நின்று நல்லறத்தை சிதைக்கக் கண்டு நெடுவேள் கற்கியுமே நித்தமும் கொதிப்பதுண்டு.
அன்பறத்தை அகற்றிடாது அகிலத்தில் பிறப்பொக்கும் மன்னுயிர்கள் மட்டுமின்றி மண்வாழ்
உயிரனைத்தும் மதிப்புடை செல்வமென மதிசடையான் பேணி காக்கும் பூம்பரத கண்டமதிற்
நான்மறையை நிறைவேற்றி நாகர்களின் குடி கெடுப்பர் நரகுறைய தகுதி கொண்டோர்.
தென்னகத்து தீயர்களை தீ கக்கும் துச்சர்களை வன்மமுடன் உந்திவிட்டு வாதையீன்ற
வகுப்புடனே வரம்பு மீறி கொன்ற வண்ணம் வளவாழ்வே சிதையுமெனில் சீறிவரும்
சிங்கமகன் சிரங்களையே செதுக்கும் வண்ணம் சிலிர்த்துடனே எழுவானே ! கடுமைக்கஞ்சாத
கதிர்மகனோ கலங்காது காரிருளை கிழித்த வண்ணம் கனகமென உதயமாகி ஒடுங்கா ஒளிமகனாய்
உமையாளின் உயிர்மகனாய் வெற்றிச் சங்கம் முழங்கும் வண்ணம் வீணர்களின் ஆணவத் தலை
கொய்து ஆறா வெகுளியுடன் ஆக்கிடுவான் குன்றெனவே.
முத்தாய் முதல்வனை படைத்தபின்னே முதலில்
அமைத்த தோட்டத்துள் வித்தாய் அவனை விதைக்காது வெறுமனே அங்கு உலவவிட்டு
வேல்விழியாளுடன் பழகவிட்டு வேண்டா கனியொன்றை விலக்கி வைத்து ஆண்டிட அனைத்தையும்
வகுத்தவனே அல்லலனைத்தையும் அண்ட வைக்கும் அக்கனியொன்றை தவிர்க்கவென்று வெட்கம்
வருமுன் விதியமைத்து வேண்டுகோளை விடுத்தவனும் வேதத்துள்ளே உறைந்தவனும்
வெண்டலையானும் வேறன்று என விருத்தத்தாலே விருந்து வைத்தும் வேதவிற்பனர்கள்
வெறுப்பாரே. வீணாய் விண்ணில் விளைந்தாலும் ஆணாய் ஆதியில் அவன் தோன்றி அறியாமையுள்
வேரூன்றி அவளுக்கடிமையானதனால் பகவன் மொழிமேல் பற்றின்றி பரம் விடுத்த பாவியனாய்
பாதம் பதித்த குன்றமது கொற்றவன் நாட்டின் குணக்கினிலே கொந்தளிக்கும் கடல் நடுவே
மிதக்கும் தீபச்சுடர் போலே மேதகு தமிழினம் வாழுகின்ற ஆதவன் குன்றம் மீதிறங்கி
அல்லி இதழாளுடனுறங்கி ஆயிரம் காலப்பயிர் வளர்த்த அடிப்படை நாதன் அறம் வளர்த்த
அவ்விடமிருந்து ஆரமிட்டால் அண்ணல் பிறப்பிடம் தூரமென்றால் தென்தமிழகம் தேர்வு
பெற்று தெரியும் காதம் உரைப்பேன் கேள். மூன்றை பெருக்கும் பதினொன்றால் முத்து நகரே
வருமென்றால் முல்லை நிலமதன் தென்மேற்கே செல்வப்பெருந்தகை சிரிப்பதாக சித்தருள்
சித்தன் செப்பியதை செவிமடுப்பாய் மன்னுயிரே !
காப்பியம் போற்றும் காவிய மகனின்
கனியும் நெஞ்சின் கனம்தனை அறிவதாயின் காணும் பல்லாண்டு காலம் கமலக்கண் காதலெய்து
கனகநெஞ்சம் அறிவதொன்றும் கைக்கெட்டா தூரமன்று. கடினம் மிகையென்று கைவிடும் எண்ணம்
வந்தால் அதனினும் அரியதன்று அடியேன் சொல்வதென்றால் அண்ணலுடன் அகம் இணைத்து
அன்பனாய் நட்பெடுத்து நலமொடு செயல் புரிந்து நாதனின் குணமறிந்து நன்றாகும் மனம்
மலர்ந்து கொண்டாடும் நிலைபெறுமே. கொற்றவன் பண்பறிய குறித்தேன் யான் கோடுகாட்டி
மற்றது மாந்தர் கையில் மாண்புடன் நடந்து கொண்டால் மன்னவன் ஊழ்வினைக்குள் மறுக்காது
இடம்பெறுமே.
அறத்திற்கே இழுக்காகும் ஆறோடும்
குருதியென அன்னைத்தமிழ் நிலமெங்கும் அவளெழுந்தால் சிவப்பாகும். நெருப்பிற்கு
இரையாகும் நீதிமான் பஞ்சென்றால் நீங்காத அழிவிற்கே நிலையான பொறுப்பேற்கும் அரக்கியின்
விரலனைத்தும் அற்பமாய் செயல்புரிந்து அண்ணலின் வாழ்விழக்க ஆவன செய்தபின்னும்
அறத்தையே கொன்றவண்ணம் அடிதொடும் பாதையெங்கும் அமைதியாய் படிந்திருக்கும். அன்றில்
பறவையொப்ப ஆழமாய் அன்புறைந்த நட்புக்கு நமனாய் வந்தோள் நரகுறையும் திறமையெல்லாம்
நலம் கொன்றே விஞ்சி நிற்கும் தருமத்திற்கொவ்வாதாள் தலையெடுக்கும் வரம் குன்றி
தளிர்க்காத காரணம்தான் அழுக்காய் அகம் குன்றி ஆணவம் தான்தோன்றி அடியொடு
சாய்த்ததுவே. அறம் கொண்டு ஆற்றுகின்ற அத்தனை கருமமுமே அண்ணலை காத்து நிற்க மறம்
மாறா மன்னவனின் மனையுள்ளே மலர்ந்தவளும் மறம் எள்ளும் கைத்தலத்துள் மௌனமாய்
வீழ்ந்தவண்ணம் மறுப்பின்றி மண்டியிடும் மாமடமை புரிந்ததனை மாதுடையோன் அருளாலே
மனமூன்றி கண்டேனே.
ஆலகாலனது அங்கத்தில் அரையாகி அணிந்தவளின் புரமாகும் அண்ணலது
இடம் வந்து அநீதி அத்தனையும் அரங்கேற்றி அகன்றவனோ அரக்கியின் ஆடவனாய் அடுக்கிய
வினையாலே அர்த்தநாரியுமே அழுத்திய அடும் நோயால் படுக்கையில் பிணமானான். பார்க்க
வலுவிருந்தும் பக்கமெலாம் பொன்னிருந்தும் வார்த்த வழிகளெலாம் வன்கொடிய பாவத்தால்
வீழ்ந்த பாசத்தால் விரைந்தான் நமனிடமே ! ஆத்திச்சூடிமுன்னே ஆழ்ந்த தவத்துடனே
ஆழ்ந்து யான் அழுதபோழ்து அவனே சினத்தவண்ணம் அங்கம் சிலிர்த்தவண்ணம் அண்ணல் துயரறுக்க
ஆணை பிறப்பித்து அணங்கை நியமித்து அரணாய் சிறப்பித்து அன்னை இவளென்று அடியேனறியும்வண்ணம்
அறிவே தெளியும்வண்ணம் அகமே குளிரும்வண்ணம் அரனார் அருளையெல்லாம் அமுதாய்
சுவைத்தேனே.
முருகன் நிலத்துள்ளே முகுந்தன் அரும்புவதாய் மூவரவருள்ளே
முக்கண் உடையோனே மொழிந்து சென்றதையே தெளிந்து சொல்வதென்றால் தென்றல் வரும்
திசையில் தேவதருயெனவே தேவி அமர்ந்திருக்க தாவி சென்றவண்ணம் என் ஆவி அடிவருடி
அன்னையிடம் கேட்டு அவனின் முகம் கண்டேன். அது ஆயிரம் ஆதவனின் ஆக்கம் கொண்டவனாய்
அடங்கிய ஒளி முகத்தின் அழலே தெரியாமல் அடக்கம் உடையோனாய் அன்னை அருள் காட்டும்
திசைக்கு திட மேற்கே தீரன் பிறந்தது தான் காதம் இரண்டரைக்குள் கனகம் பூத்ததனை
கண்ணார கண்டேனே ! அண்ணலது அடையாளம் அழல் கண் திறந்தோர்க்கு அழகுறவே தெரியுமென்று
ஆரங்களால் அரவணிந்தோன் அறிவுறுத்தி சொன்னதெல்லாம் அசலன்றி போலிகட்கு அணுவளவும்
பொருந்தாது. திண்ணம் அத்திருவுடையோன் தேடரும் பிறப்பென்று எண்ணமதில்
வீற்றிருக்கும் எம்பிரான் ஈசனுமே ஏராளம் சொன்னபடி எழுதாத வாக்கிசைப்பேன்.
கண்ணப்பன் தேவனையே கைதொழுது வேண்டுபவர் கண் திறக்க கடவனென்றும் கற்கி முகம்
காண்பதென்றும் கட்டளையை இட்டவனே கந்தவேளின் தந்தையென்று காதினிக்க சொல்லுகின்றேன். நந்தவனம்
உலகென்றால் நாறும் மலரத்தனைக்கும் நடுவிலவன் நறுமணத்தான். நாசியது நன்றானால்
நாதனவன் உயிர் காற்றாய் நலம் கொண்டு சேர்ப்பானே. செக்கச் சிவந்தபடி செவ்வானம்
செழிக்கின்ற சில நாளில் செவ்வேள் வருகையுமே சிறப்புறவே தெரியவரும் அதுவரையும்
அறிவுக்கு அயலானோர் அறனுக்கு முரணானோர் அப்பாவி மானிடத்தின் அறிவகற்ற கண்டேனே ! அவிக்கின்ற
கயவர்களை அருமாந்தரென்று சொல்லி அரிக்கின்ற கரையானை அணிப்பிள்ளை என்று சொல்லி
தெறிக்கின்ற செள்ளுகளை தேன்வண்டு என்று அள்ளி எடுக்கின்ற மாந்தர்களை என் சொல்லி
நகைப்பேன் யான். நீசருறை மானிடத்துள் நின்று வாழும் மதுவாலே பொன்விரையம் ஆகுமிந்த
பொல்லார் அவனியிலே அண்ணலவன் ஆடகமாய் அருங்குணத்தோடனைவர் முன்னும் பெருங்குணத்து
பேரிறைவி பெயரை என்றும் பிழையிலாது வருமொழியில் நிலை மொழியாய் வாழ்த்து மழை
பொழியக்கண்டு விதை விதைத்து பொன்னறுத்து விடியும் வரை தீ வளர்த்து வெல்லும்
அவ்வீரவேளோ வெற்றிமுகம் கொண்டவண்ணம் விஞ்சியே அவனொளிர வேந்தர் வேந்தன் பெயரைச்
சொன்னால் விடாது வாய் இனிக்கும் காந்தமாகும் மொழிகளுக்கே காதினிக்கும் கற்கி
என்றால் தேன் தமிழில் உச்சரித்தால் தெவிட்டா தீஞ்சுவை பிறக்கும் வான் புகழும்
வள்ளலவன் வளமாகும் நிலங்களெல்லாம் வரமாகும் கவினழகே !
புறங்குன்றி பொலிவுற்றே பூந்தமிழர் வளம் தின்று வாழ்வமைத்து
வலம் வந்த வஞ்சகியோடு அகங்குன்றி அறம் சாய்க்க அணி சேர்ந்த காரணத்தால் ஆதி சிவன்
வடிவமைத்தும் அற்பனவன் அழிவதென இறையோனுக்கெதிரெழுந்த இழியோனுக்கெழுதிய இன்னலுறும்
விதியுண்டு. எழுத்தாணி என்னுடமை இயம்புவதோ யானல்ல எண்ணரும் பண்புடையோன் எம்மான்மேல்
அன்புடையோன் என்றுலகே நம்பும்வண்ணம் தமிழ் கூறு நல்லுலகத் தலையோன் தலையகற்ற
தயங்காதான் திட்டத்திற்கிடங்கொடுத்த திடமிலா தலைச்சோறும் விருந்தோம்பும்
புற்றத்தால் வினையுற்று விரிவதாக விதிசமைக்கும் கதியுறவே காலன் காத்திருக்கும்
கணமது மாறாது மாலவன் மனம் கொன்ற காரணத்தால் மறுமையே கூடாது மறலியுடன்
மாறாதடிமையுறும் மனுயிரே அறியாயோ !
குருதி வளமெடுத்து குதூகலம் கொண்டாடும் கொதுகின் கொடுமைக்கு
கொதித்தெழுபவருள் எவர்தான் இந்நிலத்தில் ஏற்ற கோட்டையுடன் இருக்கும் கொற்றத்தை
இழக்க உடன்பட்டு புறமிட்டோடிடுவர் ?
விழுப்புண் வேண்டுமென்று விரதம்
இருப்பவருள் வேந்தன் தலைமகனாய் வீர நடை பயில்வான். வித்தைக்கரசியவள் விருந்து
வைத்திவனை வெற்றி முகம் நோக்கி விரைந்து அனுப்பியதை உற்று நோக்கியவன்
உமையொருபாகனென உண்மை உரைத்தேனே ! உயிர்கள் தலை வணங்கும் ஊக்கமுடையானை ஊகமொருபோதும்
ஒரு கணம் குறையானை உளவியல் உறைந்தவனாய் ஒப்புமை இல்லாத உலகியல் தெரிந்தோனை களவியல்
கலவாத கற்புநெறி கொண்ட கவரியர் கண்களுக்கே அவனே தெரிவானே. கருமம் மறவாமல் கண்ணியம்
சிதையாமல் பெருகும் துயருக்குள் பெம்மான் வீழ்ந்திடினும் உதிக்கும் எதிரிகளோ
ஒருமித்தெழுந்தாலும் உள்ளத்துள் உரத்தோடு உமையாள் வரத்தோடு எதிர்க்கும் எரிகதிரோன்
இழியோர் காலடியில் நெடுஞ்சாண் கிடையாகான் ! நிமிடம் அது வந்து நேரும் நிலை கண்டால்
நெடுமான் உடனிருந்து காப்பேன் என்றவண்ணம் காதிலுரைத்தவனே கங்கைநதியணிந்து
கடமையுணர்வோடு மங்கையுடனிணைந்து மாதுடன் இனிப்பவனே !
பாடல் 194.
இரும்பொறை
இயல்புற்றோன் எள்ளளவும் இன்னாமை எவர்க்கேனும் செய்யாமை சிறப்பன்றி சீருறு கொல்லாமை குணமூன்ற கோடியுறும் நல்லீவிரக்கம் கொள்ளாமை உள்ளத்துள் குன்றேனும் இடமற்றோன். கொற்றவனுக்குரியதோர் கொண்டாண்மை குன்றாமல் கூர்முலையர் கொண்டாடும் குழைவிலான் நரம்பெழும் நாரணன் நற்பிறப்பே நானிலத்தில் உயிர்த்த பின்னே தழலெரித்த துரும்பெனவே தாளா துயர் சுமந்து மாளா தோல்வியின் மரிக்கா வலு குறித்து மனம் வருந்தா வரமுற்றோன். கரும்பினும் இனிய காட்டுத்தேனொப்ப கனியும் வாய்மொழி கேட்க விரும்புவோர் விண்ணவறென்றே விமலனின் புகழாரம் விஞ்சியே நிற்கக்கண்டேன். விருந்தினர் புறத்திருந்தால் வினையறும் மருந்தெனினும் வேண்டியே பகிர்ந்துண்ணும் ஆகச்சிறந்தோனின் அரும்பண்பை அயராது புகழ்வேனே. அறத்தொடு வாழ்பவர்க்கே அனைத்தும் புரிந்திடுமே. அழுக்காறு அவா வெகுளி அன்பறுக்கும் இன்னா சொல் இவையாவும் இழுக்காய் ஏற்காத இழியோர்க்கு எம்மான் அகம் தான் எளிதில் புரிந்திடுமோ. ஏற்றிய பாவனைத்தும் இன்னிசை மலரெனவே சூட்டியே சொக்க வைப்பேன் சுந்தர தமிழ் ரவி சொற்களில் தேன் தடவி சாக்கநாதனையே திக்குமுக்காடவைப்பேன்று முகனணிந்த ஆரமுதத் தமிழுக்கு
அரணாய் மைந்தயெம் ஆறுதலையானிடம் அடைக்கலமாகியே அனைத்தையும் அறிந்தவண்ணம் அடியார்க்குரைப்பதெல்லாம் அரவங்கள் குடியிருக்கும் அண்ணலின் இல்லத்திற்கிருபுறமும் இயங்கும் ஏதிலாரிருவர் குடக்கும் குணக்குமென கொடுமை விதைத்தவண்ணம் சிலுவையை சுமந்த பின்னும் சிற்றினம் சோராது சீழ் மனமுற்றவரை ஆள்பவள் யாரென்று அம்மையை அணிந்தயெம் அப்பனை அறிந்து யானும் உண்மையை உணர்த்துமாறு உருகினேன் உணர்ந்தவாறு உள்ளத்துள் உள்ளதைத்தான் உலகறிய விளம்பினேன். அங்கத்தில் அழகுறைய அகமெங்கும் அழுக்குறைய எண்ணத்தில் இழுக்கமைய இழியோரனைவருடன் இன்னும் கயமையொடு இனிய நட்பமைக்கும் அரக்கையின் கைத்தலந்தான் அழிப்பது அவளையுமே !
காலங்காலமாய் களிக்கும் கழிசடையர் நடுவே கனியமுதன் கண்டத்திற்கு கன்னிகளால் வலை விரித்து கண்ணிகளால் வளையமைத்து காத்திருக்கும் கதியறிந்து கற்கிமேல் கனிவுற்று கண்ணீர் சிந்தியதால் காக்கும் தருமமுமே கற்கியுடன் காலூன்றி சாய்க்கும் சண்டாள பெண்ணையுமே ! மதிமுகத்தை மாய்க்கவேண்டி மட்டற்ற மகிழ்ச்சியோடு மனப்பால் குடித்தவளின் மண்டையுள் மலர வரும் மருந்தேற்கா புற்றத்தால் மண்ணுறங்க போவதன்றி மண்ணாளும் விதியொன்றும் மந்தரைக்கு இல்லையென்றும் சிந்தைகளின் சிறகொடிந்து சிரசுள்ளே சீழமைந்து சீர்கெடும் நாளது சீக்கிரமே வருமென்று எந்தை இளம்பிறையன் எழில்மார்பை அலங்கரிக்கும் கொன்றைப்பூமாலையுமே கொதித்தெனக்குரைத்ததனை குவலயமே கேளாயோ !
மடியெனும் வினைத்தொகையை மணந்துள்ள பாக்கத்தில் மண்ணடுங்கும் குணக்கேடன் மாற்றானாய் அமைந்திருப்பான். அக்கொலைஞன் பெயருரைத்தால் கொண்டிருக்கும் கண்டமதன் கூடவே மணியடிக்கும் மறமற்ற கயவனது மாதாவின் தலைவனுமே மலர்ந்திருக்கும் வடமொழியின் மாபெரும் வெற்றியுடன் தலையெடுக்க ஒட்டிவரும் தயையிலான் மதிமுகமே. வளமொடு வாழ்பவனின் வஞ்சக இளம்பிறையோ வடபரத மொழித் திரையில் வாகை நட்டு இசையமைத்தோன் வல்லமைப்பெயர் வந்து நான்கெழுத்தில் நிலையுறவே நற்றமிழ் எழுத்திலது பகரத்தை முன்னெடுத்து ரகரத்தில் ஒற்றமைத்து மகரத்தில் கட்டமைத்து னகரத்துள் மெய்யெடுத்து நான்காய் முடிவுறுமே. நன்நெஞ்சு இல்லாதோன் நரகுக்குத் தகுந்தோனாய் நாட்டவர்க்கு கேடு செய்தே படையாகும் அவன் இனக்கள் பகருகளே பகலிரவாய் பார்த்திபனை வட்டமிட பரிந்துரைத்த பாதகியை பாரறிய பகர வந்தேன். அவள் பார்ப்பன பைங்கிளியை பாதுகாத்து வைத்திருந்தும் பட்டத்து அரசியாக படாத பாடுபட்டும் கனவுக்கு கனல் மூட்டி காதல் கொண்ட அரியணையும் கைகெட்டா கைக்கிளையாய் கண்ணீர் குடித்திடவே காரிருள் நெஞ்சத்தார் கமலக் கொடி தாங்கி கயமையோங்க இழிமை புரிந்ததனை எவரும் பார்க்கும்வண்ணம் கைத்தல நெல்லியென காசினி கண்ட பின்னும் கடுஞ்சினத்திற்குற்றோரை காணாமுகமெடுத்தே கடந்து போன பின்னும் கனிவுடையோன் கதை முடிக்க கயவர்களை ஏவி விட்ட கனிவிலா அரக்கிக்கு கல்லறை கட்ட வரும் காலம் வெகு விரைவிலென காலன் கணக்குரைத்தான். காலகாலனுடன் கண்டபடி பிணக்கமைத்தால் கதையே முடியுமென்று ஞானம் திறந்த வண்ணம் நல்வாக்குரைக்கின்றேன். பரிக்கு கொம்பமைந்தால் பாருக்கே கேடமையும் பரிதாபம் கொள்வோர்க்காய் பரிதாபப்படல் நன்று. விளைவை அறியாதோர் வினையை விதைக்கட்டும் விதியை இழப்போர்கள் விழியை கெடுப்போர்கள் விரைவாய் ழியட்டும். தெளிந்த எண்ணம்தான் னையை அறுத்தெடுக்கும் திறனை ளர்க்கவரும் அழிவின் விழும்பிருந்தே வற்றின் விளைவறியார் பாம்புக்கு பால் ஈர்த்து தேளுக்கு தோள் கொடுத்தே தீங்கை ழைப்பானேன் ! அன்பின் அலகறிந்த ர்த்தநாரியொன்றும் அறிவை ழக்கவில்லை. அடிகளை நொறுக்கியவன் டுத்த படியனைத்தும் அகல வைப்பதற்கு ருஞ்சொற்பொருள் கொண்டு அறிய வைத்தவனே ஆதியும் அந்தமுமாய் அண்டத்தை இயக்குவதும் பிண்டத்தை பெருக்குவதும் பிறழா தொழிலெனவே பெற்ற பேரிறையே !
அறப்பால்
அருந்திய காரணத்தால் அன்பே சிவமென அவனுரைப்பான். அம்மையப்பனுக்கல்லாது ஆர்க்கும் அஞ்சா நெஞ்சனவன் மறப்பாலருந்தியும் மதம்சாரா மாண்பே அவனின் உயிரென்பான். ஆதலினாலே
அருகுற்றோர் அண்ணலை நகைப்பால் கிறுக்கனென்பர். நாதன்
நன்கே உணர்ந்த மன்னன் நன்நெஞ்சினை அறிந்தவண்ணம் தீரன் தெளிவுற இருப்பதென தேவி உமைக்கு சொன்னதனை திருடன் ஒட்டு கேட்டதுபோல் திகைத்தே யானுமறிந்தேனே. கதைக்கும் கயவன் யானல்ல கயிலை நாதன் அறிவானே. அன்புநாதனுக்கெதிராக அறிவுரை தந்தது அரவென்று அறிந்தே அழிவுற்ற ஆயிழை போல் ஆடவர் பலரும் அறங்கொல்ல அடித்தளமிட்ட அரைக்கியுமே ஆகா சேர்க்கையால்
பலியுற்று நொந்து நோயுறா வீழ்ந்த பின்னும் நன்று அறியா
நஞ்சகத்தாள் நாயினும் இளிவாய் நாள் சுமந்து
நமனிடம் போகக் கடவதென்று நறுமெய் பாதியை நாயகிக்கு நற்கொடையளித்த நாதனுமே உறுமெய் உரைத்ததை ஒளிவின்றி உத்தமர் கேட்டிட உரைத்தேனே.
\
மரைப்பூ தலைதட்டி மண்ணிலமர்த்தியதால் நிலமும் வாவென்று நிதமும் அழைப்பிட்டும் நீத்தார் நெருடலுக்கு நீங்காதிடமளித்தும் மாற்றார் முன்னர் வந்து மண்டியிட மனம் சென்று மானமிழந்ததற்கும் மறப்பாலுண்டதற்கும் ஏதும் தொடர்புண்டோ ? எல்லாம் இழந்த பின்னே இருக்கும் கயவர்முன்னே சிறிதும் சீறாமல் செவ்வேள் முன்பிவளோ செத்த வீரத்தை சிலிர்த்து காட்டுவதோ ! கனகம் ஆள்பவளின் காதற்கினியவனின் கனிவின் சுவையறிய அழியா மாமுனிகள் அரியகாட்டிற்குள் அமர்ந்து ஐம்பொறிகள் அடக்கி விழிதிறந்து அருளுக்கேங்கிடவே இழிய பிறப்புற்றாள் இன்னா பல புரிந்து இறையோன் கோபத்தால் இல்லாகானாளே !
பாகம்195
சந்திரசூடனை சரணடையாமலே சாயும் காலத்தில் நின்றுச் சிரித்தவர்
சங்கரன் சிந்தையை நெஞ்சிலே நீக்கினோர் சாவின் மடியிலே வந்து நிறைவரே. மந்திரம்
சொல்லியே மனிதம் மறந்தவர் மனத்தால் அவருமே மாசுறு மறவராய் மக்கள் பண்பினை
மருந்துக்கும் இழந்தவர் மரணத்தின் விளிம்பிலே மார்தட்டிக் களித்தவர்
மட்டுமல்லாதவர் மன்னனுக்கெதிரியாய் மனப்பால் குடித்தவர் மறுமையுள் நுழைவது
மட்டுமல்லாதுமே இம்மையுள் இடர்களை எடுத்துச் சுமப்பரே ! இன்னுமே ஏறிடும் ஏணியில்
என்றுமே இடறி விழுவதும் எண்ணிலா தோல்வியை எட்டிப் பிடிப்பதும் எம்மான் ஊழ்வினை
எய்த அம்பென இத்தகு உண்மையை என்னுள் உரைப்பது ஈடிலா ஈசனின் இடப்புற இறைவியே !
தேடரும் அண்ணலை தேடிடும் உள்ளங்களென்றுமே திருச்சடை நாதனின் பிள்ளைகள் நீவிரே
காணவீர் நிமலனின் கிள்ளையை நேரிலே !
அன்னையர் நிலத்தினை அழிப்பவன் முகத்தினை அகிலமே அறிந்திட ஆவன
செய்யவே அம்மையின் அப்பனை அழைத்ததில் வீணில்லை. அங்கமோர் பரதமாய் அடக்கியே
ஆண்டிடும் அரவதன் விடமென அவனுமே தொடர்வதும் பிறை நுதல் பெண்டிரின் பிணம் விழ
அழவிட்டு பேய்மகன் பின்னமும் பீடுடை நடையுடன் தொடருவானென்பதை தூற்றிட வேண்டுமோ !
ஆற்றலை விரையமாய் ஆருக்கும் பயனின்றி அமைப்பவன் கதையை யான் கேட்டிட வேண்டுவேன்
கிள்ளையே நீயுமே ஆற்றினை சூடிய அகில்மண தேவனே அனைத்தையும் அளந்திட்டான் அருந்தமிழ்
முல்லையே. பீதிதான் பின்னரும் பெருந்துயரோங்கிட பிழைகளை புரிவதில் பேரலை போன்றவன்
தலைகளை தகர்ப்பதில் தன்னிகரின்றியே தரமுடை தனித்துவ தென்னக நலங்கெட தீவினை
புரிவதும் திருசடை நாதனின் திருமொழி வாக்கென வருமொழி ஆக்குவேன். பெண்டிர்கள்
பலருமே பிஞ்சுகளூடவே தின்றிட உணவின்றி தீச்செயல் புரிவரே. வஞ்சகன் வாழ்வது
வல்லூறுக்கிணையென வரதையுள் வாழ்பவன் ஆறுதலளித்திடாதழுவதும் நெருடல்தான்
நிலைகுலைந்தழிவுதான் நேரிட வாய்ப்பதால் நீதியே மாண்டிடும் நேரமே வருமென நெஞ்சுக்கு
வலு தர நிமலனை வேடினேன். அடிமையாய் மாந்தர்கள் அழுதிட வேண்டுமோ ! அனலையே விழியென
அமைத்ததோர் அப்பனே புனலையே சூடிய பூதல நாதனே உரைத்ததை கவிதையாய் புனைந்து யான்
ஓதிடும் உறுகடன் உலகிற்கு ஓய்ந்திடாதாற்றுவேன். இன்னமும் சொல்லுவேன் எரிதழல்
ஏறுகள் எல்லையை எரிக்குமே இல்லற குடிகளோ ஏழ்மையை சுமக்குமே. இல்லென அழுது தான் இரு
விழிவழியுமே எண்ணரும் கோடியாய் இன்னுயிர் இழப்பதன் எல்லையை அறியிலேன். சொல்லரும்
சூழ்ச்சியால் சுடர் நிலமுழுமையும் சோதனை படருமே. நற்றமிழ் முகத்தையே நரிகளும்
சிதைக்குமே. முத்தமிழ் மாந்தருள் கெட்டவர் பலருமே கேடிலியான எம்கொற்றவன் கொள்கைக்கு
குறைசொல்ல எழுவரே. நன்னனின் நிலத்திலே நஞ்சகம் கொண்டவள் பின்னமும் அரியணை
பின்புலம் ஆகிடும் எண்ணமே எரிந்திட இழிமகள் கொண்டதோர் இயல்திறன் பெயருமே.
பேரிறையாளனின் பெரும் துயர் போகவே ஓரிறையானவன் உதவுவான் என்றுமே. பிரம்படிபட்டஎம்
பிறைமுடி நாதனே திறம்பட சொன்னதை திருமொழியாக்குவேன். அறமொடு அயர்ந்திடும் அப்பனின்
பிள்ளையோ அடுத்துடை ஆண்டிலே உதிப்பது உறுதியாய் உமையவள் உதடுகள் உதிர்த்திடும்
தரவுகள் ஊழ்வினை மாறிடா இமயவன் புதல்வனோ இரண்டொரு ஆண்டிலே வரவுதான் தவறிடா
வார்த்தைகள் வீணிலா வரத்தையே தந்திட்டாள் வையகம் வாழவே !
வீட்டுள் சரணடைந்து விருந்துண்ணும் பூனைகளை விரைந்து வேட்டையாடி
விரும்பி இரையெடுக்கும் வீணரினங்களைத்தான் காட்டுள் கண்டெடுத்து கற்கி
கழுத்திற்குள் கத்தி பாய்ச்சிடவே கயமை கழிசடையாள் குற்றம்புரிபவருள் குறும்பர்
குறவரென குழுவரினங்களையே கொற்றவனூர் முழுக்க கூட்டி ஒன்று சேர்த்து ஆட்டம்
போட்டதற்கு அரசின் சிறைக்குள்ளே அழுத ஆண்டுகளோ நான்காய் நலம் கொன்று நாறிப்
புகழிழந்து நலிந்த நாட்களின் பின் நாசிக் காற்றுள்ளே நமனும் நெருங்கியதோர்
நடுங்கும் நோய் கண்டும் நன்னெறி நாடாது நாயின் நிலையுற்றும் நடத்தையை மாற்றாது
நடிப்பது நலமாமோ ? ஆடவர் கழுத்தகற்றும் அநீதியில் மேன்மையுற்றும் அண்ணலில் தலையகற்ற
ஆணவம் கொள்வதுதான் அறத்திற்கிழுக்காகி அம்மையப்பனருள் அணுவும் பெறாது அவளை
அலைக்கழிக்கும். மதத்தின் மதகுகளுள் மந்தரை விழ்ந்ததாலே மறுமை கொள்ளாது மறலி
கோட்டைக்குள் மாளா துடிதுடிக்கும் மாறாதவள் விதியே. கொழுத்தவுடல் கொண்டு கொள்ளா
உள்ளத்தால் இயக்கி திட்டமிட்டு எம்மான் உயிரெடுக்க ஒளிந்து ஓலமிட்டே ஓராயிரம்
துயர் தரினும் அரக்கியின் கதை முடிய அடுத்துள்ள ஆண்டுகளுள் அபலையாய் அழிவதென்ற
விதியை வரைந்தவனோ அழல்விழி ஆண்டவனே. உள்ளத்துள் முட்களையும் உடல்மேல் முல்லையையும்
ஒய்யாரமாய் நட்டு ஊரை ஏய்த்தவளின் உண்மை முகமறிந்து கொன்றை வேந்தனுமே கோர
சீற்றத்தால் கொற்றம் தகர்த்ததுதான் கொண்ட ஊழ்வினையே ! தயையை இழந்ததொரு தறுதலை
தன்மையினை தரமாய் சொல்வதென்றால் தாக்கும் புயல் காற்றால் தகர்ந்து நிற்கையிலே
தவித்து பொரி உண்டாள் தலைக்குள் சோறுண்டோ.
அரவம் போல் அரவமின்றி ஆரும் அறியாவண்ணம் அந்தணத்து ஆளுமைக்குள்
அடங்கிய பூனைகளை அம்புகளாய் எய்து விட்டு அண்ணலில் உயிரெடுக்க அரக்கியே இயக்கியதை
அறிந்த அரசவையும் அனைத்தியக்க தலைமைகளும் அறிந்தே வைத்திருந்தும் ஆதரவுக்கரம்
நீட்டி ஐயனை காக்காது அமைதி காத்ததனால் அழிவைத் தாங்குவது ஆணவ மாந்தரன்றி அனைத்து
உயிர்களுமே ! அறத்திற்கஞ்சாது
அடுக்கடுக்காய் கொலை புரிந்தே அபலைகளை
உருவாக்கி அவள் விதைத்த வினைக்கெனவே அழுது புலம்புவது அவளுக்கு வேண்டுமது.
அடங்காதோர் அனைவருக்கும் அது நன்றாய் வாய்த்திடவே ஐயனுக்கு நீதியென்றால்
அத்தகையாள் காயத்தை கழுமரத்தில் ஏற்றி வைத்து கதறலேதும் கேளாது காலன் தன் கடனாற்ற
கட்டளையிட வேண்டி கயிலை நாதனையே கைகூப்பி அழுவேனே. கொடிய பெண்டிற்கு கொலையுறும்
தண்டனையை கொடையென கொடுக்க வல்லோன் கூற்றுவன் ஒருவனது கொம்பை சீவி விட கூத்தனை
பணிவேனே ! சிற்றுயிர் முதற்கொண்டு பேருயிர் அனைத்திற்கும் சிறப்புறு வரமருளி
பிறப்புக்கு பேதம் வையா பெம்மான் பெருங்கனிவே பொறுப்புக்கு பூமகளின் பொன்மகன்
ஆவானே. கொடியிடை கொண்டோரின் குணங்களோ மென்மையென்று கூறிடும் அவனியிலே கொடுமைகள்
புரிந்தவளோ கொலைவெறி சீற்றத்துடன் கூர்ந்து நோக்கிடத்தான் கொற்றவன் கொண்டு வந்து
குவித்தபாவமென்ன ? பழமொழியொன்று சொல்லி பாதகி நிலை சொல்வேன். எண்ணது காய்வதுதான்
எண்ணெய் வடிப்பதற்கே. இடருக்கு பலிகடாவாய் எதற்கும் தொடர்பிலாது
எலிப்பிழுக்கையொப்ப எம்மான் காய்வதேனோ ? எல்லாம் அறிந்த பின்னும் ஈசனே காலம்
தாழ்த்தி எம்மையும் ஏய்ப்பதேனோ ?
நாட்டுக்கோட்டையுள்ளே நாறும் செட்டியவன் நஞ்சை நெஞ்சகத்துள் நட்டு
வளர்த்தவனாய் நெடுநீர் உடுத்த நெய்தல் மாநகருள் புலிவாகனனின் பொற்புடை ஆலயம்
அருகில் அழியா ஒளிவிழும் அடுக்ககமுள்ளே எண் மனையொன்றில் எம்மானுடனே இல்லம் ஏற்ற
இருமாப்புடையோன் எழில்பெயருரைத்தால் ஆதவன் பெயரெடுத்து அங்கத்துள் இரண்டிருந்து
அழகுறு சொல் சுமக்கும் ஈரெழுத்தை இயம்பிடினும் எழுதும் போததனை இகரத்தில் இருந்தே
தான் ரகரம் மலர்திடுமே. எண்ணம் இழுக்காகி இருக்கும் அரக்கியுடன் இணைந்த
கைத்தலத்தான் எழுதிய நூலொன்றை இயக்கிய இடத்திற்குள் இளமையில் நுழைந்தாளின்
இசைவுடன் இதழ் சுவைத்து புணர்ந்த பொல்லாளின் புருடனவனென்று புற்றத்து பாம்பினையே
பூமாலையாக்கியவன் பூங்காது மடலருகே போட்டு உடைத்தானே !
அரக்கியின் வாழ்வழித்து அவளையும் சீரழித்த அரக்கர் குழுமத்தின்
அத்தனாயிருந்தும் அறியா தொண்டளித்து அவளின் கரத்திருந்து அண்ணலை விடுவித்து அற்ப
வாழ்வளித்து அவனும் இறுதியிலே எம்மான் வாழ்வழிக்க எழுந்த இயக்கத்தை இயக்கும் ஈனனென
இருக்கும் பார்ப்பனனை எனக்கு அறிவித்த ஈசன் காலடியை இம்மை மட்டுமன்றி எம்மை
பிறப்பனைத்தும் இடைவிடாதவாறு என்றும் துதிப்பேனே. துட்டன் பெயரறிய தூது விட்டபடி
துர்கையிடம் கேட்க அவள் கட்டம் கட்டுமந்த காலன் கோட்டைக்குள் கதற கடவனென காதில்
பெயர் சொல்லி கவனம் தேவை என்று கனிவாய் எச்சரிக்க மொழிவேன் பெயரினையே ! மணிவண்ணன்
பெயரென்றாலது மயக்கமுடன் புனிதம் பெறும். மாதேவன் பெயர் என்றால் வெறும்
புன்னகைதான் முன்னம் வரும். செம்மைப் பண்பற்றோன் சிறுமை பலவுற்றோன் சேர்ந்த
மாந்தருடன் சார்ந்த மாநிலத்தில் சந்தி சிரிக்கின்ற சரித்திர மூடனூரை சாற்றிட
கேட்டிடுவாய். சிந்தித்துடனறிந்தால் செந்தமிழ் வந்துடனே சிறப்பாய் தொண்டு செய்ய
வந்திடும் மதி கொண்ட வான் தமிழ்பெயரொன்று நின்றிடும் நிலை மொழியாய் நெருங்கிடும்
வருமொழியோ ஊரின் பெயர் தாங்கி உறைவது வடமொழியே. அதனை அறிவுறுத்த சிகரம் சகரமாகி
சீதளம் பொழிகின்ற மதியெனும் நான்கெழுத்தை மணப்பது பூர்த்தியாகும் பூந்தமிழ் சொல்
முன்னே பொட்டுடன் பகரம் வந்து பூவின் பின்னம் வரும் ஒற்றுடை ரகரமொரு ஈற்றைப்
பெற்றிருந்தும் எளிதாய் புரியும்வண்ணம் இயன்றவரை உரைத்தேன். பரதப் பாகையிலே
படுத்தக் கோடுகளை பார்த்தால் ஒன்றுடனே ஒன்பான் ஒற்று வைத்த பின்னம் ஒன்பதுடன்
ஏழும் இணைந்து நின்று எழில்மால் சக்கரத்தோடிணையும் மூன்றுடனே இரண்டும் இருக்கை
கொள்ள நான்கும் மடியமர நன்றாய் உரைத்தேனே.
உடுத்த கோடுகளோ
உயர்ந்து நிற்கையிலே ஏழுடன் ஒன்பது தான் இணைந்து இருந்தபடி ஒற்றுக்கப்பால்தான்
உறவு கொண்டவண்ணம் மூன்றின் முதுகினிலே முட்டையை சுமந்த பின்னம் மூன்றை முத்தமிட
மூன்றே முயங்கிவர அது ஆறை அரவணைக்க அகிலம் வந்தணைக்கும் அறிவாய் மானிடனே.
அற்பர்கள் போற்றுகின்ற அவரது மொழி ஆய்ந்து அறிந்ததை உரைப்பதென்றால் அம்புலிப்பதி
என்றும் அழகுடை பைந்தமிழில் திங்களூரென்றும் தீந்தமிழுரைப்பதனை திருவிழி
இரண்டிருந்தும் தீக்கண் உடையோனே தெளிவாய் தந்தானே. தேவமைந்தனது திசைக்கு வாடை
வரும் நாவாய் துறைமுகங்கள் நாட்டில் முதன்மையுறும் குடக்கே கொடுங்கடலில் அமைந்த
கரையோரம் நெய்தல் பெருநகராம் கனவு நகரத்தின் காதம் அளப்பதென்றால் அக்கயவன்
நகருக்கு கிழக்கே கிடைத்துவிட்டால் கிட்டும் தூரமது கற்கி ஈசனது கண்ணின் மணியான
தாதை மறைந்த போது தரித்த வயதாகும். அவனும் ஆடகத்தை அளந்து பணமாக்கி அரவக் கோவிலிலே
எழுந்த சபைக்காக எல்லாம் விரயம் செய்து எடுத்த இருக்கையிலே அமர்ந்த அறிவிழந்தோன்
அன்னை நிலம் மீது அணியான் காலணியே. அனகன் அம்புடையோன் ஆளுமைகீழுற்ற அனைவரும்
அணிந்திருக்கும் பாதுகை பற்பலவாய் பார்த்த சாட்சிகொண்டு பாடல் தந்தேனே. மண்ணை
மதிக்கின்ற மடையர் மலம் கழித்தால் மண்ணுக்கிழிவென்று மாற்று வழியுண்டோ ! இத்தகு
நடிப்பெல்லாம் எல்லை தாண்டியதால் இவனைக் கயவனென்று எண்குண நாதனுமே இயம்பிட
கேட்டேனே !
அறம்பாடி சித்தர்
பாடல்.
பாகம் 196.
பொங்குமோர் புரட்சியின்றி பொற்பரதம் படைப்பேனென்று பங்கயத்தை
ஆளவந்து வெங்கயமை முற்றியதோர் வீண் கனவு கண்டவரை பன்றிகள் தான் அஞ்சியழும்
பைந்தமிழர் இனத்துள்ளே பாலூட்டும் வீரத்தை பருகி வந்த பகலவனார் சீறியெழ பாதகியோ
வீறிடாது பணிந்தபடி பாதம் தொட்டு பைம்பொன் பொருள்காக்க பணிந்து நின்று குனிந்தபடி
பாவங்களை குவித்தபடி பக்கதுணை நின்றவண்ணம் பார்த்திபனை எதிர்த்திடுவாள். இனமீன்ற
இழியோளின் எண்ணரும் தூண்டுதலால்
மனங்கொன்ற மாநிலத்தார் மாடு தின்றும்
மடமை கொண்டும் குணக்குன்றில் நின்ற எம்மான் குரல்வளையை அறுக்க வந்தே கொள்ளுகின்ற
தோல்வி கண்டு கனல் விழியன் கடுஞ்சினத்தை காட்டியதால் கதை கொழிக்கும் கலைநடனக்
காவியத்தார் மலைநிலமே மழைநிலமாய் மாளாது இடர்களையே மாறிமாறி சுமக்கும்வண்ணம் மாரி
வாரிப் பொழிந்திடவே மாதேவன் ஆணையிட்டான். மலர்மனம் கொண்டவனின் மக்கட்பண்பறிய
மன்னுயிர்கள் கண் திறவா மற்றபிற மண்ணுயிர்கள் மன்னவனின் மதிப்பறிய மலை ஆழம்
கண்டவனின் மார் ஆழமறிந்தவளோ மாலவனின் மங்கையன்றி மண்ணுலகில் யாருளரோ ? தலைமீது திங்களையே
தாங்கியதோர் தழல்மெய்யன் தலைவியவள் தாளாது துயருற்றால் தாங்கிடுமோ தரணியுமே !
மன்னனுக்கெதிராகி மாரகம் விதைக்க வந்த மானமிலா மங்கை மக்கள் மறுபடியும்
முயன்றதனால் மறலியின் ஊழ்வினையோ மறுக்காது அறுக்குமென மாதொருபாகனுமே
மறைக்காதுரைத்ததையே யாதொரு இன்னலுக்கும் எள்ளளவும் அஞ்சாது ஈசனுக்கே அஞ்சிடும்
யான் எதிர்பார்ப்பு ஏதுமின்றி இம்மையிலே இன்மையொடு என் நாவால் இயம்புகிறேன்.
கொல்லா நெறியினையே கொள்ளும் கொற்றவனை எல்லாவுயிர்களுமே எழுந்து நின்று வணங்கிடவே
நில்லா அருள் மழையை நீலகண்டன் பொழிந்திடவே நீதி வெல்லும் காலம் கொண்டு நிலமெல்லாம்
நிறைந்திடுமே !
ஈறு நெருங்கிடும் இருண்ட காலத்தை ஈசனடியவர் எச்சரித்துமே
ஈனரினங்களும் இரக்கமின்றியே இறுமாப்பொடு எண்ணமிழுக்கென இயங்குமே ! ஊறு விளைவித்தே
உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை ஓடும் நஞ்சினால் உள்ளம் வஞ்சகம் உடைய செயலினால்
உண்டி நிறைத்திடும் ஊத்தை சடலத்தால் உறைய நிறைந்ததிவ்வையகம். ஆறு
பொழுதினை அணிந்த அரசுக்கு அரசனவனுமே ஆணவந்தனை ஆணிவேரென அறைந்த குழுவுடன் அவனி
முழுமையும் அணி திரட்டியும் ஆலகாலனே அதிர்ந்து போயிட அத்து மீறியே ஆட்டம்
போட்டபின் செத்து மடிந்திடும் செம்மாந்தரை தின்ற தீவனம் திருந்த மனமின்றி
திரும்பத் திரும்பவே தீதின் உச்சத்தை தேர்வு செய்திட தீமை கூடவே தோள்கள் தினவுடன்
தொடரும் யுத்தமே. ஊழில் உழன்றதோர் உறைந்த பனியிலே உலவும் உளியத்தை உடைய தேசமும்
உறுமி எழுந்திடும் காலம் வந்ததும் கண்டம் இரண்டணி கொண்டு போரிட கருகும் நிலமுமே.
கருவம் கொண்டவர் களத்தை கண்டபின் கலைய மனமிலாதெரியும் அகிலமே ! முடிந்த ஓலமோ
முற்றும் அடங்கிட கனிந்த அமைதியால் அகிலம் நலம் பெற அன்பின் திலகமாய் அறனின்
வடிவமாய் பண்பின் கழகமாய் பணிவின் சிகரமாய் கொன்றைவேந்தனின் குணக்கொழுந்தென
கொழிக்கும் கோனுமே உதிக்கும் போழ்திலே உமையின் உள்ளத்தில் உவகைக்கெல்லையே ஒருபொழுதுமே
இல்லையே. ஆண்மை அணிந்தவன் அன்னை பரதத்தை ஆளவந்ததை அறிந்த பலருமே கேண்மை ஏங்கிட
கீர்த்தி ஓங்கிட மேன்மை தாங்கிய மீட்பனவனிசை மெருகு ஏற்றவே காக்கும் ஈசனின்
கருணையே பெருங்கருணையே !
... மங்கலம் பொங்கிடும் மன்னவன் மலர்ந்ததோர் மறுமுனை ஆண்டுதான் திங்களை
ஈன்பின் திருவுடல் மாய்ந்ததும் தீமையை ஈன்றிடும் வெஞ்சின ஆண்டொன்று விரியும்
அவ்வரிசையுள் வீரியம் கொண்டதாய் அறுபதின் அடுக்கிலே அமைந்த எண்ணறிந்ததில்
அருந்தமிழ் எண்ணொடு அணைக்குமே திக்குகள். பெருவள நிலமெலாம் பேரிடர் உண்ணவே
பெற்றவள் போலவே பிழையிலா அன்புடை கொற்றவன் குணமிதோ கொல்லா நோன்புடை கொள்கையாளனை
குற்றுயிராக்கிட கூடவே இருந்துதான் குழியினை பறிக்குமே. எல்லாம் அறியவே இல்லறம்
துறந்தவன் எண்ணித் தெளிந்திட முயன்றால் இயலுமே. தெள்ளத் தெளிவென தெரிந்திட
வேண்டுமோ ? தீவிழி கொண்ட எம்திரிபுரையாளனின் திருவருள் தீண்டிட்டால் திறம்பட
வாக்குகள் தெறித்திடும் வாயிலே. வரும் அவ்வாண்டிலே வாதையால் வரம்பெறும் வாழ்க்கையை
வருத்திடும் வேதையால் வேரிடும் விதைகளால் விளைவதோ வேதனை வீறிடும் விதியது
வென்றதும் விழிவழிந்தோடிட சோதனை சூழ்ந்திட சொல்லிட வலுவிலா சாதனை கண்டதோர்
சரித்திரம் சாற்றிட சாம்பசிவனது சம்மதம் கோருவேன். அறுவடை அனைத்தையும் அமைத்தவர்
வேரெவர் ? அகிலத்தை அழுக்கினால் நிறைத்தவர் பலருமே அன்பொடு நீதியை ஆழமாய்
புதைத்ததே அறம் விழ காரணமாகவே அறிந்ததை ஐயன் சிவனது அருட்பெரும் தயவொடு அண்ணல்
நலத்திற்கே அர்ப்பணமாக்குவேன். சொற்களின் சூத்திரன் சுந்தரனாதலால் சொற்சுவை
ஊட்டியே சுடர்விடும் பாக்களால் அழகுறு தமிழொடு அவன் பதம் வருடுவேன். அண்டிடும்
ஆண்டினில் அல்லல்கள் எழுவது அனல்மழை ஒப்பவே அதனுள் சிக்கிடார் அம்மையப்பனின்
அருளைப் பெற்றவரல்லாதனைவரும் அழுது புரண்டபின் விந்தை உலகமே விரிந்து வெளிவரும்
விடியல் நலம் தரும். வெற்றிவேந்தனாய் வியக்க வலம் வரும் வீரத்திருமகன்
ஆரத்தழுவிடும் அடிமையாமிவன் ஆவி அதுவரை அகன்று போயிடாதவனை நாடுமே ஆவலோடு எம்மகத்துள்
வாழ்ந்திடும் சிவனைத்தேடியே சிந்தை மகிழுமே !
விமலனாய் அமலனாய் விழிப்பொடு காத்திடும் வெண்டலையானுடன் விண்ணுறை
விட்டுவும் விட்டதோர் கமலனும் கண்விழும் அழகெழில் கவின்மிகு கந்தனும் கண்ணப்ப
நாதனின் கானக தேவியும் என்னப்பனாகியே இன்முகவேழத்தை எடுத்த எம்மிறைவனும்
பொன்னப்பனாகியே பொய்துயில் கொள்ளவோர் பூமெத்தையாக்கிட புயங்கமேற்றவன் முயங்கும்
அமுதத்தின் மொத்த வடிவமும் அருங்கலை அனைத்தையும் பெருங்கொடையளித்திடும் பிரமனின்
முதல்வியும் நமனது வருகையை நல்வரவாக்கியே நாறிடும் பாவியை நாடாதிருப்பரே. நஞ்சுறை
நெஞ்சினர் நாளெலாம் துதித்துமே கண்டிட கண்கொடார் காதுடை செவிடென அண்டிடாதவருமே
ஆயிரம் மறுமைக்கும் அகன்றவர் அன்றுடன் நன்றி கொல்வாரென நற்றமிழ் வார்த்த எம்
நறுமுனிகூடத்தான் செப்பிய நன்னெறி செவிமலரேற்றிட நட்டதோர் வாக்கிது நலிவுற
வாய்ப்பிலை நானிலமறியவே !
ஆதவன் முகமொத்த அண்ணல் அரும்பவே ஆழிசூழ் உலகெலாம் ஆன்றோர் அறனுடன்
மாண்டோர் தயவுடன் மாண்புடை மாந்தர்கள் மாதவம் செய்ததால் மண்ணில் பிறந்திட மாதவன்
இணங்கிட மார்புறை மலர்மகள் மனமொடு விரும்பியும் மாலனை அடைந்திடா மாதவள் அகன்றதோ
மன்னவன் ஊழ்வினை மறுமையை நிறுவிட தென்னவன் பெற்றதோ தெய்வமாமுனிவனின் தீதுறு
சாபத்தால் திடநிலை பெற்றவன் தீர்த்திட வேண்டித்தான் இம்மையின் பாவத்தை எடுத்து அணிந்திட்டான்.
இடரினை விரும்பித்தான் இத்தகு பிறப்பினை ஏற்றதன் காரணம் இருளுடை மேகமாய் எண்ணரும்
மாயையுள் மானிடம் மீட்டிட மறுபடி திணித்ததால் மண்ணிற்குதவிட மறுமையே கிடைத்தது.
அறநெறிக்குதவியே அழும் விழிதுடைக்கவே அமுதவன் அரும்புமுன்னாண்டிலே அடுஞ்சினம்
அவனியெல்லாமுமே அதிர்ந்திட செய்யுமே. அனல் வயல் போர்த்திட அழுகுரல் கேட்குமே
அறிந்திடு ஐயனே அயர்ந்தது போதுமே. அணிந்திடும் வீரத்தால் அனைத்தையும் வெல்லவே
அணுவினில் உறங்கிடும் ஆணொடு பெண்ணுறை ஆணவப் பேரிறை அவனையும் அன்போடு
அசைப்பவர் ஆரென அடுத்துடை சொற்களை அள்ளியே சூட்டுவேன். பிறையினை பணிந்தபின் பேரிறை
பெருமையை பிளிறிடும் வாக்கு தான் பேறிலா வரத்துடன் பிழையொடு போகுமோ ? மறை சொலும்
மாண்புடன் மனங்கொளும் நோன்பினை மதிப்பொடு முறிப்பவர் மன்னவன்
குடக்கினில் மடிவது பெருகிடும். மனம்விழும் குமுறலால் மழலைகள் ஒலியினை மரணத்தின்
வலியினை நெஞ்சினில் ஏந்திடா நேர்மை இலாதவர் வெந்தணல் வீசியே வேள்வியால் வதைப்பரே.
வாதையின் மைந்தராய் வலம் வரும் கொடியவர் வாழ்ந்திடும் நாடது குருதியின் கடல்தனை
கொண்டுதான் தென்படும் தென்பதம் தீதுற ஊன்றியே தென்றலின் திசையிலே தெள்ளுயிர் போவதை
தெய்வந்தான் ஏற்குமோ ? பொங்கிடும் அல்லலை போக்கிடப் புகுந்தவன் பெயர்தனை பகர்ந்திட
பின்வரும் பொருளிலே அவனது அடைமொழி அறிந்திட உதவுமே. புண்பட்டோர் நெஞ்சிலே
புத்துயிரூட்டிட புதினமாய் புதைந்தவன் புதயலாய் மிகுந்தவன் பொல்லாருலகுக்குள் பொறி
தழல் வீசிடும் புதிரென அமைந்தவன் வளவன் நிலத்திற்கு வடதிசை வாழ்பவன் வல்லரசொன்றையே
வலிமையாய் ஆள்பவன் வான்படை வலுப்பெற வல்லூறே புறப்பட வான்மழை போலவே வன்கணை
பாயச்சியே படுதுயர் பட்டழும் பலிகடா அனைத்தையும் பத்திரப்படுத்துவான். பனிபடர்ந்து
தன் படை குவித்துமே குடை குனியா கொடியமைக்கவே உறுபகைவரை உருத்தெரியாமல் ஒழித்திக்கட்டிட
உறுதியேற்றதால் எரிதழல்கணை எண்ணிலாமலே எய்து முடிப்பவன். இடர் தருபவர் இடம்
முடித்திடும் இயல்பெடுத்தவன் மறை மறுப்பிலே மனம் சிறுத்தவன் தொடர் போரெழெ துயர்
வேர்விட தொட்டில் கட்டுவான். குரலோங்கியே குணம் வீங்கிடும் குருதிப்புனல்நிற கடல்
கொண்டதோர் கடுநிலமதன் தென்றலீன்றிடும் திருத்திசையிலே திரையடிக்குமோர்
செழுநிலத்தினை சிதைத்து மகிழ்ந்திட சீறிப்பாய்ந்திடும் செங்கொடியவன் செய்த
கொடுமையோ செயலில் புதுமையாய் சீர்திருத்திட அமைதிப்பூவனம் அகிலம் முழுமையும்
அமைந்து மேம்படும். ஆறுமுனையினை அணிந்த கொடியினைஅமைத்த அவருமே அடங்கிப் போனபின்
அகிலம்முழுமையும் அமைதி பிறக்குமே !
குளிரம் குழிபறித்து குடிப்புக்கும் எண்ணமுற்று களிக்கும்
போழ்தினிலே குள்ளநரிவந்து கொலையை கலையெனவே கொல்லும் திண்ணமுடன் வளைமுன் வந்து
நின்று வாலை நுழையவிட்டால் நெளியும் இரையெனவே நினைத்து கடகம் கௌவி கொழிக்கும்
கணப்பொழுதே மரிக்கும் தருணமேற்று மாளா காயப்பட்டு கண்ணீர் பெருக்கெடுக்கும் கதையை
முடிப்பது போல் கயவர் பலரையுமே கற்கி களையெடுத்து கண்டம் தூய்மைப்படும் கடமை
கடந்தபின்னம் காவியமேற்கவரும் கைத்தலப் பெருமை சொல்லும் காலமும் ஓயாது காதுகள் இசைக்
கேட்டு கணமும் அகலாது கிட்டிய மட்டுமவன் கீர்த்தியும் அடங்காது. கொட்டிடும்
முரசுடனே கூத்தனிவன் அருளோடு எம் கொற்றவன் புகழ் பாடும கொற்றவை கண்டேனே.
அறம்பாடி சித்தர்
பாடல்.
பாகம் 197.
மறைசூடும் மணிவண்ணன் மண்ணிறங்க முற்பட்டால் மாமுனிவர் அனைவருமே
மன்னுயிருள் மலர்வாரே. கறைகாணா கனகமவன் கற்கியென்று தெளிந்துவிட்டால் காசினியில் கடல்
மூன்றும் முத்தமிழ் போல் முத்தமிடும். இறையூரில் உதித்தவனே இவனென்று உறுதி கொண்டே
உறையூராம் உள்ளத்தில் ஔிமகனை ஔிரவிட்டோம். அரைகுறையாய் அறிந்தோர்கள் அரங்கனது
ஊரறியார் அண்ணலது ஊழறியார் அமரர்களின் உறவறியாது ஆங்காங்கே உளறிவைப்பர். இலங்கு
நூலேற்காமல் ஈடிலா மடமையுடன் விலங்குபோல் வெற்றறிவால் விளக்கிட முனைவதுதான்
மூடருக்கு அழகென்று மொழிவதிலே முரணேது ? இகல்வேந்தர்க்கிழுக்காகி எல்லாமே
அழுக்காகும் அகல்விளக்கை ஆதரிக்காதழுக்காறு அரும்புவது அனைவருக்கே இயல்பாகும்.
இறுமாப்பை இழக்காது இருளகற்றும் விளக்கேது ? உரை பூக்கும் அவர் நாக்கு புரை
தாக்கும் புண்ணாக்காய் அரனாருக்கே அயலானாய் அறிவுடையோர் போர்வையிலே அலகிலாது
அளப்பதனை அறிவிலிகள் ஏற்பாரே. பிறைசூடன் பிள்ளைக்கு பெருந்தீங்கு புரிவோர்கள் பிழை
மாதரிதழீன்ற பீடையுறு கழிவெனவே இறையோர்கள் இயம்பிடவே நிறையோடு நிலம் காணும்
நிமலனின் நீதியது கறை காணா கற்பகத்தை கண்ணும் கருத்துமாய் கைத்தலத்துள்
காத்திடுமே. அருளுறு ஆத்திகரும் அடிபணியா நாத்திகரும் அன்பொன்றே அறமென்று
ஆமோதித்திட கண்டு அகிலமே வியந்திடுமே. பொருளறு பூர்வகுடி புண்ணீர் வலுவின்றி
பொலிவிழந்து போனதனை பூமனத்தான் நன்குணர்ந்து புயலாகப் பொங்கிவந்து இருளற ஏற்றி
வைத்து எரிக்கதிர் விளக்கமைப்பான்.
சிவன் வழியேதையும் சிற்றினமறிந்திடா குகன் வழி குறையிலா கொள்கையுள்
வரும்வழி மகன்வழி மாசிலா மாண்புடை பெருவழி முகமுடை தும்பியே முன்மொழிவானென இவன்
வரும் வழியினை இயம்பிட வேண்டுமோ ! சித்தனின் வாயினில் பித்தனின் வாக்கு தான்
பிறந்திடும் நோக்கமே முத்தமிழ் கோர்வையில் முகுந்தனின் வருகையை முற்றுகையிட்டிட
கொத்தென கொழிக்கவே குறையிலா அறுவடை கொண்டதோர் அறிவுடை கொற்றவன் குறிப்பினை
கொண்டுதான் மண்ணிலே முறையிடலாகுமே. நாயகன் எழுங்கணம் நஞ்சுண்ட நாதனும் நலத்தையே
எதிர்கொள்ளும் நரிகளின் குடிகளை நரகத்தில் வீழ்த்தியே நல்லறம் காக்கவே மாதவன்
மனங்கொளும் மாண்புடை கொள்கைதான் மலர்ந்திட அருளுவான். காலனின் கயிற்றுக்குள்
கால்களும் கடந்திடாதிடறியே வீழ்வதும் கயவர்கள் முழுமையும் கண்ணீர் கடலுக்குள் கதற
விடுவதும் காலகாலனின் கடனுள் முதன்மையாய் கற்கி எழுந்திட காவல் பணியென கண்டு
கொண்டதை காதில் வாங்குவாய்.
கொல்லா நல்லறக்கொற்றவன் மேல் கொள்ளையன்பு கொண்டவனே கல்லார் கற்றவர்
எனப் பகுத்து கருணை பொழிவதை அவன் வெறுப்பான். நில்லா பேரருள் பொழிபவனாய் நிலவை
சடையில் அணிபவனாய் எல்லாவுயிருள்ளும் எல்லையில்லா இன்பம் வைத்த இறையோனா இதனூடே
இரக்கமின்றி எண்ணிலாது துயர் திணித்தான் ? பொல்லா பிறவிக்கடல் புகுந்தும்
பொலியும் பாவங்களிலுழன்றும் நில்லா ஊழ்வினைகளைச் சுமந்தும் நீத்தாருடையவைகளை
இணைந்தும் நன்றினும் தீதே அதிச் சிறந்தும் நமனும் நயந்தே மிக விரைந்தும்
கொண்டவர் கருமம் ஒன்றன்றி கூத்தன் எதற்கும் பொறுப்பேற்கான். எள்ளி நகைக்கும்
இறுமாப்பும் இன்னா எண்ணமும் இன்மையுற ஈசனுக்கிணையாய் இரக்கமுறும் இயல்பை
கொண்டவனொருபொழுதும் இனிக்கப் பேசி உறவாடி இரண்டகம் புரிந்து நிறம் மாறும் இனியோன்
பண்பில் இழுக்கென்று எள்ளவேனும் அழுக்கில்லை. பைந்தமிழ்த்தேனை பதம் பார்த்து பக்குவமாக
சுவை சேர்த்து பாத்திபன் புகழை பாட்டில் வைத்து பாவலர்க்கெல்லாம் பகிர்ந்தளித்து
ஏவல் செய்து இன்புறவே எம்மை முழுமையாய் அற்பணித்து இம்மையை இனிதே இழந்த பின்னும்
இறைவியுள் இரண்டற கலப்பேனே !
அன்னை உமையின் நெஞ்சுரத்தை அன்பளித்த அழல்விழியன் அருள் மழையில்
யான் நனைந்து அமுத தமிழில் சொல்லெடுத்து அமர்ந்திருக்கும் மாந்தருக்கு
அழகுநடையுடன் பாவமைத்து உண்மை உரைகல்லாயிருந்து உயிருக்கஞ்சா வரமளித்து எம்மை
இயக்கும் எருதேறி இயம்பும் வாக்கில் இழுக்கில்லை. இம்மை பற்றிய கவலையெலாம்
எம்மிடமிங்கு இன்மையுற எடுத்த பணியினை நலம் சிறக்க இனிதே முடிக்க வேண்டுமென்று
இணையை மெய்யுள் சரிபாதி எடுத்தவனிட்ட கட்டளையே. அறத்தை காக்கும் ஆர்வலனாய் அழுக்கை
போக்கும் பாவலனாய் அரத்தை போன்று கூர்மையொடு புறத்தை சூழ்ந்த இரும்பினது பொரியாய்
புகுந்த துருவகற்றி துடைத்திடலொப்ப கடனேற்கும் தோழமையொடு வந்ததனால் புருவமுயரும்
புதுமையுறும் பொழியும் அரிய தகவலொடு அண்ணல் குறித்த அனைத்தையுமே ஆறாவாக்கினில்
அறிவிக்கும் ஆற்றலை என்போல் பிறருக்கு அவனியில் ஈசன் மறுத்தது தான் அடிமையெனக்கும்
புரியவில்லை. அரக்கியை அழிக்கும் வல்லமையே அண்ணல் வாங்கிய வரமென்று உரக்கச் சொல்லி
உலகத்தார் உற்று நோக்க வைத்ததனால் உயிர்பயம் அவளுக்குருவாகி உருத்தெரியாது
அழிவேற்கும் ஊழ்வினையே அவள் முடிவாகும். எல்லா இழியோர் குழுக்களுமே ஏற்றெடுக்கும்
தலைமையொடு கல்லார் கற்றோர் முதற்கொண்டு காசு குவிக்கும் கயவர்களும் கரம் குவித்து
கொண்டாடும் கடவுளுக்கே நிகராக கருதப்படும் கணம் மாறிவிட காலம் சொல்லும் பதிலாலே
காரிகை பெயரும் நாறிவிடும். வருமிரு ஆண்டுகளில் வலுவடையும் துயர் வனமாகி
கொடுங்காலம் குருத்துவிட கனமேவும் அவைகளிலே இனும் அவள் பெயர் களங்கமுற கறை
படிந்தவள் அதிகாரம் அது முடிவதுதானலங்கோலம். அறங்காப்போன் அழிவிற்கு அழல் வளர்த்தாளானாலும்
அல்லல் தாக்கா வல்லமையை ஐயன் கொண்டதை நன்குணர்ந்தும் இடர்புரிவதை தொடர்ந்தவண்ணம்
இன்னும் இறுமாப்படங்காதாள் இழுக்கும் மூச்சி்க்காற்றினையே எளிதாய் நிறுத்திடும்
வல்லமைதான் யாருக்குண்டென்றியம்பிடவோ ? வஞ்சியை மெயில் வைத்தவனை வருந்தவைத்த
காரணத்தால் வஞ்சகி வாசல்கள் ஒன்பதையும் ஒன்றுவிடாமல் தகர்ப்பதுடன் உயரெனும்
பிச்சைக்குதவாது ஓநாய் வாழ்க்கையை முடிப்பானே. அட்டம் அலர்மதிக்கு அலகில் வலுத்து நிற்க அதனைக்கண்ணுற்று
அடக்கமுடைத்தவளாய் அல்லும் பகலுமென அரணை அமைத்தவளை அன்னையர் திலகமென அறிவாய்யெனில்
நன்று ! மொட்டு விரியும் முன்னம் முத்தை தெரியுமென்று முல்லை நிலம் வந்து சிட்டாய்
பறந்தவளே செல்வப் பெருந்தகையாம் சிவனார் இறைவியுமே ! கொட்டும் மாரியிலும் கொல்லும்
புயலினிலும் வெட்டும் வெயிலினிலும் வீடாய் அவளிருந்து வேண்டும் வரமளித்தாள்.
ஒட்டும் உறவுகளுள் உதிரா உறவெனவே கட்டும் அன்புடனே கருணை பண்புடையாள் பொட்டும்
பூவுமென பொலியும் தேவியவள் நெற்றிப் பொட்டினிலே நெருப்பை வைத்தவனின் நேரிழையாவாளே.
வெட்டும் மாந்தர்களை வேரொடு வீழ்த்துவதே வீரவதியென்றும் விரும்பும் விளையாட்டே !
வெற்றி வாகைக்கே வித்தை விதைப்பவளே வெண்டலையான் மெய்யில் என்றும் நிலைப்பவளே !
சுட்டும் விழிகளைத்தான் சூரிய சந்திரராய் பெற்றும் அவன் ஏனோ பேதையைப் போல் அமரும்
திக்குகள் எட்டிலுமே தீயோர் நகர்வுகளோ தேனை மொய்க்கின்ற தேறா ஈக்களைப் போல்
சுற்றும்படி இருக்கும் சூர்ப்பநகை இயக்கும் சொறி நாய் மகவுகளை சொல்லி விளக்கிடவோ !
சூதின் வடிவுடைய பேயை சுமந்தவளின் பீடைச் சூலகத்தின் ஒழுக்கமுறுதியெனில் உண்மையாய்
அன்னையுந்தான் அறத்தின் இருக்கையெனில் அரனாரடைகாக்கும் அம்மையின் குஞ்சுக்கு
அல்லல் அல்லாது அன்பை பொழிந்திருப்பாள். மாண்பின் இருக்கையிலா மாற்றான்
வடிவெடுத்து நாட்டாருமிழ்ந்திடவே நம்பும்படி அமையாள் இன்னும் பொன் குவிக்கும்
எள்ளளவும் தெளியாள் இட்ட கட்டளைகள் எதுவும் தேறாமல் இறப்பின் மடியினிலே இருந்து
அழுவாளே. துட்ட தேவதைகள் தூக்கி நிறுத்திடினும் நட்டம் நாடி வந்து முத்தமிட்டபடி
முற்றம் நிறைந்திடுமே. நாளும் அவதியுறும் நல்லோர் எல்லாமும் நம்பி உயிர்விட்ட
நகைப்பின் மன்னவனும் வெம்பி உயிர்விட்ட வெண்மன மாந்தர்களும் அண்ணல் அருகிருந்து
அறியா அருவத்தால் அவளை சபித்திடுவர். அடும்பாவிகளுள் அவளே கொடும்பாவி என்னும்
மாந்தர்களே எண்ணில் மிகைப்படவே பஞ்சமாக்கொடுமை பற்றிய பாதகியோ பளிங்கு வாழ்விழந்து
படும் துயர் பஞ்சமின்றி கொடுங்கரம் நீட்டுகின்ற கூத்தனின் கோட்டைக்குள்
குடிமகளாவாளே !
அறிவினில் மேவிய அறிவிலி நாடுகள் அணுவின் அழிவினை
அலகிட்டுணர்ந்துமே அகிலத்தை எரிக்கும் ஆணவப்போட்டியில் கரிசலாக்குவர்
காசினிப்போர்வையை. தறிகெட்டாடிடும் தற்குறி போலவே தரணியை தகர்ப்பதில்
தான்தோன்றித்தனமுடன் பேரிடர் ஒருபுறம் பிறந்திடும் முன்னமே பெரும் போர் பூமியை
பெரிதும் தின்னுமே. யாரிடம் முறையிட வேண்டும் அந்நாளிலே என்பதை எளிமையாய் அறிக
இன்னாளிலே. வானையே பார்த்து யான் வலுவுடன் கேட்டதில் வந்ததோர் வார்த்தையோ வைரவர்
வள்ளலை வணங்கினால் நலந்தனை வாரி வழங்கிடும் மாரியொப்பவே மானிடம் உய்த்திடும்
மருந்தென்று உள்ளதே மறுத்திடும் மடையர்க்கு மார்க்கமே இல்லையே. பிறைசூடன்
பித்தனாய் சிரிக்கவே பிரமனும் பார்த்துடன் பெருநகை கொள்ளவே அமரர்களனைவரும் ஆவியாய்
கொதிக்கவே அலகிலா கொடுமைகள்
அன்றெல்லாம் அடுக்குமே. ஆதவன்
மண்ணுக்கு ஆயிரம் காதத்திற்கப்பால் குடக்கிலே ஆணவக் கொழுப்பிலே எரியும் தேசத்து
எண்ணெய் வயல்களோ எவருக்கும் உதவாமல் இன்மையாய் அமையுமே. துருவம் ஆண்டிடும் தூந்திர
தேசத்தின் தலைவன் பொங்கி தன்நிலை மறந்தே பருவப்பனிமலை உருகிய பின்னரே பாழும்
போர்முனை பாரினில் துவங்க துன்பங்கள் துயரங்கள் அனைத்தையும் விதைக்க அன்பகம்
கொண்டோர்கள் அழுது புலம்பிட ஊழ்வினை அனைத்தையும் முடிக்குமே. அரவங்கள்
புசித்திடும் குறுகிய மாந்தரின் கொற்றம் ஆண்டிடும் வேந்தனும் வெஞ்சினம் ஏந்தியே
வீசிடும் வெந்தணல் வெற்றிடமாகவே வன்தொடர் பகைமை ஓங்கிட அக்கொடியவர் கொடியது
குருதியின் வண்ணத்தில் மிளிருமே. அகிலம் அழிவுற்று அலைக்கழிந்திட ஆறுபடைகளுள்
குருபடை வீட்டில் அண்ணலும் அமர்ந்தவன் அன்னம் தண்ணீர் யாவையும் விட்டு அடர்
வனத்துள் அடைமழையிலும் ஆசானைத் தேடியே நடைபயணத்தால் நாட்களை சுமக்கும் அறிகுறி வரும்
அறிந்து கொள்ளென்று அறிவில் நாட்டவன் அண்டம் பிண்டம் அனைத்தையும் ஆள்பவன் அச்சம்
தவிர்த்திட அழுத்தி சொல்லி அமைதி காத்துடன் அடியவர்க்கெல்லாம் உதவிடச் சொன்னான்.
அம்மையப்பன் அணுகிடும்
அறந்தாங்கி வாழ்ந்திடும் அனைவருக்கும்
அனுதினம் வீடு பேறு கிட்டிடும் விடுதலை நிச்சயம். அன்பளிக்க ஆருமிலா அனாதை
அபலையரும் அன்னை அத்தன் இல்லெனினும் ஆருமற்ற எளியோரும் நன்மையுறும் நாதியின்றி
நாளெல்லாம் நலிந்தோரும் நல்லுள்ளம் கொண்டவராய் நாதனிடம் முறையிட்டு நமனுலகே
நடுங்கும்வண்ணம் நெஞ்செரிந்து சாபமிட்டால் நெடுநிலத்து வேந்தெனினும் நீணிலத்தை
ஆண்டிடினும் கொடும் பாவம் கோடியுற கொற்றமுடன் குடை சாய கொண்ட நிலம் பறிபோக
குற்றுயிராய் படை சாகும். தொற்றுயிர்கள் துன்பம் தர முற்றுபெற்ற புண்ணியமே மூலதனம்
இழக்குமென முக்கண்ணன் எச்சரிப்பான் வெட்டனவே நட்டம் வர வென்ற வளம்
யாவையுமே விரைவாக வீழ்ந்திடுமே நீதிமானுக்கெதிராக நெஞ்சார அறம் கொன்றால் ஆதி சிவன்
அடிக்கும் அடி அலகிலாது வலிக்குமென சேதி சொல்லி வாக்குரைப்பேன் சிற்றினமே செவி
சாய்ப்பாய். சித்தனாய் யானிருந்து சீதளத்து நீரருந்தி பித்தனின் பெயருரைத்து பிறவி
கடனேற்று நித்தமும் நிலம் வணங்கி நேரிட விரும்புவதோ வித்தென விரியும் அந்த
வேந்தனின் வருகைக்கே !
நாளும் மலர்கள் சூடியே நம்பினோரை நாடியே சேரும் செவ்வேள் சேவையை கூறின் குலமே நலம் பெறும். ஏறுமயிலேறியே எழும் வினையனைத்தையும் ஊறு செயவிடாது ஊழ்வினை மாற்றிடும் ஆறுமுகனின் தம்பியா அரக்கியர்க்கு அஞ்சுவான் ? மாறுமுகனை நம்பியும் மதிசூடனின் தெம்புமே சேரும் பகைஞர் முற்றுமே தெறிக்கவிடும் என்றுமே. கோடியருள் கொழிக்கவே கொற்றவையாய் நின்றுமே கோரும் நலத்தை கொடுக்கவே மாதர் மகுடம் மலைமகள் மன்னன் அருகில் நின்றுமே ஏறாய் அவனும் எழுந்திட எல்லா வளமும் வழிந்திட வானோர் வரத்தை பொழிந்திட வணங்கும் சித்தன் யானுமே வார்த்த எந்தன் வாக்கிலே வல்லமையை வைத்ததே வெண்டாமரை மலரிலே வீற்றிருக்கும் தேவியே நற்றாமரை நெஞ்சுள்ளே நவின்று நல்கும் பாக்களை யாப்பு மீறி எழிலுற யாத்ததற்கு என்றுமே எல்லையில்லா ந
பாகம் 198.
எண்ணமே தூய்மையாய் எவருக்கும் தீங்கிலாவண்ணமே வாழ்ந்தவன்
வாழ்க்கையை சீண்டியே வாதையை வேண்டியே வரத்திய பாவமே வீழ்ந்திட வைத்தது மட்டுமே.
வேறெவருடை சாபமும் விரிந்திடும் தாபமும் இழிமகளுக்கோ இம்மியுமில்லையே. அண்ணலின்
ஊழ்வினை அரக்கியின் வாழ்வினை அழித்ததை அறிகிலார் அவனியுள் பலருமே. இன்னதை
திரித்துதான் எண்ணிலா மாந்தரும் சொன்னதே தவறென சொல்லியே திருத்திட சுந்தரன்
சொன்னதை சொல்லிடும் யானுமே சூழ்ச்சிகள் சூழவே காட்சிகள் கண்டது கலங்கரை
விளக்கென கண்ணிலே கனலுடை காயத்துள் பெண்டுடை கணங்களின் ஆண்டகை அளித்த இவ்வாக்கினை
அறிந்திட வேண்டுவேன். அம்மையாய் கட்சியம்பதியையே ஆள்பவள் அழகுற இருக்கையில் அங்குதான்
ஆண்டியின் மடத்தினை ஆண்டவன் பெயரினை அழுத்தியே பிழையற சொல்லுவேன். மாண்டவன் பெயர்
அது மறையினில் சொன்னதை மறைத்திடலாகுமோ ? மன்னவனவனுமே வெண்கரி ஏறியே விண்ணினை
ஆள்பவர் வேறொன்றும் சொல்லி யான் விளக்கிட வேண்டுமே. வானுறை மாந்தர்கள் வைத்ததோர்
பெயரினை செம்மையாய் சொல்லிடின் பிரமனின் பெண்டுவின் பெயரது முடிவுறம் முன்னமே
காமத்தின் கோடியை நாமமாய் நட்டபின் நரிமனம் கொண்டவன் வெற்றியை சூடிடும்
விழிகளோ ஆயரம்.
இறவியே இகழ்ந்திடும் துறவியுள் துட்டனாய் உலவிடும் கோட்டமே கலவிகள் புரிந்திட
காரிகை பலருமே மெத்தையில் மலருமே. அத்தனை அற்பமும் அளவிலா இன்பமும் கொட்டிக்
கிடக்கையில் கூத்தடித்ததை மொட்டை காகிதம் மூலமாகிட முகுந்தன் கோவிலில் மூச்சடக்கிய
முத்து மனிதனை பற்றி சொல்லும் முன் பாவியானவன் பயணம் சொல்லுவேன். காவி அணிந்த
அக்கயவன் கதையை யான் சொல்ல வேண்டியே காது கொடுத்து நீ அதையும் முழுமையாய் கேட்க
வேண்டுமே ! தாயின் பாதத்தில் தஞ்சமடைந்து யான் தருகின்றேன். நாய்கள் பற்றிய நாணும்
உரைகளோ நாட்டில் பலரது வாழ்வை பறித்ததால் சேயாய் இவனுமே தெய்வ
வாக்கென
தருகின்றேன். காமக்கோட்டத்தில் கண்கள் இழந்தவன் செய்கையால் மேன்மை மிக்கதோர்
மேலாளனின் மேனி சாய்ந்ததை சுற்றமுற்றுமே அறியுமே மிச்சம் மீதியை எச்சம்
துடித்ததாய் உரைக்கின்றேன். கொடுங்கொலைஞனோ கடுஞ்சிறையுற்ற ஆண்டினைச் சொல்லிடின்
ஆரம்பம் இரண்டுடன் அகிலம் தான் இரெண்டென சேர்ந்ததன் பின்னரே சேர்ந்ததோ நான்மறை.
கூர்ந்ததை நோக்கிடின் குற்றமொன்றாங்கென குளிர்ந்திடும் பதியுள்ளில் கொண்ட தோர்
மாலனின் மண்டபம் உள்ளிலே மரணத்தை கொண்டதோர் மாண்புடை மனிதனின் மாசிலா குருதியால்
அந்தணன் தகுதியை அறவுமே அற்றவன் குருவென ஆடிய அலகிலா ஆட்டமே அன்றொரு ஆளுமை
கொண்டதோர் அந்தணப்பேயுமே அங்குறைச் சிறையிலே அடைத்துதான் வதைத்தபின் வென்றவள்
செய்ததை விடியாப் பாவமாய் அறிவிலி மாந்தர்கள் அன்றதை சொன்னதை அனல்விழி நாதனோ
அதனையே பிழையென அறிவுடை ஞானியர் அறிந்திட சொல்லுவான். அறத்தொடு வாழ்ந்தவன்
அந்தணனாயினும் அவ்வின நாய்களால் வீழ்ந்தவன் அம்புடை அனகனின் அழகுறு பெயர் முன்னே
சங்கரன் பெயரினை சமைத்ததோர் சாமரம் ஆன அவ்வுத்தமன் உயிரினை எடுத்ததவன் பாவியாய்
உயர் மடத்தலைவனாய் வெற்றியை இணைத்ததோர் ஆயிரம் கண்ணுடை அமரரின் தலைவனின் அழகுடை
நாமத்தை அணிந்ததோர் குருவென அன்றவன் அமைந்ததால் சிறையுறை சிற்றினச் செயல் தனை
செய்ததால் சிறைபுகு ஆண்டது அணிகள் அறுபதுள் அதன் அமைவிடம் தரிக்கை தாங்கியே
பதினெண்ணாகிட பதிவது துலை திங்களில் துட்டனாகியே வியாழனின் விடியலில் தலையது
தொங்கவே தகையிலான் கைதியாய் கடுஞ்சிறை இழுத்தது. அன்றதை செய்தவள் அப்பாவம்
ஏற்றிடாள் கொற்றவன் கற்கியை கொலைச்செய்ய துணிந்தபின் குறையுடை ஆண்டிலே குடி புகுந்ததோ
பார்ப்பனர் பதியிலே பதிந்த அச்சிறையிலே பதினெண் இரண்டுடன் பெருக்கிய நாட்களே.
பாவியாய் ஆக்கிய ஊழ்வினை சொல்லவே பரமனே பாட்டினை என்னிடம் ஏற்றினான். கற்கியை
கொன்றிட திட்டமே வகுத்தவள் கதையினை முடித்தவன் காலகாலனே ஞானியர் பலருமே நன்றாய்
அறிவரே ! அந்தண அழுக்குமே அரக்கியை அணைத்ததால் கொண்டதோர் பாவமே
கொழுந்துவிட்டெரிந்ததால் வந்த ஊழிருவரின் வாழ்க்கையை பறித்ததை வெண்டலையானுமே
விதைத்ததை முற்றுமாய் விளக்கிட வேறெவர் வேண்டுமோ !
பிளிறும் களிற்றின் பேரெழில் முகமொன்றுடையானை பின்புலமாயமர்ந்து
பிழையகற்றி பிறப்பறுக்கும் பெருமானை பிள்ளையாய் பேறு பெற்றானை பித்தம் தெளியா
பேரன்பு உடையானை உற்றாரெனவே உயரடியாரை உயிரொடு உடுத்தானை ஒளிர்சடை மேலுதிக்கும்
ஓர்மதியுற்றானை உலகுடைத்து உடற்பாதி உமைக்கிட்டானை உலகளந்தான்மேல் ஒப்பிலா
காதலுற்றானை தலைசிறந்தோர் தகையேற்கும் தயைகொண்டானை தாயுமாகியே தவறாதருள் பொழிவானை
தூய்மையொடு தொழும் வாய்மை தொடர்வானை துயரோங்கிடும் பொழுதெல்லாம் துஞ்சாதவனாய் இடர்
தாங்கிடும் ஈசன் எழிலடி மலரை இருகரம் குவித்தே என்றும் இரத்தல் இனியோர் ஏற்கும்
ஈடிலா அறமே.
மாதொருபாகன் மக்கட்பண்பொடு மனுநீதிச்சோழன் ஆண்ட மண்ணில் யாவரும்
கேளிர் என்று ஏற்றிட ஈனப்பிறவிகட்க்கேது இருப்பிடம்? அன்பே சிவமென்றும் அறமே தவமென்றும்
அடிப்படை சொல்லியே ஆளுமை வெல்லும் அரியணை மீது பாதகரெழுந்திட வாய்ப்பே இல்லை இதை
பரத்தையர்க்கும் சேர்த்தே சொல்வேன். அநீதியாளர் ஆதரவோடு அருந்தமிழ் நாட்டை
அடைந்திடும் நோக்கத் தவாவோடனுதினம் ஆர்ப்பரித்தாடும் அஞ்சா நெஞ்சாள் அகமே
கொதித்திட ஆணவமோங்கிடும் அறநெறிக்கயலாள் ஆதிக்கம் செலுத்தும் அற்பநோக்கில் அம்மையை
நினைந்து ஆவின் நெய்யை அமுதென பொழிந்து அழற்பயிர் வார்த்து அரியணைக்கேங்கும்
அரக்கியின் நோக்கம் அடியொடு தகர்ந்திட அடியேன் தினமும் யாசகம் ஏற்கும் இழிமகன்
போலே இறைவியை துதித்து இருவிழியொழுக இம்மை முழுமையும் இருகரம்
கூப்பியதற்கில்லென சொல்லாள் என்னருந்தாயே ! பொறையாள் புவிக்கோர் பேறினைப் பெறவே
புதுவசந்தம் பாரினில் எழவே மறைகள் மேம்பட்டு மாண்பினைப் பெறவே மன்னவனெழாது
மலர்ச்சியிலையே ! தலைவன் தளிர்விட்டு தழைத்து வரவே தாண்டவக்கோனின் தாள் பணிந்தே
யான் தக்க அருளை வேண்டியே நிற்பேனே. அரவணிந்தானின் அருளொடு எழவே அரவணையானின் அகமே
உருகும் அர்ப்பணிப்போடு அகிலம் முழுமையும் அறநெறி ஓங்க அண்ணலுக்காக அடியேன்
துதித்திடின் அனைத்து நலனையும் அடைவது நிலமே ! தென்னாடுடை சிவனை நீக்கி என்னாடு
தான் இனிதே இயங்கும். பன்னாடுகளும் பல்வளம் தாங்கி பரதத்தின் புகழோ மேம்பட ஓங்கி
வன்னாடுகள் இல்லா வரமே வாழும் மாந்தர்க்கேற்ற அறமே !
இறையோன் தானென்றும் இன்னா பல செய்து ஈசன் யானென்றும் இயம்பும் இழிமகனோ
இன்மை அறிவுடையோன் அன்றி ஏற்கா இயல்புடையோன் இம்மை இழந்த பின்னம்
ஈனப்பிறப்பெடுத்து கழிவை கற்கண்டாய் காணும் கேழல் என கடினம் கடக்காதோர் காயம்
உடுப்பதென மாதர்குலம் போற்றும் மனோன்மணியுரைத்தே மடமையகற்றச் சொன்னாள். பாவம்
ஐந்தினிலும் பாதகம் இதுயென்றும் சாபம் தகர்க்காத முனிவர்கள் யானென்றும் மோகத்தை
கொல்லாத மூடர்கள் யாரென்றும் முறையாய் முரணகற்றி முற்றா பித்தத்தை முன்பே நலம்
செய்க என்றே எடுத்துரைத்தாரே. அறமே அடிபணிந்து அண்ணனலின் தலைகாக்கும் அறியா பருவம்
முதல் அம்மையுடனிருந்து இருவிழி காக்கின்ற இமைகள் போலன்றி இரவும் பகலுமென
அரணாயமைந்த வண்ணம் சிவனார்காத்த கதை புரியா புதிராகும். புவனம் தென்பட்டு போகம்
புண்பட்டு பொல்லார் கண்பட்டு பவளச்செவ்வாயன் பட்டத் துயர்களையே பார்த்து
அழுததெந்தன் பாழும் விழிகளுமே. உதயம் கிழித்து வந்து ஒளிரும் வருடமென உமையே
உரைத்தது தான் எமையும் அமைதியாக்கி இன்பம் தந்ததுவே.
ஈரம் அகத்தில் இன்மையாயிருக்க இறுமாப்பு ஆங்கே வன்மையாய் மிதக்க
தீரம் சிறக்க தேறுவதேது ? ஆரம் கழுத்தில் அலையென அடிக்க அன்பும் அறனும் அற்றே கிடக்க தூரம்
அறிந்தே துரத்தும் ஈசனை துட்டர் தொலைத்தால் பழி யார் மீதோ ? நட்டம் என்றும்
நாதனுக்கு இல்லை. நமனின் உலகே நட்டவர் எல்லை கெட்டும் திருந்தார் கேடு கெட்டோரே.
கீழ்குலமாயினும் வீடு கிட்டும் கிட்டா பேறு கீர்த்தியுற்றும் கீழ்மையுற்றால் வற்றா
பாவம் வளமிடுமோ ?
தீயினும் கொடியோள் தீரம் பழுத்தும் திருவில் செழித்தும் தீதில்
திளைத்தும் தீதறியா திருமார்பனுக்கு தீவினையாற்றிடவே திருந்தா சிறப்பமைத்து
வருந்தா பிறப்பெடுத்து வாழும் வஞ்சகத்தால் வரையொத்த பாவமுடன் வானளவு பழியேற்று
சிதைந்ததோர் சிரம் பட்டும் செம்மானுயிருக்கு பின்னமும் விலைவைத்தால் பெண்டில்
பிணைந்திருக்கும் பிறைமுடி நாதனுமே விண்டுவை வீழ்த்தவந்தோர் விண்ணவரானாலும் வீணாய்
விடுவானோ ! பார்த்திபன் முகம் வாட பாதகம் செய்ததனால் பாடையில் செல்ல வைக்கும்
பரமனின் சாபத்தை பற்றிடாதிருந்திருந்தால் பைம்பொன் முடிசூட்டி தோரணம் ஆயிரமாய் தொட்டது துலங்கிடவே
பட்டது பளிச்சிடவே நட்டது நற்பயிராய் நறுமணம் கமழ்ந்திடவே நாட்டவர் போற்றி நின்றே
நயனம் நனைந்தவண்ணம் பயணம் முடித்த பின்னம் பரதக் கொடி போர்த்தி பாமரர் முதற்கொண்டு
பணமுறு முதலைகளும் பணிந்தே வழியனுப்பி வருந்தி நிற்கின்ற வாய்ப்பையமைக்காது வஞ்சக
மனம் படைத்து ஆணவச் சிறுக்கியென்றும் அன்பிலா அரக்கியென்றும் வைதல் வசைவாங்கி
வானகமேறாத ஊழ்வினையேற்பதொன்றே உறுதிக்குறுதியென்ற உண்மையை உடைத்தவனே உலகை
உடைமையாக்கி உமையொடு உறைந்தவனே !
கொன்றை வேந்தனருள் கொழித்தே இருக்கையில் கொண்டதோர் நாக்கில் அவன்
புகழ் மணக்கையில் கூத்தன் அகத்துள் கொலுவுற்றிருக்கையில் கோளில் பொறியின்
குணமிலாதானே கோமானிசைக்கே குற்றம் குவிப்பானெனவே கொற்றவன் நலனை கொள்ளாதோருடன்
கோள்களனைத்தும் கேளிரெனவும் கேண்மையுறவும் கேடுமுனைவோர் கூரறிவொடு கூட்டணி
பெறினும் கோனே கதிராய் ஆகியொளிர்வான். வாரணமாயிரம் வன்முறை கொண்டோர் வகுத்த
பகைமையே வந்து மோதிட வாய்ப்புள்ளதேதெனில் சிரசில் பிறையை சீரொடு அணிந்தனை
சிதைத்தாலன்றி சேரமானின் செழுநில செவ்வேள் உடல்தொட முயல்வது ஒருவழி இயலும்.
அதுவும் உதவா திறனொடு உற்றிடும் பயன்தர ஒழியாதொளிரும் உலகுடை நாதனை
ஒளிர்மதிசூடனை உமையொருபாகனை உடைத்திடத் தகுமோ !
கமலம் தாங்கிய கல்நெஞ்சோரும் கயமையிற் கடைந்த கள்வரின் கிழவியும்
வன்னெஞ்சோரின் வருகையை அமைத்தே வஞ்சகர் வளமுடன் வாழ்வதோர் கேடா ! வந்திடம் பெற்று
ஒன்றிணைந்தோரும் இமைகள் மூடா இரவொடு பகலாய் உலவுமிடமும் உறையுள் அறையும்
உற்றுநோக்கியே முற்று பெறாத முனைப்புடன் அனைவரும் முக்கண் முதல்வனின் மொத்த
கண்களில் மூன்றாம் கண்களை முழுக்க நிறுவி சிற்றினமோடு சேர்ந்த உறவின் சிரசுகள்
சிக்க வான் கண் வைத்து வரவு வைப்பதை வாழும் யாவரும் அணுவும் அறியார். அண்ணல்
அசைவினைஅறிவியல் ஆளினும் அத்துமீறி அற்பர்கள் சூழினும் மன்னுயிர் அனைத்தையும் மாசற
உணர்ந்தது விண்ணவரன்றி விழி திறவார்க்கு விளைந்திடல் அறிவோ !
பாகம்.199
🌸 இரக்கமுறும் இயல்பெழுந்தொளிராது ஈகைப்பண்பொழிந்தவாறு இறையோனிடம் இலங்கும் எண்குணத்திற்கெதிர் குணம் கொழித்து இழிமை செழித்து இன்முகம் கெடுத்து இன்னா தொடுத்து வல்லூறொப்ப வல்லாராண்மை வளமொடு நிலைக்க நஞ்சகம் வார்த்தே நலம் பெறும் வெருகினை விண்ணவர் விதிகள் வீழ்த்திக் கொல்லும் நன்னாள் வருவதை நமனுமுணர்ந்தே வையம் வரமுற்று வளநாள் கண்டு வாழ்த்தும் வரதையின் கைத்தலம் பற்றி காவல் காக்கும் கதிர்கண் போற்றி காலகாலனின் காலடியொற்றி கண்ணீர் கசிய நன்றி கொல்லாமை நானில மாந்தரின் நற்பெரும் கடனே !
🌸 இன்பம் யாவையும் ஏற்கா அலகுடன் நெஞ்சம் நிறையவே நிலைத்து மகிழவே துன்பமளித்திடா தொண்டு நோக்குடன் தொடரும் மாந்தர்கள் துவண்டு போய்விடாதவரின் உறவுக்கே இரங்குமியல்புடை எந்தன் ஈசனை எண்ணி உருகவே இணையிலாதவன் பக்தி மொழியொடு பண்பின் சிகரமாய் அன்பிலாரிடம் அறத்தை ஓதவே அமுதின் இனியதோர் அழகு தமிழினில் அருஞ்சுவையுடன் இனிக்க பாடியே இன்னலகற்றியே ஏற்றம் அமைத்திட அம்மையப்பனை அழைக்கும் செம்மலை செம்மையாக்கிடும் சிறப்பை செய்வதே நம்முள் நாதனை நட்டு வளர்த்திடும் நல்ல முயற்சியே !
🌸 இறும்பூதேதுமே எம்மான் இடரூழில் அரங்கேற இயலாது அரும்பெலாம் துரும்பென அலைக்கழித்தோடுமே. இழிவாழ்வு ஏற்றவன் இளமையோடென்றுமே இன்னல்கள் தின்றுமே இடிதாங்கி போலவே இரும்பொறையாகுவான். அடர் அல்லலோங்கியே அடக்கிடும் போழ்தெலாம் அணங்கனை ஏங்கியே அவன் விழி பூக்குமே. ஒளிவிடும் நாளிலே உலகமே அதிரவே தலையினில் தகைமிகு தாமரை விரிந்ததும் சுடரொளி சுழுமுனை பெருவிழி திறந்தபின் சூழ்ந்திடும் சூனியம் சொல்லொண்ணா ஏவலும் பாவியர் பில்லியும் பார்த்திபன் பகைமையை பற்றாது திரும்பியே எய்தவர்க்கேறியே இன்னாரை அழித்திடும். இனியவன் நலம் பெறின் இகத்துள்ளே இடம்பெறும் இன்மையோடில்லாமை இழப்பதும் உறுதியே ! பொன்னாடொப்பவே பூம்பரதம் செழிக்கவே வன்நாடு ஒவ்வொன்றும் வரிசையாய் வீழவே வளநாடு கண்டதோர் வையத்துளெங்குமே வறுமையும் ஒழியவே பெம்மானுக்கருளிடும் பிறைமதிசூடனின் பெருங்கருணையோடிறைமகி எழுந்திங்கு இசையொடு பொலிவுற மரைமுக நறுமகன் நலம் பெற்று நானிலம் ஆள்கையில் நமனுக்கு இங்கேது நாடிடும் உடைமையே !
🌸 வையம் தளைத்தோங்க வரம் வாங்கி வந்தோனெம் வரதைக்கே மகனாகும் மையல் குடிகொள்ளும் மாந்தரின் மனம் மீட்டு மறுவாழ்வளிப்பதொப்ப மெய்மை நிலைநாட்டி மேதினிக்கு வழிகாட்டி பொய்யா மொழியேற்றி புலம்புமென் புன்கண்ணீருரைகேட்டு புவனம் பதினான்கே பொறைக்கோர் அலகிட்டு பூமான் மேல் கருணை கொட்டு ! வெய்யர் வேரிறக்கி விழுதூன்றும் வேளையிலே வேதனையை வையாது விண்ணிறங்கி வந்த பின்னம் தழல்விழியன் தனையனவன் தலை வீழா தகைமையுடன் தடம் மாறா தயையுடனே திடம் தேயா தீரமுடன் மணம் மீறா மண் மைந்தன் மாற்றார் முன் மண்டியிடும் மறமேற்கா மகவுக்கு மலைமகள் தான் மாதாவாம் மலர் மகளும் மதிமகளும் மறுப்பதற்கு மனமின்றி மனமொன்றி சொன்னதனை மறைப்பதற்கிடமில்லை. மகிமையம் கொண்டவண்ணம் மாமன்னன் மணம் பரப்ப புறம் தந்து விரிய விட்டு பூவின் பொதிகைக்கு பொறுப்பேற்ற பொன்மகளோ வானவரின் வாழ்த்து பெற்ற தாயவளின் பெயர் முன்னே தமனியம் தகையேற்க வளவாழ்வு வீழ்ந்த பின்னே வாடகைத் தாயொப்ப வானுறைய சென்ற பின்னம் வள்ளல் வருகையது அகவையொரு ஈரிதழை அழித்த பின்னம் உவகை கொள்ளும் மாந்தரெல்லாம் ஒன்று சேர வேண்டுமென உளமார அழைப்பவனே ஒளிவிளக்கின் உதயத்தால் உலகிருட்டு அகலுமென்று உறுதிமொழி ஒப்பமிட்டு ஒருமையுள் பன்மையுடன் உவகையொடு ஒளிந்திருக்கும் உலகுடைய பெருமானே.
🌸 ஆணவம் போல் அலைக்கழித்து அறம் வீழ்த்தும் தீயொழுக்கம் அகிலமெங்கும் அறிந்தேனில்லை. வாரணம் போல் வலிமையொடு வாழையடி வாழையாக வளங்கொழிக்க வாழ்ந்திடினும் வறுமை வந்து குடிபுகுந்தால் தோரண வாயிலிலே துயரம் வந்து தொட்டில் கட்டும். ஆன்றோர்க்கும் சான்றோர்க்கும் அன்புடைமை அணியெனவே அது தவறின் அழிவு வந்து இரையெடுக்கும் அதன்பின்னே விழி திறந்து ஆர்க்கேனும் விளையும் பயனேதுமுண்டோ ? கானகத்து விலங்குகட்கும் கருணை உண்டு கண்டு கொள்வாய். கண்ணிருக்கும் மூடர் வாழும் காசினியில் காட்சி காண இயலாதோர் கனிவுடையோராயினவர் காலனின் உறவறுத்து கதிர்க்கண்ணன் உறவமைப்பர். வாழ்விற்கு வரமெனவே வந்தமைந்த வதனத்து விழிகளிலே ஒளியிழந்தும் வெற்றிருட்டு இரவுடுத்த கரும்பிறை நாள்களிலும் காட்டிடை மரங்களுள்ளும் கைதேர்ந்த மாலுமி போல் மீயொலியெழுப்பியே மிக்கச் சிறகடிக்கும் மீச்சிறு வௌவாலும் மெச்சுகின்ற திறனோடு மேதினியில் செல்லாத இடமெல்லாம் செம்மையாக சென்று வரும். வான் குருவி வந்துறைந்து வாழுகின்ற கூடுகளும் வல்லறிவால் வகுத்ததென்று வாலறிவனுணர்த்துமுன்பு தேன் நக்கி திருவினையால் தீட்டியதோர் கூட்டை கட்டி திகழுகின்ற ஒழுங்குமுறை தீரர்களின் கோட்டையொப்ப மேதகு திறமையோடு மேன்மையுற வாழ்ந்திடுமே. தண்மை வெம்மை தாக்காத தட்பவெப்பம் ஏய்க்காத தொல்கரையான் புற்றும் கூட தொழில்நுட்பம் பயின்று வந்து துவங்கியது அல்லயென்றும் பல்கலையை பயிற்றுவிக்கும் பாசறையே திகைக்கும் வண்ணம் படிப்பறிவே இல்லாத பாமரம் போல் எண்ணத் தோன்றும் பரிதாப நிலையுற்று படியிறங்கி மரியாதை ஏதுவுமின்றி மானிடமே மண்டியிடும். மடிப்பிச்சையேந்தி வரும் மாந்தருக்கென்னாளும் முகம் சுளிக்காதுதவுதலே முதன்மை பண்புகளில் முத்தனெவே அமைந்திடுமே. மதம் தீண்டா மனமேந்தி மனிதம் மலருகின்ற மக்கட் பண்புடுத்த மாணிக்க பரலொன்று இனம் தீண்டாதிகழ் தீண்டும் இழிமையிலும் இருள் கிழித்து விடியலுக்கோர் வித்திடவே வேண்டுகோள் விடுத்தவன் தான் மதியணிந்து மன்னுயிர்க்கே மதிப்பளித்து மன்னனுக்கும் சொல்லுவதே !
🌸 நானிலம் மீட்கயெம் நாரணன் வந்தபின் நற்றுணை நல்கிடும் நன்நோக்குடையோன் நாகத்தை படமொடு நறுமுடியேற்றிய நாதர் நல்கும் நல்லருள் உண்டென நற்றமிழ் வளர்த்தே நலம் கண்ட குறுமுனி நாளெலாமுரைத்தது நஞ்சுறை பாவியர் நமனுடை குடிகளாய் விஞ்சிடும் விதிகொண்டு விழ்ந்ததன் பின்னமே விடுதலையென்பது வீணர்க்கில்லையே. விடியலின் வேரிலா வெற்றிருள் சூழவே புதைக்குழி உள்ளிலே புகுந்தவர் போலவே புண்பட்டுமாய்வரே. பரமனை பணிந்தே அமரர் அறிவொடு அனைத்தையும் அறிந்தே அடியேன் உரைப்பதை அனைவரும் கேளீர். தோற்றம் இலாதோன் தொடர்ந்தே வந்தனை தாங்கும் தராதரன் தகையொடு தளிர்த்தபின் தேய்பிறையாகாதவனை தேற்றும் திறனால் தினமோர் ஆற்றல் அலகின்றி அளிப்பவன் அவனுடன் அன்றில் உறவென அணிந்ததறியாதகற்றிடும் பணியது பயன்தாராதேனெனில் அழியாதணுவில் அறியாததிரும் அறிவுக்கதிராய் அறியாப்புதிராய் அளப்போர் அலகில் அடங்காதகலும் அரும்பிறைசூடனை அழித்திடத் தகுமோ !
பாகம் 200.
🌸 பருந்துகளும் கனிவு கொண்டு பண்பினிலே வென்றிடுமே. பரத்தையரின் பார்வையிலும் பரிவு வந்து மிஞ்சிடுமே. ஈவிரக்கம் இல்லாத எத்தர்களின் தலைவியினால் எளிதாக தலை கொய்ய ஏவி விட்ட வேடர்களால் எம்மானின் அடிமயிரை எடுத்து வர இயலவில்லை. பைம்பொன்னி வரனுக்கு பல கோடி பொருள் வைத்தும் பல்லாண்டு காலமாக பார்ப்பனர்கள் அழைத்திட்டும் பதினாங்கு உலகினரும் பார்த்திடவே இயலாத பரந்தாமன் வருகைக்கு பாரெங்கும் பேறு பெற்றோர் பனிப்பாறை உருகுதல் போல் பன்மடங்கு பக்திபூண்டு விண்ணிறங்கி வா வென்று விழியொழுக புலம்பியதால் நிலை மறந்து இரங்கியவன் நீடுலகிற்கிறங்கி வந்தும் நேரிட்டு மோதாமல் வீறிட்டு வாராமல் போரிட்டு சாகாமல் புறம் காட்டும் கோழையினும் அறம் தூற்றும் ஆண்டாண்டும் மறம் நாறும் மண்ணுறைந்தும் மானமிலா மடந்தையென நிலமகளும் தலை குனிந்து நித்தமும் உமிழ்ந்திடுவாள் நெஞ்சுறைந்த நஞ்சகத்தாள் நெறியிழந்த இயல்புதனை என்சொல்லி நகைப்பேனே எமையாளும் இறையோனே !
🌸 பண்பேயின்றி பாழாய் போனோர் பக்கம் கூட பகவன் பாரான். அன்பேயின்றி ஆணவம் கொண்டோர் அருகே அண்டி அம்பை வாராள். அறிவாய் அதுபோல் அகிலம் காக்கும் ஆர்வலர் நோக்கில் அறத்தை நாடி அழிவோர் அருகில் அரணாய் என்றும் அண்ணல் நின்று அகத்தால் வாழ்த்தி அடிகள் தொழுதே தரத்தை தாழ்த்தி திருப்பணி செய்வான். பாவம் கொழித்து சாபம் குவித்தோர் பலரும் பெருக பரிகள் காணா பைன்பொன் தேறா பாதகர் ஊரில் நரிகள் மிகுந்து நாறும் இனத்துள் வென்று விரிவதை விழிகழிழந்த வேதியரறியார். சதியை புரிந்தும் சாகா வரமுடை சாம்பசிவத்தின் சாதியர் அவனது விதியை அறிந்து வீடுபேற்றின் விடுதலை என்னும் வீரிய மருந்தை அருந்திய மானிட மணிகளும் அவரே ! உண்மையை உரைப்பதென்றால் உள்ளங்களில் விதைப்பதென்றால் மண்ணில் மறைந்தொழுகும் மாதவனின் மறுமை கொள்ளும் மந்தணத்தை உடைப்பதென்றால் ஊர் முழுதும் ஊளன்களே நிறைந்திருக்க ஊழல் நாறா உள்ளங்களில் உத்தமனாய் விரிந்தவனின் ஒளிமுகமோ உலகெல்லாம் இருள் சூழ்ந்து உள்ளங்களில் இடர் வேய்ந்து ஒப்பாரி ஓய்ந்த பின்னம் விடியலிலே வேந்தவனை வெள்ளியென கண்டேன். வேதம் யாவிலும் விரிந்தோன் அவனே வேரை ஊன்றி விருந்தென வந்து மறுமை அகற்றும் மருந்தினை தந்து மாதா எந்தன் மண்ணை காப்பதன்றி மற்றொரு மீட்பன் வாரான் எனவே வஞ்சியை மெய்யில் வார்த்தவன் சொன்ன வாக்கினை வாங்கி வசுந்தரை மேனியில் வாசனை தெளிக்க வானோர் வகுத்த காப்பியம் இவனென வாயில் பிறந்த வாக்கியம் இதுவே !
🌸 நாதன் நாதரை நன்குறை நெஞ்சுள் நன்றாயூன்றியே நாளும் பொழுதும் நன்னீரொப்ப நாமம் பாய்ச்சியே நற்றமிழ் மூலம் பாகில் இனிய பாடல் வார்க்கவே பக்திப் பெருக்கில் படைக்குமுரத்தை உயிரோடென்றும் ஊட்டி மகிழ்ந்தால் உலகில் எவர்தான் எம்மான் எதிரே எழும்பக்கூடும். பாதகர்கள் பதித்த பாழும் பொறியில் யாதவனிவனா இடறி வீழ்வான். நாதமொடு நடனம் கற்றும் நாகமொப்ப நங்கையரே நறுமணத்தை நாறுமுடலில் நனைத்த பின்னம் நாதன் முன்னம் வந்து நின்று நயனக்கணையால் மதனம் வீசி புதையலொப்பா புன்னகைத்தால் எதையும் அவனும் ஏறெடுத்து எள்ளளவும் பாராதவன் மேல் ஏகபாத இறைவன் வந்து எண்ணமெல்லாம் காதல் செய்வான். நாட்டிலெதையும் நாடானவனின் நட்பு பெற்று நன்றி கொல்லும் நாயின் மக்கள் நகரம் முழுதும் நயந்து சேர்ந்த வேடனெவனும் வேந்தன் உடலை வீழ்த்த விரைந்தால் வீணர் அழிவு விதியின் வசமே அழியா வளமே அவனின் வரமே ! வெண்டிரையுள்ளில் வெகுவாய் பருத்து வீரியமோங்கிடும் வேளமொத்த வன்மீனல்ல விண்ணில் தோன்றி விழும் மீன் கூட வாய் பிழந்திவனை வந்து நெருங்கிடின் வினைப்பயனற்றே விரயமாகி அனைத்து செயலும் அழிந்து போகும் அவலம் எழுமே ! நாளும் பொழுதும் நாட்டம் சிறக்க நாடி துடிக்கும் நலத்தை தடுத்தால் நமனோடமைக்கும் நட்பு வருமோ சிவனோடமைக்கும் அன்பு மிகுமோ. செம்மலென்றும் சிவனின் கன்றே செவ்வடியாரது சீரடி தொழுகையில் சிந்தை முழுமையும் சிவநெறியோங்க பைந்தமிழ் பாக்கள் பாகென பொழிகையில் இதனில் மிக்கு ஈசனுக்கென்று இம்மைத் தொண்டு இன்னும் சிலரே இனிதே புரிவர் ! இவனில் மிகையாய் ஈடிலா தொண்டு ஈரேழுலகில் இறைவியன்றி எவர்தான் புரிவர் ! இவனாலின்பம் இந்நிலம் பெறுமெனில் அதுவே பேறென அரனார் தொண்டை ஆழ்ந்து ஆற்றி அவனோடென்றும் அமரர்கள் நின்று அறத்தை காத்திட அடியேன் யானும் இயன்றதை புரிந்து இம்மையை கடந்து முயன்றது யாவும் முக்தியை தருமே !.
🌸 பழிபிறங்கா பண்பினை பற்றாத பாவியர் பலருமே விழி திறந்திடா விதி விடுத்திடா வீணருலகினில் விளைவது திண்ணமே. இருள் கிழித்திட இயலாமற்போகியே ஈறிலா இடர்களும் எண்ணிலா துயருடன் அடர் விடம் கொட்டும் அரவம் போலவே அழிப்பதோடனைத்தையும் ஆணிவேருடன் அறுத்திடும் முன்னமே அரிதினும் அரிதென அமுதென கிடைக்குமோர் அறிவுரையேற்பது அவனின் உறவினை இணைப்பதோடன்றியெம் ஈசன் உலகினில் என்றென்றும் நிலைக்குமே ! அருள் விழி திறந்திடும் ஆவலை துறந்தவனெவனுமே அறிவிலியாகிடும் ஆதனென்பதை அழுத்தி யானுரைக்கவோ ! அன்பறமற்றவள் அகல் விளக்கேந்திடாதிருள் வழி புகுந்தவள் இம்மையோடிறிதியாய் இணைவதுமுறுதியாய் தன்மையே இன்மையாய் தாங்கிடும் மறலியின் தயைகொளா நரகமே. அவள் வழி அணுகிய அறமிலாதோரது அங்கத்தை ஆளும் அவ்வாதனும் கூடவே அழுக்கினால் அடர்ந்ததால் அரவணிந்தோனது அடிதொடும் அருகதை அணுவளவேனுமிங்கமைந்திட வாய்ப்பிலையாதலால் அத்தனின் உலகிற்குள் அண்டிட வழியில்லை. இன்னமும் அழிவதும் இழி நிலை பெறுவதும் எடுத்த இப்பிறப்புமே ஏழிற்குயர்ந்திடாதிறங்கிய காரணம் எம்மான் வாழ்க்கையை இல்லாதாக்கிட எடுத்த முன்முயறச்சியோடேவிய குற்றமே என்பதை கொள்கவே. எண்ணிலா அரக்கர்க்கும் ஏராளம் வரமிட்டும் ஏமாற்றமுற்றதால் ஈசனை இயக்கிடும் இறைவியே எச்சரித்தியம்பிய பின்னரே இழிமகள் இரப்பதற்கெதற்குமே இரங்கிடான் அரங்கனின் அழைப்புக்கு அலகிலாதிரங்குவான் அணுவிலும் உறைந்தவன் அனைத்திலும் இயங்கியே !
🌸 நற்குணமில்லா நரிகள் நடுவே நன்றி கொல்லும் செந்நாய் மாந்தரும் நம்மானூரில் நன்றாய் வாழ நன்றி நாடா நன்னெறியாளர்கள் குன்றி இருக்கும் கொற்றவனூரில் குன்றின் மீது குருசும் இருக்க கூப்பிய கரங்கள் கும்பிட்டு கடந்தபின் கூத்தன் குழந்தையை கொல்லும் நோக்கமும் வெல்லாதமைய வெற்று வேட்டாய் வீணாய் போன விலை மகளீன்ற மகவுகள் போலும் மாற்றார் உறவை மறவாது பெறுவதை மனக்கண் விரியா மன்னுயிர் அறியாது மற்ற பற்பல பொன்னுயிரொப்ப மண்ணுயிர் அறிந்தே மன்னன் இவனென்ற மந்தணமறிந்து மாளாதுருகும் வேதனையெல்லாம் விண்ணவருணர்ந்தால் விளைவது நலமே !
.. 🌸 குற்றமிழைத்தே கொடுமையில் திளைத்த கொலைக்கோர் கலைஞன் கொன்று குவித்ததை கூற்றுவனிடம் கூறியான் குலை நடுங்கினேனவனோ கொற்றம் கொள்ளும் அரியணையொன்றில் கூடா அறத்தொடு கூன் விழும் நீதியை கொல்லும் நோக்கில் எல்லாம் வல்ல இயல்பை ஏற்றபின் வெற்றிக் கொடியுடன் வெறியை விதைத்தே வீரியம் புதைத்தவன் நீறு பூத்த நெருப்பென நிலைத்தவன் நந்தியுடலுடன் நடைபயில்வானவன் நன்னெறியறிந்தும் நாடாதவனாய் குந்தியமர்ந்து கொள்கையை குலைத்து வல்லமை விதியை வரைவுடன் வகுத்தே நல்லனயெல்லாம் நாடி அழிக்கும் நஞ்சன் கதையை நமனே முடிக்கும் நாளைச் சொல்லி நகைக்க கண்டேன். நட்டமேற்று நாறிப்போன கொற்றம் முழுமையும் கொற்றவனேற்றபின் குற்றக்கொடிகளை கொம்பிட்டுக் காக்கும் கொற்றவையே வந்து கும்பிட்டு கோரினும் கொடுங்கோல் புரிந்தோர் குரல்வளை அறுந்து குற்றுயிரிழப்பதை கொம்பன் எவனும் தடுத்திடயியலா தருணம் வருமென தங்கநிலவை தலையில் தாங்கிய தாளாளன் வாய் தவறாதென்பதை வேளாளன் யான் விதைப்பது வினையாய் விளைந்தேவரினும் அறுப்பதை அடியேன் அகமுடன் அறுப்பேன். அண்டம் திரண்டு அடுஞ்சினமோங்க அழிக்கவரினும் அண்ணலுக்காக அனைத்தையும் தாங்கும் ஆண்மையை அளித்ததே ஆண்மையுள் பெண்மையை அடக்கிய எந்தன் அம்மையப்பனை அறிவது நலமே !.