koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Thursday, August 27, 2015

விருச்சிக ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

விருச்சிகம் : 
       
                 விருச்சிக ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடித்து வெற்றி காண்பவர்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடியவர்கள். அஞ்சா நெஞ்சமும் திடகாத்தியமான உடலமைப்பும் இருக்கும்.

                 இவர்கள் தன்  வேலைக்காக தந்திரங்களை பின்பற்றுவார்கள். வாழ்க்கை சண்டை சச்சரவுகள் நிறைந்து காணப்படினும் அவற்றுக்கெல்லாம் இவர்கள் கலங்க மாட்டார்கள். எதிரிகளை சூறையாடுவதில் வல்லவர்கள். விருச்சிக ராசியினர் மனைவியை மதிப்பவர்களாகவும் மனைவிக்கு பிடித்தவர்களாகவும் இருப்பர்.

             செவ்வாய் அதிபதியாக வருவதால் சுரங்கம், ராணுவம், காவல் துறைகளில் பெரிதும் பணிபுரிவார்கள். காதல் உணர்வு கொண்டு நினைத்தவரையே கரம் பிடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்களிடம் பழகுவது கடினம் ஆயினும் பழகிய பிறகு விடமாட்டார்கள்.

           விசாகம் 4, ஆம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் விருச்சிக ராசியினர் ஆவர்.    
 

துலாம் ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

துலாம் :




           துலாம் ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் நல்லது கேட்டது நீதி நேர்மை அறிந்து துல்லியமாக செயல்படக்கூடியவர்கள். பணம், சொத்து சுகம், கால்நடை விருத்தி, நல்ல வீடு, நிலபுலன்களை பெற்று சந்தோசமாக வாழக்கூடியவர்கள். இவர்களது குடும்பம் பெரிய குடும்பமாக இருக்கும்.

             ஒரு சிறந்த தலைவனுக்குரிய அனைத்து பண்புகளும் இவர்களிடத்தில் ஒருங்கே காணப்படும். பேச்சில் வல்லவர்கள். ஆணித்தரமாக பேசி முடிப்பவர்கள். தெய்வீக பக்தி கொண்டு சாஸ்த்திர சம்பிரதாயங்களை கடைப்பிடித்து வாழக்கூடியவர்கள்.

           ஆசிரியர், நீதிபதி, வழக்கறிஞர், கலைஞர், அரசியல் தலைவர் போன்ற பதவிகளை வகிக்கக்கூடியவர்கள். மற்றவர் விவகாரங்களில் தலையிட விரும்பாதவர்கள். வியாபார நோக்குடன் செயல்படக் கூடியவர்கள். பசி தான்காதவர்கள்.

         சித்திரை, 3, 4, ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3, பாதங்களில் பிறந்தவர்கள் துலாராசிக்காரர்கள் ஆகும். 

கன்னி ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

கன்னி :



           கன்னி ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் நீதி, நேர்மை, உண்மை என வாழக்கூடியவர்கள். கடவுள் பக்தி மிகுந்தவர்கள். காதல் வயப்படக்கூடியவர்கள். இளம் வயதில் வறுமையால் வாடினாலும் பிற்பாதி வயதில் செல்வ செழிப்புடன் வாழக்கூடியவர்கள். தாயின் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர்கள்.

             சேவை மனப்பான்மை மிகுந்து தர்ம குணத்துடன் திகழ்வார்கள். தங்களால் பயனடைந்தவர்கள் ஏராளம். அன்புடன் பேசுவது, பெரியோர்களிடத்தில் மரியாதை நண்பர்களுக்காக எதையும் செய்யக்கூடிய குணம் கொண்டவர்கள். சில நேரங்களில் கூட்டங்களில் பேசுவதற்கு தயக்கமும் பதட்டமும் காணப்படும்.

           கன்னி ராசிக்கு அதிபதியாக புதன் வருவதால் நன்கு படித்தவர்களாகவும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவும் இருப்பர். இவர்கள் பிறரிடம் பணி செய்ய விரும்பாது சொந்தமாக தொழில் செய்து முன்னுக்கு வருபவர்கள்.

           உத்திரம் 2, 3,4, ஆம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கன்னி ராசிக்காரர்கள் ஆவர். 

சிம்ம ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

சிம்மம் :
                     
             சிம்ம ராசியை ஜென்ம ராசியாகக் கொண்டு பிறந்தவர்கள் தனித்து திறியும் தைரியசாலிகள். இவர்கள் யாருடனும் அதிகம் வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதே போன்று யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை துணிச்சலாக செய்வார்கள். 

            வாக்கு வன்மையும், தெய்வ வழிபாடும் நிறைந்தவர். சூரியன் அதிபதியாக உள்ளதால் அரசு துறையிலும் அரசியலிலும் சிறந்து விளங்குவார்கள். யாருக்கும் அடிபணிய மாட்டார்கள். யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டார்கள்.ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் காணப்படுவார்கள். உயர்ந்த அந்தஸ்து பதவி வகுத்து பலரையும் வழிநடத்தக்கூடியவர்கள்.

            கோபம் வந்தால் கொடூரமாக மாறக்கூடியவர்கள். சமூகத்தில் நற்கீர்த்தியுடனும் சொத்து சுகங்களுடனும் விளங்குவார்கள். நல்ல சிவந்த நிறத்தையும் கம்பீரமான உடல் தோற்றத்தையும் உடையவர்கள்.

           மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிம்ம ராசிக்காரகள் ஆவர்.    

கடக ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

கடகம் :

    


               கடகத்தை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் கற்பனை ஆற்றல் மிக்கவர்களாகவும் இழகிய மனம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தாய் தந்தை மீது அளவற்ற பாசத்துடன் காணப்படுவர். சினிமா, அரசியல், பொதுப்பணி போன்றவற்றுள் இடம் பதிப்பர். மற்றவர்களுக்கு கடினமாகத் தோணும் காரியங்கள் அனைத்தும் கடக ராசியினருக்கு தூசியாகத் தெரியும்.

             தான் எடுத்துக்கொண்ட வேலை முடியும் வரை எதை பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். பொது சேவையும் இறக்க குணமும் கருணை மனதும் கொண்டு மற்றவர்களுக்கு உதவிடுவார்கள்.

           கடக ராசியினருக்கு பெண்களால் பல ஆதாயங்கள் வந்து சேரும். பெருந்தன்மை கொண்டு செல்வ செழிப்புடன் உலகம் போற்ற வாழ்வார்கள். சந்திரனின் சொந்த வீடாக கடகம் இருப்பதனால் கற்பனை திறன் மிகுந்த துறைகளில் ஜொழிப்பார்கள். பேச்சு இனிமையாகவும் குளிமையாகவும் இருக்கும்.

           புனபூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கடக ராசியினர் ஆவர்.

            

மிதுன ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

மிதுனம் :

           மிதுன ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடனும் பேசுவதில் வல்லமையும் கணிதத்தில் புலமையும் பெற்று காணப்படுவார்கள். அடிக்கடி எண்ணங்களை மாற்றுபபவர்களாகவும் இரட்டை செயல்களை உடையவர்களாகவும் இருப்பார்.

         எழுதுவதில் நாட்டமும் ஜோதிட சாஸ்திரங்களில் நம்பிக்கையும் உடையவர்கள். நல்ல ஒழுக்கத்தையும் புகழையும் பெற்று தன் சொந்த உழைப்பால் முன்னேரக்கூடியவர்கள். கலைத்துறை, நடிப்பு, நகைச்சுவை போன்றவற்றில் ஆர்வமும் தேர்ச்சியும் இருக்கும். சமுதாயத்தில் கண்டிப்பும் கண்ணியமும் நிறைதவர்களாக திகழ்வார்கள்.

          எந்த ஒரு செயலையும் தைரியமாக செய்யக்கூடியவர்கள் இவர்கள்.புதன் அதிபதியாக வருவதனால் நல்ல கல்வியை பெற்று நிபுணத்துவமான அறிவை பெற்றவர்கள் இந்த ராசிக்காரர்கள். சில நேரங்களில் சுயநலம் மிகுந்தும் கபடத்தனம் கொண்டும் காணப்படுவர்.

         மிருகசீரிடம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசிக்காரர்கள் ஆகும்.

ரிஷப ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

ரிஷபம் ; 
            ரிஷப ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் பக்தி சிரத்தையுடன் காணப்படுவர்.சந்திரன் இங்கு உச்சம் பெறுவதால் கற்பனை வளம் நிறைந்தவர்களாகவும் கலை உணர்வு கொண்டவர்களாகவும் இருப்பர். தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும் வீடு இருப்பிடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதிலும் இவர்கள் திறமைசாலிகள். 

             குழந்தைகளிடத்தில் பாசமாகவும் பிரியமாகவும் நடந்துக்கொள்வார்கள். செல்வ வசதி வாய்ப்புகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழக்கூடியவர்கள். சில நேரங்களில் சிறிது முன் கோபமும் பய உணர்வும் வந்து போகும். வாலிப பருவத்தில் இருப்பவர்களுக்கு சிற்றின்ப ஆசைகள் வந்து போகும்.

            ராசி அதிபதி சுக்கிரன் என்பதால் காதலில் வெற்றியும் நல்ல வாழ்க்கை துணையும் அமையும். எதையும் கலை உணர்வுடனும் செய்யக்கூடியவர்களாக இருப்பர். 

            கிருத்திகை 2, 3, 4, ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரிஷப ராசிக்காரர்கள்.

மேஷ ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்


மேஷம் :

                  மேஷ ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் துணிச்சல் மிக்கவர்கள். அதிகாரம் உடையவர்கள். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றத்துடன் சில சமயங்களில் கோப குணத்துடனும் காணப்படுவார்கள். பேச்சில் நேர்மையும் உண்மையும் இருக்கும். படிப்பில் தேர்ச்சியும் ஆடை ஆபரண விருத்தியும் இருக்கும். 

                    இளம் வயதில் உடல் மெலிந்தும் இளைத்தும் காணப்படும். வயது ஆக ஆக தோற்றத்தில் அழகும் பொழிவும் கூடும். இவர்கள் நீண்ட ஆயுள் பலத்துடன் சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதை பெற்று வாழ்வார்கள். பிறருக்கு அடிமையாகவோ அடிபணிந்தோ இருக்க விரும்பாதவர்கள்.
 
                   மேஷ ராசிக்கு செவ்வாய் அதிபதியாக வருவதால் மேஷ ராசிக்காரர்கள் பெரும்பாலும் சவால் நிறைந்த பணிகளில் எளிதாக இறங்குவார்கள். இராணுவம், காவல் துறை,  தீயணைப்புத் துறை, விமானப்படை, கப்பல் படை, மருத்துவ துறை பேன்ற துறைகளில் மேஷ ராசிக்காரர்கள் அதிகம் காணப்படுவர்.

                     அஸ்வினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேஷ ராசிக்காரர்கள் ஆவர். 

ஜோதிடவியல் ஓர் ஆய்வு - பகுதி 2


அறிவியலும் ஜோதிடமும் ; 
  
             அறிவியல் வல்லுநர்களால் இன்று மக்களுக்குப் பயனுள்ள பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளும் பயன்பாட்டுச் சாதனங்களும் பரவி வருகின்றன.  அதற்கு ஏற்றாற்போல் ஜோதிட வல்லுநர்களும் ஜோதிடக் கலையையும் நவீன உலகிற்கு ஏற்றார்போல் ஆராய்ந்து வருகின்றனர்.

           அறிவியல் அறிஞர்கள் கணினியைக் கண்டறிந்தனர் . ஜோதிட வல்லுநர்கள் கணினிக்கு உரிய கிரகம் சுக்கிரன் என்பதனைக் கண்டறிந்தனர். மருத்துவர்கள் அறுவை சிகிட்சை முறையைக் கண்டறிந்தனர். ஜோதிட அறிஞர்கள் அறுவை சிகிட்சைக்கு உரிய கிரகம் செவ்வாய் என்பதனைக் கண்டறிந்தனர்.

          இவ்வாறு ஜோதிடம் இவ்வுலகிற்குத் தகுந்தார் போல் மாறிக்கொண்டு வருகிறது.   

ஜோதிடத்தின் வளர்ச்சி;

               சித்தர்களால் கண்டறியப்பட்ட ஜோதிடக்கலை இன்று பெரும் வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. உலகம் முழுவதும் ஜோதிடம் போற்றப்படுவதனை நம்மால் காண முடிகின்றது. தமிழகத்தில் பல்வேறு பல ஜோதிடம் கற்பிக்கபப் படுகின்றது. குறிப்பாக அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்கள் ஜோதிடம் சார்ந்த படிப்புகளை வழங்கி பட்டங்களை வழங்குகிறது.
 

தெய்வீகக்கலை ;

             மானிடர்களின் துயர் நீக்கி, வழிகாட்டி, காலக்கண்ணாடியாக விளங்கும் தெய்வீகக் கலையாக ஜோதிடக்கலை போற்றப்படுகிறது. ஜோதிடம் என்னும் இறை தொண்டினை செய்து ஜீவனம் நடத்திடும் ஜோதிடர்களின் பங்கு இன்றியமையாதது. ஜோதிடத்தை தாண்டியும் ஒரு சக்தி இருக்கிறது. 

             இறைவன் நமது பூர்வ ஜென்ம பயன்கள் அடிப்படையில் நமது விதியை நிர்ணயித்துள்ளான். எதுவும் சில காலம். அவனின்றி ஓர் அணுவும் அசையாது.   

ஜோதிடவியல் ஓர் ஆய்வு - பகுதி 1

                 குறித்திடுக ஜாதக மென்பதவரவர் தம் வினையின் 
                 குணங்களறிந்தயன் விதித்த கொள்கை யுளதன்றே 
                 மறித்தமரவர் தமக்கு வரும் பல பாவகத்தின் 
                 வகையறிந்து முன்னோர்கள் வழுதிச் சொல்லதனை 
                 பிரித்தறிந்து சுபம் வருமென்றுள மகிழ்ச்சிப் பொங்க 
                 பின்ன சுபம் வருதலிற்கு ப்ரீதியென கொலேன்று 
                 நெறி தரும் சாஸ்திரத்தின் விதி சாந்தி செய்தே 
                 நிறைந்த சுபம் பெறுவதற்கே நிகழ்த்தினர் ஜாதகமே. 

ஜோத்யிடக்கலையின் தொன்மை ;

                 ஜோதிடக் கலை மிகவும் பழமை வாய்ந்தக் கலை. ஜோதிடத்திற்கு வானசாஸ்திரம் என்னும் மறுபெயரும் உண்டு. சங்க காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் என்னும்  விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட அறிய கலைகளில் ஜோதிடக்கலையும் ஒன்று. நம் அறிவியல் அறிஞர்களால் சொல்லப்பட்ட சூரியன், சூரியனைச் சுற்றியுள்ள கோள்கள் இவை யாவும் தனி மனிதனின் இயக்கத்திற்கும் உதவுகின்றன என்பதனை சித்தர்கள் முன்கூட்டியே நிரூபித்துக்காட்டினர்.

               ஒரு மனித உயிரின் பிறப்பு, இறப்பு, வாழ்நாளின் இடையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகள்  இவை யாவும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை. மனித உயிர்களின் பூர்வபுனரெதிர் ஜென்மங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் என்று சித்தர்களும் பழம்பெரும் ஜோதிடர்களும் கூறியுள்ளனர். இதற்காக ஜோதிடக்கலையைப் பயன்படுத்தினர். கம்பராமாயணம், மகாபாரதம், மணிமேகலை என்னும் தொன்மை வாய்ந்த புராணங்களின் வாயிலாகவும் ஜோதிடம் சம்பந்தமான செய்திகளைப் பார்க்க முடிகின்றது. எனவே ஜோதிடம் என்பது மிகவும் தொன்மை வாய்ந்தக் கலை என்பதை உணர முடிகின்றது.

விதியின் பங்கு ;  

             மனிதன் செய்கின்ற எந்த ஒரு செயல்களிலும் விதியின் பங்கு இருக்கின்றது. மனது எதற்காக ஆசைப்படுகிறதோ, எதை அடைய ஏங்குகிறதோ, எதைச் செய்யத் துணிகிறதோ என்று பார்க்கும் பொழுது மனதில் ஒர் விருப்பம் எழுகிறது என்றால் அது மனிதனின் மனதைச் சுற்றியுள்ள நவகிரகங்களால் ஏற்படுத்தப்படும் தூண்டல் ஆகும். நாம் ஒரு செயலைச் செய்கின்றோமானால் அச்செயல் நன்மையில் முடியும் அல்லது தீமையில் முடியும். நேரம் நல்லதாக இருந்தால் அச்செயலும் நன்மையில் முடியும். நேரம் தீயதாக இருந்தால் அச்செயலும் தீமையில் முடியும்.

            எனவே மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் இன்பம், துன்பம் இரண்டிலுமே விதியின் பங்கு இருக்கிறது.

விதியை வெல்ல முடியுமா ? 

             "விதியை மதியால் வெல்லலாம்" "குரைக்கின்ற நாய் கடிக்காது" "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" முதலியன யாவும் நம் சான்றோர்களால் சொல்லப்பட்ட பழமொழி என்னும் தொகுப்பில் இடம் பெருவனவாகும்.

            விதியை மதியால் வெல்லலாம் என்பது ஜோதிட ரீதியாக விதி என்பது ஜாதகக் கட்டத்தில் இடம் பெரும் லக்கினம் மற்றும் அதன் அதிபதி ஆகியவற்றைக் குறிக்கும். மதி என்பது ஜாதகக்கட்டதில் இடம் பெரும் ராசி மற்றும் அதன் அதிபதியின் நிலையைக் குறிக்கும். இவற்றுள் விதி என்னும் லக்கினம் பாதிக்கப்பட்டிருந்தாலும் ராசி என்னும் மதி நல்ல நிலையில் இருந்தால் அந்த ஜாதகன் மதியால் விதியை வெல்லலாம் என்னும் அர்த்தத்தைச் சாரும்.

           ஒருவருக்கு விதிப்படி விதிக்கப்பட்டனவற்றை எவராலும் மாற்ற முடியாது. மாற்றி எழுதவும் முடியாது. ஒரு உயிர் பிறக்கும் போது அந்த நாள், நேரம், ரேகை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஜாதகத்தின் ரீதியாக உள்ளவை உள்ளபடி நடக்கும். இதுவே ஜோதிடத்தின் மகத்துவம் ஆகும்.

          பரிகாரம், பூஜைகள் , மோதிரக்கல் அணிதல், சாந்தி செய்யுதல், எந்திர வழிபாடு, பெயர் மாற்றுதல் இவை எவற்றாலும் விதியை மாற்ற முடியாது. ஆன்மீக வழிபாடும், இறை பக்தியும் நமக்கு நம் ஜாதக ரீதியாக ஏற்படும் தீமைகளைக் குறைக்கும். மனதில் ஒரு நம்பிக்கையும், ஆருதலும் உருவாக வழி வகுக்கும். மற்றபடி விதியை எந்த ஒரு சக்தியாலும் வெல்ல முடியாது மாற்ற முடியாது தோற்கடிக்க முடியாது.

            மேலும் நீ செய்த தானமும், தர்மமும் இவ்வுலகில் இருக்குமாயின் விதியின் மரணத்தைக்கூட மறுபரிசீலனைச் செய்ய வைக்கலாம்.

ஜோதிடத்தை இகழ்வோர் ; 

           மனிதர்களின் விருப்பங்களும் செயல்களும் பல விதம். சிலருக்கு அரசியல் பிடிக்காது, சிலருக்கு சினிமா பிடிக்காது, சிலருக்கு விளையாட்டு பிடிக்காது, சிலருக்கு படிக்கப் பிடிக்காது, சிலருக்கு உழைக்க பிடிக்காது. அவ்வாறே சிலருக்கு ஜோதிடமும் பிடிக்காது. ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை, மூடநம்பிக்கைகளை முற்றிலும் தவிர் என்று இன்றும் சிலர் வாழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம் விதி.

           ஆம், ஒருவர் அரசியல் மீது கவனம் செலுத்தவும் ஜாதக அமைப்பு வேண்டும். அரசியலில் பெரும் பதவி வகுக்கவும் ஜாதக அமைப்பு வேண்டும். அரசியலைப் புறக்கணிக்கவும் ஜாதக அமைப்பு வேண்டும். ஒருவர் சினிமாவை விரும்பவும் ஜாதக அமைப்பு வேண்டும். சினிமாவில் நட்சத்திரமாகச் ஜொழிக்கவும் ஜாதக அமைப்பு வேண்டும். சினிமாவை வெறுக்கவும் ஜாதக அமைப்பு வேண்டும். இவ்வாறே ஜோதிடத்தை நம்பவும் ஜாதக அமைப்பு வேண்டும். ஜோதிடத்தில் ஆழ்ந்தப் புழமைப் பெற்று பெரும் ஜோதிட நிபுணராகத் திகழவும் ஜாதக அமைப்பு வேண்டும். ஜோதிடத்தை இகழவும் ஜாதக அமைப்பு வேண்டும்.

இகழ்வோர் இகழகட்டும் ; 

             சிலர் ஜோதிடமென்பதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லித் திரிவார்கள். ஒரு கட்டத்தில் அவருக்கு பெரும் கஷ்ட்டமும், தீர்க்க முடியாதத் துயரமும், தொடர் நஷ்டமும் ஏற்படும் போது பல கோணங்களில் அதற்குத் தீர்வு தேடி அலைவர். பிறகு எல்லாம் விதி என்று அவர்கள் வாயிலேயே சொல்லுவர். அதன் பிறகு தன் ஜாதகத்தைத் தேடி எடுத்து ஓர் சிறந்த ஜோதிடரை அணுகுவர். அப்போது அந்த ஜோதிடர் கூறிய இறந்தகால நிகழ்க்வுகளையும், தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து ஜோதிடத்தின் மகத்துவமான சக்தியை உணருவர்.

            நேரமும் காலமும் சரியச் சரிய ஒரு கட்டத்தில் ஜோதிடம் என்பது உண்மை என்பதனை மனிதன் உணர்ந்து விடுகிறான். சிலர் கடைசி வரை ஜோதிடத்தை நம்பாமலேயே இறப்பர். அது அவரவர் விதி. நாம் யாரிடமும் வாதம் கொள்ளவோ கோபம் கொள்ளவோ தேவையில்லை. ஜோதிடத்தை இகழ்வோர் இகழட்டும்.

ஜோதிடத்தின் பயன்கள் ; 

              ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்பது எதனால் என்றால்  ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ஜாதகம் இருப்பதனால் தான். ஒருவன் இந்த வாழ்க்கையில் அனுபவிக்கப் போகும் நன்மை தீமைகள், இன்ப துன்பங்கள் ஆகியவற்றை அவனுக்கு உணர்த்தி அவனை ஆற்றுப்படுத்தும் ஓர் ஆதி தெய்வம் ஜாதகம்.

              இன்று ஜோதிடக்கலையின் பங்கு மக்களின் பல்வேறு செயல்களுக்கும் பயன்பட்டு வருகின்றது. திருமணம் செய்ய, சுபகாரியம் செய்ய, வீடு வாங்க, தொழில் துவங்க, அரசியலில் நிற்க என்று மக்களின் எல்லாச் செயல்களுக்கும் ஜோதிடம் வழிகாட்டுகின்றது.

                                                                                                                                     ( தொடரும் )