மேஷம் :
மேஷ ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் துணிச்சல் மிக்கவர்கள். அதிகாரம் உடையவர்கள். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றத்துடன் சில சமயங்களில் கோப குணத்துடனும் காணப்படுவார்கள். பேச்சில் நேர்மையும் உண்மையும் இருக்கும். படிப்பில் தேர்ச்சியும் ஆடை ஆபரண விருத்தியும் இருக்கும்.
இளம் வயதில் உடல் மெலிந்தும் இளைத்தும் காணப்படும். வயது ஆக ஆக தோற்றத்தில் அழகும் பொழிவும் கூடும். இவர்கள் நீண்ட ஆயுள் பலத்துடன் சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதை பெற்று வாழ்வார்கள். பிறருக்கு அடிமையாகவோ அடிபணிந்தோ இருக்க விரும்பாதவர்கள்.
மேஷ ராசிக்கு செவ்வாய் அதிபதியாக வருவதால் மேஷ ராசிக்காரர்கள் பெரும்பாலும் சவால் நிறைந்த பணிகளில் எளிதாக இறங்குவார்கள். இராணுவம், காவல் துறை, தீயணைப்புத் துறை, விமானப்படை, கப்பல் படை, மருத்துவ துறை பேன்ற துறைகளில் மேஷ ராசிக்காரர்கள் அதிகம் காணப்படுவர்.
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேஷ ராசிக்காரர்கள் ஆவர்.
No comments:
Post a Comment