குறித்திடுக ஜாதக மென்பதவரவர் தம் வினையின்
குணங்களறிந்தயன் விதித்த கொள்கை யுளதன்றே
மறித்தமரவர் தமக்கு வரும் பல பாவகத்தின்
வகையறிந்து முன்னோர்கள் வழுதிச் சொல்லதனை
பிரித்தறிந்து சுபம் வருமென்றுள மகிழ்ச்சிப் பொங்க
பின்ன சுபம் வருதலிற்கு ப்ரீதியென கொலேன்று
நெறி தரும் சாஸ்திரத்தின் விதி சாந்தி செய்தே
நிறைந்த சுபம் பெறுவதற்கே நிகழ்த்தினர் ஜாதகமே.
ஜோத்யிடக்கலையின் தொன்மை ;
ஜோதிடக் கலை மிகவும் பழமை வாய்ந்தக் கலை. ஜோதிடத்திற்கு வானசாஸ்திரம் என்னும் மறுபெயரும் உண்டு. சங்க காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் என்னும் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட அறிய கலைகளில் ஜோதிடக்கலையும் ஒன்று. நம் அறிவியல் அறிஞர்களால் சொல்லப்பட்ட சூரியன், சூரியனைச் சுற்றியுள்ள கோள்கள் இவை யாவும் தனி மனிதனின் இயக்கத்திற்கும் உதவுகின்றன என்பதனை சித்தர்கள் முன்கூட்டியே நிரூபித்துக்காட்டினர்.
ஒரு மனித உயிரின் பிறப்பு, இறப்பு, வாழ்நாளின் இடையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகள் இவை யாவும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை. மனித உயிர்களின் பூர்வபுனரெதிர் ஜென்மங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் என்று சித்தர்களும் பழம்பெரும் ஜோதிடர்களும் கூறியுள்ளனர். இதற்காக ஜோதிடக்கலையைப் பயன்படுத்தினர். கம்பராமாயணம், மகாபாரதம், மணிமேகலை என்னும் தொன்மை வாய்ந்த புராணங்களின் வாயிலாகவும் ஜோதிடம் சம்பந்தமான செய்திகளைப் பார்க்க முடிகின்றது. எனவே ஜோதிடம் என்பது மிகவும் தொன்மை வாய்ந்தக் கலை என்பதை உணர முடிகின்றது.
விதியின் பங்கு ;
மனிதன் செய்கின்ற எந்த ஒரு செயல்களிலும் விதியின் பங்கு இருக்கின்றது. மனது எதற்காக ஆசைப்படுகிறதோ, எதை அடைய ஏங்குகிறதோ, எதைச் செய்யத் துணிகிறதோ என்று பார்க்கும் பொழுது மனதில் ஒர் விருப்பம் எழுகிறது என்றால் அது மனிதனின் மனதைச் சுற்றியுள்ள நவகிரகங்களால் ஏற்படுத்தப்படும் தூண்டல் ஆகும். நாம் ஒரு செயலைச் செய்கின்றோமானால் அச்செயல் நன்மையில் முடியும் அல்லது தீமையில் முடியும். நேரம் நல்லதாக இருந்தால் அச்செயலும் நன்மையில் முடியும். நேரம் தீயதாக இருந்தால் அச்செயலும் தீமையில் முடியும்.
எனவே மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் இன்பம், துன்பம் இரண்டிலுமே விதியின் பங்கு இருக்கிறது.
விதியை வெல்ல முடியுமா ?
"விதியை மதியால் வெல்லலாம்" "குரைக்கின்ற நாய் கடிக்காது" "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" முதலியன யாவும் நம் சான்றோர்களால் சொல்லப்பட்ட பழமொழி என்னும் தொகுப்பில் இடம் பெருவனவாகும்.
விதியை மதியால் வெல்லலாம் என்பது ஜோதிட ரீதியாக விதி என்பது ஜாதகக் கட்டத்தில் இடம் பெரும் லக்கினம் மற்றும் அதன் அதிபதி ஆகியவற்றைக் குறிக்கும். மதி என்பது ஜாதகக்கட்டதில் இடம் பெரும் ராசி மற்றும் அதன் அதிபதியின் நிலையைக் குறிக்கும். இவற்றுள் விதி என்னும் லக்கினம் பாதிக்கப்பட்டிருந்தாலும் ராசி என்னும் மதி நல்ல நிலையில் இருந்தால் அந்த ஜாதகன் மதியால் விதியை வெல்லலாம் என்னும் அர்த்தத்தைச் சாரும்.
ஒருவருக்கு விதிப்படி விதிக்கப்பட்டனவற்றை எவராலும் மாற்ற முடியாது. மாற்றி எழுதவும் முடியாது. ஒரு உயிர் பிறக்கும் போது அந்த நாள், நேரம், ரேகை ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஜாதகத்தின் ரீதியாக உள்ளவை உள்ளபடி நடக்கும். இதுவே ஜோதிடத்தின் மகத்துவம் ஆகும்.
பரிகாரம், பூஜைகள் , மோதிரக்கல் அணிதல், சாந்தி செய்யுதல், எந்திர வழிபாடு, பெயர் மாற்றுதல் இவை எவற்றாலும் விதியை மாற்ற முடியாது. ஆன்மீக வழிபாடும், இறை பக்தியும் நமக்கு நம் ஜாதக ரீதியாக ஏற்படும் தீமைகளைக் குறைக்கும். மனதில் ஒரு நம்பிக்கையும், ஆருதலும் உருவாக வழி வகுக்கும். மற்றபடி விதியை எந்த ஒரு சக்தியாலும் வெல்ல முடியாது மாற்ற முடியாது தோற்கடிக்க முடியாது.
மேலும் நீ செய்த தானமும், தர்மமும் இவ்வுலகில் இருக்குமாயின் விதியின் மரணத்தைக்கூட மறுபரிசீலனைச் செய்ய வைக்கலாம்.
ஜோதிடத்தை இகழ்வோர் ;
மனிதர்களின் விருப்பங்களும் செயல்களும் பல விதம். சிலருக்கு அரசியல் பிடிக்காது, சிலருக்கு சினிமா பிடிக்காது, சிலருக்கு விளையாட்டு பிடிக்காது, சிலருக்கு படிக்கப் பிடிக்காது, சிலருக்கு உழைக்க பிடிக்காது. அவ்வாறே சிலருக்கு ஜோதிடமும் பிடிக்காது. ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை, மூடநம்பிக்கைகளை முற்றிலும் தவிர் என்று இன்றும் சிலர் வாழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம் விதி.
ஆம், ஒருவர் அரசியல் மீது கவனம் செலுத்தவும் ஜாதக அமைப்பு வேண்டும். அரசியலில் பெரும் பதவி வகுக்கவும் ஜாதக அமைப்பு வேண்டும். அரசியலைப் புறக்கணிக்கவும் ஜாதக அமைப்பு வேண்டும். ஒருவர் சினிமாவை விரும்பவும் ஜாதக அமைப்பு வேண்டும். சினிமாவில் நட்சத்திரமாகச் ஜொழிக்கவும் ஜாதக அமைப்பு வேண்டும். சினிமாவை வெறுக்கவும் ஜாதக அமைப்பு வேண்டும். இவ்வாறே ஜோதிடத்தை நம்பவும் ஜாதக அமைப்பு வேண்டும். ஜோதிடத்தில் ஆழ்ந்தப் புழமைப் பெற்று பெரும் ஜோதிட நிபுணராகத் திகழவும் ஜாதக அமைப்பு வேண்டும். ஜோதிடத்தை இகழவும் ஜாதக அமைப்பு வேண்டும்.
இகழ்வோர் இகழகட்டும் ;
சிலர் ஜோதிடமென்பதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லித் திரிவார்கள். ஒரு கட்டத்தில் அவருக்கு பெரும் கஷ்ட்டமும், தீர்க்க முடியாதத் துயரமும், தொடர் நஷ்டமும் ஏற்படும் போது பல கோணங்களில் அதற்குத் தீர்வு தேடி அலைவர். பிறகு எல்லாம் விதி என்று அவர்கள் வாயிலேயே சொல்லுவர். அதன் பிறகு தன் ஜாதகத்தைத் தேடி எடுத்து ஓர் சிறந்த ஜோதிடரை அணுகுவர். அப்போது அந்த ஜோதிடர் கூறிய இறந்தகால நிகழ்க்வுகளையும், தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து ஜோதிடத்தின் மகத்துவமான சக்தியை உணருவர்.
நேரமும் காலமும் சரியச் சரிய ஒரு கட்டத்தில் ஜோதிடம் என்பது உண்மை என்பதனை மனிதன் உணர்ந்து விடுகிறான். சிலர் கடைசி வரை ஜோதிடத்தை நம்பாமலேயே இறப்பர். அது அவரவர் விதி. நாம் யாரிடமும் வாதம் கொள்ளவோ கோபம் கொள்ளவோ தேவையில்லை. ஜோதிடத்தை இகழ்வோர் இகழட்டும்.
ஜோதிடத்தின் பயன்கள் ;
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்பது எதனால் என்றால் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ஜாதகம் இருப்பதனால் தான். ஒருவன் இந்த வாழ்க்கையில் அனுபவிக்கப் போகும் நன்மை தீமைகள், இன்ப துன்பங்கள் ஆகியவற்றை அவனுக்கு உணர்த்தி அவனை ஆற்றுப்படுத்தும் ஓர் ஆதி தெய்வம் ஜாதகம்.
இன்று ஜோதிடக்கலையின் பங்கு மக்களின் பல்வேறு செயல்களுக்கும் பயன்பட்டு வருகின்றது. திருமணம் செய்ய, சுபகாரியம் செய்ய, வீடு வாங்க, தொழில் துவங்க, அரசியலில் நிற்க என்று மக்களின் எல்லாச் செயல்களுக்கும் ஜோதிடம் வழிகாட்டுகின்றது.
( தொடரும் )
Raasi,natchathiyam onna iruntha nallatha kettatha?enaku viruchika raasi viruchiga laknam.
ReplyDelete