அறிவியலும் ஜோதிடமும் ;
அறிவியல் வல்லுநர்களால் இன்று மக்களுக்குப் பயனுள்ள பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளும் பயன்பாட்டுச் சாதனங்களும் பரவி வருகின்றன. அதற்கு ஏற்றாற்போல் ஜோதிட வல்லுநர்களும் ஜோதிடக் கலையையும் நவீன உலகிற்கு ஏற்றார்போல் ஆராய்ந்து வருகின்றனர்.
அறிவியல் அறிஞர்கள் கணினியைக் கண்டறிந்தனர் . ஜோதிட வல்லுநர்கள் கணினிக்கு உரிய கிரகம் சுக்கிரன் என்பதனைக் கண்டறிந்தனர். மருத்துவர்கள் அறுவை சிகிட்சை முறையைக் கண்டறிந்தனர். ஜோதிட அறிஞர்கள் அறுவை சிகிட்சைக்கு உரிய கிரகம் செவ்வாய் என்பதனைக் கண்டறிந்தனர்.
இவ்வாறு ஜோதிடம் இவ்வுலகிற்குத் தகுந்தார் போல் மாறிக்கொண்டு வருகிறது.
ஜோதிடத்தின் வளர்ச்சி;
சித்தர்களால் கண்டறியப்பட்ட ஜோதிடக்கலை இன்று பெரும் வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. உலகம் முழுவதும் ஜோதிடம் போற்றப்படுவதனை நம்மால் காண முடிகின்றது. தமிழகத்தில் பல்வேறு பல ஜோதிடம் கற்பிக்கபப் படுகின்றது. குறிப்பாக அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்கள் ஜோதிடம் சார்ந்த படிப்புகளை வழங்கி பட்டங்களை வழங்குகிறது.
தெய்வீகக்கலை ;
மானிடர்களின் துயர் நீக்கி, வழிகாட்டி, காலக்கண்ணாடியாக விளங்கும் தெய்வீகக் கலையாக ஜோதிடக்கலை போற்றப்படுகிறது. ஜோதிடம் என்னும் இறை தொண்டினை செய்து ஜீவனம் நடத்திடும் ஜோதிடர்களின் பங்கு இன்றியமையாதது. ஜோதிடத்தை தாண்டியும் ஒரு சக்தி இருக்கிறது.
இறைவன் நமது பூர்வ ஜென்ம பயன்கள் அடிப்படையில் நமது விதியை நிர்ணயித்துள்ளான். எதுவும் சில காலம். அவனின்றி ஓர் அணுவும் அசையாது.
No comments:
Post a Comment