கொரோனா வைரஸ் :
உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக அனைத்து ஊர்களிலும் கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டு வருகிறார்கள்.
கூனான்டியூர் பஞ்சாயத்து :
அரசு உத்தரவினை தொடர்ந்து மேச்சேரி ஒன்றியம் கூனான்டியூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி. விஜயா ராஜாகண்ணு அவர்களின். ஆணைக்கினங்க கூனான்டியூர் பஞ்சாயத்து முழுவதும் கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
வார்டு உறப்பினர்கள் :
கூனான்டியூர் பஞ்சாயத்து உபத் தலைவர் திருமதி. V. சத்யா மற்றும் வார்டு உறுப்பனர்கள் திரு. மாது, திரு. சாம்பசிவம், திருமதி. கோமதி உள்ளிட்ட 9 வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்போடு கூனான்டியூர் பஞ்சாயத்து முழுவதும் கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
இதில் முன்னாள் கூனான்டியூர் பஞ்சாயத்து தலைவரும் தற்போதைய கூனான்டியூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி. விஜயா ராஜா கண்ணு அவர்களின் கணவருமாகிய திரு. ராஜா கண்ணு அவர்கள் மற்றும் கூனான்டியூர் பஞ்சாயத்து செயலாளர் திரு. விஜயகுமார் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊர் சமூக சேவகர்கள் :
மேலும் கூனான்டியூர் பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களுடன் ஊர் சமூக சேவகர்கள் திரு. பிரகாஷ், திரு. செல்வராஜ், திரு. குமார், திரு. கோவிந்தன், திரு. வினுச்சக்கரவர்த்தி மற்றும் திரைப்பட இயக்குனர் திரு. சாம்ராஜ் ஆகியோரும் கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.