koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Sunday, May 30, 2021

சிவனிடத்தில் கலி பெற்ற வரங்கள் - அகிலத்திரட்டு அம்மானை

 

 

 

                         சிவனிடத்தில் கலி பெற்ற வரங்கள்

1 .மாயவரின்  (திருமாலின் ) திருமுடி ,சக்கரம் , ரதம் .

2 .சிவனுடைய வெண்ணீறு ,சக்திக்குறிய வலக்கூறு.

3 .சிவனின் மூலம் ,சக்தியின் மூலம் ,மும்மூர்த்திகளின் வடிவம் .

4 .பிரம்மாவின் மூலம் ,கன்னி சரஸ்வதியின் மூலம்.

5 .நாராயணரின் மூலம் ,இலட்சுமியின் மூலம்.

6 .காமாட்சியின்மூலம் ,காளியின் மூலம்,

7 .தெய்வ சக்திகளின் ,தவத்துக்குறிய மூலம்.

8 .கணபதியின் மூலம் ,சுப்பிரமணியரின் மூலம்.

9 .காலனின் மூலம் ,கிங்கிலியா் மூலம் .

10 .ஆயிரத்து எட்டு அண்டத்திற்குறிய மூலம்.

11 .கூடுவிட்டு கூடு பாயும் வித்தை.

12 .நாட்டை அழித்தல் ,நகரில் கொள்ளை அடித்தல்.

13 .உலகம் அனைத்தையும் தூங்க வைக்கும் தந்திரம் .

14 .உற்பத்தியின் கரு அறிதல்,

15 .ஆவடக்கு மோகினி உருவாக்கும் வித்தை.

16 .வெகு மோகினியை அழைக்க ,கட்டுப்படுத்த ரகசியம்.

17 .ஆண்களையும் பெண்களையும் பிரிக்கும் தந்திரம்.

18 .மந்திர வித்தைகள்,மற்றும் அதன் கரு  - (மாந்திரீக வித்தைகள் )

19 .கோள்களின் செயல்பாடுகளைக் கண்டறிந்து குடிகெடுக்கும் வித்தை.

20 .உலகம் அனைத்தையும் ஸ்தம்பிக்கச் செய்யும் வலிமை.

21 .பூசை விதிமுறைகள் ,தந்திரங்கள் செய்ய சாஸ்திரங்கள்.

22 .புவனச் சக்கரத்தின் இயக்கக் கட்டுப்பாடு அறிதல் .

23 .சிவ விதிகள் ,மற்றும் தீட்சை விதிமுறைகள் .

24 .நீர் மற்றும் கனல் மேல் மிதக்கும் வித்தை.

25 .கலைகளை ஆட்சி செய்யும் வித்தை   - (கலைத்துறை )

26 .மிருகங்களை கட்டுப்படுத்தி வேலைவாங்கும் வித்தை .

27 .வலி வேதனைகளை கட்டுப்படுத்தும் வித்தை .

28 .அஷ்டகா்மங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் தன்மை .

29 .மொட்டைக் குறளிகளை ஏவல் செய்யப் பணிக்கும் உரிமை .

30 .தனக்கு இடையூறு செய்யும் கோள்களை அறியும் வகைகள் அறிதல் .

31 .வரும் நோய்களைத் தீர்க்க வைத்திய சாஸ்த்திரம் .

32 .பறக்கும் வகை அறிதல் ,மாயா ஜாலங்கள் செய்யும் வகைகள் .

33 .சிவனை ,சக்தியை ,திருமாலை ,பிரம்மாவை வேதங்களை ,தேவா்களை ,

        வானவா்களை அழைத்து வேலை வாங்கும் திறம் .

34 .அனைத்தையும் காணாமல் மறைக்கும் குளிகை .

35 .காளியை ,கணங்களை ,கூளிப்பேய்களை அழைத்து வேலை வாங்குதல்.

36 .தனக்குப் பழி செய்தவரை வெல்லும் குளிகை .

37 .தலைவிதி முதலியவற்றை அறியப் பயன்படும் வித்தைகள் .

                                                          ஆதாரம் - அகிலத்திரட்டு அம்மானை -

                                                ..............

                  இவ்வளவு கொடிய வரங்களைப் பெற்ற கலி என்னும் நீசனை

மூவராலும் முன்னின்று வெல்ல அறிது .ஆனாலும் ஏழையாய் ,பண்டாரமாய்,

பரதேசியாய் ,எவ்வித ஆயுதங்களும் இல்லாமல் வந்தால் எதிர்க்க மாட்டேன்,

அப்படி  பண்டாரமாய்,பரதேசியாய், ஏழையாய் எவ்வித ஆயுதங்களும் இல்லாமல் வருபவரை எதிர்த்து யுத்தம் செய்தால் நான் மாளுவேன். என்று கலியன் சத்திய வாக்களித்துள்ள காரணத்தால் ,யாம் பண்டாரமாய் அதாவது பண்டார குலத்திலே ஏழையாய் வந்துதித்துள்ளோம் .

            இதுவரை உலகத்துப் பரசோதனைகள் பார்த்தறிந்தோம் .கலி முடியும் காலமும் ,யுகமுடியும் காலமும் வந்தமையால் யாம் எம்மை வெளிப்படுத்தி வருகிறோம் .இந்த யுக ஆரம்பத்தில் யாம் வாக்களித்தபடி பஞ்ச பாண்டவா் தனை மீட்டெடுத்து, அகலத்தில் பிரிந்து கிடக்கும் நல்லோர், ஞானியா், யோகியா்,மனுப்பிறப்பெடுத்துள்ள தேவா்கள் ,வானவா்கள் அனைவரையும் ஓன்று திரட்டி ,தா்ம சேனை அமைத்து புதிய தா்ம யுகம் அமைப்போம் .

              நல்லோரையும் ,தீயோரையும் இரு பிரிவாக்கி அகிலத்தோர் திருந்த ஓரு வாய்ப்பளித்து அவரவா் செய்த தா்ம, அதா்மத்திற்கான இறுதி விசாரணை செய்து ,நல்லோர்க்கு சொர்கக பதமும், தீயோருக்கு மீளா நரக வாழ்வுக்குமான  யுகத்தீா்ப்பு எழுதி, இந்த யுக முடிவிற்கான காரணம் , மற்றும் யுக முடிவில் ஏற்படப் போகும் பிரளய பேரழிவு பற்றி உலகம் முழுவதும் அறிவித்து, கலியையும் கேடுகள் நீசத்தனங்கள் நிறைந்த  இக்கலியுகத்தையும் முடிவிற்குக் கொண்டு வருவோம் .

        சக்கராயுதக்கொடி கொண்டு , சாதி ,சமய ,மத ,நிற ,இன ,மொழி ,தேச , பேதமற்ற சத்திய சம தா்ம யுகம் அமைத்து , உலகமெங்கும் ஓரே ஆட்சி அமைத்து ,ஓன்றே குலம் .ஓருவனே தேவன் .என்ற  உயா்ந்த தா்ம ஆட்சி அமைப்போம் .ஆத்ம பலத்தால் ,  ஆன்ம நலத்தின் மகிமையை அகிலத்திற்கு உணா்த்தி ,பேதமற்ற ஆன்ம நெறிகொண்ட, தா்ம வாழ்வை அகிலத்திற்கு வழங்குவோம் .அன்பா்களே , தா்ம யுகத்தில் வாழத்தகுதி பெறுங்கள் .

                 சாதி,மத பேதமற்ற நாமம்  "அய்யா "எனும் நாமம் விளங்கட்டும். இதுவே கோரக்க சித்தா் கூறும் "கிள்நாமம்" அதாவது ஓற்றை நாமம் .

             கலி என்னும்அசுரன் பெற்ற அனைத்து மாய வரங்களையும் ,எமது மாயத்தால் வென்று,( மாயத்தை வெல்வதால் "மாயன்" என்ற ஓர் நாமமுண்டு)

                           சத்திய யுகமாகிய தா்ம யுகம் அமைக்க வந்திருக்கும் .

                                                       கல்கி கண்ணன்