இயல் – 2
I ராசி &
லக்கினங்கள் 12
|
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒரு உயிரின் வாழ்நாள் நிகழ்வுகளை
விவரிக்க 12 ராசிகள் மூலதனமாகும். ராசிகள் கொண்டே மற்ற அனைத்து ஜோதிட விவரங்களும்
கணிக்கப்படுகின்றன. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் 9 கிரகங்கள் அதிபதியாக
வருகின்றனர். ராசிக்கு அதிபதி என்பவர் அந்த ராசி என்னும் வீட்டிற்கு சொந்தக்காரர்
ஆவார். அந்தந்த ராசிக்கு அதிபர் தத்தம் ராசியில் ஆட்சி பெற்றிருப்பார். அந்த
விபரங்கள் பின்வரும் அட்டவனையில் இடம்பெறுகிறது.
12 ராசிகள்
வானமண்டலத்து முதல் ராசியான மேஷத்திற்கும் அதற்கு கீழ் 8 – வது
ராசியான விருச்சிகத்திற்கும் அதிபதி செவ்வாய் ஆவார். ரிஷபம், துலாம் வீட்டிற்கு
அதிபதி சுக்கிரன் ஆவார். அதே போன்று மிதுனம், கன்னிக்கு புதனும் தனுசு,
மீனத்திற்கு குருவும் மகரம், கும்பத்திற்கு சனியும் அதிபதிகள் ஆவார. மேற்கண்ட
கிரகங்களுக்கு இரண்டிரண்டு வீடுகள் சொந்தமாகும்.
ஆனால் சூரியன், சந்திரன்
எனும் இரண்டு கோள்களுக்கு மட்டும் ஒவ்வொரு வீடே சொந்தமாகும். சூயியனுக்கு
சிம்மமும் சந்திரனுக்கு கடகமும் சொந்த வீடுகள் ஆகும்.
ராசிகளுக்குரிய தன்மைகள்
12 ராசிகளுக்கும் வெவ்வேறு
குணாதிசயங்கள் உள்ளன அவற்றை சுருக்கமாக பார்ப்போம்.
மேஷம்
இது ஆண் தன்மை ராசியாகும். நெருப்பு – ஞானம் – பூமி – நிலம் – சகோதரம்
– ரத்தம் – கம்பீரம் – நியாய தர்மம் – வீரம் – திட உடல் – வல்லமை – காவல் – அரசு
ஆதரவு போன்ற குணாதிசயங்களை கொண்ட ராசி மேஷராசி ஆகும்.
ரிஷபம்
பெண் தன்மை – நிலம் –
அன்பு – அமைதி – கலை – வலது கண் – அழகு – வாகனம் – கணினி – செல் போன் – நடிகன் –
பெண்களை கவருதல் – சுத்தபத்தம் – காதல் போன்ற காரத்துவங்களை கொண்டது ரிஷபம் ஆகும்.
மிதுனம்
ஆண் பெண் தன்மை – அறிவு –
வித்தை – கல்வி – வாக்கு – கதை – கவிதை – நகைச்சுவை – நரம்பு – இசை – ஆடை –
ஜோதிடம் – கணக்கு – பேச்சு போன்ற குணங்களைக் கொண்டது.
கடகம்
பெண் தன்மை – குளிர்ச்சி –
நீர் – கற்பனை – அழகு – இடது கண் – உணவு – காவியம் – எழுத்து – கீர்த்தி – தாய் –
பெண் சிநேகிதம் போன்ற தன்மைகளை கொண்ட ராசி கடகம்.
சிம்மம்
ஆண் தன்மை - சந்ததி –
புகழ் – தந்தை – வெப்பம் – கோபம் – தனித்திருத்தல் – தலைவலி – நாயகன் – அரசு –
அரசியல் போன்ற குணாதிசயங்கள் உடைய ராசி சிம்மம்.
கன்னி
அன்பு – அறிவு – திறமை –
சாமார்த்தியம் – கல்வி – வியாபாரம் – ஜீவனம் – சுகம் போன்ற தன்மைகளை உடையது.
துலாம்
உணர்ச்சி – நியாயம் –
பெரியோர் ஆதரவு – புத்தி – கலை – காதல் – சாதிக்கும் திறமை – சந்ததி போன்ற
தன்மைகளை உடையது.
விருச்சிகம்
ரத்தம் – சகோதரம் – வீரம் –
கோபம் – சுறுசுறுப்பு – முரட்டுத்தனம் – காவல் – இராணுவம் – நிலம் – அதிகாரம்
போன்ற தன்மைகளை உடைய ராசி விருச்சிகம்.
தனுசு
பக்தி – ஆன்மிகம் – ஞானம் – ஆசான் – போதனை –
சிநேகிதம் – தைரியம் – நேர்மை – ஒழுக்கம் போன்ற தன்மைகளை உடைய ராசி தனுசு.
மகரம்
கடின உழைப்பு – இரும்பு –
ஏழ்மை – நீதி நேர்மை – தர்மம் – தாமதம் – வெற்றி – கருப்பு போன்ற தன்மைகளை உடைய
ராசி.
கும்பம்
பாட்டன் – சந்ததி – நீதி –
தைரியம் – ஒழுக்கம் – செல்வாக்கு – இறை அருள் – அந்தஸ்து போன்ற காரத்துவங்கள்
கும்பத்துள் அடங்கும்.
மீனம்
நீதி நேர்மை – அன்பு –
சத்தியம் – ஆசான் – கல்வி – மேதை – உயர்ந்த பதவி – தலைவர் – நகை – ஆடை – குழந்தை
போன்ற குணங்கள் மீனராசிக்கு பொருந்தும்.
********************* **************************** ************************* ************************