கொரோனா:
கொரோனா என்னும் வைரஸ் மனித உடலுக்குள் சென்று பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ஓர் கொடிய உயிர்கொல்லி நோய் என கூறப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான நோய்க்கிருமி என்பதனால் இதனைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
144 தடை :
இந்நோய் ஒருவர் மூலம் மற்றொரு வருக்கு பரவும் தனமை உடையது என்பதனால் அரசு பல தடுப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதுடன் மருத்துவ உதவிகளையும் விரைந்து செய்து வருகிறது. அத்துடன் 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
கூனான்டியூர் பஞ்சாயத்து :
அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கை க்காக 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் இந்நோய் குறித்த விழிப்புணர்வு குரல் ஒலி மற்றும் துண்டு சீட்டு பிரச்சாரம் மேற்கொள்ள உத்தரவிட்டத்தின் பேரில் கூனான்டியூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி. A. விஜயா ராஜாகண்ணு அவர்கள் இன்று (05.04.2020) காலை கொரோனா விழிப்புணர்வு குரல் ஒலி மற்றும் துண்டு சீட்டு பிரச்சாரம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
தலைவர் உரை:
"கொரோனா என்னும் கொடிய நோய்க்கிருமிக்கு உகந்த மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இனி இந்நோய் வராமல் தடுக்கும் நடவடிக்கையில் அரசு செயல்பட்டு வருகின்றது. எனவே உலக மக்கள் அனைவரும் அரசுக்கு உரிய ஒத்துழைப்பு தந்துதவும் வகையில் நம் கூனான்டீயூர் ஊராட்சி மக்களுக்கும் தக்க ஒத்துழைப்பு தந்து இக்கொடிய நோய்க்கிருமியை அழித்து வாழ்வில் வளம் பெற கூனான்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட என் மக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்."
என்று தலைவர் திருமதி A. விஜயா ராஜாகண்ணு அவர்கள் கூறினார்.