koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Tuesday, February 18, 2020

குப்பை பெறுக்குபவர் (Sweeper) சம்பளத்தை வழங்கச் செய்த ஊராட்சி மன்றத் தலைவர்

கூனான்டியூர் ஊராட்சி - கீரைக்காரனூர்:


       கூனான்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீரைக்காரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செல்லம்மாள் பரமசிவம் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக குப்பை பெறுக்குபவர் (Sweeper) பணியை மேற்கொண்டு வருகிறார்.

           இந்நிலையில் அவருக்கு கடந்த 10 மாதங்களாக சம்பளம் வழங்காதது குறித்து தற்போது பதவியேற்ற நம் தலைவர் திருமதி. A. விஜயா ராஜாகண்ணு அவர்கள் கவனத்திற்கு வந்தது.

சம்பளம் கிடைக்க உடனடி ஏற்பாடு :


       அதனைத் தொடந்து தலைவர் திருமதி. விஜயா ராஜாகண்ணு பாதிக்கப்பட்ட செல்லம்மாள் பரமசிவதிற்கு இருமாத சம்பளத்தை வழங்கி மேலும் வழங்கப்படாத மாதங்களுக்குரிய சம்பளத்தை உடனடியாக வழங்க உத்தரவிட்டார். 

செல்லம்மாள் பரமசிவம் :

      இது குறித்து செல்லம்மாள் பரமசிவம் கூறுகையில் "குழந்தைகள் இன்றி ஆதரவற்ற மிகவும் ஏழ்மையில் இருக்கும் எங்களுக்கு கடந்த 10 மாதங்களாக வராமலிருந்த சம்பள பாக்கி கிடைக்க உதவிய தலைவர் அம்மா அவர்களுக்கு மிகவும் நன்றி. மேலும் குடியிருக்க வீடும் இல்லா எங்களுக்கு விரைவில் வீடு வழங்குவார் என்று நம்புகிறோம்" என்று மகிழ்ச்சியாகக் கூறினார்.

Saturday, February 8, 2020

ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர்

மேச்சேரி ஒன்றியம் : 

          சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகள் 17 ஆகும். இப்பஞ்சாயத்துக்களுக்கான கூட்டமைப்புத் தேர்தல் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவராக திருமதி. விஜயா ராஜாகண்ணு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஜனவரி 26 கிராம சபைக் கூட்டம்

கிராம சபைக் கூட்டம் : 

        
  குடியரசு தின விழாவை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் 26.01.2020 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதனடிப்படையில் சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் கூனாண்டியூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி . A. விஜயா ராஜாகண்ணு தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

தீர்மானங்கள் நிறைவேற்றம் : 
       


            இக்கூட்டத்தில் திருமதி விஜயா ராஜாகண்ணு (கூனாண்டியூர் ஊராட்சி மன்றத் தலைவர் & கிராம சபைக்கூட்டத்தின் தலைவர்), ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்ள, நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் திறலாகக் கலந்து கொண்டனர்.

         இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற வளர்ச்சி குறித்து மக்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு பல எண்ணற்ற நல்ல தீர்மானங்கள் மக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.

மனுக்கள் :




                  கூட்டத்தின் நிறைவாக ஊராட்சிக்கு உட்பட்ட மக்களது தேவைகள் குறித்து மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பெற்ற கிராம சபைக் கூட்டத்தின் தலைவர் திருமதி விஜயா ராஜாகண்ணு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு குறைகள் தீர்க்கப்படும் என்று கூறினார்.