koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Saturday, October 31, 2020

விறகடுப்பு - சிறுகதை (ஆசிரியர் சாம்ராஜ்)

 விறகடுப்பு - சிறுகதை:

மாலை 6 மணி வேளை, தேவகி விறகடுப்பில் பாத்திரத்தை வைத்துவிட்டு எதையோ தீவீரமாக தேடிக்கொண்டிருந்தாள். அருகாமையில் உள்ள வயக்காட்டில் தேவகியின் 4 வயது மகனான கபிலனும் நாய் குட்டியும் ஓடித்திறிந்தனர். கபிலனி சட்டை பாக்கெட்டில் இருந்த கைப்பேசி ஒலிக்க கபிலன் அதனை எடுத்து 'ஹலோ அப்பாவா? அப்பா தீபாவளிக்கு எனக்கு நிறைய பட்டாசு, ஓரியோ பிஸ்கட்டு எல்லாம் வாங்கிட்டு வா. இல்லனா நான் உன்கூட பேசவே மாட்டேன்' என பேசிக்கொண்டிருக்கும் போது தேவகி வந்து 'டே கபிலா, இங்க குடுடா அந்த நெருப்பு பெட்டியை (தீப்பெட்டி) நான் எங்கெல்லாம் தேடுறது. அடுப்பு பற்ற வைக்கணும்' என்றபடி கபிலன் காதில் வைத்து பேசிக்கொண்டிருந்த தீப்பெட்டியை பிடுங்கிச்செல்ல, கபிலன் கைபேசியாக கற்பனை செய்து வைத்திருந்த தீப்பெட்டியை அம்மாவிடம் கொடுத்துவிட்டு தன் காலில் பின்னித்திறிந்த நாய்க்குட்டியுடன் பேசத் தொடங்கினான்.

 

திருப்பூர் மாவட்டத்தின் பெரிய வட்டம் தாராபுரம் வட்டம். தாராபுரம் அருகே உள்ள பசுமை நிறைந்த கிராமத்தில் உள்ள வயக்காடு ஒன்றில் இரவு 7.30 மணி அளவில் ஒரு இருசக்கர வாகனம் தனியாக நின்றிருந்தது. அருகே புல்வெளியில் அமர்ந்தபடி ராமனும் வனிதாவும் பேசிக்கொண்டிந்தனர். வானத்தில் தோன்றிய தேய்பிறை சந்திரனைப் பார்த்த வனிதா “இன்னும் 4 தினங்களுக்குப் பிறகு வரும் 3 நாட்கள் நாம் இரவில் சந்திக்க முடியாது.” என்று கூற நிலவைப் பார்த்த ராமன் “ஏன் அமாவாசை இருட்டென்றால் உனக்கு அவ்வளவு பயமா?” என்று கேட்க, வனிதா “இருட்டு பயம் அல்ல பிரிவு கவலை. அமாவாசை அன்று தீபாவளி. அன்று நீங்கள் உங்கள் வீட்டிற்கு சென்றுவிடுவீர்கள்.” என வனிதா முகத்தில் ஒரு வாட்டம் தெரிய வனிதாவிற்கு ஒரு போன் அழைப்பு வருவது. போனில் வனிதாவின் மூத்த மகளான நித்யாவும் (10 வயது) இளைய மகள் ஸ்ரீஜாவும் (வயது 8) ஓபன் ஸ்பீக்கரில் தீபாவளி புத்தாடை வாங்கிவிட்டாயா என கேட்பது. வனிதா குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கிவிட்டதைக் கூறிவிட்டு போனை வைப்பது.

 

இரவு 8 மணி. நித்யாவிற்கும் ஸ்ரீஜாவிற்கும் தீபாவளி நோன்பு குறித்து பாட்டி விவரிப்பது “நம்ம ஊர்ல அந்த காலத்துல இருந்தே தீபாவளி மற்றும் அமாவாசை நோன்பு கொண்டாடப்பட்டு வருகின்றது. குடும்ப பெண்கள் அதிகாலையிலேயே வீட்டை சுத்தம் செய்து குளித்து முடித்து விரதத்தை தொடங்குவார்கள். மாலையில் அதிரசம் தயார் செய்து அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமிக்குப் படைத்து வழிபடுவார்கள். அதன் பின் வீட்டில் சாமிக்கு படையலிட்டு விரதத்தை முடிப்பார்கள். அது வரை உணவு எதுவும் சாப்பிட மாட்டார்கள். மேலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். சாமிக்கு படையலிட அதிரசம் தயார் செய்வதற்கு என்று புதிய விறகு அடுப்பு, சட்டி, பானை என அனைத்தும் புதிதாகவே பயன்படுத்துவார்கள்.    இப்படி விரதம் இருந்தால் குடும்பத்திற்கு சகல நன்மைகளும் கிடைக்கும்” என பாட்டி சொல்லி முடித்தாள் பாட்டி நோன்பு விவரம் கூறத் தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்ரீஜா தூங்கிவிட்டாள். நித்யாவோ தன் கையில் இருந்த செல்போனில் ஏதோ தடவிகொண்டிருந்தாள்.

குளிரில் கிழிந்த கம்பளியை தன் உடம்பில் போத்தியபடி குடிசை வீட்டு கூரை ஓட்டை வழியே நிலவைப் பார்த்துக் கொண்டிருந்த கபிலன் திடீர் என எழுந்து வீட்டிற்கு வெளியே வந்து வானத்தைப்பார்த்து தன் அமாவிடம் நிலவு எங்கே என்று கேட்டான். தேவகி, “நிலவை மேகம் மூடிக்கொண்டது. கொஞ்ச நேரம் ஆனதும் நிலவு மீண்டும் தெரியும். நீ படுத்து தூங்கு” என்று சொல்லியபடி பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தாள். நிலாவை தேடியபடி ஆவலுடன் இருந்த கபிலனுக்கு சிறிது நேரத்தில் கருமேகம் விலகி நிலா தெரிந்தது. கபிலன் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று உறங்கினான்.

 

இன்று தீபாவளி ஊர் தெருவெங்கும் விழாக்கோலம் கபிலன் வழித்தடத்தில் வைத்தக்கண் மாறாமல் தன் தந்தை இன்றாவது  வருவார். என ஆவலுடன் பார்த்துகொண்டிருக்க. உடுமலைப்பேட்டை தங்கும் விடுதி ஒன்றில் இனிமையான பாடல் ஒன்று ஒளித்துக்கொண்டிருக்க ராமனும் வனிதாவும் இணைந்து மது அருந்தியபடி ரசித்திருந்தனர்.

 

மனைவி தேவகி மகன் கபிலனை விட்டு பிரிந்து கணவனை இழந்த வனிதாவினால் ஈர்க்கப்பட்டு ஊரைவிட்டுச்சென்ற இராமன் இனி வரமாட்டான் என்பதை நன்கு அறிந்த தேவகி ரேசன் அரிசியை கொண்டு தோசை சமைத்துக்கொண்டிருக்க. ஊர் எங்கும் பட்டாசு வண்ணமாக இருந்தது. சோகமாக அம்மா அருகில் சென்று அமர்ந்த கபிலன், விறகடுப்பு திட்டில் இருந்த தீப்பெட்டியை எடுத்து திறந்து பார்த்தான். அதில் மொத்தம் 12 தீக்குச்சிகள் இருந்தன. அதிலுள்ள 12 தீக்குச்சிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து தீப்பெட்டியில் உறசி பற்ற வைத்து அதில் வெளிவந்த நெருப்பை பார்த்து கையில் மத்தாப்பு போன்று சுத்தியபடு பூமிக்கும் வானுக்கும் குதித்து சிரித்து மகிழ்ந்தான். கபிலனில் முகத்தில் சந்தோசத்தைப் பார்த்த தேவகி கண்களில் வடிந்த கண்ணீர் தோசை மாவில் விழ. உப்பு பஞ்சம் தீர்ந்து தொசை உப்பு சுவையுடன் விறகடுப்பில் சமைந்தது.  

*************************************************************************************************