koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Monday, May 27, 2024

ஐயா வைகுண்டர் பற்றிய வாட்ஸ்சாப் குழுவின் கரு மற்றும் நிறைவுரை

"அய்யா வழி" வைகுண்டர் பற்றிய வாட்ஸ்சாப் குழு கரு மற்றும் நிறைவுரை:


2007 ல் சென்னை வளரசவாக்கம் பகுதியில் ஒரு உப்மா சினிமா கம்பனி இருந்தது. அது “அய்யா உண்டு அய்யா வழி” என்னும் திரைப்படம் எடுப்பதாக வசூல் வேட்டையில் ஈடுபட்டது. சாந்தன் சாம் ராஜ் ஆகிய நானும் பாடலாசிரியர் வாய்ப்பு கேட்டு சென்றேன். அங்கு அய்யா பெயரில் அயோக்கியம் நடப்பதை அறிந்தேன். விரைவில் அந்த கம்பனி இழுத்து மூடப்பட்டது. 


பிறகு வைகுண்டர் சினி ஆர்ட்ஸ் ”அய்யா வழி” இயக்குநர் அன்பழகன் என்பவரால் நிறைவு செய்யப்பட்டு படம் வெளியானது. (படத்தின் லிங்க் நமது வாட்சாப் குழுவில் உள்ளது) ஆதலால் அய்யா உண்மைக்கானவர் வியாபார பொருள் ஆசைக்கு உதவ மாட்டார் என்பது உறுதியானது. சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் (சாந்தன் இசை வெளியீட்டில் பார்த்திருப்பீர்கள்) தன் மகனை வைத்து ஐம்புலன் படம் செய்து கொண்டிருந்த நேரம் அது. அப்போது எனக்கு 17 வயது. நான் என் 12 வயதிலேயே சினிமா பட்டறையில் பயின்றவன்.


அய்யா வழி படத்தில் முதல் காட்சி முதலே ஜாக்குவார் ஐயா நடித்துள்ளார். இந்த நான்கு நாள் வாட்சாப் குழுவில் அகிலத்திரட்டு அம்மானை குறித்து நான் ஒரு மாதம் வீடியோ பதிவிட்டதை தொடர்ந்து நாராயணன் அம்சம் ஐயா வைகுண்டர் கல்கியாக வருவதும் கன்னியாகுமரி இதில் முக்கியமான இடம் என்பதை கூறி குழு முடிவுரை தந்து விடை பெறுகிறேன். மீண்டும் அடுத்தமாதம் பாம்பாட்டி சித்தர் குழு வாயிலாக இணைவோம். நன்றி வணக்கம். விளையாட்டு முக்கியம். சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு காரணம் உன்று. ஆதலால் உற்று நோக்குங்கள்... இப்படிக்கு அழிவில்லா ஆட்சியாளன் சாந்தன் சாம்ராஜ்