கேது :
சோதனை 1 :
சோதனை 2 :
மோட்சக்காரகன், ஞானக்காரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் மனித பிறவியின் அர்தத்தை உணத்தக்கூடிய பணியை செய்து வருகிறார். நமது கர்ம வினைக்கு ஏற்ப நமக்கு பலன்களை அருள்கிறார். குறிப்பாக கேது பகவான் தன் தசா புத்திகளில் பெரும் கெடுதல்களை செய்து மனிதனுக்கு ஞான மார்க்கத்தை வழங்குகிறார்.
சோதனை 1 :
உங்களுக்குள் பல்வேறு திறமைகள் இருந்தும் அவற்றை வெளிபடுத்த முடியாமல் தடை ஏற்படுகிறதா? ஏதோ ஒன்று உங்களை செயல்பட விடாமல் தடையாய் நிற்கிறதா? நீங்கள் செலுத்திய கடும் உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்கவில்லையா? உங்களுக்கு மட்டும் உங்கள் காரியங்கள் தாமதம் ஆகின்றதா? வாழ்கையின் மீது விரக்தி, வேதனை, துன்பம் உண்டாகின்றதா?
உங்கள் ஜாதகத்தை சோதித்து பாருங்கள் உங்களுக்கு கேது தசை அல்லது கேது புத்தி நடந்து கொண்டிருக்கும்.
சோதனை 2 :
நல்ல முறையில் ஓடிக்கொண்டிருந்த தொழிலில் தீடீரென நஷ்டம் ஏற்பட்டு பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டதா? சரி வேறு ஒரு தொழில் செய்யலாம் என முயற்சித்து பல தடைகளை கடந்து தொழில் தொடங்கியும் வருமானம் இல்லையா? கடனும் கஷ்டமுமே மிஞ்சிய நிலையா? படிப்பில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்க வில்லையா? போட்டிதேர்வில் ஓரிரு மதிப்பெண்களில் உங்களுக்கு கிடைக்கவேண்டிய பணி நழுவியதா?
உங்களுக்கும் கேதுவின் தாக்கமே..
சோதனை 3 :
காதல் தோல்வி, திருமண தடை, திருமண தாமதம், கணவன் மனைவி பிரிவு, சுற்றத்தாரால் கலவரம், தாத்தா பாட்டி திடீர் மரணம் இவை அனைத்தும் கேதுவால் விளையும் பயன்கள் ஆகும்.
கேது தசை :
கேது தசை மேற்கண்ட கெடு பலன்களை வழங்கி வாழ்க்கையில் நமக்கு ஞானம் புகட்டக்கூடியவர் ஆவார். நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை? என்ன இது வாழ்க்கை? என விரக்தி மேல் விரக்தியை வழங்குவார். பெண்களால் கலகம், பைத்தியம், திக்குவாய், மனக்குழப்பம், போன்றவற்றை வழங்கிடுவார். மனதில் இனம் புரியாத கவலைகளை தந்து கோவில் குளம் என அலைய வைப்பார். ஜோதிடர், சித்தர்களை தேடி செல்ல வைப்பார்.
மனதில் குழப்பமும் செயல்களில் தடை தாமதமும் சமுதாயத்தில் அவப்பெயரும் கொடுத்து புலம்ப வைப்பார். இவை அனைத்தும் நன்மைக்கே.. ஏனெனில் நமது கர்ம வினை முடிகின்றது என சந்தோஷபட்டுக் கொள்ளலாம்.
துன்பத்தை கடந்தே இன்பம் :
7 ஆண்டுகள் கேதுவால் பல சோதனைகள் வந்தபோது அவற்றை பொறுமையாக தாங்கிக்கொண்டு கேது தசையை கடந்தவர்களுக்கு கேது தசைக்கு அடுத்து வரும் சுக்கிர தசை சகல பாக்கியங்களையும் அருளி இன்ப வெள்ளத்தில் நீராட்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கடினமான துன்பங்களை கடந்து வந்தவர்களே வாழ்கையில் இன்பத்தையும் அனுபவிக்கின்றனர்.
துன்பத்தில் பிறந்து துன்பத்திலே இறந்தவர்கள் யாரும் இல்லை. இன்பத்தில் பிறந்து இன்பத்திலே இறந்தவர்கள் யாரும் இல்லை. துன்பத்தை கடந்த பிறகே இன்பம். எனவே தளராமல் நடைபோடு.. கேது உன்னை நல்வழி படுத்துகிறார். கேது உனக்கு வாழ்க்கையின் கஷ்டங்களைப் புரிய வைத்து உன் வாழ்வை ஒழுங்கு படுத்தி உனக்கு ஒளிமயமான எதிகாலத்தை உண்டு செய்கிறார். கேது பகவான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டார்.
நன்றி....
No comments:
Post a Comment