koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Monday, September 26, 2022

விழியிலே மலர்ந்தது - சிறுகதை பகுதி 1, ஆசிரியர் சாம்ராஜ்

வாமனன் தன் காதலி சனாவிடம் வரும் ஐப்பசி 26 ஆம் தேதி நம் திருமணம் நடக்கும். அதற்கு தேவையான முழு முயற்சியில் தான் ஈடுபட்டு வருவதாக கூறிவிட்டு பைக்கில் நாமக்கல் புதுச்சத்திரத்திலிருந்து சேலம் சீலநாயக்கன்பட்டி வந்துகொண்டிருந்தான். வாமனன் வரும் வழியில் ஆண்டகலூர் கேட் அருகே விபத்தில் பார்வை பறிபோன விமல்ராஜ் நின்றுகொண்டிருந்ததை பார்த்த வாமனன் தன் பைக்கை நிறுத்தி விமல்ராஜை தன் பைக்கில் ஏற்றிக்கொண்டார்.

விரைவாக பைக் சென்றது. சர்வீஸ் ரோட்டில் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டிவந்த வாமனன் பைக் மீது கணப்பொழுதில் கார் ஒன்று மோதியது.

சேலம் விநாயகா மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் மாரிமுத்து வாமனன் மற்றும் விமலுக்கு சிகிச்சை முடித்து வெளியே வந்தார். விமல் மற்றும் வாமனன் பெற்றோர் உறவினர் நண்பர்களிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொன்னார் "ஏற்பட்ட விபத்தில் தலையில் அடிபட்ட பார்வையற்ற விமலுக்கு இப்போது இந்த விபத்தின் மூலம் பார்வை வந்துவிட்டது" என்றார். விமல் சார்ந்தவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இச்செய்தி இருந்தது. அடுத்த செய்தியாக "விபத்தில் வாகனம் ஓட்டிய வாமனனுக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டதால் வாமனன் தன் பார்வை திறனை இழந்துவிட்டார்." இதை கேட்ட விமல் பெற்றோர் மற்றும் காதலி சனா ஆகியோர் அதிர்ச்சி அடைய, அவசர சிகிச்சை பிரிவில் இருந்த விமல் தனக்கு உதவி செய்து பார்வை பறிபோன வாமனனுக்கு ஒரு அளப்பரிய உதவி செய்ய எண்ணினான்..... தொடரும்........

Sunday, August 28, 2022

இந்திரவிழா - சிறுகதை I ஆசிரியர் சாம்ராஜ்

இந்திரவிழா 

    சரியாக நேரம் மாலை 6.30 மணி. கரும்பு தோட்டத்தில் கனகட்சிதமாக வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தான் காமக்கோடி. இருபத்தெட்டு நாட்கள் இப்படியே கழிந்தன. அன்று சனிக்கிழமை சித்ரா பெளர்ணமி இரவு மணி 7. 50 ஆகியும் அம்பிகா கரும்பு தோட்டத்திற்கு வராததனால் ஏமாற்றம் அடைந்த காமக்கோடி அருகில் உள்ள பாறையின் மேல் படுத்தான்.

 

ஊர் மலைக்கோவிலில் தீபங்கள் ஒளிக்க சரவணன் கோவில் படிகற்களில் அமர்ந்தபடி தலைமீது கைகள் வைத்து சோகமாக நிலவை பார்த்தான். முழுநிலவில் சரவணனின் இறந்தாகால நிகழ்சிகள் படாமாக ஓடின.

 

சரவணனும் சம்யுக்தாவும் காதலித்தது - வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டது - வெளியூர் வந்து வாடகை வீட்டில் வசித்தது - சரவணனுக்கு எழுத்து துறையில் வறுமை - குழந்தை பிறப்பது - சம்யுக்தா கோவிலில் பிட்சை எடுத்து குழந்தைக்கு பாலும் ரொட்டியும் வாங்கி வருவது - தன் வறுமை தன்னோடு போகட்டும் தன் குழந்தையாவது நிம்மதியாக வாழட்டும் என எண்ணி சரவணன் தன் மகனை குழந்தை இல்லா கோடீஸ்வர தம்பதிக்கு பணம் பெறாமல் கொடுப்பது - மனைவி சம்யுக்தா மலையடிவாரத்தில் பிட்சை எடுக்க கணவன் சரவணன் விஷம் குடித்து விட்டு மலை படியில் உயிர் போகும் நிலையில் அமர்ந்திருப்பது. போன்ற காட்சிகள் சரவணனின் கண்களில் ஓடின.

 

அன்று கிராமிய கூத்து நடைபெற்றது. அம்பிகா மற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட ஊர் மக்கள் கூச்சலும் குதூகலத்துடனும் இந்திரன் கூத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

கூத்தில், வானுலகத்து நடன மாது ஊர்வசி ஒருக்கால் நடனமாடுகையில் இந்திரன் மகன் சயந்தன் மேல் கண்வைத்து  நடனம் மீது கவனம் சிதற, இது கண்டு வெகுண்ட அகத்தியர் அவளையும் சயந்தனையும் மண்ணுலகில் பிறக்குமாறு சபித்தார். மண்ணுலகில் பிறந்த ஊர்வசி நடன அரங்காகிய தலைக்கோல் தானத்தில் சாப நீக்கம் பெற்றுப் பின்னர் விண்ணகம் சென்றாள்.

 

கட்டியக்காரன் “ராசாத்தி உன்ன எண்ணி இராப்பகலா கண்விழிச்சேன்” என பாடிக்கொண்டிருக்க அம்பிகாவிற்கு தன் அத்தான் கரும்பு தோட்டத்தில் காத்திருப்பது நினைவிற்கு வந்தது. 



           மணி இரவு 8.30 சம்யுக்தா கோவிலில் இருந்து தன் குழந்தை பசியில் அழுதுகொண்டிருப்பான் என எண்ணி வேகமாக பால் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு ஓடுனாள். சரவணனின் கடிதம் வீட்டு கதவில் சொருகியிருந்தது. வீட்டை திறந்து பார்த்து குழந்தையும் கணவரும் எங்கே? என கேட்டவாறு கதவில் இருந்த கடிதத்தை படிக்கத் தொடங்கினாள் சம்யுக்தா.

 

கரும்பு தோட்ட பாறையில் படுத்திருந்த காமக்கோடிக்கு தூரத்தில் ஒரு பச்சிளம் குழந்தை அழுகுரல் கேட்டது. அந்த ஏரி அருகே விரைந்து சென்று அங்கு மூவர் பேசிக்கொண்டிருப்பதையும் குழந்தை அழுதுகொண்டிருப்பதையும் காமக்கோடி கவனித்தான். கோடிஸ்வரர் மனைவி  “பாவும்ங்க இந்த குழந்த நமக்கு வேண்டாம். நமக்கு குழந்த இல்லனாலும் பரவால்ல. இத அவங்க அப்பா அம்மா கிட்டயே கொடுத்துருங்க.” என்றாள். கோடிஸ்வரன் யோசிக்க, இடைதரகர்ஐயா நான் பேசுன பணத்துல ஐம்பதாயிரம் பாக்கி இருக்கு அத கொடுத்திங்கனா நான் கிளம்பிடுவேன். அப்புறம் உங்க இஷ்டம்” என்று அவசரப்பட்டான். சம்பவ களத்திருக்குள் நுழைந்த காமக்கோடியோ என்ன நடக்குது இங்க? யார் குழந்த இது?” என மூவரையும் பார்க்க மூவரும் பயந்தபடி திறுதிறுவென முழித்தனர்.




 

சம்யுக்தா கடிதம் படிக்கிறாள்என்ன மன்னிசிருமா. நான் உன்ன காதலிச்சி உன்ன வறுமையுள வாட்டுனது மட்டுமில்லாம நம்ம குழந்தையும் வறுமையில பாலில்லாம அழும்போது என் வழியும் வேதனையும் எந்த தகப்பனுக்கும் வரக்கூடாதுன்னு என் ஆள் மனம் அழுகுறது என் கண்களில் வெளிப்படாது. அதுனால நம்ம மகன் நம்ம கூட வறுமையில இருந்து சாகுறத விட எங்காவது மூனுவேல சாப்ட்டு உயிரோட இருக்குறாங்ர அந்த சுகமான நினைவே போதும்னு ஒரு புரோக்கர் கிட்ட நம்ம குழந்தைய ஒரு வசதியான தம்பதிக்கு கொடுக்கச்சொல்லி கொடுத்துட்டேன். நானும் விஷம் குடிச்சிட்டேன். மலையடிவாரத்தில் நாளைக்கு என் உடல் கிடக்கும்.” சம்யுக்தா தலையில் இடி விழுந்தது. கலங்கி அமர்ந்தாள்.

காமக்கோடி கோடீஸ்வரர் காரில் குழந்தையுடன் தரகர் கூறிய சரவணன் சம்யுக்தா வீட்டிருக்கு விரைந்து வந்தான். குழந்தையை சம்யுக்தாவிடம் ஒப்படைத்தான். சம்யுக்தா கடிதத்தை கேட்ட காமக்கோடி, சம்யுக்தா, கோடிஸ்வரர், கோடீஸ்வரர் மனைவி, தரகர், குழந்தை அனைவரும் கோவிலுக்கு காரில் விரைந்து சென்றனர். மயங்கிய சரவணனை தூக்கி காரில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு செல்லுங்கள் என அனுப்பிவைத்தான் காமக்கோடி.




 

மணி இரவு 10.10 ஆனது இந்திரன் சயந்தன் கூத்து கூட்டத்தை பார்த்த காமக்கோடி உடனே கரும்பு தோட்டத்திற்கு கிளம்பினான். அங்கிருந்த அம்பிகா எங்க போன இவ்ளோ நேரம்? எவள பாக்க போன? என கடிந்து கொள்ள. காமக்கோடிஅதை அப்புறம் சொல்றேன் வா” என்று அம்பிகாவை கரும்பு தோட்டத்திற்குள் அழைத்துச் சென்றான்