பிரபஞ்ச உரை நடராஜர் கொடை:
பாகம் 1:
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! நிலைவேர் கொண்ட ஆலமர விழுதுகள் ஊன்றுகளாய் நிற்க விழுதுகளோ நாமென்றாடி உணரும் நிலைவேர் உயர்வென. விழுதுகளும் வீணாகாது உணர்மனமே. விண்ணுலகம் வியந்துவர மண்ணுலகம் மறைந்துவர மலர்ந்த தேகம்பெற மையகத்தில் வந்து நிற்பான் மன்னவன். அடைந்த துயரம் பற்பல இருக்க எழுத்துடல் பொருளால் பல்லாரியம் கோடி இன்னல் வருமே மண்ணில் பொன்னவனுக்கு. விண்ணுலக தேவர் மூவர் அருளாசி புரிய ஐயன் மனமோ இன்னும் ஐயத்தில் இருக்க மனமாயை கொண்டு பல சிந்தை உதிக்க விழுதிறங்க பலம்கூடும் அந்நாள் வெகு தூரத்தில் இல்லை இது என் சத்திய வாக்கு.
முதற்சீர் மூன்றும் வரும்சீர் இரண்டும் கொண்டு முன்பு முக்காடிட்டு வீர வாளேந்தி வந்தவீரன் பலபிறப்பு உற்றத்தோழன் வந்த உடனே உள்ளம் மகிழ்ந்து நிற்கும் பொன்மகனுக்கே. அம்மூவெழுத்து வெள்ளி நாள் கூட்டம் எம் ஐயனுடன் துணைகொண்டு உறுதுணை இருக்க இது காலத்தால் அழியாது விளைக்கப்பட்டது. வேதாந்த பயிர் என்றும் விளைந்து நிற்கும் வேதத்திற்குள் அடங்கி நிற்கும் ஆராய்ந்து பார்க்குபோது மட்டுமே அவனுக்கு (ஐயனுக்கு) புலப்படும்.
வெள்ளை குதிரை ஏறி வேதாந்த நிலையில் விந்தகனாக வருவான் வித்தகத்தையும் ஆளுவான் மத்தகத்தையும் ஆளுவான் மணிமகுடம் சூடியும் மறையாத தேகத்தைக் கொண்டு மயான தேகம் சூழ வருவான். ஆகாயத்திலிருந்து செந்நீர் துளிகள் ஒவ்வொன்றாய் விழ மண்டலங்கள் ஏழும் பொழிவுபெரும் ஐயன் நிலை தெளிவு பெரும்.
ஐந்தோடு ஐந்துசேர பத்தாம் வாசல் திறக்க பயணத்தை
பணிவோடு அறிந்து கொண்டு மலையேறும் பயணமது அதில் மருகியும் உடல் நிற்கும் மன்னவனுக்கு
மயக்க நிலையும் வந்து போகும் சிலநொடி தம்பித்து மரணமும் வந்து தொட்டு செல்லும்
உற்ற துணையாய் உமையாள் இருக்க உயிர்த்தெழுவான் எம் உத்தமனே.
பலம் மிகு அசுரன் ஆதிக்கத்தோடு முன்வரும்போது அமரனின் தேகம் ஆடிக்கொள்ளும் அழிவற்ற நிலையை தாங்கி பிடிக்கும்போது அமரனுக்குள் வெளிப்படும் அசுரகுணம். திரும்பி பார்த்தால் ஒருவரும் இல்லை தினம் கணம் கவனித்து வருவர் அவன் பரமனின் பிள்ளை. இது சத்தியம் உரைத்துவரும் பாடல் இது சத்தியத்திற்குள் மட்டுமே கட்டுபட்டு போகும். கட்டுடைக்க கண்ணன் வந்தே தீருவான்.
தாயின் யோனியில் அவன் அவதரித்ததனால் எம் அமரன் நிலை அங்கு மறைந்து பிறந்து காமதுன்பங்கள் அனைத்தும் இழந்து தன் நிலையை உணர்ந்து, கலியுக மன்னன் கல்கி வரும்போது பல இன்னல்களும் துன்பங்களும் வந்தே தீரும். ஆளும் அரசனும் அண்டை மாநிலமும் அயல் நாட்டவரும் சூழ்ச்சி புரிய அணுவளவும் ஆகாத அசிங்கள தேசம் ஐயனை முழுவதும் எதிர்க்கும். அதில் அமரன் வெல்ல மிச்சம் மீதி விருச்சமோ கண்ணனின் அரவணைப்பில் கலியுகம் சந்திக்கும்.
முன்னவதாரங்களில் முழுவதும் அழிக்கா எம் ஐயனும் அவன் விழுதுகளும் இன்னவதாரத்தில் எடுப்பது கல்கி அவனது தேவ விழுதுகள் உற்ற துணை நிற்க. முன்ஜென்ம பிணி அவனை தாக்கிக்கொண்டிருக்க மண்டலம் இரண்டேழும் பொழிவு பெரும் காலம் விரைந்து வரும் இது ஞானிகளுக்கு சுலபமாகும்.
மையகண்டம் கருத்தூன்றி நிற்கும் கருகிய இடமல்லாம் செழித்து நிற்கும் செல்வதோடு சிவம் வாழ்ந்து நிற்கும் சில தேகம் மட்டுமே அதர்மத்திற்கு துணை நிற்கும் ஆராய்ந்து பார்க்கும்போது மட்டுமே அதனதன் முகம் வெளிச்சத்திற்கு வெளிதேகமாக காட்டிக்கொள்ளும். நம்பிக்கையான தோழனுமுண்டு அதில் நாதனை வீழ்த்தும் சூழ்ச்சியும் உண்டு இதில் அருளாளர்களும் அடக்கம். ஞானியரும் சூழ்ச்சி செய்து வீழ்த்த என்னும் எம் கல்கியின் வரம் அதில் வீழ்வானோ எம் வில்வேந்தன் பரம்பொருளே!
பாகம் 2
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! ஐயன் வரும் முன்னே
ஆலயங்கள் இருண்டிருக்கும் அழிவு ஆரம்பத்தில் தெரிந்திருக்கும். ஆறகால பூசைகளும்
விலகி நிற்கும். அவனுள் படியெடுத்து வைக்கும்போது பரதேக பிரவாகம் என்பதும்
உணர்ந்து நிற்கும் பரதேகம் என்பதை பஞ்சத்தின் பொருளாகத் தெரிந்து நிற்கும் மக்கள்
கூட்டம். தென்குமரியில் நாற்காலியை உடைபோத்தி வழிபட ஐயன் தேகம் சித்திரை முழு
நிலவன்று பொதிகை செல்லும்போது தேகத்தில் சந்தன மர துளிகள் துளியாக விழுந்து
செல்லும். சந்தன வாசத்துடன் சாரல் மழை பொழிய பல யோகிகள் அவ்விடத்தில் தவம் புரிவர்
ஞானிகள் கூட்டமும் அங்கிருந்து ஐயனை வாழ்த்திச் செல்வர் அது எம் ஐயனுக்கு தெரியாது
ஆகினும் நான் அறம்பாடி சொன்னேன் அவன் அருளிலே.
முன்வந்த ஞானியர்க்கும்
இனிவரும் ஞானியர்க்கும் எம் வார்த்தைகள் தெளிவளிக்கும் சைதுள்ளவரை திறமையுடன்
பொறுமை வேண்டும் மற்றவரை புறம் சொல்லாது செய்நன்றி மறவா சொன்ன சொல் தவறாமல்
இருந்து வாழ்பவனும் ஒரு மனிதனாகும். எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே
எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
அரசனையும் ஆளுமையையும்
குறிக்காது ஐயனை பாடுவதே அறமாகும். வட்ட
வடிவா இகவடிவா அகவடிவா என்று ஆராய்வதை விடுத்து, சொல்லிய மகான் சொல்லி இருக்கும்
வார்த்தையிலிருந்து உதிப்பது யாது சிந்திக்க சொல்கிறான் எனும் பொருளை கவனி
எண்ணத்தை கவனிக்காவிட்டால் அது எல்லா இடமும் சென்றுவரும் எண்ணத்தோடு நீ பயனிப்பாய்
எனில் சரியான பாதைக்கு வழிகோலும் அமரரினமே.
வாசுகி பாம்பை
கயிறாகவும் மந்தக மலையை மத்தாகவும் கொண்டு அமரரும் அசுரரும் ஆள் கடலில் அமிர்தம்
கடைவர். வாசுகி பாம்பு தன் குண்டலினி எண்சான் உடம்பின் மையப்புள்ளி. அமர உடம்பும்
அசுர உடம்பும் இந்த உடம்பை கடைகிறது. அழிவில்லா நிலைக்கு அதில் அமரனை அசுரன் ஏமாற்றி
அமுதத்தை எடுக்க, மோகினி உருகொண்டு அமுதத்தை அளிக்கிறாள் அம்மையாள் என் அமரனுக்கு.
ஐந்தால் பிறந்த உடம்பு
நம்மொடு கூட்ட ஆறு ஆகும் அமரர் இனமே. எனக்கு பிறகு பிறந்த ஐவர் பஞ்ச பூதங்கள்
அன்றோ. பஞ்ச பூதங்கள் எனை ஆட்சி செய்ய ஐயன்
திருவடியை காண ஆகமத்திற்குள் போகாமல் மோகமத்திற்குள்ளும் போகாமல் இந்த உடலை
உனக்குள் கடந்தேன். உன்கடந்து போகும்போது அமிர்தமெனும் நிலையை அடைந்தேன்.
கண்டத்தில் ஒரு மூலம் நெற்றியில் ஒரு மூலம் சந்திர சூரிய மூலங்கள் அதை கடந்தால்
அமிர்த நிலை இதில் அமரன் பாகமோ வாசுகி பாகம் ஆகும். பலன் அளிப்பதும் அவனே ஒவ்வொரு
மனிதர்க்குள்ளும் ஆட்சி புரிவதும் அவனே என்பதை அறிவீர் ஞான உள்ளமே. அரியும்
சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் செழிக்கும் மண்ணு அறியாதவன் மண்ணுக்கு இரையாவான்
அறிந்தவன் ஆண்டவனுடன் ஒளியாவான்.
ஏகாந்த பணியால்
இறைவனால் எனக்கு துன்பங்களும் வந்து சேரும். இகழ்ந்த பொருள் என்றும் பாடலாகும் இகழ்த்தப்
பட்டவன் யார் அவன் படைக்கப்பட்டவனே ஆவான். அழிவில்லாத நிலையை அவனும் காண்பான்
சிவதேக நிலையைக்கொண்டு அரியும் சிவமாக உள்ளே கடந்து அவனுள் காணும்பொழுது நிலையென்ற
பொருள் அவனுக்குள் புரியும் புரிதலற்று எவரிடமும் எதுவும் கலக்காதே எம் நேசனே.
கொள்கை உள்ளவரை குலம் வாழும்வரை மத்திம கண்டம் வந்து மத்திமத்துள் பாயும்வரை எனை ஆள்வான் என் ஈசன். தனிமரம் ஒன்று தண்ணீரில் மிதந்து தரணி காத்து நிற்கும் தன் தேகத்தை விட்டு மரம் விழுதில்லாமல் அசைந்து நிற்கும். விழுதூன்ரிய பிறகே அதன் நிலைபாடுணரும். அவ்வேளை வரை பல இன்னல் வரும் மீட்போன் காப்போன் நீ சபித்தால் பூதங்களும் சிதைத்திடுமே பேதைகளை பொறுத்தருள்வாய் போன்னவனே !
பாகம் : 3
எல்லாம்
பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே! அகப்பட்டான் என்
ஐயன் அசுர சக்தியொன்றில் அது மிகப்பெரிய மாயசக்தி. மாயாரூப பெதும்பை துணையுடன் சக்தி
கொண்டான் எம் ஐயன் என்று உடனே கண்டறிந்தனர் அசுரரினம். ஒவ்வொரு நொடியும் அம்மா ஐயனுக்கு
காவல் இருப்பதனால் இன்னைல்களை
தாண்டி அம்மா துணை உண்டு. அசுரர்ரூப எதிரி அரசியல்வாதியா ஆன்மீகவாதியா என்பது
குறியல்ல. பெண் சக்தி சிவசக்தி துணை கல்கிக்கு உண்டு. கரிய உருவம் கரும் கண்கள்
ஏழடி உயரம் எதிர்க்கும் இடம் மிகப்பெரும் காடு. அன்று ஐயன் தன் நாதன் நோக்கி கடகூடலூர்
வரும்போது ஆக்ரோச சக்தி தாக்கும் போது அய்யனை ஒரு சக்தி காக்கும். வான் நீச்சல்
சக்தி அமரனுக்கிருக்க மறையும் சக்தி அசுரனுக்குண்டு அசுரனும் “அ” என்னும் தமிழெண் சித்து பெற்றவன் ஆவான்.
மலையில் நீ
நின்று கீழே உயர் உயிர்களை பார்த்தாய் இது உம் இலக்கணம் சொல்லும் ஓரீரறிவு முதல்
ஆறும் பார்த்தாய் அன்று கேட்டாய் அசரிரீ அது நீயே இவர்களுக்கு தலைவன்
காத்தருள்வாய் என்று. களத்திலிறங்கி கலியை விரட்ட என் செய்வேன் நான் என என்னாது
சொப்பன பொருள் திரிந்துணர்ந்து பிறப்பு பிழைப்பெது தெரியா பிழைக்கப் பார்த்தாய்
விட்டதோ இயற்கை. இதில் உன் உன்னத பணி
இதுவென உதவியதியற்கை அதனை இன்றறிவாய் இறைமகனே.
அமர சக்தியும்
அசுர சக்தியும் போரிடும்போது புனித தேகம் ஆடிக்கொள்ளும் நிலை என்ற பொருளோடு
சிவநிலையை உணர்ந்து கொள்ளும். அதிநிலையும் சிவநிலையும் உணரும்போது உண்மையில் இருந்து விலகிவிடும். இப்புனித சக்தி
என்றும் சிவ சக்தியோடு கலந்து உன்னை வாலை சக்தி அரவணைத்து வழி நடத்தும். அடடா அன்னையே
நீ தாயாராக இருந்து உன் மகன் கல்கியை உன் கண்களுக்குள் வைத்து பாதுகாக்கிறாய் நான்
பார்த்து சொன்னது பொய்த்திடுமோ. அபிராமி சக்தியுடன் ஆளும் வாலை சக்தியும்
வழிநடத்தி என் ஐயன் மீது பார்வையை செலுத்தி வரும். துன்ப இன்னல்களை நீக்கி அவனை
என்றும் கரத்தோடு கரம்வைத்து காத்துக்கொண்டிருக்கும் சிவசக்தி பெண் தாயே !
கருத்தூன்றி
பார்க்கும்போது கல்கியின் தூபமும் எனக்கு தெரிகின்றது. என் தாயாரின் அரவணைப்பில்
இருக்கிறாரென்று. அறம் ஏற்றி பாடும் என் பாடல்களில் அகம் மகிழ்ந்து இருக்கிறேன்
நான். ஐயன் புகழுக்கு நாடி வருகின்ற வேளையில் அவன் ஆத்தாவின் பிள்ளை அவள் அரவணைப்பில்
இருக்கும்போது அசுர சக்தி எதுவுமே இல்லை. சங்கத் தமிழ் மூன்று தா சத்திய நீதி
மாறாமல் ஐயனை வாழவை என்னுடைய ஈசனின் பிள்ளையாக அவன் வாழ வேண்டும். உன்னுடைய அருள்
சக்தியோடு அமரன் ஆளவேண்டும். போதிமரம் ஒன்றும் ஒரு புத்தனை உருவாக்காது நாகமரம்
ஒன்றும் ஒரு நாயகனை வரவேற்காது. உன் ஆட்டத்திற்கு அமரன் ஒரு சிறு பிள்ளை ஐயனை
ஆடவைத்து பார்க்கும் நீயே ஓர் சிவபிள்ளை. உன் அருகில் நான் இருந்தால் பூமகன் நிலை
என்ன. ஆதிக்கத்தில் உன் சக்தி அவதாரத்தின் பிள்ளை அவன். அடியாருக்கும் அடியாராக
இருந்து என்னை ஆழ்த்திவிடு உன் திருப்பாதத்தை தொட்டுவணங்க எனக்கு அருளும் ஆசியும்
தந்துவிடு.
வெட்டவெளியில் நீ
இந்துகொண்டிருப்பதனால் வெட்டவெளியே கடவுள் வேதாந்த பயிராவாய், இறைவனுடைய பிள்ளையாய்
நிறைந்து ஆள்வாய். வெண்மை நிறம் வெட்டைவெளி வாசி குதிரையை கட்டுப்படுத்த அறுசக்தியும்
கல்கிக்கு கைகூடும். அவரை சுற்றி இருக்கும் மாயை அசுர சக்தியாகும். இந்த மாயையை
கடந்து வெள்ளை குதிரையை கடிவாளமிட்டு மனக்குழப்பத்தை நீக்கி குருமுகமாக வாசியை
கவனிக்கும் போது குதிரையும் கட்டுப்படும் வாசியும் நிலை நிற்கும். அமரேந்திர
வாளுடன் கூரிய வேலும் வாசியை தட்டி எழுப்ப வையகத்தில் உண்டு. வாளினுடைய தன்மையும்
பூட்டிய வேலினுடைய தன்மையும் அதனுள் அடங்கும். வாளும் வேலும் கொண்டு அசுர தேகத்தை
வெளிகாட்டு. அதனை வெளியே செதுக்கி தள்ளிவிட்டு அமரனாக ஆகும் பயணத்தை உன்னுள்
கடந்துபோ.
கல்கி நீயென
கண்டறிந்தான் அசுரன். அசுரன் யாரென கண்டறிந்து நீ உணர்ந்துவர வாசி குதிரையை கையில்
பிடித்து வாசியை கட்டுப்படுத்து. பரமனின் பட்சி பலவுண்டு. இருந்தாலும் இயற்கையின்
சக்தி பச்சையில் தான் இருக்கிறது, ஒத்து வாழ் இயற்கையுடன் பசுமையை பாதுகாத்து
பச்சை நிறம் கிடைக்க பெறு. பரமனின் பச்சை நிறம் பெற வேல்முகம் கொண்டு வீர வாளேந்தி
மண்டலத்தை உடைத்தெடுத்து மாய சக்தியை விளக்கி அகற்று. மன மாயை விலக வேண்டும் வாசி
குதிரையை கட்ட வேண்டும். எண்ணத்தில் குதிரை இல்லை, உனக்குள் இருக்கும் வாசி
குதிரையை பிடி. இதனை சொல்லும் அறம்பாடி என்னை மூன்று பதிவிலே புறத்தேடும்
அற்பர்களே இன்னும் பற்பதிவுகள் இருக்கின்றன. கல்கியுடன் களத்தோடிருக்கும் எனைத்தேடி,
அறுவருடன் மோதி அழியாதீர்.. அதை தாண்டி வந்து சிதைபவரும் சிலருண்டு. அது அசுரரினம்
வாங்கிய வரம் அல்லாது ஏது. எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ்
நடராசனே.
பாகம் : 4
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே! பாரெங்கும் பஞ்சம் பசி எம் பார்த்திபனின் பொதிகை பிரயாணம் நள்ளிரவு நிகழ அங்கு கும்பயோகி ஐயனுக்கு அருள்புரிய ஆதாரம் சந்தனத்துகள் விழுந்து தழுவிச்செல்லும் இது உதிக்கப்பெரும் போது ஒரு விசுவகர்மா இன்னொரு விசுவகர்மாவிற்கு ஒளிதேகம் கூட்டுவார்.
வெட்டவெளியில் விடும்போது எல்லோருக்கும் எல்லாம் போய்சேர்ந்தால் அது எல்லோருக்கும் சத்திய வாக்காக நின்றுவிடுமோ அங்கு சக்தி இல்லாதவனும் சக்தி தனை பெறுவானோ. கோரட்சகன் விட்டான் சாயங்காலரேகை அதில் பல சர்ச்சைகளும் சங்கடங்களும் உண்டாகின. அமரனின் அந்தரங்கங்கள் வெளிச்சத்திற்கு வெளியிட தலை நிமிர்ந்து பார்க்கும்போதும் எமக்குள்ளிருந்து நோக்கும்போதும் தெரியும் எல்லாம் ஆளும் எம் ஈசனே.
திங்கள் கலையை முழு ஆதிக்கத்தோடு தொடர உனக்குள் கட்டுப்படும் சந்திரன். பாலகன் நிலவை பார்ப்பான். ஐந்தும் ஐந்தும் பத்தாகும் பயணம் முடிந்தவுடன் அவனுக்கு மிகப்பெரிய சொத்தாகும் அமிர்தநிலை. பேரொளி பெரும் குழம்பு ஒளி தேகம் கொண்டு நரை திரை இன்றி பதினாறு வயது தொற்றம்தறும் பாலகனாக வாழ்ந்து வருகிறான் எம் ஐயன். நரை திரை என்பது பன்னிரண்டு வருடங்கள் பக்தி மார்க்கம் கொண்டு சீவ சக்திகள் உனக்குள் ஒடுக்கி சிவதேக நிலையை கொள்ளும்போது நரையும் விலகும் உனக்குள் இருக்கும் திரையும் விலகும். தீர்த்தம் என்பது அமிர்த நிலையாக உனக்குள் வடியப்பெரும். அதை அருந்தும்போது பயணங்கள் பரதேக விசியங்களை அறிந்து கொள்ளும்.
அண்டம் விட்டு அண்டம் தாவும் அற்புதமான விசியத்தை அறிந்து செல்லும். மோகம் கெட்டு மனிதன் வாழும்போது சக்திபீடம் அமைந்து நிற்கும். இது மிகப்பெரும் உயர் ஆன்மாக்களுக்கு பொருந்தும். மகான்கள் உதிக்கப்பெறுவது முக்கடல் சந்திக்கும் குமரிக்கண்டம். பிறப்பதோர் ஊர் பெருமாளிடம் அடைவதோர் ஓரூர். உயர் ஆன்மாக்கள் ஒருபோதும் ஒரே ஊரில் வாழ மாட்டார்கள் ஒரு தெரு தாண்டியேனும் வாழ்வர். ஒரு இடத்தில் இருக்க விடாது ஒருநோடியேனும் உறைவிடம் மாற்றிவிடும். இதில் திருப்புத்தூர் அரிமா புணரும் வேள்பாரியூர் புலவன் ஒருநாள் பகிர்ந்தானே.
பிறக்கும்போது இவன் பிறந்தது பாரம் என்றறிந்து இப்படி ஒரு புத்திரர் தேவையா என்னும் அம்சத்தில் அவதரித்தான் என் அமரன். வளரும்போது பொது வாழ்கைக்கு இவன் தேவையா என்று வையகம் மட்டுமேசாது ஐயன் ஊரே யேசுமதனை ஆதி சக்தியின் அருளால் உணர்ந்து வையகத்தை கண்டு விகடகவி எழுந்து பகடி பரிகாசம் பரியின் கனைப்பை கண்டேன் பரம்பொருளே.
மணவாழ்க்கை முடித்த பின்னும் பிழையேதும் புரியாபுரிந்து தவறு பல இழைத்த இவன் எப்படி உத்தமனாவான் என அஞ்ஞானியர் வினவ பட்டினம் அறிந்தாலும் பய பக்தியில் வாழ்ந்தாலும் அமரன் குமரப் பெருமான் கிரிநாதன் பிறப்பொத்தவனன்றோ அங்கும் நீதி நெறியுணர்ந்து நடந்தான் என் ஐயன் எல்லாம் அறிவாய் என் ஈசனே சிவகாமி நேசனே தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 5
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! கடையை விரித்து வைத்தேன் வாங்குவதற்கு ஆளில்லை கடையை மூடிவிட்டேன். இந்த வையகத்திற்கு தெரியும் நான் வளர்கின்ற சோதியாகும். இனியும் நான் வரப்போவதில்லை இந்த வையகத்திற்கு சொல்கிறேன் எனை இனி தேடாதீர்கள் என்றான் அளுள் தந்த ஞானசோதி. உண்மையை உரைத்து சொல்லும் பொது சர்சைகள் உருவாகும் எதிர்ப்புகள் பலவாகும்.
கால முடிவே உறுதி செய்யும் கல்கி தனி நபர் அல்ல கருத்தால் உணர்மனமே என் உயர்மனமே. ஒவ்வொரு ஆன்மாவும் கல்கியெனும் நிலையை எட்டிப்பிடிக்க போராடுகிறது அதில் அசுர சக்தியும் கல்கியெனும் இடம் பிடிக்க உறவாடுகிறது அது பலவீனமான ஆன்மாக்கள் உடலில் புகுந்து உண்மை கல்கியை தாக்கும். அத்தாக்கல் சொல்லாலும் அமையும் கூறிய வில்லாலும் அமையும். பாவக்கர்மாக்கள் அசுர ஆன்மாக்களில் உட்கார்ந்து ஒரு நல்ல விசியங்களை கொடுக்க விடாது முயற்சிக்க அதனை முடித்துகட்டுவான் என் அமரன் அறுபத்துநான்கு கலைகளாலே.
பாகம் : 8
உன்னை நேசி உயிரை நேசி உனக்குள் இருக்கும் மாயையை விளக்கி பார் உண்மையை உணர்ந்து நீ யார் என்பதை முதலில் அறிவாய் அப்போது நான் யாரென்பது உனக்கு தெரியும் உத்தமர்களே. யாவோயி யாமே யாம் ஓம் அது அ திரு நீயே அது அ மூலவர் உற்சவர். வேதமே தமிழ் விசுவரூபமும் தமிழ். இதைவிட எளிதாய் இயம்ப வேண்டுமோ இறைவா.
பிறைசூடாய் பித்தாகி பிழையாகி பிறை என்ற
பொருளாகி அவனுள் நானாகி பொன்னும் பொருளும் பிறர்மீதும் ஆசையற்று பிறர் சொத்து
மீதும் ஆசையற்று சிவனை வாழ்ந்து வரும் புள்ளிகளே உம் பிறப்பறுத்து மோட்சம் தருவான்
என் புண்ணியனே.
தவசிகள் யோகிகள் வருவர் பின்னே பொன் அமரனுக்குதவ. அசுரன் வருவான் முன்னே ஆதிக்கம் காட்ட. கல்கியின் இருப்பிடம் அறிய அவாநிலை கொண்டிருக்கும் ஆன்மாக்களே அதை உடைக்க பூலோகக்கைலாய மையப்புள்ளி உள்ளது அந்த மையப்புள்ளியிருந்து அவரை கொண்டு செல்ல வேண்டும். அம்மையப்புள்ளி எத்திசை நோக்கி கொண்டு செல்கிறதோ அந்த திசையை நோக்கி பயணத்தை தொடுக்க வேண்டும் அதுவே முக்கியத்துவம். பிறப்பு வளர்ப்பு இருப்பிடம் முன்பே உரைத்ததுதான் அதில் சில புதிர்களும் உண்டு அதிற்சில இடைச்சொருகல்களும் உண்டு பரம்பொருளே !
தஞ்சப்புகழ் என்றும் தரணியை ஆளவேண்டும் தஞ்சத்தின் தேகம் கொண்டு தலைவன் விண்ணுலகத்தை வென்று அடைய வேண்டும். மண்ணீங்கி போகும்போது தலைவன் புகழ் திசையெங்கும் பரவ வேண்டும் தார்மீக சொற்கள் அனைத்தும் வையகத்தில் வாழவேண்டும். ஆங்காங்கே மகான்கள் உதிக்கப்பெறுவர் அதில் சேனைகளும் மகான்களே ஆவர். அனைத்து அருளும் உனக்குளிருந்தே கிடைக்கும் வெளியே ஏதும் கிடைக்காதே, எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !தாலால் எட்டியிருந்தே காண் என் உயர்மனமே. ஒளி தெரியும் போது பல வெட்டுக்கிளிகள் ஓடிவரும் தீபத்திலதுவுரச கதிர்தழல் சோதியுடன் சாம்பலாகும். அதில் சில ஞானி என்னும் அஞ்ஞானி முக்தி வேண்டி இம்முடிவெடுப்பர். பின் மீண்டுமோர் பிறப்பெடுதுப்பர். அறிவுசார்ந்தே புனைந்தேன் மகான்களுக்கும் ஞானிகளுக்கும் இது வெளிச்சமென்பேன்.
அரியும் ஐயனும் ஒன்று தான். புலிமேல் ஏறிவரும் பலகோடி சித்தருண்டு அதில் எம் ஐயப்பனுக்கும் இடமுண்டு. அதில் சூழ்ச்சியும் உண்டு உள் நாதசாட்சியும் சிவனாக உண்டு. ஐயப்பன் முதல் சன்னதியில் மஞ்சள் மாதா உண்டு அது வாலைக்குமரியாம். எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !னைத்தும் அறிவான் எம் அமரன் ஒள அரங்க சிப்பின் கூலிப்படையாக வந்த நிசாமின் சிப்பாயின் ஒரு வாரிசும் தான் அசுரரூபம் எடுக்க தவறிழைபோர் தத்தளிப்பர் அது அகிலாளும் அரசனுக்கும் தான். தனது வாழ்நாளில் பூசைகளில்லை ஐந்துமுறை அவ்வாசானுக்கு. அடுப்பில் சாம்பலான உதி விபூதியாக அவன் வழங்க தேவாரத் திருமுறையும் மாயவன் அருளுரையும் உண்டென்பதையும் இரமலான் அமரனின் உற்றத்தோழன் என்பதையும் அறிவீர்.
என் அமரனை உலகாளும் உத்தமனை மனப்பிணியாளி கொடும்
கூட்டவாளி என ஏசும் நீ கிறுக்காகி கேவலப்பட்டு சிதைவுற்று கொடும் நரகத்தில் வீழ்வாய்
பேரறிஞர் என என்னும் பித்தரினமே. அது விரைவில் நடக்கும் இது என் சிவன் மீதாணை. சினத்தில்
சபித்தேன் குழந்தை நானோ என் அப்பனை ஒரு நாள் செல்லமாக, அன்று மூடியது அவன் குடில்.
என் நா (நாக்கு) செய்த வேலை என்னப்பன் ஈசன் உனக்கும் இப்படி ஆகிவிட்டதோ ! என
உக்கார்ந்து அழுதேன். பின் சாந்தரூபம் எனக்குள் எழுந்ததும் என்னீசனே உன்னை கட்டிய
உன் மகனை பொருத்தருள் என்றதும் அன்று முதல் ஆலயம் திறந்தது ஆறுகால பூசையும்
நடந்தது. எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே
!
பாகம் : 6
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! பச்சைக்கிளி துணையுடன் பாடியோர் பலரிருக்க நிலைநிதம் உயர அமரனுடனும் அதுவும் பேசும் இயற்கையுடன் பட்சி காக்கும் ஆசை பெரும்தூரம் பயணம் சிலதூரம் அது அறியாது போகும்போது பாதை வழுக்கி நிற்கும் கனியுண்ணும் கிளியும் உன்னுடன் வந்துசேரும். கிளியும் உண்டு வெள்ளைப்பரியும் உண்டு. தீர்க்க தரிசனம் நிதமும் உண்டு அதில் உண்மையும் உண்டு.
வரலாறு படைக்கும் மாகான்கள் பலரை தெரிந்துகொண்ட எனக்கு நான் யாரென்று தெரியாது அதனை உரைக்காது எனக்குள் உணர்ந்தும் உணராது புலம்பவிட்ட எம்மீசனே தில்லை நடராசனே படிநிலைகள் ஈரொன்பது பாகங்கள் ஈரேழு பயணங்கள் ஈரைந்து ஆதிக்கம் இருமூன்று அதன் ஆசி ஐந்து. அ உ எனுமிரண்டும் துணையும் உண்டு அது கதிர்மதியாவர். இதனை கடந்து போகும்போது வெட்ட வெளியில் ஓம் உண்டு உயர் ஆன்மாவே.
அஞ்சமத்திற்ருள் என் ஐயனுக்கு வழியைக்காட்டி அருள்சோதிதனை அவனுக்குள் ஊட்டி ஆனந்த நிலையில் அவனை நிறுத்தி அகப்பட்டதோர் சிவநிலையைக் காட்டி சிவனென்ற பொருளாக அவனை உணர்த்தி அரிநிலையும் உணரவைத்து அவனுள் காட்டி என் ஐயன் திருவடியை நான் கண்டு பார்க்கும்போது அகமகிழ்ந்து நிற்கின்றேனே ஆனந்த ஜோதியாக என் ஐயனுள்.
உணராத மானிட பிறவிகளே உணர்ந்து வரும் காலமும் இருக்கிறது சத்திய நேரமும் இருக்கிறது உள்ளத்தைப்பார்த்து பெரும் உண்மையை உணரு. ஒருவர் மனமும் புண்படக்கூடாது ஓம்காரம் உனக்குள் கேட்கும்போது நாத ஓசையும் உனக்குள் தொடரும் ஐயனே எம் அமரனே. நாதங்கள் பத்தும் கேட்கும் அத்துடன் சாந்த ஆரமெனும் சந்தன வாசனையும் சவ்வாது புனுகும் உன்னுள் வீசம். தேகம் முழுவதும் மணக்கப்பெறும். ஐந்தறிவு சீவன் அனைத்தும் உன்னுடன் பேச முன்வரும் பாதையை கவனத்தில் வை. பரமாத்மா பிறப்பெடுத்த ஐயனே உலகாளும் அழிவில்லா அரசனே.
காயபிரம்மா ஆட்கொண்டிருக்க மானிடன் பிரம்மாவில் ஆழ்ந்திடுவான் அது சிவபிரம்மம் என்றால் தவறில்லை. காய பிரம்மமோ பித்து நிலையைத்தரும், அந்நிலையில் வாழ்வோர் பலர். அவர்கள் பற்பல துபங்களை அடைந்து இனி அமரரினம் உதவாது ஆதாலால் அசுர இனம் துணைகொண்டு உதவி கேட்போம். என்று பலவீனம் அடையும் அப்போது சுலபமாக நுழையும் அவ்வுடலில் அசுர ஆன்மா.
மக்களுக்கு பயனான மந்திரங்கள் பலவுண்டு. பொதுவெளியில் பொருளீட்டி அழியும் ஆன்மாக்களுக்கு அது பலிக்காது. ஆதலால் குருமுகமாக உரியவருக்கு சென்று சேரும். ஒருவிதை போட்டால் பலவிதைகள் வந்து சேரும். அது நன்மை தீமை இரண்டிலும் சேரும். அசைந்த பொருளைவிட அசையாத பொருள் பலகோடி உண்டு மானிடரின் மனமும் அதுபோன்றேவாகும் எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 7
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! மையப்புள்ளி மத்திமமாகும் வாலை இருப்பிடமும் பசுமையாகும் ஒளியென்ற பொருளாகும் மூன்று சுடரென்ற சோதியாகும். கல்கி என்ற மனமே என் அருள் கொண்ட தெய்வ நிலையே உனக்காக இந்த பொருளை நான் உரைக்கிறேன் அதன் புதிரையும் விளக்குகிறேன்.
புறவுலகிற்கோ வாலைசக்தி பெறவேண்டிய இடமென்பது கன்னியாகுமரியாம் அகவுலகே கேளாய் சிவவுலகநிலை உனக்குள் இருக்கும் மூன்று சுடரே, வாலையின் இருப்பிடம். பசுமைநிறத்தொடு ஆட்சிபுரியும் முச்சுடரும் முக்கடலும் சங்கமிக்குமிடம் ஆதவனுதையம் கன்னியாகுமரியாம். கல்கி உனக்குள் உதயமாகும் சூரியன் மூன்று சுடரையும் குறிக்கிறது மனோன்மணிய தாயும் உன்னை அரவணைக்கிறது
புதிரையும் விளக்கிவிட்டேன் புலமையையும் உனக்கு அருளிவிட்டேன் எம் முன்னோர்கள் முடிட்சை என் அமரன் உனக்காக நான் அவிழ்த்து விட்டேன் சத்தியின் இருப்பிடத்தை வெட்டவெளியில் வெளிச்சமாக விளக்கிவிட்டேன். இனியும் அன்னையை அறியாதிருக்காதே மூவிட முச்சுடருடன் முக்கடலும் உனக்குள் உண்டு. சிறுபொழுதைந்தல்ல ஆறே அதில் விடியலில் வருவான் கதிரவன் அது புறவுலகம் உனக்குள்ளும் உதயமாகும் இது சிவவுலகம் உணர்ந்துகொள் அங்கே தான் உனக்கு சக்தி வரும்.
உதிக்கின்ற சூரியன் அண்டத்திலும் உண்டு பிண்டத்திலும் உண்டு இதனை சிவன் பிள்ளைகளறியும். அது அருள்முகமாகவும் கிடைக்கும் உற்ற குருமுகமாகவும் கிடைக்கும் கல்கி நீ இதை உணரும்போது பூமியில் வளரும் விருட்சங்கள் தலைகீழாக உன் உடலிலும் வளர்கிறது தினம் நிகழ்கிறது. நீ புறப்படுபோது ஈராறு காலம் உன் தேகத்தில் தலைகீழாக சீவசக்தி நடனம் புரியும் அலையலையாக உன் தேகத்தை வருடிச்செல்லும் பிரம்மமூல முதுகுத்தண்டு வழியாக ஈராறாண்டுகள் பயணிக்கும். உனக்குற்ற குரு இருப்பதனால் குற்றங்கள் உடல்பேதை உபாயம் நீங்கி கீழிருந்து மேலேறும் அதுவே குருமுக உபதேசம். நான் மையப் புள்ளியிலிருந்து வடதிசை நோக்கி வணங்குகிறேன் எம் அஞ்சான் கல்கி பகவானே.
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! வேடதாரிகளும் வையகத்தில் உண்டு வேதம் இயற்றியவர்களும் உண்டு காவியை உடுத்தியவர்களும் உண்டு கண்டமணி கட்டியவர்களும் உண்டு உண்மையை உணர்ந்தவர் உண்டோ எம் நடராச ஈசனே !
சக்திபீட வாசிக்குதிரை வந்து நிற்கும் சரியாக பொருத்திப்பார் என் பூலோக உயரினமே, சவிடு சாக்கை தோள்மேல் சுமந்து கொண்டிருக்கிறேன் ஆடும் அம்பலம் அவனாக நானிருந்து ஆடும்பொழுது ஆகாயம் பூமியும் நானாக இருந்து பாடுகிறேன் பாடலே !
மாற்றம் என்பது மதிற்குள் வரவேண்டும் நீ யாரையும் திருத்தாதே உன்னை நீ முதலில் திருத்திக்கொள் உள்ளதை திருத்திக்கொள் உண்மையை அறிந்துகொள். ஆகாயத்திற்கும் பூமிக்கும் அவனுள் அடங்குபவன் சக்தி ஐந்தையும் அடக்கத்தெறிந்தவனே ஆவான்.
மண்ணில் மைந்தனாக நான் வருவேன் மன்னவனாக நீ இருப்பாய் மணிமுடி அருளும் ஆட்சிபீடமும் உனக்குண்டு ஆள்வது எங்கே, ஐயனே உனது புகழைப் பாட எனக்கும் நீதியுண்டு அறநெறி பாடவேண்டும் ஐயன் புகழை அவனுள் இருந்து அவனை பாட வேண்டும் நீ என்னுள் இருந்து உன்னை பாடவை வரதா !
உண்மையை உணர உள்ளம் மகிழ உன்நிலையை நீ உணர உனக்குள் இருப்பான் ஈசன் ஆசான் அருநிலை எம் அமரனுள் உண்டு சுடர் மைந்தனே சோதியைப் பார் அருள் மைந்தனே அவனை கார் அவனுள் இருந்து என்னை பார் உன்னுள் இருக்கும் ஈசனை உணர்ந்து பார் ஜீவனாக வந்து ஜீவனாக சென்றாய் மண்ணில் வந்தவேளை உனக்குள் மாயையாக நின்றுவிடும்.
உன்னிரு கால்களே இராசகோபுரங்கள் உன் ஆண்குறியே கொடிமரம் நெஞ்சே பலிபீடம் அது நந்தி இருப்பிடம் வாயோ வாசல், தலை ஈசனுடைய சன்னதி. நீ மல்லாந்து படுத்து உன்னிரு கால்களையும் இணைத்து ஆகாயத்தை பார்க்கும்போது கோபுரத்தன்மை வரும் இடையில் வாய்வாசல் வரும் அறிவாய் அமரப்பெருமானே எம் அஞ்சா தமிழனே !
உன்னதமான நிலையில் உனக்குள் ஓம்காரம் வட்டமிடும் அவிடத்தில்தான் அன்னை அகிலாண்டேசுவரியும் வாலை மனோன்மணிசக்தியும் சீவசக்தி புறப்படும் நேரத்தில் உனக்கு ஆசிபுரிவர். அண்டத்தில் இருப்பதை நினைத்து நிலை குலையாதே இம்மனித பிண்டத்தி லிருக்கும் நிலையான வாழ்வைபெறு அதுவே அழிவில்லாத ஆட்சியாளனெனும் சீவசக்தியோடு சிரஞ்சீவி என்ற சக்தியை தரும்.
தொப்புள் கொடித்தாமரை தொப்புள்கொடி உறவே அமரனசுரனாகும். அசுரன் அமரனாக வேண்டும் அதற்கோர் வடிவம் அமைக்கப்பட வேண்டும் தாமரை மலர வேண்டும். தலைக்குள் தாமரை மலர அவன் அமரரினமாவான் மலர் மலரா நின்றவன் அசுரரினமாவான். இங்கு போர்புரிய இயற்கையை நீ தேவ உலகாக பார்க்கும்போது தேவகுணத்திலும் இராக்கத உலகாக பார்க்கும்போது அது இராக்கத குணமாகவும் இரண்டாக மறைந்திருக்கும் கல்லுக்குள் உள்ள தெய்வத்தை நீ காணாதே உன் உள்ளுக்குள் இருக்கும் தேவதையை நீ காண். மானிடராய் பிறத்தல் அரிது அவன் கடவுள் ஆகலாம் எம் உயர்மனமே !
நெஞ்சம் பெருங்கடலாகும் நீரென்பது அலையாகும் ஆணவங்கள் அதில் படகாகும் ஆகாயத் துளியிலிருந்து வரும்போது நீர் முத்துச்சுடர்களும் பெருகபெறும் முத்து மழையெல்லாம் முத்தாகிடாது ஆழ் கடலிலன்றோ அதுவிருக்கும். முத்துக்கள் பல வந்து போகின அதில் இவ்வறம்பாடி ஓர் அசைவாவேன் எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 8
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! ஐயனே கல்கி இதுவரை சொல்லியும் உன்மனம் ஏற்கவில்லை. இன்னொரு புதிரையும் உடைக்கிறேன் கேள் ஐயனும் அன்னையும் அகிலாண்ட நிலையும் உனக்குள்ளும் இருக்கிறது அனைத்து சீவராசிக்குள்ளும் இருக்கிறது. உணராத இருக்கும்போது உனக்கு சொல்லும் பதில் ஒரு விதையை போட்டால் அந்த ஒவ்வொரு விலையிலும் ஆக்கல் அழித்தல் தன்மை காத்தல் தன்மைகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்துகொண்டிருக்கிறது பிரம்மம் உணர்ந்திருக்கிறது அதை உணரவேண்டும் என்றால் சிவநிலையை உட்கடந்துபார் பிரம்மா விஷ்ணு சிவன் இவர்களுடைய படைப்பின் ரகசியமும் இதுதான் மெல்ல மெல்ல உணர்ந்து மத்திம நிலைக்குவா மனமயக்கம் கொள்ளாதே.
இந்த உலகில் உன்னை இயக்க பல சக்திகள் உண்டு உன் மனமாயையை மாற்ற உனக்குள் இருக்கும் அசுர சக்தியும் வேலை செய்யும் என் முகம் கொண்டு உன்முகம் பிறவாத நிலை கொண்டு ஈசன் நினைவாகவே இருந்துவிட்டால் நிலை என்பது உனக்கு உணர்ந்துபோகும். காலையில் உன்னை தட்டி எழுப்பும் உனது சுவாசநிலையை உணர்ந்துபார். மாலையில் உறங்கும்போதும் உன் சுவாச கதியைப்பார். பிரபஞ்சம் உணர்த்தும் ஓசைகள் உனக்குள் ஓடும் ஓம் ஸ்ரீம் ஒவ்வொரு மகான்களும் ஞானிகளும் இதைமட்டுமே காலாகப் பிடித்துக்கொண்டு போய்கொண்டிருக்கிறார்கள்.
உன்னுடைய சுவாசகதி உட்புகும்போது ஓம் ஆகும் சுவாசம் வெளியிடும்போது ஸ்ரீம் ஆகும். ஓம் ஸ்ரீம் இதை விட்டுவிட்டால் பிறப்பற்ற சவம். பிறவா நிலைபெற இதனை கடக்க வேண்டும் ஓம் ஸ்ரீம் அறிய வேண்டும் உத்தமனாய் இந்த உலகத்தில் நீ வாழவேண்டும் உன்னததோடு நிலை எதுவென்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். அருள்நிலையோடு ஆசான் பாதம் பணிய வேண்டும். ஐந்தோடு இரண்டையும் சேர்க்க வேண்டும் ஆறுமுகன் துணையை அவனுள் அடிபணிந்து வாங்க வேண்டும். ஐயன் புகழ் ஒருபொழுதும் மறவாத நிலைவேண்டும். அவன் உன்னை மறந்தாலும் நீ அவனை மறவாதநிலை வேண்டும் எனும் வரம்பெற வேண்டும்.
தன்னை உணராத மானிடர்கள் பலருண்டு உன்னை உணராத சில நொடி உண்டோ ! உண்மையை அறிந்தவன் ஒருபோதும் பேச மாட்டான். நிலை அறியாதவன் பிறை என்று பிதற்றிக்கொண்டிப்பான் மாய செடிகளை கண்டு மனமயக்கம் கொள்ளாதே மருகியும் நிற்காதே. நீ பார்க்குமிடமெல்லாம் பசுமை உன் கண்ணுக்குள் தெரியும் மிகப்பெரிய பேரொளி அண்ட நிலை அந்த அண்ட நிலையை நீ உணரும்போது உன் கண்ணில் தெரியும் பேரொளி. நிலை. குத்திப்பார் நின்றுப்பார் அதோடு ஒன்றிப்பார் சுவாச கதியோடு ஒன்றாக உணர்ந்துபோ சுவாசகதிநிலையை உற்றுப்பார் நிலையாகப்பார் நீ என்பதை உணர்துபார்.
எண்ணிலடங்காத சக்திகளும் உண்டு இறைவன் நிலையம் அதற்குளுண்டு ஈசன் நீயே என்பதை உணரலாம் உன் முன்பே நிற்கும் ஈசன். அனைத்து சீவராசிக்குள்ளும் அதுவுண்டு. உணர்ந்தால் மட்டுமே உனக்கு உண்மை புலப்படும். மண்ணின் நாயகன் பலகோடி உண்டு இந்த மண்ணை ஆளவேண்டும் என்றால் மனிதநேயம் உண்டு. சிரஞ்சீவி நிலைபெற சிரத்தைப்பார் அதை நிலையூன்றிப்பார் உன் புருவ நெற்றி வழிவிடும் அமஎல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! வடக்கு வாசல் அங்கிருந்து ஐயனை வணங்குகின்றேன். புதிர்மேல் புதிர் வைத்தேன் பூசவிதி நாதன் அவனால். எண்ணிலடங்கா மகான்கள் இருக்க, எடுத்தான் என் சாதகத்தை சாதூர்யமாக. சக்தியருளாசி ஞானமதி வித்துவான் அசாத்திய விசியத்தை அபரிவிதமாக மாற்றினான் நான் அதில் யாரை குறிப்பிட்டுச்சொல்ல பரம்பொருளே !
நெற்றியில் இட்ட திருநீறும் நெஞ்சில் பூசிய விபூதியும் (திருநீறு) தவசிரிசி மாயையன்றோ உடல்முழுக்க சந்தன சவ்வாது வாசனை தெளித்தனர் பற்பல வாசனை உணர்ந்து பலவித நாதங்கள் ஒலிக்க கேட்டேன். மெல்லிய ஒலி அதிபிரகாசமாக கேட்கும் அதன் அருமை தெரிய எம் ஐயனோ சப்தத்தை செவியில் நுழைந்த பூச்சென எண்ணி நள்ளிரவெழுந்து காதில் தண்ணீரை ஊற்றி சுரண்டுறங்குவான்.
தலையில் தலைப்பாவுடன் இடுப்பில் துண்டை கட்டி வரிந்து வருவர் பலர் கல்கியென வாங்க வணக்கமென போவான் அமரன். அவர்க்கு விழாவும் எடுப்பான் ஏகலைவன். அவன் சாதக மதியான் சரியாக கணிப்பான் யார் யாரினம் என்று நேரம் எடுத்து நேர்த்தியாய் முடிப்பான் கயவர் உயிரை.
அப்போ அசுரநாளும் இப்போ சோமசாமியாலும் வனவாசநிலை அது பத்திற்கு மேல் வருடம். இது இறுதி பட்டாபிசேகம் என்றான் ஆசான் அவனொரு ஆருடனாவான். கன்னியும் கன்னியாகுமரியும் ஒன்று சேர அங்கே தான் முக்கடல் சந்திப்புடன் மூன்று சுடர் சந்திப்பும் நிகழ ஆசிய கண்டமே அவனை திரும்பி பார்க்கும்
பூசத்தில் பிறந்த புண்ணியவான் அவன் எதிரிக்கும் நேசம் தந்தருள்வான் நீதியை ஒருபோதும் தோற்க விடமாட்டான் நண்பன் மகதியும் புடலம்பூவே அவனுடன் ஆளும் அழிவில்லா அரசனும் அப்பூவாம் பூசமே. தலைவன் பல அதில் கல்கியோ உத்திர பூவாம் ஓரிரு பூ அல்ல ஓராயிரம் தாமரை பூ என்பதை அறிவாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! ரப் பெருவாழ்வும் வாய்க்கும் எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 9
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன தன்பிறவி உறவுகூடி தனந்தலை குவித்தென்ன கணப்பெயர் எடுத்தென்ன தரணியே ஆண்டென்ன சேயாய் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன சீடறாய் இருந்தென்ன சித்துபல கற்றென்ன நித்தமதர்மங்கள் செய்தென்ன நதிகலெல்லாம் ஓயாமல் மூழ்கி என்னபலன், எமநூலொன்றை கண்டு தடுக்க உதவுமோ, இவையெல்லாம் தந்தையுறவு. இன்றுதான் உன் இருபாதம் பிடித்தேன் யார்மீதும் அறமிருந்தாலும் கடைக்கண் ஒன்று போதும் பரம்பொருளே !
நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் உன் செவியென்ன மந்தமுண்டோ, நுட்பநெறி அறியாத பிள்ளையை பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ தந்திமுகன் அறுமுகன் இரு பிள்ளையல்லவோ தந்தை நீ மலடுதானோ, விந்தையும் ஞானமும் உன்னிடம் இருக்குதென்று வினையேதும் அறியேனே வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுது வேடிக்கை இதுவல்லவோ. சொல்லவுமிந்த உலகின் ஈரேழும் ஏன் அளித்தாய் இனியும் உன்னை விடப்போவதில்லையே.
பாரதத்தில் பஞ்ச பாண்டவரும் நமசிவயத்திற்குள் ஒடுங்க பாஞ்சாலியம்மா வாலை சக்திக்குள் ஒடுங்குகிறது. அழிவில்லா பத்தினி வாலை அக்னி வடிவாம் அவள் ஏற்றும் தீபம் அனைவருக்குள்ளும் உண்டு அவ்வைந்தை ஒன்று சேர்க்க சூழ்ச்சி என்ற சகுனியை வைத்தார்கள். காலநேரம் வரும்போது குறையில்லா நிறையை கொண்டுவர அதை வெல்லும் தன்மையை எம் கிருஷ்ணரிடம் வைத்தார்கள்.. வந்து வந்து போகும் மானிடரினமே.
தென்பொதிகை குமரி என்பது புறமுகம். வடதுருவம் சிவத்தின் தலைப்பகுதியில் அருவிக்கொட்டும் இதுவே மலையாகும் இதுவே தென்பொதிகையும் ஆகும். இருபிள்ளையும் ஒருபிள்ளையே உம் முதற்காட்சி மிகப்பெரும் பேராற்றல் கொண்டு சாம்பல் நிற ஆடையுடன் போர்புரியும் காட்சி அது அழிவில்லா ஆட்சியாளன். மற்றொருவர் அழிவில்லா அரசன் அவர் இவ்வுலகத்தில் எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பார். இரண்டும் ஒன்று காரணம் இரண்டிற்கும் மனமோ ஒன்று.
இவர் நினைப்பதை அவர் செய்வார் அவர் நினைப்பதை இவர் செய்வார். இதுவே சூட்சமம். ஒரே நபர் பலகோடி இடத்தில் அவர் ஆற்றலை வெளிபடுத்துவார். அழிவிற்கும் ஆரம்பத்திற்கும் அவரே காரணமாகும். கட்டளை அவன் செயல் இவன்.
தெளிவர் புரிய புதிர் விளக்குகின்றேன் சிக்கல் என்னவென்றால், இது ஈசன் உணர்த்துபவை. இருவரில் ஒருவர் மிகப்பெரிய ஆற்றல் மற்றொருவர் முன்னவறது எண்ண பிரதிநிதியாவர். எண்ணம் ஒருவர் செயல் ஒருவர். கல்கிக்கு தானாக பயிற்சியும் பானியும் வரும் பரசுராம் குருவென வருவது ஒரு சூட்சமம்.
அறுபத்து நான்கு கலைகளும் ஓதாமல் உணரப்பெற்றேன். உள்கடந்து போனதனால் உன்னதத்தை பெற்றேன். நான் ஈசன் என்பதனை உணர்ந்து விட்டதனால் எனக்காரும் ஈடில்லாததை உணர்ந்தேன் ஆதிசிவனும் நானே ஆவேன் அண்டமும் நானே ஆவேன் அதிலிருக்கும் அம்பலமும் நானே ஆவேன் என்றான் அறுபதாயிர உரையில் அது புறயுலகிற்கில்லை என அருளினான் அருட்பெரும்சோதி அகவுலகினருக்கே இது ஞானிகளுக்கானது எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 10
பத்தும் உனக்குள் உறைந்திருக்க ஒவ்வொன்றும் உணர்ந்துன்னை சூழ்ந்து நிற்கும் ஜென்மாந்திர தொடர்பிது இனம்புரியாது பத்தும் இங்கு வர பிரபஞ்சம் அருளும் சக்தியது பத்தும் ஒன்றாகி ஐயன் உயிராகி நித்தம் நிகழ்வதே கல்கி அவதாரம் எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசன் எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 11
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! போற்றிப்புகழவும் புண்ணியத்தை விளைக்கவும் மனிதனுக்கு போகத்தை அளிக்கவும் புண்ணிய கருமங்கள் மிகவுண்டு அதை புத்தி நிலைமாறாமல் உடல் சக்தி இருக்கும்போதே செய்துவிடு. ஆதவன் மறந்த பிறகு அதை வணங்கி பயனேதுமில்லை. அற்புதங்கள் பலவுண்டு ஆசான்கள் நிலையம் உண்டு அஞ்சை உணரும்போது ஆகாயத்தில் தீப்பொறியும் உண்டு. தெளிவில்லாத மானிடமே கணதேகமும் உண்டு மண்ணில் மரதேகமும் உண்டு மைந்தனாக வருவான் மாணிக்கச்சுடராக அளிப்பான் பந்தை அவனே பழிவாங்கவும் நினைப்பான்.
காமக்குதிகள் பலவுண்டு கல்கி அவதாரமும் இக்காலத்தில் உண்டு ஐயன் வரும் வேளையில் ஐந்தறிவு கொண்ட ஜீவனும் பேசத் தொடங்கும் ஆறறிவு கொண்ட மனிதன் சூழ்ச்சியில் அகப்படுவான் மீட்சை கொண்டு தீட்சை ஒவ்வொருவனும் உயர்த்திக்கொள்வான். உன்னதத்தை குருவினிடம் பறைசாற்ற மாட்டான். பசி பட்டணி இருந்தாலும் கைப்பிடி சாதம் அள்ளித் தரமாட்டான்.
ஆலயத்தில் தீபாதாரனை காட்டி திருநீறு அள்ளிபூசி வேடதாரிகள் மட்டுமே மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பர். சர்ச்சைகளும் உண்டு பல பாவச்செயல்களும் உண்டு. தாயாருடன் மகனும் மோகத்தில் மூழ்கி இருப்பான் அவன் முக்தியை மறந்திருப்பான் சக்தியை இழந்திருப்பான் ஜென்மஜென்ம பந்தத்தையும் தீயிக்குள் எரித்திருப்பான். அவன் மயான பூமியை தொடும்போது மட்டுமே மார்கங்கள் வரும்.
இரத்தத்துளிகள் ஒவ்வொன்றும் விழுந்திருக்கும் சத்தியம் உரைக்காத ஒரு வார்த்தை என்றும் சுடராக நிற்காது ஒருபொழுதும் பொய்யர் சொல்வர். கல்கி தேகம் மெல்லிய தேகமாக இருக்கும் மெய்யும் கொண்டு உடல் நெலிந்திருக்கும் சத்திய நீதி உடம்பிற்குள் ஊறியிருக்கும் சத்திய பொருளோடு உணந்துநிற்கும் கடும் துன்பங்கள் வரும் அக்கணம் உணருவான் அமரன் பண்ணும் பாவத்திற்கு இவ்வையகத்திலேயே நசுக்கப்படுவர் சொந்த உடலுடன் உயிரும் சொந்த நாட்டிலே அடிமைப்படும்.
தஞ்சப்புகழ் என்றும் தரணியை ஆளவேண்டும்
தஞ்சத்தின் தேகம் கொண்டு தலைவன் விண்ணுலகத்தை வென்று அடைய வேண்டும். மண்ணீங்கி போகும்போது
தலைவன் புகழ் திசையெங்கும் பரவ வேண்டும் தார்மீக சொற்கள் அனைத்தும் வையகத்தில்
வாழவேண்டும். ஆங்காங்கே மகான்கள் உதிக்கப்பெறுவர் அதில் சேனைகளும் மகான்களே ஆவர்.
அனைத்து அருளும் உனக்குளிருந்தே கிடைக்கும் வெளியே ஏதும் கிடைக்காதே, எல்லாம்
பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 12
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! அரக்கரினமோ பலகோணங்களில் தன் வேலையை காட்டும் எம்மறப்பாடல் வரும்போதே ஏன் தடுக்க இயலவில்லை உம் அறம்பாடியாறும் உம் ஆதிசிவனும் அதலால் உம்பாடல் புனைவு, ஒரு காட்புணர்ச்சி இதை தேவர்கள் அறிவர். இதை உற்று பார்த்து இவனும் அறம்பாடியில் ஒருவன் என்று வாழ்த்தி மகிழ்ந்தான் ஈசனவன். அரக்கரின சொருகல் புனையும் கவிஞர்களே மனிதப்பதரும் உண்டு அதில் மருவினிற்கும் உமியும் உண்டு. அசுரரின உன் சாபமோ கோபமோ சாம்பலாகும் சாம்பவன் வந்ததனால் உனக்கு பதில்தர போதும் இவ்வரி புரிந்து வருவாய் விறகுடைப்போனே !
பாகம் பதினெட்டு அந்த பதினெட்டில் பணிவும் எட்டு பார்த்தது பொருளிட்டு படைத்தது இரண்டெட்டு கல்கிக்கு முன்வந்த நிகழ்வு மணிகண்டன் வரலாறு, பதினெட்டாம் படியாம் உத்தமனாய் இம்மண்ணுலகில் ஆளவேண்டும். உண்மையோடு இறைவனை நாட வேண்டும். ஈசன் பிள்ளையாக அவன் மாற வேண்டும் இந்த அன்பத்தை அவனே ஆளவேண்டும். ஐம்பூதங்கள் அவனுக்குள் ஒடுங்க வேண்டும். பஞ்சாட்சர நாமங்கள் என்றும் உணர வேண்டும்
பக்தியும் சித்தியும் முக்தியும் சிரஞ்சீவி என்ற நிலையம் அவன் உயரவேண்டும் பாகம் பதினெட்டு படிநிலைகள் ஒன்றாகும். இறைவன் முதல்படியோ வேந்த விநாயகர், எனக்கு விட்டருளும் சக்தியருளும் வேதாந்த பொருளும் எனக்குள் மூட்டு. என்னிலை உயர தன்னிலை உணர என் நிலையை உயர்த்திச் செலவாக வாழை பூப்போல் இருக்கும், வாயழகும் பெரும் சாறாக இருக்கும் வயிறழகும். நீண்ட தந்தங்கள் இருக்கும் பிலழை முகத்தழகும் உன்னுடைய நிலையை உணரும்போது என்னுடைய முதற்படி இதிலே ஆரம்பமாகிறது..
பதினெட்டு படியாம் அதில் முதற்படியில் இருக்கிறான் கணபதி. சபரிகிரிவாசன் பதினெட்டுப் படியையும் உணர்ந்ததனால் பதினெட்டுபடி ஆலயம் அமைக்கப்பட்டது மனிதனாக வாழ்ந்து இறைவனாக உணர்ந்தவனே ஐயப்பன் என்றும் கன்னித் தன்மையோடு சிரஞ்சீவியாக சுத்த சன்மார்க்க நிலையிலிருந்து துளசிமணி அணிந்தான் இது அரிக்கும் பொருந்தும் ஐயப்பனுக்கும் பொருந்தும்.
அரியும் ஐயனும் ஒன்று தான். புலிமேல்
ஏறிவரும் பலகோடி சித்தருண்டு அதில் எம் ஐயப்பனுக்கும் இடமுண்டு. அதில் சூழ்ச்சியும்
உண்டு உள் நாதசாட்சியும் சிவனாக உண்டு. ஐயப்பன் முதல் சன்னதியில் மஞ்சள் மாதா
உண்டு அது வாலைக்குமரியாம். எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 12
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! இன்னல்கள் பலகோடி இருந்தாலும் இன்பங்கள் சிலவிடத்தில் மட்டுமே உண்டு, உன் ஆசையும் பிறராசையும் பெரியாருடைய நிலையாசையும் பெருங்கடலாக இருக்க, உத்தம குருமாரிடம் பணிந்திருந்து வித்தையை கண்டான் யோகி. சிவநிலை சொல்லது அச்சொல் பயனற்று போகாது பலனாகத்தான் இருக்கும் ஆகினும் அங்கு சக்தி குறையும் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் எம் ஞானியாரினமே !
பாடல் இயக்கம் என்பது பசும்பாலாகும் சுத்தத்தமிழ் தேகம் எப்படி தூய்மை உள்ளத்தோடு இருக்கிறதோ அதுபோன்றே பசும்பாலும் உள்ளது. பூர்வஜென்ம நிலையை உணர்ந்து கலி துன்பங்களும் மாயைகளும் அமரன் தேகத்துள் வந்து சேரும்போது பால் தயிர் வெண்ணை ஒருமுகமாக இருக்கும்போது பலமுகம் அதற்குளிருந்து வெளிப்படுகிறது. அவ்வாறே அமரனை சூழ்ந்து துன்பங்கள் கடைய, அவன் உயர்ந்தே பால் போல் உருப்பெறுகிறான்.
பால்மேகம் மிஞ்சும் அளவிற்கு ஒளி பெறவேண்டும் தேகம். ஐயன் தேகம் ஒளிப்பெறும் காலத்தில் உன்னதமான நிலையை கண்டு என் ஈசனும் வருவான் ஐயனை பார்த்து வாழ்த்த, நீ ஆலயம் செல்ல வேண்டாம் நான் உனக்குள்ளே இருக்கிறான் என்னை உணர வைப்பது யார் என்று நீ வெளியே தேடாதே. நான் வெளியில் இல்லை கல்கி, நான் உனக்குள் இருந்தே உன்னை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
தன்னை உணரும் காலம் வரும்போது நீ என்னையும் உணருவாய் ஐயன் பொருளென்றும் அவனுக்குள் அடங்கும். பரபிரம்மமாகவும் பால்மேகமாகவும் விண்ணுக்கும் மண்ணுக்கும் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் உனை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் பார் மனமே பார் உன் பயணம் தொடர வேண்டும் நிலையை நீ உணர வேண்டும்.
அமரன் புறப்படுபோது அருள் தந்தை ஆசியுண்டு பிரதிபலனோ திருவாதவூரான் ஏட்டைப்பாடும நிலைகூடும். ஐயன் புகழை உணர்ந்து கொள்ளும்போது மனம் ஆடிக்கொண்டது ஆராய்ந்து பார்க்கும்போது ஐயன் நிலை துன்பத்தைக்கண்டு கண்ணீர் ததும்பி மனம் வெதும்பியது என் ஆத்தாள் துணைகொண்டு ஐயன் கடையேறும் நிலையது என்று வருமோ, எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 13
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! வேடதாரிகளும் வையகத்தில் உண்டு வேதம் இயற்றியவர்களும் உண்டு காவியை உடுத்தியவர்களும் உண்டு கண்டமணி கட்டியவர்களும் உண்டு உண்மையை உணர்ந்தவர் உண்டோ எம் நடராச ஈசனே !
சக்திபீட வாசிக்குதிரை வந்து நிற்கும் சரியாக பொருத்திப்பார் என் பூலோக உயரினமே, சவிடு சாக்கை தோள்மேல் சுமந்து கொண்டிருக்கிறேன் ஆடும் அம்பலம் அவனாக நானிருந்து ஆடும்பொழுது ஆகாயம் பூமியும் நானாக இருந்து பாடுகிறேன் பாடலே !
மாற்றம் என்பது மதிற்குள் வரவேண்டும் நீ யாரையும் திருத்தாதே உன்னை நீ முதலில் திருத்திக்கொள் உள்ளதை திருத்திக்கொள் உண்மையை அறிந்துகொள். ஆகாயத்திற்கும் பூமிக்கும் அவனுள் அடங்குபவன் சக்தி ஐந்தையும் அடக்கத்தெறிந்தவனே ஆவான்.
மண்ணில் மைந்தனாக நான் வருவேன் மன்னவனாக நீ இருப்பாய் மணிமுடி அருளும் ஆட்சிபீடமும் உனக்குண்டு ஆள்வது எங்கே, ஐயனே உனது புகழைப் பாட எனக்கும் நீதியுண்டு அறநெறி பாடவேண்டும் ஐயன் புகழை அவனுள் இருந்து அவனை பாட வேண்டும் நீ என்னுள் இருந்து உன்னை பாடவை வரதா !
உண்மையை உணர உள்ளம் மகிழ உன்நிலையை நீ உணர உனக்குள் இருப்பான் ஈசன் ஆசான் அருநிலை எம் அமரனுள் உண்டு சுடர் மைந்தனே சோதியைப் பார் அருள் மைந்தனே அவனை கார் அவனுள் இருந்து என்னை பார் உன்னுள் இருக்கும் ஈசனை உணர்ந்து பார் ஜீவனாக வந்து ஜீவனாக சென்றாய் மண்ணில் வந்தவேளை உனக்குள் மாயையாக நின்றுவிடும்.
மனமயக்கம் கொள்ளாதே மைந்தனே இது மனமாயை சுவாசம் உண்டோ இல்லையோ என்பதை உணரப்பெறுவது உள்ளத்தில் உணர்ந்தாய் உண்மையை மறந்தாய் உள்ளம் ஓதாமல் உணரப்பெற வேண்டும் உண்மையை மறப்பெற வேண்டுமென்றால் வாசிக் குதிரையோடு பயணம் செல்லும்போது உன்னையும் மறந்து செல்வாய் செழித்திரு பயிரே பக்குவ நியதிதி கண்டு வருந்தாதே எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 14
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! தீட்சையுடன் திருநீறும் மந்திரயெந்திரமும் படிநிலையைத் தரும் எனவெண்ணி பொருளோடு போவான் பொய் குருநாதனைத் தேடி புத்தியற்றோன். உண்மையை உணர உள்ளம் மகிழ உன் நிலையை நீயுணர உனக்குள் இருப்பான் ஈசன். நீ கதவடைத்து காற்று போகா நிலைதனில் அமர்ந்திருந்தாலும் நீ உண்மையாய் இருக்கும்போது உனக்குளிருக்கும் ஈசன் உன்னருகில் இருப்பான். ஆசான் அருள்நிலை வெளியே இல்லை ஐயனுள்ளே இருப்பதாகும்.
சுடர் மைந்தனே ஜோதியைப்பார், அருள் மைந்தனே அவனைக்காற். அவனுள் இருந்தென்னை பார், உன்னுள் இருக்கும் ஈசனை உணர்ந்துப்பார். ஜீவனாக வந்து ஜீவனாக சென்றால் மண்ணில் வந்த வேலை உனக்குள் மாயையாக நின்றுவிடும். மைந்தனே மனமயக்கம் கொள்ளாதே இது மனமாயை, சுவாசம் உண்டோ இல்லையோ என்பதை உணரப்பெறுவது. உள்ளத்தில் உணர்ந்தாய் உண்மையை மறந்தாய் உள்ளம் ஓதாமல் உணரப்பெற வேண்டும். உண்மையை மறவாபெற வேண்டுமென்றால் வாசி குதிரையோடு பயணம் செய்ய வேண்டும்.
செழித்திரு பயிரே ! உனக்கு தண்ணீர் அதிகம் ஊற்றினாலும் அழுவிடுவாய் என்று பக்குவ நிலையோடு வைத்துள்ளான். தவறும் பக்குவம் வறட்சியை கொடுக்கும் என்பதை நன்கறிவாய் ஐயனே ! சக்கரம் கீழ்மேலென வந்து வந்து போகும் வருந்தக்கூடாது எம் அமரனே இது பயிரை (தலைவனை) பதப்படுத்தத்தான் என்பதை அறிவாய் எம் அழிவில்லா செம்மொழித்தமிழ் தலைவனே !
காலகட்டத்தை கடந்து, காலம் வரும்போது உண்மை வெளிப்படும் அதுவரை ஓடும் பலப்படம். துன்பமும் சிலவுண்டு இன்பமும் சிலவுண்டு மூன்றையும் உணர்ந்து முத்தாய் நானுனக்கு உரைத்தாலும் ஒருசிலவற்றை இன்று மறைத்தருள வேண்டி நிற்கின்றேன் அது மகத்தான மலர் நலன்கருதியும் இந்நாநில நலன் கருதியும் என்பதை நன்கறிவாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 15
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! கையில் சூலமும் தாங்கிய சங்கும் ஆனைமுகன் முத்திரையும் அகன்ற சக்கரமும் அமையப்பெற்றான் கல்கி ஒரு சொட்டு உதிரமும் சிந்தாது கை கால் தலை முண்டமென ஒன்பதாய் பிரிக்கும் திறன் கொண்டு வாழ்ந்துவர ஐயன் கால்நகம் ஒன்று கழண்டது கண்டேன். அதிலிருந்து ஒரு அடி மேலே வடுவொன்றை கண்டேன். கழுத்திலிரு மச்சத்துடன் சிகைமுடி சிங்கம்போல் சீறி நிற்க பின்முடி கண்டம் தொட தலைசூழ கருமேகம் கண்டேன்.
அன்று வெள்ளைத்தோல் கொண்டுவந்த வெள்ளிநாளான் எட்டறிவில்லான் முன்பல் சொத்தையுடன் கருந்தோல் உடலாகி ஓதம் ஒதுங்கும் சிற்றூர் அருகே உறைந்து வருவான் நாற்றிசையில் அவன் கீழ்த்திசை ஆண்டு இரண்டாயிரம் முன்பு புலம்பெயர்ந்து தாயுடன் வந்தான் வடநாட்டிலிருந்து தமிழகம் வந்தகதை போர்க்கதை அதை பாரறியும் அவனே இன்று கல்கியின் உற்றத்தோழன்.
சக்தியவள் காத்திருக்க காமந்தனில் நின்றிடுமோ கல்கிநிலை ! மன்னனை நோக்கும் மங்கை நோக்கமோ காமயிச்சைகல்ல சேவைக்கேங்கியே ஆகினும் தன் மகனுக்கெது அருளவேண்டும் என்பது தாயிக்கு தெரியும் திரிபுர சுந்தரியம்மா ஐயனுள் உண்டு. அமரனின் சக்தியை எடுக்க பல சித்திகள் நிகழும் அதில் இமையளவும் எடுபடாது. மேலானவற்கு சக்திகள் இரண்டுண்டு பிறக்கும் பிள்ளையோ கருவில் அமையாது அங்கு காமமும் இருக்காது. ஞானப்பிள்ளைகள் பிறந்தகதை நாடறியும்.
ஒளி வடிவாம் அது மறையாது உனக்குள்ளே வாழும் சிலுவையர் மெழுகாய். மன்னன் மனித உடலில் வருவான் அவன் ஒளி வடிவில் திகழ்வான் கதிரவன் ஒளியை வாங்கி மனக்கயிரில் கட்டி ஏழுமலை ஆட்சி கண்டான் பின் ஐந்துதனை ஆட்சி கொண்டான். இன்றோ அறுபடை ஆட்சி வந்தான் அவனும் இவனும் ஒன்றே இதில் ஆயிரம் சர்ச்சையும் உண்டே.
பூசாவிதியான் ஆசிபெற்ற மாட்டுத்தொழுவன் வரலாரமைய மாபெரும் சரித்திர சாம்ராஜியத்தை சாற்றிச் சென்றான் தூதனவன்தான் ஈசன் மைந்தன். பிரம்மப் பட்டம் பெற்ற சித்தன் இன்றும் வந்தான். தன் படைப்பு பணியை பலமாக செய்தான். வடிவெடுத்து அவளாட ஈடுகொடுக்க முடியா ஈசனுக்கு பாம்பின்மீது படுத்துக்கொண்டே பதில் சொன்னான் மாயவன், மைத்துனா ஒருகாலைத் தூக்கி ஆகாயத்தை காட்டென்று. கட்டப்பட்டாள் காளி சங்கலி கழ்கண்டால் வையகம் காலி. எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 16
நெற்றியில் இட்ட திருநீறும் நெஞ்சில் பூசிய விபூதியும் (திருநீறு) தவசிரிசி மாயையன்றோ உடல்முழுக்க சந்தன சவ்வாது வாசனை தெளித்தனர் பற்பல வாசனை உணர்ந்து பலவித நாதங்கள் ஒலிக்க கேட்டேன். மெல்லிய ஒலி அதிபிரகாசமாக கேட்கும் அதன் அருமை தெரிய எம் ஐயனோ சப்தத்தை செவியில் நுழைந்த பூச்சென எண்ணி நள்ளிரவெழுந்து காதில் தண்ணீரை ஊற்றி சுரண்டுறங்குவான்.
தலையில் தலைப்பாவுடன் இடுப்பில் துண்டை கட்டி வரிந்து வருவர் பலர் கல்கியென வாங்க வணக்கமென போவான் அமரன். அவர்க்கு விழாவும் எடுப்பான் ஏகலைவன். அவன் சாதக மதியான் சரியாக கணிப்பான் யார் யாரினம் என்று நேரம் எடுத்து நேர்த்தியாய் முடிப்பான் கயவர் உயிரை.
அப்போ அசுரநாளும் இப்போ சோமசாமியாலும் வனவாசநிலை அது பத்திற்கு மேல் வருடம். இது இறுதி பட்டாபிசேகம் என்றான் ஆசான் அவனொரு ஆருடனாவான். கன்னியும் கன்னியாகுமரியும் ஒன்று சேர அங்கே தான் முக்கடல் சந்திப்புடன் மூன்று சுடர் சந்திப்பும் நிகழ ஆசிய கண்டமே அவனை திரும்பி பார்க்கும்
பூசத்தில் பிறந்த புண்ணியவான் அவன் எதிரிக்கும் நேசம் தந்தருள்வான் நீதியை ஒருபோதும் தோற்க விடமாட்டான் நண்பன் மகதியும் புடலம்பூவே அவனுடன் ஆளும் அழிவில்லா அரசனும் அப்பூவாம் பூசமே. தலைவன் பல அதில் கல்கியோ உத்திர பூவாம் ஓரிரு பூ அல்ல ஓராயிரம் தாமரை பூ என்பதை அறிவாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 17
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! அசுரனை வெல்ல அமரேசன் தனியாக போகும்போது பிள்ளைக்கு துணை கருதி தாய் அனுப்பினால் அரும்படையொன்றை அது அழிவில்லா நிலை ஆளுமைத் தன்மை அட்டமா சித்திலும் போர் கலையுடனும் களமிறங்கும் அமரன் இதிகாச நிலையது அமரேசன் நிலை போன்றது.
பரமன் பிள்ளையாக அனைத்து மகாத்மாக்கள் அருளாசி பெற்றாய். பெறும்போது பேரின்பம் பெறாதவரை பெரும் துன்பம், பெரும்துன்பப் பட்டு பேரின்பம் கண்டாய் ஐயனே உன்னை பார்ப்போர் மெய்யில் தெரிவது பலகோணம் ஆகினும் ஐயனுக்கென தனித்து நிற்கும் ஒருகோணம். சரித்திரம் கூறும் காலம் வரும் இதை அன்றே உரைத்தேன் அறம்பாடி. சாம்பனை அழிக்க எண்ணி சாம்பலாகும் சாம்பவான்களே !
தென்குமரி சக்திபீட சமுத்திரம் அதுவே, தாயவள் காத்தருளுகிறாள் சக்தியும் வாரி வழங்குகிறாள். மூன்று கடல் முக்கியம் அதை முழுவதும் உடைத்துக்கொண்டே வருகின்றேன். நீ முன் நின்று காட்சி தந்தாய் அலங்கார கோலத்தில் அமரன் அகத்துள் அரை நாழிகை. விழியோடு பரி உமை நந்தி ஆதிகுரு புலியாடை போர்த்தி ஆடும் படம் ஐயனுள் நிகழ அதையும் கண்டேன் எம் அத்தனே !
நோக்கு சக்கர வித்தை அத்தனையும் ஆசான் அன்புடன் இறங்கிவந்தருள இயற்கை துணை எண்ணற்ற பொருள் புதிருக்குள் புதுமை இருக்க புத்த நிலையோடு சிவ சக்தி நிலையும் உணர வேண்டும் சண்முக நாதத்தை உள்வாங்கி சக்தி பீடத்தை அமைக்க வேண்டும். அருவம் என்பதை விட்டுவிட உருவத்திற்கு வேலை இல்லை.
உண்மையை உணராத ஒரு மானிடமா உத்தம வாழ்வுனக்கு சிறக்குமா பக்திநிலை உனக்கு மோட்சகதி அளிக்குமா. மன்னன் அருகில் வரும்போது மணிமகுடம் சூட்டப்படும் மாணிக்கச்சுடர் ஏற்றப்படும். முதுமையிலா குமரித்தாயே எம் அமரனுக்குள் ஞான தீபத்தை எற்றிவைப்பாயோ எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 18
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! நெய்தலில் நிற்கின்றான் நித்தம் நிகழ்வத்துனையும் கவனிக்கிறான் கடற்மணல் சூழ ஈரைந்து மைல்கள் தானவன் உறைவிடம் ஐயன் உரைமனையருகே பல சாலவித்தையர் உறைவர். இக்கணம் வரை எம் ஐயனுக்கெதிராக கட்டியது கட்டுடைத்து அத்துனையும் அறிவாய் அத்தனே பரமசிவனே !
வெள்ளினாளான் இச் இல் அம் வேலியாய் துணையிருக்கு உற்ற உயிரானுக்கு ஒன்றும்வரா இந்நொடி வரை, அத்துடன் பதினெட்டார் அருளாசி இருக்க ஐயனை அக அழகு வாய்ந்த எம் அமரன் அசுர சக்தி வீழ்த்திடுமோ விருச்சத்தை வேருடன் சாய்த்திடுமோ !
வினைப்பயனை எடுத்து கர்மவினையை கழித்து கல்கியை தூய்மைபடுத்தும் துச்சர்களே உம் அத்துனை வினையும் எம் வில்லானுக்கு விருந்தாகுமே அன்றி விச மருந்தாகாது. மன்னன் உன்னதத்தை உணர வந்துவிட்டர் ஏராள எம் மகான்கள் அதில் குணங்குடி சிற்றூரான் கீழக்கரையோன் சீடன் துணையும் உண்டு பிரம்ம பட்டனும் அங்குண்டு உணர்ந்து வரான் அழிவில்லா வேந்தன்.
பாவத்திலிருந்து வெளிவரும் வேந்தனுக்கு ஓம்கார உணர்தலுக்கடுத்து உருவாகும் ஒரு சக்தி அது தீங்காரத்தை சிதைக்க எழும் உத்தி. பறந்தான் பாசவன் பாரினிலே படபடத்தது அமரன் இதயத்திலே அது கனவல்ல கடும் நிஜம் அதனை அறிவுடையார் ஆவது அறிவார்.
ஆன்ம சக்தியதை இழந்தால் ஈடுகட்ட ஈராறு ஆண்டு ஆகுமப்பா மனப்பான்மை மாறவேண்டாம். கன்னி பெண்கள் கூட்டமது சக்தியின் சாரம் அது சாம்பனை சேரும் அமரன் வஜ்ர தேகம் சக்திகூடும் மதியை தாண்டி வந்தான் இரசவாத மாமுனி விண்ணுலாவாக கண்டன் தலைவன் கனகச்சிதமாக எல்லாம் அறிவாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 19
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! உன்னுள் அவனிருந்து அவனுள் நீயிருந்து உன்னையும் அரசனையுமாய் உலகார் பார்க்கும் காலம் விரைந்து வர இன்றும் ஞானியர் பிரித்தறிந்தனர் நான் என் செய்வேன் மாயமும் உண்டு மந்திரமும் உண்டு அதனை உரைக்க உண்மையும் உண்டு மந்திரம் கால் மதி முக்கால்.
நூறோடு நூறார்க்கு அருளுவான் அத்தன் மகன் அதில் முதாலாக பெறுவான் அமரனிவன், வெண்தாடியோன் நானோ மகாத்மா கூட்டத்தில் கடைசி பிள்ளை அடியாருக்கும் அடியாராவேன் வருவது உன்வாக்கு வரம்பு மீறினாலும் நீயே பொறுப்பு. பிரம்ம பட்டன் அகத்தியனிடம் சென்றான் அகத்தியன் சொன்னான் வித்தே வித்தையதில் வித்துவான் கடல் நாதன் அவனை நாடென்று. வந்தான் பட்டன் தேர்ச்சி தோல்வி முடிவறிய கணக்கில் தேர்ச்சி தான் நீ என்று முடிவும்வர பூசவிதியான் புத்திரன் நீ என்பதையும் பட்டனுக்கு உரைத்தான் முத்து நகரான்.
எட்டு வயதில் எம் ஐயன் ஒரு நாள் தன்னுறவு தமையன் இளவல்களுடன் மரமேறி ஊசல்கட்டி கல்லொன்றை ஈடுகட்ட கயிற்றில் கட்டி கயிற்கட்டையில் அமர்ந்து உஞ்சளாடுகையில். கீழ்விழுந்த ஐயனை நோக்கி பன்னிரண்டளவு கொண்ட கயிற்கல் இனியவன் இதயம் நோக்கி விரைந்து வர அச்சத்தில் அமரனிருக்க இதயத்தின் அரைசான் இடைவெளியில் கயிற்கல் நின்றது கல்லுக்கும் தெரியும் கடவுள் இவனென்று.
உலா தலைவன் உறைவிடம் சூற்றியும் உடம்பை சுற்றியும் ராசகனியோடு சாலவித்தையர் மந்திரம் செய்ய வேந்தன் விழியில் வீரியம் உண்டென்பதை அறியா அசுரர் வீழ்ந்தது கொடும் வினைச்செயல். பட்டனவன் அரணாக இருந்து சிவமாக காக்க உமையாளவள் பிள்ளையவன் உறையாத எம் உத்தமன்.
அன்றொருநாள் அமரனை செருப்பில் அடித்தான் சீமானொருவன். சோமுனிவன் சொன்ன பாண்டியனிட்ட பிரம்படி பலருக்கும் விழுந்ததன்றோ அதுபோல் செல்லா செல்வசீமானுக்கு காலனடி. மன்னவன் மண்ணில் பிறப்பெடுத்ததனால் தான் அடைந்த துன்பத்தை எவரும் அடையா வரம் கேட்டான் புயலுடுடன் மழையோடு கடும்தவம் செய்தான் என் ஐயன் குடி குலம் தாழ்ந்தான் என தாழ்த்தியோர் ஊரார் உற்றார் அயலார் பலர் பொன்மகன் அடைந்த துன்பங்கள் கோடி இருக்க நீதியோடு ஈரம் வீரம் இரண்டும் கொண்டு வீர வாளேந்தி வெண்குதிரையில் தாமரை கிளியுடன் தரணியில் உலா வந்தான் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 20
மனையாள் பிரிந்து சென்ற சிலகாலம் துறவு கொண்டு காலம் கனிந்திணைந்து மனையாள் ஐயனை அப்பாவாக பார்க்க ஐயனோ தன் தாரத்தை தாயாக பார்கிறான் எலிகூடாகினினும் தனிகூடாக வாழ்ந்து வருகிறான் வாங்கிய வரமது வேலைக்கான கூலி இல்லை வேடதாரிகள் வலையில் விழுந்தான். விழ்ப்போடு உறங்குகிறான் எம் தங்கமகன்.
ஆத்மபலம் வேண்டி ஆன்மபலம் பெற்ற கல்கி நிலைக்கொரு குந்தக நிலையும் உண்டோ உன்னத நிலையை நீ பெறும்போது இந்த உலக மக்கள் மனமாயை பிடியில் மாட்டியிருப்பர் வையகத்தை விடுவித்து வாழ்விக்க வசமாக வந்து விட்டாய் வானவனே !
எண்ணாயிரம் கோடி சித்திருந்தாலும் மனதிற்குள் சிவசித்து அணுவளவும் மறவாது இருக்கும்போது மனம் தெளிவுபெறும். மாயசித்து உள்வரும்போது மனம் சலனம்பெறும். சத்தியநீதியோடு வாழும்போது சாம்பவனாக வாழலாம் உன்னதத்தை பெறும்போது உள்மயக்கம் அடையலாம் மனமயக்கத்தில் நீ இருக்கும்போது மருவிய துன்பவும் உனை வந்து சேரலாம்
ஏற்றமும் பெருமோசை உண்டு, யுகம்பெறும் அறத்தில் எண்ணிலடங்காத நாராயண சக்தியும் உண்டு. நமோ என்ற பொருளும் உண்டு, நாதமும் உண்டு நல்லோர் பாதமும் உண்டு. பற்றி வணங்கும்போது உனை சோதிக்கவந்த சித்தனாக இருந்தாலும் உன்னை வாழ்த்தி விடைபெறுவான். எம் பணிவு கொண்ட பார்த்திபனே !
எண்ணத்தில் ஈசனும் உண்டு, யுகத்தில் கலியுக மன்னனும் உண்டு கலி மாயை அவனை பிடித்திருக்கும் காலம் வரும்வரை காத்திருக்கும். நேரம் கைகூடி நீ என்பதை உணரும்போது உனக்குள் வந்து நிமிர்ந்து நிற்கும் மாயசக்தி. எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 21
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! மஞ்சள் நதிக்கரை அரவணைக்க ஆசிய நிலமாம் பெரும்பிரிவு அதில் கீழ்த்திசை நிலமாம் பெருஞ்சுவரோடு கீழ்த்திசை இராச வம்ததோடு உடன்கூடி காலம் பல கழித்தான். அங்கு குன்றொன்ரில் கூடமும் அமைத்தான் பல சீடனும் பிடித்தான் பிரம்ம பட்டன்.
பண்போடு அன்பும் அருளும் கொண்ட ஐயன் வாழ்விதனில் ஒன்றடுத்து சுழியத்துடன் இரண்டால் வகுத்தால் நாற்பத்தொன்பது இராப்பகல் ஆட்கொண்டதோர் தூக்க நிலை அது மாபெரும் துக்கநிலை. அந்த கொடும் பித்தநிலைக்கு ஆயத்தமாய் அமரன் அத்தை மகள் அமைத்தாளே. அவள் மனமாற கைமாறி போனாளே. பொன்னவன் பொழுது விடிந்தது வினையில்.
தொழிற்சாலை யாவும் அரசரையாள எளியோர் உழைப்பில் வலியோர் தனதாள்களைக் குவிப்பார் நிரந்தரம் செய்யா ஊழியர் நியமித்து ஒரு தட்டரிசி உணவை செய்ய வைத்து ஒரு பருக்கை அரிசியை எடுதெரிவான் வியர்வை நிந்திய எளியவனுக்கு அந்த கொடுங்காலம் கடந்தினி என் கல்கியின் பொற்காலம் மலர்ந்ததுவே இது முக்காலம் அறிந்து நானுரைத்தேன்.
வீரன் இவனது விழியழகை விவரிக்க எனக்கு வரிகள் தந்தான். அது விண்ணும் மண்ணும் தனை மயக்கும் சூரன் இவனோ கடும் சாந்தம் சமயம் சுட்டெரிக்கும் அனல்பறக்கும் பாரில் இவனோ பரியில்வர பரவசத்தோடு நிமிர்ந்து வணங்குவர் நீதி தேவர்கள் யாதும் ஊரென ஒருகுடை கீழென ஆள்வான் அமரன் அவனிதனில்.
சப்பாணி பருவ மழலைதனில் மண்ணையள்ளி அழகாய் உண்டானே அன்னை ஐயனை அள்ளி அனைத்து தன் இடையில் இதமாய் அமரவைத்து இனியும் இப்படி செய்யாதே என் முத்தமிட்டு ஐயன் வாய்தனில் விரலைவிட்டு விரைவாய் மண்ணை வெளியெத்தாளே எல்லாம் அறிவாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
கரம்பிடிநாதர் பதிகம்
அணுமுகம் கண்ட ஐயனே
எனை ஆண்ட மெய்யனே
உனை காணாத ஒருநாள் வருமோ
உன் நினைவாலே என்னால் வாழ முடியுமோ
எந்தன் ஈசன் பாதம் பணிந்தேன்
எனை கண்டு கொள்வாயோ ஐயனே
இந்த கருணாகரனை கண்டுகொள்வாயோ ஐயனே
காலச்சுடரும்
கண்ணுக்குள் தெரியும்
எனை கண்டுக்கொள்ள உனக்கு மனமும் அருளும்
மன மாயையில் தேங்கி அழையும் மனிதன் நானே
எனை மருகி உருகி காண்பது கடவுளில் தானே
தன்னை உணர்ந்த ஞானிகள் பாரில் பலரோ
சிவ நிலையை உணர ஓராயிரம் நிலையோ
உண்மையை உணர்ந்தவன் உன்னிடமோ
அடியார் நிலையில் இருந்தேனே
ஆனந்த சோதியை மூட்டுவாயே
அழிவற்ற நிலையை அருளிய அம்பலனே
சிவசக்தி நிலையை ஈன்றவனே
வேண்டும் உன்னையும் மறவா நிலையே
எனை ஆட்கொண்ட எம்பெருமானே
உள்ளம் அறிந்தாக வேண்டுமே
எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டுமே
உள்ளம் வருந்தாத வேண்டுமே
உண்மை எனக்கு தெரிந்தாக வேண்டுமே
நான் உணராத நிலைகண்டு ஐயனே
எனை ஆட்கொள்ள வேண்டுமே
மைந்தனே எனை கண்டுகொள்வாயோ
ஆதி நிலையே அம்பலவானே
அடியான் நிலைதூக்குவது உம் கடமை தானே
ஆதி சிவனே அம்பலவனே !
நல்லோர் பாதம் பணிந்திட வேணும்
நட்ட கல்லும் பேசுமோ என்பதை
நீ உணர்ந்திட வேணும்
உள்ளம் மறந்திருக்கும் ஓசையில் தானோ
உனக்குள் இருக்கும் அம்பலவானோ
இகம் பெறுமோ எந்தன் ஈசனே
எல்லோர் வாழ்வும் செழியதாகும் இகம்பேறுமே
இந்த வையக நிலையே வானவ நிலையோடு வருமோ
வருங்காலம் வடிவு பெறுமோ !
ஆதி சிவனே அம்பலவனே !
பாகம் : 22
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! நான் சாந்தன் வாயிலாக மையப்புள்ளியாம் நடராஜர் ஆலயத்திலிருந்து பாடிக்கொண்டிருக்கிறேன் எனக்கேதும் பெயரன்று உலகார் உரைப்பர் அறம்பாடியாரென்று. நடராசர் இருக்கும் மையப்புள்ளியில் இருந்து அரைநாள் நடைபயணமது அமரன் வாழ்விடம். அது கடலோர திருவஞ்சிபுரம் அம்மலைமீது பெருமாள் பள்ளிகொண்டிருக்க உமையாள் அலமேலுமங்காள் உடனிருக்க அப்பர் நாவுக்கரசனும் அகத்தீஸ்வரனும் பாடிய திருத்தளம் திருவஞ்சிபுரம் அதுவே இன்று கல்கியில் வாழ்விடம்.
வாகன பயணம் செய்யும்போது போக்குவரத்தை நிறுத்தி பொருளீட்டும் சீரற்ற சீருடையர் வழிமடக்கி வரம்பற்று தனம் பறிக்க பொருளற்ற உத்தமன் தாக்கப்பட்ட தகவலை கேட்ட கல்கியவன் அது பணம்பல பறித்து பாவியற்கு பகிர்ந்து பாலியலுக்கு அலைந்து பாவியாய் மாலும் கும்பல் அது காற்றில் கரைந்துவிடும் என பலமொழிகளில் பற்பல ஊடகங்களில் குரல் கொடுத்தான் கல்கி.
போக்குவரத்தது பொருளீட்டும் துறையாம் உயிர் நடமாடுவதற்கு எதற்காக உரிமம் (லைசென்ஸ்) சிவன் தந்த சிரசதற்கு கவசமெதற்கு உயிருக்கு வயதில்லை உடம்பழிவது இயற்கை இது நீதிநாதன் உரை இடையில் எமன் எடுத்து செல்வதும் அவரவர் கர்மவினை. அதனை அரபு தொடங்கி தமிழென பன்மொழிகளில் பறை சாற்றினான் கல்கி.
சமாதி அடைந்தவர் ஆண்டுகள் ஆயிரத்தைநூறு அது நான்கு சாலை கொண்ட வளைந்த பாலத்து கிராமரத் தோட்டம். அங்கொரு மகான் இருக்க அவருக்கு தெரியும் யார் கல்கி ஆட்சியாளன் மகதி மற்றோர் என தாக்கப்பட்டான் ஒருவன் அனைத்து மதத்தினரும் கல்கிl பேட்டியை கண்சிமிட்டாமல் பார்த்தனர்.
ஆண்டுகள் ஈராயிரம் அது சித்தர்கள் வாழ்ந்த ஆண்டு. ஆண்டுகள் ஆயிரத்தைநூறு அது மகா அவதாரனது ஆலயம் எதுவும் இல்லா சமாதி மட்டும் உள்ளது அந்த உள்ளது அது அவ்வூர் நபர்களுக்கு மட்டுமே தெரியும் வளைவு பாலம் நான்கு ரோடு பலா மரம் தென்னை மரம் உள்ள இடம் அவரே கல்கி குரு நடராசன் இடத்திலிருந்து அரைநாள் நடைபயணமது அமரன் இடம் ஒட்டு வீடாகி பழைய அரண்மைனயாக காட்சிதர ஒரு தங்கையும் தாயும் வாழ்ந்து வர வந்து வருவர் அங்கு யோக தண்டம் இரண்டுண்டு ஒலைசுவடியும் உண்டு பெட்டியியில் அவை மூடப்பட்டிருக்க அதனை திறந்தேன் அறம்பாடியான் நானே. எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் 23
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! இன்று முதல் ஒன்றரை முக்கள் ஆண்டில் நீ வெல்வாய் உலகமே உன்னை திரும்பி பார்க்கும் கருப்பு கீழாடை பொடி மஞ்சள் கட்டம் போட்ட மேலாடை அரசு வேலையில் அன்று ஆர்வம் கொண்டிருந்தான் அரசு வேலையும் கிடைத்தது ஆனால் சூழ்ச்சியில் வீழ்த்தப்பட்டான் ஐயன் அது ஒரு ஒப்பந்த அரசு பணி.
பின் தனியாக ஒரு தொழில் தொடங்க அங்கும் ஊரவினர் பல சூழ்சிகளுடன் திருட்டும் நடந்தது. ஐயனுக்கு உடல்நிலை பாதித்தது பிறகு ஐயன் ஆலயம் வடிவமைக்கும் பணியில் ஈடுபட அங்கும் பங்காளிகள் பிரச்சனை கொடுத்தனர் போராட்டங்களுக்கு பிறகு ஐயன் ஆலயம் கட்டுகிறான் அங்கு அசைவ பூஜை மாறி சைவம் கடைபிடிக்கப்பட்டது அங்கு வெட்டிய ஆடும் சாகாது உயிர் பெற்றோடும் அது சுத்த சன்மார்க்க கோவில் ஆகியது மீறி ஆட்டை வேட்டுவோருக்கு கடும் வியாதியும் வந்தது.
ஒருநாள் ஐயன் ஆற்றோரம் உள்ள ஆலயத்திற்கு செல்கிறான் அங்கு பல அசுர சக்திகள் ஐயனை தாக்க முற்பட்டது மிகப்பெரும் ஆற்றலுடன் போகனவன் போராட அசுர சக்தியை வீழ்த்த ஒரு நொடி போதும் ஆகினும் அமைதியாக எம் ஐயன்.
உடன்பிறந்த தங்கை பல அண்டை மாநில விசியத்திற்கு முன்மொழிந்து போக ஆயிரம் உறவு இருந்தும் ஐயனுக்கு தங்கையே உற்ற உறவு பாசமான தங்கை சூழ்ச்சியால் அமரனை வீழ்த்த நடவடிக்கை செய்தால் ஆனால் அண்ணன் மேல் அவளுக்கு பாசமும் உண்டு
மகன்கள் பலர் எம் ஐயனை ஏமாற்றி அலைய விட, தான் தான் ஞானவான் என அறியாத் தலைவன் பலருடன் ஞானம் தேடி சுற்றி சூழ்ச்சி வீழ்ச்சியை வென்று வந்தான். ஐயன் சாதிக்க நினைத்த இடத்தில சமாதி நிலை எனும் உணர்வற்ற நிலைக்கு ஆட்பட்டான். எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் 24
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே ! அரசு மருத்துவமனையில் பிறந்தான் ஐயன் அவ்வூர் புதுவை. வாழ்ந்தது பலவூராகும் சம்பளா நகரில் கல்கி வாழ்கையில் அங்கு ஐயனை போல் சித்தவித்தை பலகியோர் பலபேரிருக்க அத்துனையும் சுத்த சன்மார்க்க நிலையினர் ஆவர் சுழற்சியில் ஐயன் அங்கிருந்தும் வெளியேறினான்.
நடராசரின் முழு நேரடி தீட்சையில் பிறந்தவன் எம் ஐயனாவான் அவன் வாழ்விடம் நடராஜர் ஆலயத்திலிருந்து அரை நாள் நடைபயணமாகும் மையப்புள்ளியது மறவாதே. தாயின் யோனியில் நீ பிறந்து பத்தோடு பதினொன்றாக பிறப்பெடுத்து வாழ்ந்து வரும் கல்கியே கடல் சூழ் வாழ்விடம் கொண்டானோ நீ பட்ட துன்பங்களை நான் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?
உன் முன்ஜென்ம குரு உன்னை இன்னும் ஆட்கொள்ளாததனால் ஏற்படும் வினையா தாய் தந்தை இருந்தும் குரு அரவணைப்பில் தான் இருக்கிறாய் அமரா நடராஜர் கோவிலிலிருந்து அரை நாள் நடைபயணம் அது திருவஞ்சிபுரம் அங்கு பெருமாள் பள்ளி கொண்டிருக்க உமையாளும் உடனுண்டு அங்கு வாழும் நீயே கல்கி அது இன்னும் உனக்கு புரியவில்லையா இவ்வளவு புதிரையும் உடைதேனே கல்கி கபிலனே !
திருவஞ்சிபுரம் அங்கு அப்பர் முதல் அகத்தீஷ்வரன்
வரை பலர் பாடிய தளமது இன்னும் ஏன் புரியாமல் இருக்கிறாய் கல்கி. அலமேலு மங்கா
அகத்தியர் திருப்பதி பட்ட திருவஞ்சிபுரம் அது நடராஜர் ஆலயத்திலிருந்து அரை நாள்
நடைபயணம் கடலருகே உள்ளாய் கல்கி.
நீ புரியும் நிமிடம் நெருங்கியது உனை உலகம் இனியும் இழக்காது அன்பாக அருளகத்துடன் அழிவில்லா ஆட்சியாளர்களுடன் உலகை ஒளிமயமாக்க உதித்த உத்தமனே உன் யோகதண்டமும் ஒலைசுவடியும் உன் பொற்கரம் வந்து சேரும் உம் உற்ற குரு ஓடி வருகிறார் பொன்மகனே ! எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 25
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ்
நடராசனே ! ஐயன் அகவை
எழுபத்தெட்டில் ஒரு நிகழ்வு தொகையது அருட் பெருந்சோதியான் வகையது பரம் அம்ச
சிவானந்தன் விரியாது அழிவில்லா அமரனாவன். நூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்கு
பிறகொரு ஒளிதேகம் அந்நாள் அமரன் வாழ்வின் பொன்னாள்.
சித்திரை முழு நிலவன்று சேனைகள் சிலருடன் பொதிகை செல்லும்போது
தேகத்தில் சந்தனமரத் துளிகள் துளியாக விழுந்து செல்லும். நற்சந்தன வாசத்துடன்
சாரல்மழையும் பொழியும் பல யோகிகள் ஞானிகள் அவ்விடத்தில் தவம் புரிவர். உயர் கூட்டம்
அங்கிருந்து ஐயனை வாழ்த்திச் செல்லும் அது எம் ஐயனுக்கு தெரியாது ஆகினும் நான்
அறம்பாடி சொன்னேன் அத்தனே!
ஐயன் அப்பனவன் அரசு பணியொன்றில் பலகாலம் சேவை செய்வான் உடன் பணிபுரியும் பலர் கையூட்டம் பெறுவர் ஆகினும் ஐயனின் அப்பனோ ஒருநாளும் ஒரு தாளும் கையூட்டாக பெற்றதில்லை. மக்கள் அன்பு அழைப்பிற்கேற்ப ஒரு தேனீர் மட்டும் அருந்துவானே கைக்தொடு கலைதனில் அப்பன் சிறக்க தன் புத்திரர்களுக்கு சிறு வயதிலேயே இயக்கம் கொடுத்தான்.
தந்தை தொடு சிகிச்சையோடு நல்லொழுக்கமும் பெற்ற தலைவனும் தன் சகோதரியும் நன்மதிப்பெண்கள் எடுத்து நாளிதழ் அதனை புகழ மூன்றாம் பாடத்தில் முத்தான மதிப்பெண்களை இருவரும் பெற்றது ஐயன் அப்பன் தொடு சிகிச்சையே ஆகும் செம்பொன் அரங்கநாதனே உமையும் பாட எமக்கும் சந்தர்ப்பமோ !
அமரன் அன்னை அவளொரு ஆலயம் பச்சை தண்ணீரிலும்
பக்குவமாக விளக்கேற்றும் உத்தமி வயிற்றில் ஈரைந்து திங்கள் தவத்தில் இருந்து சமயம்
பார்த்து மண்ணை மிதித்தது இம்மண்ணிற்கு மகத்தான தினமது புதுவை அரசு மருத்துவமனையது
அவ்வாண்டை சொல்கிறேன் கேளாய் ஆயிரத்து தொளாயிரத்து டேசுடன் ஒன்பதாம் எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ்
நடராசனே !
பாகம் : 26
எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ்
நடராசனே ! தர்மவான்கள் உனைகாத்து நிற்க மாளாத துன்பம் உன் மனதில் நிற்க எண்ணற்ற
ஜீவன்களை பார்த்து நீ நிற்க யார் வருவார் உனை காட்க. உனை காண எனக்கும் வழியில்லை.
உனை பாடவும் எனக்கு நேரமில்லை இப்படி ஒரு பாவச்செயல் நடந்துகொண்டிருக்கிறது.
பார்வீகம் கேட்டு பரமாத்மா வந்தால் மட்டுமே இவனுடைய நிலை இந்த
கலியுகத்தில் வாழும் திருமால் திருப்புகழ் திருவடி சரணம் சொல்லும்போது
திடகாத்திரமான திருமாலை வணங்கிக்கொள் மனம் தேம்பாகும் அமரனே சலனத்தில் வேலை இல்லை.
கண்ணனுக்கு ராதை துணை சிவன் இருந்தால் தான் சக்திக்கு வேலை ஏதும் இன்று தெருவில்
உனக்கு என்ன வேலை.
பற்றற்ற பொருளாகும் பரபிரம்மம் அவனே துணையாகும் ஐந்து பொருளோடு ஆசான்
என்ற நிலையோடு அறுமுகம் கொண்டு திருமால் முகத்தை நான் பார்க்கும் போது திருமால்
முகத்தை நான் பார்க்கும்போது தெளிவு பெற வேண்டும் என் ஐயன் வாழ்வு தெளிவுபெற
வேண்டும் அதில் தீர்க்கமும் இருக்க வேண்டும்.
சப்தம் பல ஓசைகள் இருந்தாலும் சக்கரங்கள் சாணக்கியமாக சுழல வேண்டும் சுழற்சி
முறைகள் ஆகாயம் வரை சுற்ற வேண்டும் திருமால் முருகன் விஷ்ணு சிவனென யாவருக்கும்
சாரும் சக்கரமது பரபிரம்மத்தில் ஒன்றிவாழும் அனைவரும் ஒன்றேனே உணர்வாய் உயர்மனமே பெயர்
மாற்றி நீ அழைப்பிலும் இது பரிவேச பொருளாகும்.
பேரொளி கொண்டு பெரும்ஞானம் அடைந்து உன்னத நிலையோடு இருக்கும் ஒரு மகான் ஒருவனை சந்திக்கும்போது தன் நிலையை கூற அவர் உனை சபித்து செல்வர். குதம்பை கடுவெளி மச்சமுனி கொங்கணன் பிள்ளையென ஐயன் நிற்க பேரொளி ஆற்றலை அருளுவர் உபதேசமாக எல்லாம் பொறுத்தருள்வாய் ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராசனே !
பாகம் : 27
புலித்தோல் போர்த்திய பசுவென பலர் புறப்படுவர் பொதிகை மலையென திரும்பி
வருவர் சண்டை சர்ச்சரவென. போகன் நீர்மலை வந்த இடமது மைசூர் மேட்டூராம் போதிகையது எற்காடாம்
உத்தமன் சித்திரை நிலவு முழுநாளையும் சந்தன சவ்வாது வாசனையும் சேனைகளுடன் அடைந்தது
அது சென்ற மாதம் பஞ்சாங்கம் நகர்ந்தது நானூற்று இருபது அண்டு காலம்.
விளையாட்டது முக்கியம் என்பான் அறம்பாடுவதில் அதில் திருரங்க பணியான் கார்மேகமும் சொக்கலிங்கமும் இன்று முன்னோடியாம்
கயவர் கூட்டத்தை திசைதிருப்பி காசு பணமதை கருவாக்கி ஒரு பேருந்தில் ஓடவிட்டான் அது
சித்திரை முழு திங்களல்ல அது வைகாசி கேட்டையது மூன்று இருபத்து இருபத்து மூன்றாம்.
ஐயன் அற்புதன் எம் அமரன் ஒதுங்கினான் அக்கூட்டத்திலிருந்து .அது பட்சிகட்கும்
பரம தேவர்கட்கும் நன்கு தெரியும் பதவி ஆசை ஆட்கொண்டு நீயாக ஐயனை சிலநாள் ஆட்டி வைத்தாய்
அதில் அழகாக சில பாடல்களையும் புனைய வைத்தாய் அத்தனையும் உணர்ந்த என் அப்பாவி உத்தமன்
சாம்புவோ ஆதிகுரு களத்தில் விளையாடி வந்தான்.
இராமனவன் சத்திரியன் சேலமெனும் சேரல சாம்பளாவில் சாம் என பிறப்பெடுத்தான்
அது கோரக்கன் கூறும் சாம்பவ குலமாகும். சீவனமும்
மார்த்தாண்டன் வைகுந்தன் தோப்போடு மெய் சாலையுடன் இருமூன்று அவதாரமாம் தென்குமரி
மண்ணிலவன் சென்றவுடன் சீருடை பணியாளர் தூக்கிச் செல்ல செவ்வரம் வாங்கியவன் எம்
சாம்பு வந்தான் திரும்பி வந்தான்.
மகான்கள் பலர் ஐயனை காண செந்தூர் குமரன் கோவிலுக்கு ஓடி வர சீரங்கன் காடது ஈரேக்கர் அது சீர்மிகு சேலம் சில்லாவென இங்குரைப்பேன் அறநெறி பாட ஆளாகிவிட்டேன் இனி புதிரேதும் இல்ல புலித்தோல் போர்த்த பசுவை இனம் காட்டுவேன். பாரே ஏற்கும் பகட்டர் வேசம் ஒழியும் அதனை எண்பத்தாறு மேல் பிறந்தோர் இனி காண்பர்.
பாகம் : 28
கவனமது கவனி களமிது பயணி தீயோரை வைத்து நன்மையையும் செய்வான் நல்லோரை
வைத்து தீயதும் புரிவான் கழுவுற மீன்களில் நழுவுபவன் கண்ணன் கல்கி கணக்கெடுக்க
முடியாது கண்ணம்மா ஆண்டிகள் ஆசாமிகளும் தரகர்களும் தலைவனுக்கு தேவையில்லை நேராய்
பார்ப்பான் ஏனென்றால் அவன் நேர்த்தியானவன்.
மேல்தெரு அது அங்கு ஆசாரி வீட்டை கடந்து தெற்கு கீழ்த்தெருவாம் ஐயன்
ஆரம்பப்பள்ளி மஞ்சள் பையுடன் ஐயன் காலை பள்ளி செல்கையில் நீலகிரி மரமது நீண்டிருக்க
மண் பாதையில் தினம் எடுப்பான் படிக்காசு அது ஞானியர் சூட்சமமாக அருளிய பொற்காசு அமரன்
பிறந்த மூன்று தினத்தில் அவன் உடம்பில் விழுந்தது தொட்டிகாசு.
உனக்குள் இருந்து உன் மனதை மாற்றி உனை கொண்டு செல்வேன் என் மகன்
மகள்களை மீட்க தெரியாத கலைகள் அறியாத கல்கி அல்ல குதிரை வண்டியின் கடிவாளம்
உன்னிடம் இருக்க உன் சிரசின் கடிவாலமது கல்கியிடம் உண்டு நீ வலம் இடம் போகவைப்பான்
ஐயன்
ஒளிக்கு பின் தான் ஒலி ஒலியே கடவுள் ஒளியை கலியில் கடவுள் என்பர்.
சப்த ஓசை இயங்காமல் சரவெடி ஓசை கிடையாது. காமாட்சி விளக்கும் கற்பூரமும் கண்ணுக்கு
தெரியும் ஆதலால் அதை வெளிச்ச சோதி என ஆள்வர். ஆதியது சப்த ஒலி ஐயன் உரைக்கிறேன்
அறிந்துகொள்.
தலைமை அலுவலகம் சென்றான் ஐயன் அதில் தலைவன் என்றொருவன் இருந்தான் பெண்ணுருவில் அவள் சாம்ராஜ்ய நகராம் கர்நடக மைசூரில் பிறந்து தமிழக கலைகளில் புரண்டு ஆனாள் ஈழன் எம் ஜி ராமச்சந்திரன் உடன் சேர்த்து உற்றதோர் வாழ்க்கை அது மக்களாட்சி இது மன்னராட்சி மீண்டு வருவாய் பொன்மகளே இது காலசுளர்ச்சி.
பாகம் 29 :
தேய்பிறை நிலவொளியில் தென்னந் தோப்பொன்றில் நின்றது இனிதா அவள் இயற்கையின் மகள்தான் அணிந்தது பச்சை அமரன் கைகோர்த்தது யாட்சை அங்கேது காமம் அது அழிதுயில் ஜாமம் நிற்கதி என நின்றான் ஐயன் நானுண்டென வந்தாள் தேவி அது சம்யுக்தா எனும் சரித்திர நாயகி இன்றும் சிலையாள் தென்மதுரை வாழ்கிறாள்.
நெற்றியில் சூலமும் நிமிர்ந்த வாளும் குற்றிய உகரத்தில் குமரன் இணையாள் தானிருக்க வற்றிய வயிற்ருடன் வருவான் தலைவன் அன்று உலகமது இருளில் மூழ்கும் இமைப்பொழுதில் வந்து இனிய பணியதை செய்து சென்றான் அக்காலம் முடிந்தது ஈராயிர பதினேழில் இது எஞ்சிய காலம் இனி வேலைகள் கொஞ்சம்.
வெள்ளை பூனை விலகியது ஐயன் ஈரெட்டு அகவையில் அது முதல் இன்று வரை அவன் குடிலில் யாதும் ஒரு பூனை இல்லை. கிராமிய கலையதில் கிளிஞ்சல் செய்தவன் பெற்ற மதிப்பெண் பத்துக்கு இரு நான்காம் அதற்கு அள்ளிய களிமண் அது புதுச்சாம்பள்ளி (புதுவை) காவிரி கரை மண்ணாம்.
முல்லை நிலத்தான் முடிவு அறிய புறப்பட்டான் நெய்தல் தலைநகர் அங்கு நித்தம் இரவுபகலாக இழு புகையை உண்டான் அதன் வீரியம் தாக்கி இறந்த பெரியப்பன் நிலை கண்டு நிறுத்தினான் ஐயன் புகையிலையை ஆகினும் ஊருக்குள் உத்தமன் ஒழிய கையில் எடுத்தான் களியவளை.
வேடம் தாங்கி எம் வேந்தன் வருகையிலே வீரியம்
யாவும் வெறும் வேடிக்கையே பிண்டம் கடந்தான் போகையிலே பெரும் கருட ஆழ்வான் சுற்றுவானே
கட்டி வைத்த மகான் தேவர்கட்கும் கடலன்
பார்வை காண ஆவலதுவே ஆழ்ந்து வருவர் சேலம் சேயோன் குன்றுக்கே.
பாகம் 30 :
அலங்கோலமாகும் அரசு அதர்ம சாம்ராஜியங்கள் அழியுவதுடன் தடமாறிய சீருடயாளனை தீயோன் வெட்டுவான் இடையில் எழுந்து இன்று சுயநலத்தில் கலந்து போன் பொருளீட்டும் ஆசாமிகளும் அம்மந்திர தந்திர எந்திர ஏவல் சூனியங்களும் செயலிழக்கும் பல்லக்கு தூக்குவோர் எண்ணிக்கை பாரில் பெருகுவர் அது அவரவர் மத வளர்ச்சிக்கே அதுவும் மண்ணாகும்.
கண்ணால் காண முடியாததை கடவுள் என நம்பமாட்டார் நீ கண்ணால் காணும் திரைசீலையும் கல்லும் பல்லக்கும் கடவுள் கிடையாது. நற்குணம் கொண்ட நல்லோரும் நல்வழி உழைப்பீட்டி உத்தமர் வாழ்விற்கு உதாரணமாக இருந்தோரும் வேசியராய் மாற்றப்பட்ட நன்மாதரும் மீட்கப்படுவர் கல்கியால் காட்கப்படுவர்.
அரக்கனாக அத்தன் மாற காரணமாது முற்றிய கலி. தேவகுண அத்தனவன் குணமாறி இராக்கத நிலையோடு கண்டறிந்த அத்துனை கலைகளும் ஒழியும் ஐயனவன் புகுத்திய கலைகள் அத்துனையும் செழிக்கும். இயற்கை மேலோங்கி ஆதிசக்தி இனி அனுதினமும் இவ்யுகத்தை ஆளும்.
மரத்தை சுற்றி பல செடிகளின் கொடிகள் ஏறும் கொடிதான் மரமென நம்பாதே மரம்தான் நீயென நம்பு இரைதரும் தாயே இறைவி உனை காத்த தந்தையே கடவுள் உயிர் உடல் சூரிய சந்திரன் உண்டென உணர்ந்து லிங்க முத்திரையின் பொருளறிந்து முக்தி பேறு.
தாயுமின்றி தந்தையுமின்றி தாய் மாமனும் இன்றி தான் இருக்கையில் உண்மையாக உனக்கொருவன் உதவினால் அவன் தான் கடவுள் நீ வியர்த்து நடந்து நீர் தேடுகையில் அக்கணம் உனக்கொருத்தி பருக ஒரு குவளை குடிநீர் தந்தால் அவளும் கடவுள் இதனை எடுத்து இயம்பும் எம் ஐயன் மட்டும் பொய்யன் காரணம் கலியாம் வெல்வது அழிவில்லா எம் கல்கியாம்.
பாகம் : 31
கொங்கன் கேசவி மகனாய் மாமரத்தடிதனில் பிறந்தான் பூமகன். அரவனை ஆட்டிவைப்போனின் அருஞ்சீடன் இவனென அமரனுக்கு அணிவித்தான் அக்கால தொண்டை கொட்டை ஒன்றை. ஒளி பூச்சி மின்ன ஒலி பூச்சி இசைக்க பெற்றுக்கொண்டான் பிரம்ம புத்திரன் பிணி பல வரினும் பிழை அறியா ஐயனை அனுதினமும் இரு இமை இணையாது காத்தருள்கிறாள் உமையாள்.
தலைநிலத் தென்கிழக்காசிய தீரனொருவன் சிலரை திரட்டி வருவான் அவன் புத்தன் புத்திரன் என்றுரைப்பான். எண் திசைக்கும் உரிய எம் உயரிய உத்தமான் உதறிவிடுவான் ஒற்றன் நட்பை. அது வேட கும்பல் வேலைக்காக விரைந்த அம்புகள். அத்தனையும் அறிவாய் அத்தனே !
வில்வீரன் ஓரி புலவன் உற்றது கொல்லி அங்கு யாம் பெற்றது சித்தி. மீட்பன் வரும்நாள் நெருங்கியதனால் வழி போக்கன் நடைதனில் ஆக்கம் நிறைந்ததை சிவனுடன் வாழும் உமையவளுடன் இரத்தன் நாராயணனும் நன்கறிந்து கலி கற்ப காலமதனை அறிந்து இறங்கினர் இருவரும் ஈருடலாக என்பதை உற்றரிந்தேன் ஓரிமலையன்.
சூதெனும் கலையில் குமரன் கொடி பறக்க காரணம் கலிகால ஆட்ட அனுபவ ஆற்றலை பெறவே. வீரிய அரவன் அமரனை பார்த்தால் அங்கே மறையும் அதிசயம் கண்டேன். காரிருள் போதினில் சந்திரன் காண அனு தினமது அயந்துறங்குவான் மேற்கு கிழக்கென.
எட்டு தினமவன் ஏதும் உண்ணாதிருக்க உற்ற பூனையும் துணையாய் இருந்து. எட்டிய தொலைவில் எலியாள் இருந்தும் வற்றிய வயிறுடன் வாடி இருந்ததாம் வாமணன் வரட்டுமென. நீரும் நெருப்பும் காற்றும் வானும் மண்ணும் விலைபோனதை எண்ணி வெகுண்டேழுந்தான் வீரனவன்.
பாகம் :32
ஆடும் அசைவும் அண்டத்தில் பார் நாம் அண்டமாக இருக்கும்போது ஆகாயத்துளிகளில் நடப்பனவற்றை சேர்ந்து பார்க்க வேண்டும் பாகம் பதினெட்டு அதுள் பணிவும் எட்டு பார்த்தது பொருளெட்டு படைத்தது இரண்டெட்டு கலிமுன் நிகழ்வது சபரிகிரிவாசன் படியும் பதினெட்டு.
உத்தமனாய் இம்மண்ணுலகில் வாழவேண்டும் உண்மையோடு இறைவனை நாட வேண்டும் ஈசன் பிள்ளையாக அவன் மாற வேண்டும். இந்த அண்டத்தை அவனே ஆளவேண்டும் பஞ்ச சக்திகள் அவனுக்குள் ஒடுங்க வேண்டும் பஞ்சாட்சர நாமங்கள் என்றும் உணர வேண்டும். பத்தியும் சத்தியும் சித்தியும் முத்தியும் சிரஞ்சீவி என்ற நிலையம் அவன் உணரவேண்டும் பாகம் பதினெட்டு படிநிலை ஒன்று வெந்த விநாயகா ஆகும்.
எனக்கு மித்தருள் சக்தியருள் வேதாந்த பொருளும் எனக்குள் மூட்டு என்னிலை உயர தன்னிலையை உணர என் நிலையை உயர்த்த செய்வாயாக.வாழைப்பூ போலிருக்கும் வாயழகும் பெரும் சாறாக இருக்கும் வயிரழகும் நீண்ட தந்தங்கள் இருக்கும் பிள்ளை முகத்தழகும் உன்னுடைய நிலையை நீ உணரும்போது என்னுடைய முதல்படி இதுவே ஆரம்பமாகும். மனிதனாய் வாழ்ந்து இறைவனாய் உணர்ந்த சபரிகிரிவாசா சுத்த சன்மார்க்க நிலையில் என்றும் கன்னியாக இருந்து துளசிமணி அணிந்து அரிக்கும் பொருந்தும் ஐயப்பனுக்கும் பொருந்தும்.
முத்திநிலை சிரஞ்சீவி நிலையை உயர கன்னித்தன்மையோடு புலிவேசம் கொண்டு புலிப்பால் உண்டு புலிமேல் ஏறிவரும் பலகோடி சித்தர்கள் உண்டு அதில் ஐயப்பனுக்கும் இடமுண்டு இதில் சூழ்ச்சியும் உண்டு உள்ளிருக்கும் நாதத்தினுடைய சாட்சியும் சிவவாக உண்டு மஞ்ச மாதா (வாலைதாய்) சன்னதியும் அங்கே உண்டு. அனைத்து மகன்களுக்கும் மூட்டும் ஜோதியே கேரள சபரிவாசன் ஜோதி.
அரி சிவன் புத்திரன் ஐயப்பன் அரி தன்மை விளங்க வேண்டும் என்றால் ஐயப்பன் தன்மையும் தெரிந்து கொள்ள வேண்டும். மூல கானபதியும் வேண்டும் முக்தி தரும் அம்பலத்தானும் வேண்டும். அதில் அனைவரும் சமம் ஆட்கொள்ளப்பட்டவர் அருட்பெரும் ஜோதி ஆண்டவரும் அதில் உண்டு. சிவ நிலையே ஒன்று உணர்ந்தவர்கள் பலகோடி உணராதவர்கள் அதைவிட கோடி. உள்ளுணர்ந்து சென்று உன்னதமான நிலையை கொண்டவர்கள் சில கோடி. அதில் உருகி மருகி நின்றவர்களும் பலகோடி உண்மையை அறிந்து கொண்டவர்கள் சில ஆயிரம் கோடி ஒண்ணுமே இல்லாம நின்னவங்க பல ஆயிரம் கோடி. உள்ளம் மகிந்தாக வேண்டும் உண்மை தெரிந்தாக வேண்டும் அறம் பாடுவதற்கு மனிதன் என்பவன் பொருளல்ல காசு பணம் எதுமீதிம் பற்றல்ல பரகதி மேல் மட்டுமே பற்றாவான் அறம்பாடி.
பாகம் 33
உணர்வுபூர்வமது உறக்கத்தில் உணர்த்தும் செய்முறைதனில் உணர்த்தும் உள்வாங்கி உடனே செயல்படும் உத்தமனே பலவீனம் தாக்கா கற்பம் எடுத்து களத்தில் அசுரனை வீழ்த்து மண்ணால் அமைக்கப்பட்ட வீடு இது இறைவன் தங்கி வரும் சில கூடு உடைந்தால் நன்காடு காற்று உள்ளவரை நீ பாடு.
ஆட்டம் கொள்ளும் அமர இனங்களை மீட்டு தருவான் தூயவன். காக்கை குருவிக்கும் காய்கறி தானிய பழமென பெறுக்கி கேணி குளமெங்கும் நீர்நிலை நிரப்பி மருத நிலமதில் செழிக்கும் பயிர்களை தூவி எம் சித்தர் கூறிய மூலிகை துணையுடன் பிணியில்லா ஆத்ம யுகத்தை நிகழ்த்தி அழியாத் தலைவனாய் அமரன் வளம்வர கண்டேன்.
ஓம்படை துறையில்லா ஒருவரும் தவறிழைக்கா சமநிலை யுகமோ சடுதியில் வருவதை சங்கரன் துணையுடன் சகலன் நான் கண்டேன். மன்னவன் மனமது மலரினும் மெல்லியது அரக்கனை அழிக்கையில் மலை நடுங்கும் சினமது. சேரலாதன் மார்பை கொய்த்தது வெண்ணிப் பறந்தலை போர். வெறியாட்டு மீண்டும் மலர்ந்து சேரவள நாட்டில்.
ராதை பெயர் கொண்ட பேதை (12 வயது) ஒருத்தி ஐயனின் பன்னிரண்டு அகவையில் வந்து சென்றாள். அவள் வடக்கிருந்து வந்தவள் ஊரூராய் இரவு வித்தை காட்டி வயிற்றை நிறப்பும் கூட்டத்தாள். ஐயன் அவளின் ஆட்டத்திலும் அழகிலும் ஈர்த்து ஏங்கினான் அது அவன் முதல் காதலாம். பதினாழாம் நாளது போனது பொன்மணி வேறொரு ஊராம்.
வலது வயிற்றில் கரு மச்சம் ஒன்றிருக்க இது
பலருக்கும் தானிருக்கும் என படிப்போர் பகட்டாய் நலிக்க பின்பனி பிறைமதி நாளன்று மீண்டும்
புறப்படுவான் குமரிக்கடல் நோக்கி. எள்ளல் செய்தோர் அனைவரும் திகைக்க படைர்ந்து
வருவான் பரமனின் ஒளியான்.
பாகம் 34
நீ வேறு நான்வேறல்ல எனும் உண்மை உனக்கொரு நாள் விளங்க, ஆளுமை தன்மையை மாற்ற கோள்கள் உதயத்தோ பிரம்ம உருவாக மத்தியத்தோ சிவ உருவாக ஆகாச விஷ்வ உருவாக கதிரோடு சோமாய மங்களன் புதகுரு சனி சுக்கிர ராகு கேது என உதயம் மதியம் அந்திமககால மும்மூர்த்தியுடன் இவ்வேழ்வர் இணையுண்டு.
வைகுண்ட ஏகாதசி செல்லும் பொன்னவனை சனியோடு காலன் அழைக்க எருமை தர்மன் இவனை ஏன் இன்று கொண்டுவந்தீர் இவனுக்குகின்னும் காலம் உண்டென்று அதற்ற மீண்டும் இறக்கி விட்டர் வெண்கார காரர்கள் உயிர்தெழுந்த பொன்னுப்பையன் உற்றாரிடம் சொன்னான் அடர்மஞ்சள் மலர் பூக்கள் ஆகாச ஒளி அக்கடவுளை கண்டு வந்தேன் மீண்டும் மண்ணிற்கே!
கார்த்திகை அடைமழை அன்று காலம் செலுத்திய நாடாள் அரசி நினைவு நாள் அனுசரிக்க அமரன் வெடித்தான் இடி மின்னல் இரவினிலே காசு தொட்டி உடல் முழுக்க எழுந்து ஈசன் மகன் இரு பார்வை இழந்தான் என்றே ஈன்றோர் தொண்ணுறு நாள் கலங்க விளித்திறந்தான் எம் கலைத்துறை வித்துவான்.
புலித்தோல் போற்றிய பசுக்கள் பலவர அதன் கொடிய காலத்தை அமரன் நகர்த்திச் செல்ல சிகரத்தை தொட்டு உத்தம சீறாரை சிறப்புடன் காக்க அரக்கன் அவனிரு அரும்புகளை எம் ஈசன் துணையுடன் எடுத்தான் ஏகலைவன். மோட்சம் எதுவும் அங்கில்லை மீண்டும் கொலையான் கொடும் வினைக்கு ஆளானான்.
வானம் முழுதும் கடும் மழை பொழிய கூடும் குடிசையில் நிதம் நீர் ஒழுக அடுப்பு சாம்பலில் அமரனும் அமர விடியல் பொழுதினில் நறுமணம் கண்டேன். இத்தனையும் இயம்பும் என் கதை கூறேன் புதிரை உடைத்து புரிந்து கொள் இனமே! மொலக்குட்டி எனும் நோன்புடன் வாழ்ந்த ஏழை விவசாய இயந்திரத்தான் எமக்கோ ஏழு புத்திரர் என்பதை அறிவீர்.
பாகம் 35
பூமியை
நோக்கி நட்சத்திரங்கள் மேலிருந்து இறங்க சுனாமியது இயற்கையாக வராது இயற்கையாக மாறிய
மகான்களால் வரவழைக்கப்படும். புயல் எல்லா நாட்டையும் தாக்கும் மழை வெள்ளத்தால் எல்லா
மாநிலங்களும் பாதிப்படையும். சாப்பாட்டிற்கு பஞ்சம் வரும் இயற்கை அனைத்தும் பழைய
நிலையை விட்டு வறட்சி காணும்.
இதுவரை
காணாத சூரிய வெப்பத்தால் மனிதன் தாங்க முடியாமல் துக்கப் படுவான். உஷ்ண
வெப்பத்தால் புதுபுது வைரஸ் நோய் உண்டாகும் மரணங்கள் மேலோங்கும். எதனால் இது
நிகழ்ந்தது என காணும் முன்பே பல உயிர்கள் மடியும்.
எண்ணிலடங்கா
உயிரினங்கள் புதுமையாக பேசத்தொடங்கும். ஐந்தறிவு ஜீவராசிகள் அனைத்தும்
உணர்வுபூர்வமாக செயல்பட தொடங்கும். காமம் வெறுப்பு உணர்வு பாசம் சோகத்தை இதுவரை
காட்டாத ஆடு மாடு கோழி குயில்கள் காட்ட ஆரம்பிக்கும்.
ஐயன்
வருகையில் பறவை விலங்கினம் அனைத்தும் பேசும். நட்சத்திரங்கள் அனைத்தும் பொழிவிளக்கும்.
பல வண்ணங்களில் நட்சத்திரங்கள் தெரியும். மகான்கள் அனைவரும் உயிர்தெழுந்து வருவர்
பறக்க ஆரம்பிப்பர். ஐயனும் ஈசனும் சந்திக்கும் அன்றொருநாள் அது நடக்கும்.
No comments:
Post a Comment