koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Monday, December 14, 2015

வயதில் மூத்த மனைவி யோகம்

கணவனை விட மனைவிக்கு அதிக வயது
        பொதுவாக நமது கலாச்சாரப்படி திருமணம் புரியும் தம்பதிகளில் கணவனைவிட மனைவிக்கு சற்று சிறிய வயது பெண்ணாக பார்த்து மணம் முடிப்பது வழக்கம். சங்க காலம் முதல் இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்து வருகிறது. ஆணாதிக்கம் நிறைந்த சங்க காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்ககூடியவர்கள் என்றும் பெண்கள் ஆண்களுக்கு பணிவடைகள் செய்யக்கூடியவர்கள் என்றும் எண்ணப்பட்டு வந்தது. மேலும் ஆண்களுக்கு வயதான காலத்தில் மனைவியானவள் கணவனுக்கு உதவிகராமாக இருக்க வேண்டும் என்பது கருதியும் அன்று தொட்டு இன்று வரை திருமண முறையில் ஆண்களைவிட பெண்கள் வயதில் சிறியவராக இருக்கும் நிலை காணப்பட்டு வருகிறது.
                   மேலும் பெண்கள் ஆண்களை விட வலிமை குறைந்தவர்கள், பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள், பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்னும் பெண்ணியம் இன்று வளர்ந்து பெண்களும் ஆண்களுக்கு சமமாக அனைத்து துறைகளிலும் பெரும் வளர்ச்சி பெற்று திகழ்வதனை பார்க்கமுடிகின்றது.

                ஜாதக ரீதியாக ஒருவருக்கு அமையப்போகும் வாழ்க்கைத்துணையை பற்றி தெரிந்துகொள்ள முடியும்.

களஸ்திர ஸ்தானம் (ஏழாமிடம்) :  
                     ஒருவருக்குஅமையப்போகும் வாழ்க்கைத்துணையை பற்றி அறிய அவரது ஜாதகத்தில் 7 ஆம் வீடு மற்றும் 7 ஆம் அதிபர் நிலையை பார்த்து தெரிந்துகொள்ள முடியும். எழில் சுபக் கிரகங்கள் இருப்பது சிறந்த திருமண வாழ்க்கையை உண்டாக்கும்.

சனி :
                     ஒரு ஆண்மகனின் ஜாதகத்தில் 2 அல்லது  7 ல் சனி இருந்தாலோ அல்லது 7 ஆம் அதிபர் சனியின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தாலோ சனி + ராகு இணைந்து 2 அல்லது 7 ல் அமர்ந்திருந்தாலோ, சனி + கேது இணைந்து 2 அல்லது 7 ல் இருந்தாலோ, சனி ஏழாம் அதிபருடன் இணைந்தோ அல்லது சுக்கிரனுடன் இணைந்தோ ஜாதகத்தில் இருந்தால் அந்த ஆண்மகன் தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை உறுதியாக மணப்பான். அந்த பெண் அந்த பையனைவிட 3 அல்லது 6 மாதமோ 1, 2 அல்லது 3 வருடமோ மூத்தவளாக இருப்பாள். 

 பெண்ணின் ஜாதகம் : 
                
                        அதே போன்று ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7 ல் சந்திரனுடன் கேது அல்லது ராகு இணைந்திருந்தாலோ (2 ஆம் வீட்டிலும்) ஏழாம் அதிபர் சந்திரனுடன் சேர்ந்து இருந்தாலோ சந்திரனின் சாரத்தில் இருந்தாலோ அந்த பெண் தன்னைவிட வயதில் சிறிய பையனை மணப்பாள்.

யோகம் : 
           
            இது ஒரு நல்ல யோகமாகவே கருதப்படுகிறது. தன்னைவிட வயதில் மூத்த பெண்ணை மணந்து வாழ்கையில் மிக உயந்த இடத்திற்கு வந்த சாதனையாளர்கள் பலரை பார்க்க முடிகின்றது. கிரிக்கெட் வீரர் தென்டுல்கார், ஆங்கில எழுத்தாளர் ஷேஷ்பியர், மகாத்மா காந்தி,  நடிகர் தனுஷ் போன்ற பல சாதனையாளர்கள் தன்னைவிட வயதில் மூத்த பெண்களை மணந்தவர்களே ஆவர்.

மருத்துவம் :

                 மருத்துவ ரீதியாகவும் திருமணம் புரியும் தகுதியாக ஒரு ஆண் ஒரு பெண்ணைவிட 5 வயதுவரை மூத்தவராக இருக்கலாம் மற்றும் ஒரு ஆண் ஒரு பெண்ணைவிட 5 வயது வரை இளையவராகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தன்னைவிட 10, 15 வயது மூத்தவரையோ அல்லது தன்னைவிட 10, 15 வயது இளையவரையோ மணப்பது தான் தவறு என்று கூறப்படுகிறது.

         " தன்னைவிட வயதில் பெரிய பெண்ணை மணப்பவன்                    வாழ்கையில் மிகப்பெரிய இடத்திற்கு வருவான் என்பதில் ஐயமில்லை"    
   

       " ஓரிரு நிமிடங்களில் உயிர் பிரியும் இவ்வுலகில் 
        ஓரிரு வயதெல்லாம் இரு உயிர் இணைய தடையில்லை"

1 comment:

  1. Best Casinos Near Pittsburgh - MapyRO
    Find the 강원도 출장안마 best 여수 출장샵 casinos in Pittsburgh, 동두천 출장마사지 PA near Pittsburgh, United States. Mapyro users 정읍 출장안마 can 영천 출장마사지 search by location, map, video number, or other data from

    ReplyDelete