koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Tuesday, August 29, 2017

இனியவளே ! (சுக்கிரன் / காதல் / திருமணம் / பெண்கள்)

என் வான் நிலா...
         
             அன்றொரு நாள் அவள் என் வானில் வந்தது என் தனிமையை போக்கி என் உலகத்திற்கு வெளிச்சம் தந்து என் வாழ்வில் வசந்தம் வீச செய்தது. எனது நிழல் போல் அவள் என்னுடன் இருக்கும் ஒவ்வொரு கணமும் என் மனம் தாயருகே இருக்கும் சேயை போல் துள்ளிக்குதித்தது. என் தேவதை சிரிக்கும்பொது என் கண்ணீர் கலங்கியது ஆனந்தத்தில் அவள் அழும் போதோ என் இதயம் அழுதது பாசத்தில். 

                     என் தேவதை என் நிழலென எனை தொடந்தது  வருவது நான் செய்த வரம்.

இன்னொரு உலகம் வேண்டும்
உன்னுடன் நான் அங்கு உறங்கிட வேண்டும்
இன்னொரு வழித்தடம் வேண்டும்
உன்கரம் பிடித்து அதில் நான் நடந்திட வேண்டும்
இன்னொரு சண்டை வேண்டும்
அதில் உன்னுடன் நான் தோற்றிட வேண்டும்
புனர்ஜென்மம் போனது உன் நினைவிலே
தொடர் ஜென்மமாவது தொடரட்டும்
உன் இணையிலே ! என் இனியவளே !

சுக்கிரன் 

      சுக்கிரனே காதல், திருமணம், பெண்கள் சேர்க்கை போன்றவற்றுக்கு அதிபர். சுக்கிரன் உச்சம் பெற்று நல்ல நிலையில் இருந்தால் எண்ணற்ற வசதி வாய்ப்புகள் அழகான ஸ்ரிதி சேர்க்கை நல்ல இனிமையான காதல் அன்பும் அழகும் நிறைந்த மனைவி அமையும். சுக்கிர தசை, புத்திகளில் வலுவான சுக்கிரன் மேற்கண்ட பலன்களை வழங்குவார். 

 

No comments:

Post a Comment