koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Saturday, October 5, 2019

விஜயகாந்த் பிறப்பு ஜாதகம் ஒரு அலசல் (ஜோதிடர் சாம்ராஜ்)

விஜயகாந்த் பிறப்பு ஜாதகம் ஒரு அலசல் : 

             வணக்கம் மக்களே (இது என் வசனம் இல்லைங்க கேப்டன் வசனம்) நீண்ட மாதங்களுக்குப்பிறகு வலைத்தளம் வாயிலாக மீண்டும்  உங்களுடன் என் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி. 
     
           மக்கள் எனும் வார்த்தை முதன் முதலில் தொல்காப்பியத்தில் தான் இடம்பெற்றது என படித்த நியாபகம். அதற்கடுத்து எத்தனையோ அரசியல் தலைவர்கள் மக்களை மக்களே என்று அழைத்தாலும் இவ்வார்த்தையை கேட்டவுடன் எனக்கு  முதலில் நியாபகம் வருவது பெரும் மரியாதைக்குரிய திரு. விஜயகாந்த் அவர்கள் தான். இது ஜோதிட கணக்கு அல்ல ஒரு சிறிய கற்பனை ஒரு வேளை அவர் முதல்வரானால் முதலில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம் எனும் அனைத்தும் மக்கள் உணவகம், மக்கள் மருந்தகம் என பெயர்  மாற்றப்படும். (இது அவர் சொல்லியது அல்ல என் கற்பனை).

        தன் தாயிக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்த திரு. விஜயராஜ் சிறு வயது முதலே சினிமா மோகத்தில் கல்வியில் கவனத்தை இழந்தவர். நண்பர்கள் உதவியுடன் சினிமாவில் நடிக்க முயற்சித்து ஒரு 149 படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து முடித்த ஓரிரு படங்கள் சில காரணங்களால் திரைக்கு வரவில்லை. 

        இவர் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மீதுள்ள பற்றினால் கடும் எதிர்ப்பிற்கு பிறகு தன் 100 - வது திரைப்படத்திற்கு "கேப்டன் பிரபாகரன் " (இயக்கம் : R.K. செல்வமணி) எனப் பெயர் வைத்தார். அது மட்டுமின்றி தன் மூத்த மகனுக்கும் விஜய பிரபாகரன் எனப் பெயர் சூட்டினார். 

        சிறு வயது முதலே நாட்டுப்பற்று, அநீதியை தட்டிக்கேட்க்கும் துணிச்சல், நீதி, நேர்மை, அன்பு, கருணை, வீரம், கோபம், தருமம் என ஒரு உயர்ந்த கொள்கையுடன் வாழத் தொடங்கினார். இவரை நான் முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு (சுதேசி பட வேளை) மேச்சேரியில் பிரச்சாரத்திற்கு வந்திருந்த போது பார்த்தேன். அப்போது அவர் நாட்டில் நடந்த ஒரு அநீதி குறித்து பேசுகையில் "மோதுறதா இருந்த நெஞ்சுக்கு நேரா ஒத்தைக்கு ஒத்தை வாடா பாத்துக்கலாம், நானும் மதுர காரன்தான்டா, கிராமத்தான் தான், மோதுவோம் வரியா ?" என தன் வேட்டியை மடித்து கட்டினார். அன்று தான் நான் ஒரு நிஜ ஹீரோவை நேரில் பார்த்தேன். எனக்கும் சினிமா மீது பற்றுவர முதல் காரணம் இவர் தான். இவரை பற்றி பேச விரும்பினால் ஒரு புத்தகமே போடும் வரை பேசலாம்.

          அதற்கு அவசியமில்லை காரணம் "விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு" எனும் புத்தகத்தை ஆசிரியர் திரு. யுவகிருஷ்ணன் எழுதி வெளியிட்டுள்ளார். முடிந்தால் வாங்கி படியுங்கள் தற்போது நாம் நம் தலைப்பிற்கு வருவோம்.
  
சுப ஜனனம் :
            இன்று திரைப்பட நடிகர், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர், தயாரிப்பாளர் ஆகிய மரியாதைக்குரிய திரு. விஜயகாந்த் (கலைமாமணி, புரட்சி கலைஞர், கேப்டன்) அவர்களது ஜாதகம் குறித்து பார்ப்போம்.
               
பெயர் : விஜயராஜ் (ஜாதகப்படி)
பிறந்த தேதி & நேரம் : 25.08.1952 இரவு 07.10
பிறந்த இடம் : விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா (இடம்பெயர்ந்தது மதுரை)
தாய் தந்தை : ஆண்டாள், அழகர்சாமி



         ஆவணி மாதம் திங்கள் கிழமை கும்ப லக்கினம், துலா ராசி சித்திரை நச்சத்திரம் பாகம் - 4 வளர்பிறை பஞ்சமி திதி புலி யோனியாக சுப யோக சுப தினத்தில் சுப ஜனனம்.

தொடரும்...
நாளை விரிவாகப் பார்ப்போம் (உடல்நிலை, எதிர்காலம், அரசியல் etc...)
       


No comments:

Post a Comment