புரட்சி கலைஞர் விஜயகாந்த் :
ஜாதகப்பலன் வாசர்களுக்கு வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு இதே வலைதளத்தில் நடிகர்கள் விஜய், அஜித் ஜாதகங்களை பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டேன். அதில் பொது விபரங்கள் மட்டுமே (ராசி, நட்சத்திரம், குணாதிசயம்) கூறினேன். மற்ற முழுமையான விபரங்கள் அடுத்த பதிவில் பார்ப்போம். என்று கூறிவிட்டு சில பல காரணங்களால் அஜீத் விஜய் பற்றிய அடுத்த கட்டுரையை வெளியிடவில்லை.
சிலர் விஜய், அஜித் பற்றிய அடுத்த பதிவை போடுங்கள் போடுங்கள் என தொடர்ந்து வற்புறுத்தினர். "அடுத்த பதிவு போடுறது பற்றி இல்ல போடலாம், போட்டா பிறகு என்னை போட்ருவாங்க ரசிகர்கள்". நாம ஏதாவது ஜாதகப்படி சொல்லி, ஏய் தலைய பத்தி என்ன சொன்ன? னு சண்டைக்கு வருவாங்க. எதுக்கு வம்புனு தான் நிறுத்திட்டேன்.
அதனால் அதுபோலவே நம் விஜயகாந்த் ஜாதகம் குறித்தும் பல முறை யோசித்தேன். பல யோசனைகளுக்குப் பிறகு துணிந்து பதிவிடலாம் என்று முடிவு செய்தேன். அத்துடன் இந்த நேரம் இதற்கு சரியான நேரம் என ஆழ்மனதில் தோன்றியது.
இறைவன் இருக்கின்றான் :
செவ்வாய், சூரியன் :
அரசு, அரசியல், ஆளுமை, தலைமை போன்றவற்றுக்கு காரகத்துவம் கொண்ட கிரகங்கள் சனி, சூரியன், செவ்வாய் ஆகியனவாகும். இவர் ஜாதகத்தில் இம்மூன்று கிரகங்களும் வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக சூரியன், செவ்வாய் எனும் இரு கிரகங்களும் தத்தம் வீடுகளில் அமர்ந்து 100 % ஆட்சி பலத்துடன் காணப்படுகின்றன.
நன்றி
தொடரும்... நாளை (உடல்நிலை, அரசியல் எதிர்காலம், future ect... )
இறைவன் இருக்கின்றான் :
மற்றவர்களுக்கு இதய பூர்வமாக உதவுபவர்களுக்கு இறைவனும் உதவுவான். உன்னால் இயன்ற அளவிற்கு நற்செயல்களை செய். (இது நான் சொல்லியது அல்ல. காலை மேச்சேரி சினிமா அலுவலகத்திற்கு வரும்போது மேச்சேரி வனபத்ரகாளி அம்மன் கோவில் வானொலியில் ஒலித்தது.) "அதான பார்த்தேன் உன்னாலலாம் இந்த அளவுக்கு யோசிக்க முடியாது னு சொல்றிங்க. புரியுது, பரவாயில்லை".
மேற்கண்ட வாசகத்திற்கு உதாரணம் நம்ம விஜயகாந்த். கும்ப லக்கினத்தில் பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பார்கள். நிறைகுடம் ததும்பாது. எத செய்யணும் எத செய்யக் கூடாது எது நல்லது எது கேட்டது னு சரியா முடிவு எடுப்பாங்க. பெரியோர் சான்றோர்களை மதிப்பர். பணிவு, அடக்கம், பொதுநலம் விரும்பும் இவர்களுக்கு சனி அதிபராக வருவதால் சனிக்குரிய கருப்பு நிறம், கடின உழைப்பு, ஏழைகளுக்கு உதவுதல், சிறுவயதில் ஒல்லியான தேகம் மத்திம வயதிற்கு பிறகு குண்டான தேகம் சதை தொங்கும் முகம், நீதிபதி, நாட்டாமை, அரசு, அரசியல் செல்வாக்கு, வீட்டில் அல்லது நெருங்கிய உறவில் உடல் ஊனமுற்றோர், தனக்கு கீழ்படியும் நல்ல வேலைக்காரர்கள், வண்டி வாகனம் என கொடுப்பினை உண்டு.
சனீஸ்வர பகவான் :
நவ கிரகங்களில் சனிக்கே ஈஸ்வர பட்டம். சனியே மிகப்பெரிய கோள். (அறிவியல்படி குரு {Jupiter} ) எனவே முதல் 30 ஆண்டுகள் கடுமையான போராட்டங்களை கடக்க வேண்டிய நிலை. தன் 12 அல்லது 13 ஆம் வயதில் தலைக்கு அடிபடும்படி சிறு வாகன விபத்து ஏற்பட்டிருக்கும் (உதாரணம் : சைக்கிள் ஓட்டி கீழே விழுதல்). இதனாலோ அல்லது பிறவி முதலோ உச்சம் தலையிலோ முகம் அல்லது நெற்றி பகுதியில் தழும்பு, மச்சம், மரு நிச்சயம் இருக்கும்.
சினிமா :
கடவுள் வந்து என்னிடம் "நீ நாளை இறந்து விடுவாய், இன்று உன் ஆசை என்ன என்பதை கூறு, நிறைவேற்றுகிறேன்" என்று கேட்டால், நான் சொல்வேன் "இறைவா உன் உத்தரவு படியே எல்லாம் நடக்கட்டும். இன்று நான் விஜயகாந்த் நடித்த "வைதேகி காத்திருந்தாள்", ரஜினிகாந்த் நடித்த "வீரா", கமல்ஹாசன் நடித்த "சலங்கை ஒலி", AVM ராஜன் நடித்த "திருவருள்" இந்த நான்கு திரைப்படங்களையும் எந்த சிறு தொந்தரவும் இல்லாமல் தனிமையில் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று கேட்பேன்.
இதில் முதலில் ஒளிபரப்பாகும் படம் "வைதேகி காத்திருந்தால்". இவர் ஜாதகத்தில் சுக்கிரன் தன் சொந்த நட்சத்திரத்தில் பயணிப்பதாலும் 12 ல் ராகு இருப்பதாலும் சினிமா துறையில் நுழைந்தார் வென்றார். வித்யாகாரகன் புதனுடன் கேது சேர்ந்ததால் கல்வி தடை. மறைந்த புதன் நிறைந்த அறிவு, ஞானம், பேச்சாற்றல் தந்தது.
திருமண வாழ்கை :
களத்திர ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானம் ஏறி குரு பார்வை பெறுவது அழகான அன்பான தெய்வ பக்தி நிறைந்த பாக்கியமான மனைவி அமைவார். "இதுலாம் இறந்தகாலம் (past) எங்களுக்கே தெரியும். எதிர்காலம் (future) பற்றி சொல்லுங்க"னு கேக்குறிங்க புரியுது. பொறுமை காக்கவும்.
7 ல் உள்ள சுக்கிரன் ஆட்சி பெற்ற சூரியனுடன் சேர்ந்ததால் காரகபாவ நாஸ்தி விலகியது. திருமணத்திற்கு பிறகு திடீர் திருப்பமும் அதீத முன்னேற்றமும் முன்பை விட மதிப்பு மரியாதை கூடியதும் உண்மை. மனைவியின் பக்கபலமும் இவருக்கு முழுமையாக உண்டு.
செவ்வாய், சூரியன் :
அரசு, அரசியல், ஆளுமை, தலைமை போன்றவற்றுக்கு காரகத்துவம் கொண்ட கிரகங்கள் சனி, சூரியன், செவ்வாய் ஆகியனவாகும். இவர் ஜாதகத்தில் இம்மூன்று கிரகங்களும் வலுப்பெற்றுள்ளது. குறிப்பாக சூரியன், செவ்வாய் எனும் இரு கிரகங்களும் தத்தம் வீடுகளில் அமர்ந்து 100 % ஆட்சி பலத்துடன் காணப்படுகின்றன.
நன்றி
தொடரும்... நாளை (உடல்நிலை, அரசியல் எதிர்காலம், future ect... )
Super Very useful for jathagam study
ReplyDelete