koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Monday, October 7, 2019

விஜயகாந்த் ஜாதகம் - பகுதி - 3 (இறுதி பகுதி)

முந்தைய தசாபுத்தி :


      கடந்த 17.02.2019 வரை புதன் தசையில் ராகு புத்தி நடந்ததால் தூர தேசப்பயணம், மருத்துவ மனை  செலவு, வெளி மாநிலம், வெளிநாட்டு பயணம்,  அயன சயன போகம், வேற்று மொழி பேசுவோர் தொடர்பு போன்ற பலன்களும் சில நாட்கள் அதிக நேரம் தூங்குவது, சில நாட்கள் தூக்கமின்மையால் 2 அல்லது 3 மணி நேர தூக்கம். ஆன்மீக தொடர்பு உண்மையான சித்தர்கள் சாதுக்கள் யோகிகள் தொடர்பு, பல்லி, பாம்பு, உடும்பு உருவில் சித்தர்கள் தலை மட்டும் காட்சி தருவது.
                   ஒரு சிலருக்கு 12 ஆம் அதிபர் தசா புத்திகளில் கடும் விரையம், தனிமை, உலக வாழ்கையில் இருந்து விலகி இருப்பது. தன்னிலை மறத்தல், மன அழுத்தம், உடல் உபாதை, கோமா நோய், பிறரிடம் தஞ்சம் அடைதல், முயற்சிகளில் இழுபறி, எதிர்பார்ப்பில் ஏமாற்றம், கனவில் பாம்பு வருவது, பூரான் கொட்டுவது போன்றவை ஏற்பட்டு விலகும்.     

நடப்பு தசாபுத்தி : 


      
        புதன் இவருக்கு பூர்வ புண்ணியாதிபதி அட்டமாதிபதி என்பதால் புதன் தசையின் (17 வருடங்கள்) பாதி காலம் சுப பலன்களும் மீதி காலம் அசுப பலன்களும் நடக்கும். 02.02.2007 முதல் புதன் தசை தொடங்கியது. தற்போது புதன் தசை முடியும் காலம். அதாவது 02.02.2024 அன்றுடன் இவருக்கு புதன் தசை முடிகின்றது.  தற்போது 25.05.2021 வரை புதன் தசையில் குரு புத்தி நடைபெறுவதால் குரு இவருக்கு தன, குடும்ப ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானாதிபதியாகி, ஆட்சி பெற்ற சூரியன் சாரம் பெற்று (களத்திர ஸ்தானாதிபதி) 3 ஆம் வீடான வெற்றி, தைரியம், வீரியம், போராட்டம், இளைய சகோதர ஸ்தானத்தில் அமர்ந்து வளர்பிறை  சந்திரனின் சுப பார்வை பெற்று (360 டிகிரி)  புத்தி நடப்பதால் (இதுலாம் எங்களுக்கு புரியாது, மேட்ர மட்டும் சொல்லு னு கூட்டத்துல சிலர் கேட்குறிங்க, புரியுது.)

உடல்நிலை முன்னேற்றம் :

          முழு சந்திரனை மேகம் மறைத்து கொண்டது, சில நிமிடங்களுக்குப் பிறகு மேகம் கொஞ்சம் கொஞ்சமாக விலக, மீண்டும் சந்திரன் தன் முழு பிரகாசத்தையும் வெளிபடுத்துகிறது. அதுபோல் இதுநாள் வரை இருந்து வந்த உடல் உபாதைகள் படிப்படியாக குறைந்து முன்பைவிட ஆரோக்யமாகவும் புது எழுச்சியுடனும் எழப்போகும் காலம் நெருங்கிவிட்டது. 
         இவர் சில மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் திருப்பூர் கூட்டத்தில் பேசுகையில் "மக்களாகிய உங்களை எல்லாம் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி, இங்கு என்னை காண வந்த அனைவரும் தத்தம் வீட்டிற்கு பார்த்து பத்திரமாகச் செல்ல வேண்டும். நான் நலமாக உள்ளேன். விரைவில் (அடுத்த முறை) உங்களுடன் 1 மணி நேரம் பேசுவேன்" என்று பேசுகையில் தன் உடல்நிலை சற்று சரியில்லாத போதும் அதிகம் பேச இயலாத உடல் நிலையில் இருந்தும் தன் துயர் (தன்னலம்) மறந்து, பொது நலம் (மக்கள் நலம்) கருதி நீங்கள் அனைவரும் பத்திரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறும் உயர்ந்த குணம் கலைஞர்களுக்கே உரியது. 
              அதிலும் நம் விஜயகாந்தின் அச்சூழ்நிலை பேச்சையும் உடல் தோற்றத்தையும் பார்த்து கண் கலங்கியோர் பல லட்சம் பேர்.

கவலை வேண்டாம் :
      
      
       
         அந்த சமீபத்தில் வெளியான விஜயகாந்தின் திருப்பூர் மேடைப்பேச்சே என்னை இப்பதிவிட பெரிதும் தூண்டியது. நம் விஜயகாந்த் ஜாதகம் ருச்சுக யோகம், கஜகேசரி யோகம், விபரீத ராஜயோகம் போன்ற பல பெரிய யோகங்கள் நிறைந்து, ஆயுள் காரகன் ஆயுள் ஸ்தானத்தில் அமர்ந்து ஆயுள் வழுப்பெறுவதால் சிறப்பாக உள்ளது. விதியின் மரணத்தை எவராலும் துல்லியமாகக் கணிக்க இயலாது. நீ மற்றும் உன் மரபினர் செய்த தருமமும் புண்ணியமும் இவ்வுலகில் இருக்குமாயின் விதியின் மரணத்தைக் கூட மறு பரிசீலனைச் செய்யலாம்.

தலைவர் :
           "பதவியில் இருப்பவர்கள் மட்டுமே தலைவர்கள் அல்ல, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களும் தலைவர்களே" எனவே நம் விஜயகாந்த் அவர்களும் எப்போதும் தலைவரே. 

   
        நம் தலைவரின் ரசிகர்கள், தொண்டர்கள் அனைவரும் மேற்கண்ட தகவல்களை  100% முழுமையாக நம்பவேண்டும். குறிப்பாக பழைய விஜயகாந்த் விரைவில் திரும்ப வருவார் என்பதை மனதார ஆழமாக நம்பவேண்டும். தயவு செய்து உங்கள் நம்பிக்கையும் பிராத்தனையும் தலைவருக்கு எப்போதும் இருக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன். இப்படி பல லட்சம் மக்களின் உண்மையான பிராத்தனைகள் ஒரு உன்னத மனிதரின் உயர்ந்த ஜாதகத்திற்கு மேலும் வழு சேர்க்கும். 

அரசியல் வாழ்கை :
       
         புரட்சி கலைஞர் திரு. விஜயகாந்த் அவர்களின் தொழில், அரசியல், மக்கள் சேவை குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம் என்று இம்முறையும் நான் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. உங்களை ஏமாற்றும் எண்ணமும் எனக்கில்லை. அரசியல் (உள்ளாச்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல்) குறித்து அறிவிப்பு வந்த பிறகே அதனை துல்லியமாக கணிக்க முடியும். காரணம் தேர்தல் அறிவிப்பு நாள், தேர்தல் முடிவு நாள் அடிப்படையில் அந்த காலத்திற்கான தசை, புத்தி, அந்தரம், கோச்சாரம் பார்த்து முடிவு செய்ய முடியும். மேலும் நம் கேப்டன் மனைவியார் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் ஜாதகமும் தேவை. எனவே இந்த விவரங்கள் அதற்கான நேரம் காலம் வரும்பொழுது கணிப்பதே உத்தமம். 

           இத்துடன் நம் புரட்சி கலைஞர் திரு. விஜயகாந்த் அவர்களின் ஜாதகப் பலன்கள் நிறைவு பெறுகிறது.
        
         
                 
                                                                     நன்றி...
                                            *********************************
            அன்பர்கள் இதனையும் படிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் அன்பிற்குரிய நான் :
           Google search, Facebook, Whats app போன்ற வழிகளில் என் வலைதளத்தின் ஜோதிட ஆன்மீக கட்டுரைகளை உலகத் தமிழர்கள் பலர் தொடர்ந்து படித்து ஆதரவு கொடுத்து வருகின்றீர்கள். என் கட்டுரைகளைப் படித்து Facebook ல் உங்கள்  கருத்துக்களையும் (Comments) விருப்பங்களையும் பகிர்ந்து வருகிறீர்கள். அதனை இவ்வலைதளத்திலேயே உங்கள் mail id பயன்படுத்தி பதிவிடலாம். ஆரோக்கியாமான கருத்துக்கள் சந்தேகங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்தவார பார்வையாளர்கள் :   
India
11289
United States
1913
Sri Lanka
363
United Arab Emirates
275
Singapore
168
Unknown Region
121
Malaysia
109
United Kingdom
70
Australia
56
Indonesia
45

     மேற்கண்ட அனைவருக்கும் நன்றி உங்கள் வாழ்க்கை வளம்பெற என் இறைவன் துணை புரியட்டும். (இறைவன் உன் இதயத்தில் இருப்பதனால் உனக்கும், உன்னால் நேசிக்கப்படுபவர்களுக்கும் ஒரு துன்பமும் வராது.) இத்தளத்தில் நான் பல நாட்கள் இரவு நேரங்களில் பதிவிடல் மற்றும் அதிவேக தட்டச்சு காரணமாகவும்   இவ்வலைதளத்தின் கட்டுரைகளில் வார்த்தைப்பிழை, எழுத்துப்பிழை இருக்ககூடும். பொறுத்தருள்வீர். மற்றும் நான் மனதார அனைத்து நல்லுயிர்களுக்கும் நன்மை உண்டாகவே நாள்தோறும் எண்ணுகின்றேன். 

               என் கட்டுரைகள் யார் மனதையேனும் புண்படுத்தி இருந்தால் உடனே Email : yessamraj@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிய படுத்துங்கள் அல்லது தினம்தோறும் காலை வேளையில் சிறிது வேப்பிலை, கீழாநெல்லி, சோற்றுக்கற்றாளை, துளசி, மிளகு தக்காளி, ஆவாரம்பூ, அகத்திக்கீரை இவற்றை சாப்பிட்டு வாருங்கள். உங்கள் மனம் எவ்வளவு புண்பட்டிருப்பினும் விரைவில் குணமாகிவிடும். 

நன்றி.. வேறு ஒரு நல்ல தலைப்பில் மீண்டும் சந்திப்போம். நான் என் தனிப்பட்ட வேலை நிமித்தமாக சென்னை செல்ல இருப்பதால் என் அடுத்த கட்டுரை வெளிவர அனேகமாக இன்னும் சில வாரங்கள் ஆகலாம். 
    
அன்புடன் 
             சாம்ராஜ்... 



     

No comments:

Post a Comment