உள்ளாட்சித் தேர்தல் 2019
ஊராட்சி மன்றத் தலைவர் :
ஊராட்சி மன்றத்திற்கான தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யடுகின்றார். இந்த ஊராட்சி மன்றத்திற்கான துணைத் தலைவர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யடுகின்றார். ஊராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி மன்றத்தலைவரே அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.
இதன்படி நடந்து முடிந்த 27 டிச 2019 தேர்தல் முடிவுகள் 02 ஜன 2020 அன்று வெளியானது. இதில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கூனாண்டியூர் ஊராட்சி மன்றத் தலைவராக திருமதி. A. விஜயா ராஜாகண்ணு வெற்றிபெற்றார்.
அநியாயங்களை அதிகாரத்தால் அடக்குவது :
வெற்றி குறித்து தலைவர் திருமதி. A. விஜயா ராஜாகண்ணு கூறுகையில் "நான் எவ்வாறு என் மக்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டுள்ளேனோ, அவ்வாறே என் மக்களும் என்மீது அன்புகொண்டு என்னை மிகவும் நம்புகின்றனர். இதனை அவர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் உணருகின்றேன். எனவே என் மக்களுக்கு என்னால் இயன்ற வரை நன்மைகள் செய்திடுவேன். அநியாயங்களை அதிகாரத்தால் தட்டிக்கேட்பேன். இதுவரை யாரும் செய்திடா எண்ணற்ற பொது சேவைகளை செய்து மக்களுடன் மக்களாய் கலந்திடுவேன். என்னை வெற்றி பெறச்செய்த என் வாக்காள பெருமக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கின்றேன்." என சூளுரைத்தார்.
3 ஆண்டுகளாக நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் நீண்ட இழுபறிக்குப் பின் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து 2019 டிச.27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையர் திரு. பழனிச்சாமி அறிவிப்பினைத் தொடர்ந்து, கிராம ஊராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்பட்டன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கிறது.
ஊராட்சி மன்றத்திற்கான தலைவர் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யடுகின்றார். இந்த ஊராட்சி மன்றத்திற்கான துணைத் தலைவர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யடுகின்றார். ஊராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி மன்றத்தலைவரே அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.
இதன்படி நடந்து முடிந்த 27 டிச 2019 தேர்தல் முடிவுகள் 02 ஜன 2020 அன்று வெளியானது. இதில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கூனாண்டியூர் ஊராட்சி மன்றத் தலைவராக திருமதி. A. விஜயா ராஜாகண்ணு வெற்றிபெற்றார்.
அநியாயங்களை அதிகாரத்தால் அடக்குவது :
வெற்றி குறித்து தலைவர் திருமதி. A. விஜயா ராஜாகண்ணு கூறுகையில் "நான் எவ்வாறு என் மக்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டுள்ளேனோ, அவ்வாறே என் மக்களும் என்மீது அன்புகொண்டு என்னை மிகவும் நம்புகின்றனர். இதனை அவர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் உணருகின்றேன். எனவே என் மக்களுக்கு என்னால் இயன்ற வரை நன்மைகள் செய்திடுவேன். அநியாயங்களை அதிகாரத்தால் தட்டிக்கேட்பேன். இதுவரை யாரும் செய்திடா எண்ணற்ற பொது சேவைகளை செய்து மக்களுடன் மக்களாய் கலந்திடுவேன். என்னை வெற்றி பெறச்செய்த என் வாக்காள பெருமக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கின்றேன்." என சூளுரைத்தார்.
No comments:
Post a Comment