koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Monday, January 13, 2020

7 வது வார்டு துளைநீர் (Bore water) மறுசீரமைப்பு

பழுதடைந்த துளைநீர் இயந்திரம் :




      கூனாண்டியூர் ஊராட்சி 7 வது வார்டிற்கு உட்பட்ட (கீரைக்காரனூர்) மாரியம்மன் கோவில் அருகில் இருக்கும் துளை நீர் குழாய் கடந்த 3 ஆண்டுகளாகப் பழுதடைந்து காணப்படுவதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு உள்ளாகினர். 


மறுசீரமைப்பு செய்யப்பட்ட துளைநீர் குழாய் :

      சில தினங்களுக்குமுன் பதவியேற்ற கூனாண்டியூர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி A. விஜயா ராஜாகண்ணு கவனத்திற்கு இத்தகவல் வந்தது. இதனை தொடர்ந்து இரவோடு இரவாக இத்துளை நீர் குழாயினை சீரமைத்து, நாளையே அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க உத்தரவிட்டார் தலைவர் திருமதி. A. விஜயா ராஜாகண்ணு. அதன் பேரில் திரு. ராஜாகண்ணு அவர்கள் தலைமையில் இன்று 13.01.2020 இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சீரமைப்பு பணி நடைபெற்றது.

பொங்கல் முதல் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு :
   
       
          3 ஆண்டுகளாக குடிநீருக்காக மிகவும் திண்டாடிய அப்பகுதி மக்கள் இப்பொங்கல் பண்டிகைக்கு குடிநீர் இன்றி வருந்தா நிலையை உருவாக்கித் தந்த, ஊராட்சி தலைவரின் சீரிய பணி குறித்து பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


No comments:

Post a Comment