சனிப்பெயர்ச்சி 2020
சனிப் பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வரும் விகாரி வருடம் தை 10ம் தேதி அதாவது 2020 ஜனவரி 24ஆம் தேதி நடக்க உள்ளது. இச்சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். ("சரி அதுக்கு என்ன இப்போ ?" என்று குதர்க்கமாக கேலி செய்பவர்கள் இப்பதிவை படிக்க வேண்டாம் உடனடியாக வெளியேறுங்கள். )
நீதிமான் & ஈஸ்வர பட்டம்:
இப்பிரபஞ்சத்தில் உயர்ந்த குணங்களாகிய நீதி, நேர்மை, சத்தியம், தர்மம், கடின உழைப்பு போன்றவற்றுக்கு உரியவர் சனி பகவான் ஆவார். 9 நவகிரகங்களில் சனி பகவானுக்கே ஈஸ்வரர் பட்டம் உண்டு (சனீஸ்வரர்). கிரகங்களில் சனியின் பார்வைக்கு அதிகமான வலிமை உண்டு. அதனால் தான் சனி, பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துக் கொள்ளும் தன்மை கொண்ட கிரகமாகத் திகழ்கின்றது. பொதுவாகச் சனியின் சன்னிதியில் நின்று வழிபடும் பொழுது, நேருக்கு நேர் நின்று வழிபடுவதைக் காட்டிலும் ஏதேனும் ஒரு பக்க ஓரத்தில் நின்று வழிபட வேண்டும். (சனியின் நட்ஷத்திரக்காரர்களாகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியோர் மட்டும் சனி பகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாம்).
சனியை சாய்வாய் நின்று வழிபடு:
முன்னோர்கள் சனியை சாய்வாய் நின்று வழிபடு எனச் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த முறையில் சனியை வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்ளலாம். சகல தோஷங்களும் நீங்கி தரணியிலேயே வாழ்க்கை நடத்தச் சனிபகவான் நமக்கு அருள் புரிவார். கர்ம தர்ம ஜீவன ஆயுள் காரராகிய சனீஸ்வர பகவான் நல்லவர்க்கு நல்லவர் கெட்டவருக்கு கெட்டவர் (இது ரஜினி வசனம் ஆச்சே னு கேலி செய்யக்கூடாது, காரணம் சனி பொல்லாதவர்).
கர்மவினை :
ஒருவர் பூர்வ புனர் (போன ஜென்மம், இறந்தகாலம்) காலங்களில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றார் போல், நன்மையையும் தீமையும் கலந்து பலனளிப்பார். சனி நீதிபதி. நடுநிலைமையான உண்மையான தலைவர்கள் (பஞ்சாயத்து தலைவர், முதல்வர், பிரதமர்) மற்றும் நீதிமன்ற நீதிபதிகள் அனைவருமே சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களே ஆவர். ஜோதிடம் ஓர் அறிவியல் மூடநம்பிக்கை அல்ல என்பதற்கு தலைவர்களும் நீதிபதிகளும் உதாரணம். இதனை இல்லை என நிரூபிப்பவர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும்.
அடுத்த பதிவில் 12 ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் பற்றி பார்ப்போம்.
நன்றி.
அன்புடன் சாம்ராஜ்.
****************************
இதனையும் படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வார பார்வையாளர்கள் :
Entry
|
Pageviews
|
India
|
13853
|
United States
|
2317
|
Sri Lanka
|
403
|
United Arab Emirates
|
286
|
Unknown Region
|
250
|
Singapore
|
177
|
Malaysia
|
134
|
United Kingdom
|
72
|
Australia
|
56
|
Indonesia
|
Sep 3, 2015, 5 comments
|
6564
|
||||||||||
Dec 14, 2015
|
1593
|
||||||||||
Sep 2, 2015
|
898
|
||||||||||
Sep 28, 2015
|
861
|
||||||||||
Aug 29, 2017, 1 comment
|
471
|
||||||||||
Oct 3, 2017
|
389
|
||||||||||
Nov 17, 2015
|
361
|
||||||||||
Aug 27, 2015, 1 comment
|
291
|
||||||||||
Aug 29, 2015
|
219
|
||||||||||
Sep 18, 2015
|
215
|
||||||||||
Jan 13, 2020
|
194
|
||||||||||
Pageviews by
Browsers
|
Pageviews by
Operating Systems
|