koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Sunday, December 27, 2020

ஆசிரியர் சாம்ராஜின் - சூட்கேஸ் / கோர்ட்கேஸ் – சிறுகதை

 சூட்கேஸ் / கோர்ட்கேஸ் – சிறுகதை

   கிழக்கே பார்க்கையில் சூரியன் ஒளி வடிவானது தலை சிறிது தூக்கும் நிலை. அதாவது மணி காலை 10, பத்தரை இருக்கும். கோட்டை போன்ற வீட்டின் கதவு திறக்க எண்ணி அழைப்பு மணி ஒலிக்கும் சப்தம். வேலைக்காரர் கதவைத் திறந்து, வாருங்கள் என சூட்கேசுடன் வந்த இளைஞரை அழைத்து மீண்டும் கதவை தாழ்ப்பாள் போட்டார். இளைஞரைப் பார்த்த வேலைக்காரர் “ஐயா மேலே உள்ளார். மேலே செல்லுங்கள்” என முதல் தளத்திற்கு அனுப்பி வைத்தார். மேலே சொகுசு அறைக்கு உள்ளே அனுமதி பெற்று நுழைந்த இளைஞர் அங்கிருந்த மேசையின் மீது சூட்கேசை வைத்து விட்டு. “ஐயா நான் செல்லலாமா?” என பணிவுடன் கேட்க படுத்துக்கொண்டே புகைத்துக்கொண்டிருந்த தலைவர் “ம் சரி தம்பி கிளம்பு, நாம தான் ஜெயிக்கிறோம் நம்ம கூட்டணிய மிஞ்ச யாரும் இல்ல. உங்க தலைவர தைரியமா இருக்கச் சொல்லு. புரியுதா? என புகை ஊத, இளைஞர் சரிங்கையா என்று வெளியேறுகிறார்.   

     மணிமாறன் ஒரு எழுச்சி மிக்க இளைஞன். தவறுகள் திருத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மண்ணில் சமத்துவம், சாந்தம் நிலவிட வேண்டும் என்றிருப்பவன். இதனால் தவறு செய்யும் அதிகாரிகள் குறித்தும் தலைவர்கள் குறித்தும் பொது மக்களிடம் விழிப்பூட்டல், உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தல், ஏழை எளியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களை பெற்றுக்கொடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தான். மணிமாறன் செயல்களால் பல அதிகாரிகள் பணியிட மாற்றம், தற்காலிக பணி நீக்கம், செய்யப்பட்டனர். பல அரசியல் தலைவர்கள் அப்பேரூராட்சி தேர்தலில் தோல்வியை தழுவினர்.  இதனால் பல முக்கிய புள்ளிகளின் அதிருப்திக்கு ஆளாகினான் மணிமாறன்.



     அன்று திங்கள் கிழமை கோவிலில் சாமியை வணங்கிவிட்டு பணி தேடி நேர்காணலுக்குச் செல்ல சான்றிதழ்களுடன் புறப்பட்டான் மணிமாறன். சாலையோரம் ஓரிரு வண்ண நிறம் கொண்ட கட்சிக்கொடிகள் அலங்கரிக்கப்பட்ட லாரி ஒன்று நின்றுந்தது. கோவில் வாசலில் பார்வையற்று பிட்சை எடுத்துக்கொண்டிருந்த மாலதி (வயது 28) உள்பட பல ஏழை எளிய பெண்களும் பெருசுகளும் லாரியில் விறுவிறுப்பாக லாரியில் ஏறினர். லாரியின் ஓட்டுனர் லாரி மீது சாய்ந்து நின்றபடி பீடி புகைத்தபடி, புரியாமல் நடந்து சென்றுகொண்டிருந்த மணிமாறனைப் பார்த்து “என்ன தம்பி எங்க போற? வண்டியில ஏறு?” என அழைக்க மணிமாறன் பறந்து வரும் பீடி புகை காற்றை கையில் தட்டியபடி, “பரவால்ல அண்ண, எனக்கு பக்கத்துல தான் இண்டெர்வியூ. நான் நடந்தே போய்க்கிறேன் தேங்க்ஸ்” என்று கூற, ஓட்டுனர் “அட இண்டர்வ்யூக்கு போனா மட்டும் வேலையா கொடுக்கப்போறான். பணம் கொடுத்தா தான் வேலை அங்க ஏன் போயு டயத்த வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்க. வண்டியுல ஏறு பக்கதூர்ல ‘காமா சோமா’ கட்சி மாநாடு நடக்குது. 300 ரூபா, கோட்டறு, பிரியாணி கிடைக்கும். சும்மா உக்காந்து ஒரு ரெண்டு மணி நேரம் கை தட்டிட்டு வந்தா பொது. ஆமா உனக்கு விசில் அடிக்கத் தெரியுமா? என ஓட்டுனர் கேட்க. கோபமடைந்த மணிமாறன் “யோ போயா வேலைய பாத்துகிட்டு” என்று எரிந்தபடு சாலையோரம் விறைத்து நடக்க மணிமாறன் தன் கையில் வைத்திருந்த பைலில் இருந்து தனது ஓட்டுனர் உரிமத்தை கீழே தவறிவிட்டபடி செல்ல. சிறிது நேரம் ஆனவுடன் லாரி ஓட்டுனர் தன் லாரி சீட்டருகே சென்று அமருகையில். சாலையோரம் ஓட்டுனர் உரிமம் ஒன்று கிடப்பதை கண்ணாடி வாயிலாகப் பார்த்து வண்டியிலிருந்து இறங்கிச் சென்று எடுத்துப்பார்க்க அது தன்னுடன் பேசி சென்ற இளைஞனது என்று அறிந்தபடி அவ்வோட்டுனர் உரிமத்தை லாரியின் டிரைவர் சீட்டருகே வைத்தபடி லாரி கிளம்புவது.   

     அரசியல் பிரச்சார கூட்டத்தில் கட்சி தலைவர் “திரளாக இங்கு வந்திருக்கும் உங்களை எல்லாம் பார்க்கும்போது ஒன்று மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிகிறது. இனி எந்த ஒரு சக்தியாலும் நம் கோட்டையை அசைக்க முடியாது என்பது” என்றபடி ஒரு காலை ஸ்டேஜில் உதைக்க, ஸ்டேஜ் ஒரு அசைவு காட்டியது. உன்னே மைக்கை அனைத்தபடி தலைவர் தன் பின்னமர்ந்து கொண்டிருந்த கட்சி ஆட்களிடம் “டேய் எவன்டா இந்த ஸ்டேஜ போட்டது? டவுன் பஸ் மாதிரி குலுங்குது. முட்டுக்குடுங்கடா மூதேவிகளா” உடனே வேலையார்களால் ஸ்டேஜிக்கு முட்டுகொடுக்கும்பணி நடந்தபடியே தலைவர் பேசிகொண்டிருந்தார்.

     மணி மாலை 4. மாநகராட்சி பேருந்து நுழைவு வாயில் அருகே “ இறைவனிடம் கையேந்துங்கள் -அவன்இல்லையென்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டு பாருங்கள் - அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை” என்று பாடியபடி ஒன்றரை வயது குழந்தையை ஒரு கையிலும் ஊன்றுகோல் மற்றும் உண்டியல் ஒரு கையிலும் தாங்கியபடி மாலதியின் கணவன் மாணிக்கம் பிட்சையேந்தி நின்றான்.

     மாநாட்டில் தலைவர் விறுவிறுப்பாக பேசிக்கொண்டிருந்த வேளை. மாலதி கூட்டத்தில் எழுந்தபடி “ஐயா 2 மணி நேரம்தான்னு கூட்டிகிட்டு வந்திங்க மூனரை மணி நேரம் ஆகிடுச்சி, என் கொழந்த அங்க பாலுக்கு அழுதுகிட்டு இருக்கும். தயவு செஞ்சு பணத்த கொடுங்க நான் பஸ் எறியாட்சம் போய்டுறேன்” என கூவ, பின்வரிசையில் இருந்த முரட்டு முட்டாள் இளைஞன் ஒருவன் “அட உக்காரும்மா வீடியோ எடுதுகிட்டிருக்கேன். மறைக்காத உக்காரு உக்காரு” என் தன் செல் போனில் கல்கி அவதாரத்தை கண்டவாறு தீவிரமாக கூட்டத்தையும் தலைவர்களையும் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். மாலை பள்ளி விட்ட வேளை. கூட்டத்தை அருகாமையில் சில பள்ளி மாணவ மாணவிகளும் சிறிதுநேரம் வேடிக்கை பார்க்க நின்றனர். பார்வையற்ற மாலதியை பார்த்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மாலதியை கூட்டத்திலிருந்து அழைத்து வந்து, தன் ஜாமண்ட்ரி பாக்ஸில் இருந்த 15 ரூபாயை மாலதியிடம் கொடுத்து மாலதியை பத்திரமாக பஸ்ஸில் ஏற்றிவிட்டாள்.    


     இரண்டு மாதங்கள் கழிந்தன. நாளிதழில் ஒன்றில் “பார்வையற்ற தம்பதியினர் மாணிக்கம் – மாலதி ஆகியோரது கைக்குழந்தையை கடத்தி குழந்தையில்லா தம்பதியினருக்கு விற்ற குற்றத்திற்காக மணிமாறன் எனும் பட்டதாரி இளைஞரை கைது செய்து வழக்கு தொடரப்பட்டுள்ளது” என்ற செய்தியைப் படித்த அதிகாரி ஒருவர் “ஏன்டா டேய் நீ இம்மாந்துண்டு பையன் என் வேலைக்கே வேட்டுகைக்குற. உன்ன ஒழிச்சிடுறேன்டா” என்றபடி நாளிதழை டீக்கடை பெஞ்சில் போட்டபடி தன் பாக்கெட்டில் இருந்த மணிமாறன் ஓட்டுனர் உரிமத்தை உடைத்து அருகில் ஓடிய சாக்கடையில் போடுவது. அந்நேரம் அருகே இருந்த கோவில் மணி ஒலித்தது..   

                *******************************************************

நன்றி அன்புடன் சாம்ராஜ்.

No comments:

Post a Comment