koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Friday, March 26, 2021

இருக்கும் கொள்ளையர்களில் இரக்கமான கொள்ளையர் - சிறுகதை - ஆசிரியர் சாம்ராஜ்

 இருக்கும் கொள்ளையர்களில் இரக்கமான கொள்ளையர் 




மும்பை பாந்த்ரா நகர் அருகே உள்ள ஒரு பனை மரத்தில் ராட்சஸ கழுகு ஒன்று அமர்ந்தபடி தன் கூர்மையான கண்களால் தரைநோக்கி பார்த்துக்கொண்டிருந்தது. *****

                 சில மாதங்களுக்கு முன்பு  *****

தேவன் உறங்கிக் கொண்டிருந்தான். அது இரண்டாம் ஜாமம். தேவன்  ஆற்று அலையில் சிக்கித்தவித்து பல போராட்டங்களுக்குப் பிறகு நீந்தி வந்து ஒரு மரத்தை கட்டி அனைத்துக்கொண்டான். கண் விழித்த தேவன் தனக்கு ஏற்பட்ட கனவை எண்ணி சிறிது நேரம் அசை போட்டுவிட்டு விடிந்ததும் வியாபாரத்திற்கு கிளம்பினான்.

தரமான காய்கறிகளை நியாயமான விலைக்கு விற்கும் தேவனுக்கு மற்ற போட்டியாளர்கள் மத்தியில் மறைமுக எதிர்ப்பும் அதே சமயம் மக்களது நன்மதிப்பும் கிட்டியது. விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொருட்களை பெறும் தேவன் அப்பொருட்களுக்கான  தொகையை விவசாயிகளுக்கு உடனே கொடுத்து பொருட்களைப் பெறுவது வழக்கம்.  தேவன் பொதுமக்களிடம் அணுகும் அணுகுமுறையில் பொறுப்புணர்வு இருந்தது கர்வம் இல்லை. தேவன் ஒரு எளிமையான ஏழை.

வேலமங்கலம் வியாபாரிகள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு திசையன் போட்டியிட திட்டம் தீட்டியதன் நோக்கம் கொள்ளையடித்து கோடீஸ்வரர் ஆன குடும்ப ரெத்தம். ஆம் திசையனின் தாத்தா, அப்பா , திசையன் என வழிவழியாக ஏழைகளை ஏமாற்றியும் வியாபாரிகள் விவசாயிகள் வயிற்றில் அடித்தும் சம்பாதித்தவை திசையனின் சொத்துக்கள் அனைத்தும். 

 

 

அழகிய அமைதியான கிராமம் அந்த கிராமத்தில் சமீபத்தில் பிறந்த சிறுவர்கள் யாரும் அதுவரை மழை பொழிவை கண்டதே இல்லை, அந்த கிராமத்தில் மழை பொழிந்தே பல வருடங்கள் ஆகிறது. அந்த கிராமத்தில் கால்நடைகளெல்லாம் தாகத்தாலும் பசியாலும் மடிந்து கொண்டிருந்தது,  தேவன் நலிவடைந்த தக்காளி பழங்களை காட்டில் பசியுடன் இருந்த குரங்குகளுக்கு கொட்டிவிட்டு நடை பயணமாக வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேலை, வானம் மேக மூட்டத்துடன் மாற ஆரம்பித்தது. இடி இடித்தது. புழுதி பறக்க காற்று வீசியது. பெருமழை பெய்யத்  தொடங்கியது. மழையில் நனைந்து சென்று கொண்டிருந்த தேவனை கடந்து கொள்ளையன் திசையனின் கார் சென்றது.



 கந்தசாமியின் தந்தை ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் கந்தசாமி இளம் வயது முதலே பள்ளி கல்லூரி படிப்புகளை எல்லாம் புறக்கணித்து அவ்வப்போது தன் வீட்டில் உள்ள பணத்தை சிறிதளவு யாருக்கும் தெரியாமல் கொள்ளை அடித்து அதனைக் கொண்டு மது அருந்துவது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது. தன்னிடம் உதவி என்று வந்தவர்களுக்கு தான் உழைத்து சேர்த்த பணம் இல்லாவிடினும் தன் தந்தையின் பணத்தை திருடியேனும் உதவுவது. அதிகம் தூங்குவது. அநியாயத்திற்கு குரல் கொடுப்பது, திருமணத்தில் ஈடுபாடின்றி 48 வயதிலும் தனித்து வாழ்வதென வளம் வந்துகொண்டிருந்தான்.

கந்தசாமியும் தேவனும் நண்பர்கள். தேவனுக்கு காய்கறி வியாபார இடமே தனது முக்கியமான பொழுது. கந்தசாமிக்கோ தனது பொழுதுபோக்கு இடம் தேவனின் காய்கறிக் கடை. வியாபாரிகள் சங்கத் தேர்தல் பேச்சு வார்த்தை நெருங்கியது. தேவன் கந்தசாமியிடம்கந்தசாமி விவசாயிகளின் விவசாய நிலத்தில் வறட்சியின் காரணமாக சாரை பாம்பு ஊடுருவி மண் பொந்தில் வாழும் எலிகளைப் பிடித்து நிம்மதியாக உயிர் வாழ்வது ஒன்று தான் உருப்படியாக நடக்கிறது. மழை இல்லை, போரிலும் போதிய தண்ணீர் இல்லை, மகசூல் குறைவு, வியாபாரிகள் விவசாயிகள் நிலை உணராமல் சுயலாபத்திற்கு அடிமட்ட விலைக்கு விலை பொருட்களை வாங்குவது, வாங்கிய பொருட்களை மனசாட்சியே இல்லாமல் பொது மக்களிடம் அதிக விலைக்கு விற்பது, மார்க்கட்டில் மூட்டை வரி கட்டணம் அதிகரிப்பு, மாமுல், தரம் குறைந்த பொருட்கள் பல கொடுமைகளும் கொள்ளைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இக்கொள்ளைகளுக்கு மேலும் வழுவூட்டும் வகையில் வேலமங்கலம் வியாபாரிகள் சங்கத் தலைவர் பதவிக்கு கொள்ளையன் திரு. திசையன் நிற்பது ஆபத்தானது.”  என்றான் தேவன்.

இதனை கேட்ட கந்தசாமிதேவா நீ சொல்வது அனைத்தும் உண்மை. என்ன செய்யலாம்?என   வினாவினான். கந்தசாமியை பார்த்த தேவன்தேர்தலில் நீ போட்டியிட்டு மேற்கண்டவற்றை சரி செய்ய உழைத்திடு. இருக்கும் கொள்ளையர்களில் நீ கொஞ்சம் இரக்கமான கொள்ளையன்” என கூறி முடித்தான் தேவன்.

அடுத்தநாள் வழிபோக்கில் தேவனை சந்தித்த திசையன் தன்னை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்க வாய்ப்பு கேட்க தேவன் மறுத்து கந்தசாமிக்கே எங்கள் ஆதரவு என உரக்கச் சொன்னான். அடுத்த கணமே கொள்ளையன் திசையன் மற்றும் அவனது ஆட்களால் தேவன் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு மும்பையில் கழுகுக்கு இரையாகப் போடப்பட்டான். இங்கு கந்தசாமி வெற்றி பெற்று தலைவர் பதவியை அடைந்தான்.

மும்பை பாந்த்ரா நகர் பனை மரத்து ராட்சஸ கழுகு ஒரு மனித தலையை எடுத்து தன் கூர்மையான மூக்கால் மனித தலையின் கண்ணை கொத்தி சாப்பிட்டது

 


No comments:

Post a Comment