அறம்பாடி சித்தர்
பாடல்கள்
பாகம் 1
அலை கடல் பாலாய் ஆடிட்டக் கண்டோ மதன்
நடுவினில் ஆதி அரவம்தனை அருமெத்தையாக்கி அறிதுயில்கொள் எழிலனந்தன் திருக்கமல பாதம் வருடி திருமகள் பணியக்கண்டோம். கனிரச காப்பியம் போற்றும் கலைப் புகழுலகில் தோன்றி கலி அகற்ற வேண்டி நிதமவனை நெஞ்சிறக்கி நோற்றோர் கண்டோம். அஞ்ஞானிகளறியா வண்ணம் மெஞ்ஞானியர் பணிவிகிணங்கி இயலழகு சூழ் கண்டம் தன்னில் இவனெடுத்த பிறப்பிடம் இதுவாய் கண்டோம்.
மலை நாட்டோரம் நல்லரவாய் ஓடும் கால்வாய் கரையில் உயிர் வரம் பெற்றிருப்பான். பாம்பை பஞ்சணை ஆக்கி உறங்கும் அனந்தன் புரிக்கருகே இவன் பிறப்பான். இவருறைவிட தூரமது அரை நாள் நடை பயணம். கன்னி ஒருத்தி கலங்கரை அருகில் மணநாளன்று தன் வரன் துறந்து காட்சி தருவாளே. இவள் மூக்குத்தி மின்னும் முத்தமிழ் அன்னை தெற்கில் வசிப்பாளே. காளியுமவளே திரிசூலியுமவளே கடுஞ்சினக்காரியவள். காலனைக் கூட காலால் மிதித்தவள் இவனை மதித்தாளே இவன் துயர் கண்டு கொதித்தாளே.
தன்னடி பணிந்த தானீனா தனயனை மடியா வண்ணம் அணைத்து கொண்டாளே. இவன் பகை எரியா வண்ணம் அணைத்தும் விட்டாளே. நீச நெசவர்க ளொன்றுகூடி நீதி மானிவனுயிர் பறிக்க எண்ணி பாசக்கயிருடன் பவனி வருவாரே. வடக்கே ஒரு வட்டி கும்பல் கொடியோர்க்கு குருதிப் பொன்னை மாரியென வாரி பொழிந்திடுமே.
இமயம் போன்ற இவனை நெருங்க எவருக்குமியலாதே. ஆளும் அரசின் ஆளா மங்கை அந்தண செல்வியுடன் பிறவா தங்கை ஊழ்வினைப் பயனால் இவன் தலை கொய்ய உடன்பட்டு அழிவாளே. வாரிசிலாள் இணையான் நோய் பெற்று அழிவானே. குழல் கொய்யும் குல மாந்தர் குணம் கெட்ட மலை நாட்டோர் கூடிவந்திதன் தலை கொய்ய புறப்படுவார். இதன் பயனாய் மலை நாட்டின் பேரணை உடைந்து மண்ணுறங்க செல்வாரே.
தவத்தான் இவனது தங்கை ஒருத்தி தரங்கெட்டு திரிவாளே ; எதிரிக்கு உதவும் பொருள் பெண்ணாகி இவன் பொன்னடி அறியாளே. ஈரைந்து சிரசோனின் ஈழத்து வழித்தோன்றல் மலை நாடு வந்தே றியதோர் மனிதமிலா தீயரினம் இம்மாயோன் சிரமறுக்கத் துணிந்தே சிகை யருக்குமினமோ டிணைந்தே வந்தாலும் தீங்கேதும் செய யியலாது தொடர்ந்திடுவர். பாதையெங்கும் படர்ந்திடுவர். உயிர்வதைக்கும் இவரனைத்தும் உருக்குலைந்தே அழுகிடுவார். கோநிரை காத்திடவே குடை பிடிக்க மலை யுயர்த்திய கோமானை கொடும் படைதான் வேன்றுவிடுமோ? யினெ பரந்தாமன் துயில் கலைத்தானென்பதனை பாருக்கு சொல்ல வந்தேன். நனி தூய்மை நல்லோர்கள் பாரெல்லாம் அழுததனால் பாதகர்க்கு தீர்வு கட்ட பாழுலகில் பிறப்பெடுத்த இரகசியத்தை பேதைக ளறியாரே. எம்போன்ற பேரருளா ளனறிவானே.
பாகம் 2
மூவிரண்டு வருடமாய் தோற்றம் தரும்.
இரண்டாம் இலக்கம் மதிப்பற்ற எண்ணை பெறும்.
அவ்வருடம் இவனுக்கு சக்தி வரும். அறிந்து கொள்வாய் அவ்வாண்டை அறிவிலியே. இவனெழா வண்ணம் தடுத்திடவே ; உறைவிடம் ஒட்டி ஓராயிரம் பகைவர்கள் யாகங்கள் அமைதனரே. இவன் காலடி விழும் பாதைகள் தோறும் பில்லி சூனியம் புதைத்தனரே. அக்கடின காலமவனையும் கடந்து கசந்தே போனதுவே.
இனி காணும் காலம் நீணிலம் காணும் கொடிய போர்க்காலம். அதன்பின் நமக்கோ என்றென்றும் பொற்காலம். இவன் அங்க அடையாளம் காண அரசனும் சூழ்ச்சி செய்து கண்டிட்டான். இதில் வென்றிட்டார் கயவர் கூட்டம். ஆவணம் சேகரித்து அறிவியல் ஏவல் செய்யும்.
புருவம் செறிவன் திருநெற்றியில் தீபமொளிரும்.இடக்கமலக் கைக்குள் சங்கின் மையத்துள் சக்கரம் சுழல்வதே கருடாழ்வா ரருள் தோன்ற வலதுக்குள் திருமகள் தாமரையும் திரிசூலியான யூதமும் மோசேயின் தாரகையும் கையுள் மின்னுமாம். நபிதேவன் முத்திரையும் பொன்னெ ழுத்தாய் ஒளிரக் கண்டோம்.
பைங்கிளியாம் பாஞ்சா லிதனை பாழ்கலை சூதில் பறித்த வாள்களை யறியா வஞ்சக சினியிகொநி சின்னமாம் சகுனி மறுமையில் கொங்குநிலம் புகுந்து கூர்தந்தத் தினமழிய ஆதி கூத்தனுக்கோர் அரும்பீடமமைத்தே அறம் கொல்வானவன் ஆலகா லவிடத்தினும் அருங் கொடியோ னென்றறிந்தோம்.
அவனங்கு மையல் கொண்டு மஞ்சமிட்டே மயிபீலிக் கண்ணனைத்து நெஞ்சம் மகிழ்வான். அவனும் எம்மவதார அய்யனை அழித்திட கொடியோரைக் கூராயுதமாக்கி ஏவித்தொடுத்தும் எதுவும் தீண்டா வைரசிலையாய் வரம்பெற்ற அய்யனா லவன் தொற்றிழி மகனாய் இசையழிந்து வசை குவிப்பா னென்பதை வாய்மொழிவேன் பரம்பொருளே. இவன் விண்ணக வேந்தரென்று மண்ணுலக கொடியோரெல்லாம் மனதிற்குள் அதிர்ந்தே போனார்.
பாகம் 3
விளைச்சலை உண்ணும் வேலி. விலை போகும் மன்னன் நீதி. தளைத் தோங்கா தருமம் தன் தலை இழக்கும் காலம் முளைத்திடும் வெள்ளியாய் முத்தமிழ் காக்க மீண்டுமிவனே வருவான்.அநீதியை கொய்வா னென இவன் மேல் ஆணையிட்டேன். இட்டார் ஆணை எல்லாம் எளிதாய் மாறலாகும். இடர்தரும் கெட்டார் இவனைச் சூழ்வர். தீதாய் இவனை தொட்டால் தொடுங்கரத்தை கொடுந்தழல் தின்னும். இவனை தொழுதால் நலம் பெருகும்.
விண்கதிர் வேள்வி செய்து மண்பயிர் கருகும் வேளை மாண்புடன் இவனே வருவான் மண்பயிர் புன்னகைக்க மணமகளும் வளம் கொழிப்பாள். இவன் வலக்கரம் தன்னில் வான்தமிழ் நிலத்தின் வரைபடம் ஒன்றிருக்கு மதனருகே அழகீழமும் தெளிவாகும். தமிழினம் தலைத்தோங்க முளைத்தவனை பூதேவி தன் பொன்மடி தவழும் மாண்புடை செல்வத்தை கண்மணியாய் காக்கின்றாள்.
முத்தூர் நெல்நகர் குமரியை மொத்தமாய் எடுத்ததோர் ஆழிக்கரையோன் கல்விசாலை கொள் வடக்கன் நிதி பெறுவான். நெஞ்சம் வெடித்து நிற்கதி யிழந்து நெடுவழி தனில் உயிர்விடுவான். அழியா தலைவன் இவனே என்று அறியா பாவியாவான்.
பாகம் 4
பொற்றாமரைக் கண்ணன் நாமம் பெற்ற பொய்யனொருவன் பொங்கியே தீயோர் சூழமைய அமைச்சனாய் மமதையில் மனிதம் மறந்திங்கே முக்கடலூரில் தீஞ்செயலாற்றும் தன்குல பனை நாட்டார் ஒநாய்ப்படை கொண்டிவன் கண்ட மறுத்திடத்தான் பொன் பெற்றும் அறுக்காது போனதுதான் வல்லன்னை குமரியால் வந்திவனை காத்தாளே!
அவன் கொடுங்கொடி முத்திரை முண்டகமலராய் முத்தமிழ் பரப்பை தகர்க்கவருமென சித்திரமே நீ அறிக. நன்னெறி கொன்ற நற்பெயர் வேடன்; அவன் தன்னிசை இழந்து நொந்தே மடிவான் காண். கழுகுக்கண் கணை துளைக்க கயவர்கள் சூழ்ந்திருக்க பிணம் தின்னும் கொடுநாய்கள் இவன் காலடி மண்ணெல்லாம் மறைந்தொழுகும்.
இம்மூதறிஞன் மூன்றாம் கண் திறக்கும் வரை இவனைச் சுற்றியே மூன்றாம் கண் இயங்கும் காண்பாய். மூன்றாம் கண்கெட்டு முடமான கபோதிகள் மாண்ட பின்னர் புகுவது மாநரக மென்பதை மட்டிகள் அறியாரே எம்மனமுரைந்த பரம்பொருளே.
விடினி வட்டிப் பாவியர் மலை நாட்டு சூனியர் கட்டித்தழுவியுடன் இவனடையாளம் கண்டு அதிந்துபோவாரே. அழுகுக்காவி ஏவி இவ்வாத்மாவை அழிக்க கொடுஞ்செயல் புரிந்தும் ; அவ் ஆவிகள் அழுதே சொன்னது கேளாய்..! பாம்பில் பள்ளிகொள் பார்க்கடல் தேவனின் பிறப்பின் ரகசியம் தனை சொல்லியே மறைந்ததுவே. நடுங்கிய வடமண் வணிகரும் அவரை அழித்தால் நாமழிவோம் என்று ஒடுங்கியே பதுங்கலானர். பின்னிவன் உலாவிற்கு பொன்னை விரையம் செய்தார்.
இருகால் புரவியில் இளம் நரிகள் ஏராளம் நெறிகெட்டலைந்தே நீதிமானை வட்டமிட பரியற்ற தேர்படையை பாதகர் எவிடுவார்.நிசியெலாம் படை சூழ இவன் மீது விழி பதிப்பர். ஆநிரை மேய்ப்பன் வகை யினமொன்று ஆழி வேடுவருடன் கரம் சேர்த்திவ் வய்யனைச் சூழ்ந்தே வல்லூறாய் வட்டமிட்டிவன் எதிரிக்கு தகவலீந்து இழிபொருள் சேர்ப்ப ரென்பதனை நெஞ்சாரக் கண்டேன்.
அக்கொடியோர் சந்ததி களனை வருமே பாவத்தின் சின்னமாகி படும்பாட்டை பரிதாபமாய் கண்டேனே பரம்பொருளே இவனில்லம் சூழ்ந்திருக்கும் இல்லத்தா ரனைவருமே குருதி விடமொடும் கொடியோராய் இவன் சங்கருக்கும் சவாலை எற்றவரின் சங்கமத்தில் இணைந்ததனால் சங்கமதில் புற்றுவைத்தே அழுகிடுவர் என்பதனை யாமறிந்தோம் பரம்போருளே.
உத்தமனுறைவிடம் சுற்றி இரு காலரவுகள் உள்ளமெலாம் உயிர்பறிக்கும் விடமூற கள்ளம் கபடமுடனிவன் மார்பணைத்து தழுவியதை இவனறியாது போனாலுமிதை யாம் அறிவோம் பரம்பொருளே.
பாகம் 5
கங்கைக் கரை காவல் பூனை களா தரவளித்தும் மங்கைக் கெள்ளளவும் மயங்காத சிங்க மைந்தனின் சிரசரியத் திரிந்தாலு மதற்கு பாசக்கயிறுடை நமனெங்கே உடன்படுவான் என்பதை யாரறியா திருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே.
கொலை செய எண்ணிய கொடுங்கயவர் குழுமம் தோற்றுத் துவண்டதனை தொய்விலா துரைக்கின்றேன் தூயோரை காத்தருள துரிதமாகும் பரம்பொருளே. கங்கை மூலம் இறங்கி தன் பங்கம் தீர்த்தானை அங்கன்றே கொல்ல வந்தும் அப்படியே முத்தமிட்ட பாகமெங்கும் கொடுநோய்தான் கொல்லாமல் கொல்லுமன்றோ.
சினங்கொண்டாள் இயலன்னை என்பதறியாயோ. சீரிளம் கலை மணியினை பூதங்கள் சிரம் தாழ்த்தும் புண்ணியவா னிவனை தேவரும் காக்க கொதித்து எழுந்தனரே. இன்று நிலமகள் வெடிப்பும் நெருப்பும் நீரும் கொடும்புயலும் கோர தாண்டவமாட இக்கொடுஞ்செயல் காரணமே.
நீதி தேவதைக் கெதிராய் வாதியை வதம் செய்ய வாதிடும் வல்லூறுகள் வல்லோனிவனைக் கொல்ல பெருநிதி பெற்றிடுவர். மூத்தோன் முத்திரைக் கொடியுடை மூதேவி மகவுகளும் இக்கொடுஞ்செயல் புரிந்திவனை யொழிக்க பின்னணியிருப்பா ரென்பதை பெரிதாய் பிறரறியாது போனாலும் யாமறிவோம் பரம்பொருளே!
இயக்கமும் அவனே, எழுத்தும் அவனே, இசையும் அவனே தான். எல்லாம் விண்ணில் எழுதிய நெடுங்கதை என்பதை யாரறிவர்? இதில் நடிப்பவர் கொடிகள். ஞானிகளே இதை அறிந்தன ரென்பதைஅறிவோம் பரம்பொருளே! அவனாணை வரும்வரை அணுவும் துயில்கொளும் என்பதை அறி மனமே. பிவிபெளெ பிணமாய் விழுமுன் பெருமாளெனும் மணாளன் திருவடி அறிந்தால் விடுதலை நிச்சயமே. அவன் திருவீடடைந்தால் பேரருள் கிட்டிடுமே.
பாகம் 6
தாமரை அன்ன முழு வீச்சும் இலைத்தா மரை அன்ன இல்லறமும் செந்தா மரை அன்ன ஒளி முகமும் வந்தாரை வணங்கும் குணநலமும் கொண்டவ னிவனைக் குறித்துக்கொள். கோடியுறும் இவன் வருகை புரி ந்துகொள். குலம் விளங்கும் இவன் சேர்க்கை அறி ந்துகொள். இவனீவுகள் இரண்டா யிருப்பினும் எல்லோ ரையும் செல்வமாக ஏற்றெடுப்பான் அறியாயோ. அவனழகு நாமப்பெயரைச் சொல்வேன் கேளாய் கண்மணியே. ஆழியில் துயிலும் விழி எழிலன் பாதியைகொண்ட காதலியை ஆதியில் நாமமாய் பெற்றிருப்பான். அம்மணமடையா மாயோனை பிரிந்தா ளவள் நாமம் முதல் நாமம். பின்னரே இவன் நா மம் சேர்ந்தொலிக்குமே கேளாய்!
அம்மை யப்பனை யறி ய ஆன்மீக விழி இறந்தா லன்றி அவனை அறியாய் அறிவிலியே வேள்விமலையில் மயிலகவ வேடுவன் வடிவில் குறத்தியை மணந்தா ங்கே குன்று காப்பான் வீற்றிருப்பா னவன் முன்னிலிவன் இருமகனாய் காளி அருள மணம் புரிவான். கங்கை க்கரைத் திருமார்பரை கரை சேர்த்த தோணியோட்டி நின்றருளும் குமரன்கோவில் இங்கே இக்கோ மான் துணை மணம் புரிந்தானிவனை ஆழி வேடுவர் அழிக்க எண்ணி ஆர்ப்பரித் தடங்கிடுவர்.
மொட்டுக்க ளிரண்டரும்ப முல்லை நிலம் விட்டு தமிழ் பரப்பின் தலைப்பதியாம் நெய்தல் நி லம் பெயர்ந்தான் இத்தவமகன். அங்கே திதேயி முன்னுறு திங்களுறைந்தே மன்னுயிர் நலம் பேணும் இன்னுயிர் நன்னோக்கில் பிணி தவிர்க்கும் பணியொன்றால் பிறர் குடிகாப்பானே எம்பெருமான் என்பதனை எமை யல்லால் யா ரறிவர் பரம்பொருளே.
சோழிங்கன் நகரருகே ஆலிங்கம் செய்யும் ஆழிவண்ணனுக்கோர் எழிலரும் கோவிலொன்றில் இறைத் தொண்டாற்றியதில் இதயம் இழந்தாளிவனிடம் மதன்மனை போன்றோர் பூந்தாரகை ஒருத்தி . நாற்பதின் நடுவில் இவனுக்கு நறுமணம்போலே வந்தவனை மையல்புரி வாளா தலால் இவ்வய்யனிவன் அவளில் மயங்கியே பகை பல்லாயிரம் வளர்த்தா னென்பதனை பறை சாற்ற முடியாமல் படும்பாட்டை யாமறிவோம் பரம்பொருளே.
இதில் வடபுல வல்லரக்கர் பலர் உடன்பட்டு இவன் வாழ்வழிக்க சதுவலையை விரித்தாலும் வீழாது வீரிய வேங்கை யென விடுபட்டு வருவானே. அண்ணல் அவளிடம் நெஞ்சை யளித்து நினைவில் கலந்தான். அருளா ளனிவன் அம்மயிற் கரம் பிடிப்பதை அக்கண்ணன் கோவில் கயவர் கலைத்தரே .செய்வினை மூலம் சேயிழை மனம் இதை துடல் பிரி க்க வடக்கருதவிட கொங்கிற்குள் வந்தேறிய குடிகெடுத்தான் வந்தா னே .
அந்நீசனர்கள் புரிந்திட்ட பாவத்தா லீசன் இனம் கொண்டோர் தீராக்கொடும் நோய் எழுப்பிடுவான். அகிலம் முழுதும் பரப்பிடுவான். அதை அடக்கவும் இவனையே அனுப்பி வைத்தான். அடங்கா நோய்க்கு தடங்கலிட தரணிமுழுவதும் முயன்றாலும் தழைகள் முளைத்து துளிர் விட்டே அது தொடரும் என்பதை யாமறிவோம்.
அந்நோ யகற்றி வேறருக்க இந்நீணிலத்திற் ஐய்யனொ ருவனுக்கே அதிகாரமளித்தான் எம் அம்மையப்ப னென்ற உண்மையுரைத்து யாம் ஓதத்துணிந்தோ ம். முத்துநகரின் தென்மேற்கே முல்லை நில நதியோரம் பித்தனருளுடன் பிறப்பெடுப்பான் இவ்வருமருந்துவ னென்ற தேகி இடுதே தேவவாக்கினை இட்டு உடைத்தேன் பிறரறிந்திடவே . பின்னரேன் நின்னிலடங்கி ஒடுங்கிய எம் போன்றோரிதை மறைக்கும் மனம் பெற்றார் பரம்பொருளே.
பாகம் 7
கொத்துக் கொத்தாய் உடல்கள் வீழும். கூக்குரல்கள் விண்ணை கீறும். சொத்துக்களாய் காத்தநம் கால்நடைகள் மாண்டுவீழ மண்மீது கொடுநோய் பல பரவுமங்கே . வித்துக்கள் முளைத்தால் கூவேதனை தான் அறுவடையே .பத்தையும் விற்றுவிட்டு பசி நமக்கு பாடை கட்டும். பரிதாப பஞ்சங்கமெங்கும் பெரிதாக ஆட்டம் போடும்.
உறங்கா த ஊர்கள் கூட உறங்கும் கா லம் வந்தே தரும். தலைப்பா கையர் நாடுகளில் தங்கம் ஊறும் கேணிகளில் இரை தரும் கிணறு எல்லாம் இரையாகும் தழலுக்கே . அணு வீழ்ந்தங்கெலாம் புல்பூண்டும் கரியாகும். இதனால் பரிவோடா புரியாக பலவூர்கள் பரிதவிக்கும்.
ஓய்வறியா தோடும் தேர்படையும் பசியோடு தீனி கேட்டு படுத்துறங்கும் காட்சிதரும். நரி படைகள் நெடுவழியில் நெறிகட்டு சூறையாடும். இணைந்திருக்கும் இதயம் கூட நானீ என்றே எரி ந்து விழும்.பழுதுபடா இருந்தாலும் படை ஊர்து பாழ்பட்டு பாதையோரம் படுத்துறங்கும் .உணுணவு ஒன்றுமின்றி உயர்குடியே திண்டா டும். இல்லாதோர் நிலை கூட இன்னமும் இன்னலுற்று இழிவடைய காண்பாயே. கண்டதெல்லாம் உணவாக கண்ணீர் பெருகி ஓட மன்னிறைச்சி உண்ணக்கூட மானிடர்கள் தயாராகி மனிதம் கூடமரித்துப் போகும். அப்பொழுதே அவன் வந்து அகிலத்தை ஏற்றெடுப்பான். பின் எப்பொழுதும் ஏறுமுகம் பின்னடைவே இல்லாது பொன் பொவிவி பொருளை விளை விக்க புதுவசந்தம் பூத்துவரும். இவை அனைத்தும் நடக்கும் என்றா ல் ஏற்க மனம் மறுத்திடுமே .
பகலிரவாய் பாருறங்கும் பாழுங்காலம் பாய்ந்தேவர தவக்கோலம் பூண்டவர்கள் தனைக் காத்தெமை யடைவர். விண்ணண்ணல் வெகு விரைவாய் வெளிச்சம்பட வந்தே தீரும். அதுவரை மரண ஓலம் கேட்பதை யார் தடுக்க இயலும் மண்ணுலகில். அந்நேரம் சித்தர்கள் பாதம் தேடி சில மாந்தர் சென்றுவிடுவார். சென்றிட்ட மாந்தருக்குள் சீர்வளவன் இவனுமுண்டு. உண்டியை மறந்தவன் ஒரு திங்கள் வனவாசம் கொண்டவனை வந்துகாண்பா னிவனாசான்.
கொண்ட சீடனுக்கு கற்றதனை த்தையும் கடலளவாய் கற்பிக்க இக்கொற்றவன் அருள்க்கொடையால் கரை சேர்ப்பான் இன்னலுறும் இவ்வுலகை .அதுவரை இவன் வருவான் என்றே சித்தர்களும் தவம் இருப்பார். இவன் வந்த பூரிப்பில் இவனுக்கு தீட்சை தந்தே கலை யனைத்தும் கற்றுத் தந்தார். ஈரே ழுலகாளும் எண்பெரும் சித்தி கூட இவனடிக்குள் தஞ்சம் புக நாமுள்ளும் செயலெல்லாம் நலமா கும் இவன் தயவில்.
பாகம் 8
மின்னல் மாண்ட ஊர்களாகி மெழுகோடு கொழுப்பெரியுமிதை கண்கூட காண்பாயே கண்மணியே .தோரணமாய் தொங்கும் மின்மினியும் மங்கிப் போகும். புனலலனலும் பொறி யணுவும் புழங்குமி டம் பூக்காத நிலம்போலே தரி சாய் போகும். ஊரடங்கும் நாடடங்கும். ஓலமிட்டே ஓநாய்கள் சீருடையில் உலவிவரும். கருணையில்லா கண்களுடன் கெளவிக்குதறும் காலம் வரும்.
அதுவரை இனமெல்லா மிவனை யொதுக்கி வைக்கும். குலம் எல்லா மிவனைக் குறையாய் காணவை யத்துப்பா வைகட்க்கு இவன் வருகை புரியாது. நாசி இல்லா மானிடர்களிவன் வாசனையை நுகர்வாரோ? பெண்டிரை இழுக்கும் ராசி இப்பெருமானின் முகராசி அழுக்காறு ஆடவர்கள் அவாகொள்வர் இவன் அறிவழகை .
பண்பாட்டை புதுப்பித்து பகுத்தறிவை சிறப்பித்து நம் பாட்டை அவனேற்பான் அகிலமே ஐயனை அகிலமே ஐயனை வரவேற்று அரவணைத்துப் புன்சிரிக்கும். அலையலையாய் பிணம் குவியும். அரங்கின் வெளியேவிறகாய் உடலெரியும். உலகை கரியாக்க ஒரு நொடிபோதும் என்று வல்லரசு வாய் கொட்டும். ஆனாலும் அணுவளவு பகை வர்களால் அவ்வரசே வீழ்த்தலா கும்.
பாரிபோலும் படர் வல்வில் ஓரி போலும் வாரித்தரும்மாரிபோலும் அமைப்பான் அரசை புவியில். புல்லினமும் புள்ளினமும் புலி கரடி வல்லினமும் மெல்லினமாய் மாறிவிட இவன் நன்னெறியை வகுப்பா னே . வகுத்த பின்னர் வல்லறிவர் துணை யோடு தொகுப்பானே துறைகளையே.
பாகம் 9
மத்திய மாநில மதவிட வெறியர் மையத்தைப் பாழ்படுத்தி மாமனிதனிவனை குறிவை த்தின்னலை கொ டுத்துடுவர். புத்தியைக் கொண்டே புரிந்தி டும் வல்லமை பெற்றவன் இவனன்றோ ..! கன்னியைக் கொண்டு கண்கணை விடுத்து காமன் துணையுடனே பின்னிய வலையில் சிக்கிடுமோ எம் செம்மொழிதமிழ் வேங்கை.
மண்ணின் இடர்கள் தொடரும் படரும் இம்மன்னன் எழும்வரைக்கும். விதிவெறி செரிஇ விண்ணும் அதுர்ந்து வெறி செயல்புரி யும் இந்த வேந்தன் வரும்வரைக்கும். இவ்வினியவன் வரும்வரை எல்லா மண்ணிலும் கலகமே வெ டுக்குமப்பா . கடும் போர்களும் மூளுமப்பா . இவனே வந்தால் இன்னல்க ளெல்லாம் தானாய் தீருமப்பா . அந்த இனிய கா லம் வருவது திண்ணம். இது விண்ணவர் ஆணையப்பா . இம்மண் மீது ஆணையப்பா.
தென்னக்தே ஒரு நன்னிலம் அங்கு தேவ அரவின் ஆலயம். நிதம் நகர்வலம் வருவான் நடுநசியிலும் ஆழி வண்ணன் அருளிலும்.விண்ணை விட்டு இவ்வேந்தனை குளிர்விக்க கூடு எடுத்தவராய், மண்ணில் தோன்றிய கந்தர்வ ராயிரம் இவன் மனதின் குயில்களன்றோ .இவன் குறிக்கோள் அடையுமுன் இக்கூட்டை விட்டு குருவிகள் பறந்துடுமே .
வாலிபம் முழுவதும் கேளிக்கை தந்தவர்கள் இவன் அழைப்பை ஏற்று சுகம்தர வந்தனரென்பது உண்மையப்பா மும்மை ஊழின் முடிச்சவிழ்க்க எம்மையிலும் இவன் கடன்படுவோ ராயிரமே . இம்மை முழுதும் இவனை தொடர்வார் என்பதை அறியாரே.
பாகம் 10
இவனை அழிக்க நினைத்தால், நினைத்தார் அழிந்தே போவாரே. இவனை ஓழிக்க நினைத்தால், நினைத்தார் பிணியில் ஓழிவாரே. இவனுடன் தன்னையே இணைக்க நினைத்தால் நினைப்பவர் அவ்வீடடை வாரே. வீடற்று வீதி யில் அலையும் யாவர்க்கும் இவனே இல்லமாம். பொருள் செருக்குடன் நீதி கொல்வார்க்கு மறுமையே கொடுங்கேடாம்.
விதோவே சொலிவில் தோளுடை வேந்தன் நாமம் சொல்லி தென்திசை மாந்தர்கட்க்கு தொல்லை களாயிரம் தொடர்ச்சியாய் தருவர் வடக்கர். தென்றிலம் குருதியோட தெருவெல்லாம் பிணங்கள் வீழ வன்முறை யாளர்கள் வாஞ்சையில் நிலம் பிடிக்க வெஞ்சினம் கொண்டு மாந்தர் வெகுண்டெழுவாரே!
இங்கு பழந்தமிழ் பண்பாட்டை பாழாக்க பாவிகள் ஓத்துழைப்பர்.மொழி அழிய முன்மொழிந்து விழியிழக்க துணை போவர். மூதறிவு நூால்களெல்லாம் முடை நாறும் குப்பையிலேயார் எறிய சம்மதிப்பார். ஆனால் இங்கதற்கும் குடை பிடிப்பார் இழிமக்கள்.
எழுநூறகவையுடை இழிமொழி இரு பெற்றோர் ஈன்றெடுத்த சிறுமொழி இறையனார் வளர்த்தெடுத்து வானோர் வாழ்துரைத்த செம்மொழியை கீழோர் கீழடக்க முயலும் அவலம் இந்நிலத்தில் நிகழும் காண்பாய். இதனால் மொழிப்போர் மூண்டு விழிநீர் வடிக்குமினம் வெற்றிக்காய் உயிரிழக்கும். பரத்தை மொ ழியை பதிவிரதை யாக்க பாழரசனும் வீச்சுல் வர சிரத்தையுடன் தமிழ் மாந்தர் தீரமுடன் போரிடுவர்.
மொழிப்போரில் விழி பிதுங்க தமிமினத்து சென்னீர் வழிந்தோட வடபுலத்தார் நம் முற்றம் வந்தே முற்றுகை இடுவாரே. அப்போரை திறனோடு கையாண்டு திக்கெட்டும் மணம்பரப்ப மொழிமீட்டி ஒளியூட்ட ஆதவனாய் இவன் எழுவானே அதன் பின்னே இம்மொழியை உலகத்தார் கொண்டாடவழிபல வகுப்பானே வேங்கையும் வெண்மன மானாய்மாற அருள் புரிவானே.
கூகையும் கோலக் குயிலாய் கூவ கொள்கை நெறிதருவானே. எக்கடலூரும் இப்பேறுபெறாது போயி டனும் முக்கடலூரே பெரும் பேறுபெற்று மூவுலகே கொண்டாடும் இம்மண் மாலவன் தயவை யாமறிவோம் பரம்பொருளே.
பாகம் 11
சிவன் பேணும் இவன் தாதை தென்பழனிக் கோலம் பூண்ட குமரன் நாமம்கொள் குலப்பிள்ளையாம் குமரிக்கன்னி அருளாளன் என்பதனை யாரறியா திருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே! வேள்விமலைத் திருக்குமரனருள் பெறவே எழிலழகன் துதி பாடி அதிகாலை மலை ஏறி அருள்மழையில் நனைந்தே இவன் தாதை பெற்றானிவனை என்பதை யாறியா இருந்தா லும்யாமறிவோம் பரம்பொருளே!
தயைகூர் தாதைக்ககிவனே தலைமுத்தாய் உதித்தா லும் உதிர்ந்த கனகன்னை யெனும் சிப்பி நாலின்னல்களை யுமுடன் தந்தே ஓய்ந்த்ததென்பதனை யாரறியா இருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே! நம்பி நங்கை நால்வருமாய் எண்ணற்ற பதி வளர்ந்ததன் விதி ஈன்றோர் பணி அரசடிமை என்பதனை யாரறியா திருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே!
தரணி போற்றும் தலைவன் இவனென்றறியா தாதை அன்றிவன் அவதாரப் பயனறியா திருந்து பித்தன் பேரடியடைந்தின் றறிவான் என்பதனை யாரறியா திருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே. இவனுதித்தக் குலமதை கோராமல் கூறுகிறேன் நீயும் கேளாய். ஆநிரைகள் அமுதூறக் குழலூதும் கோபாலன் வகையென கோரிநின்றோர் அறிந்திடுக. ஆயினுமி க்குலமழிய இதுலுதித்தோர் புல்லுக்கும் புவியிலெ வ்வுயிருக்கும் தொல்லை தரா நல்லோ னிவனுக் கெதிராய் வன்கொடியோர் கரமிணைத்து இன்னல் பல செய்வா ரென்பதனை யாரறியா திருந்தா லும் யாமறிவோம் பரம்பொருளே.
தென்முனை திக்கன் மேலழகன் மலையில் பிறக்கும் குமரன் குறவஞ்சி கொடியாள் நதியாய் ஓட அதிலிவன் குளித்தே குளிர்ந்தது பதினகவை பருவம் அன்றோ . அது பங்கயநாபன் மெறிதி நகரமென்பதனை யாரறியா இருந்தா லும்யாமறிவோம் பரம்பொருளே!
கோட்டை யிவனைக் காக்க குடிபுகுந்த ஈன்றோர் ஈராண்டே வாழ்ந்தே விடை பெற்றார். முன்னர் இவனுறைந்த பூவூர் தானென சொன்னதோ வாளை ஏந்தும் தீரனிவன் வாழ்வூரும் அதுவே தான். தீரனிவன் வாழ்ந்த இந்நல்லூரில் பிரமன் முகம் போலாண்டுகள் மலர்ந்தானங்கே .மலைக்குன்றான் மயில் வாகனனுக்கு பாற்குட மெடுத்தே பாலகனை வழிபட்டானே அங்கப்பன் சாமிசுப்பையனிடம் இப்பையன் குருகுலம் புகுந்ததனை யாரறியா திருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே!
தென்குமரி நன்னிலத்துல் திருவருளான் பொன்னிலத்தில் நெஞ்சமதில் நஞ்சோடும் நரியினமும் நாவினில் வேதமூறுமந்தணனும் ஒன்றாய் கூடி பாதகம் புரிந்தே புண்ணிய மிழப்பாரே .இம்மான் கதை முடிக்க இணைவாரே. எங்கெ வர்க்கும் தீதறியா தேவநேயன் இவனன்றோ நன்னெறியை நல்லடியாய் பின்பற்றும் இம்மாயோனிதை நன்கறிவான்.
எங்கெ வரும் அண்ட எண்ணா அழிவிலா இவ்வாற்றலின் வருகை பேரிடியாய் எழும்போது எண்ணற்றோர் தனை மாய்ப்பர். கூண்டோடே குடிமாய்ப்பர். தப்பிப்பதரிதே என்றுத் தார்மீக முடிவெடுப்பர். எஞ்சியதும் மிஞ்சியதும் எண்ணற்ற கொடியோர்கள் இவன் கைவாளுக்கிரையாகி காலடியில் வீழ்ந்துடுவார். எவர் கண்ணீரையும் ஏற்கமாட்டான். இவனோ கடும் சினத்தா ன் சேர்க்க மாட்டான்.
பாகம் 12
அன்றொரு கண்ணீர் கருந்திங்கள் காலைப் பொழுதன்று ழியிமொமி ஆழித்துயி லருங்கண்ட மொன்று அரவமிலாது போன கதையறியாயோ எம் குழந்தாய். மீண்டுமது தென்முனையில் தானே தலை தூக்கி மேலே உயிர்தெழுமக் கண்கொளா காட்சியினை தரணியே வியந்து காண நீராழிக்கடியில் அணைத்து தாலாட்டி வடபுலத்தை வாஞ்சையுடன் அலை யமம்மை உறங்க வைப்பாள். அத்தென் கண்டம் மீண்டும் தெய்வத் திருமன்றமாக திரும்பிவர திருவரம் உண்டென உரக்கச் சொல்வாய்.
காப்பிய மேன்னையுடை அக்கலி கொண்ட கவின் பரப்பை கரையேற்றக் கடன்பட்டாள் பெருநீரன்னை என்பதனை பாரறிய சொல்ல வேண்டாம். நல்லூரறிய நால்வருக்குச் சொல்லுறேன். நல்லோரே கேளுங்கள். கன்னிமாது கரையமர்ந்து வரமருளும் கவின் நிலத் தென்புலத்தில் கடல் கொண்ட கண்டம் உண்டிதனை ஞானத்தா லளந்தவர்கள் சிலருண்டு.
உன் காதிற்கேற்றார் போலிதை வாதத்தால் சமைப்பவரோ பலருமுண்டு. தம்முடல் மாய்ந்தாலும் ஊழித்தீ எரித்தாலும் கடல் உண்ட தரைக்குள்ளே கடுந்தவம் பலர் புரிகின்றார். உளம் ஓய்ந்து போகாமல் ஓயாமல் துதிக்கின்றார். ஆழ்கடலுள் கோட்டை உண்டாங்கே பாலாழித் துயில்கொள் பரந்தா மனுக்கும் தோடுடை பரமனுக்கும் பலநூறு கோவிலுண்டாங்கே நீரடியில் நித்தமும் தவம்பூண்டோர் வெண்ணான்மா ஆராதனை செய்வதனை அவனறிவான் இவனறிவான். அடியேனும் நன்கறிவேன் பரம்பொருளே.
வேலாழியுள் வீழ்ந்த வேலவன் பெருங்கண்டம் மேலாழியில் தலை தூக்கும் பெருநாள் அதிவிரைவில் வருமென அகிலத்தார் யாரரிவர். அடியார்கள் அருள்பெற்று அக்கரையாய் சொல்லுறேன் இம்மெய்யை . ஆவலுடன் கேள்நீயே .
அக்கரை யோரம் பிறந்திருப்பான். அகிலத்தைக் காக்க இவன் அவதாரம் எடுத்திருப்பான். இதை அறிவிலிகள் அறியாரே அந்தணர்கள் அறியாரே. எவர் அறியா விட்டாலும் றிவோ பொளேரி யாம் அறிவோம் பரம்பொருளே . கடல் குமரிகரையேறி காத்தாள் நல் ஈசனுக்காய். கரம் பிடிக்கும் நாளன்று கை கழுவிப்போனானே .. அவள் நின்ற கதையாம் அறிவோம்.
நெடுங்கதைதான் என்றாலும் அந்தக்கதை சொலத்தானே அடியோனும் கடன்பட்டேன். அழிவிலா அருணனிவனை அரவணைக்கும் பொருட்டே தன்மணவாழ்வை துறந்தாளே . மணவாளன் துடித்தானே . மண் இதயம் துழுத்திடவே மரம் கொடிகள் செழித்துடவே மாமன்னன் உதிப்பானென இவளரணாய் இருந்ததனால் வந்த கொடும் பகை கூட வலுவிழந்தே போனாலும் வஞ்சனைகள் தொடர்ந்து வரும்.
வதைக்க இவனை எவர்க்கியலும். வரம்பெற்றே வந்தாலும் வரம்பற்று சிதைக்க தான் எவர்க்கியலும். சீதள நிலவெரியும் இச்சீரழகி சினம் கொண்டால். இம்மண்ணுலகே எரியும் இம்மார்பழகி மதம் கொண்டால். அத்தகு வல்லமையாள் எம் திருக்குமரி தென்முனையாள் என்பதனை யாம் அறிவோம் பரம்பொருளே .
பாகம் 13
சிற்றினம் ஒன்றுகூடி ஆண்டோம் யாம் என்றோர் இழிவரலாறு படைக்கும். பேரினம் பேருக்கு தான் இயங்குமே அன்றி பெரும் பதவியிழந்து நிற்பர். குற்றஞ்செய் குலத்தார் எல்லாம் கொழுத்தே திரிய அறங்காக்கும் அருளினமோ அரவமிலா அணைந்த விளக்காய் ஆதரிப்பாரின்றி அழுது நிற்கும்.
புல்லர்க்கு புரியாத புதிர் ஆவான். பொய்சாட்சி மாந்தர்க்கு நெருப்பாவான். நல்லோர்கள் நாசுவைக்கு கரும்பாவான். நாடே வளம்பொங்க அருள் பொழிவான். பொல்லுலகில் தவமகற்றி இடரமைக்கும் புலாலூண் தனை தவிர்த்தோர் அருளாளர். அதன் புண்ணியங்கள் வீண்போகா தென்பதனை இவன் வந்திங்கே வாழ்த்துரைப்பான் பரம்பொருளே.
பொன்னுலகில் புவிமாந்தர் புகும்காலம் தொலைவில்லை என்பதனை எம்போன்றோர் அருள்வாக்காய் பாடவந்தோம் இதற்கெமக்கருள் புரிந்திடுவாய் பரம்பொருளே. அகத்துள் விடம் காத்தோர் அரிமாவால் நலம் காப்போமென செப்பி மதுபாயும் சூதுடன் மாதின்ப குழுவைத்தே நம் கேடில் ஐயனை அரிந்து சென்னீர் சுவைக்க கொதித்தே அலைவாரே.
பின் கொற்றவன் காவலுக்கு கொடுங்குமரி கொலுவிருப்பதனையறிந்து கொலை நடுங்கி போவாரே. இவ்ஆட்டுடை ஓநாய்கள் நாட்டிலே நடமாட இவன் பாட்டை பாத்தே பரிதாபமாய் தினம் நடப்பான். இத்தீயோர் இனி படும் பாட்டை நன்கறிந்தே நாபகர்ந்தோம் பரம்பொருளே.
ஏவுவோராயிரம் எழுந்தாலும் ஏவப்படுமம்பும் துளையிடாது போகும் இம்மறைவிலா மன்னனன்பே உறைந்த திருமார்பில் . மண்காக்கும் மென்கொடியாளவள் இம்மைந்தனை காத்தருள தென்முனைக்குடிகொள் நற்றாயாய் யாம் பெற்றோம் என்பதனை எமைப்போன்றோர் அறியாமால் யாரறிவார் பரம்பொருளே.
பொல்வழி புலனின்ப தீநெறியர் புலாலுண்ணும் குருதிவெறியர் பெண்பாவம் நாடிக் குவித்த கொடும்பாவியர் எவருமே இனி உய்ய வழியின்றி மண்ணில் புதைந்து மறுமையிலா நரகிற் புகுவரே.
பாகம் 14
தீநெறியோரின் திமிரடங்க நற்றமிழ் பரப்பின் தலைப்பதியை பெருநீர் தாலாட்ட கண்ணுறங்கும் காலமொன்று கணப்பொழுதில் நேருமன்றோ. இப்பொல்லா ருலவுமிடம் தன்னில் சிங்கஇன மானோனை சிரசரிந்து கொல்ல சிற்றினத்தார் பலரும் சிறை பிடிக்க முயன்றதிதை அறிந்த நல்லாம்பிகையோ இவனடி தொடர்ந்ததாலே இன்னுயிர் பெற்றே உளம் நலமுற்றானே.
நம்பியே இந்நாயகியின் நல்லடி பணிந்தாரை நான்முகி தான் நட்டாற்றில் விடுவாளோ. தெய்வாம்பிகை நல்லோரழையாமலே நலம்காக்க வருவாளே. துர்மரணத்திற் கிசையாளே. இங்கிவர்க ளிவனுக்கிழைத்த கொடுந்தீங்கால் இன்னிலமெல்லாம் விழிநீர் கொட்டுவதுறுதியென ஆணையிட்டு அன்றேச்சொன்னேன். இவ்வின் முகத்தான் வரும் வரை இந்நிலம் செந்நீர் வடிக்குமே என்று சொன்னேனே கேளாய் நீயும்.
நானே இவனென நாலாபுறமும் மூடர்கள் புறப்படுவார். நன்று செய்வேன் என்றே சொல்லி நாவினில் சுகம் தருவார். பொன்னென மின்னும் மின்மினிப்பூச்சிகள் பொன்னாய் விலைபடுமோ. அகிலமாள அருள்பட்ட இவ்வானுறை அய்யனுக்கிணையாய் எவரும் இல்லையன்றோ. இவன் குருதி குடித்திட துணிந்தோரும் இவன் கழுத்தரிந்திட அலைந்தோரும் இவனுடலை எரித்தெறிந்திட எழுந்தோ ரனைவருமிவன் கூர்வாளால் தலையிழப்ப ரென்பதையும் தீஞ்செயலால் வாழ்விழப்ப ரென்பதையும் யாம் அறிவோம் பரம்பொருளே.
பாகம் 15
இவன் சுற்றத்தாருமுடன் உயிராய் சுற்றிய தோழனும் நன்றி கொன்றாரென்பதை கலிமுற்றலடையாளமாய் கண்டேன் பரம்பொருளே. நம்பினோரெல்லாம் நஞ்சுடையோர் என்பதறிந்தே நெஞ்சுடைந்தான் மென்கல்கி. சுற்றம் சுழ்ந்தும் சுகம் இழந்த சிறையனாய் உற்றாருறவுப்பயனிழந்த பறவைபோல் நிற்கதியாய் நடுநிசியில் மஞ்சம் துறந்தே மாவீரபெருமான் புறப்படுவான் என்பதை யாம் அறிவோம் பரம்பொருளே.
பேய்க்காற்று அடை மழையை பெயர்த்தெடுக்கும் குருநாளின் நடுநிசியில் பேரருள் வந்துடனே பாய் துறந்து நடப்பானாம் பரமபதம் தேடியே இவன் வாய் மொழிந்து படைத்தோனை அழைப்பானாம். இவன் கூக்குரலுக்குருகி தேவர்களும் தேவியரும் இவனுக்கு திருவரம் நல்கிடவே கீழிறங்கி வருவராமென்பதை மண்ணவர் அறியாரே. மற்றுயிர் அறியுமே பரம்பொருளே.
பாம்பணியும் பரமன் மீதாணையிட்டோம். பார்த்திபன் மருகன் அம்பிகைமீதுமிதை ஆணையிட்டணி பணிந்தோம். இவனுக்கிணையாய் இறையருள் உள்ளோரெல்லாம் இவனின் சமகாலம் வந்துதிப்பதை யாமே கண்டோம். இவனே தானென்று உள்ளுவராயிரமானாலும் ஒருவரும் இவனுக்கிணையாகாரே. இவன் கீழ்பணிந்து இன்செயலாற்ற இங்குதித்தோரென்றறியா மாந்தராய் கண்டேன்.
கொடும் பிணி பேரிடரெதற்குமிவனே தீர்வாய் வருவான். நடுங்கும் மாந்தரின் நாசிக்கிடர் தர இழுத்திட இயலா உயிர்காற்றுறைகளை சிதைத்திடும் நோயொன்று வையத்துள் வில்தெறிஅம்பு போல் எழுந்து புதைத்திடும் மானிடப்பூக்களின் பூதவுடலைலை கண்டு புவியோரனைவரும் நடுங்கியே ஒடுங்குவர். நலம் சேர்க்க ஆரத்தழுவிட இவன் வருவானவதாரமெடுத்தே மண்ணில் நல்லன்னைபோல் காப்பானிவன் மீண்டும். ஐயமில்லை ஆறிவாய் நீயும்.
இனி நல்லோரை காத்து நிற்கும் நல் வாழ்வு பூத்து நிற்கும். பாரில் பஞ்சம் பசி போக்கி செழுநிலவரம் தர வந்த தேவன் இவனன்றி வேறொருவர் இல்லையன்றோ. அத்துடன் நீதிமானாய் வெகுண்டெழுந்து நமை நிம்மதியாய் துயிலவைப்பான். தரணியில் தயை தொலைந்து ஊரணிபோல் பெரும்பாவம் பெருகிடும் பொழுதெலாம் நன்னெறி புகட்டி நலம் தர நானே வருவேனென்று அச்சுதனன்றே சொன்னான். அதை பலர் மறந்ததனால் எங்குலக்கொளுந்தே அங்குலங்கூட நகர இயலா இடர் என்றென்றறிவாய் நீயும்.
பாகம் 16
அலையலையாய் பிணி வரும். அதைத் தொடர்ந்தலைக்கழித்தே அவலம் தர கொடும் பஞ்சம் பசியோடு தலைவிரித்தாடிடுமே. இதை யாரடக்க வருவாரோ என்றிருக்க பிணியடக்க வருவானே இப்பேராசான். விளைநிலம் வளங்கொழிக்க வீண்களையை அறுத்தெரிக்க வருவானே இவ்வானாசான். இவனன்றி எவர்க்கும் இது இயலாதென்பதை யாமறிவோம் பரம்பொருளே.
செம்மொழியாம் சீர்தமிழை வாழ்வாங்கு வாழ்விக்க வந்த எம்மானை புவிதனில் புறங்கொணர பேரிடரும் சூறையாடுமென சொல்லாமல் சொல்ல வந்தேன். சொல் நுட்பம் அறிந்திடுவாய். தெய்வீக எல்லை செலும் தெற்கிற்கு இனி தேய்வுமில்லை. தீயோர் சூழ் வட மண்ணிற்கினி வாழ்வேயில்லை. எம்பண்பாட்டை பாழாக்கப் பாடுபட்ட பாதகர்கள் மண்மூடும் காலம் கண்மூடித்திறப்பதற்குள் வந்தே தீரும்.
அண்டவெளி தன்னில் அகிலத்தாற்கடிபணிந்திறகடித்தே கதிருண்ணும் கழுகுகளெல்லாம் தன் கடனாற்ற இயலாமற் பொசுங்கியே கீழ்வீழ இப்பொல்லாருலகிலினி அல்லல் குவியுமென்பதனை அகக்கண்ணார் அறிந்திட்டேன். நெடுமரமாய் கோபுரங்கள் நிற்கதியிழக்க தரணியரனைவருமாதிவாசி போலாவார் என்றுறுதிபட பாட்டுரைத்தேன் பரம்பொருளே.
கொடு நோய் கோடியுண்மை உணர்த்திட உலகை உலுக்கிப்போடும். குலம் பார்ப்போர் இனம் பார்ப்போர் திருந்தி வாழ காலக்கெடு விடும். காலங்களில் நற்காலம் பொற்காலம் எல்லாம் நாம் வைத்தது தான் என்று அடித்துச் சொல்லும்.
கெடுநாளென்று ஒதுக்கிய விடநாள் மணநாள் ஆக மணநாளோ பிணநாளாகும். இவையனைத்து மாறுவதால் நம்பி உண்டி வளர்த்தோர் பூவயிறு பசியோடு திண்டாடடும். ஈசனுறைவிடம் ஆலயமன்றென்றது நம்மருமெய் என்ற ஞானியர் நன்னெறி நாற்புறமும் பரவும் நாளும் வரும்.
பாகம் 17
கொடுநோய் தன் பாதையிட இக்கொற்றவனே நடந்துவர அகிலமே கடும் போரிட கலகமே எங்கும் நிலைக்கும் . கண்ணீரை வாரி இறைக்கும் காட்சிகள் காணக்கிடைக்கும். இவனே தான் இருளகற்றும் இரவி போலே இடர்அகற்ற புரவியிலே எழுவானே. எழுவான் என்பது வான் மீதாணை. எழுந்தவுடன் கொடியோரை அரிவானென்பதும் அவன் மீதாணை. நல்லறம் அறிவான் என்பது மண் மீதாணை. நலம் பல புரிவான் என்பது எம்மீதாணை.
எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யா எம்மான் இவனை பல்லுயிரும் கை கூப்பும் பரம்பொருளின் ஒற்றை மகன் இவனன்றி வேறொருவர் மண்மீது இல்லை யென்பதை உணர்வாய் மனமே ஆலைகளெரியும். தேவாலயமெரியும் தேவிகள் கோவிலுமெரியும் குலக்கொழந்திற்கறிவு கூட்டும் பாடசாலையும் பாலைபோல் வெறிச்சோட பூவனத்தை கதிருண்ணும். ஐம்பூதங்களும் அகிலமீது சீறிப்பாயும்.
மரும நோய் சருமம் தீண்ட மன்னுயிர் சீழ்பிடித்து பாவ சம்பளம் பெற்றழும் பாட்டை பகரவந்தேன் பரம்பொருளே. வெறிகொள் பூநினிம் வெட்டியான் ஆகுமே. வெஞ்சினம் பூண்டு எம் வீரிய துர்க்கை ஆடிட மண்மேடும் புதையுமே.
ஆன்மீகம் விலை போக அநீதி அத்துமீற ஆயிரமாய் போலிகளும் அழியாத தேவனானென்று அலங்கார வசனங்களில் அவ்வப்போது சபையமைப்பர். கவின் சிலையை களவாடும் கருவறைக் காவலர்கள் பெரும் பொருள் குவிக்கும் இரகசியத்தை பகருகிறேனிதை மருளற்றோர்க் குரைக்காது போனாலும் மனக்கண்ணா லுணர்ந்திடுவார். மாசற்றோர் கொதிப்படைவர். இது கலிகாலமென்பதனால் கடவுளும் கேலிப்பொருளாகும் என்பதனை கண்கூட கண்டிடுவார் அணுவிற்குள் விழிபதித் தெமையாளும் பரம்பொருளே.
பாகம் 18
கருணை இழந்த மாந்தர் மண்ணில் புதைவரென்பதேயுண்மை. மௌனம் கலைத்த நிலமெனும் நற்றாய் தன் மூவாய் பிளந்து விழுங்குவா ளென்பதுமுண்மை அரியணைக்கிவனை கொணரும் வரை அடும்பசி ஆறா அனலொடு சுடுதாபம் தீரா வெறிப்புனலும் நிலம்கொல்லும் என்பதுமுண்மை. காற்றும் தன் கொடுமுகம் காட்டி கண்டதை கொன்றே தணியுமே.
மண்மாதா முலையெரிய தேனோடை தீப்ப்பாகாய் உருகியோட நெஞ்சுறையும். தென்முனைக் கடல்பொங்கி மூவரின் தேரொன்றை அலை இழுத்து கொணர்ந்து அரவக்கோயில் ஏற்றத்தில் அருள்சிலுவையர் முற்றத்தில் புரட்டிப் போட்டே ஆர்ப்பரிக்கும். இவன் வருகை முன் தீவிரமாய் அன்னை நிலம் நடுங்கிடுமே.
கண்ணிழப்பாள் காரிகையும் கள்ளக்கண்ணாளன் தனை அணைக்கும் வெறிக்கடிபணிந்து மணாளன் தனை சதிப்பாள். ஆடவனும் தன்னன்பு அன்பகம் கொண்ட மனையை அரவமின்றி மண்ணுள் புதைப்பானே என்பதெல்லாம் காலத்தின் கலி உச்சம் தொடுவதற்கு அடையாளம்.
அறந்தாங்கி இவனிறங்கி வந்ததனால் அநீதி குவிந்ததோர் மலிந்ததனால் பாழ் நோய்கள் வேலாகி பள்ளிவாசல் பாழாகும் . பந்த பாசம் தீயில் வேகும். சிலுவையர் ஆலயங்கள் செல்லரிக்கும் காலம் வரும். பெருமைகொள் அந்தணர் ஆலயங்கள் ஆளில்லாமல் சிலந்தி யாடும்.
பாகம் 19
அரவரசன் குடிகொள்ளும் நகரிலே தீயோரனைவரும் முதலில் அழிவரே. புரவரசன் வெகுண்டெழுந்து அரிவானே. அறமழித்தோரனைவரும் ஒழிவரே.
கொடியோரழிவது வடமுனை வரை நீளுமே. இக்கயவர்களுய்ய காவல் புரிந்த பேய்களுமுடனழியுமே.
தீயோர் சூழ் தென்முனைத் தன்னில் திரவக் குருதி ஓடுமே. அத்திரவக்குருதிக்குரியவர் கொடுந் தீயோரென்பதை அறிகவே. இவன் வாளே எழுந்து வழக்குகள் தீர்ந்து வானோர் புனிதமடையுமே. மேலோர் கீழோர் எல்லாம் தத்தம் பண்பினை ஒத்து அமையுமே. மெய்யைக் கொன்று மேனி வளர்த்திடும் மேலோரினி அழிவரே. நன்னெறிக்கீழோர் நலமுடன் வளம்பல பெறுவரே. இனி விண்ணவர் வளங்களை மண்ணவர் பெறுவது வேடிக்கை அல்ல உண்மையே.
மண்ணவர் பெற்றிடும் மாபெரும் பாக்கியம் இந்த விண்ணவன் மண்ணுக்கு வந்ததே. இவன் விண்ணவ மைந்தனும் மண்ணவர் மன்னனுமென்பதை அறிகவே. பெருங்கடலொத்தப் பிறவியை நீந்திக்கடந்திடக் கதறு முயிர்களை காத்திட வெண்புரவிக் காலுடை கலியபெருமானிறங்கி வந்தருள்வா னென்பதை கண்ணிலாரறியாது போனாலும் இம்மண்ணில் எண்ணிலா உயிருறைந்தானை யாமறிவோம் பரம்பொருளே.
வெண்டலை அணிந்த விரிசடையோனருளீட்டி விண்ணவர் துதிக்கும் மண்ணளந்த மாயோனுமிவனே. தாதைக்கறிவுரை மொழிந்தொரு தலைமேதையாய் வந்தவனுமிவனே. கொடு வாதையினால் நொந்து நல்வாழ்வழிந்த மாந்தர்க்கு சோகமகற்றி சூலெறிந்து வேதையோட்டி வரகனியூட்ட வந்த பூங்கோதைக் காதலனிவனுக்கு முலையமுதூட்டா திருந்தாலும் முக்கடல் சூழ் மூக்குத்தியம்மை அகனமர்ந்து மகவென தன் திருமார்பணைத்தருளியதை பாரறிய பகர்ந்தேனே பரம்பொருளே.
பாகம் 20
இதயம்தனில் இரக்கத்தை எள்ளளவும் கொள்ளாத வடக்கர் கூட்டமொன்று வாதைதரும் தென்னவர்க்கே. இது பிறப்பால் தாழ்ந்தோரை கீழ்த்தரமாய் அடிமை கொள்ளும். ஈசனவன் இடுகாட்டான் தென்பூமியிது என்றறிந்துமிப்பாவியர் வகுப்புவாதத்தால் தொகுத்து இனம் பிரித்து அறநூலெரித்து ஆட்டம் போட்டாலும் அவ்வாடும் தலையறுக்க எம்மானே உயிர்தெழுவான் என்பதனை அகிலத்தாரறியாது போனாலும் அறம் காப்போர் நன்கறிவர் பரம்பொருளே.
அறவோர் அனைவருமே அந்தணரென்பதை அறியாமல் அணுவுக்குள் குடிகொண்ட அண்டனுக்கே இன்னா செய்து அழிந்திடுவர் புதைந்திடுவர். இதன் பயனாய் தீந்தமிழ் தென்மொழி தேமதுர ஒலியெழுப்பி உலகெலாமொளி கக்கும் என்பதனை எமை காக்கும் உன்னையல்லால் யாரறிவார் பரம்பொருளே.
அறம் மறந்தேர் புரிகின்ற வினையனைத்தும் சிவனனுப்பும் சீர்மரபனிவன் சீற்றமுடன் சிதைப்பானே பரம்பொருளே. தை நாளை தலை நாளாய் ஏற்றெடுத்து தாய் தமிழை தன்னுயிராய் போற்றுவானே. விஞ்ஞானத் துணையோடு மெய்ஞானம் ஒன்றே வெல்லும் என்ற விந்தையொன்று விரைவில் வெளித்தோன்றும்.
இவனிமிர்ந்தால் அகிலமெல்லாம் வளம் கொழிக்கும். இவனடந்தால் நடந்த இடம் பூப்பூக்கும். இவனோக்கின் நோயுற்ற மாந்தரெல்லாம் நொடிப்பொழுதிற்நலம் காண்பர். பாய் தனில் படுத்துறங்கி பாடை காக்கும் பிணம் கூட வாய்சிரித்து எழுந்திட்டே வரம் பெற்றே வலுப்பெறுமே.
கீரிக்கு பாம்பு பகை கிளிக்கோ கொடும்பூனை பகை மானுக்கு சிறுத்தை பகை மையல் தரும் மயிலுக்கோ மாரகனாம் வேடன் கறை மாண்புக்கு கர்வம் குறை மனிதர்க்கு தன்னலம் பகை என்றே புத்திமதி சொல்ல புறப்பட்டு வருவானிதை புரிந்து கொள் மானிடனே. நல்மாந்தருய்ய அருள்வழியைச் சொல்லி ஓருலகாய் கொடி உயர்த்த இவ்வுத்தமன் உதித்தானே. இம்மண் மணக்கும் உண்மையினை வெகுவில் மாநிலமே உணருனென்பதனை யாமறியோம் பரம்பொருளே.
பாகம் 21
வானாசான் வரவறிந்தே இவ்வல்லாசான் தனைச் சூழ்ந்த அறம் புரண்டார் தூண்டுதலால் அருள் வாக்கு மாந்ததரெலாம் பிழையுற்று முரண்பட்டே தலையாட்டி பாட்டிசைப்பர். இதை தவமிருப்போர் அறிவாரே. தறுதலைகள் அறியாரே.
ஈசனீந்த நெறியாசான் இவனென்று அறிந்துடனே இவனல்ல அவனென்றும் இத்தருணமில்லதுயென்றும் நெஞ்சாரப்பொய்யுரைத்து பொருளீட்டும் ஆருயடர்கள் மறைத்துடனே மறுப்பதனை மறக்க என்னால் இயலாது மாசிலா பரம்பொருளே.
நெறியாசானெழுந்து வந்து நீணிலத்தை ஒரு கொடி கீழ் அடி கொணரும் நன்னாள் மலர்ந்திடாமல் இடைமறிக்க கொடுங்கரம் இடும் சூழ்ச்சி என்றென்றும் வென்றிடுமோ. இழியோர் கை மேலோங்கி என்றைக்கும் நின்றிடுமோ. எமைப்போன்றே வையத்து பேதைகளும் நம்பியே நலம் காண நின்னருள் வேண்டுவேனே நிலைகொள் பரம்பொருளே.
விதி மாற்றிப் போர் முடித்த வில்லாளன் தேரோட்டி இன்று மண்ணீதி மாற்றிடத்தான் வந்துதித்தான் என்பதனை மன்னவர்களறிந்துடனே அதை மறைக்கும் பாவம் செய்ததனை எம்மவர்கள் நன்கறிவார் என்பதையும் நீயறிவாய் ஈடிலா பரம்பொருளே. தீபத்தை திரைச்சீலை மறைத்தாலது தீக்கிரையாவது திண்ணமென்ற உண்மை.
பாகம் 22
வாழ்வளிக்கும் வில்லேருழவரை வேதனையுள் விடுவரே. சூதுள சொல்லேருழவர்கள் சூட்சியாய் பாழ்நிதி குவிப்பரே. நீதி தேவர்கள் நிதமும் கூவி விற்பது நெறிபிழை குஞ்சையே. விற்பது நியாய விலையென நீசர்கள் திணிப்பரே.
கேடுடை கும்பலின் மையமாய் வடமண் மாந்தர்கள் வருவதால் உருக்கும் நெருப்பு அய்யனை உறக்க வேண்டி முள்ளரண் கட்டி தடுத்திட இறைப்பது பொற்பல கோடியே. கோடிகள் கொட்டிக் கொடுப்பதால் எம் கோமகன் தலைதனை கொய்திட இயலுமோ. கேடில் தலைவனை சுற்றிய பேடிகள் அழிவதும் எரிவதும் உறுதியே. அவர்களேவிய பேய்களவரது எச்சத்தை அழிப்பது திண்ணமே. பாயாக்கி படுத்தவன் பாரினை பாழாக்க நாய்களுக்கடுக்குமோ. எம் பரமனருள் பொழி தேவனை இழிநெறியர் அண்டிட முடியுமோ.
பேய்நிதி இறைத்தவர் இறுதியில் பெருந்தழலுக்குள் புகுவதுறுதியே என்பதை அருந்தவம் பூண்டு நானறிந்திட்டேன். அய்யனே எமைகாக்கும் மெய்யனுன் அவதாரம் புரிந்திட்டேன். உன்னகிலமே உன்னடித் தொழுதிட ஆவலாய் ஏங்குதே தேவனே.
ஐந்திணை நிலத்திற்கிவன் அருங் காவல் தெய்வமுமாய் எழுந்தறத்திற்கேவல் புரிவானென்பதை பைங்கிளியே பாடிடுவாய். இப்பச்சை மெய்யனன்று பாற்கடலை கடைந்தமுதெடுக்க பச்சைப் பொய்யுரைத் தரக்கரை வீழ்த்திய விளையாட்டை போலிவன் மீண்டும் களியாட்டமாட வந்தானென்பதனை விழிவைத்தே யாமவன் முகம் பார்க்கும் வரம் வேண்டுவேன் பரம்பொருளே.
பாகம் 23
ஒப்பரிய தேவனிவன் உதய நாளை ஒப்புவிப்பேன் உத்தமனே கேளாய். ஐந்தடுத்து சுழியம் வந்தே ஆறை ஐந்தரவணைக்கும் நாலிலக்கக் கலியாண்டில் நமக்காறுதலைத் தரவே மாதம் மறைந்தொழுகிடுமாம் வருமிரு சீர்சேரின். இவ்வரிமா சிவனருள் பெற்றுதித்திடும் வளர்மதியாம் கரும்பிறை கழிந்த பதினொன்றாம் நாளில் தைத்தொட்ட கும்பத்திங்களொளி காலைப்பொழுது
ஆட்டின் உயிராகி ஆடவை உடலெடுத்து மூன்றாம் பாத கழை யொலி தேனமுதால் கன்னியரை கவர்திழுத்த காமுகன் தமையன் முன்னவதாரமாய் பாதம்பதித்து இவ்வகிலத்திலவன் தன்னுயிர் மனையை கவர்ந்த தமிழீழத்திழிமகன் கொடும்பிடி மீட்கவே வில்லால் அரக்கனை மாய்த்த அண்ணலின் தாரகையிலிவன் பூமிக்குள் பூப்பானென்பதனை கண்ணாரக் காண்டேனிதை மண்டுகளுமறியாரே பெண்டுகளுமறியாரே நின் மலரடி பணிந்தோர்க்கல்லாலிது எவர்க்கும் புரியாதே பரம்பொருளே.
இனியும் விளங்கச் சொல்லியே விளக்குவேன் செல்வமே. பன்னிரு கரங்களில் புதனோங்கிய இருபாலருடலில் செம்மீன் தயவில் சீறும் மறிகீழ் பிறவியமைத்து நம் பெருங்கடன் தீர்ப்பானென்பதனை பேதைகளும் அறியாரே மேதைகளுமறியாரே. நின்னாமம் தனை நிசியிலும் நித்திரையிலும் நீக்கமற்றோயாது ஓதுவார்க்கன்றி ஒருநாளும் உய்வில்லை பரம்பொருளே.
இவன் தாரகை தலைவனோ கரிகாலந்தணன். மேதகுமிருகமோ பாயும் புரவியாம் கயவர்க்கு வளையாத கழைகொம்பாயினன். நன்நெறி பகுக்கும் நுண்ணறிவு அன்னமென இவன் சிறப்பை யாம் பகர்ந்தோம் எம் பிறப்பறுக்கும் பரம்பொருளே.
நீளாயுளொடு நறுமேனியெடுத்த தேவரினத்தியல்பறிந்தேன். இவ்வய்யன் ஓரைக்கு பன்னிரண்டாம் குடிலில் குருவுடன் குருடனிணைந்ததுபோல் பதினொன்றில் பரிதியுடன் பகைச் சனிசேர்ந்து அங்காரகனை அரவணைத்த ஆணவம் கண்டேன். பத்தில் சொத்தாய் மேதைப்புலவன் மிளிரக் கண்டேன். ஒன்பதில் ஒண்டியாய் செங்கதிர் பகைவன் செவ்வரவும் மூன்றாமுறைவிடத்தே கருநாகன் புகுந்தாலுமங்கே மதியுமிருப்பா னென்பதனை மதியுடையோர் அறியாரே. முக்கண் விதியுடையோரறிவாரே.
பாகம் 24
ஒட்டிய வயிற்றுடன் கட்டிய கந்தலுமாய் கண்ணில் பேரொளி பொங்க முட்டிய மோகத்தை கொன்று மூலாதாரம்தனைத் தட்டியெழுப்ப முக்கண்முதல்வனை முன்நெஞ்சில் நிறுத்தி பட்டி தொட்டியெல்லாம் பரதேசி போல் படுத்துறங்கி பாழ்பிச்சை எச்சிலுயுண்டு பேரிழிவுப் பெரும் பயணம் கொண்டு கலிக்கொல்ல வருவானென் கண்ணாளனென்று கனாக்கண்டேன் பரம்பொருளே .
பொருள் குவிக்கும் திறனிருந்தும் புவி காக்க அறன் குவிக்கும் அருந்நோக்கில் இவ்வவதார வுருவெடுத்தான் இப்புவிதானம் பெற்றவனோ.! பொன்மகளின் படுக்கை வேண்டாம். மன்னுயிர்கள் மையலுறும் சுகமறவே வேண்டாமென பூதேவியிட்டு வைத்த புல்தரைப் படுக்கையொன்றே போதுமென்று நித்திரையின்றி நிலம் தழுவிப் புரள்வானிப்பாலாழி பஞ்சணைக்காரன். பக்கத்தில் தேவியில்லை. பல்லக்கு பணிவிடைக்கெவருமில்லை. பரிதாபமாய் படுத்துறங்க தேவர்களும் வெந்து விழிநீர் வடிப்பாரே. தீதறியா எம்மான் தீதினை சங்கறுப்பான் என்பதனை யாமறிவோம் பரன்பொருளே.
பாகம் 25
பாருக்கே விளக்கேற்ற பரந்தாமனிறங்கிய ஊருக்குள் இவனுறையும் மனைக்கருகே பனைகுன்றிற்கப்பால் பாம்பூரும் நதிநீரமுதுண்டு மிதந்ததுண்டே நம்மையன். பக்கமெல்லாம் அல்லியாம்பல் மரை பூக்கும் பொய்கைக் கரையோரம் மெய்மறக்க கள்ளுண்டோர் நடுவினிலே ஈசனெனும் தெள்ளுண்ட பாலனாய் பொலிந்தான் ஐயன்.
ஆங்கே ஊழையிட்டோடி மறையும் விலங்குறை குமரனிலா குன்றினடியில் அறுபடையிலொரு படை ஆண்டி அப்பனுக்குக்கடிமையப்பன் மைந்தனாய் சீருறு ஐவகை பொய்கை சூழ் ஊரில் பூப்பானிவன். நால்வகை மாந்தர் வாழ் நல்லூரில் நூல்பல கற்றோர்ச்சூழ திருக்கண்ணன் கோட்டெல்லைக்குள் மேற்றிசையில் இருபுரமும் ஒன்றாய் கொண்ட மேல்புரத்தில் வாணுறை மூலவர் மூவர் நாமப் பதியில் முளைத்து முத்தமிழ் காப்பானிவன் என்றும் இம்மேதினிக்கருள் சேர்ப்பான் என்றும் மண்பதிக்கும் முன்னரே அவ்விண்பதித்தோர் விதித்ததனை எம் கண்பகுத்தறிந்ததற்கு கருணை செய்வாய் பரம்பொருளே.
பாகம் 26
ஈசன் கண் முத்துமாலைகள் மெய்கழுத்தெங்குமாட வேடமிடும் பொய்யர் பலரை நட்பாய் பெற்றும் ஆசான் கிடையா அருஞ்சீடனாய் நாயாயலைந்தே நாட்கள் விரையமாகி ஒண்டி நெடுமரமாய் ஓட்டாண்டி கோலம் பூண்டு நிதானமின்றி நொந்தான் எம்மாசான்.
நற்குருவடி தேடி நீசரிடம் புகுந்தும் நற்குரு வாய்க்க வழியின்றி நெடுங்காட்டில் கால் தளரா கடும் பயணப்பட்டு இறுதியிலோரருங்கொடையாய் சற்குரு வாய்க்கப்பெற்றான். கண்டான் குருவை கல்கி கண்டதும் கமலம் பொற்பாதம் வீழ்ந்து கண்ணீரால் கழுவியதால் ழுடங்கிய மூன்றாம் விழியொளி பாய பெற்றே பொலிந்தான். பின்னர் நயனதீட்சை கொண்டையன் குருவடி தொட்டு முழு தீட்சை முற்றுப்பெற்று மூலாதார அரவெழுப்பி அரவமிலா தவம் பூண்டதை அடியோனும் கண்டேன் பரம்பொருளே.
நெற்றிக்கண்ணற்றோர் குருவாய் நிறைந்த நீணிலத்தில் சக்தி கண் திறந்ததோர் தவ ஞானி குருவாய் வாய்த்தைய்யன் தழல்கண்ணை திறந்திட்டு அஞ்ஞானமறுத்தெடுத்து அழுக்கனைத்தும் எரித்து கறையிலா காஞ்சனமாய் வளங்கொழிக்க வாழ்த்திட்ட அக்குருவை யாமும் அகக்கண்ணால் கண்டோமவர் முன்னவதாரமாய் தோன்றி முலைப்பாலூட்டிய அன்னை தலையை அரிந்ததால் அருளீட்ட வேண்டி இல்லறம் துறந்து நல்லறம் நாடிய கையில் கோடரியை கண்ணாரக்கண்டேனே எம்மடையாளமாய் திகழ்ந்தெமையாளும் பரம்பொருளே.
பாகம் 27
நல்லோர்கள் பொழிகின்ற நஞ்சற்ற அன்பினில் கரைந்தே நல்லய்யன் முடங்குவானே. தீயார்கள் தருகின்ற இன்னலையும் தாங்க எம் தேவய்யன் இறங்கினானே. விண்ணவப் பெருமிதமேயில்லாமல் மாசற்ற மண்ணோரடி வருடுவானே.
கண்ணற்ற மாந்தருக்கு கண்ணொளியை தந்து கருத்தற்ற மூடனுக்கு கருத்தனைத்தும் தருவான். உண்ணும் உணவுக்குள் உறைகின்ற உயிரென மறைவான். தண்ணீரை தந்து மறுவாழ்வு தருவான். நன்னீரும் அவனே மென்னீரும் அவனே. நீதியின் பாதையை காட்டி நமை அடையாளம் கண்டு அருள் மழை பொழிவானே. எம்மையன் மறுவாழ்வு தருவானே. முற்பாதியெல்லாம் முட்பாதையாக பிற்பாதியெல்லாம் நற்கதி புலருமென நம்பி நவின்றேனே நலனுறை பரம்பொருளே.
நாபிக் கமல நாதன் பரமபதமிணைந் தோரெல்லாம் நல்லுலகில் நன்னெறியாளராய் வாழ்ந்தே பணிந்தோ ரென்பதை யாமறிவோம் பரம்பொருளே. பாதிமேனியை பார்வதிக்கீந்த நல்லீசன் பொற்பாதம் பணிந்தவரெல்லாம் முக்தியடைவாரென யாமறிவோம் பரம்பொருளே.
எவ்வுயிர்க்கும் தன்னுள்ளம் உருகிடும் நிலை கொண்டு ஊன் மறுத்து உயிரனைத்தையும் ஒன்றாய் கண்டோரையெல்லாம் அவ்வுலகரவணைக்குமென்ற எம்மருளாளர் வாக்கு தனை நெஞ்சில் நிறுத்தி நீடுலகில் வஞ்சமில்லா நெறியொன்று நிறைவேறும் நாள் வருமே....
பாகம் 28
நெருப்பெரிக்கும் என்றஞ்சியே நெருங்க மறுக்குமே காப்பு வேடமுடை கபட பூனைகள். வஞ்சனை செய்தே வரதேவன் மேல் கழுகுக் கண் பதித்து சூழ்ச்சியாய் செயல்பட நிதியை நீராய் வாரி இறைத்திடும் இச்சதியின் மூலவராம் வடக்கு வணிக இனமியக்கும் சுழியப் பூனைகள் சூழ்ச்சி கொண்டிவ்வையன் நகர்வை நிலம்பதித்தலை எழுப்பும் நெடும்கோபுரம் வைத்தே கூர் நோக்கு கொள்ளுமே. ஏவல் பணிசெயும் காவல் பூனைகளைய்யன் பெயரில் கைநிறை செல்வமள்ளி குவித்தாலும் கொலை நோய்க்கிரையாய் அதன் கொடுவாயுள் விழுவாரே.
வன்காட்டில் தவமிருக்கும் வெண் தாடி வேந்தர்களும் இவ்வேங்கையின் வெளிவரவை எம் காதில் ஊட்டியதை காலம் தாழ்த்தாது எடுத்துரைத்தேன் இக்கலிகாலம். இதை ஞானியர் அறிந்ததனால் என்ன பயன். உனை நினைந்த நலிந்தோரும் அறியட்டுமெனும் நப்பாசை கொண்டு நவின்றேனெமக்கு நலமருள்வாய் பரம்பொருளே.
இதை காரிருள் கண்மறைத்த மானிடர் நம்பாரென்பதனை நன்கறிந்தும் இசைக்க யாம் இசைந்தேனே அண்டமெலாம் ஆளுகின்ற ஆதிமூல பரம்பொருளே. திரைச்சீலையிட்டே தீபத்தை மறைத்த மூடரிவர் கறியுடல் தழல் தீக்கிரையாகி கரியாய் உருவெடுக்க காணுகின்றேன். இவ்வலைகடலை அடக்க வந்து அலைக்குள் புதைவாரென்பதை புரிந்ததனால் உரைக்க வந்தேன்.
வான்தமிழன் வன்மைக்கு நீ வரமளித்தருள் புரிவாய் என்று நம்பியே தொன்மையர் திக்கற்ற காட்டினிலே தீவளர்த்து துறவு பூண்டு வேண்டுவதை யாம் அறிந்து நினைவுகூர்ந்தோம். எல்லாமறிந்தும் ஏனிப்பாசாங்கெம் பரம்பொருளே.
குருதி கொட்டும் கொடும் நிதி ஈட்டி குலம் தழைக்க குவித்தாரைக்கண்டேன். மலமுண்ணும் ஏனமும் மறுமையில் நலம் பெற்றுய்வடையினும் மலமகற்றா நீசரிவர் மீளா நரகுலகில் மிதியடி போல் கதியிழந்து சீரழிவரென்பதனை யாமறிவோமே எம்மெண்ணமெலாம் இனித்தெமை யாளும் பரம்பொருளே.
பாகம் 29
தந்தையின் தலை சாய தென்னிலம் ஆள சிற்றரசொருவன் திருந்தி வருவான். வந்தவனை வருத்தியாள வல்லரசனொருவன் வந்தே மையத்தில் நீதிகொல்ல தென்நிலத்தார் தீதடைவர். இவன் வானோர் தலைவன் பெயரினை ஓத்த வல்லூறாய் வடக்கலுதிப்பான். வன்சூழ்ச்சி செய்து மூப்பரை முந்திய காப்பனாய் நின்று கபடம் புரிந்து குடிகளை காவுவாங்கும் கயவன் என்பதனை கண்மூடித் தவமிருந்தே கண்டறிந்தேன் பரம்பொருளே.
இவனெதிராய் எழும் எண்ணிலா மாந்தர் இறைக்குள் மடிவா ரென்பதுதான் எம்முள்ளில் ஓயாது கண்டேனே. சிற்றரசனுயிராய் கொண்ட தொன்மொழி அழியா வண்ணம் தென்னவர் தீயாய் எழ அங்கு பஞ்சுமயிருடை பாழ் முடிதரித்தோன் ஆர்பரித்து ஆழி மேலெழுந்து பறந்திடக் கண்டேன்.
தம்மன்னுயிர் இன்னலுக்கு பாராமுகம் கொண்ட தேரா மூடன் குருதி நெடியுடை கொடுங்கொடி தன்னில் செம்மரை கண்டேன். குடிகொல்லும் பெருமதத்தானிவன் குரல்வளை நொறுங்க தறுதலை தொ ங்கி தரணியரறிய மாண்டிடக் கண்டேன். மாந்தரை பிரிக்கும் மாண்பிலானொருவன் வேந்தனாய் வந்து வீணனாய் நின்று தாளனாய் ஆள்வான். மண்ணைப்பிரித்தால் மன்னுயிரே பிரியும் என்ற உண்மை யறியாதுமீளாமடமையில் தெனிகெடுஇ தென்னிலம் கெடுப்பான்.
இப்புல்லனாளும் பொன்னிலமெல்லாம் புன்னீரோட பூக்கள்கூட புண்பட்டே உதிர உள்ளமுருகா உறை நெஞ்சனொருவனை கண்ணீர் பெருககண்டேன் விண்டேன். தன் மனை விடுத்த மதனாய் தாரகை மைவிழி யர் சூழ முதுமையில் அறனழிக்கும் அறவோ ர்க்கு செவிசாய்த்து அநீதியால் மனுநீதி மறுப்பானே மாசுறு நீசனிவன் பிற்குலத்தை பேயாய் வதைக்க பிறப்பெடுத்த இழிமகனிவ னென்பதை யறிந்தும் எம்மாலேதும் இயலாது என்பதால் உம்மா லியலும் என்றெம் ஐயனை ஊக்குவிப்பாய் பெருந்தவத்தார்க் கிரங்கும் பிறை சூடி பெருமானே.
பாகம் 30
எரித்த வறுமையொடு தஞ்சமிலா தருமியாய் தவம் பூண்திருத்தலமாம் திருமலையுள் தரித்த கந்தலுமாய் புகுந்தானெம் அறநெறியன். ஆங்கே முப்புரி தரித்தோரிவன் அடையாளம் கண்டிவனை கண்கலங்க வைத்ததனா ல் பெருத்த நிதி குவித்த பெருமாளும் பெறும்பிச்சை குறையலானான். பழுத்த பழமுண்டு பாலாட்டும் பறவையினால் ஈசன் தொடுத்த போர் மூலம் மூளும் கொழுத்த நோயொன்று கொலைநடுங்க வைத்ததனால் மாலவன் முகம்காண மாந்தரஞ்சினாலும் கொடுமாநிரை யஞ்சாது மாடவீதி சுற்றியதை விளைந்த விதியாய் யாம் கண்டோம்.
வினையறுக்க இயலாமல் பாம்பணையில் பள்ளிகொள் நாதன் பரிதவிக்கும் பாட்டை பாடவந்தேன் பரம்பொருளே பாழ்மரம் போல்யாம் புலம்ப செவிசாய்ப்பாய். மறலி அழைப்புக்கு மானிடர் மறுப்பர். வையத்துறவின் பாசம் துறந்து நமன் வீசும் பாசத்திற்கேங்கும் துறவியை அழையாது தொலையும் நமனை வைந்தே ஐயனலை வதை கண்டு அடியேன் விழிவழிவதேனோ ?
எம்மேலுன் விழிதிறந்தேது பயன் ? எம்மையன் மேல் கருணை பொழிந்து இவ்வையம் வளம்படவைப்பாய் வானோர் நலம் பேணும் பரம்பொருளே .பொல்வழி புலனின்ப தீநெறியர் புலாலுண்ணும் குருதி வெறியர் பெண்பாவம் தேடிக் குவித்த பெரும்பாவியரென எவருமே இனி உய்ய வழியின்றி மண்ணில் புதைந்து மறுமையிலா நரகிற் புகுவதுறுதியாய் கண்டேன் பரம்பொருளே.
அறத்திற்கு அயலானோர்க்கிவன் தோற்றம் தெரியாதே. சிவத்திற்குறை விடமாம் உள்ளொளிக்கண் திறவாத மடமாந்தர்களறியாரே. மானார்மேல் மையலுற்றாரிவன் மேன்மையறியாரே. மதிகெட்ட கட்கா தலர் நெருங்கா கற்பகமிவன் பொற்பாதம் ஒற்றி எம்போன்றோர் பூச்சொரிவோம் பரம்பொருளே.
பாகம் 31
எலி வீழ பொறிவைப்பர் யாமறிவோம். எலியன்று இவன் தேவ புலியென்ற புரிதலிலா புள்ளுவர்கள் உள்ளுவரே . கறையற்றோர் முறையோடு மறையோதும் மாந்தரையும் கரை சேர்க்க மரை முகத்தான் வருவதனை மறைமுகமாய் அறிந்ததுமே கன்னியரை பொறியாக்கி கயவாளியர் வைப்பாரே . குழலறுப்போர் குலம் கூடி கூர் பார்வை தனை எய்து கொற்றவன் வழி மறிந்து சுற்றியே வருவாரே. மாடுண்ணும் சூனியர்கள் மலிந்ததொரு மலை நாட்டில் சோறுண்ணும் சூத்திரர்கள் செய்வினைக்கஞ்சாத கைவினைப் பாவியர்கள் ஐயனிவன் மனை யொட்டி உறைந்தவாறே மந்திரங்கள் முணுமுணுக்க தீத்திறத்தார் தீவளர்த்து கண்வழியும் காட்யினை கண்டேனே நடுநி௪ியெல்லாம் இடுகாட்டில் பலர் நின்று யாகங்கள் புரிவதனை புரியார்க்கு புர யவைத்து இருளகற்றி அருள்பாய்ச்சும் இளம்பிறைத் தலையன் இவன் மெய்யுள் உறைந்ததனை பண்ணாக பாடுறேன்.
இவனை புண்ணாக்கும் எண்ணமுடன் புவிக்குள் புகுந்தோரும் மண்ணாவது திண்ணமென பொழிந்திட்டேன் பூதலத்தை பொதிந்தாளும் பரம்பொருளே. கறைபமடிந்த காப்பரெல்லாம் கலிகால குறியீடே .தரையாளும் தலைவன் கூடதன் வளத்தில் குறியாய் நின்றே மலையளவு பொருள் குவித்து மார்தட்டிக் கொள்வானே. தன்நலத்திற்காய் தரம் தவறி குடிகளையே கொல்வானே. மறையோதும் வேதியர்கள் மனங்கெட்டுபோவாரே. சிரச்சே தத்துக்கு உட்படாது கொடுயோரினம் பெருகுவதால் சிறைக்குள்ளே மறையாத தீயோர்கள் தெருவிறங்கி வெட்டவெளி பகலினிலே வழிப்பறிதான் செய்வாரே,
கொடுங்கொலைகள் மலிவதனால் இறை மறுப்போர் பெருகிடுவர் உனை இழிமகனாய் வசைபா டி என்நாளும் மகிழ்ந்துடுவர். அது அவர் தவறாய் காண்டுல்லேன். நின் அருளால்தான் அவர் வாழ்வர். நின் பாதம் பணிந்தோர்க்கும் இனி வீண்பழிகள் வந்திடுமே . பிறப்பகற்றும் பரம்பொருளே பேதைகளாய் புலம்புகின்ற சிறப்புடை ய நல்லோர்க்கு நலம் சேரதுயர் துடைப்பாய்.
பாகம் 32
மண்ணழிய மன்னவரும் அழிய விண்ணதிர போர் மூண்டு கோடிகளில் மாந்தர்
அழியக்கண்டேன். இல்லத்துள் மறைந்தொழுகும் மென்மயில் மெய்யணியை ஒருடை வேடுவர்கள் சூறையாடும் அவலங்கள் ஐயோ கண்டேன். பெண்ணழிக்கும் பிறன் கேட்டை உளத்தாலுமுள்ளா நெறிசிரிடே அறநெறியர் சிலரை அரிதாய் கண்டேன். அரக்கர் சூழிவ்வுலகல் இரக்கமுடை மாந்தர் தம்மை விரல் விட்டே எண்ணக்கண்டே ன்.
வித்தையை இவனுக்களித்த விண்மீன் ஆளுநன் புலவனென்றறியக் கண்டேன்.
குருடனருள் கிடையாவிடிலென்ன. கருடனார் தயவில் குருவருளுயர கண்டேனே பரம்பொருளே, புற்றுக்கள் கோபுரமா மதில் புயங்கங்கள் புழங்க கண்டேன். நெற்றிக்கண் திறக்க வேண்டி நிறை ஞானியர் அமரக்கண்டேன்.
மராளத்தை மாலையாய் தரித்த மலை முட மன்னவனை மனதில் நிறுத்தி மெளனமாய் இவனொளிரக் கண்டேன். வேதி யருலகே போற்றும் விண்மதி பிறையணிந்த வியாளம் சூழ் கண்டமுடை சூலினி தலைவன் கண்டேன், நொந்தோர் ஊழனலில் வெந்தோர் மனம் வேண்டும் தந்தசூகம் தரித்த அங்கணன் கண்டமதில் கட்செவி விடமடக்கி கிடப்பதை கண்ணாரக் கண்டேன் விண்டேன், உரகங்கள் ஆரமாட உமைபாகன் ஆசியுடன் இவ்வையன் உலகாழும் காட்சி கண்டேன்.
பஞ்சணை பன்னகமாய் பாலாழியில் மிதந்திருக்க அதில் படுத்திடும் பரந்தாமன் இவனே அன்றி பாரினில் எவருமில்லை. பற்பல பரிதாபிகள் தன்னையே இவனென்று செப்பியே இரிந்ததெல்லாம் செப்படி வித்தையாய் சிதைவதை நன்றாய் கண்டேன். பலர் கண்கட்டு வித்தை யெல்லாம் இவன் கண்ணசைக்க
மாயக்கண்டேன்.
பாகம் 33
நீரினிற் விடம் வைத்தார் நிறை உணவினிற் விடம் வைத்தார். பசும் பாலினிற் விடம் வைத்து பழம் தனிற் விடம் வைத்த கொடும்பாதகரை என் சொல்வேன். பூமுகத்தான் தலை தொங்க பொல்லார் சிவேவிதிடு வன்முயற்சி வேதனைக்கு வித்துட்டு சாதனை முளை விட்டு சரித்திர வளம் படைக்க சூத்துரம் வகுத்திடவே நீ பாத்துரம் செய் பரம்பொருளே!
மனமெல்லாம் விடம் வளர்த்த மாரகர் வார்த்த பல பேருறு வியூகங்களிலனை த்திலுமே தேறியேவ் விடுபட்டு தெளிந்து வந்தது தான் இழி மாந்தர் தனை திகைக்க வைத்தததுவே. பலர் தோல்வியில் துவண்டே தொலைந்ததை கண்டேனே. மும்மலமகற்றார் நிர்மல நெருப்புக்கு விடம் கொடுத்து அழித்திடத்தான் நினை யலாமோ. இச்சூரியநாதன் தனைக்கூடியே கொல்ல ஆரிய வேதங்களும் சூழூரையாகியதை சொல்லாமல் சொல்லவந்தேன். நில்லாமல் நீயேகேளு..
பாழ் மக்கள் பணிகளெலாம் வீணாகி போனதனை யாழிசைத்து கொண்டாடு. இம்மேன்மகன் காவலுக்கு பேராண்மகன் சிவனுண்டு அருகிலுமையாள் தினமுண்டு. ஆதாலால் தூக்கிவிட நினைந்தோ ரனைவருமே தோற்றதனால் துவண்டாரே. ஐம்பூதமர வணைப்பால் ஐயன் தினம் தினம் உயிர்த்தானே . சூரியன் மாண்டுவிழ பில்லி சூனியம் வைத்ததுண்டோ .
ஊரஞ்சி நடுங்கினா லும் உரகவாளி தனஞ்சயனஞ்சி ஒடுங்குவானோ .அறம் பிறளாது நின்றே ஐயன் பொருளற்று நிற்பானாம். ஆதலால் அகிலமும் பொருளற்று அடும்பஞ்சம் தலை விரித்தாட இதை உடுக்கை பிடுத்தோனும் உரக படுக்கை விரித்தோ னும் பாரா முகம் கொண்டே இருந்தாலுமவர் பார்க்கும்
முகம் ஒன்றே பாரினில் இவனாய் யாம் கண்டோம்.
பாகம் 34
அரசனாய் ஆலயம் பூண்ட அங்கதமுறை யூரில் அமைந்ததொருவில் தூங்கும் வன்புயத்து மன்னன் அவதார புதூரில் புகுந்தே பெற்றோருடன் பெருவாழ்வு கண்டானிவன். நற்கலை க்கூடம் நுழையாமல் நாற்கயலையும் கற்று நடமாடும்
பல்கலை மேதையா கினான். இங்கிவனகவை பதினேழில் துவங்கி இணையுட னிணையும்நாள் வரை கழித்துட்டு பணிக்காய் பயணித்து நெய்தல் நிலம் சென்று நீந்து பிழைத்ததெல்லாம் இவன் வகுத்த விதி யல்ல அச்சிவன் வகுத்த விதியன்றோ .
விண்ணவரே வியத்தகு வண்ணம் இவ்வேந்தனே வந்தாளுவான். கண்டுகொள்வாய் கண்டகர் இனமழித்து விண்டுலகாய் புவியை எழுப்ப இவனன்றி எவர் தான் காவல் தெய்வமென மண்டுகளே அறிந்துடுக. மன்னர் மன்னவனிவன்தான் தெரிந்துடுக.
அரவம் பொதிந்த அரனார் கழுத்தும் உரகம் பதிந்த சிவனார் சிரசும் பாம்பை சுற்றிய சாம்பவி இடுப்பை யொத்த இன்புறு உடுக்கையும் சாம்பனடிக்கும் தாளமு மென்னை பரவசமூட்டி பக்தி யிலாழ்த்து பிறப்பை கொய்ய பெரும் பேறடைந்தேன்.
பிழையே இல்லா பரம்பொருளுன்னை முக்கடலூரன் முளைவிட்டு எரியதிக்கு எங்கும் தீமையை அகற்ற பொற்பதம் கழுவி போற்றிடுவது எம்கடனாக யாம் உனை வேண்ட எல்லாம் வல்ல உன் தயை செய்வாய். நடம்புரி திடனாரைச் சார்ந்தே நின்ற வம்பிலா இறை தெம்பிலா தோற்றத்தானிவன் தீதுற நின்ற நிலம் கம்புறங்கும் கடலடி மூன்றின் சங்கம நகரியின் மன்னனழியா வண்ணம் உறைந்துலாவிய காந்த மேனியள் கந்தமேவிய கன்னியள் இவனுக்கருளக் கண்டேன்.
பாகம் 35
உள்ளம் உறவாட உள்ளங்கையே பேசும் காலமொன்றை வையம் முழுக்க காண்பரே . ஐயன் அசை வினைக் கண்டறிந்திவன் மெய்நகரும் சேதி சொல்லி பொய்யர் சூழ்ந்தே வருவாரே. கொயி ஆக்கம் கொண்டாயிரம் காதம் கடந்து கண்டம் பிரிந்து அண்டம் பறந்த தீரனுரையினை தாழ் புவியோர் கேட்பரே .
மெய்யுள் புதைந்த சிலந்து வலை களறுபடாது கயவனொருவன் கையிலடங்குமே . ஐயனை விடுத்து அவனியிலனை வரும் அப்பொய்யனுக் கடிமையாய் புகும் நிலை வருமே பொய்க்கும் எம்மெய்யை இயக்கி மெய்யுணர்த்தும் பரம்பொருளே.
ஒளி பற்றாமல் பேரொளி உணரா அரசன் அனல் சக்தி வேண்டி தம் குடிகள் அழிவா ரென்றப்போ தறிவிலியாய் வேற்றரசுடன் கூடாநட்பு கொள்வானறிவாய். இதனால்விழிக்குள் வீழா தணல் கயிர் களஞ்சு யமைப்பான் தென்முனை கூடுமொரு குளத்தருகே . அதை சப்பை மூக்குடையோர் மோப்பமெடுத்து மொத்தம் சிதைப்பதனால் மூர்ச்சை யற்றழிவது முப்பது காதம்
சுற்றிய மண மைந்தர்களென்ற விதியெழுதி தந்தாயே பரம்பொருளே .
மூலிகை நறை வீசுமகத்துய நெடுவரையொன்றில் அமரராய் அமர்ந்திருந்த குடாரிக்கரமா முனியரெமுந்தே எம்மையனை இயக்கி எண்ணிலா பேரருள் புரிவாரே. பிறவிப்பா வமிலாரை பிரித்தனுப்பும் நமனுக்கே நீ ஆணையிடும் காட்சியினை கண்டே எம்மெய் சிலிர்த்தேன் காணக்கிடையா பரம்பொருளே.
பாகம் 36
அரிவையர் ஆயிழை போயிற் இழப்பன்று அதை எளிமையிற் ஈட்டலாம் மீட்டலாம் பரம்பொருளே . அவர்க்கருளாய் இயைந்த வாலிழையாம்காப்பு அறங்கொன்ற காமுக வேட்டையரவர்தம் கோ ட்டை முன்னர் பூட்டப்பட்டே கொடுஞ் சிரமறுக்கும் பாட்டை மறம் மாறா மாவேளிவன் புகழை மறை முழுக்க பாட்டாய் கேடேனினெவிழிளி கேட்டேன்.
அவனிவனென அகவிழி ஒளிபாய்ச்சக் கண்டேனிவன் முக்கடல் முத்தும் நெய்தல் நிலமயிலின் மகவாய் யாம் பேறாய்பெற்றோம் என சொன்னால் சூதுடையோர் மறுதலித்தே மெய்யனிங்கில்லை . அம்மேன்மகன் பொன்னி வளநாட்டில் பொங்கி வருவானென பொய்பகர்ந்து நடுமாந்தர் மனம் மாற்றி நன்முனி போல் நாடகமமைத்திடுவர். வேழங்கள் போரடித்த சோழநாட்டு சூத்தி ரர்கள் சொல்லிற் பொய்யுண்டே .
அவரனைத்தும் சூனியர் நீட்டிய பாவியர் பொருளீட்டி சூளுரை யாற்றி சூழ்ச்சிகள் பலபுரி ந்து ஐயன் இருப்பிடத்தை அங்கென்றே ஆருடமமைக்க அரும்பாடுபடுவா ரே. எம்மெய்யன் எழும் வரை இவ்வெய்யர் வாய் பெய்யும் பொய்யுரையை வையம் நம்புவதை கண்டவானோர் நகைப்பிற்கென் சொல்வேன் பரம்பொருளே .
மலர்முகத்தான் பாராள பலகாலமில்லை என்றேனும் பேரருள் கிட்டிவிட்டால் பெட்டகத்துள் துயிலவைத சீரார் மாணிக்கம் செவ்வரமாய் வெளிவந்து திக்கெலாம் ஒளிவீச ஈரேழுலகினரும் நெடுங்காலம் ஆவலுடன் இருப்பதனை பாராது இருக்கலாமோ பரம்பொருளே .
போதாதகாலமென தான் கருதி புழுதிபட பாரிசாத மலர்தன்னை பாழும் வெயில் எரிக்கலாமோ. நீராரும் ஆழிசூழ் நெடுநிலம் ஆறாது வடித்த கண்ணீர் அகிலத்தை நி த்தம் நி த்தம் கருக்கலாமோ . நீடூழிவாழ இந்நெடுநோய்க்கு மருந்தாவாய் பரம்பொருளே .
பாகம் 37
மறை முளைத்தகால முதற் பிறைசூடி பெருமா னிறையாடும் அறைக்குள்ளர்ப் பணித்தோதி பக்தி எழுந்தே சிகரம் தனை தொட்டவரனை வரையும் இரை மறைவில் இணித்த மன்னவராளுவரே . இறைத்தொண்டை மீட்டெடுத்து அவ்வீடுடை (அவ் ஈடுடை) மாந்தர்க்கே ளிகிஇமே
அன்பளித்து அகமகிழ்ந்து இன்புற்று மேன்மை காண எம்மானை எழுப்பிவிடு. மையத்து மண்மைந்தர் மாநிரைகள் மேய்த்த வண்ணம் வடவாசல்தனில் நுழைந்து இனம் அழித்து நிலம் ஆள்வர். எழுத்திலா மொழிமைந்தர் இலிபி யனைத்தும் யாசகம் பெற்றதென சாசனமிட்டேனே .தீநெஞ்சோர் தென்மொழித் தேனோசைக் கெதிராய் அகத்துள் விடமூறி அழுக்காறு மோலோங்க, சொம்மொழி ஏடுகளை கோனெரிக்க தூண்டிவிட்டு பொன்னிலத்துள் புகுந்தே புதுவாழ்வு பெற்றுநின்று ஆலயங்கள் அனைத்திலுமே ஆளுமைகள் செய்வாரே.
அவரியல் ஏடுகளெரியா வண்ணம் இழி சூத்திர மறிந்ததனால் செம்மொழி யேடுகள் பற்பல தன்று மாய்ந்துடுமே .மொழிமேன்மை குன்றிவிட மிஞ்சியதோர் மொழிகாக்கும் இலக்கியமே அணிகலமாய் செம்மொழியை அங்கீகரிக்கும் என்பதனை தேவாதிதேவரெலாம் திண்ணமாய் ஆமோதிக்க தென்னிலம் காப்போனே நீ எம்மொழிகாக்க இவன் மேலுன் விழிபாய்சசி எழுப்பி விட்டு நெறியூட்டி வழிகாட்டு.
அறம்பாடி சித்தனிவன் ஆணையிட்டால் அனல் வீங்கி ஆழிகூட ஆவியாகும். புனல் பொங்க பொல்லாரை காவுவாங்கும். எம் திறன் திரட்டிதேன் மொழியை பாதுகாக்க நானொருவன் போதுமென சூழூரைத்து சொல்லுகிறேன் வாழ்த்துரைப்பாய் பரம்பொருளே.
சீர்மிகு செப்புமொழியரை வதைப்போரனைவரும் வழி சீர்மரபை சிதைப்போ ரனைவரும் பதை பதைக்க கண்ணென எம்காப்பியம் காத்தோரை இனியும் நீ ஏய்க்கலாமே மெய்ப்பொருளே .
பாகம் 38
மிளிபேனெறேதி பைந்தமிழ் நாக்களிப்பே னென்றே பாரதியும் வாக்களித்தாள். இதை ஆக்கமுடன் பாடிட எமக்கும் அருள்மழை பொழிந்திட்டாய். பார்த்தனுக்குச் சாரதியாய்வ் முன்பிவனே பாரதத்தில் போர் முடித்தான். முடிந்த போரின் முன்பகை தான் தீராமல் தொடுத்த போராய் இப்பிறவி தொடர்கிறது.
இடர்தரவே அரக்கயினம் இவன் பின்னே வருகிறதாய் மாயைக்குள் மீளாது புரள்கிறது. பிறப்பறியா பேதையாக பிறப்பகற்ற முடியாமல் சிறப்புடனே கடனாற்றி இப்பிறவிப் பயனடைந்திடுமே மருளுற்று மாந்தர் கூட்டம் இருள் சூழ்ந்தும் நீங்கா நிழல் போல் மன்னவனை தொடர்ந்தாலும் இருளகற்ற இவனன்றி யாருமிங்கே வரமாட்டார் துகளுக்கும் துயில் கொள்ளும் தூமணியாம் பரம்பொருளே .
இல்லாதார் உயர்திடுவார். இருப்போர்கை குறைந்துடுமே . வல்லோர்கள் வகையற்று வாழ்வதனால் வந்துதுத்தான் என்பெருமான் வரமுனியாய். பொல்லாதார் புடைசூழ கொக்கரித்து புண்ணியம் மறுப்பதாலே நல்லோர்க்கு என்றுமிவன் நாடு நலம்புரிந்து சொல்லொண்ணா அருள் புரிவானென்பதனை சொல்லா மல் சொல்லவந்தேன் சூரியனை விழியாக்கி சுட்டெரிக்கும் சுடர்விளக்கே .
புல்லர்க்கு புரியாத புதுர் ஆவான்.பொய்சாட்சி பாதகர் பொசுங்க தீக்கதிராவான். நல்லோ ர்கள் நாசுவைக்கு கரும்பாவான். நாடே வளம்பொங்க அருள் பொழிவான். பொல்லுலகில் தவமகற்றி இடரமைக்கும் புலால் தவிர்த்தோர் அருளாளர். அதன் புண்ணியங்கள் வீண்போகா தென்பதனை
இவன் வந்திங்கே வாழ்த்துரைப்பான்.
பரம்பொருளே .பொன்னுலகில் புவிமாந்தர் புகும்காலம் தொலைவில்லை என்பதனை எம்போன்றோர் அருள்வாக்காய் பாடவந்தோம் இதற்கெ மக்கருள் புரிக பரம்பொருளே. ஊயிரனைத்தும் ஊக்கமுடன் நடமாட ஆக்கமுடன் வழி செய்வான் ஐயன் என்பதனை கிறிதிவேயே அகிலத்தார் அறிந்துடவே அடியேனும் அருள்வாக்கு பொழிந்திட்டேன்.
அறிந்திடுக இவன் குறித்த அத்தனையும் பொதிந்திடாது பகர்திடுக பாரெல்லாம் நலம் பெறட்டும். இவன் பாதம் தொடர்டகின்ற அறமைந்தர் பெறும் பேறடைவாரென உறுதிபட உரைக்கவந்தேன் இம்மையிலும் எம்மையிலும் எமை யாளும் பரம்பொருளே .
ஈரேழுலகாளும் எம்பெருமானுலகாள பாரில் உதித்தொரு பண்பை யனவன் தென்குமரி இரையாழிகள் மூன்றாய் தழுவும் தேவி பாதத்திற்கு இருகாதம் தொலைவிற் குடவூரி ல் கலையாவரம் பெற்ற கருங்கல்லாய் ௧ரு இறங்க அழியா அறனார் கனியுயிடம் மலை நாட்டெல்லை எனும் அந்தரங்கமறிந்து அறம்பாடும் எமை பித்தனென்றே பெயரிட்டு நோக்கும் பீடைக் கண்ணிற்கு பிடிபடா தென்பதனை நெஞ்சார நீயறிவாய் துஞ்சா பரம்பொருளே .
பாகம் 39
அவதாரம் தான் என்ற ஐயமொன்று ஐயனுக்கும் உதிக்காமல் இருந்திடுமோ .சிவனாரும் பரிந்துரைத்த சீடனுக்கே உரித்தானதேவனிவன் அடையாளம் இருப்பதனால் அதிர்ந்தே போவான். உமையாளே உயிராக உடனிருந்து காப்பதனால் உதுரமுதிராமல் உயிரோடு உலவுவதால் அவதாரம் தான் என்ற ஐயமொன்று ஐயனுக்கும் உதிக்காமல் இருந்துடுமோ .
தன்னைப்போல் பலருண்டு தரணியிலே என்றெண்ணி தன்னிலையுணராது குன்றிநிற்கும் ஐயனிவனை அடையாளம் காணவேண்டிஅடியார்கள் ஆண்டுபல நூறாக தவமிருக்க அறனுக்கு முரணான அநீதி ஆளுநர்கள் எளிதிலிவன் இருப்பிடத்தை எட்டியே இன்னுயிரை எடுப்பதற்கு சதி வேலை பலசெய்து பலவாறு சோர்ந்துடுவார் ஓய்ந்திடுவர்.
நிழிரியிளி நிலையாழி அரிதுயிலும் அலையாளி அடிவருடி நிதி யன்னை துணையிருக்க நதி பொங்கும் தலையாளிமார் தழுவிஎம் மலையன்னை அணைத்திருக்க சிலையாக புலனடக்கி
சீர்வே ந்தன் மனை விலக்கி நெடுமரமாய் நின்றதனை நெஞ்சீரம் நிலை கொண்ட நன்மாந்தர் அறியாரே. இணை வேண்டா துணை வேண்டாமென இல்வாழ்கை உதறியவன் இங்கெம்மை காப்பதற்கு இழிபிறப்பில் துடிப்பானேன்.
புவிதோறும் பொறிபட்ட புழுபோலே புண்பட்ட நல்லோர்கள் அழும் ஈரம் அய்யனிவன் பூம்பாதம் நனைப்பானேன். பூமடந்தை நிலை குலைந்து பொல்லார் சுமைதாங்க உண்ணா அல்லல்
பட்டழுவானேன்.
நிலமென்னும் நேரிழை பெருவெடிப்பை பிறப்பித்து அறம் கொன்றோர் அனைவரையும் உள்ளிழுத்தடக்கிடவே வரம் தர நீ வழிவகுப்பாய் மாசற்றோர் குரலுக்கு மனம் சாய்க்கும் மாமணியே ..காசற்றோர் மீதினிலே காசினிக்கு கருணையிலா காலமிது கலிகா லம்.
ஆசுடையோர் அதிகரித்து ஆநீதியை அறுவடையாய் அடைவதனை தூசாக கருதியினி துஞ்சியே கடந்து சொல்ல அறம் பாடி சித்தனிவன் ஆட்படாது இதை
பாசாங்காய் சொல்லவில்லை .பல்முறைநான் கோரிவிட்டேன். எம்மை யனுக்கு வரம்பொ ழிந்து அரங்கேற்று ஒளி விளக்கே . வானவர்க்கு வழி காட்டும் மேதகு பரம்பொருளே மேதினியில்மணம் புரிந்தும் மனமிணை யான் மனை துறந்து தனிமரமாய் பிறப்பெடுத்தான். உனை நினைந்தே உருவெடுத்தான்.
உன்னடி பணிந்தோர்க் குதவாமல் இன்னலில் ஆழ்த்தலாமோ .முரண்பட்டு முன்னின்று இறனாய் ஏய்க்கலாமா. வரம்தருவாய் வான் அமுதே.சரம் தாழ்த்து வேண்டுறேன்.
சீக்கிரமே அருளிடுவாய். புவிதனில் புறம் பேசா அறவாணர் பொற்பாதம் பணிந்தேன் யான்.இப்புவியெலாம் வளம் தர உன் வானோர்கள் துணை யுண்டே வல்லருளா வரம் பொழிவாய்.
பாகம் 40
விண்ணாழி பொங்கிடுமே. விழும் மாரி அம்புதைக்கும் செழுநிலப் பயிர்காக்க செவ்வேந்தர் அரணாய் வேய்ந்த புனலுறங்கும் பெட்டகங்கள் பொடிந்துவீழ வெறிகொண்டு உறைநீர் உருண்டோட மன்னுயிர்கள் பன்னாட்டில் மடிந்துடலால் மிதப்பாரே . ஐம்பூதத்திலிது ஓர் அடங்காத பூதமென்று அரக்கமாரி சுரக்க கண்டேன்.
வெண்டலை பெருமானே. எம்மானிவனை விடுவித்தருள வேண்டி இடியிறக்கி ஆர்ப்பரிக்கும் மேகக்கூட்டம் தம்மையே அற்பணித்து போர் தொடுத்து தரணிக்கு விடிவு வர எண்ணியிங்கே எண்ணற்ற புயல் தொடுத்து எய்யுமன்றோ ஈரே ழுலகாழும் பரம்பொருளே .கொடுங்கயவர் கொட்டம் அடக்கிடவே கடும் கோபம் கொண்டு இந்நிலம் அழிக்க புறப்பட்டு பேயாட்டம் போட்டிடுமே .
உள்ளத்தால் நல்லோர்கள் உயிரைக்காக்க உத்தமனை வெகுவிரைவில் உதுக்கவிடு என சொல்லத்தான் பராசக்தி முயலுறாள். அவள் சொல்லும் மொழி சீற்றமாக உருவெடுக்க இயற்கையது அடங்காமல் மனம் கொதிக்கும். பிறன்மனை நுகரா பேரருளாளனாய் திறம்பட வாழ்வோர் தீதை அகற்றி பிறர்இடர் கண்டு பீறி ட்டு எழுந்து உயர்விடம் துறந்து ஓய்விலா சேவையை மண்ணில் விதைத்து நற்புவி தன்னில் நன்மையை அறுத்து தொல்லியல் காத்து சுடரென ஒளிர வெல்லும் வேந்தன் பூவேன முளைத்த அரனாரேவிய ஆருயிராயினன்.
எம்மையும் உம்மையும் குருவென பணிந்து சிற்றினமழித்து பேரினம் வாழ மருந்தை பகர்ந்து மன்னுயிர் காத்துமறுமையை தகர்ப்பானென பொறுமை யிலுரைத்தேன் புவிகாக்கும் அறனே .
பாகம் 41
தன்னலமகற்றி தென்னிலமாண்டு நன்மகனொருவன் கோனாய் எழுவானே. அன்னன்னில நல்லோரனை வருமிவனை வானாய் மதித்து வரமாய் கருதி குற்றேவல் புரிவாரே. அவ்வின்முக னுதிப்பது முக்கடல் பொதிந்த கன்னியின் முறை வாசல் குடக்கே ஓழுகும் நதியூர் மாயோனொருவன் பாம்பினில் பள்ளிகொள்ள அவன் தெற்கொரு காதம் தொலைவிற் பொன்மடியொன்றில் பூப்பான் என்பது புவி பொய்த்தாலும் பொய்க்கா தென்பேனே .
அவன் பொற்பதம் பதித்து புவியாழும் உறுதியை எவரும் குலைக்காரே. எவ்விதியும் தடுக்காதே .பேதம் கற்பித்து மண் மா ந்தரை பெயர்க்க புதுவதம் சமைத்து வேதையிழைக்கும் வாதைப்பிறவியரனை வரையும் வதம் செய்து பொல்சூரர்தனை வேரறுக்க விண்மைந்தனிவன் விடுவெள்ளி போலே மண்மீது பூக்க கண்டேன்.
பூவுலகே போற்ற பொறி பறக்கும் வேளிவனை சூல் சுமந்த இயற்றாய் ஒரு மார்தாண்ட முடியாது மண் மடந்தையிடம் விட்டுச்செல்வாளாம். கூகைகளை தலையில் கட்டும் கொள்கை கொண்டு குயில்களை கவர்ந்திழுக்க காசியினில் கச்ச தமாய் திட்டங்கள் புகுத்துவரே பொல்லா வாணிகர்களும். பேய்களை நோய் தூவ ஏவிவிட்டு வாய்பிழக்கும் வருணனையை நீவி விட்டு மருந்து விற்க பருந்துகளும் பறந்து வந்து பண்பற்றே பணப்பையை பறித்து செல்ல அது கருணையின்றி கண்ணீர் குடிக்க பாமரன் கருவூலம் கரைய வழிவகுக்கும்.
வேசரிகள் விலை போக வஞ்சிக்கும் வஞ்சயரை விலைக்கு வாங்க புரவியென புகழ வைத்து புகுத்திடுவார் சந்தையிலே . அதை மந்தையான மனித கூட்டம் நம்பினாலும் நாள் கடந்து வெம்பிடுமே இவ்வாறு அறம் கொன்றாடும் இழிமேமொநி இனமழியுமே .புறமொரு நிறமமைத்த பாதகர் மதமொழியுமே .
பாகம் 42
பனிமலைகள் அழுத பின்னர் பாழும் பூமி என்செய்யும் அதன் கண்ணிரீல் பாருறங்க கனி மரங்கள் கரியாகி கற்பகமே பூக்காத காசினியை கண்டேனே. சுடுதணலை தாங்க ஒண்ணா நெடுமரங்கள் நீறு பூக்கும். அலைக் கரங்கள் தாலாட்டும் தலை நகரம் அடிப்பரப்பிற் உறங்க கண்டேன். பெருநீருள் அது பாடையிட்டு படுத்துறங்கும் பேரவலமதை யார் நினைத்தும் நீக்கலாகாது மீட்க ஒரு கரமுமின்றி மீன்களுக்கே மாந்தருடல் விருந்தாகும்.
மருந்தில்லா நோய்களுக் கருமருந்தாகும் எம் பெருமானுனை அறிந்தவர்கள் தஞ்சம் தேடி அண்டிடவே அடியேனதை கண்டேனே . நல்லோரனை வரையும் நாடி நலம்புரியும் நஞ்சுண்டோன் சாபமெலாம் தீயோரை வதைத்திட நாயோரனை வருமே, நல்வாழ்வை இழந்து நிற்பர்.
இனி கோடிக்குள் ஆயிரமாய் குன்றி நிற்பர் இருவருள் மாந்தரெல்லாம். எம்போல் பீடுடை நின்னடியார் பெரும்பேறு பெற்றதனை இயம்ப இயலாதே ஈடிலா இறையாம் பிறை முடிந்த பெருமானே .தென்முனை திரை பொங்கிவரை வரைச் சீறக்கண்டேன்,
உன் கன்னி காதல் கனியின் இருப்பீடம் கடலுக்குள் தூங்கப்போக மின்னி அவள் அடிவானில் மிளிரக் கண்டேன் பரம்பொருளே .பொன்னிக்கு தங்கை போலபுது மகளாய் எமக்கருளக்கண்டேன். உலகே நடுங்கி ஒரு நாளிகை உருளக்கண்டேன். ஒங்கி அறைவதில் உன் நிலம் உடையக்கண்டேன். அதனுள் மெய்சாய்த்த பொய்மாந்தர் புதையக்கண்டேன்.
தெற்கில் நின்னருள் எம்மையன் தீயாய் வளரக்கண்டேன். புற்றீசலென போர் படைகள் கூர்வாளுடன் முளைக்கக் கண்டேன். வியேகொவி கூவியே அறம் கொன்ற பாவியர் தலைகள் உருளக்கண்டேன்.
பாகம் 43
உறுபசியொடு ஊனுடலை விழுங்கிடவெ றிநி லம் வருமே .கொலை நடுங்கி மாந்தர் கோடி மண்ணுள் ஒடுங்கி மீளாத்துயில் கொள்ளும் கரும்பிறை நாளென்பதை காணாதா ரறிந்துடவே மறமோதுமுன் அறம்பாடி அருள்வாக்கு தந்தேனே . அதன்பின் பிறைபூத்த மூன்றாம்நாள் புவியோர் வேண்டுதல்க் கிணங்க பின்னவதாரமாய் மாறுதலை தந்தாறுதலைதருவானாறு தலையான் வேள் ஆறுமுக னொளிர்வானே.
சேயோன் வாழ்வு தீதுறக்கண்டு அகனமர்ந்தோர் தென்முனைக்குள் வாடையாக
புலன் பெயர்ந்து பண்டே வந்தமாயேன் மானிடதீயோர்வகை யினமழியும். ஒளிகக்கும் கண்டமொன்று ஓசையின்றி வானிருந்து வந்து மோதி குழிபறிக்கும் கோளமாக பூமியிலே உயிர்பறிக்கும் கோடியா௧. முன்னம் கொட்டமடித்து கொண்டாடிய இருளர்கூட்டம் பின்னம் கொலை நடுங்க மாளும்
மாட்சியை நீட்சியாய் கண்டேனே.
அவ் விண்மீன் பூவிமேல் வீழ்தெரித்தடங்கிய பின் எம் கண்மீனாய் இவனெழக் கண்டேனே பரம்பொருளே. கொதித்தவரடங்கினரே கூக்குரலிட்டொடுங்கனரே . பதிகள் மிதந்தவண்ணம் பார்தாங்கா புயல் மாரிசில்லெறிந்து தள்ள கரை தாங்கா தடம் புரண்டு ஓடு புனலனைத்தும் கொல்ல நெறி பிறழும் கற்பிலா பெண்போலே ஊர்மேய்ந்து உயிர் பறிக்கும் வெள்ளத்தையாம் என் சொல்வேன்
பரம்பொருளே.
வேயிலோ நறுவேள் வருகையினாற் நல்லோரனை வரும் உறுவள நாட்டிற்குள் உயிர்த்தாரே. கொடுநோய் தாக்காபயிராக தளிர்த்தாரே என கண்டேனே ஒளிர்பிறை தலை யோனே உடுக்கையை ஒருகையாற் உரக்க அடுக்கும் ஒப்பிலா அறனே .நேர்கொண்ட பார்வையுடன் நெறிபிறழா நீதி செய்து அறவோன் புவியாள வருவதற்கு புண்ணியம்யாம் செய்தோமென புகலவந்தே ன்பரம்பொருளே .
விதை விதைத்து வேரிறக்கி கற்பகம் போல் ஒளிர்வானே . கற்புக்கடம் பூண்டு கடலோரம் காட்சி தரும் மாட்சிமிகு எம் திருத்தாயாம் தென்குமரி தயவாலே மன்னுயிரை காக்க மறு அவதாரமெடுக்கும் நிலம் மண்வளம் கொழிக்கும் நல் மார்த்தாண்டன் பொன்நிலமே. ஆங்கே மறை வாழ்த்தும் மைந்தனாக மன்னவர்க்கு மன்னனாக இறை மகனருளாலே மலை நீர் உருகிவர உரகங்கள் உறவாடும் ஓடைக் கருகினிலே கருவாகி உருவாகி நிறை ஞானியர் நெஞ்சினிக்க கறைகாணா காஞ்சனமாய் கன்னியர்கண் மயக்கமுற பொன்போல் வளர்வானே.
திடீர் மின்னலென எழுவானே. நிலைகுலையா நெஞ்செடுத்து நிலத்தில் எழும் குறை அகற்றி நெஞ்சார நிறை புகுத்தி செல்வானென்பதனை பறை யறைந்து பகராமல் நீயறிவாய் பாரெல்லாம் கண்ணமைத்து பக்கமெல்லாம் செவிபதித்து
நாளும் சேதி பெறும் நற்பொருளின் உறைவிடமே இவ்வுண்மை பலரறிய இன்னிசையில் இயம்பினேனே எமையாளும் பரம்பொருளே.
பாகம் 44
முத்துக்குளிப்போர் நிலமதிற் முளைத்த முரணரும் கொடும் சொத்து குவிக்கும் அவா கொண்டோ ருமிணை ந்திவனை மூர்ச்சை யாக்க முக்குலங்களணி சேர்ந்து முக்குவரென்பதனை முன்கூட்டி யாமறி ந்ததனை கொதிநீ கண்கொத்திப் பாம்பாய் நீகண்டாய் காக்கும் அறனே . இக்கொடியோர் குருதி வழியும்கூரா யுதமுடன் கொலைக்களம் இறங்கினாலும் ஐயனிவன் நிழல்கூட காயப்படா தென்பதனை நீயறிய யாமறிவோம் பரம்பொருளே .
மண் புழுக்கள் ஒன்றுகூடி மலை புரட்ட புறப்பட்டாலதன் சிறு சிலை கூட அசைந்தடுமோ .சீர்வேளொத்த அருளாளனிவன் சிரம் பெயர்க்க இயலுமோ சொல். கனல் பட்டெரிந்து விழும் விட்டிலென ௧௫கிடுமே கயவர்கூட்டம். பொன்னீட்டும் பொன்னாடை பின்னியவ ரிவன் தலை தறிக்கும் சதிவலையை
பின்னுவரே .
தயை கொன்ற கொங்கர் வாழ் திருப்பூரணி துகில் தறியரைத் தடுத்ததனால் வேந்தனிவன் தலை தறிக்க இயலாமல் தலைதெறிக்க மாய்ந்தனரே தறுதலைகள். நெஞ்சீரமழிந்த நிலை கெட்ட இழியோர் எண்ணிலா பாவியர் இணைந்தொன்றாய் ஐயனிவனைச் சூழ்ந்தணைந்தே வருவதை உன்னொளி கண்ணால் எம்னுள்ளில் கண்டேனய்யா இடும்பை அகற்றும் ஈடுலா
பரம்பொருளே .
ஆழிவேடுவர் ஆய் தொழில் இடையர் அறமறியா பறையர் தற்குறியாய் கற்பகமேறும் கொடுங்கண்ணினத்தர் செக்காயும் மருள் குடியருடன் நெஞ்சுறைந்த ஈழத்தீயோரென எண்ணிலா ரிணைந்தெம் மையனை முடிக்க அடுநிதி பெற்றனரே. இதை மனம் கொன்ற மன்னவனும் மதமூட்டி அரசாளும் மையத்து வெய்யரும் நன்கறிவர்.
இவன் கதை முழுக்கக் கனாக் காணும் கயவர்க்குதவும் ஒருடை காநிரையும் நன்குணர்வர். சிறுத்தையை சிற்றெலிகள் முற்றுகையிட்டால் முடங்குவது சிற்றினத்தின் மறுமை யல்லவா . சோதிப்பது சிவனாரின் மகவை யல்லவா . பரத்தையர் பத்தினியை சபித்திட்டால் பாதிப்பு எவர்க்கென்று பகுத்தறியா விபெகிசி.
பாவியர்கள் பெருகியதை சிரத்தையாய் தேவநேயன் தெரிந்திட்டான். பொல்லாவிகள் புடை சூழ்ந்து முடக்கிட தென்முனை தேவத்தாயை வணங்கியே தன் வாழ்வை சமர்ப்பித்தான்.
பாகம் 45
வலக்கை விரிந்தால் செவ்வேள் மஞ்சை பூந்தலை மீது மரைமலர் ஒளிரக்கண்டேன். அவ்வெழில் மயில் அலகு பெருவிரலடுத்த உதிரன் மேட்டை ஒற்றிடக்கண்டேன். மயூரமேனியில் மலைமகள் சூலம் புகர் மதிமேட்டில் தலைகீழ் கவிழ்ந்ததை க்கண்டேன். அதன் மேலமைந்த அந்தணன் மேட்டில் அம்பை ஆயுதம் மீண்டும் கண்டேன். அவ்வாயுதம் மீதொரு மோதுர வளை யம்
மேதையின் குறியாய் சுட்டும் விரல்கீழ் வெட்டென கண்டேன்.
அறுமுனை உடுமீன் மொழியும் சரவணபவ எனும் அழகன் கோணம் நடுவினிற் உள்ளதை நல்லோரறிய நவின்றேன்.மாயோனூதிய குழலிசை யன்ன மன்னுயிர் மயங்க தேனொலி எழுப்பும் தெள்ளிதழ் பூவாய் நறுமணம் வீச திருமெய் தன்னை தீபமாய் நிமிர்த்தி தீரன் வருவதை நானே கண்டேன்.
வடக்கர் வணங்கும் ஒம் எனும் லிபியை வலக்கை உள்ளில் வெள்ளிக்கெதிரே கண்டேன்.அதை சற்றே சாய்த்தால் துருக்கர் முத்திரை நபிமார் துதிக்கும் நல்லோர் மந்திரம் என்பேன். மயிலும் சேவல் போற் சிர்சில நேரம் ஆவலாய் பார்க்க சேயோன் கையென எண்ணும் ரேகையும் கைக்குள் மின்னும். அது சேவலல்ல மயிலேயாகும்.சேவலின் கண்டம் சின்னம்.
இவன் மெய்யினில் இணைந்த இரு முளரிகள் நடுவே மாதவம் புரியும் சாம்பன்
உடுக்கைகள் உறுமாதுறங்கிட காணுமே . கரமலர் இதுசிரிதியிதி இடதில் கருடன் சிரம்தான் பரிதியில் பதிந்து பின்வால் தொடுவது செவ்வாய் கீழடி ஆகுமே . அதன் சிறகொன்று செம்மீன் குருவிடை பதிந்திட பிறிதொன்று காரிகுன்றில் இருந்திட கால்கள் சுங்கன் மதியிடை நிற்குமே . இவ்வரிபுள் நடுமெய் நந்துவா லானதே உண்மை .
இத்தளிர்க்கைப் பூவில் மையம் கொண்ட எழிலரி சங்குடை நெஞ்சுள் பெருமாள் சுழற்றும் ஆழிப் புள்ளியுள் வெற்றியை சாற்றும் வேல்முனை இருக்க வேலவன் கைப்பிடி ஆரல் பரப்பில் அழகாய் மிளிர்வதே மேன்மை .
திருக்குந்தனூதிய பிரிதொரு சங்கை அணிந்த புலவன் திடலை மீண்டும் பார்த்து வியந்தேன்.
அருள்தரு அரியமர் அரியணை செம்புள் மேனியின் பரப்பறிய பகர்வேன். அது மூவிரலுக்கொரு விரலகல மிருக்க அதன் மெய்யுள் உறங்கும் விதுசங்குள் அஞ்சன் சக்கரமுருளுமென்பதை எம்போல் தெக்கண மாமுனி திருக்கண்ணறியுமே .நல்லோர் எவரும் அறியா நெறியோன் தன்னை நாயோர் அறிவதுறுதியே . அத்தீயோர் வாழ்வும் இறுதியே! நாடகமனைத்தும் நடுவனம் தன்னில் தவத்தை சுவைப்போர் கண்மூடி கண்டுறந் தறிவரே .பொன்னும் புகழும் மண்ணும் துறந்து மலர்விழி மறந்தே அமரும் நிறைஞானியர் உணர்வர் எளிதிலே .
பாகம் 46
நறுமணம் மாறா நன்முகனிவனை கண்டேன்.நற்குணம் தேறும் வேந்தனின் அடக்கம் கண்டேன்.செவ்வரம் பெற்று வந்த சேயோனுக்கு இடையூறாய் வருவோரை அறம்பாடி ௮ழித்துடவே நிதம்பாடி நின்றேன் யான். சொவிழிவி சொல் அருவி சுவை வழிய புல்லுருவி புல்லுவர்கள் நாபொழியும் தெள்ளுரை கேட்டோர் மனம் மயங்கி பொல்லா பாதகரை நல்லோராய் நாடிச்செல புவியில் நலிவோர் குன்றா நிலையை யாம்கண்டோம்.
உண்மை விளம்பி க்குலகில் மேன்மையிலாது பொய்மை புடைசூழ கயமை காலூன்ற ஊரெங்கும் பதுமையென முதுமையர் முன்மொழிவோர் எவருமின்றி பந்தமறுந்து பாழாகி நொந்து மடிவதனை எம் நுண்ணறிவால் உணர்ந்துட்டேன். வாதிக்கு நீதி செய்யா கபோதி களமரும் கச்சேரிக்குள் கரும்பணமுறை யக்கண்டேன்.
அவரங்கு நீவிய கரம்நிறைந்தது அறவோர் அழுத பிணமென்று அறிந்தும் அரசற்குரியோர் உள்ளம் புரையோடு உய்விலா பாவியர்க்கு மெய்யாய் உழைத்திடக் கண்டு நெஞ்சம் குமுற மெல்லியர் புன்னீர் வடிக்கும் அவலம் கண்டேன். ஆக்கமுறு அமைப்பென அதிகாரமுடை ஏறு மாமுத்திரை யொத்த இறங்கு இழிமாந்தர் நரிமா நெஞ்சமைத்து நடுநிசியில் படையேவி எம்மையன் சிதையெரிக்க ஆவல் கொண்டனரே .
சீற்றமுடை கோமானொருவன் சீமானிவனை சிறை பிடிக்க குறிவைத்து மையத்திலிருப்பானாம். காப்போர்க்கு கடுமாணையிட கண்ணிழந்த காவலரும் அகத்துள் அடைக்காமல் ஐயனை சிறைக்குள் அடைப்பரே . இதனால் மண்மகள் சீறி மாநிலத்து வாய்பிழக்க மையத்து மாந்தர்கள் மண்ணுறங்க சென்றதனால் மறு ஆணை பிறப்பிக்க மைந்தர்கள் யாருமின்றி மாயோனாய் புறம் வருவான்.
நன்னிலம் நலம்பெற நல்லோர் நால்வர் போதுமென்பேனவர் விடுத்து அகம் கொன்ற பொல்லா ரனைவரையும் புதைத்துவிட வேண்டுமடி நல்லறம் காக்கும் நாயகி நிலனே .
பாகம் 47
ஐயன் நாட்டிற்கயல் நாடாய் குணக்கே குடிகொண்டு ஆர்பரித்தரவம் அடித்துண்ணும் புருவம்விரி மாந்தரருறை பன்னாடுகள் புதையுமே .அங்கு புன்னீர் வழிய புலாலுண்ணும் பொல்லார் அல்லல்பட்டழிவரே . இறகடித்து பாலூட்டும் இனம் சுவைத்த நாவுடை குறுகிய மரபினர் கோடியிலழிவரே.
தீரனிவன் தென்குடக்கே திக்கனைத்தும் கடல்சூழ் அடர்கண்டத்துருள் படிந்த
கருங்குழல் சுருள் கொள்ளகக்கண் அவிந்த காக்கையர் நோய்க்கிரையாய் குவிவதனை பார்க்கும் விழிகளெலாம் பரிதாபத்தோடழுமே .புவியின் மேனியில் போதை புழங்க பேதையர் கூடி பொல்லாவளம் அள்ளும் அடர்ந்த காட்டை அழலோன் உண்ண அலப்பரப்பே அப்படி கொக்கும். அனைத்தும் வியர்க்கும் புதினம் தந்தேன் புரிந்துகொள் அன்பே .
நல்லுடல் நலம்பேணிட நிலத்தா ரனைவரும் நாசிக்கு திரையிட்டு புறம் வந்தண்டுவார் ஆரென்றறியாமல் அல்லல்படும் மாந்தர்க்கு மெய்யுள் புதைந்திருக்கும் மென்பொருளொன்று கை கொடுத்து திரைக்குள் பிறன் முகம் கா ட்டிடுமே .நேரில் முகம் காண நெஞ்சம் நடுங்கி துருக்கர் நேரிழை போல் துகிலால் முக்காடிட்டு மதிமுகம் மறைத்து முனங்கி வாழ்வது மூன்றகவையே. .
தொல்லை தந்துடல் பற்பல அள்ளும் எல்லை கடந்த கொடும் பிணி தன்னை வெல்லும் முல்லை நிலமகளீந்த மூலிகை யொன்றை யடியேன் காண பாருக்குள்ளே பகர்ந்தே னுண்மையை பாவச்சின்னங்கள் அறிய அறனே தீவினை அகற்ற சொல்லச் சொல்ல சுவையை யுணர்ந்தேன் சொற்திறனை யறிவாய் சூதுகெளவி சூழலும் மனமே.
அழியா வேந்தனிவனென்று பொழியும் செம்மொழித்தேனில் அழகு நடை போட்டறம்பாடி வந்தேன். அழியா வேந்தனையே அழிக்கும் நோக்குடனே பொழுதும் முயன்றிடுவர். புறமுதுகிட்டோடிவர். அழிக்க இயலாத அருள் மகனாய் அவதாரம் பூண்டதனாலிவன் அழியா வேந்தனானான். இவனே மனமெடுத்து இன்புவிதனை விடுத்து விண்டுலகிற் புகுவதனால் அழியா வேந்தனென்று இவனை அழடிபணிந்தேன்.
இதையறியா மாந்தரெலாம் உள்ளூனம் கொண்டுலவி இறை விதிக்கெதிராய் இவன் விதிமுடித்தங்கனுப்ப முயன்றால் முடிந்திடுமோ முப்பால் வளர்த்த முக்கடலூரானை . அழி க்க எவருக்குமே வலுவில்லை . அறிந்தவர்க்கு அழியாப்பிள்ளை அருந்தவர்க்கு இவனே ஞானப்பிள்ளை. தாய்தமிழிற்கோ செல்லப்பிள்ளை யாம் யிவனை கைவிட எம் இறையனாற் கிசைவுமில்லை .
பாகம் 48
விண்டுவே இறங்க விண்டவர் வியக்க தென்புலம் சிறக்க ஐம்புலனடக்கி தந்தமிழ் பாணர் தினமும் துதிக்க போற்றும் பைம்புலமிக்க பாடல்கள் சுரக்க செம்புலத்து தித்து செம்மலாகி முன்னம் செம்மான் கன்றை கவர்ந்த எம்மானிவனென இயம்பவந்தேன். இவனை பணிந்தே எம்புலம் காக்க எழுந்த அறனின் பின்புல மாகயாமே இருக்க மும்மலமகற்றி மூதறிவு திரட்டி அடியேனுக்கருளிடு சுடர்விடும் பொருளே.
வானுறை வேந்தனே வணங்கும் திருறிறை திருமார்பன் மீண்டுமொருமுறை தோன்றும் மூன்றாழியை மூச்சந்தியாய் யுடுத்த தென்தமிழெல்லை முல்லைக்கொடியாள் மீட்டெடுத்த மன்னுயிர் வேந்தனிவனென மார்தட்டிக் கொளல் வேண்டாமிவன் பாருக்குரிய பரந்தாமனாதலால் பன்னாடே பூரிப்படையுமென பாடவந்தேன்.
எம்முனைக்கு யில்லா பெரும்பேறு இம்மும்முனைக் கெவ்வாறு என வியக்கவேண்டாம். இது மாலன் எடுத்தவரம் மனமிலார்க்கு துலங்காது. இது வேலன் வகுத்த அறம் விணருக்கு விளங்காது. இலங்கா எம்மானை இலங்கவைக்க இதயத்திலிழுத் தெடுத்து எம்மை ஆளவைத்தோம். விளக்காய் அவனிருக்க விதக்கிங்கு என்ன வேலை.
அழுக்காய் மனமமைத்து மண்டியிடும்முன்னமே கொழுப்பாய் அவனெரிப்பான்.
கூக்குரலுக் கிரங்மாட்டான். மழுப்பி வாழ்வோரே மனம்திரும்பி வாருங்கள். மேய்ப்பனிவனே தான். மீளும் மண்ணிற்கு மீட்பனிவனென்று வரையனைய உறுது தந்தேன். காப்பனிவனென்று கடலளவு பொருள் தந்தேன். இதை கண்ணிழந்தோ ரறியாரே கருணை செய்வாய் அறப்பொருளே .மண்சி வந்து மனம் கொழிக்குமுன் கண்டு வப்போர் பலகோடி காத்தருள்வாய் பரம்பொருளே .
பாகம் 49
நெருங்கிய நாட்டோரம் நிலைகுலைந் தழுவோர் கண்டேன். அங்கே கருங்கொடி கண்டத்தில் கண்ணீர் ஆறாகி பெருந்துயர் மாறாதுகண் இமைக்கும் நேரத்தில் கருணையை ஓரங்கட்டி கவின் நிலம் குலுக்கி உண்ணுமாம் கோடிகளை அள்ளி. இவர் மனுநீதி கொன்று மன்வேட்டையாடி தால் நிலத்தாயே எழுந்து நெஞ்சம் சீறிக்கொதித்து தலைகள் பல குறைத்து தலை நிமிர்ந்து நிற்பாளாம்.
கொடுயோர்தலை உருள கொடுங்கோன் தலை தெறிக்க பொதுப் பொன்கையாடி
பொல்வழியில் பதுக்கியவர் பசுத்தோல் போர்த்தியே பாதகர்க்கா தரவாய் பாவம்
குவித்தோரும் பாழாகி அழும் காலம் அகலாது நழுவாது வருவதையான் கண்டேன். ஐயன் றிகொறோமே.
வரவறிந்து அறங்கொன்றோர் அனைவருமே அச்சம் மேலிட உதித்த நிலமறந்து ஊர்குருவியாகி ஆகாய முகில் கடந்து அரக்க பருந்தமர்ந்து அயல் நாட்டி லகடைக்கலம் புகுந்தாலும் அவ்வடிமைகளை இழுத்துக் கொணரும் ஈடிலா ஐயன் பேராணை கண்டு பெருநி லமே வியக்கக்கண்டேன் பரம்பொருளே.
பகுப்பாரறிவிலாது பாழாய் போனதால் வகுப்பாய் தொகுத்து மன்னுயிரை வதம்
செய்வாரொடு நஞ்சர் கூட்டம் பதவிப் பொருளடை வரென்பதனை தொகுத்துரைத்தேன். நீங்கா துயர்துடைத்து நீடுவாழும் நீதி பெற்று நிலமெல்லாம் நலம்காணும் நிம்மதி பெரும் பேற்றை அருளுக பரம்பொ ருளே .
அகமுறை இருளகற்றி அகிலம் காக்க அறந்தாங்கி வரும் எம்மெழில் வோளுக்கு அருள் புரி௧. அவமான சின்னமாய் அவதாரம் தானென்று அற்பர்களாய் புரளியள்ளி பூரிக்கும் புள்ளிகளை ஒருக்காலும் மறக்க எம்மையனுடன்படா னென்பதனை அறுதியிட்டு பாட்டமைத்தேன். இறுதியொடு எச்சரித்து இயம்புவது என்னவெனில் கயவர்களாய் வாழ்வு தந்து கடும்பலன் காண்பவர் பெரும் பதராய் கருதயே வேதைதரும் சிறை அனுப்பி வாதைபெற வழிவகுப்பான். தனை வாழ்த்தும் நல்லோர்க்கு வானவர் வரம் கொண்டு எம்மேன்மக னொளிகொடுப்பான்.
பாகம் 50
புறம் பேசாதாரில்லா புவிகொண்டாய் பூமளே .துறை தோறும் பொல்லார் விதை தூவி பொன்நெஞ்சில் வேரிறக்கி ஆளும் அரசுடன் ஆணவ கரம் பிணைத்து கொண்டாடு வோரிருக்க நீ கூனிகுறுதி கோழையானாய் மண்மகளே .
இறைக்கெதி ரென்றறிந்தும் அப்பனும் மகனும் இதேகொநிசெ இணைந்தே அறம் கொல்ல நிறைசெய்தாய் பொறைமகளே.
மறைக்கு எதிர் என்றறிந்தும் மகளும் தாயும் பிணைந்தே குறியொன்றில் இல்லுறவாட இடமளித்து யங்கலாமோ மேன்மகளே. சிறைக்கு அருகதையான சிற்றினத் தோரெல்லாம் மறைஓத புறப்படவா மண்ணே நீ இடம் கொடுத்தாய். குருதி கொட்டும் கொலைகளமாய் கோவிலாளும் அந்தணரே அரம்பைப் பொருள் மகளை கருவறைக்குள் கலவி செய்தரவணைக்க காவல் புரியலாமோ கற்புக்கடம் கொண்ட பொற்புடை பூரணியே.
நீ நல்லோரகம் குளிர நாடெல்லாம் தாங்குவதில் வியப்பு இல்லை .அதை விடுத்து தீயோர் அனைவரையும் தினம்தினம் இயங்க வைத்து இழிசெயல் குவிய ஏன்தான் வழிவகுத்தாய்.
பாகம் 51
தவழ்வோர் போலே தளிர்மனம் கொண்டோர் தரவோராகி தரணியில் வாழ்வோர் உள்வெளி மாறா உண்மை தந்தோர் ஊடகம் போலே உள்ளம் கொண்டோர் புகலிடம் புகுந்த அறத்தால் விளைந்த அன்பர்கள் எல்லாம் ஐயன் அகத்துள் வீழ்வது மி க்க எளிதென கண்டேன். இகழ்வோ ரில்லா இனிய மருந்தாய் புகழூரெல்லாம் பொறித்த ஐயன் முகத்தை அளவிட மறந்தேன்.
எங்குமலர்ந்த இதழ்கள் தோறும் என்றுமாறா புன்னகை கண்டேன். மெல்லூர் விழுந்து மேலூர் விரிந்து சொல்வளச் செல்வனாய் சூதற திரிந்து வெல்லரும் கலை பயின்று வல்லூறு வட்டமிடும் வல்லூராம் நெய்தல் பெரூரில் நிலம் பெயர்ந்து நேரிய சீமான்போல் நிமிர்ந்து நாடாளும் கோமானாய் உயர்ந்து கொல்லாரும் இயலா இறை மகனிவனை வெல்லாருமிலா விந்தை கண்டேன்.
தமிழ் கூறும் நல்லோர் எல்லோரும் நயந்து நாடறிய தீதறியா யோசிணிபினே தாயோனாய் சிறந்து தரணியை தன்பின்னே சுமந்து பரணி பாடிவருவானே பரம்பொருளே .இவன் வேருக்கு வரமளித்து வேண்டுவதை கொடைசெய் பரம்பொருளே .
ஐயன் அகத்துள் ஒளிபாய்ச்சி அகிலத்தின் அமுக்கற்றி போகா புனிதத்தை புவியெங்கும் நீ போர்த்தி வேகமாய் வீச்செடுக்கும் வெல் வினையை நீ தொடுப்பாய் வல்வினையை வேரறுக்கும் வெண்டலை பூண்ட விரிசடையோனே விதி மாற்றும் மதியமைத்து விந்தைசெய சிந்தை செய்வாய் பதி போற்றும் பரம்பொருளே .
மறை மறுக்கும் நரையுடை பழமொருவன் ஐயன் வடகுடக்கே பாயுமிரு ஓடைக்கிடையே முத்தாய் உதித்து முரண் கொள்கை விதைத்து பித்தனாய் பெயரெடுத்து சித்தனாய் மடிவானே. காலங்கடந்தாலும் அக்கண்காணா செம்மலின் கருத்தில் சிலகாலம் கண்ணூன்றி பிறவிக்கறை படுந்து பேரின்பமுணரா பெரும்பாவ இறை மறுப்பில் இயங்கியே சிலகாலமிருந்தே இவ்வேள் திரிவானே.
பாகம் 52
வேண்டியே சொக்கனை விரும்பி மணந்த பாண்டியப் பைங்கிளியாள் கயல்விழி நீந்தும் பவளக்கை ரேகை ஏந்திய வீழாவே ந்திவன் என்பதனை வேதங்கள் மறைத்தாலும் விழியிறக்கி யாமறிவோம். ஆண்டி அடியார் வீ சிய தூண்டுலில்
அரவம் பதித்த திலுறங்கும் நாதனெனும்மீன் நன்றாய் அகப்பட்டான்.
கலிகொன்று அறம் காக்க கண்ணனிவன் உடன்பட்டு அருளாளர் நெஞ்சகத்துள் அடிமையாய் சிறைப்பட்டான். மாசற்றோர் வேண்டிநிற்க மண்ணிறங்க வினை தீர்க்க தன்னையே அற்பணித்து கடன்பட்டு இடைப்பட்டான் என்பதனை யான் சொல்ல சொல்தருவாய் பரம்பொருளே .
மிதிலையில் வில் ஒடித்தோன் மேல்மீன் நாளெடுத்தான் மனமுறைந்தாள் பேரிணைத்து மாதவனாய் பிறப்பெடுத்தான். அரியுடன் உருவெடுத்து அருந்தவம் புரிகின்ற அம்புலி திருமுகத்தான் நெஞ்சுறை நேர்பிரான் நஞசுறை நாகமணி நாதர் தயை கொண்டு நாநிலமுலவுவதை மேநிலத்தோர் அறியுமுன்னே எம்மகம் அறிந்ததனை உன்னகம் அறியுமென்று பன்னகமணிந்த தென்னக மறையே நீயறிவாய்.
வள்ளிக்கள்வன் கையில் துள்ளிய வல்வினை அள்ளிய வானவர்வேல் உள்ளங்காலில் ஓயிலாய் ஒளிர்வதை உற்று நோக்கியே உள்ளதைச் சொல்வேன்.அது செவ்வேள் வீட்டு சீறிபாய்த்து சூரனை வதைத்த சுடர்வேலெனவே ஆறுதல் கொண்டேன். வலக்கால் மலரில் வானைப் பார்த்த
நாபிக்கமலம் நன்றாய் கண்டேன். இடக்கால் மலரில் பூந்தாள் நோக்கும் ஒளிர் தாமரை யெழில் கண்டேன்.
பதமலரி ரண்டிலும் பார்த்தசாரதி சக்கரம் பார்த்து எம்விழி ஒற்றி எழுந்து நின்றேன். வலப்பத மலரோரம் பூத்த பங்கயமுள்ளே முக்கண் சூலம் மூலமாய் நின்றதை முத்தயி ட்டு வணங்கி நின்றேன்.
பாகம் 53
தீதுள்ளா நன்னெஞ்சே தேவருறை ஈசன் கருவறையாய் யாம்கண்டோம். இறை வெறுப்பும் மறை மறுப்பும் இங்கெ வர்க்கும் பாவமில்லை சாபமில்லை. பிறர் நலம் பேணி நலிந்தோரை தவமேற் போர்க்கணையாய் ஏற்று தருமம் தலை காக்கும். அகமலமிறக்கா அருளிலா இருளுள்ளோரை எரிக்க எம் அறனே துணை போ கும்.
தரை மீது தாபம் கொண்டும் மரை மீது மோகம் கொண்டும் கனகம் குவிக்கும் கடுந் தாகமெடுத்து போகம்புரை யோடிய புண்ணெஞ்சே பொல்லா நெஞ்சென புகன்றாய் பரம்பொருளே .மலரீன்று புறம் தந்து மனம் கொன்று மலர்விற்று பசி தீர்க்கும் படுபாவப் பெற்றோரின் பேரவலம் கண்டேன்.
விடப்பால் அருந்தியே விரியா விழிகொண்ட விண்மீனை விதியழைக்கும் முன்னமே வழியனுப்பி மண்ணோடு மக்குவதை மனதுருகக் கண்டேன். பெண்பூவாய் இனம் தேடி பேரழிவு செய்கின்ற பகல்வேட பாவியரை பாரெங்கும் கண்டேன். தொல்லை தந்துடல் அள்ளும் எல்லை கடந்த எப்பிணியையும் வெல்லும் முல்லை வன மூலிகையொன்று நெல்லை யப்பன் நிலம் தொட்ட தென்பொதிகை கரம்பிடித்த மோதிரமணி வரைக்கப்பால் அகத்துயரருள் பொதிந்து அகமிருப்பதை புறந்தந்து புதிர் அவிழ்ப்பாய் நல்லோர் நலம்பெற வலன் தருவாய் பரம்பொருளே.
பள்ளமிலா குடியமைத்து பாரோர் மேம்படவே பன்னாடாள தென்நாட்டு ஏறு தலை எடுக்கும் திருவருள் நிலம் பணிலங்கள் படையமைத்து பதுங்கிவாழும் உவர்நீருடுத்த மூம்முனை மேற்குறை திக்கணன் கொம்பில் தேனிறைசெம்பாய்
திருமேனியெடுத்து நறும்புகழ் பரப்பநாடெலாம் மணக்குமிடமென்பதனை வணங்கியே உரைக்கின்றேன் வானவரே வழிமொழிக.
பாகம் 54
கமலக்கையால் ஊணுண்ட கணமுடிந்தே கபட மாந்தர் நஞ்சூறும் நெஞ்சம் கண்டேன். உத்தமராய் னியிறிழிறி உடனிருந்து ஓசை யின்றி குழி பறி க்கும் குணம்கெட்ட மாந்தர் முன்னே மண்டியிட்டு அண்டிப்பிழைப்பர். சினம் கொன்றோர் செயல் வீரம் பயன் பெறுமே ஐயயில்லை .
பரிதியன்ன வரமிருப்போர் எதிரிகளை எரிக்காது சீதளத்தை பாய்ச்சி நிற்பார். பெற்றதாய் பின் பெற்றம் பாலூட்டி வளர்த்தா ளவளை நன்றி கொன்றே நறுக்கி இன்சுவை யெடுப்போர் கொற்றவராயினும் குலமழும் கொடும்பாவம் குவிப்பரே என்பதை வானுற்றவர் சொலார் உயிர்வலியறிவோர் உள்ளறிவர் பரம்பொருளே .
கபடமுடை கல்லுறை நெஞ்சரை காவுவாங்க நிமிடங்கள் குறைவதை நேர்மக்கள் நன்குணர்வர்.தடயங்க ளொழிந்தாலும் தருமமொழியாது தலைகொய்யா மலது தளராது என்பதை தருணங்களுணர்த்தி செல்லும் தன்மை கண்டேன். எங்கும் செம்மொழி பொங்கி எழுந்துட எம் ஐயன் வரும்நாள் இனி செல்லாது.
பொங்கும் கடல் கிழித்து புது வணிகம்செய வங்கம் அமர்ந்து வந்த செங்கமல வண்ணத்தார் சென்ற பின்னும் தென்மாந்தர் தம் வாழ்வில் தீரா அடிமையாய் அசையும் பிணமாக்க அந்தணர் இலை மறை காயாகி இயக்குவரே . அடிநிலம் மீட்டு செழுமலர் பூத்தார்போல் செந்தமிழ் வளம் கொழிக்க தடம்பதித்து வருவானே தரணியா ளதமிழ்வேளே.
குந்தம் பறக்க கூர்வாள் சுழற்றி வங்கம் கடந்து வளரும் அரசை எங்கும் கண்டேன். எழில்வேள் எழுந்து சங்கம் வளர்த்த தங்க நி லமே சிங்கமிவன் சீரடி தொழுமே பங்கம் சூழா பரம்பொருளோனே .முக்கண்ணனருள் மூதறிவு தெக்கணத் தென்முனையிற் திருக்கண்ணன் சொல்லாமல் சூலுறைந்து நில்லாமல் மாலுதித்து திக்கணனாகி திசையெட்டும் தமிழ் வளர்க்க தேர்ந்த வனிவ னென்பதனை அருள் சார்ந்தோர் நன்கறிவர் அறம்காக்கும் பரம்பொருளே .
பாகம் 55
சிறப்பாய் நாடமைத்து பொறுப்பாய் கடனாற்ற உதித்த செம்மலினை உசுப்பி தடம் மாற்றி நசுக்க நாய்படை திட்டமிடும். புறம் குத்த குறிப்பாய் நரிப்படை வட்டமிடும். உடன் சுற்றி தெறிப்பாய் ஒய்வறியா பரிப்படை கொட்டமுடன் எடுப்பாய் தேர்படை யாமத்துலும் எக்காளமிட்டு வெறிப்பாய் ஈரற்குலை நடுங்க எமையனை அச்சுறுத்த நெஞ்சுறைந்த நஞ்சுடன் நிலை கெட்டலைவரே .
ஜயன் வருமுன்னம் மையம் கைக்குவர குணம் கெட்டோர் கொடிவகுப்பர். மதம் கொண்டு குலம் கொன்றோர் அணிவகுப்பர். பிறப்பொடு பேதம் சூட்டு இறைதலையிற் யாமுதித்தோமென்று மன்னுயிர் பிரித்தாளும் மாந்தரும் மறையேற்றி கறைபடிந்தோர் கயமையை என் சொல்வேன் பரம்பருளே .
அவை யனைத்தும் அடிகொணர்ந்து சபை யனைத்தும் சீர்குலைத்து மடமனைத்தும் பதம்வீழ்த்து நிதியனைத்தும் சூறையாடி நலமுடை துறையனைத்தும் நடக்காது முடமாக்கி நாய்மாக்க ளொன்றுகூடி நன்னாட்டை நன்றாய் தகர்ப்பரே .பிறவி பேதமிட்டு பிறவா கொடுந்தம்பி பெயர்ப்பான் தேன்மொழி தமிழ் மண்ணை .
இறுக்கும் தான்தோன்றி அண்ணனாண்டு அல்லல் கோடிதந்து கெடுப்பான் தன்னிசையை . மனை யறுத்துபிறமானிணை தேடி இரை யெடுத்து இன்புறும் இழியோனொருவன் வாடை வரும் குடப்பாகமுதித்து மதம் பிடுத்து மன்சுவைத்து மண்ணாள்வான். இந்நீணிலம் ஒட்டிய நிலைகொள் விடமோடும் வேந்தர்கள் கரம்பிணைத்து உருக்குலைக்கும் பெருநாட்டை எட்டி நின்றுயான் கண்டேன்.
பட்டுத்துடிக்கின்ற வேவெதி பட்டாள வேங்கைகளை வெட்டி சூது தின்ற வேதனைக் கதையை சொட்டுகின்ற சென்னீர் சொல்லியழயான் கேட்டேன். காசினியை மெய்யாக்க கருணை க்கண்பூக்க ஈசனே காத்தருள்வாய்.
கொடும்பசி கூப்பாட்டில் அடும்பிணி அலைக்கழிக்க தலை குறைக்க நமனும் வந்தே நடுங்கயே இனமழிய நாடெலாம் கதிர் பொழியும். நல்லறம் காத்து நமை மீட்க பேராயனொருவன் பிறப்பெடுத்து பாராள வருமிடம் பரளியாற்றின் கரையோரம் பாம்பணையிற் பள்ளிகொள் பத்மநாபனுக்கு நமன் திசையி லுதிப்பானென சித்தநாதன் சிந்தையறிய செப்புகிறேன் பரம்பொருளே.
பாகம் 56
பயிர்வெட்டிப் பாழ்படுத்த பன்னாட்டு பைங்களிகள் பறந்துவரும். உயிரோ ட்டம்
தடை படுமோ என உலகிற்கே கிலியைத் தரும். பருவங்கள் பொய்க்காது போனாலும் பாழ் நிலத்தில் விளைவதெல்லாம் வீணாய் போகும். உடலுக்குரமூட்டும் உதிரத்தில் ஒட்டியோடி நலம் கொல்லும் விடம் விதைத்து விடம் அறுத்த விந்தை கண்டேன் பரம்பொருளே .
வணிகரெல்லாம் பொன்வாரி வளநாட்டுள் வாழ்வமைக்க ஊணுக்கு வித்திட்டோன் உறங்குவதோ அரைப்பசியில் அல்லலுறும் தொல்லை களாயிரமாய் தொடர்வானே .இவையனைத்தும் ஐயன் வருகைக்கு அடையாளமென சொல்லி அடியேன் எச்சரிப்பேன்.
அண்டம் காக்குமுனை அண்டாபஞ்சத்தை நெஞ்சமெலாம் கண்டதனால் நிலை குலைந்து நின்றேனே .மனையெல்லாம் மனம்மாறி மாற்றானே மேலென்று துணை யகற்றி இறிளிதிரி ரேபெகே இணை மாற்றி துள்ளித் திரிவாரே பெயருக்கே அறம் பேசி இல்வாழ்வை ஏற்பாரே .முலை யினங்கள் முல்லையின்றி நடுநிசியில் அலைவதையும் கலைக்காசு குவித்துடவே கால்விரிக்கும் கன்னியரும் விலைபோகும் நிலை கண்டு வேதனையில் பாடவந்தேன். வில்லொத்த விழி கொண்டு வேல்பாய்ச்சும் மெல்லினத்தின் நெஞ்சமடி காணாது நிறை ஞானியர் நின்றனரே .
துள்ளுமுள்ளத்தை தொய்விலாது இறுக்கி கள்ளூறும் கனியிதழ் வஞ்சியரை விலக்கி எம்முள் நிலை கொண்டு இயக்கும் பரம்பொருளே .அறங்காப்போ ரனைவரையும் அல்லலேதும் அண்டாது அகன்று நிற்க உன்னடிபணிந்தோர் கடும் வாழ்வு கரைந்தோட இனி காலந்தாழ்த்தாது கண் திறப்பாய் பரம்பொருளே .
நனிதாய்மை நன்மைந்தனிவன் தலை கீழொருகொடி உலகாள ஒருமை பட்டுய்யும் ஒப்பிலா காட்சி கண்டேன். இனி கண்ணுறங்கி போனாலும் கவலைப்படேனையா .மெய்யாய் உரைத்தெல்லாம் மேனியில் நடக்குமையா .பொய்யாது மூதுரைகள் போகுமோ .ஐயா கதிர்வேலே அறம்பாடிக்கருள் புரிவாய். செய்ய கடனுண்டு செவ்வேளாய் நீயுண்டு.
அகிலத்தில் ஆதவனுதித்திரும் முத்தோய முடுத்த வித்தக ஞானியர் செம்பதி யுறை மூக்குத்தியாள் முத்தாய் காத்தெடுத்து மூவுலகு சொத்தாய் எம்மையன் சுடர்விட்டெழுவான் என்பதனை ஈரேழுலகறிய எம்பெருமானீயறிய யானும் அறிந்தேனே .
பாகம் 57
தற்குறிகளேவியே பற்குறிகளேறிய பாழ்களிகள் பொற்கிளி பெற்று புரையுடை பிறைப்பூ பொறித்து அற்பர்க்கு இதழ் விரி க்கும் அக்கலை கொண்டு சிக்கலில் சிதைக்கும் சினேவேவீ விந்தையுடனே வேங்கையை வீழ்த்த வினை விதைத்தும் வீழாது விழித்து வஞ்சக வேடுவன் வலை தனை யறுத்து நஞ்சகர் வியக்க நெஞ்சமெடுத்து நெடுங்களம் வெல்வான்.
நன்னிலமெங்கும் நனிவளம் வேண்டும் எம்மகம் குளிர ஈடிலா நலமுடன் ஐயனுயர அடித்தளமிடுக பொன்னகை துறந்து பன்னகமணிந்து தென்னகம் போற்றும் நல்லறம் காக்கும் நாடுடை அறனே .கூடிறக்கி கூடியக்கும் கூத்தனருள் நுண்ணறிவை ஏடறியா இயற்கையிலே எய்திடுவான் இப்பெருமான். தேடினாலும் தென்படாத வெள்ளுடலை உலவவிட்டு விதமாற்றி
எமையன் அடக்கிடுவான் ஒடுக்கிடுவான்.
இல்லறம் விடை கொடுக்க இறையின்பம் மோலோங்க ஐம்புலனடக்கியே அறவாணன் அமருமிடம் அகத்து யருலவும் அருள் மலையாய் யான் கண்டேன். பீடுடை எம்மான் கோடமைத்து தேடரிய காப்பியக் கொள்கை தந்து நாடமைக்கும் கொற்றவனாய் பொய்யகற்றி மெய் அமைக்கும் சித்தமறி செம்மலிவன் என்பேன் யான்.
மண்ணாசை கொண்டோரை மண் விழுங்கி ஏப்பம் விடும் பெண்ணாசை கொண்டோரை பேரிழப்பு தேடிவரும். பொன்னாசை கொண்டோரை புவிபுதைக்கும் காலம் வரும். ஈசனருள் வேண்டி ஈடிலா அறம் காத்து ஆசிலாது வாழ்வோரை அகிலம் விட்டாலும் விடாது அவ்வீடென்றே நல்லீடு தந்தே வல்லீசன் வழிவிடுவான். மண்வீசி மணம்பரப்பும் குணக்குன்றை என்னாடும் தன்னாடாய் ஏற்று அருள்பொழிய கனம் செய்க பரம்பொருளே.
எம்மானம் காத்து இயல் ஞானம் பூத்து நின்ற பொன்மனச் செம்மல் இன்னவ னிவனென் றறிந்தும் கல்மனம் கொண்டு மும்மலத்திலூறியே மும்மத மூடரும் மண் மணம் மாறா செம்புலம் முளைத்த கற்பகத் தருவென்றறிந்தே எரிக்க திரிந்து இயலாமற்போன இயல்பை என் சொல்வேன் இன்னலகற்ற இயங்கும் பொருளே .
பாகம் 58
நன்னெறி காவாது நன்நெஞ்சின் புண்ணீருண்டு புன்னுறும் பொல்லாப் பூனை களொழியும். நெறியை தெள்ளாய் தினம் தின்று மெல்லினம் தனை வதைதத பாதகரினம் பதை பதைத்தழியும். கறுவுடை கயவர் கூட்டம் கருவறுத்த கற்றப்படும். கச்சேரித் தலைமை ஏற்கும் கறுநெஞ்ச பச்சோந்தியரை முச்சந்தியில் வீழ்த்த விதிகள் திருத்தப்படும்.
வெட்டுக்கு இறங்காத வேலவன் மெய்யிருக்க வீணர்க்கு அஞ்சுமோ அழல் குஞ்சு ஐயன் நெஞ்சம்.பிட்டுக்கு மண்சுமந்த பிறைச்சூடி கறுமலர் கண்டனின்று திரிபுணரி கட்டுக்குள் நட்டுவைத்த கனகமணி வேளுக்கு செறுபகை வித்துட்டோர் கண்டே வெறி கொண்டிவன் விதி சுமந்தன்.
மட்டற்ற மகிழ்ச்சியில் யாமுறைய நெறிபிறழ் மன்னாதி மன்னவரும் கொலை நடுங்கி திக்கற்று திசையற்று சிதறியோடி சிதைக்குள் ஓழிவாரே . சட்டங்கள் குப்பையாகும். வானவர் நலத்திட்டங்கள் மண்ணை ஆளும். குற்றமெலாம் இவனகற்றி கொட்டும் வளம் கூட்டி உலகொன்றை நட்டு வைக்க பட்டுக்கரங் கொண்டு பங்கையன் வருவானே.
அற்ற குளமன்ன அல்லலுற்றழும் மண்ணில் அட்டையாய் ஒட்டி உயிருஞ்சும் கட்டிப் பாவியர் விட்ட வேரறுத்து வியக்கும் திருத்தொண்டை இறக்கும் வண்ணம் செய்து முடிப்பானே .கெட்டுச் சீரழி ந்து கீழ்கிடக்கும் பாழுலகில் பட்டு
சருகான பாமரரை தொட்டு நலம் புரிந்து தூக்கி உயர்த்திவிட்டு பட்டமென பறக்கவைத்து பொன் பொழிதிளி மழை பொழியும் வண்ண முதிக்கும் ஒளிமகன்
ஓய்வறியா துழைப்பானே.
பாகம் 59
நாடுகள் நிதி இழக்கும் நாதியில்லா கதி பிறக்கும். திரு ஒடுதனை தான் ஏந்தி ஓலமிடும் நிலை பெற்று பேரரசே பிச்சை பெற்று திண்டாடி திணறி நிற்கும். ஐயனிவன் அறனரசு திறனரசாய் திரிபுகொண்டு திக்கெட்டும் புகழோங்கும். புகழ்வீசும் பன்னாடே ஆற்றல் கெட்டு அல்லலுற்று வந்திணையும் சித்தராளும் செழுநிலத்தில். வல்லரசே வாய்ப்பு இழந்து கொடுநோயால் வாய்பிளந்து மெல்லரசாய் போகுமென எம்மரசே பரம்பொருளே எமக்குநீ சேதி தந்தாய்!
பார்வடித்த கண்ணீர் பாழாய் போவதில்லை .இங்கு யார் வடித்த கண்ணீரும் வீணாய் வீழ்வதில்லை . நேரிழைகள் வடித்த கண்ணீர் நிலத்தை எரிக்கும் முன்னே நெறியாளன் வெறி கொண்டு நமை நாடி நலம்புரிவானென்று அன்றே
அருட்பெரும் ஞானியர் அறிந்ததனை அடியேனும் அறிந்தேனே பரம்பொருளே.
சீர்பெருகும் நிலம் வேண்டி சிவனடிகள் நோற்ற தவம் செவ்வரம் கொண்டுவந்து சேர்த்ததே கண்மணியே .இனி யார்தடுத்தும் வாடாது நமையன் அருள் தூவும் மெய்மலர்தான். ஊரடங்கி போனாலும் ஒளிவண்ணன் காற்கமலம் ஓயாது நமை உயர்த்தாது.பாரடங்கி போனாலும் பதமலர்கள் கடுக்காது கடனாற்றும் பொன்மணியே .உம்மையில் உதித்த இனத்தவ ரெல்லோரும் இம்மையிலும் இவனருகே இருந்து செம்மையாய் பகைத்த வளர்ப்பரென அறம்பாடி சித்தன் யான் அறிந்தேனே பரம்பொருளே.
பிரிசேபி தன்னை பிரித்து தாதை சேர்த்த பின்னம் முலைப்பாலீந்த அன்னை நிலத்தவர் ஆயர் பிறவிப் பாத்திரமேற்று கலியன் தோழமை கைகோர்த்து நித்தம் சுற்றி நிறைகடன் முடிப்பதை என் சொல்வேன் பரம்பொருளே .எம்மை நன்கறிந்த இளம்பிறை சடையோனே மும்மையை நன்குணர்ந்த மூலவனாய் நீ இருக்க உம்மையிலும் உம்மையான் சரணடைந்தேன்.
மறுமை அறுத்த மாமுனிகளிருக்க இம்மையில் இன்னலுறும் நல்லோரை உயர்த்த கற்பகமா ய் உதித்தவன் நெஞ்சிற்கு உரமருளித்து நீங்கா மறத்துடன் ஆர்ப்பரித்தெழ ஐயனுக்குதவிட மெய்யாய் வேண்டினேன் மேன்மைக்கு இணையிலாமே தினிகாக்கும் மேதகு அறனே .
பொதிகை மாமுனி பூத்தூவும் அகிலத்த னருமருந்தை அனந்தன்புரிக் கடுத்துறைந்ததோர் திருப்பதி நதியோரமடை யாளம் கண்டே னுன்னருளாலே. இவன் மலர் முகம் காண மட்டற்ற அருள்பொழிந்தாய் மார்பிலரவம் ஆரமாட அடியார் நெஞ்சுக்கு விருந்தாகும் மாமணியே உனை புரிந்தோர்க்கு பூவுலகில் பொல்லா வினையில்லை .
பாகம் 60
கயிலையில் கடுந்தவன் புரிந்த பயனாய் கைத்தலம் கீழுள்ள அகவல் புள்ளதன் அரைமெய் கண்டேன். அதுஈசன் குறிபோல் எழிலாய் தோன்ற உமையாள் உன்னத குய்யமாங்கே ஐயன் வலப்பூங்கைத் தலமடியில் அணியென அடியேன்
அழகுற கண்டேன். இருபால் குறியும் இருக்கும்
கையன் எம்மையன் என்பதை இங்கே கண்டேன். பகைக்கஞ்சா பார்த்திபன் உள்ளங்கை யுளுறைந்த பாற்கடலூரான் திருமால் தரித்த மணிமுடி சன்னம் புதன்தொ ட்டிரு திட்டில் வள்ளியை அள்ளியக் கள்வன் தாரகைமேலொட்டி இருக்கக் கண்டே நவரசமுண்டேன். இடக் காதருகில் இலவம் விதை போ ல் மரகத மச்சமயிருப்பதை கண்டே பரவசமடைந்தேன். வலத்தொடை தன்னில் வரமல்லி வடிவில் செந்நிற மச்சம் செவ்வரமென்பேன். வலக்கரம்சேர் புயம்கீழ்புறம் மிளகென ஒரு மச்சம் மிளிர்வதை க்கண்டேன்.
இடுப்பினிடம் கொடிமுந்திரி விதை யொத்த மச்சம் இருக்கும் விந்தையை சிந்தை யடக்கி சிறப்பாய் கண்டேன் அறனே .கரிமுகன் நாற்கரச்சின்னம் கண்ட நாள் முதலடியேனிரு கண்ணயரவில்லை அறனே . அது ஐயன் சுட்டு விரலடி தன்னில் மோதிர வளையம் தொட்டெம் அம்பை சூலம் கைப்பிடியுள்ளே என்றே னன்பே .
ஆகா இவன்தான் அகிலம் காக்க திகழும் திலகம் என்றே புகழும் ஞானியர் கண்டேன். விண்ணவர் வியக்க மண்ணவர் வணங்க மன்னவர் பணியும் சுயம்பு லிங்கம் பொதிந்துலாவும் வலதே யமைந்த வல்லமை பாதம் பாதமல்ல. அது ஞானியர் கண்ட வேதமென்றே வேதியர் வாயால் பாடிடக் கேட்டேன்.
பாகம் 61
வாள்கை ஏந்தினாலும் வரகாக்கை பூண்டு அங்கநலம் பேணும் ஐங்காயம் போன்று பெருங்கா யமகற்றி அருங்காயமாம் வெங்காயத்தை விண்டோடிணைத்து ஆகாயமளந்து நல்லறம் பேண நல வாழ்விற்கரணாய் தன் பொற்கையால் பூப்போல் நீநிணிலம் பொதிந்து நிம்மதி பெருக்க இப்பொன்னி மைந்தன் புறப்பட்டு வருவானே பூதலமே .
தோள் கொடுக்கும் நால்வருடன் தோல்விகாண நெறிவழியில் பாழுலகை மீட்டெடுத்து பாவங்களை சுட்டெரித்து மேலுலகின் மேதினியிபிபிமே ஆணை களை மேனியில் பிறப்பித்து வானகமே வியந்து நிற்கும் மேன்மையுடை அரசமைக்க வந்துதுப்பான் எம்மையன் வள்ளி அரவாக வளைந்தோடும் தென்னகத்தை அள்ளி அலங்கரிக்கும் அருளன்னை தென்குமரி தேன்மடியிற் வெள்ளி முளைத்தது போல் வேண்டி வழிமொழியவெண் பனிசடை முனிவருண்டு.
பள்ளி எழுச்சிபாடி பாசமுடை நீசனையே பந்தாடிய வல்லீசனமுதுண்ட வரசித்தர் புடை சூழும் படையமைத்து வான்கவிகள் பாட்டிசைக்க மேன்மக்கள் வாழ்த்துரைக்க மன்னுயிரே மண்டியிடும் மன்னவனைக் கண்டேனே. கொதிக்கும் தழலுலகை கூதிர் நிலமாக்கும் கொற்றவனிவனையே அதற்குற்றவனாய் யான் கண்டேன். கற்றவரே நம்பிடுக கைவிடா திவனை
காஞ்சனமாய் காத்துடுக.
கை தவமுள்ளக் கறையுடை காமமெனும் விடமகற்ற மெய்தவம் நோற்று மேனியுடையுரித்து தெள்ளுடலகற்றும் தீரர் படை நடுங்கும் பாம்பென அயல் காயம் தனில் தாவும் பைம்பொன்னி மகவாகி பூமூனிகளே விய புவிரசாய் மீண்டுயர்ந்து நாடு விட்டு நாடு பாய்ந்து நன்னெறி திருவாய் மொழியும் அகிலம் கண்டிராத அல்லியிதழ் பொதுந்த கைத்தலம் பெற்ற கற்பகம் கண்டேனே .
புவனமுய்ய பொன்னுடலில் பூத்து செவ்வரம் பெற்ற சீர்வேளெமக்கு பெரும்பேறாய் கண்டு பிறைசுடி அருளுவதை பெருங்கண்ணால் கண்டேனே பேரொளிக்குள் மேலொளிரும் ஒப்பிலா அறனே .பாயுமொளி பொழிந்து பன்னாடுகள் தாவுமொழி வளர்பானே . இவன் தெள்ளு தமிழ்கூறு நல்லுலகமைப்பானே .
இவன் தெக்கண நன்முனையிற் திருவரங்கன் பள்ளியறை தென்னிலத்தில் முக்கண்ணன் முலை யழக யமர்ந்தருளும் திருக்கண்ணன் மகிழூரில் திருமுருகன் கருங்கொடியாள் மேனிக்கருகே பூத்த பூவாய் யான் பார்த்ததை சொல் பொற்பூவே! பாரெங்கும் தன் பங்கயப் பதமலரைப் பதிப்பவனை கண்டுலகே கீழடங்கும் நன்னாளை கண்டேனே நல்லாய் கேளாயோ .
பாகம் 62
முந்நீருறைந்த மூத்தகண்டமதில் மூலிகை வரைபொதிந்த பொற்கடம்பமர் செவ்வேளருள் செம்புல மொன்றில் பொய்க்கண்ணறியா பொல்லா குலமொன்றில் ஆலம் விழதிறக்கி அரவம் சிறிதுமின்றி அங்கம் ஒழித்தொளிரும் அன்பகத்தை ஞாலம் காணா ஞானம் துணைக்குவர காளியருளாலே கணியம் கண்டேனே.
வாணி வரம்கொடுக்க வேணிவீழ்சடை யோனிவன் விழி திறந்து இருள் கிழிப்பானுடன் விண்டுறை மாலன் மார்புறை மலரிருப்பாள் .எழிலன் இடது கணுக்காலுட்புறம் ஈரெள் அகலம் கருநிறமருவொன்று கலையாய் இருந்து எதிரே அமைந்த வலக்கால் கணுவை எள்ளி நகைத்து ஏளனம் செய்யும் ஆணவம் கண்டே அடியேன் வியந்தேன் அறனே அறிவாய்.
கமலமொத்த வதனமதை கரிக்க வந்த கொடுங்கரந்தான் திரவம் எடுக்கும் திறனிலாது தீரம் கீர்ந்து போனதற்கு தெக்கண மூலை தென்முனை தேவி அரணாய் இருந்திவன் திருமுகம் காத்தாள்.
காயம்காண காயமிது. கருணை உறையும் தேகம் இது. தீயை தின்ன எவர்க்கேனும் திறனும் துணிவும் இருந்ததுண்டோ? மாயை உண்ட மாமடையர் மனதை யானும் என் சொல்வேன். தேனும் கனியும் தோற்றடங்கும் தென்மொழி அரசி புகழ் ஓங்க வானும் நிலமும் ஓத்துழைத்து வணக்கம் கூறி வரவேற்கும் கோனாய் உதிக்கும் ஐயனுடன் சிவனும் உமையும் இருப்பதனை
சீர்வேள் வடிவாய்யான் கண்டேன்.
சாவே போ என சத்தமுடன் பாரே அடங்க சூளுரைத்தேன். பேறுபெற்ற அனைவர்க்கும் பெரும்பிணிதான் நீங்கிடுமே . ஐயன் முகம் கண்டு அழும் நி லம் நலம்பெறுமே . அணிசேரா நடுநிலைக்குள் அடியெடுத்து வைக்கும் ஐயன் அகல்விளக்காய் ஒளிர்ந்துடுவான். அகிலெனவே மணம் பெறுவான். துளியும் நலம் பேணா துங்கனிவன் மணிமகுடம் சுட்டுகின்ற மாட்சி கண்டு மகிழ்ச்சி யுற்றேன்.
வெண்டலையார் விழிதிறந்தால் வீண்போகா தத்தனையும். ஐயன் பண்பலையால் அகிலமினி பூத்திடுமே! அன்பொடு அறம் பொதிந்து அனைத்துலக குடி உயர்ந்து இன்புறும் மனம் கண்டேன். என்னருள் வாக்குதான் என்றென்றும் பொய்க்காது.
பாகம் 63
முந்தியோர் முறை மூலவராணைக் கிணங்கி கறையிலா கன்னிக் கருவுறைந்து உந்திக் கனியாய் உதிர்ந்து உயிர்மேய்ப்பனாய் மந்தைக்கு மெய்வழியிட்டு பொல்லார் பொய்புனைய புண்பட்டு குன்றமீது குரிசில் குற்றுயிராய் மரித்தும் மரிக்காது மற்றொருநாள் உயிர்தொளிர்ந்து ஓரிறையின் மகனாய் உறைந்த மறையுடை முகனுமிவனே. வலிமைப் படை கொண்டு வானவர் துணை நின்று புவியை அரசா ண்ட பொன்மனச் செம்மலென்று நபியாய் தடம் பதித்து நன்மனம் பல வென்று விதியால் விடமுண்டு வீழ்ந்த வரலாற்றை வேதம் மறைக்காமல் வீரம் புகட்டுவதை யாரும் மறுக்கவில்லை யானும் மறக்கவில்லை .
விண்ணகம் மணக்கும் தென்னக தேவன் அறுமுக னாதிவேலொடு அன்று வினை தனை தீர்த்த நறுமுகன் மீண்டும் எம்மவனாக மண்ணில் தோன்றி விண்ணர சொன்றை மண்ணிலமைத்து வேஇயி வேதமறை இலக்கண முறையினை வார்த்து தெக்கணம் காக்கும் தேவதேவா முக்கண்ணா நீயிதை முன்மொழியாயோ.
அள்ளி தந்து அன்பகம் தோறும் பள்ளி கொண்டு கிடப்பானிவனே .பக்தி மழையில் நனைவானிவனே .கன்னன் பெருங்கொடைத் தருவெனவே செங்கமல கைத்தலம் கொண்டே பின்னம் வந்த தருமனினும் பேரருள் நீதி காப்பானே. தென்னகம் அருந்தும் தமிழ் தேனை பன்னகம் பருகி சுவை யறிந்து பாரே போற்ற வைப்பானே.
மன்னர் மன்னன் மலர் கையுள் மயூரம் மணிமுடி தரித்ததனை இத்தரித்திரன் தவக்கண் கண்டதனை திருமால் திருமுடி என்றேயான் இப்பெருமாள் திருவடி பணிந்தேனே . மையகையுள் மலர்ந்திருக்கும் மயக்கும் மரைப் பூவிதழ்களெலாம் ஐயன் வைகுண்டர் சின்னமென அடியேன் கண்டேன் அரும்பொருளே.
நற்குணத்தானிவன் பொற்குணத்தான். நான்மறை க்குள்ளே பள்ளிகொண்டான்
அந்நான்மறை யோன் நல்லுதயம் தோன்றுமிடம் பாம்புரிக்கும் தோல் கிடக்கும் பன்னீரெனவே நீர் சுரக்கும் உடையொன்று புன்சிரிக்கும் கீழ்திசையில் மதம் பிடித்த தென்பொய்கை அரவணைக்கும் மண்ணொன்று மணம் கமழும் மாட்சியுடை காட்சியினை மாதவத்தால் யாமறிந்தோ மிதை மாதவனும் நன்கறிவான். ஆதவன் இம்மெய்யறிவான்.
ஆறுசுடி பொய்யுரையார். மாலினியே கைபொந்து சூலெனவே காத்ததனை வேலவனாய் வடவெடுத்து வெற்றிகளை குவித்தவனை நல்லோ ரறியாமல் நாயோர் நன்கறிந்து பேயோருடன் சேர்ந்து பேரிடர் தருவாரே.
பாகம் 64
செனீதி சேசெசெதி சென்னீரருந்தி சேர்த்த செல்வச் செருக்கில் மன்னுயிர்க் கிரங்கா மார்புறைந்து பொன் குவிக்கும் கண்குழிப் புண்ணுடை பொல்லா முதலைகளை கெளவி மெய்வளர்க்க காலன் அனுப்பிவைத்த வேடுவனொருவன் விடியலுள் வந்து நிற்பான். பூமகள் ஊணெடுத்து பொல்லாரை உள்ளிளுத்து பொன்னகம் பூரிப்பாள்.
பாருலகின் கருவறையில் படுத்துறுமும் பகலவன் பண்புடை தீஞ்சுனையோ தரை யெழும்பி வானுயர வந்துவீழும். வளங்கொட்டும் நிலமெங்கும் கனகமென உருகியே கண்பறித்து பெருகியோடும். ஆழிக்குள் துயில் கொள்ளும் அருமலர்கள் தலை தூக்கி மேனியினை பரப்பியே மேல்விரியும்.
ஆதவன் குணக்கே ஆழ்கடல் அசைபோ ட்டுண்ண நன்னிலங்கிட்டி நெடுநீர் போர்த்துமே . எண்ணிலா மண் நடுங்க இருந்துமையம் கொண்ட மாதுதன் பெருவாய் பிளக்க அன்னை அலுகுரல் விட்டழுத வண்ணம் வந்த அருமாந்தர் பலர் பின்னும் அழுதபடி பெயர்ந்த பெருங்குய்யம் தன்னுள் புதை யுண்ட பூபோன்று நீருறைந் துறங்குவரே . அன்றுமே தினியில் தலை விரித்து மேனிலமாய் மனம் களித்த வீண்கர்வ விந்தை நிலமத்தனையும் ஆழிக்குள் பள்ளிகொண்டு அசையா துறங்குவதை ஓசையின்றி நானிறங்கி ஒடுமீனாய் கண்டேனே!
வானுதிர் கனல்கனியோ வல்லமை பூப்பந்தை கண் இமைக்கும் நேரத்தில் கருணை யின்றி சிதைப்பதையும் நிலமெனும் குலமகள் நிலை குலைந்து நெடுவடம் சாய்வதையும் தரணியெங்கும் தாங்கவொண்ணா பிண்டக் குவியல் பிணந்தின்று கூத்தாடும் புழுக்களையே உண்டுகளிக்கும் கோட்டான்கள் கோடமர்ந்து உரக்க கூவுவதை அண்டையிலே யான் நின்று அகச்செவியால் கேட்டேனே.
நண்டு புதைந்தது போல் நன்னெறியர் வளையெடுத்து மிஞ்சிய எச்சத்தில் மீட்ட முற்றத்தில் னிவிழிநீரிவெ வாமும் வரமனிதர் விழி நீரின் வெப்பத்தை அறமுனியாய் உணர்கின்றேன். நல்லரவ ஆரநாதர் அழல் கண்ணெரிக்கு முன்னர் உள்ளிரு ளொழிந்துவே ஒளிவிளக்கை நீயேற்றி உய்யவழி காண்பாய்.
ஆசுபொருள் குவித்து அறம் கொன்று அகம் கெட்டுக் கறை படிந்து காலனேவும்
ஓசையிலா ஓநாய்க்கு உணவாய் போயிடாமல் ஆசைதனை கழுவேற்றி அவனடி பணிவாயே. நெருப்பு முளைவிட நெருப்பேமழையாகும் கருக்கல் நேரம் ஒரு கண்ணீர் காலத்தில் மண்ணெரிந்து மாளுவதை மன்னுயிர்கள் தேம்புவதில் மாண்புடையோர் மீளுவதை நெருங்கியே நான் வந்து நேரில் கண்டேனே.
ஐயா அறவேளே அனைத்தும் அறிந்தவனே உய்ய வைத்தெம்மை உயிர்க்கவைப்பாயே. மெய்யாய் நடப்பவர்கள் மேதினியில் சிலருண்டு. அவர் மெய்தான் எரியலாமோ. பொய்யர் பூக்காமல் பொசுங்க வழிசெய்வாய். ஆட்டு உடை தரித்த ஆயிரம் ஓநாய்கள் மேட்டுக்குடிதனிலே மீண்டும் சீறலாமோ. காட்டுமனம் கொண்டோர் கோட்டை தனிலமர்ந்து கொற்றவர் கோலத்தில் அற்ற குடிதன்னை குற்றுயிராக்கலாமோ. வாடும் பெற்றோரை வதைக்கும் இளவல்கள் விதைத்த பாவம்தான் வீணாய் போய்விடுமோ .
கூட்டுக் கயமையுடன் குறுக்கிடும் கலிப்பேயை தாக்கும் திறன் கொண்டு தகர்க்கும் மறம் கொண்டு வேளின் தாயாகி விரைந்துகாப்பாயே. கண்ணில் கருணை கொட்டும் புண்ணிய கோடிகளே பொய்யினை புறந்தள்ளி மெய்யாய் அகனமர்ந்து மேதினயில் அறம் வளர்த்து ஐயனை அடிபணிந்து அக்கரை சேர்ந்திடுக.
பாகம் 65
உம்மை கடலுள் உடனிருந்து காத்தது போல் இம்மைக் கனலுள் எரியவிடா தெம்மை கண்ணிமை காப்பதுபோல் மீட்டெடுத்து மறுமை எடுக்காது மாபாவம் அண்டாது பிறவிச்சிறைவிட பேரொளி சிறகளித்து விண்கலக்க வேண்டிய விழிப்புடன் கண்ணயரா காணுகின்றேன் உன்னொளியை நன்நெறியை மன்னெறியாய் நாளும் அமலாக்கும் எம்மிறையே பரம்பொருளே
எளியோர்க் கருளிடுவாய். ஈரேழ் பிறப்பெதற்கு ஈசன் துணை யிருப்பவர்க்கு. கொன்றைப் பூந்தலையன் உந்தையா யிருந்தும் எந்தையாய் அமர்ந்து எழும் குண்டலினியை விந்தை அடக்கியான் வித்தை கற்றுணர விந்தை செய்தானே . அரவமெழுப்பி அவனில் கலப்பதற்கு பருவம் பாழ்செய்யா பக்தி பயின்றேன் யான். முக்தி யடைந்தே யான் மூத்த தமிழெடுத்து முத்தாய் உதித்த முல்லை நில ஐயன் குறித்த அமுதனைத்தும் யான் இங்கு அள்ளித்தருவேனே .
எழில் தோற்றம் ஈறுவரை இணைபிரியாதுடன் வருமே எம்மையன் முகத்தோற்றம் முரடரையும் முட்டியிட வைத்தடுமே .நிழலாக தொடர்கின்ற நெருப்பொத்த இன்னலது அகலாது அகன்றுவிட அரை நூற்றாண்டாகுமென புனல் சடையன் சொன்னதனை பற்றற்றோர் பூஞ்செவியுள் பதுங்கிய ஒற்றனைப் போல் பதறாது சொல்லுகின்றேன். சிதறாது செவிசாய்ப்பாய். செவ்வேளருள் சேர்ப்பாய்.
காணும் காலொன்றில் கணுக்காலிடதில் களிறு நோய் கண்டு அருளான் தயவாலே அற்ற இடமறியா அகன்று மறைந்ததுவே . இல்லம் அருகமைந்த எழில் பொய்கை நீருள் இடறிபோய் வீழ்ந்துடனே குலமாதர் உயிர்காக்கும் விதி பெற்று உய்த்த மழலையாம் பின்னொரு நாள் விளையாடி காலிடறி தடுமாறி வீட்டின் முன் வீழ்ந்ததுலே வலப்புயம் பெயர்ந்து வலிதந்து புறம் வந்து அகம் சேர்ந்த அவலமிவன் பதின் பருவம் என்பதனை தினிபோயே பக்கத்துல் நானிருந்து பார்த்தது போல் அப்படியே ஒப்புவிப்பேன் அறம்பாடி சித்தனிவன்.
கொடும்தலை ஏற்றதொரு கோரப்பூனை ஒன்று தலைப்புறமமைந்து நெஞ்சக நஞ்சுடனே அடும் நோக்கில் ஐயன் தலை தகர்க்க அலையும் மாந்தருடன் அணிசேர்ந்து முயன்றாலும் மரணம் விளையாது மாண்ட சதியை விதிவென்று ஐயனை அறம் காத்தகதையை அடியேன் நன்கறிவேன். வணிகர் மன்னனொருவன் வன்முறை கள்வனறிவேன்.இவன் பொன்னனென்றொரு பூமரைச் சின்னத்தான் சிறகினத்தானாய் உதித்தான். அங்காடிகளிணைத்திவன் ஐயன் மெய்யரிய முற்பட்டான் முத்துநகரடுத்தா னெனும் முழுப்புரட்டு தொழிலுடை முரட்டு உருவத்தான்.
பாகம் 66
கனக வழியருகில் கானகம் அடுத்ததொ ரு உந்துமரை யுதித்து உயர்மறை யேந்தியவன் பேருடை புரம்தனிலிவன் பக்தி பரம்பரையர் வெற்றிக்கனி உதிர்க்க கண்டேன். பின் சக்திதாயூரில் பக்திப்பயனாக காத்த பூவாய் கொண்டேன். இருட்டில் பதுங்கிய திருட்டு வேங்கை போல் திடீர் பாய்ச்சலை துவங்கியே புதிராய் வருமென்பேனிதை புரியார் புண்ணுடையோர்.
புரிய கண்ணுடையோர் அறிவர். புருவம் சேரொளி பூத்த பேரொளி விழியுடை பூமான் பட்டு கம்பளம் அருகில் பார்க்க அரவமின்றி பதுமம் பதிந்த பொய்கைக் கரையினில் மரைபோல் விரிவானென்பதனை மருளாளர் ஒருவரும் அறிகிலார் அன்றி அருளாளரறிவார் இதை தூரத்தே தூங்காது விழி பூத்த துருவன் நன்கறிவான் பரம்பொருளே .
உதயம் கண்ட இவனுறை விடம் தொட்டு இமயம் இணையுமே . இவ்வகிலம் முழுதும் உழலும் தீவினை முற்றிலும் அகலுமே .தங்கப் பாதையிற் சிசீறிகே சிங்கம் சீறி எழும் பாங்கை அங்கே யான் பார்க்க பேறுபெற்றேன். அறனே இது நம் சங்கம் காக்க எம்மங்கா நிலம் தன்னில் பொங்கும் புகழ் ஓங்க பொலியும் அரசே . துறவறமூறி மணமறியார் அகம் தெளிந்தவன் வரவறிவர்.அகல் விளக்காய் இனமறிவது இவரி யல்பே .
ஆறுகளடிசுடும் அடிச்சுவட்டில் நீரூற குடம் நிறையும். வானழுது தீர்த்தாலும் வாய்ப்பின்றி பாரழ பயிராகா பாழ்நிலையை புவிபெறும். பசி தாங்கா மென்வயிறும் மீளா வலிகொண்டலறும் காலம் ஐயன் அடிவாரமேறி அடியெடுத்து வைத்ததற்கு அறிகுறியை உணர்த்துமே .
கரும் பிண்டம் வாராது கனல்வயற்கு உரமேது.புனலோடும் பூங்காவும் சொல்லாது குருடாகும். பூவுலகே பழுதாகும் பொல்லுலகாய் போனதற்கும் நல்லோர் நலிந்ததே இந்நானில அவலமென்று நாதனென் செவிசொன்ன சேதியை யான் சொன்னேன்.
இத்திரு நாட்டுடை காலம் கொண்டொரு ஈனன் ஊடகமொன்று ஐயன் அமயொற்றி தொய்யா படையமைக்க குடக்கே பழுத்த கோவை பழத்துள்ளில் கொங்கையில் பள்ளிகொண்டே கோட்டை சிவவமைத்து சித்தன் தோற்ற சீழகம் கெட்டவன் நேசக்கரமிணைத்து நீதி யறுக்கும் பாசவடம் பிணைத்து பரமன் அகலை அடும் நோக்கில் வாடையர் பொன்னை வான் மழை தூவி தென்றல் இசைக்குள் தேவன் தசையெரிக்க பாவம் செயுமே பாராய் அறனே .
பாகம் 67
பாரேற்க வரும் ஐயன் பதினைந்தாம் வயதில் பரந்தாமன் பூசைக்கு பன்னீர் மலர் மாலை கொணர தினம் தோறும் மனமுவந்து திருப்பணி புரிவான். அதுபோன் றொருநாள் அரிபக்தி கொண்டு மிதிவண்டி ஏறி மின்னலாய் பறக்க நெடுஞ்சாலை னிரிமோதி வீபோ தன்னில் வரும்பரி மோதி தரை வீழ்ந்த போது நெடுங்கம்பி குத்தி ஒரு காயம் கொண்ட தொடையுண்டு கண்டேன். அது இடமென்று அடியேன் அகம் கொண்டறிவேன்.
நாற்பதின் நடுவே (ஏறத்தால 20 வயது) நெய்தல் பெருநில நெடுஞ்சாலை தன்னில் பரியோட்டும் போழ்ந்து சதி செய்வர் கயவர். நி லம் வீழ்ந்து ஐயன் எறுகாயம் கொள்வான். அது தரை வெட்டியபோது அதில் கிட்டிய காயம் விரலகலம் கொண்ட வடுவாய் கொண்டு தாடிக்குள் புதைந்த தாடையின் நடுவே நின்று மொழியுமே மெய்யை.
அக் காவியத்தலைவன் வரவே கைகூப்பி நிற்கும் எம்நிலமே ஏவிய வினைகள் எல்லாம் எதிரிடாதழியும் திடமே . எந்த பாவியும் மீள்வதும் இலமே பக்தி மெய்யோர் வீழ்வதும் இலமே .பாதகர் ஏவிய கணைகள் படுதோல்வியில் முடியும் இனமே மேவிய ஐயன் வரவே நல்லா வியர் நிற்பது கண்டேன். அவர் முப்புறம் உப்புடை வங்க கற்பக அன்னை அருளடி தெற்கே நீருறை நீணிலம் தன்னில் நின்றுலா விடும் முன்னவரென்றே எம்மூதரறிவே அதைச்சொல்ல தித்துக்கும் திருமுகனை காண அத்திக்கிலே கைகூப்பி நிற்பேன். பொற்புடை தேவனே வருக. யாம் புண்ணியம் புரிந்தோமே வருக.
விண்மீனை அம்படுத்து விழ்த்தும் திறன் கொண்டதொரு வில்லாளிக்குற்றதரு உம்மை நட்புக்கு உள்மெய் திறந்தானிவன் இம்மையிலே எள்ளவும் பொன்னுமில்லை இல்லறத்தா னிவனிடத்துல் எள்ளளவும் பொருளுமில்லை மறுமை தரும் மாவீடுடை எம்மையன் இம்மையிலே இல்லமின்றி ஏழ்மையிலலைவானே. எம்பொன்னையன் உடமையாக புவிபரப்பில் உரிமை கொள்ள ஊசிஊன்ற நிலமுமில்லை புலமுமில்லை .மெய்யய்யன் மெய்யினிலே கந்தலன்றி கசக்கிக் கட்ட மீதமேதும் மிச்சமில்லை. கைகாசில் சொச்சமில்லை இதை கிறேணியேணீ சேதி காணுகின்றேன் கண்மணியே .கண்ணீர் சேத சொல்வேன்.
ஆயின் வருமெம் வளநாளில் இருள் சூழிவ்வுலகில் இரவியென எழுவானே. இம்மா மன்னன் தயை இன்னலகன்ற நல்லோ ரெல்லோரும் மண்வீழ்ந்து மண்டியிடக் கண்டேன். விண்ணகமே பணிந்தனுப்ப மண்ணுலகம் வினை முற்றி மாந்தரிங்கு அல்லலுற்று கனகன் கால்மரைக்காய் கண்பதித்து காத்திருந்தே னிவனை கயிலையன் கரம்பிடித்து கன்னிக்குமரி மயிலையும் காவல் வைத்தவளை அன்னையென அற்பணித்து உயிலெழுதி உலகளித் தானிதை கண்விழித்தோ ரறிவாரே . பீலிக்குய்ய பெண்விழியில் வீழ்ந்த பீடைக்குறி யோரிவனை பிறவியுலும் உணராரே .
பாகம் 68
பைம்பொன் கறுக்காது. பாழுடல் காக்கும் பட்டிளமை நிலைக்காது. வேழப்பால் தன் இன்சுவையிழக்காது. வைரம் போல்காத்த வளக்கட்டை தனை செங்கனல் கெளவி தின்னும் முன்னம் சித்தம் நீ தெளிந்து சிவனடி சேராது முக்திக்கு வழியேது மூடர்கூடமே. நேசக்கரங்களுமே நிலையில்லை இங்குனக்கு. நீசக்கரம் நிறைந்த நீளூலகில் வந்தமைக்கு
வேசக்கரங்களாகி விரைந்து மாறிடுமே. மருந்தும் மேலுறைய மருந்துக்கும் உதவாது. மாமருந்துண்டோர்க்கே மறுமையிலா செழுமையுண்டு. அவ்வருந்தேன முதையான் அறிந்தே னவன் தீர்த்தக்கரை மண்ணில் தில்லைக்கு தென்மேற்கே ஏழைந்து காதம் நிலம்கடந்து முல்லைக்கு பேர்போன முப்பாட்டன் புலம் தாண்டி முன்னறிந்த சேரனெல்லைப் புறத்தில் திருமால் துயில் கலைத்து பீறிட்டோடும் வட்டாற்றின் தெற்கில் இப்பெருமானிறங்கும் பொற்தலம் தென்பட்டதெம் கண்ணிலொரு மையக் கோடடுத்தமான் கோடிடையில் இவன் விரியும் வனமிருக்குமென விண்ணறிய வாக்கசைத்தேன்.
இனியான் வீழும் விழும்பில் வருமுன்னம் வெண்டலையான் திருவடியை பற்றி பயனடைவேன். ஈன எமனுக்கு இம்மையில் வேலையில்லை என்றே வேலனை வரவழைத்தே என்னுள்ளில் விருந்து வைத்தேன். தந்தசூகம் ஆடும் நீல கண்டங்கருத்தோன் அங்கென் துணையிருக்க இங்கென் புருவம் இணையும் பூங்கண் திறந்தே கண்டேனிவன் நின்றுலாவிய நெடுவரை அருகே நன்னீருறை பூவிழிகள் நிறை காதல் ததும்ப வெண்மதியொளிரும் பெருமாள் பெரும் பொய்கையுடை அந்தப்புரமாய் அனந்தன்புரிக்கே அரசன் புணரப் புகுந்த
பதுமமுதித்த நாபன் புரமே .
வீழ்ந்த விதை புவிதனில் வீரி யமுளை தள்ள வான் வரம்பெற்று வாழ்த்த வருவானே. விளை பயிர்கள் உரமின்றி தானாக எழும்தேனே. வாட்டிய கொடுங்காலம் வளவேள் வருகையுடன் நிறைவுபெறுமே. அதன் பின்னறங்கொண்டு அகனமர்ந்து மகிழ்வுடனே வாழ்வோமே. வான்மழையும் பொய்க்காது. வன்புயலும் வீசாது.
ஏன் என கேட்காது இன்னல்கள் பறந்துடுமே. கானுண்ணம் கதிரிலில்லை . கண்ணுடையோர்க்கிது புதிரில்லை . கனல்கக்கி நிலமுருக்கி நெருப்புமிழும் எரிமலைகள் நின்றுறங்க கண்டேனே . இவை யனைத்தும் ஐயன் எழுந்த பின்னர் ஆரவாரயில்லாது அடங்குவதை அறனே நானறிந்தேனே .
குடந்தையில் என்பர் சிலர். குழந்தை அங்கில்லை. கொங்கில் பிறப்பானென்பர். கொழுந்தங்கு தளிர்ப்பதில்லை . திருவிடந்தைக்கு அருகே என்பர். திருமுக மொளிர்வது திரைகடல் மும்முனையில் தென்பாண்டிக் கரையில் கன்னிக் கனியிறை தென்புலத்தில் சிசீரிடு
சிவத்தை யடையாது சீரிளமை குன்றாமல் உடுக்கை பிடித்தவனை உள்ளத்தில் நினைந்தே புலத்தை ஆள்வாளே . பூவையர்க்கரசி யவள் நின்றருள நிறைந்த ஞானியாய் நெடுபாதம் பக்கத்தில் நலமுடன் இவனுதிப்பான்.
பாகம் 69
பஞ்சமனொருவன் குளக்கரையில் பைம்பொழில் தாலாட்டும் தென்மேட்டில் பணிக்கன் விளாகத்து புத்தம் வீட்டில் அஞ்சாநெஞ்சர் குலந்தன்னில் அரி பரந்தாமன் அவதரிப்பான். நஞ்சை சூழ்ந்த நந்தவனம் நஞ்சுறை நெஞ்சர் நிறைந்திருக்கும் நாணயம் நீதி கொன்ற வனம் என்றே யறிந்தும் எம்பெருமான் இறங்கி உதித்த இடமென்று யாரும் அறியா இருந்தாலும் யாமே அறிவோம் பரம்பொருளே .
சேற்றில் விரிந்த செங்கமலம் அச்சேற்றின் நாற்றம் பெற்றி டுமோ? ஆற்றுநீர்தான் வீழ்ந்தாலும் அதன் ஆழ்நிலம் அள்ளி அருந்தத்தரும் போற்றும் ஈகை குணக்குன்றான் இப்புவியில் வரமாய் கிடைத்தானே .ஊற்றுக்கண்ணை யான் கண்டேன். அதில் உலவும் செம்மீன் இது என்றேன்.
உவர்நீருறைந்த ஆழிக்குள் ஓடிடும் விண்மீன் ஏதென்று யாவரும் காண்டுலர் ஆனாலும் தேடிய நாதன் தாமரையை என் இருவிழி காண திகைத்து நின்றேன். கடுமலங்கழித்து கைத்தலம் துறந்து காமனை வென்றவனிவனன்றோ . நெடுமரம் நடுவில் நேர் மகன் உருவில் ஒளி மரமாகி நாவாய் ஒதுங்க அருள்செய்வான்.
நெய்தல் அலையுள் மூழ்கா வண்ணம் நெஞ்சோடணைத்து கரைசேர்பான். ஈசனின் படைக்கெதிர் எப்படை வரினும் முப்புரமெரித்த அப்படை கொண்டு ஆண்டிடுவானென அறிந்தேன் அமுதே. அரும்பொருளே. தீது கெளவா தேவரனைய தெகொலோகொடு தெள்ளகம் கொண்ட நல்லோர் கொண்டு மெய்வழியமைப்பான் மேதினியில்.
தாயகமுடையோன் தயை கொண்டோன்.தக்கநேரம் கைகொடுத்து பாரெல்லாம் இணைய பாடுபட்டு பரம் செல உலகே பதம் தொழுமே .தை மலரொன்று தானே விரிய தழலாய் துளிர்க்க தவறானெம் தவமகனே .மெய்யாய் கண்டேன். மேதினி துயரருற வெய்யர் விதைத்த தீவினையே விளைச்சலை கொண்டு குவித்ததுவே.
ஐயன் கால்தடம் நன்கறி ந்த அரசுப் பூனைகள் துப்பளித்து தீயேருடனே சேர்ந்திருக்கும். பாயும் சட்டம் துணை போக ஏவல் பூனைகள் இடை மறித்து ஐயன் குரலை பதிவெடுத்து பேயோருக்கு பணிந்தனுப்பும். காவிப்பொய்யர் நன்கறியும் நாளும் ஐயன் நகர்விடத்தை . கன்னிக்குமரி கைத்தலம் பொதிந்த காஞ்சனத்தை அரசவைக் கயவரும் அறிவாரே. ஆளுமரசனும் இணைவானே.
விடங்கொ ண்ட பாம்புகள் இடனறியும். வீரி யம் தாக்கா வேங்கை மகன் இறனுக்கு ஈடிணை இல்லை. யன்றோ தேவர் தேவனே பணிவானே . காசினை பெற்று கண்ணிழிந்த வேசிகள் கூட இடைமறிப்பர். தூசாய் நினைந்து தடை தகர்த்து இத்தூயோன் துள்ளி வருவானே.
துருக்கர் இனத்து கருநெஞ்சர் தொல்லைகள் ஐயனுக்களிப்பாரே .நபியின் நன்நெறி பயிலாமல் சிலர் நாயினும் கீழோரானாதனால் உத்தமன் உதிரம் உண்பதற்கே ஓநாய் வடிவில் அலைவாரே. சிலுவை களணிந்த சிற்றினமும் சேவையர் வேடம் பூண்டுநிதம் ஐயன் உறைவிடம் அருகினிலே அருளகம் அமைத்து சதிப்பாரே.
தீர்த்தங்கரனார் மரபினரும் திருமகன் தலைக்கு குறிவைத்து பார்ப்பனர் கூட்டத்துடனிணைந்து பாவம் குவிக்கும் இச்செயலால் பாதகபொறியுள் விழுவாரே. காவியன் கை விட்ட பாவியனை காவியமெனவே ஏற்றெடுத்த கரியமர் பீதகனருளாலே இவன் காசினியாள வருவானே.
பாகம் 70
எழுமலை எழில்மேவும் எம்பிரான் அருள்பொழி தென்மாயோன் நறுமலை நம்பிராயர் நாடும் நல்கூத்தன் மலையுறை திருப்பரப்பினருகே மாலனாய் அரிதுயிலும் ஆதுராயனுக்கு அருவித்தறியில் ஆர்ப்பரித்து ஆடை வெள்ளியாய்
அழகுற நெய்யும் நெடுவழி நெறியர் நன்னிலங்கீழ் இரிபுணரி வாலைக் குமரியை எட்டிடும் முன்னம் வையத்து வான்மகன் தென்படுவான். யானே வணங்கும் எண்திக்கு அணங்கு கோமிட்டு காத்த எம்பிரானாய் கண்டு தொடும் மாந்தர் துயரறுக்க துவழா தெழும் வான் நம்பிரான்.
மெய்த்தலம் வலதின் கைத்தலத்துள் கேகய அலகின் மேற்பரப்பில் மறையோன் மலையின் கீழடியில் தோகை மீனாள் கண்ணெழிலாய் தொட்டு இணையாய் இருந்தாலும் கயல் வாலமைப்பு பங்கயத்தின் கனியிதழ் உருவில் காட்சி கண்டு கற்றதை கொண்டே பாட்டிசைத்தேன்.
வெள்ளி பனியும் இங்கு வழிவதுல்லை .வேந்தர் வேந்தனே இங்கு இருப்பான். அரியை அணைக்கும் ஆலயங்கள் அள்ளி அணைத்திட காண்டிலையே . பள்ளி தலங்கள் பல இருந்தும் பள்ளி கொள்ளாது படுத்திருப்பான்.பாதை யோரம் பசி தீர்க்க பகலவன் உருக்க யாசப்பான். முள்ளின் மீது நடந்தாலும் முள்ளாய் உள்ளம் காணவில்லை .
நம் உள்ளில் உறைய வருகின்றான். உலகே நிறைய உவகையூட்டி பெருவளங்கூட்டி பேரரசமைத்து அறனார் இயக்க அமைவானே. கண்ணா என் கனிமுகம் காணா காரிகை யொப்ப கார்காத்து காடுகள் மெலிய கூந்தலில் வெள்ளி பூக்காது கூதிர் இழந்த கைம்பெண் குன்றுகள் விண்தொடுமே .வேண்டுதலேதும் பயனின்றி வெம்பும் டுதெ வீதி சுடுவன மாவதனால் தென்றல் வீசும் திங்கள் கூட தீயில் குளித்து திணறிடுமே .
போரெழும் சூழலை புறந்தள்ளி பூக்கும் அமைதியை கொண்டு வந்து பாரழா வண்ணம் பார்ப்பானே பைந்தமிழ் நாடன் காப்பானே. ஆலையைக்கூட அரை நொடுக்குள் ஆலிலை க்குள்ளே கொண்டுவரும் வேலை கற்றவன் இவ்வேலன் விரும்பும் செயலை யானறிவேன்.பாறையயைக் கூட கூழாக்கும் பக்குவமறி ந்த மாமேதை பார்க்க கோழைய் இருப்பானே. மாலைகள் மலையென குவிந்துட்டே மறைத்தமரை முகம்காணாது வானவர் கூட அழுக்காற்றில் வந்து குளித்ததை கண்டேனே. குறிஞ்சி காக்கும் குறவஞ்சி செவ்வேளிறங்க மருதம் செழிக்கும் மாநிலம் கொழிக்கும் வருணன் மதக்கும் வான்மகன் இவனே என்றருணன் கூட ஆரத்தழுவி நலமே புரியும் நிறை நிலம் அமைய நெஞ்சே இவனை தரணி புகழ்த்தும் தருணம் வருமே ..
நான்முகன் நன்மகன் நாத வீணை .மேன்மகன் நபியார் இன் வழிபாதை வேதமொழியும் இருப்புகழ் மேதை விண்ணொளி இறக்கிய நெறிமானாகி மண்மீதுவன் பொன்னடி பதத்த மண்ணடியது படமெடுத்தாடும் பாம்பணி நாதர்க்கு சாமரம் வீசும் தென்னல் பூக்கும் திக்கில் இருந்தே வன்புயல் வடிவில் வானதி பொய்க்கா தேன்புகழூரின் தீம்புனல் நிலத்தில் வாழ்வாங்கு வருவான் வல்லாண்மைமிக்கொரு தீதறுக்கும் திறனை கண்டு தேவர் திருவாய் தெவிட்டாது புகழும்.
வேதம் அழைத்து விளைவித்த அந்நா தனுலவும் நகர்புறத்தின் நான்காம் உருமலர் தோற்றம் என் ஞானக்கண்ணுள் உறையகண்டேன். நெறிநில முள்ளில் நிலை கொள் யெளவனர் அதிலொளிர புதையல் புரியென சொல்லாமலதை புண்ணிய பொதியென சொல்வேனே. நெடுளி றொநித நெடுங்களிறொன்று நிலத்தில் பாய்ந்து ஐயன் நிலத்தையும் அலுக்காது மேய்ந்து அது விடும் நிலமாக சிறுகுறுநிலம் மிஞ்சும். அந்நிலம் ஆங்கு கதிர் எழும் கழனி என்றே அடியேன் அன்றே யறிந்தேன் எந்தன் அறனே.
பாகம் 71
திரநெல்காத்ததெய்வப் பொருநை பெற்றோர் பிறை சூடனுடன் நற்றுணை தருமதியன்னை தவப்பேரருள் பெற்றோனையான் கண்டேனிவன் வளவன் சேரனாண்ட வரை சித்தரகத்திய வான்புகழ் தென்னிலம் தனில் உலவுமிட மது மூவா முகுந்தன் மூவாயிற் தோறும் மும்மேனி யொளிர தாயாருடன் தக்கருள் பாலித்து எம்மாலாய் உறங்கும் சீரார் மாசுணம் கண்டேனங்கு மார்த்தாண்டக் ௧திர்காமன் மறுபிறப்புற்று மன்னில் வேரூன்றி யார்கண்ணும் படாப் புதிராய் வினை வெல்ல விதித்த கடனென யானறிவேன் பேரின்பப் பெரும்பொருளே .
பரந்தா மாநின் பவளத் திருமார்பில் திருமகளுறைந்த சேத மெய்யெனில் நின்புகழ் ஓங்கும் பொற்பா தம் தனில் யாமுறைந்தது இயல்லெனில் நின் வட்டாற்றிற்கருகே வந்துதுத்த எம்மானை வெட்டெனவே வெளியிட்டு வேண்டும் வரம் உடனளித்து நட்டாற்றில் விடாமல் இந்நன்மகனுக்கருள் புரிவாய். நம்பியுன்னை
நாடுகின்றேன் நம்பி நாதாவுன் நற்குறுங்குடி தென்னவனை நன்னெஞ்சர் ஏங்குகின்ற மன்னவனை பொற்கிளி பொதி திறந்து புவியாள நலம் செய்வாய் பூவுக்குள் பூவான பூநெஞ்சே .வானவரே ஏங்குகன்ற வரம் வாங்க வந்ததவனின் பூமுகம் தனை காண புண்ணியர்கள் ஏங்குவதால் அப்பூமானின் வதனத்தை புடம்போ ட்டு புறங்காட்டு. மலை மாடம் நீ கொண்டு நின் நெடும்பாதமலர் வருட நேரிழையுன் திருவமர எம்டுதிகிபெனே
உடுமான் உதித்த ஊருன் அருகிருக்க பெருமானே இவன் பெயரறிந்தேனது நின் துணையாள் ஒருபிறப்பில் தோளில் அணையாது பிரிந்த பேருடன் மாயோனுன் மறுபேரிணைத்த மாதவனுன் மேதகு பேரிணைந்தடுமே . ஆழிசூழ் அழகுலகில் எம்மை அரவணைத்து அரவணை மேல்துயில்கின்ற அருளாளா நின் புகழூர்க்கு புகழ் கூட்ட எம்மான் பூப்பது வெறும் வீண்கனவாய் போகாமல் கடைக்கண் காணும் கனிவுக்காய் பணிவுடனே கோருகின்றேன்.
பூமானுறை பொன்மன திருமார்பன் தனை பணிந்தே யாமேனோயா சித்து எம்ஈசனையே கேட்டேனவன் யோசித்தே பகர்ந்ததையே உம்முன்னர் பகருகின்றேன்.மாசில் மகனிவன் மலர் முகத்தில் நாசி கூராய் நற்குவளைக் கண்ளொளிர ஏறுநெற்றியுடை எம்மையன் சோரா மனமுடையோன். சூடும் மாலையுடன் வீறுநடை போடும் வீழா எம்மையன் ஏறொப்ப வீரியக் கதிருக்கு ஊறுசெய ஒருவரும் வேண்டும் வரம் பெறவில்லை .
இவனிற்கு முடிவு கட்ட எவனும் இவ்வையத்தே யாண்டும் உதிப்பதில்லை படிந்த காது பங்கய இதழாய் தோன்ற பணிந்த நெஞ்சு உடையோன் பாருக்குள் துணிந்த தோளுரம் கொண்டவனை அணிந்த நிலமகளை அடியேன் வாழ்த்துகிறேன். கனிவுக்கு இணையிலா கற்பகத் தருவாயிவன் கைத்தல செம்மை கண்டேன்.
பாரெங்கும் தேடியே பல்லாண்டு தவம் பயின்று ஈறில் சீரேருழவர் கழனி சூழ் செம்புலம் நடுவே இவன் ஊருறங்கும் ஓசையினை ஒருவகையாய் அறிந்தேனது முத்துடை சிப்பிபோல முகுந்தன் புகழ்பாடும் முறையோர் குல நடுவில் மூழ்கியபொன்னாகி மூலவனாய்யாம் தொழும் முக்கண்ணன் தூண்டும் திருவிளக்காய் தீதறுக்க மீண்டுமிவன் உதிப்பானென முன்னம் யானுரைத்தேன். மூடர்களே அறிந்துடுக.
பாகம் 72
வான்மதி சூடி வரமருள் வருணி மலரிவனை வேணி வாழ்த்துரைக்க வானக வாணனை வையமிறக்கி கோனென கோலோச்சும் காவிய பேரரசின் கெளரவமே விவாதை தீண்டிய வறிநிலம் மாற்றி கோதையர் புன்னகை கொற்கை மீட்கும் பொற்கை புண்ணியபூமான் வரவால் சோதனை யெல்லாம் சுருண்டு விழுமே .சொல்லி விளக்கிட என்னால் இயன்றள்ளிய தமிழால் ஆய்ந்த கவிபொழி தெள்ளாய் திரளும் கஞ்சுழை ரசத்தை செவியார் கொள்ள துள்ளும் ஓசை சந்தம் கொண்டு ஐயன் தோளுக்கு நல்கிடத்தானே சூட்டிடடு பண்புடை அறனே உன் பள்ளி எழுச்சி பாடிடும் மனமே .
தென்னரசாய் இவனை தெரிந்தே விடுத்த வீரதீரர் விளைந்த பூமியாய் கெண்டை கயல்கள் கடல்தளம் கீறி கேடிலா மண்டை கா ட்டும் மண்புகழ் சூலியாடீட செண்டையடி நாதம் செவிக்கினிமை சேர்க்கும் அண்டை கம்படி அன்னை தேவிக்கரை காதம் தொலைவிற் வடக்கே ஓடும் குடக்கில் குணங்காய் சேரும் கூட்டுச்சாலைக்கு இடம் கடந்து ஒடிவில் வடம் பிரிந்தோடும் நீருக்கருகில் ஒட்டிய சோலையுள்ளில் வானவர் கொட்டிய வாஞ்சை குமுதம் வரமற்று வற்றிய மேனியாய் கொட்டியாய் ஒளிர்வதை கூர்ந்து யான் கவனித்தோனது அகம் நோக்கும் ஆழத்துல் அம்முகம் எம்முகம் நோக்கக்கண்டேனதை எங்ஙனம் எடுத்துரைப்பேன்.
கண்டேன் கனகவேள் கண்மணியை முத்தோயம் முத்தும் கரைக்கு முக்கால் காதத்திற் முப்பெருமூர்த்தியர் பொற்பாதம் வணங்கி முன்னேறும் இருகாதம் தொலைவே முல்லை நிலமென முகர்ந்தே யறிந்தேன். காஞ்சனக் கோவிலொன்று கண்பறிக்கும் வட நாட்டில் வாஞ்சையுடன் வரும் பக்தர் நேச நெஞ்சை கொள்ளையிட வாசம் செய்வோர் பலர் கண்டேன்.
நீராழி பொய்கைசூழ் நெடுமண்டபம் அங்கிருக்க மோநி அலை மோதும் மாந்தர் கூட்டம் ஆங்கு நித்தம் கொண்டாடும் பெருவிழாதனைகாண உருமாலை உடையணிந்தோர் ஓயாமல் குவியும் வண்ணம் படையெடுக்கும் மாந்தரோடு உள்ளுறைந்த எம்மையன் படுத்துறங்கும் யாமத்திலே உள்ளொருவன் வந்தங்கே அடையாளம் காணும் முன்னர் ஐயன் முதுகிலேயே அறைந்த காலோடு அகமழ்ந்து விரைந்தானே .
அவனை அனுப்பிய கயவர்களை அடியேன் நன்கறிவேன். ஆனையேறி அழிந்த விதி அவனை தின்றதுவே .தென்னில வேங்கை வடநி லம் பாய்ந்து தின்னும் அமுதைத்தேடியே திரியும் திண்ணை கண்டு உள்ளம் கரைந்தேன். கண்ணீர் பெருக கனலாய் கொதித்தேன். பகலவன் உருக்கும் பாலை கடந்தே காதம் பலநூறு காலால் நடந்தே காவியம் போகிடக் கண்டேனுயிரே . மண்ணின் முன்னம் மறைந்துறங்கும் மாபெரும் புண்ணியர் கோடி பூச்சொரிந்து மண்டியிட்டு மண்ணை வணங்கியே என்று காப்பாய் இப்புவியை என்றே இன்முகத்தாலே யாசகம் செய்ததை யானே கண்டேன் மாசில் மறையே மறையாப்பொருளே.
எவரும் அறியா இரகசியம் தன்னை எல்லோரறியும் அவசியம் ஆக்கி பாகரும் தருணம் வந்ததை எண்ணி பாரே வியக்கும் நாளிகை கண்டு நல்லோர் நாளை உய்வது திடமே .நாதன் உள்ளம் கொள்ளை கொண்ட அந்நன்னன் வெண்டக வண்ணம் கண்டு நாடே வீழ்வது உறுதி அறனே .நன்னூலொத்த என்னுலே மொழிமோ .
பாகம் 73
கடன்பட உடன்படான் கறையிலா நம்மை யனுடன் விரிந்த பேயாள் வாழ்விற் கொளியேற்ற பெருமானுதுத்த மனை நிலையாது விலைபோகும். பெருந்தங்கம்
பேழைவிட்டு பிடி தவிட்டிற் கிணையாகும். வைரமும் யிவெகேநி வகையிழந்து வெறும் வறட்டிக்கே நிறையாகும். வான்மயிலும் வஞ்சனையால் வல்லூறுக் கிரையாகும் காலம் இதுவென்று கயவர் இனம் கண்டு ஞானம் தெளிந்தானே .
ஐயனவன் வேதனையை வெறும் விழியால் கண்டே நான் வெந்து நிதம் நொந்தேனே. மணந்த வீடும் பறிபோகி மண்ணில் புதைந்த மேடு ஆயிடுமே. புகுந்தவீடும் பலவாகி ஐயன் பூநெஞ்சை புண்ணாக்கும். மலர்ந்த வீடு நிலைமாறி
ஐயன் பதிந்த வீடும் கைமாறி விண்ணிலுறைந்த வீடே நிலையாகும். ஐயனுழ்வினையே இதுவாகும்.
திரிகடல் தொலைவில் திரை கடலோரம் கொல்லும் கோடுடை கொடிமரம் தூங்க அன்னை அவளே கேடுறை குலத்தின் பிடரியை பிடுத்து ஆட்டின் தலை போல் அறுத்து அகற்றி குருதியில் குளித்து கொண்டாடியே கொடியோர் துடிக்கும் பீடம் கண்டேன் துர்க்கைதாயாய் தீதற தோன்றி தாண்டவம் ஆடி தகர்க்கும் தொண்டை அவளே துவங்கி அவளே முடிப்பாள்.
மரையேந்தி மாந்தர் நெஞ்சில் விடம் பாய்ச்சி மண்ணறம் சாய்த்து மனிதம் மாய்த்தோர் தலை தனை இழந்து தரையினில் துடிக்கும் தளரா காட்சிகள் விழிக்குள் வீழ்ந்ததை வெளியே சொன்னேன். தீயோர் ஓழிந்து தெளிவை அடையும் தென்னிலம் கண்டு அகமே குளிர்ந்தேன் அறனே அறிவாய்.
தெற்கிலுதுக்கும் திறவேள் இவனை தீயாய் தூண்டி இத்திருமண் முதலாய் திக்கை ஆள திருப்பணி புரிவாள். திரிபுர சூலினி வரமுடன் இவன்மேல் திருக்கண் பாய்ச்சி தருமம் காக்க தரணியர் அனைவரும் எம்போல் மகிழ்ந்தே தன்னிறை வடைவர். இடரிலாதாயார் போர்வாள் என்று இவனைத்தானே அன்றே சொன்னேன் நன்றே அறிவாய் நாதர் நெஞ்சே. அமுதமொழியில் அருங்கவியாத்து இவனுக்குதவ எழுந்தேன்.
அறனே . புண்ணியருலகே புகலிடம் தருமே மண்ணிலுதுத்த மாசுறு மனமே இனி எம்மானாளும் இனிய உலகை செம்மையாக நானும் காண்பேன். இது உமைமேலாணை உலகே உணர்வாய் உண்மை யறியபுகன்றேன் கேளாய்.
பாகம் 74
அன்றனந்தன் புரியா ண்ட அரும் பரிதி பெயர் பூண்டான். அகனமர்ந்து அறம் சிதைத்த எட்டு வீட்டுப் பிள்ளைகள் எதிரியாய் முரண்பட்டு பிறவியெடுக்க அப்பாதக ஆடவரை பண்பாளனிவன் அரிந்து கொன்றான். முன்னமுதித்து முறையாய் வேணாடாண்டசின்னமாய் திகழ்ந்தவன் வாழ்வில் அரவமாய் ஆயிரம் பகைவர் படமெடுக்க நகுலம் ஆயினன் நம்மையன்.
அவர் இல்லத்து பைங்கிளிகள் இளம்பிஞ்சுக் கொடிகள் என நிறையுடை நேரிழையரை பஞ்சம குழல் கொய்வோர்க்கும் பரவிய கயல்வேடுவர்க்கும் கைமாற்றி கண்ணீர் பணம் பெற்று கன்னிகள் கற்பை விற்று ஞானம் கெட்டு குலம் தகர்த்த சாபம் பெற்ற கொடுமைகள் உடன்வர இப்பிறவியில் அவர்வழி இளவல்கள் இவன் எதிரியாய் பிறப்பெடுத்து குரல்வளையை நெரிக்கவே கொதித்தலை வார்கள் என பொதிகையாசான் சொன்னதையான் புறம் சொல்லி அழுகின்றேன். பொறுத்தருள்வாய் பரம்பொருளே .
கற்பகமேறி கனிரசமிறக்கும் கனமார்புடைக் குடிகளிலும் ஈழம் விட்டு ஞாலம் பெயர்ந்த இல்லாள் சூலறைகளிலும் ஊனுறந்து உயிரமைத்து இவ்வெண் வீட்டார் சூழற்சி பிறப்பெடுத்து சூழ்ச்சி பொறுப்பமைத்து அழற்சி ஒங்கிடவே ஐயன் கதை முடிக்க முயற்சி பல எடுத்து காலம் கடந்தாலும் கடுஞ்னம் தணியாது
ஓலமிடுகின்ற ஊழிப்பேயாய் அலைந்தே பாழும் கொடும் நாயாய் பாரில் பிறந்தே நன்நெறி கொன்றனரே .இளினிநீலி இவனை கள்ளிக்காட்டில் கன்னி நீலியுலவும் பூயிக்கருகில் நின்றுலாவியதை நெருங்க நான் கண்டேன். இப்பிறவிக்கடன் முடிக்க துறவிக் கோலமெடுப்பான். இறைவிடுத்த ஆணைக்கிவன் இணங்லியே செம்புலம் தன்னில் பிந்தியும் அவதாரம் பூண்டு பேரரசாய் உருவெடுப்பான் என்பதனை சிந்தை சிதறா துணர்ந்ததேன்.
மந்தைகள் அறிய அல்ல மானிட விந்தைகள் புரிய வேண்டும் மதி நீ எமக்கு தந்தருள்க. தளராது ஐயன் பின் நின்றருள்க. பகைசூழ் பாழுலகில் புகைமுகில் வண்ணனை புன்னகை பிறவியாய் கழைக் குழலூத கலிதோன்றும் முன் கண்டேன். பின் எழில் பீலித்தோகை மின்னும் அம்மலர் மன்னனை மற்றோர் மெய்யில் மண்மணக்கும் பவளமுல்லை திருமேனியாய் மனம் சிலிர்க்க யான் கண்டேன்.
தென்முனைக் கருகில் தேன் சிந்தும் கருங்கல் வரையுடுத்த கருநாகம் குடிகொள்ளும் கற்றாழை கரைகாக்க சீறும் சிற்றோடைக்கருகில் சீரழிந்த உற்றாருறவே உயிருக்கு உலை வைக்க உலகே வியக்கும் பொற்றாமரை புதையலை புடம்போடாது கண்டேனிது வெற்றுக்கதையல்ல.
விண்ணவர் வரம் வாங்க வேண்டுவோர் எண்ணம் தனை தாங்கி ஈடேற்ற மண்ணில் மெய்யிறக்கி மனம் கொன்ற வெய்யரினத்தின் வேரறுத்து விடக்குருதி உரம் தன்னை நிலம் நிறைத்து ஐயன் ஆடுவதை இவ்வாண்டியின் நெஞ்சம் நாடுவதாய் நன்கு நீயறிக நற்றமிழ் கூறும் நல்லுலகே .
பாகம் 75
ஆற்றுப்படை ஒங்க ஆறுதலை தாங்கி அகிலம் காத்தோனும் அம்புலியை தாங்கி ஆறுதலையோடு கூத்தை கலையாக்கி குதூகலித்தோனும் வேளமுகம் தாங்கி வேறுதலை வாங்கி நம் ஊறு தடுத்தோனும் நாளும் துணையிருந்து சுலம் தனை கிதெபேணிவோ தாங்கி ஞாலம் காத்தெம்மைப் பேணிவருவோளும் பீடை பிறப்புக்கு பெரும் முற்றுபெற ஜயன் நாளை எதிர்நோக்கி நாடே காத்திருக்க இவனை பூக்க அருள் செய்ததென்.
உவரி மூன்றுறை தெய்வகுமரி திருவடி கழுவி புண்ணியம் சேர்க்க பூச்சொரிந்தோதினேன். வேண்டுவோர் கண்ணியம் கூட்டிடும் காவியம் தோன்றிடும் காட்டாற்று நுரை தெறிக்க கரை நாதம் செவிகிழிக்க கேட்காமல் சொல்லவந்தேன். கேடுடைகளை நடுவில் கனக ௧திர்மணியை கண்ணாரக் கண்டேன்.
கன்னியின் கைத்தலம்பொதிந்த செம்பொன் விளையும் செழுநிலமருகில் மெய்த்தலம் கண்டுமே தினியறிய மெய்யைக் கொண்டு நெய்யாய் உருக்கி சத்தியம் செய்து பத்திரம் பதித்தேன். பாணர் இனத்தின் தலைகளுடைய சிண்டை பிய்த்து சேதமடைய மாதவமிருந்து எதுகைப் பிழையுடன் மோனைகள் தவறிய வான்கவி வரைந்தே வார்த்தை புதிரை வக்கணை கோர்த்தே புதரில் புதைத்து பூவை விதைத்தேன்.
சிதைக்கா வண்ணம் சேதியறிவோர் வாதை தீண்டா வானக விண்மீன். கேடுடை
பொல்லார் பீடையில் உழன்று பிறவி வீண்மீன். இவர் கரியின் உருவாய் காற்றில் கலந்து எருவாய் கூட எதற்கும் உதவ இயலார் என்பேன் எந்தன் அறனே ..
தையாள் ஈன்றாள் தன்னுயிர் மாசில் தகைசால் மதி மகளொன்றை . தவத்தை மகன் இவனை ஈன்றது பங்குனி திங்களை பதமாய் ஈன்ற திங்களீன்று திருமெய்தந்தாள். மேன்மகனுதுத்த வானோ ரருளிய வரமா தமிதுவே வையகம் அறி௧ பொய்யுரையில்லை .வருத்திக் கொய்யும் தீவினை குருதி யருந்தி மெய்யினை புதைக்குமுன்னர் மேதினியறிய மீட்க உதிக்கும் தெய்வத் திருமகனிவனே அன்றி தேவனாய் எவரும் உலகத்தார்க்கு உதவயார்க்கும் ஒருவரமும் இல்லை .
வல்லரசாய் குடக்கே வளம் கொழிக்கும் கண்டத்தில் வன்நோய் பதம்பார்க்க. வெள்ளரசன் வீழ்வான். பெண்ணரசி வாகைசூடி பெரும் பொறுப்பெடுத்து மண்ணரசியா வதைமாற்றார் தேராது முகம் சுழிப்பர். மன்னவர்பலர் மாண்புடனே ஏற்றிடுவர். வரலாற்றில் வஞ்சி யேறும் அரியணை அங்கமையும் வேளையிலே எம்மண்ணில் நெறியிழந்தோர் அரசு வீழந்து நோயுற்று அவதியுற விண்ணதிர போர் மூண்டு வீரர்பலர் தலை வீழ்ந்து அண்டை நாட்டு அகமவிந்தோ னொருவன் அரவ ஊனுண்ட விந்தை கொடியோன் விதி மீறி நிலம் பிடிக்க நிலை குலைந்து வீழ்ந்துடுமே வேதம் விளை பூமி ௧ருகிடுமே .
வேலியோரம் மலர்ந்த பூங்கழுத்தில் தாலிகள் தங்காது தகர்ந்துடுமே . புருவம் விரிந்த பூநாகங்கள் நுழைந்திடுமே. பருவ மெய்யாத பைம்பயிரை பாழ்படுத்தி மேய்ந்துடுமே . வல்லரசின் அப்பொன்னரசி வன்படைகள் தந்துதவி குள்ளர்களை குருதி கொட்ட கோட்டை விட்டு விரட்டிக் கொல்ல வல்லரசாய் தலை நிமிர்த்து வரலாற்றில் இடம் பிடிப்பான் வரமெ டுத்து வந்த ஐயன்.
எவ்வரசும் எட்டாத விண்ணரசு அடிகோல பாம்பையன் இருவருமே பக்கத்துணை இருப்பதனால் மேம்பட்டு புகழ்பாட எம் மெய்வாயை அற்பணித்தேன். நன்னெறிகள் வளர்ந்துடுமே நன்றி சொல்வாய் மானிடமே நாளை தாயகமே நீணிலமாய் தரைமீது பரந்திடுமே .ஐயன் செல்லும் நிலமெல்லாம் தெள்ளுதமிழ் அவையெழுந்து தேன்சிந்தி மலர்ந்திடுமே .
பாகம் 76
வேழம் வளைந்தாடும் வெண்டலையா னருளாலே ஞாலம் காக்க வரும் நாதனிவன் மலரும் நறுநிலம் ஒளிர்வதனை ஞானம் பாய்ச்சியே நலமாய் நுகர்ந்ததேனே .நீதிமானறிய நெஞ்சை திறந்தேனே .திதிமெ தினிசிசெ பாதி திருமெய்யை பத்தினிக்கு பதிவு செய்த ஆதிபகவனின் ஆலயத்தை ஒட்டியொரு கன்னியா௧ கண்ணுறங்கா எண்காணி குளமிருக்க களிறுறங்கும் கற்குன்றில் காற்றுவீசும் தென்திசையில் கண்டேனிவன் கால்தடத்தை கானக்குயிலே நீகேளு. கண்மணியே இதைப்பாடு.
தாழம்பூ தலைவிரிய தந்தசூகம் நடமாடவேலன் கோவில் காற்காதம் விலகும் தூரம் யானமர்ந்து நாளெல்லாம் புலனடக்கி நாயக நயனம் திறந்துடவே முலாதார கனலெழுப்பி முற்றிலும் யான் கண்டிட்டேன் முக்திக்கு வானுலகில் வித்துட்டேன். ஆளவந்தான் தோழனின்றி அங்குமிங்கும் அலைவதனை கூறவந்தான் இக்கூத்தன் உற்றான்.
இக்கூற்றை நீயும் நம்பிடுவாய். கூறுகெட்ட அரைகுறையர் கொள்ளும் புரிதல் யாதுக்கும் பொருள்தான் பிழையாய் வருமென்று இருளில் மூழ்குய குருடரையும் எச்சரிப்பாய் பரம்பொருளே. நாலுடன் இரண்டிணையும் நல்லுடல்
அகவையிலே கோழிக்குஞ்சு தீண்டியதால் குற்றுயிராகி நம்மையன் வாழ்வின் எல்லை வரை சென்று வல்லமை பெற்று வருவானே.
காலதேவன் அழைக்காமல் அவன் காலைதொட்டு துயின்றாலும் வேளை இன்னமும் வரவில்லை என விதியே தொடர வழிவகுக்க வேல்போல் நிமிர்ந்து வலுப்பெற்று வேண்டும் வரங்கள் பல பெற்று அம்பை அருளால் நோயற்று ஐயன் எழுந்துவருவானே. மூன்றில் வந்த காமாலை பின் முப்பதில் மீண்டும் மூண்டிடவே தேவர்கள் வேண்டுதல் தூண்டிடவே தெற்கில் உயிர்த்தெழுவானே தீபோல் ஐயன் திறன் கொண்டு தியாகம் தொடர துணிவானே.
வேங்கடம் வடக்கே வீடமைத்து வேண்டும்வரங்கள் பொழிந்துடுவாள். அங்கு குன்ற கொண்டையில் கூத்தாடும் கோட்டை யிலமர்ந்து கொலுவிருப்பாள். கண்கவர் பட்டை தானுடுத்தி கனக மேனியில் காட்சிதர ஐயன் பாதம் பதிந்திடவே அங்கும் விரித்த கண்ணிகளில் ஐயன் வீழா திருந்துடவே அன்னை துர்க்கை காத்ததனை அகிலமறிய மொழிவேனே றிவேயே இனே மொழிவேனே. அறிவேன் அடியேன் இவனேதான் அழிக்க இயலா அறவேளாய் முத்தமழ் காக்க வந்தவனே .
பாரே பெருமை கொள்வதற்கு ஏறாய் ஒருவன் எழுவதனை யாரும் உரையா உண்மையினை ஊரும் உலகம் அறிந்திடவே ஒங்கி உரை த்தேன் பரம்பொருளே .துணிவேன் ஐயன் பிறப்பறிந்து தொடர்வேன் நிழலாய் அகனமர்ந்து. யாதூரும் நிலையாத எமக்குதவி புரிந்திடவே தூது செல்வாய் தேன்தமிழே. சூதுகொல்ல வருவானே தொடரும் தீது கொய்து எறிவானே.
காவேரிக்கரை யோரம் கபடதுயில் கையாளும் பூதேவிக் காதலனின் பூவிழி ஒளிபாயும் பொன்னயல் கண்டத்து கயல்விழி யன்னை ஈன்ற கனிவுடை மைந்தனும் ஐயன் கரம் கோர்த்து அகிலம் முழுமையும் அன்பமைதி வளர்ப்பானே .எல்லையோர மலை நாட்டில் எண்ணைந்து காணி வன எல்லை காக்கும் காளிக்கோர் கரும்பீடம் காட்டிற்குள் யான் கண்டேன். இங்கவனை இழுந்து வந்து எளிதாக கழுத்தறுக்க பொன்னையன் பெற்றதொரு பொல்லா பாதகனே வல்லரசின் அமைச்சனாக வன்திட்டம் வகுத்துடவே வாராகி வரமருளி வேகாதிவன் தலையை வீழாதுகாத்தாளே.
அரவுகள் ஏமாற ஐயன் திசை மாற துரி தவழி தேற்றுவித்து துப்புரவு செய்ததுடன் துர்க்கையவள் ஏய்த்தாளே தரவுகளை யான் தந்தேன் தங்கங்களே
அறிந்திடுக. மரை பிடித்து பணம் குவித்த கறை படிந்த கண்ணன் முன்னே காதலியும் சேர்ந்ததொரு வல்லரக்கன் சதிவலையை வான்மீது வட்டமிட்டே வல்லூறாய் யான்கண்டேன். காளி அருள் பாட இதை காதாலே கேட்டேனே. வாக்கு இது பொய்யில்லை .வாழும் மெய் வாழ்வதில்லை .மெய்க்குள் மெய் எழுதி மேனியையான் விடுத்தேன்.
பாகம் 77
முக்கண்ணன் திலகமவன் முத்தமிழின் வதனமவன் முளைவிடும் நாள் வரைக்கும் ஆகாத காலமாய் அகிலத்தார் அழுதுடுவார். தேறாத கலகத்தால் தீதுறம் காசினியே ஆறாது கண்கசக்கி அல்லலுறும் காண்பாயே. ஆதவனிவன் வருகையாலே ஆடா மலையாட பாடாதவனம் பாட ஓடாத நதியோட பூவாத நிலம்பூக்க பொல்லாரில்லாத புவியியலை கண்டேனே எல்லாம் வல்ல இறை முனியே .
வஞ்சம் கொண்டு வருவானே மஞ்சள் நதி மண்ணசுரன். நம்மைய்யன் தோற்றம் தனை தோராயமாய் முன்னறிந்து மன்னார் மேட்டில் தளமமைத்து நம் மண் தகர்க்க முனைவானே. கொஞ்சும் தமிழ்நிலம் அழிக்க எக்கொற்றவர்க்கும் வலிமை இல்லை .மிஞ்சும் இறையருள் பொழியும் மேன்மகன் இங்கிருக்க நஞ்சுறை உயிரினத்தை நல்லுணவாய் கொள்ளுகின்ற அஞ்சா இனம் அங்கு கண்டேனதை அழித்தொழிப்பான் தென்னிலத்து தீரனிவன் இதை அறுக்கும் தேவனிவன் பிறவிக்கடன் தாங்க பேரினமே பிழைத்தெழுமே .
சிற்றினம் சிதைக்குள் வீழ வாய்மையினை உயிராக வரம் வாங்கி வந்தவனை ஆண்மை உள்ளோர் வணங்கிடுவர். அவன் அடிபணிந்து இணங்கிடுவர். தொங்கும் மீசை நாய்கள் தொன்மையான செந்நாய்கள் தங்க நிலத்தின் வேலியினை தகர்த்து உள்ளே புகுந்துடுவார். பொங்கும் சிங்க போர்மக்கள் போர்த்தி அரணை காத்திட்ட காவல் தெய்வம் ஆகிட்ட கடமை வீரர் யான்கண்டேன்.
தீயாய் உலவும் தென்றித்தார் சீறும் புயலாய் எழக்கண்டேன். வீரம் வீழ்த்தி வடகுணக்கே வேற்று அரக்கர்கள் புகக்கண்டேன். கொஞ்சம் கூட கருணையின்று நம் அங்கங்களை கொன்றழிப்பான். வங்கம் கொண்டு வெஞ்சினத்தில் நம் வாரிசுகளை சிதைத்தொழிப்பான். தங்கங்களே செவிசாய்ப்பீர். அவன் தரை ப்படையை விரிய வைத்தும் நம் அங்கங்களை இரையெடுப்பான் ஆருயிரே அறியாயோ.
தலை குனிவை நமக்களித்து மதையிலே கொக்கரித்து வாகை சூடி வலம் வரவே எம்மையன் பொயெபிபோ பொறிவி பொங்கும் படை யெழுப்பி புயல்போல் பொறிவிதைத்து வேங்கைகளை அணிசேர்த்து அறம் புரண்ட அம்மாந்தர்களை ஒடுக்கிடுவான். எதிரிகள் எழுச்சியுற எள்ளளவும் இடம் கொடா தடக்கிடுவான். எழில்நிலமாம் இந்நிலமழிக்க எக்கொற்றவர்க்கும் வலிமை இல்லை.
மிஞ்சும் மூவிழியன் மைந்தன் இங்கிருக்க காந்தாரம் வந்ததொரு கலை கொடை தந்ததொரு மேற்காயமைந்ததொரு மேன்மக்கள் திருநாட்டின் இருநூறு மதுப்புடனே எழுத்துக்கள் பதினெட்டாய் ஈரலுண்ணும் சூரர்களும் வீரியமாய் விழி ஏய்த்து விருந்தாக தீனி தின்ன பிணக்கொடை தந்ததொரு பெருங்கூட்டம் எழுப்புகின்ற அழுகுரல் அலறல்களை அகமுடைந்து யான்கேட்டேன். அறனே நீ அகலாதுஅல்லல்களை அகற்றுவாயே .
பாகம் 78
நாற்பத்தோர் நாள் கழிந்தவுடன் நலமாய் உதித்த நம்மையன் ஆட்பட்டான் கொடும் நோய்க்கென்று. ஆறாது சீரழி த்து அங்கம் முழுமையும் கொப்பளத்தால்
சீர்கெட்ட சிற்றம்மை சிதைத்தது மட்டுமின்றி செவ்வேளிவனின் வல்லாற்றல் வற்றிப்போக வாய்விட்டு ஐயன் தனையே அழவிட்டு பெற்றம்மையுடன் விழவைக்க பெரிய அம்மை இல்லாத பெருமானுக்குதவிடவே
சிற்றம்மை தயவாலே சீக்கிரம் மீண்ட வரலாறு உன் பேரறிவுக்கும் எட்டாது. சிலர் சிற்றறிவுக்கும் கிட்டா தென்பதனை பலர் செவிகேட்க கவி பதிப்பாய்.பதர்மாந்தர் பாழ்செவிடாய் புவிநிறைத்து சேருமிடம் நமனிடமே தவியாய் தவிப்பதனை தடுக்கத்தான் நான் யாரோ.
விழியை திறந்து விதியறிவாய். வேண்டும் வரங்கள் பெற்றிடுமே ஒளியை கொண்டு உள்ளத்துள் உறைந்த அழுக்கை அகற்றிடுவாய். ஓசையிலாது உய்த்துடுவாய் உண்மை விளம்பும் உத்தமனே .சாகாக்கால் கொண்ட சந்தன மேனி பூண்டு வேகாத்தலை யுடனே விந்துகட்டி வித்துறைத் தணிவிடுரி சூடாமணி ஒப்ப சுடர்விடும் சூரியனாய் மாறா அறத்துடனே மன்னனிவன் எழக்கண்டு தேறா வெய்யர்களை தீதான் தேடி தின்ன ஆறா புவிமகளும் அலுக்காது இரையெடுப்பாள்.
பூக்கள் வரம்பெற்று பூங்கா நிலமெழுமே . ஆக்கள் நலம் ஒங்க அன்பறம் தளிர்விடுமே . ஆசு குவித்து அறுவடை செய்தோரை மாசு துளிர்த்து மனம் கெட்டு காசு நிறைத்தோரை தீது தீண்டி தெரியாது ஓசையின்றி பிறர் அறியாது ஓழிப்பதனை உன்னருளால் கண்டேனே என்னிருளை அகற்றிய அகத்திய மாமுனியே.
வற்றாத வான்நதிகள் வாரியோடும் நிலம் அமைய பொற்றாமரை பூப்பதுபோல் புவிநாதன் பூப்பானே. கிட்டாத நலங்களெல்லாம் கிடைக்க பெற்று அட்ட திக்கெங்கும் அழகான நீர்நிலைகள் முட்டியெ முந்திடவே முழுமையான செழுமைதனை எட்டிபி டித்துடவே இந்நிலமே எய்திடுமே .
இதயம் கிழித்து எழில்கமலம் பறித்து உயிரை பிரித்து வெய்யர் வல்வேள் புண்ணீர் குடுத்து மெய்யின் கழுத்தை மீண்டும் நெரித்து பொய்யர் ரதத்தில் பெருந்தொலை பறந்து பொன்னாய் மின்னும் பூவை கொணர்ந்து இருளுள் புதைத்த பொல்லாவினையால் புவியே துயருள் வீழ்ந்து துடிப்பது விண்ணில் விதைத்த வீரிய விதியே.
பாகம் 79
வெண்தாடி விழுந்து தொங்க விரைந்தோடி தொண்டு செய்யும் எம் நாடிதுடிப்பாய் வந்த எழில் தொண்டைமான் இவனை இன்முகத்தோடு எதிரே தில்லையன் ஆலயத்துள் தித்திக்கும் செம்மொழிபேச தீரனை ஒருநாள் கண்டேன். கண்மை கருநிற அடர்குறை குழல் கொண்டு ஐயன் தலையொரு தித்தன் சடையாய் சிறப்புற கண்டேன். உச்சி சிரல் ஓழிந்தமயிரால் சொட்டை விழுந்த சொற்ப இடத்தை சொல்ல எனக்கு எல்லாஅருளும் தந்த ஈசன் எந்தன் ஐயனின் பணிக்குதவி விணிநியிகி பாதம் தழுவி பணிந்து நிற்க ஆணை யிட்டது அகிலம் அறியாது அன்பே நீயுமறிந்து கொள்வாய்.
வலக்கண் இமையில் வாழும் வெளிறிய கடுகினும் பெரிய வடிவில் மருவொன்று பெருமான் கண்ணில் உருவாய் கண்டு மாண்புடை மன்னவன் இவனென வியந்தேன். கழிசடை என்னை கடைக்கண்ணால் கண்டு கருணை வீச ஈசன் சிலையை இருவரும் துதிக்க அவ்வினிய நாள் என் வாழ்வின் அருளுடை நாளாய் அடியேன் உணர்ந்தேன்
மன்னவர் பணியும் இவ்விண்ணவ வேந்தனை வேதம் மறைத்தும் வெளிகொண்டு வந்ததை எங்ஙனம் இயம்ப என்னால் இயன்றதோ என்றே எண்ணி உள்ளம் வியந்தேன். அகக்கை கொண்ட மரைப்பூவழகின் அளவை ஐயன் அறிய அகிலம் தெரிய செய்யும் விதியை செவ்வன செய்வேன். அதை வெய்யருமறிந்து வீழ்த்த நினைத்ததை மெய்யா யறிந்து மீண்டும் வெளியில் மேதிணியறிய சொல்வேன். பொய்க் காகையின் போற்றும் வரத்தை பூவேநீயும் புன்னகை பூக்க கேளாய்.
நடுக்கை யுள்ளே நாவிரல் நீளமும் இருவிரலகலமும் எழிலாய் கொண்ட திருஅமர் தாமரை என்பேன். பங்கயம் கொண்ட தாழிதழ் வலதில் சங்கன் வடிவாய் சிகண்டியின் தலையை சீருற கண்டேன். மரைப்பூ இதழ்கள் எல்லாம் அம்மயிலின் தலையில் பூவாய் வீரியும் புதுமையை கண்டு பூரிப்படைந்தேன் அறனே.
தாமரையுள்ளே ஒளிரும் திருமுகன் கொண்ட அறுமுக கோணம் தெய்வ அருள்தரக் கண்டேன். மன்னன் அணியும் மணிமுடியொன்று இடது இதழ்களில்
எழிலாய் பதிந்து எனக்கருளிட கண்டேன். பூண்டதிகம் சுட்டு பூரித்து உண்டி நிறைத்த மழலைப்பருவம் கொண்டு கற்பகக் கட்டிகளை எப்போதும் சுவைத்து உண்ட மதுரம் கவர்ந்ததொரு மழலைக்காலம் கொண்ட தருணம் அய்யன் வாழ்வில் தன்னிறைவைத் தந்ததுவே. இதனால் முன் பற்கள் சொத்தையாகி முன்பே கழன்ற கதை எம்போன்ற ஏழையர்க்கே இயம்பும் வரம் தந்த ஈசன் கருணைதனை எங்ஙனம் போற்றுவேனே .
சிளிடுசீயிகொ சிங்க பற்களிரண்டு சீராய்வாயில் கொண்ட ஐயன் அங்க அடையாளம் கண்டேன். அது இடைவெளி கொஞ்சமுமின்றி ஒன்றி ஒளிரும் முத்தின் உவமையை உலகிற்கு தந்தேன். முப்பத்திரண்டை மொத்தமாய் கொண்ட ஜயன் மெய்வாய்தன்னில் சொத்தையாகி கடைவாய் பல்லொன்று வலத்தாடை மேலே வேரோடு தகர்ந்த வெளியிடை கொண்டவிதியையான் கண்டேன்.
செம்புலம் உறைந்த சீர்பெரும் மண்ணில் செழுநில செம்பருத்தி வேர்பலா விளையும் வீரி ய மண்ணில் முல்லை வனங்கள் புன்னகை பூக்க பொன்ம்பலம்
சூழ்ந்து புத்துயிரூட்ட அம்மை யப்பனின் அகமெலாம் இவனை அன்பனாய் கண்டேன். அறனொடு வாழும் ஐயனின் அவலமறிந்து என்னகம் உருகி இருவிழி ஒழுக பூவினும் மெல்லிய பொன் அகம் கொண்ட எம்மான் ஏழ்மையை எடுத்துடு அறனே தாய்மையின் சிவனே .போரை தவிர்த்து பாரை மீட்க புவியை ஆளும் வல்லரசிற்கும் வல்லமையில்லா வாய்ப்புகள் வருமே .
அதன் வேரை அறிந்து வெட்டி எறிந்து விழுதை கிழித்து வீழ்த்தும் எம்மான் வானளாவிய வல்லாண்மை தன்னை வானவர் சொல்ல அதை வாக்காம் இசைத்தேன். யாரும் வளர்க்கா அறனை வளர்க்க தேவர் இறக்கிய வள்ளலொருவன் வதனம் கண்டு வையம் முழுதும் வணங்கிட நின்று எந்தனகமே குளிர்ந்துட உணர்ந்தேன். இது நடப்பதும் உறுதி நான் தரும் பாட்டு சிவனார் வாக்கென செவிசாய் மனமே.
உலகம் முழுக்க அழுகுரல் கேட்டு உள்ளம் வெடித்து கண்ணீர் வடிப்போர் அபரிமிதமாய் அகிலத்துல் கண்பது ஐயன் வரவை அருகென சொல்லும் அடையாளமிதை முன்னறிவாய் நீ மும்மலம் போர்த்துய மூடமனமே .இதை உரக்க சொல்ல ஒரு நொடிதருவாய் பெண்மையை பாதி மெய்யிலில் சேர்த்து பிறைமுடி ஏற்று விந்தைகள் புரியும் எந்தை நீயே எதையுமறிவாய். கறை தனை அகற்றி கண்ணீர் துடைத்து கரைசேர் அறனே காக்கும் சிவனே.
பாகம் 80
நீலக்கரை யோரம் கீழ்திசை நெடுஞ்சாலை கடலோரம் பால்போ லகமுடையானிவன் ஒருமையில் வாழ்ந்த இடம் அரங்கன் தோட்டமுடன் தெலுங்கன் குலமிணைந்த தலைநகர் மருதநிலம் அருகே வானின் நிறம்கொண்ட வரதன் உறங்கும் இடம் வரம்மிகு விடத்தை புரம்காதம் ஒன்றரை தான் தொலைவாய் அருகில் வரும். இக்கோவில் தலமிங்கு இவன் பலநாள் வந்து போனதனை யான்கண்டு அகமகிழ்ந்தேன் என சொல்ல முன்வந்தேன்.
வரைநெடுக வன்பாவம் வானளவு குவித்தார்கள் வாய்மொழி கடும்சாபம் மேன்மேலும் எடுத்தார்கள். குலை நடுங்க ஆட்டமி ட்டு நடுநிலைமை குடைசாய கலைகற்ற சூனியத்தார் நிலை கொண்ட நீள்பரப்பாம் மலைநாடு அழிந்தவுடன் மலை மொழியார் மிஞ்டியதில் மனம் வருந்தி திருந்துடுவார். கொலையாளி குணங்கொண்டு கொலோச்சி மனம் கெட்டோர் கோட்டைதனை அலையாழி அழிக்கும் திடம் அதுல் மிஞ்சுவதோ சொற்ப இடம்.
புவியாள வந்தவனை புண்ணியம் செய்தவனை சதியாலே கொலைபுரிய துணை போகும் சூழ்ச்சிபல செய்தவரை மதி வெல்லும் விதியிருக்க வேந்தர்களும் வீழுகின்ற பூங்கரத்தான் சங்குடையோன் புதையாமல் முளை விடுவான். இழிமக்கள் குழிபறித்த இடமறித்து சூறையாடும் சூது கொன்று வினையறுக்கும் வேலனும் எமக்குண்டு. மனை முழுக்கமாளா தமந்து ரத்தால் தகடிறக்கி விதைத்தாலும் விளையாது வீணடிக்க வேண்டுவோர்க்கு நலம்புரியும் மாலனின் துணையுண்டு.
புவிமுழுதும் காவல் காக்கும் போர்குணத்தால் தலைவிரித்த காளியருள் கணிசமுண்டு. இதனால் ஞாலமேற்க நயந்துவரும் நாதன் தனை அரிந்து கொல்ல நாள் பார்க்கும் வீணர்களின் விபரீதம் விரியா து வீழ்ந்துடுமே .
வரமேற்ற வான்மகனின் வலக்கை மலர் தன்னில் சுட்டு விரல் தாழில் சொலல்வல்ல மேதைகளின் மோதிர வளையம் கண்ட குருமலை பரப்பெங்கும் கூர்சூலம் திபேரெழிசொ பரந்திருக்க அதன் பேரெழிலை யான் சொல்ல நேர்வழியில் வந்தேனே.
நீளம்கொள் திரிசூலமொரு விரலிடை கொண்டாலுமதன் கரப்பிடியோ காண்பதற்கு அரை விரலகலமென அரவேந்து அருள்பாட அதை அப்படியே பகர்த்தேன் யான். அம்பையின் ஆயுதம் செங்குத்து பாகைக்கு சரிபாதி சாய்ந்தாலும் சீராய் சூரியனின் சிறுமேட்டை கூராய் குத்த நிற்கும் கோலம் கண்டு யான் வானத்தை வணங்கியது வரம் வேண்டி பாடிடவே வானவரே வழிமொழிக.
ஐங்கரனின் நாற்கரமும் திரிசூலக் கைப்பிடியில் சிறப்புற அமைந்ததைத்தான் செப்ப என்னில் வார்த்தை யில்லை அற்பர்களோ அறிவதுல்லை . பாலைப் பிழிந்துதரும் பாழாக்க பூங்குழியை விரித்து தரும் பாவையின்பம் தனை துறந்து ஓயாது சேவை செய்யயான் ஒருபோதும் தளரவில்லை .எப்பொழுதும் உனை நினைந்து முப்பொழுதும் பாடுகின்ற கற்பகத்தயிழ் வேண்டி யான் காலடியில் தவம் கிடப்பேன். எந்நிலையும் கையாளும் நிகரிலா நீதிமானிவனை கண்மணியாய் காத்திடுக. கரம் கூப்பி வேண்டுகின்றேன்.
ஒருமைப் பாட்டை இன் உலகில் விதைத்து சிறுமையை சீராக்கும் சித்தன் இவனென மொத்த வாக்குதந்து முன் மொழிவேன் பரம்பொருளே . வறுமையை வேரறுக்க வான்வரம் வாங்கி வந்த இவ்வருந்தலை வன் பெருமைதனை பரணிபாட நாளை தரணியர் முன் வந்துநிற்பேன். தவறாது எம் வாக்கு தழல் விழியன் தவறினாலும் சிதறாது எம் சிந்தை சிவன் தலை தறினாலும் பதறாது எம்மகம்தான் பரந்தாமன் பதறினாலும் உறையாது உள்ளம் தனில் ஊறியதை வெள்ளமென திறந்துவிட்டேன். அறியாது போகலாமோ இப்புதிரை ஆர்வலரே அவிழ்த்துடுக.
இராகவன் பெயரைக் கொண்டு இராகுவின் விடத்தை கொண்ட கருங்காமுகன் ஒருவன் கண்டேன். அவன் கலைத்துறை மைந்தன் என்பேன். சிலுவையர் மதத்தைச் சேர்ந்த சிற்றினத்தா னிவனும் ஐயனின் பகையாய் தோன்றி அயராது தொ டரக்கண்டேன். பொதுத்தொண்டை பொய்யாய் வைத்து பூக்களை விரியவிட்டு புடம்போ ட்டு புசிக்கின்ற புரட்டுடை பொல்லா வெய்யன்.மாயோன் ஆலயத்துள் அன்று மதயானையாய் புகுந்து அற்பனாய் அறிவிழந்து கழுகு கண்கணை பாய்ச்ச கல்கியின் கமலம் தன்னை கையகப்படுத்தவந்து கை நழுவிப் போனதனால் ஐயனின் கழுத்தறுக்க அஞ்சாத படை அமைத்தான்.
வெள்ளாட்டின் தோலுடுத்திய வீரிய ஓநாய் இவன் நெய்தல் நிலசரல் கலிங்கத்து வேந்தனுரில் கயவனின் கருணை இல்லம் ஆதரவற்றோர்க்காய் அமைத்து அத்துமீறும் அவலம் தன்னை அடியேன் இன்று கண்டேன். அதை ஐயனும் நாளை கண்டு கொற்றவனான பின்னர் கொய்வதும் அவன் தலையை. கோடிட்டுக் காட்டி விட்டேன் இதை கூத்தனே எனக்கு சொன்னான் குறையில்லா நிறைவுடனே .
பாகம் 81
பொதிகை தென்மலையில் பூத்தோடும் புனிதவதி பொங்கி எழுவதுண்டு. ஆங்கு அறனை வளர்க்கவேண்டி அருளாசான் அங்கமொரு அழலாய் அங்குமிங்கும் உலவக்கண்டேன். திறனை ஒன்று சேர்த்து அத்திருமகன் தான் கடன்பட்ட வித்தை கொண்டு வேண்டும் வரம்மேற்க வளர்பிறையில் எம்மையன் வரும் வரைக்கும் வரை நெடுக வழிமேல் விழிவைத்து வாசம் செய்யும் அப்பொன்னாசான் பொறையுடை பொறிமுகம் யான் கண்டேன். அருள் விழுதை தானிறக்கி விண்ணக வரைவுடன் பழுதை தீர்ப்பதற்கே பாருக்கு விளக்காவான் இப்பங்கய முகத்தான் என்பதனை தொழுத கரத்தோடு தொடர் அழுத்தம் தந்தேனே அருளாளர்க்கருள் புரியும் அளப்பரிய பரம்பொருளே.
இவன் புகுவது சிவனின் மலை யென்று செவி ஏய்க்க கூறிடுவர். ஈசனின் மலைக்கோ ராயிரம் வாசனை பேரிருக்குமதன் வாசலறிந்தேன். அதிலொரு அரும் பெயராயிருக்குமென பெருங்கண் புண்ணான பிறவியர் அறியாரே. பிறைசூடி பின்னுமொரு நதிசூடி யேலொறிநிகி
கலை நடனாமயே காலொன்றில் நிற்கின்ற மாமலை தலையோனே ஏனெமை பாரது ஏய்க்கிறாய் ஓயாது. கண்கவர் தேரை தந்து களிக்கும் நல்லமுதை ஈந்து பெண்களை மயக்க விட்டு பெருமானின் முத்தொன்றை அருகாமை கயவர்களும் ஆருமறியாது கைக்குள் வைத்ததனை அடியேனே அறியும் போழ்து வஞ்சகர் திட்டமிடும் வாசத்தை நுகர்ந்தபடி நெஞ்சினில் அரும்புகின்ற நெறிகெட்ட எண்ணமெல்லாம் கொஞ்சமும் பிசகாமல் இக்கொற்றவன் அறிவானே.
குன்றில் அமரும் குணக்குன்றான் கோல மயிலுடை கண்டமொரு சுவரில் செங்கமலம் அமர் செல்வமகள் திருக்கோடும் மறுசுவராய் ஊழ்வினை கோடும் ஒற்றியெழ அதன் இறுதியில் காணும் எழில்வேள் அமர் சிறப்புடை மயிலின் அங்கமே தென்னாடுடையோன் திருமெய் இலிங்கமே அங்கும் பாய்வது பாற்கடல் தேவியின் ரேகை தான் தங்குமே. அது பார்வைக்கு பார்வதி கைபிடி சூலமாய் தொங்குமே
பீலிப்புள்ளின் மேனியுள் பாய்ந்து மீண்டும் கண்களை கொள்ளையிடுவதை இன்னமும் தெளிவாய் இயம்ப இயலுமோ . அலகொடுமயில் தலை ஒன்றரை விரலிடை அதன் கண்டத்தினகலம் கைவிரல் அரையாய் நீளமறிவாய் இரண்டு விரலிடையென உள்ளதை உனக்கு உணர சொன்னேன். உள்ளிடும் உள்ளீடு உண்மை யாயமைய உமையொரு பாகனை உதவிக்கழைப்பாய் உயிரோடவனுடன் இரண்டற கலப்பாய்.
தங்கையின் கையில் தகாத பொருளும் தரம்குறை பொன்னும் அகலாது மின்னக் குவியும் மீட்கும் இச்சிறுத்தையின் உயிர்க்கு செழுநிதிபெறவே அழுக்கு நெஞ்சுடன் அறம் கொல்ல துணிந்து அன்பை மறந்து ஆடும் உறவை அடியேன் கண்டேன். கயமை அணிந்த கரடு மனங்கள் கண்ணீர் விடும் நாள் அண்மையில் வருமே.
இவன் பெருமையறியார் பெருந்துயருறுவர். எழும்பகைவரெ வரும் பாழாய்போக மறுமை கொண்டு மண்ணில் வீழ்ந்து மீண்டும் உழன்று மேதினி நிலைக்க விதியை இவரே வேண்டிமைக்கும் கதியை கண்டேன் காக்கும் அறனே . நெடுநீவிழி நெருப்பாய் உடல் படுக்க நீள்விழிகள் தெற்கமைத்து நெடுந்தவம் பூண்டு கருக்கல் வேளையிலே கருணா மூர்த்தி கடுங்கானகம் நடுவே கனலென எழுவானே .
தருக்கள் தோற்றுவிட தாளா என் கொடைகுணமே மேலோங்க மேம்பட மையகிழக்கின் மைந்தரழுகையை கைவைத்து துடைக்கும் கனிவை இவனிடம் கண்குளிரக் கண்டேன். தரணியில் நிலை குலைந்த தையல் முழுமையும் மனம் குலைந்து போனதனால் தயை காட்டும் தாயெனவே மலையளவு கருணையுடன் மார்புறைய வருவானே நிலையிலா நீடுலகில் நிலைக்கும் பரம்பொருளே .
பாகம் 82
பனிகள் பொழியும் கலியாண்டின் பார்திபனுக்குகந்த மார்கழியில் இனியும் தாங்கா இவ்வுலகம் இன்னலிலிருந்து விடுபடுமே . முனிவர்கள் சொன்ன மூதுரையாய் அணியும் எந்தன் அருள்நாக்கு. அறிவாய் அறவேல் வருவானே .. கனியும் கருணை நல்லோர்க்கு. காலம் இனியும் செல்லாது. பொய்யரை பொசுக்க புவிகாக்க பொல்லா தலைதனை கொய்தெடுக்க தைமகள் பிறக்கும் முன்னரே தழலுடலில் எழுவானே . மெய்யாய் வரம்பெற்று மேதினியை மீட்டெடுப்பான்.
ஆறாய் இரண்டு கூட்ட வரும். அதன் இரண்டாம் இடத்தில் இயலாத உருண்டை கோள் ஒன்றிருந்து ஈரிரண்டாய் முடிவுபெறும் சிலுவையர் ஆண்டையான் சொன்னேன். சிந்தனை செய்து செயல்பட்டு சிவனின் அருளால் புதிரவிழ்த்து எந்தன் வாக்கினை நம்பிடுவாய். எம்மான் குறித்த ரகயத்தை பரமனை பணிந்தே பாடுகின்றேன். பாழாய்போகா துன்கனவு பரமே புவியில் வந்திடுமே .
எல்லா குன்றும் உயர்ந்திருக்கும் எம்மான் எழில்வேள் கைத்தலத்துள். பொல்லா கோள்களும் நிலைமாறி புத்துயிரூட்ட உடன்படுமே புண்ணியான்மா இவன் செயற்கு நில்லா வளமே துவங்கடுமே .நெனிநேரிடு நெல்லுயர் கழனிசூழ் நல்லூரை நேரிட்டு கண்டதை சொல்லுகின்றேன்.
வல்லான் இவனே வந்துதித்த வளமுடை செம்பொன் மனை வடக்கே பள்ளப் படுகையில் அணிதுகிலை அழுக்கற வெளுப்பான் பெயர்கொண்ட அரியின் குலம் சூழ் குளத்துற்கு கீழ்க்கரை யமைந்த அக்கரையில் பாட்டன் பரம்பரை தோப்போ டு பனைமரம் பலவும் இருந்ததுவே .
புலம்பெயர் குடியாய் போனதனால் இவன் பூத்த நிலத்தொடு பொன்னிலமாய் காத்த நிலங்கூட கடன்பட்டு கைகள் மாறிப் போனதுவே . அம்மையின் ஊராய் அது கண்டேன். அம்பையின் அம்பலம் அருகிலில்லா ஆலிலைக் கண்ணன் அங்குறையும் அமைதி கண்டேன் ஆருயிரே. திறனை கொண்டு தீவளர்த்து தேயா பிறைபோலாகாது அறனே உந்தன் அருளோடு அனைத்து அடியையும் வாக்காக்கி அழகாய் என்னைப் பாடவிடு. சிவனே உந்தன் உந்துதலால் சேதியை புறத்துல் தந்துவிட்டேன்.
அகத்துல் அடை த்து வைத்திருந்த அம்முகத்தின் இரகசியம் சொல்லிவிட்டேன். இனி முழுமுதல் பொருளாம் உனைநினைந்து மொத்த அமைதியில் தவமிருக்க எம் தொழுகரம் தொய்யா ஆற்றல் தந்து தோளிலென்னை அரவணைபப்பாய் அகிலம் முழுதும் ஆளுகின்ற அணுவிலுறைந்த கருப்பொருளே .
சொல்லும் சொல்லே வேதமா கும். இவன் சூழூரை பாழுரையாகாது வெல்லும் விதியை இவன் வார்த்து வேதனை தன்னை வேரறுப்பான். விமர்சனம் பாயா அரசமைத்து வேந்தர் வேந்தனாய் வலம் வருவான். கொல்லும் பசியை பட்டினியை கோடு கிழித்து
எச்சரித்தே எல்லையிலா இறையின்ப இனிய வாழ்வை நமக்களிப்பான். கூனிக்குறுகி இருந்திருந்த நீதி மான்கள் வலுப்பெற்று நிமிர்ந்தே நடக்கும் நிலை
வருமே . ஆணிவேராய் அவரிருந்து ஐயனுக்குதவி அடிபணிய நேர்மை நீதி எழக்கண்டேன். தீரனிவனின் வரவாலே தெள்ளுதமிழன் உயர்வானே கோரப்பிடியில் அகப்பட்ட ஞாலப் பேரிடர் அத்தனையும் இஞ்ஞான சுடரின் ஒளிபட்டு நலம்தரதானே நின்றுபோகும்.
அதுவரை இன்னல்கள் எல்லாம் வந்து போகும் அல்லல் அழுகுரல் கொண்டோரே அமைதி காப்பீர் ஐயனுக்காய். வள்ளலொருவன் வந்துதுத்து வானவர் வளத்தை ததந்திடுவான். அவன் வலிமையைசொல்ல வார்த்தை யின்றி வரம்பல வேண்டி வணங்குகிக்றேன். எல்லாம் வல்ல பரம்பொருளே இங்கு இன்னலுக்கெல்லை அமைப்பாயே. தொல்லைகள் தொடர துயர் தருவோர் துள்ளி குதிப்பதை பார்த்தேனே.
உன் வில்லோ வேலோ சக்கரமோ அவ்வீணரை வீழ்த்து நலம்கொணர நாடி உன்னை நம்பி தினம் எம்நாடி நரம்பே துடிக்கறது. பாடியுரைத்தேன் அப்பன் முகனை பல்கலை யறிஞன் அவனென்று தேடியறிந்து தெரிந்துகொண்டேன் தெய்வத்திற்கிணையாய் தெரிகின்றான் அத்தேவதேவன் ஒளிர்கின்றான் தெரிந்தேன் புரிந்தேன் பரம்பொருளே .
மணல் கண்டம் மறுகடந்து மாபெரும் தொலை காதம் பல பறந்து கரும்பிறை இருள் நிறக்கடலருகே நிலமகள் குஞ்சுகள் நெஞ்சில் நெறிதனை விதைத்த இறை ஞானியாய் எம்பெருமானை நிறை ஞானியர் வணங்குவரே . அண்டம் அதிரும் போர் முடுத்து அவனியாள வருவானே பிண்டங்கள் பேரொளிபெற்று பிறப்பகற்றி பேரின்ப மடைவதனை பற்றற்றோன் பதம் பணிந்து பாடுகின்றேன் பரம்பொருளே .
ஆசுறை ஆசானொருவன் அறக்கொலைஞர் அணியுறைய மாசுறை நண்பர் கூட மனம் கெட்டு மானங்கெட்டு காசினை கண்ணாய்கருதி கயமையில் இணைவரென கண்ணொன்றில் கனல் மூட்டி காமனை எரித்தோன் சொல்ல கவிப்பாணனாய் அடியேன்பாட பாமர இனமே கேளாய்.பகுத்தறி வேளாய் நம்மின் தேமதுர தமிழை இவனே திக்கெலாம் பதிப்பான் பாராய்.
பாகம் 83
னிவிறிதெடுடுவி மானிட விந்துவை மறித்தெடுத்து மாட்டுப் பசுவின் சூலகத்துள் வேதியியல் முறையில் விளையவிட்டு வீரியம் விட்ட மகவெடுத்தால் எம் விண்மகன் விரைவான் மண்ணுலகில். அதுதான் அவன் வரும் ஆபத்தின் அரை இறுதி யடையாளம். கள்வர் கல்வியை விற்றாலோ கருணையிலா கைகளில் திருமகளுறைந்தாலோ புல்லர் போர்படை அமைத்தாலோ புன்னகை பூத்து அரவணைத்து புறமுதுகில் உனை சதித்தாலோ அண்ணல் வருவதன் அடையாளம் அவன் தான் இறுத அவதாரம். இதை அகத்தில் கொள்ளார் தம் சவத்தை அறிவார் பரசிவத்தை யறியார்.
தன் பாலிணகள் ஒன்றிணைந்து தம்பதியாகி உறவுகொள்ளும் தகாத இழிசெயல் தலைதூக்க அங்கீகரிக்கும் அரசமைந்தால் அது அழியா தலைவனை அழைக்கின்ற அருவருப்பான அடையாளமிதை அகிலம் உணர வேண்டுமென்றேன். இயற்கை ஏற்கா எச்செயலும் எம் இளவேல் வருவதை முன்கூட்டி செயற்கையாக விடுக்கின்ற சிற்றினம் போற்றும் அடையாளம்.
இனி செப்பிட வாயே கூசிடுமே. இதை ஒப்புவிக்காது ஓழிய என்னால் ஒருபோதும் இயலாது என அறனேயான் இங்கு அழுத்தம் தந்து சிவனின் பாதம் பணிகின்றேன். மாசற்று பேசும் பெண்ணுடலை மனம் கெட்டு பதிவெடுத்து அவள் தலையை பெயர்த்து பிரித்தெடுத்து பிறிதோர் பொருள் பெண்டிர் மெய்யொடு பிறப்புறுப்புடன் ஓட்டவைத்து விழிருசிக்க விந்திறக்க களியாட காமுகன் கண்ணொளியில் கற்புடை பொற்பூவை புகுத்தும் கலை வளருமாயின் எம் வான்மகன் வரவு வாசலருகேயென வாய்வலிக்கச் சொல்லுகிறேன். நீசர்களே அழிந்தடுவீர் குலமாதர் நேசர்களே நலங்காண்வீர்.
குற்றம் புரியா கொழுந்துகளை தொட்புள் கொடியே காய்வதற்குள் கொன்று குப்பையில் வீசுவதை அதன் பெற்றோரே செயுங்காலம் இப்பெருமான் வருவதன் அடையாளம். னினித சுற்றம் எல்லாம் தனித்தனியாய் சுற்றுபுறத்தில் குடி பெயர்ந்து கூட்டு குடியை மறந்து விட்டால்
இக்கொற்றவன் உதிப்பதன் அடையாளம். அற்ற குளங்கள் அனைத்திலுமே அடுக்கு மாடிகள் நிறைந்திருந்தால் உற்ற தெய்வம் இவன் உதிக்க உகந்ததொரு அடையாளம். முற்றம் இல்லா வீடமைந்து முறைவாசல் அருள் இழந்து கொட்டம் அடங்கா குடி உயர்ந்தால் இக்குலமகன் வருவதன் அடையாளம்.
நோயுள் உழலும் பாவியனும் நித்தம் ஒளடதம் தின்றாலும் நேர்மை தவறி நெறி தவறி திருந்தா பாதகனாய் திரிந்து தெய்வ குற்றங்கள் தினம் புரிந்தால் அத்திருமகன் வருவதன் அடையாளம். தாகம் போக்க பொழிகின்ற மேகக்கொடையை மெருகேற்றி மேனி சிலிர்க்க சுவையூட்டி மாதக்கணகில் கெடாமல் மனதை மயக்கி கவர்ந்திழுத்து பேதம் வைத்து விற்றாலே அப்பேரருளாளன் வருகைக்கு பின்னுமொரு அடையாளம்.
நட்டநடுநிசி தன்னிலெல்லாம் நாணங்கெட்டு பெண்திரிந்து கெட்டு கற்புக்கு பணம் பெற்று கீழ்த்தர அரம்பையர் அலைந்தாலே ஆடவர் அழைப்புக்கு இணங்கயே அரும்புகள் கூடத்துணிந்தாலே அதரத்தை விற்கும் அழகிகளும் அவனியில் இதுபோல் மலிந்தாலே அப்பூமகன் பூப்பதன் அடையாளம்.
இதற்கெலாம் போடுவான் விரைவில் கடிவாளம் எம் போர்குணங்கொண்ட எம் வடவேலன். மாரகங்கள் நடை பெறவே மண்ணின் மணக்கோலம் தடைபடுமே பிணக்காடு எழும்பையிலே பெருந்துயரம் நடக்கையிலே அன்று மணவாட்டிகள்
துதிக்கையிலே வந்து மணவாளன் அணைப்பானே .
மண்ணின் கடுங்காலம் நடுநடுங்கி கண்ணீரில் விடைபெறுமே. கனிவுக் கடலாய் கண்டே னிவனுக்கு ஒப்பேது. கல்கியில் கடுங்கணை கயவற்மேல் குறிவைத்தால் தப்பாது என சொல்லியே முன்னரும் எச்சரித்தேன். ஆரிய வேதங்கள் அனைத்தையும் ஐயன் சூரியனாகி சுட்டெரிப்பான். இதை அடிக்கடி சொல்லி ரிபேதி வீதி ஆர்ப்பரிப்பேன். சூதில் வீழா சூத்ததரம் ஒன்றை பாட்டில் வைத்து பதித்தேன் யான். பரிதவிக்கும் பதரே நீயும் பாழும் நரகிற்கு செல்லாதே.
பாகம் 84
ஐங்கரன் நாற்கரத்தை ஐயனின் கையில் கண்டேன் ஆலகண்டன் அருள் லிங்கத்தை அழகுற அங்கு கண்டேன். ஆறுமுகன் ஆயுதமும் அழகுமயில் மேல்பாதியும் அறுகோண அற்புதமும் ஐயனின் கையில் கண்டேன். திருமகள் கமலம் ரெண்டை அவன் கைத்தலம் கால்மலரில் கண்டேன். அறுமதம் மற்றும் அங்கு அரபுலக லிபியை அவன் அருங்கர மலருள் கண்டேன். திருமாலிய திருக்குறியை இருமகன் கையுள் கண்டேன்.
செந்தமிழ் பரப்புடனே எம் தசிங்களத்தீதவை கண்டேன். தோகையாள் மீன்விழியின் தோற்றத்தை அங்கு கண்டேன். மன்னர் மன்னவன்
மணிமுடி யொன்றின் மாட்சிமை சின்னங்கண்டு அண்ணல் இவனென அகமெலாம் சிலிர்க்க கண்டேன். இருவில் புருவம் சேரும் இனியவன் நெற்றி தன்னில் இடுகுறி தீபம் போன்று எழில் சூலரேகை அமைந்த நல்கற்பக நெஞ்சம்கொண்ட கொற்றவன் இவனின் கொள்ளையழகை யான் கண்டேன்.
சைவமும் மாலியமும் சண்முகன் கெளமாரமும் கரிமுகன் விநாயகமும் காளியின் சக்தியமும் எரிதழல் சூரியனை ஏற்றெடுத்த வழிபாட்டினையும் ஐயன் ஒருவன் கையே இதை அழகுற காட்டுமென்ற உண்மையை அடியேன் சொன்னால் இனி உள்விழி திறந்தால் காண்பாய். அன்பகம் பூத்திருந்த அருளகத்தின் முறைவாசல் கதிரவனை கைகூப்பி காலையிலே வரவேற்கும்.
அப்பகலவனை புன்சிரித்து புறவாசல் வழியனுப்பும். இது பொய்யல்ல பொன்மகனே. இனிபோகப்போக மெய்யறிவாய். மெய்யிது வீழும் முன்னே அம்மேன்மகன் முகம் காண்பேன். ஐயன் பிறப்பால் பேறு பெற்ற அவ்வூரருகே ஓடையொன்றை உருவாக்கி புதுவயல் பூக்கக் காரணமாய் புஞ்சை யெல்லாம் நஞ்சையாக்கி புத்துயிர் பெற்று மலர்ந்ததுவே . அதுவரை அங்கே பொய்கை நீரும் அற்ற குளத்து மழை நீரும் உற்ற பாசனம் நல்கியதால் உண்டி வளர்க்கும் உயிர் அன்னம் தந்து உதவிய பாரியென்பேன் தயைகூர் பரம்பொருளே .
கொய்யா பழங்களை கொடைசெய்யும் கோட்டை விளைக்கு தென் இசையில் ஐயன் இல்லம் அமைந்திருக்க பிள்ளைப்பருவம் முழுமையுமே பெருமான் பெருங்கனி சுவைத்தானே. வீட்டின் முன்னே வீரனென வேம்பு ஒன்று தோரணையாய் வாயிற்படிக்கு வடழக்கே வாழ்ந்து கொண்டு வருவதனை வாயால் பாட வரமருள்வாய் வல்லமை யுடைய பரம்பொருளே.
ஒற்றையான தென்னம்பிள்ளை உயர்ந்தே நின்றது தென்கிழக்கே. வாசல் காக்கும் வலுவிழக்க எம் வல்லான் அங்கு இல்லையென்றே வந்து சாய்த்தது கொடுங்காற்று. இல்லத்து புறவாசல் இருக்கும் மனைக்குநேர் மேற்கே வெல்லத்தை வீழ்த்துகின்ற வேர்பலா யான் கண்டேன். அந்த பள்ளத்தில் பல் மரங்கள். அதில் பாடியமர்ந்த பறவைகளும் உள்ளத்தை அள்ளிக்கொள்ளும் உண்மை சொன்னேன் பரம்பொருளே.
மண்ணில் துயர் தாங்காமல் மனம் வெம்பி மனிதன் மரணத்தை எண்ணியே இன்முகனாவான். கண்ணில் கனலெரிய காமன் கணை முறித்து விண்ணே வந்துறங்க வேண்டி தவம் இருக்கும் ஆண்டி கோலத்தில் அருளாளர் அகமலர்வர். ஆறு உடைத்தோ டும் ஐயன் வரும் நாளில். சோறு மழையாகி சுரையெனவே வந்துவிழும். சேறும் அதை தின்னும். எரிக்காமல் சேதிகேளாய். ஏரிகளின் இடுப்பொடிய ஏராளம் ஊர் மிதக்கும். பாரேபார்க்காத பல பிணிகள் பதம் பார்க்கும் பாவியராய் பரதவிக்கும் போதாத காலந்தனை புறம் தந்து வருந்துகிறேன்.
பாகம் 85
சிறிணி உள்ளம் சிறிதும் உறுத்தாது உத்தம அணில்கள் என்றறிந்தும் உளவுப் பூனைகள் புசித்டுமே . வெள்ளைப்பூனை போல் வேடமிட்டு வீணர் கைதடியாய் நின்று விபரீதத்தை விதைத்துவிட்டு வேண்டுமென்றே உடல் வளர்க்கும் கோரப்பூனைகள் கண்சூழ எம் கோட்டைசாமி நடப்பானே .மண்ணே வணங்கும் மனிதரையும் மாண்பு கொண்ட புனிதரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் கல்லறை கட்டி முடிக்கின்ற கயவர் காலடிப் பூனைகளை கண்ணீர் ஒழுக யான் கண்டேன்.
பூனை குட்டியும் தப்பாது யானை கூட்டமும் தப்பாது எல்லாம் புவியுள் புதையுண்டு இருந்த இடமே தெரியாமல் புல் பூண்டும் முளைக்காத புண்ணீர் பூமி ஆனபின்னர் பூப்பான் ஒருவன் பொதிகையிலே. போர்கள் சூழும் உலகத்துலே. இதை யாரும் அறியா திருந்தாலும் அவ்விருவிழிகெட்ட இழியோர்கள் ஐயன் விதியை அறிந்ததைப்போல் அனைத்தும் அறிவேன் பரம்பொருளே கையும் களவுமாய் சிக்கயது அவன் காலடி பதிந்தமலை நாடு. அந்நாட்டிலோடும் வட்டாறு. அங்கு வந்து போனதாய் வரலாறு உண்டு என்பதே என் பாட்டு உன்னிப்பாக நீ கேட்டு உள்ளக்கோவில் தளம் போட்டு அவ்உத்தமன் ஒழிமுகம் வரைவாயே.
நாகம் உண்ணும் குறுநி லத்தை நன்றாய் கெடுத்த வடநிலத்து வேடனொருவன் விரைவானே. வேந்தன் விரியும் பொன்னிலத்துள் வீரியக்கதிரின் பேர்தாங்க காரிருள் நெஞ்சை உள்வாங்கி கடன்பட்டதொரு கைத்துப்பாக்கி உரிமையை ஒடுக்கும் ஓநாயாய் உண்மையை ஓழிக்க முயன்றபடி விடத்தை விதைத்து அழிந்தோரின் வெகுவான வரிசையிலே அகந்தைகொண்டு அழிவானே அறம்பாடி பாட்டாலே.
ஆக்கையோடு எரிவானே எம்கரம் அவன்மீது பட்டாலே . தடத்தை யானே கைகாட்ட குடத்துள் விளக்காய் எரியாமல் குன்றின் விளக்காய் அமைவாயே. முடத்தை நீயே கண்டுபிடி மூலாதார கனல் எழுப்பி ஆயிரம் இதழ்சூழ் கமலத்தை ஐயனுக்கென்றே அற்பணிப்பாய். நாசன் கலியின் உறைவிடமாய் நமனின் பாசப் பிணைப்புடனே பாவம் மலரும் இடம் கண்டேன்.
விழிதிவி மதுவிடம் வழியும் மாடத்திலும் மன்மத விற்பனை கூடத்திலும் உயிர்பலியிட்டு ஊன் விற்கும் உணர்ச்சி யற்றோர் நரகத்திலும் கனகம் குவித்து
கண்ணிழந்தோர் புழங்கும் மானிடர் மத்தியிலும் தினமும் பெறுமே பெருவிருந்து தேடி அலைய தேவையில்லை. துயிலாத சிவன் அடிகள் தூண்டுகோலாய் பின்னிருக்க உருகாத உள்ளம் உண்டோ சிவனில் இணையாத மானிடமே இடருறும் நிச்சயமே .
பாகம் 86
சுற்றமும் அரவாகி சூழ்ச்சியில் வலை பின்ன சுற்றிலும் பகைசூழ சற்றுமே நினையாத முற்றமே முரணாக முல்லையில் விடம் விரிய சித்தர்களருளாலே
சிவனொடு மொழிபேசி உற்றவ ரெவருமின்றி உயிர்த்தெழும் கற்றதோர் கலைதான் இங்கு கண்மணிக்கு கை கொடுக்க சூட்டெரிக்கும் சூரியனார் மெய்யெடுக்கும் சூத்திரமறிந்தே மூலவனாய் எழுவதனை மாலவன் முன் பிறந்து தன் மாணாக்கன் ஆக்குவது மலை பொதிந்த பொருநை வாய் உமிழ்நீர் ஊறிடும் உயர் வரை என்று சொல்லி உண்மையை கக்குறேன். அமரரே மன்னியுங்கள் அடியேன் அடிகளில் பிழையிருந்தால்.
மண்மீது மடமாந்தர் மெய் முழுதும் விடம் புகுந்த வேதிவினை யறுக்க அதை வேந்தர்கள் சலுகை பெற்று வேண்டுமென்றே ஊக்குவிக்க பெரும் வணிகம் மேலோங்கபெறும் கொள்ளையர் ஆரவாரம் செய்துடுவர். பணம் பொழியும் பன்னாடும் பகுத்தறிவுக்கு தடைபோட சினங்கொண்ட சிங்கமவன் சதியறிந்து வலை கிழித்து மலை புகுந்து ஒளிபெறவே ஓராண்டு உள்ளிருந்து உடல் பெறுவான்.
உடலோடும் ஒளடதமே உயிர்பறிக்கும் பின்னாளில். அது முழு அறிவை கைப்பற்றும் அணுவளவே வடிவான அவ்வுயிரி உருமாறி தலைச்சோற்றில் சென்றுறைந்து தான்தோன்றித் தனமாகி தரணி மாந்தர் கூடு இயக்கி கொடுமை செய்யும் கோரத்தை கூத்தனருள் வாக்கு தத்தம் கூறுகின்ற அறம்பாடிகோடுகாட்டி எச்சரித்தும் கொட்டமுடை மாந்தரிதை கேளாது போகலாமோ. கெடுதல் தரும் ஊழ்வினையால் பாழாய் சாகலாமோ
பாரெல்லாம் பரம்பொருளே .
மணிகட்டிய பூனை ஒன்று மால்வண்ணன் பெயரெடுத்து மாநிலத்தின் தெற்கு வந்து அணிசேரும் அறங்கொல்லும் அண்ணனுறை கொடியோடு அணிவகுக்கும் திருவுறை மலர் சின்ன உருவுடை கொடுங்கோலன் கூலிக் கொலைஞர்க்கு பைங்கொடி காட்டி பாவப்பொருளீட்டி ஐயன் உயிர்பறிக்க இயலாது இடம் பெயரும் இழி மகனை யான் கண்டேன். அவன் கொங்கில் விரிந்ததொரு கொலைவல்லான் என்றறிவேன்.
உடல் உண்ணும் கடல்மகளும் ஒளிவீசும் மகனிவன் வருகை தந்தால் மழலையை மார்பணைக்கும் குலமகள் அன்னையென அலை கரத்தால் அரவணைத்து அன்புடனே தாலாட்டும் கலை களஞ்சியம் இவன் என்று காதுக்கு சேதி தந்தேன். பக்தர்கள் புடை சூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்.
இயல் அன்னை பிரிந்ததாலே இன்முகத்தான் அழுததாலே கயல் விழிகள் கரைந்ததாலே காக்கும் குல ஏவல் தெய்வம் கைகட்டி நின்றதாலே கடும் நோய்கள் கடல் தாண்டி உடல் உண்ண வரக்கண்டேன். கற்பக நிலமா கும் காலம் வெகுதூரமில்லை. பொற்கிழியே பொறுத்திருப்பாய். புண்ணியவான் பூத்துவந்து புவி எங்கும் பறக்க வைப்பான் பைங்களிகள் போலே உன்னை . உண்மையிது பொய்யில்லை.
அதுவரை பிச்சைகள் வாங்கியே என்னரும் பிள்ளை களழுதுடுமே. சிவனார் துணிவுடனே சித்தம் தெளிந்து நானிருப்பேன். பித்தம் தெளிந்து நீயிருப்பாய். பிறை சூடி பெருமானின் அருமகனின் குறிப்புகளை மறை நூல்கள் மறைத்தாலும் மறைக்காது யானுரைப்பேன் மன்னுயிரே செவிசாய்ப்பாய்.
பாகம் 87
மழைக்கு ஒதுங்கிய மானிடராய் வடக்கு தூவிய வணிகர்களும் வன்மம் கொண்டு வாழவைத்த தலைக்கு நிகராம் தென்னிலத்தை தகர்த்து எறியும் காலம் வரும். அதைத்தாங்காது துடி துடிக்கும் தக்கதோர் நேரத்திலே வெடிக்கும் நிலமேவாய் பிளக்கும். வானம் அதிர்ந்து வலுவாக அண்டம் நடுங்க எக்காளம் எங்கும் ஒலிக்கும் இயல்பை கேட்டேனே .
நினையாத நாழிகையில் நினைக்கின்ற மாந்தருக்காய் மதயானை தோரணையில் மண்மீது வெடிப்பானே. உருகும் தெற்கில் தீ வளர்த்து தரும தேவன் வருவானே. காசிநாதன் அமர்ந்திருக்க கடலலை அவனின் காலடியை தீண்டி செல்லக் கண்டேனே. கணக்கை தந்தேன் விடை காண்பாய். கண்முன்னே விதைகாண்பாய். உயிர்ப்பிக்கும் அருமருந்து ஊசலாடும் உறியடியை ஓசையின்றி யான் சொன்னேன்.
புயல்போலெழுமென் குலக்கொழுந்தை பழிக்கும் பற்பல புல்லுருவி படிந்ததொரு பொன்னிலத்தில் பாழாய்ப்போன புதர் கண்டேன். இந்நிலத்தில் ஆடிடுமே இழி மொழியர் பற்பலராய் எலும்புத் துண்டுக் காசைப்பட்டு மென்னிலத்தை வன்னிலமாய் மெல்ல மெல்ல மாற்றுவரே. மேதைகளே அறியத் தவறினாலும் இதை ஞானியர் அறியத்தவறுவரோ .வாதைகள் வரட்டும் எதிர் கொள்வான். எம் வான்மகன் அதற்கொரு விடை சொல்வான்.
கல்கியாய் இங்கவன் பிறந்ததனால் கடவுளாய் கோவிலுள் யார் இருப்பர். தருமியாய் தெருவினில் இரந்ததனால் கருவறைக்குள்ளே யார் கிடைப்பார். யாசகனாகி வந்தாலும் எம்மான் மாமன்னன் என்பதை யாமறிவோம். தெய்வமே மானிடன் ஆனதனால் திருத்தலம் எல்லாம் தொழுகையின்றி தோரணை தொலைத்தது ஊழ்வினையே. தோற்றம் இழந்தது வான் விதியே.
நன்னயம் செய்த வண்ணம் நல்லறம் காக்க வந்து நாயோரால் இகழப்பட்டு நரியோரால் சூழப்பட்டு பேயோரால் பீதியடைய பீடையர் இனம் நடுவே பிறப்பெடுத்த ரகசியத்தை தாயே நீ எனக்கு சொல்ல அம்மாயோனை கண்டுகொண்டேன். உறவாடி உயிர் பறிக்கும் விட மாந்தரினந்தன்னில் உதித்தவன் நல்லுயிரை உன்தயவாலேபேணி காத்து தகவிலா வெய்யர் தன்னை கொல்ல அங்கு கோடுபோட்ட கூர்பல்லழியுன் பெரும்புகழை பாட்டில் சொல்ல பேரருள் புரிய பாதம் பணிந்து பாடுகின்றேன்.
அனைத்துயிராதாரம் ஐந்தையும் அழித்தொழித்து சேதாரமாக்கும் சிற்றலை பாய்ந்து பேராபத்தை தர மன்னுயிர் மட்டுமின்றி மற்றுயிர்களும் சொல்லொண்ணா சூடுதழல் பட்டழிந்து சூழலுக்கு உலைவைக்கும் பாழுலகை கண்டு பதைத்தேனே பரம்பொருளே.
வல்லரவு அணுவாகி வாழ்கின்ற இடம் கண்டேன். பொல்லரவு பூரித்து புதுப்புது வடிவெடுத்து புகுந்து கொல்ல பூந்தளிரே புறம் காணா நிலைகண்டேன். பெரும் தொற்று பிணம் குவிக்க பீதியில் நெஞ்சுறைய அருமருந்து வாராமல் அழுதிடுமே எம் குழந்தை . அவலத்தின் ஆழம் கண்டு அரவம் தரித்தோனின் புருவமிடை விழிதிறந்து அருள்வாக்கு யான் சொல்வேன். புவனத்தை மீட்டெடுத்து புத்துயிரூட்டும் எம்மான் வதனத்தை வையத்தார் காணும் வரை வாய்பொகுந்து மூக்கணாங்கயிறிட்டு மூச்சினை அடக்கியே முழு உலகும் ஓடுங்கிடுமே .
அதுவரை வானளவு அதிகாரம் வைத்திருக்கும் நாடுகளும் தேனிலவு சுகம் கண்ட திருமகள் குடிகளும் தீது தீண்டி திண்டாடி பொலிவிழந்து பொருளிழந்து அருளிழக்கும் அல்லல் தன்னை அடியேனும் கண்டேனே அளப்பரிய பரம்பொருளே. நானே சொல்லியும் நம்பவில்லை. நாளை உலகை ஆளுவது நற்றமிழ் காக்கும் தேவனென்று நமனே வந்து நீ சொல்லு. தேனே ஒடும் அத்திருநாடு தேடினாலும் இன்று கிடைக்காது. மானேமயிலே அவன் துதிபாடு. அம்மன்னன் வருகைக்கு அறம்பாடி வானோர் வாக்கினை வரவைக்கும் இவன் திறம் பாடி தேற்றிவிடு.
பாகம் 88
முக்கண்ணன் முறை மகனின் முழு ஊர் சுற்றியே மூலை முடுக்கெலாம் மூடர்களின் முக்கண்மூடா இமையுடன் முழுநாளும் விழித்து இருக்குமென முத்தி நாதன் எனக்குச் சொல்ல அதை பாவிகள் பொய்யென்று பகுத்தறிவில்லாமல் பட்டென்று மறுதலிப்பர். உறுதியுரை யானளிப்பேன். அவ்விறுதி நாள் எழும் போது இன்னல்கள் கொல்லும் போது உறு கயவர்களனைவருமே இவனுற்றாருடன் ஒன்றுகூடி உயிர் பறிக்கும் நோக்கினிலே இமைப் பொழுதும் நீங்காமல் இவனுறைந்த இடம் தன்னில் அடையாளம் அரவமின்றி அங்கிங்கெனா தபடி அரணமைத்து இயங்குவரே .
அமைதியாய் அவனிருந்து அத்தனையும் அசைபோட்டு விசையுறு புயல்போலே வீசுவது தென்னில ஈற்று திருநா ட்டு கன்னி தவமேற்க முப்புறம் கடலுறை கவினுறு சென்னிலமே . சிறைகாக்கும் கறை நெஞ்சோர் சீற்றமுடன் அறை கொணர்ந்து இறையோனிவன் கதை முடிக்க இரையுள்ளே விடம் விதைத்து கொடும்விருந்தே கொடுத்தா லும் கொற்றவன் இன்னுயிரை காக்கும் கடும் பொறுப்பாய் பெற்றகாளியே பிள்ளை யென பேரருள் பாய்ச்ச போர்த்திடுவாள் என்பதனை ஊரறிந்திடவே உண்மை சொன்னேன்.
அக்கொடியோர்கள் தலையை யெல்லாம் கொய்தெடுத்து கூறுபோட்டு மலையெனவே மண்மேட்டில் மாந்தர்களின் மனமகிழ குவித்துடுவான் மன்னனிவன் தலை மீது மணிமுடிதான் ஏறியதும். கண்ணன் கருவறையை கண்ணியமாய் திறந்து நிதம் கமல பாதம் தொழும் நேரம் கயவர் கூட்டம் எழுந்திடுமே கார்வண்ணன் ஆபரண திருவறையை திருடும் நோக்கில் திறந்து பார்க்க திரும்பும் திசைகெலாம் தீமை எழுந்துடுமே .
திறந்தவனும் அழிவானே திணித்தவனும் அழுவானே. முற்றும் துறந்தவனாய் எம் மூலவனிவன் திருவனந்தன் உறை விடத்தில் தேவ ஒளி வீச திருநடையுள் புகுந்த பின்னர் ஆட்டி படைக்கின்ற அடுநோய்கள் அத்தனையும் அடியோடு மாய்ந்துடுமே அருளாளன் மாட்சிமையை உத்தமனே கேளாயோ உலகத்தின் விதி இதுவே .
வேராழம் விட்டதொருவேட்கைமிகு போராளி புயலொத்த ராஜாளி பெரும்பறவை போராலே வீழாமல் சூதாலே வீழ்த்துடுமே . எலிகளுக்கோர் காலம் வந்து மணிமுடிகள் தரித்திடவே புலிகளெல்லாம் பதுங்கிடுமே போதாத காலமென்று. பழியொரு பக்கமாக படுபாவியர் தப்பிடவே சிறை செல்லும் பறவைகளின் சிறகொடிந்த அவலமெலாம் சிலகாலம் நிலைகொளுமே. நெடுநாள் நிலம் வேண்டும் நலம் தன்னை நிறைவேற்றி நெஞ்சார அருள் புரிவான். நிறம்மாறும் மாந்தர்களின் நிறமறியும் நெறியாளன் நேர்மையினை நேரிட்டுயான் கண்டு திகைத்திடவே காட்சி தந்தாய் பரம்பொருளே .
இனத்துக்கே எதிராகி ஏராளம் ஓநாய்கள் பேய்நாய் மன்னனுக்கு பேருதவி செய்திடுமே . எம்மான் வருமுன்னம் இந்நிலத்தை ஆளுகின்ற பொய்யன் தளபதிகள் ஒவ்வொன்றாய் உண்டிடுவாள் நிலம்காக்கும் கொடுங்காளி . மலைமகள் தங்கையிவள் மகவுகளை கொன்றதனால் தளபதி களனை வரையும் தமிழ்ப் பரப்பில் வரவைத்துதன் தாளாத பசிதீர்க்க தழல் மூட்டிப் புசிப்பாளே .இதைகொண்டாடி பூதேவி அகங்குளிர சிரிப்பாளே.
மெழுகாய் மேனியுருக்கி இமையாய் உடன் மலர்ந்த இளவல்களை உயிராய் காத்து உயர்த்துய அண்ணல் சருகாய் சாயும் காலம் அவர்க்கு சற்றுமுதவாத சண்டாளர் பெருகும் காலம் நில்லாமல் உடன் வருவான் வில்லாளன் விட்டதொரு விசையம்பு வீரியத்தில் விரைந் தைய்யன் வருவானே.
பாகம் 89
நளினியின் நடு இதழ்மேல் நாரணன் திலகம் தாங்கி அகிலம் திரட்டியே அறமாய் ஆன்மீகம் செழிக்க அண்ணல் அரும்பணி முடித்த பின்னம் உதித்தது பதிற்று பதினொன்றுடன் மூன்று கூடும் பின்பனி முதல் திங்களாண்டின் பிறை வளர் பதினொன்றாம் திங்களொன்றில் தவமகனாய் பொன்னிதழ் விரிய புடம்போட்ட தேவ குணந்தனில் பூத்து புவனம் மீட்க வந்த புதையலை புல்லரறியா ததை என் சொல்வேன் அண்டம் முழுமையும் அடக்கியாளும் பரம்பொருளே .
முத்தாய் குட்டியிட பின் முழு ஞானம் பெற்றெழுந்தருளி சொத்தாய் பதியமைக்க அங்கு சூழ்ச்சி செய்யும் வேடர் சிலர் சொத்தையாய்விளைந்தனரே. அம் முல்லை வனத்தில் விரிந்த சில மூடர்களும் சீடர்களாய் கருணையின்றி காரிருளிலில் ஐயன் கால்தடத்தை மறைத்ததனை அருகில் அமர்ந்து யான் கண்டேன். ஐயன் தலையெடுக்க வந்த ஆலகால அரவுகளும் விரித்த படத்துடன் வீரியமாய் பின்தொடர வீதியோரம் உடனமர்ந்து அவர் விதியை நினைந்து யான் சிரித்தேன். புகுந்தது செவ்வேள் பொன்னுயிரே இதை பொல்லார்யாரும் அறியாரே .பயின்றது ஈசன் பாசறையில் இதை அறியா நீசர்கள் அழிவாரே என்ற அடித்தள உண்மையை உரைத்தேன் யான்.
உன் பொன்னுரை படித்த பொல்லா ரனைவரும் மீளா துயருற்று தேறா பூங்காய்களொடும் மீளாநர குறைவரென மீண்டும் சொல்வேனே. எம் வேந்தனை மறுக்கும் யாவரையும் அவ்விண்டுவே மறுக்க பாவக்கடலுள் உறைவரே .தெற்கிலுதுத்த திருமேனி இன்று தெய்வத்தாயின் பார்வையிலே உப்பு நீருறைக் கரையோரம் உடல்நலமுடனே ஒளிர்வா னே.
அவன் வெல்லும் நிலம்காண யாம் இருவிழியுடையோனாய் அவன் சொல்லும் சொல்கேட்க இருசெவி கொண்டேனே. அல்லும் பகலும் அயராது அரும்பணி செய்யும் வல்லானிவன் வருகைக்கு எம் வாழ்வை தந்தேனே . இறையோனை இன்னிசையில் ஏற்றழைக்கும் அருமொழி அரபு தனை பெருமான் கைத்தலத்துள் ளுறைந்த கமல மெய்யின் மூவிதழ் கூராய் முடவன் மேட்டையும் அடுத்த அருணன் மேட்டையும் தொடுத்த அறிஞன் மேட்டையும் தோகைபோல் தொட்ட அழகினை தூங்கா விழிமலர் விரிய வியந்து பாங்காய் புகன்றேன் பரம்பொருளே.
வெறியோடு சுற்றிடும் வேங்கைகளும் பசியோடு பாய்ந்து வரும் அரிமாவும் தணிந்து தத்தம் குணமிழந்து தாழ்பணிந்து தங்கமகன் பாதம் முன்னே மண்டியிட்ட எம்மெய் சிலிர்க்கும் காட்சியினை மீண்டும் மீண்டும் கண்டேனே. அரவங்கள் கூட்டாக அரணமைக்கும் அடர்காடு ஐயனுக்கு பொன் வீடு. ஆந்தையர் காக்கையர் அத்தனையும் ஐயனின் தோழன் என்றே யான் அறிவேன்.
பாடிடும் புள்ளினங்கள் முகம் அறிந்தே அவன் பக்கமுறை மரம் சுற்றி வலம் வருமே . குருவிகள் கூடு கட்டும் ஐயன் வீட்டில். குயில் ஓசை கேட்கும் அவன் இருப்பிடத்தில். பைங்களிகள் பக்கத்தில் அமர்ந்து இருக்க பழம் கொடுத்து அகம் மகிழ்வான் அன்புநாதன். ஐயனுள்ளம் நீயுறைந்த ஆலயமாய் அழியாத கருணை கொண்ட காவியமாய் புவியோர்கள் போற்றுகின்ற பொக்கிசமாய் கொள்தற்கு இதை விட என்ன வேண்டும் பரம்பொருளே .
தெய்வத்தின் திருமனதை புண்ணாக்கி தேடி அறம் சிதைப்போர் நிலை கொண்ட மையத்து மாநிலத்தை மண் புதைக்கும் அவலத்தை வையத்தார் அறியாரே. விண்ணில் ஒலித்ததொரு வேதனை பண்ணொன்றை உள்ளில் கேட்டேனே . வீணர் வெய்யரொன்று கூடிவேரமைத்து தென்னிலம் பதுந்த திருமண்ணில் தீரரினந்தன்னை கெடுக்கும் உய்யா உறுபாவம் ஒருவரையும் விடாது. அவ்வினையின் விளைவாய் நடுக்கண்டம் நடுநடுங்கி நாடே அலறிட நகரங்கள் பல புதையும் நாளிகையை நயனத்தால் கண்டேனே.
சிவனின் சினத்தாலே சிதையும் கொடும்பரப்பை இங்கு இனி எவனும் மீட்கத்தான் இயலுமோ எம்மவரே . அவன் மகனின் மலராட்சி மண்மீது மணம் வீசி அறனின் நற்பயனால் அத்தனையும் தழைத்தோங்க திறனார் ஒன்றிணையும் தேவசேதி வெளியிட்டு பறையை அறைந்திவேன் பண்பாளர் பகர்ந்திடவே அன்பாளும் அரும்பொருளே .
முன்னம் நிகழ்ந்தது போல் முத்தமிழ் வேத வித்தகர் வீடுறைந்து கற்பிக்கும் திண்ணைப் பள்ளி வரும். ஆசான் தின்ன காய் கனிகள் வரும். உண்ண அன்னம்
வர உயர்ரக துகிலும் வர உற்ற குருகுலத்தை எம்போல் ஒரு சிலரே யன்றி ஒருவரும் அறியாரே. இதை சிவனாரும் நன்கறிய உன் செவிபுணர வாக்கு தந்தேன்.
பாகம் 90
வெட்டி உண்ணும் மடக்கொடியோர் விளைந்ததொரு நகரினிலே பட்டி தொட்டி இழி மகன்கள் பதிந்ததொரு பாவியராய் வட்டித்தொழில் புரிகின்ற வடக்கர்களின் இணக்கனான வல்லரக்கர் ஆணை கட்க்கு சொல்படிந்து சூது உண்ண எம்மானின் சிரம் வேண்டி இரவில் கூட தேரெடுத்து புரவியென தொடர்ந்தாலும் புவிமகள் போர்வை போட்டு புலிமகனை காத்ததனால் அவர்கள் தொங்கும் தலையோடு தோற்ற கதையானறிவேன்.
அங்கு அழுக்கு பொன் பெற்றவனாய் அரக்ககுணம் கொண்டதொரு பிணம் சுமக்கும் அமரரூர்தி பெற்ற அற்பன் அறம் சிதைத்த அவலங்களை ஆதிசிவன் நாமமோதி அடியே னானறிவேன். மீதிகதை நீ சொல்வாய் மேதகு பரம்பொருளே.
மறவன் குடியாண்டு மண்ணில் இருப்பு கொண்ட கொடிய குலப்பேய்கள் கூடியே பிறப்பெடுத்து ஐயன் இறையருளை அணுவளவும் அறியாது கருமானொருவன் காசு பெற்று உருக்கிதந்த கையரிவாள் வீச வந்தோர் அவனருளை இழந்ததுடன்
அவ்வுலகையும் இழந்தனரே . நீதிக்கு விலையெழுதி நிறமாறும் இழியோனும் பாவிக்கு துணையாக பக்கபலம் இருந்தபடி வாதிக்கு எதிராக வாக்குரைக்கும் கொடியோனும் தீ சிதைக்கும் நரகுறைந்து திரும்பி வர இயலாமல் நாயினும்
கீழோனாய் நாப்புலர அழுதபடி நீணிலத்துல்அழிவானே .
அகிழுமும் அவன் வாழ்வு இவ்வுலகோடு நின்றுவிட குஞ்சோடு குலமழிய கூடுவிட்டு பறந்த பின்பும் மறுவாழ்வே இல்லாமல் மறலிக்கே விருந்தாகி பீடைப் பெருங்கடலுள் பிறப்பெடுத்து உழன்றிடுமே .பதிற்றிரண்டு பருவம் தன்னில் பார்த்திபனின் வாழ்விலொரு நேர்த்தியான கருமமொன்று நிகழ்ததுவே ஊழ்வினையால்.
உற்ற பிதா உயிர்துறக்க உள்ளுளைச்சல் அலைக்கழிக்க பெற்ற தயை இயல்புடனே பெருமளவு துளிர்த்ததாலே தரணி நிறை பல்லுயிரும் தம் போலே பிரிவுதாங்கா பெருந்துயரில் பாதித்து வார்த்தை யின்றி துடித்தழமுமே என்றெண்ணி தீது தாரா திருவழியை தேர்ந்தெடுத்த அன்று முதல் அருமகனார் அகனமர்ந்து பச்சை காய்களுடன் பல்கனிகள் மிக்க உண்டு படியரிசி பருப்புணவை ஆகாரம் ஆக்கியே அடிப்படையாய் வாழ்வான் ஐயன். புலாலெனும் கொடும்புலியோ புண்ணித்தை கறை படுத்தி மறை ஏறா மண்டையாக்கி மண்புதைக்கும் என்றறிந்து கருணை தன்னை காவுவாங்கும் கடும்விடமாம் ஊனுணவை சிறுமையென ஒதுக்கிவிட்டு சீர் நெறியை பின்தொடர்வான்
சிவனாரின் உவமையிலா சீர்வேளாம் செல்லமகன். ஒவ்வொன்றும் தன்னுயிராய் ஒத்துக்கொள்ளும் இறைமையிகு இளங்கதிரோன் உலகாளும் நாள் இனி ஒருபோதும் அகலாது அருகில் வரும் காரிருள் மறைத்த உன் கண்மணிக்கு ஒளியும் வரும். காசினிக்குமொரு தெளிவு வரும்.
தேனுண்ணா தேவதேவன் இவன் போல் தேடி யானும் காண்டுலேனே. மீனுண்ணா மேன்மகனாய் மேனியில் இவனை கண்டேன். இவன்போல் ஊனுண்ணா உத்தமனாய் ஒரு சிலரை மட்டும் கண்டேன். தோலில்லா காலனியை இவன் தாய பாதம் தன்னில் கண்டேன். அனைத்துக்கும் முன்னோடி ஐயன் வாழும் அறநெறியே கடும் தவத்துற்கு இணையாகும் என்று கூறி கற்பகமாய் போற்றுகிறேன் கமலமன்ன கால்மலரை ஒற்றுகிறேன்.
வானோர்கள் வரவேற்கும் வாழ்வியல் அறநெறியை கடை பிடித்த ஆர்வலர்கள் தாழ்வடை யார் என்பதனை யான்கூற கேளாயோ எம்மினமே மீளாயோ. எம்மான் வாழ்வில் என்றென்றும் பெரும்பகுதி கோபாலுண்ணா கொள்கையுடை அரும்பிறப்பாம் கோபாலன் பிறப்பு கண்டு யாமும் அகிலத்தி ல் இன்னல் தரா அவ்வழியை அடியொற்றி தொடர்வேனே அன்புநிறை ஆழியின் அடுத்தளமாம் பரம்பொருளே. .
பாகம் 91
மும்மொழியறிவான் எம்மான். முத்தமிழறிவில் வல்லான். வான்தமிழறியும் ஐயன் வடமொழியறிவே இல்லான். தேன்தமிழ் கவிதையாத்து தேவதைகளையே ஈர்ப்பான். தமிழொடு ஆரியம் புணர்ந்து தனிப்பெரு மொழியாய் உதித்தமலை மொழியறிவான் ஐயன். திரை கடல் தாண்டி வந்து நம் தீரரை சதியால் வென்று தரையினை மொழியால் இணைத்த துரை மொழி இலக்கணம் அறிவான்.
கண்ணீர் விட்டழுதபடி கன்றுக்காய் மகனை கொன்ற கடும் நீதிச் சோழன் வந்த மண்ணுக்கு சொந்தக்காரன் மாண்புடை எம்மான். இன்று மலை நாட்டோரம் மலர்ந்து மண்காக்க மாயோன் மறுபிறப்பாய் உதிப்பான். புண்ணீரொழுக தொடையறுத்து புறாவிற்கு நிறைதந்த கருணைக் கடலாம் சிபி
தேவனுத்த சீர்மண்ணின் மணம் மாறா மைந்தனாய் இவனை கண்டேன். தகடூரான் முரசுக்கட்டிலில் தளர்ந்து துயின்ற தமிழ் கவிக்கு தன்னிலை துறந்து சாமரம் வீசிய தமிழ்தொண்டை இணையிலாது இவன் வடிவில் கண்டேன். பங்கயத்தார் வஞ்சகத்தார் பைந்தமிழர் நெஞ்சகத்தில் மதமெனும் விடம் விதைப்பார் பிணங்குவித்து நிலம் சிவக்க சூது பல செய்திடுவர். நலமானநம் நாட்டின் தென்பரப்பில் உறங்காது ஐயன் உலவும் இடம் உறங்கா நகர் போலிருக்க கீழோர் இயங்கியே இயந்திரமாய் இவனைச் சூழ்ந்து சுற்றிடுவர்.
ஐயன் இருப்பிடத்தை அறிந்தோர்கள் வரிசையிலே மையத்தை ஆளுகின்ற மதக்கொடியோர் மலரொன்று தினமும் மலர்ந்த வண்ணம் தென்னிலத்தில் இதழ் விரித்து தீமைக்காய் தீவளர்க்க அதை தினமலமென்றே யான் நிதமும் சபித்துடுவேன். பித்தன் அருளுடை பெருமானிவனை
சித்தனென்று அறியாமல் அற்பனென்றும் அகம் அவிந்தோ னென்றும் எத்தர்கள் பட்டம் கட்டி இழிசெயல் விதைத்தது என்னவோ இங்காயினும் இதை விதித்தது
அங்கென்று விழியுடையோர் நன்கறிவர். மலம்கழிக்கா மாந்தரிவர் மார்களிக்க மதம் தூண்டி மனம் குளிர இனம் தூண்டி ஊர் முழுக்க விடம் ஊன்றி உடல் வளர்க்கும் இனம் நடுவே ஏறெனவே நடப்பானே எம்மையன் கிடைப்பானே .
ஆழிசூழ் அகிலம் முழுமையும் கோபி சந்தண பாதம் கோவிந்தன் அவை முளைக்க அதிலொன்று தமிழ் முக நெற்றிச்சுட்டியாய் நெய்தலூரில் நீலக்கரை யோரம் நிலம் பிடுத்து நிலையாமடம் பதுக்கும். ஆயினும் அநீதி காப்போர் ஆயிரமாயிரம் அங்குறைந்து ஐயனுக்காய் விதித்த அமுத கலசமிரண்டை அபகரித்து வங்கம் கடத்தி வாய் சுவைக்க அருந்தி களிப்பர்.
இதன் பின்னணியில் நாலாயிரமாண்டு முன்னம் நவநீதன் தூவரகை விட்டு நாடுபெயர்ந்த நரியினம் ஒன்று தென்முனையாம் திருவனந்தன் புரியாண்ட திருமேனியர்க்கு அறுசுவையில் ஆக்கும் பணிபுரிந்து அரச குற்றம் இழைத்தனால் அங்கிருந்தும் அகற்றப்பட்டு வாட்டாற்றான் வாசலுக்கும் தென்திசையில் வாழ்வோரை வஞ்சித்து வாழ்ந்திருக்கும். இதனுடன் நஞ்சுறை நாயினங்கள் ஒன்று சேர்ந்து நன்நெறி யனைத்தையும் கொன்றபடி அறமீன்ற இவ்வழல் குஞ்சை அழிக்க வந்து இயலாமல் போக இவன் வாழ்வை முடக்கப்போ ட்டு அற்ப பொய்யருடன் அழியும் வெய்யரை ஏவியே அவன் பூங்கண்ணீரருந்தி புலனின்பம் கொள்வதனை கண்ணாரக் கண்டேன் பரம்பொருளே.
நாளும் நலம் செயாகோளும் நாதனருளிருந்தால் ஏது செயும். எமக்கெனவே நலம் செய்ய இயன்ற ஐயன் நல்லுடல் இன்று ஆலய இருவாசற்கருகே அல்லபட்டு உறங்கக்கண்டேன். எல்லா உயிரும் இன்புற எண்ணும் ஈடிலா நல்லகம் கண்டேன். நானும் துயர் கண்டு நடுங்கா ஐயன் பொற்றாள் பணிந்து புத்துயிர் பெறுவேன்.
பாகம் 92
கானகநீர் வைரமென கனகம் செண்பகம் வேங்கையொடு பாலும் தேனும் ஓலமிட ஒன்பது வெள்ளிபுடவைகளை பாறைத்தறிகளில் நெய்தெடுத்து பளபளக்கும் தாவணியாய் பூமகள் மேனியில் போர்த்துமி டம் காவிரி தலைவன் பெயர் கொண்ட பூமுக குறுமுனி மாமலையில் கண்கவர் கைத்தல விரல்களென ஐஞ்சுனை தெறிக்கும் நெடுவரைக்கு நேர்தெற்கே நெடுங்கோட்டில் ஆறரை காதம் பறந்து வந்து அரவினில் உறங்கும் திருமால் திருப்பதியாய் யொன்றை அடியேன் கண்டேனே .
அடிஎடுத்து தொழுதபடி ஐயன் தீரன் திருவிதியை தெரித்துகொள்ளும் நோக்கினிலே யானே மாலனை கேட்கையிலே வட்டாற்றிற் கருகினிலே வந்துதிக்கும் எம் திட்டம் தவறாய் போகாது என திட்டவட்டமாய் மொழிந்தனை என் திருச்செவிகொண்டதை தந்தேனே .அழியும் விதியோர் அவனி முழுமையும் அலையென எழுந்து ஐயனை அழிக்க நினைத்தும் அழியான்.
அரம்பையர் அல்குல் அதரம் கொடுத்தும் அதனுள் உறுதியாய் நிலையான். இன்பத்தேன் சுவை இல்லறம் தன்னில் இறுதியில் இரண்டற இணையான். பகைவனை க்கூட பண்புடை வேந்தன் வாழ்வில் என்றுமே சதியான். பதியாம் பன்னகமணிந்தோன் பரமபதத்தில் பதிவான். பகைவர் நினைத்தும் பாழ்மக்கள் சினத்தும் பாரை விடுத்து ஓழியான். நெருங்கி வந்த நீசர் நெஞ்சில் நிழலாய்கூட நிலையான். இந்நீணிலம் ஆள்வதே இந்நீதிமான் நெற்றியில் நேர்த்தியாய் எழுதியவிததியாம். அவ்விதியை க்கூடவிரும்பா பெருமான் நெற்றி க்கண்ணுடன் ஒளிர்வான்.
தன்பாலிணை தேடும் தகாதவிரும்பி யென சிறுமை பெயரெடுத்து செய்யா வினைக்காய் சிலுவையை சுமப்பானே .மதவெறியர் பின்னின்று மறைவாய் உரை பரப்பி ஐயன் மலர் மனம் அழும் வண்ணம் சிதைப்பாரே. மரை மகளாம் திருமகளின் மனம் நிறைந்த மணாளனாய் அவனிருக்க மலமொத்த மாசினையே மாண்பற்ற வேசி மக்கள் மனம்போல இறைப்பாரே .
மூடர்கள் மனங்களிக்க முக்கண்ணன் அகம் கொதிக்க அவ்வீணர்களழிவதனை எம் விழியாலேயான் கண்டேன் ஒளியாகி உயிர் காக்கும் ஒப்பற்ற பரம்பொருளே . அறம் வாழ்த்தும் எம்மையன் அமைவிட குடக்கே அரணமைந்த ஆலம்வரைத் தொடரை அகமிழந்தோர் கொளுத்த விடியும் வரை வெறியொடு தழலெரியும் வேதனையால் வாழுயிர்கள் மலையுள் ௧ருகி மடியும். கருணையே வடிவாய் ஐயன் கண்ணீர் பெருகும் காண்பவர் நெஞ்சோ உருகும்.
அங்கதன் உச்சிக் கரும்பாறை ஒன்றமர்ந்தது உறங்கும் களிறுபோல் காண குணக்கே குமுதமும் கமலமுமாய் கவினெழில் கண் பறிக்கும் பெரும் பொய்கையொன்றின் பெருமை கண்டேன். பிறந்தது பிறிதூராயினும் அங்கெம் அமுதன் இடம்பெயர்ந்ததாய் அறிவேன் நன்றாய். ஐயனுதித்தால் அழிந்தோம் தானென்றெண்ணி ஆன்மீக அற்பராயிரம் அஞ்சி நடுங்க அதிலொருத்தி அமுத பெயர்தாங்கி அகத்துல் விடம் ஒங்கி பரவர் குலத்து பாதகியாய் பாவபொருள் குவிக்க சேரன் நடுநாட்டில் சீருறை கடல்கரையில் கொல்லும் மடமமைத்து வில்போல் விரிந்த திருமார்பன் வேகாதலை கொய்ய விரும்பும் முப்புரி தரித்த தீயோர் குழுவில் தீயெனவே இணைவாளே தீதறுக்கும் இறையோனே.
சித்தரின் வேடந்தாங்கி சிற்றினத்து எத்தர்கள் திக்கெலாம் எழுவாரே. தெய்வத் திருவாய் அமுதென்று வக்கிலார் வாக்கெலாம் தேனாய் பொய்புனைந்து தருவாரே . மெத்தபக்தி நீதிமானார் மீது பற்றி படர்ந்து வளம் பறிக்கும் உற்ற மடங்கள் பல தோன்றி அட்டைபோல் உருஞ்சும் சூழல் உருப்பெறுமே . ஒத்த அரசே ஒத்துழைக்க ஒளியுடை ஆலய பொன்னை புசிக்க கண்டேனே .
வலுப்பெறும் இத்தகு நிலை இகமதில் எழும்பொழுதே அண்ணலே எழுந்து வேடரை வேரறுத்து விண்ணீதி விதைக்க விரைந்தே வருவானே. அண்டமிறங்கி அவன் வருவதை சிந்தை அடக்கி செவ்வெனவே யான்கண்டேன் எந்தையாய் இருந்து யுகங்காக்கும் பரம்பொருளே .
பாகம் 93
கருமம் முடிக்க வேண்டி காரிருள் இல்லறத்துள் தருமியாய் இயங்குதலுக் காளான ஈசனருள் கல்கி அண்ணல் தருமம் தலை காக்க தரணி ஆளும் கருமம்
அவனைச்சேரும். அதன் உரிமம் வழங்கியதோ ஓப்பரிய பரம்பொரு ளென்பதனை உணர்ந்து கொள்வாய் பூவுலகே .
குருவருள் பெற்று குறையுடை மருள் புவியை நிறையுடை நன்னிலமாய் ஆக்காது போக; உறைவிடம் விட்டு ஐயன் மாய்ந்திடு வானென்றெண்ணி தானே
துளிர்த்த தளிர்நிறை புதர்களையும் தண்டுறை மரங்களையும் மனம் கெட்டோர் அகற்றிடுவார். மானே நீ அறிந்துடுவாய். மன்னவர் மன்னவனோ மறைந்திடுவான். மீண்டும் மறுமலர்ச்சி யெடுத்திடுவான்.
சந்திரன் கிழமைகளில் சரக்குகள் குவிகின்ற சந்தைக்கு குடக்காக சாய்ததள [மேட்டிலிருந்து பள்ளத்திற்கு இறங்குகிற சாலை அதாவது அது இறக்கமான சாலை] சாலையிலே சற்றேறக்குறைய பெருங்கோலாயிரமாய் பிடிக்கும் தூரம் நீ நடந்தால் முக்கனிக்கு நடுக்கனியாம் முள்கனி கோடுறைந்து மும்மலமூறிய உற்றாரோடு ஐயன் உயிர்பறிக்க துணிந்தவன் தோற்றிடுவான் உறு கயவர் தோழனவன்.
அரவம் போல் பல அரிமா குழுவுடையான் அரிவாள் படையொடு அதீத தொடர்புடையான். நம்மையன் குலத்துள்ளே கொடும் பகையாய் உதயமாவான்
இக்கொடும் வணிகனவன் தமையன் தன் தலைவாசல் முற்றத்தில் தகாத உறவுக்காய் குற்றுயிராய் கொலையுண்டு குருதி கொட்டி மடிந்திருப்பான். ஐயன் கிளர்ந்தெழுந்தால் வையம் எதிர்கொள்ளும் வளவாழ்விற் கெதிராக வாழும் வெய்யரையே வேரொடு வீழ்த்திடுவான் என்ற விதியை அறிந்ததனால் வீண் வட்டி பொருளீட்டி வெகுவளமாய் வாழுகின்ற வடமண் வணிகர்களின் வாழ்வே தொலைந்து போகுமென கேடில் ஐயனுக்கு கெடுதிகள் அத்தனையும் நாளும் பொழுதெல்லாம் சிற்றினத்துதவியோடு திட்டம் பல தீட்டி திகிலொடு செய்தபடி தொடர்வார் தம் இழிசெயலை .அழுக்கெல்லாம் அகற்றிய பின்னர் அகிலம் முழுமையும் செழித்த மண்ணில் பறவையினமே பண்ணிசைத்து ஆடுவதை பார்க்க சிலரே இருப்பர்கள்.
பாழ்மாந்தர் பல பேர்கள் படுபாவ சின்னங்களாய் பாராது மண்ணிலடங்கிடுவர். என்பாடல் கொண்டாடும் இனியநாள் இனி வருமே . ஈரேழுலகாளும் ஈசன் மீது ஆணையிட்டேன்.அறம்பாடி அருள்வாக்கு இருள்வாக்காய் பொய்த்துடுமோ . ஆரூடம் யானிசைத்து அரங்கே றாவிட்டால் அப்பிறை சூடிபெருமானை எப்பிறப்பிலும் நாடேன். அதற்கீடாக பேய்களுக்கு பூச்சொரிந்து பெருவாரி துதிப்பேன். கூற்றுக்கு கூற்று யான் கூறுவதும் திண்மை . இதில் நூற்றுக்கு நூறு நடைபெறுவதும் உண்மை .
வேற்றுமை பாராத விடிவெள்ளி தோன்றி ஆற்றிடும் அருந்தொண்டை அனுபவித்த பின்னே அடியேனும் நிறைவோடு அறிதுயில் கொள்வேன். தேய்பிறை நாளில் திடீர் தீகக்கி வானில் வீறுடை குழவிகள் வீழ்ந்து சிதறும். வெப்பத்தால் மன்னுயிர் வெந்து சருகாய் கருகும். மேலைப்புவியே துடுத்து பதறும் வடகுடக்கே காதமாயிரம் கடந்தமைந்த கடற்குதிரைக்கு இடப்புறம் இருசேர் கருணை கிழங்கு பரப்புடை பரவைக்கு இக்கரையிற் வான்கோழி கூவ அக்கரையிற் ஆணவத்துடனே செஞ்சீலை பிடித்த செவ்வெளிர் மாந்தரின் மண்ணே செம்மண் ஆகி செந்நீரோடி சிவக்கும் கண்ணே நாடுகள் பிரிந்து நாணம் கெட்டு அணிமாற அழலுள் சிக்க அகிலமே எரிய அதனை எழுத இது புதனமல்ல பொற்புடை பூவே.
வதனமொளிரும் வான் மகனிங்கு வரம் பெற்றெழுந்து வல்லமையோடு வருவான் தாயே. புவியில் எங்கும் போரோசை ஓய அவன் பூவிதழுதும் பூபாளம் கேட்டேன். அப்பூமா னெழுச்சயை பொறிவிழிகண்டதை யாரோடு பகர்வேன் எம்பெருமானே .
ஐயனின் வருகை யொரு அருமருந்தாய் இருக்கையிலே மெய்யினை சாய்க்க வந்து மிரட்டும் கொடும் பிணியே உன்னிடம் துணிவிருந்தால் உடன்பட்டு எதிர்த்து வந்து என்னிடமுன் வீரம் கா ட்டு. உன் மிரட்டலுக்கு யானோ அஞ்சேன்.மென்மேலும் யான் எங்கள் மீட்பனுக்காய் காப்பேன்.
அரவம் மெத்தையில் அறிதுயில் கொள்ளும் மலைநில அனந்தன் மறுபிறப்பெனவே மார்த்தாண்டன் வீரியம் தன்னை மனதில் கொண்டு மண்ணீதி காக்க ஒரு மன்னனாய் வருவானென புராணங்களுரைக்காது போனாலும் எம் புவியன்னை அவன் கலத்தடமயறிவதில் கைதேர்ந்த வல்லாள் என்பதனை காதோரம் சொல்ல வந்தேன் கண்மணியே செவி சாய்ப்பாய்.
பாகம் 94
இரண்டாம் மலராக எம்மானில்லாள் சூலகத்துள் கொடையா லுறைந்து கூதிர்காலத்தில் குறையாய் மலர்ந்தும் மலராது மண்பாரது சிதைந்துடுமே அம்மலர் மதி சிறையுள்ளே .பேடைப்புறா வாகி பின்னம் பிறப்பெடுத்து பெருமான் முற்றத்துல் வளர்ந்த கதையறிவேன். வானவருமிதைறிவர். வானில் பறக்க ஒண்ணா வன்சீக்கு தாக்கியதால் விழிகளிழந்தவளாய் மலர்ந்த மாசுறு மண் வீட்டின் ஆசுறு வினையறுத்து அவ்வீடு சேர்ந்ததனை ஐயனும் நன்கறிவான் அக்கதையை அடியேனும் நன்கறிவேன் .
எம்மான் இடம்பெயர்ந்த இல்லத்தருகிலே இருநூறு கைமுழம் தொலைவிலே இணைபிரியா இரும்பு வடம் இரட்டையர் போல் கிழக்கு மேற்காய் தடம்பதிக்க அவன் வாசலுக்கு வடதிசையில் இழுவை வண்டி நாளிகைக்கு ஒன்றாக நடுநடுங்க விரை ந்திடுமே . அது அரவரசன் ஆலயப்பதியையும் அனந்தனுறை அருள்மிகு புரியையும் நாற்காதம் நீளத்தில் நன்றாய் இணைத்டு மென்பதனை நாதர்முடி மேலிருக்கும் நல்லரவன் எனக்கு சொல்ல நானிதை நம்பி வந்த நன்மகன் உனக்கு சொல்ல நம்புவதும் நம்பாததும் நாளைவிடியும் போது நாடறிய தெரியுமைய்யா. நான்பாடும் அருள்வாக்கு அப்போது புரியுமைய்யா .
நிலத்தாமரை மணம் வீசும் நெடுமலையை தலைப்பாகையாய் யணிந்த வடபுலத்துல் வாழுன்ற மலர் முகத்தில் திரையிடுவோர் பல காலம் படும் துயரை ஒருக்காலும் பொறுக்காது உளம் கொதிப்பான் எம்மைய்யன். அங்கு கமலம் கையாண்ட கர்வத்தில் கண்ணீரொடு உதிரம் குடிக்கும் ஓநாயினங்களின் உயிர் பறித்து ஒறுத்துடுவான். இமயத்தலை தாங்கி இமைபோல் எமை காக்கும் உமை ஒரு பாகன் தலை மீது ஆணையிட்டேன் தங்கமே நீ கேளாயோ.
நம்மைய்யன் மலைபோல் நம்பியவர் அனைவருமே நட்டாற்றில் விட்டதனால் நம்பி நம்பி ஏமாந்து நம் நாதன் மனம் நொந்திடுமே. நாளெல்லாம் நினைத்த வண்ணம் நல்லிதயம் வெந்திடுமே. நம்பிக்கை தகர்த்தவராய் நண்பர்க ளனைவருமே நன்னெறிக் கெததிராக நன்றி கொல்வார் பொன்மகனே .
காவிரி நதியை கைதுசெய்து கமண்டலத்துள்ளே அடைத்த முனி பாதியை பொன்னியாய் தவறவிட்டு மீதியை கொண்டு பொதிகையிலே மீன்களோட விட்டதொரு திரிகூடன் மாமலையுள் திரிந்தலைவான் கால் கடுக்க தீரன் எம்மான் தேர்ந்தவனாய் வீரம் விளையும் மண் காக்க; வேண்டும் நல்லோர் நலங்காக்க ஈரமுடை அகமுடையான்.
சுத்தமாக்கி இப்புவியை பக்தி மயம் ஆக்கி டவே ஐயன் சத்தமின்றி புறப்படவே யுத்தம் உடன் நடைபெறுமே. நித்தமும் போர் மேகம் நிலமுழுக்க சூழ்ந்திடுமே . நெஞ்சடக்கி புலனடக்கி நெடுவரைக்குள் குகை புகுந்து கொற்றவன் தவம் செய்ய கூற்றுவன் விருந்துக்கு மற்றவர்கள் பட்டினியால் மண்மீது மடிந்துடுவர்.
கெட்டவர்கள் கொள்ளையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி கொள்வர். பெண்டிற்கு காவலின்றி பிறப்புறுப்பு புனிதம் கெட கண்டவர்கள் களவாடும் கருணையிலா கொடும் செயலலை கண் சிவக்க கண்டேனே காத்தருள்வாய் பரம்பொருளே .
பாகம் 95
உலகிற் கொளியேற்ற உதயமான பொன்மகனை ; உங்களுள் ஒருவனாய் ஒழிந்திருக்கும் பன்முகனை ஒருவராலும் இனம் காண இயலா தென்மகனை என்னாலியலும் என்பதனை இறையானாரே நன்கறிவார் என்பதனை நீயறியாய். என்புதோல் போர்த்திய இன்னுடலில் இருளகற்றும் சக்கரம் சுழலாது மிலேச்சனாய் இருந்து மேதினிக்கென்ன பயன் ?
ஆண்டியின் கூட்டத்தில் அருளாளன் அவன் மலர்வான். அம்புலியன் இருள் மாய்த்து என்றென்றும் உடனிருப்பான். வேண்டும் வளமனைத்தும் வேண்டுவோர்க்கு விளைந்ததிடவே விண்டுவின் தேரணையை அவன் தரித்து வீரிய கல்கியாய் உருவெடுப்பான். ஐயன் நீதி அங்குறை தேவருக்கும் பீதி தரும் மேன் நீதியாதலால் மாண்புடையோர் எம்மவனை மன்னவனாய் வணங்கிடுவர்.
மடம் அமைத்து பணம் பறித்து மனம் ஈர்க்கும் அற்ப வேடம் அய்யன் அவனிடுவதில்லை. தீமைக்கு துணைபோகும் பேய்களுக்கு பலிகொடுத்து தெய்வத்தின் திருப்பெயரால் அருள் வாக்குரைப்பதில்லை. வேத விற்பனனாய் விடியும் வரை வேள்விகள் வளர்ப்பதில்லை.
நாதன் நானென்றுரைப்பவ னெவனும் நம் நாதனுக்கிணை யில்லை. நாயகன் இவனென நாரணன் உருவென நான்முகனே நன்கறிவான். பின்னேனிதை சொல்ல வந்தேனென்பதை பேரவாவில் நீ வினவ பாரறிய யான் பகர்வேன். தானே அத்தலைவனென்றும் தரணி மீட்பன் தானென்றும் ஒப்புதல் வாக்குமூலம் ஒருபோதும் உதிக்காது இவ்வுத்தமன் வாயில் என்றும்.
பொய்யருடன் புல்லரும் பொருள் குவிக்கும் போலிகளும் தானே அவன் என்று தம்பட்டம் அடித்து நிதம் தயங்காது தரங்கெடுவர். நான்முகன் குமரிகளாய் நறுவெண்ணெயுடை யணிந்து மேன்மக்களை குறிவைத்து மீட்பர் வேடமிட்டு மிடுக்காய் நல்லான்மீகம் போர்த்தியலையும் பொல்லார் கூட்டமொன்றும் உத்தமனிவன் உயிர் பறிக்கும் திட்டமுடம் உலவியதை என் தீக்கண்ணால் தெளிவாக யான் அறிந்தேன்.
இளம்பருவம் தன்னில் இசை கருவியொன்று விரல் தழுவி இனிக்க வரும் நன்று. பள்ளிக்கு பின்னும் பல்கலைக்கு முன்னும் பதமலரால் பந்தாடி பெற்ற பற்பல பதக்கங்களும் உண்டு. இறகுகள் பறந்த வண்ணம் எழுப்பி களியாடும் திறன் படைத்த வல்லானிவனை கலையே வடிவுடை கல்கியென யான் சொல்வேன். கண்ணிருந்தும் கண்மணியை காணயியலாதார் கண்திறப்பாய் பரம்பொருளே.
காளையாய் கழித்த காலம் கடும் காமம் மேலோங்க மானமழிந்த மாழைக்கூட்டம் மன்னனுக்கு புணர்ச்சி தர பால்வினை விடத்தாமரையும் படர்ந்து வர பத்தரை மாற்று பைம் பொன்னங்கத்தை பாழ்படுத்தி அண்ணலை அலைக்கழித்த அவ்விதியை யானறிவேன். முருகப்பன் முழு வரத்தான் முத்தமிழ் வளர்த்து வந்த மூலப்பொருநையை ஈனும் மலையிடை தீர்த்தம் கொண்ட பொதிகைவாழ் திருமுனி பூதேவிக்கு சித்தமாயருளிய சிவமருந்தால் சிதிலமடைந்த சிந்தாமணி நறுமேனி நலம் பெற்ற நல்விதியை நானறிய நல்லோரு மறியட்டுமே பரம்பொருளே.
பசிறியா மாந்தர் கூட புசிக்க உணவிலாது புரண்டழுவர் பட்டினியின் பிடியில் சிக்க படாத பாடுபட்டு நசி என்றும் பாராமல் நாடு விட்டு நாடு சென்று நாய்படாத பாடு நலவாழ்வடைவாரே. அகிலம் முழுமையும் போர்கள் வெடிக்க அழுகுரல் பூமியில் எங்கும் ஒலிக்க விதிகள் தளர்த்தி வேந்தனை தருமே. வீட்டுள் முடங்கிய ஐயனை விடுமே.
இரு நிலத்திற் உடல் பதித்த இணையிலா உறு நாட்டில் முத்திரையிட இயலா முகம்படைத்தோன் அரசனாகி அகமுறை ஆணவத்தால் ஒட்டிய குறுநிலத்தை உரிமையொடு அடக்கியாளும் பெரும்போரால் பேரண்டம் எரிந்திடுமே. அது மொத்தமும் அணைய மூன்றாண்டுகள் முடிந்திடுமே. முக்கண்ணன் ஆளும் முழ உலகை மூர்ச்சையாக்க மூடர்கள் முயன்றாலும் முத்தமிழ் வேந்தனவன் முற்றிலும் அகற்றியே சுற்றிலும் அறம் வளர்த்து சுடர்வீசும் நலம் பதிப்பான்.
பாகம் 96
ஐம்பதுகளின் எட்டை எட்டும் அன்னாளில் ஐயன் பூத்த அதே பொன்னாளில் உறைபனி உளியமுலவும் ஒப்பிலா செல்வச் செருக்குடை செழுநாட்டின் அதிபனே அகிலம் அதிர மூன்றாம் அழலின் மூல விதையூன்றும் ஊழ்வினையை அகிலாண்ட நாயகியின் அகம் காண அதை அறம்பாடி அருள்வாக்கால் புறம்பாட புகல் வேண்டும் மாந்தருக்கு வழி சொல்வேன். பொறியாலே விழிகொண்டோன் பூந்தாளே கதி என்பேன். அவனை போற்றி போற்றியே ஒளி மதியை யான் பெற்றேன்.
நாதியில்லா நாடுகளின் நிதியனைத்தும் நாநிலத்தின் நீர் வளம்போல் பாதியாய் சுண்ட கண்டேன். பின் நாடுகளின் கொடிகளெலாம் ஒடுங்கி நாயகன் நாவாணைக் கிணங்கி ஒர் கொடியை ஏற்று உலகில் ஒளிவீச கண்டேன். அருநீரும் அன்னமுமுண்ண கிடையாமல் விழிநீர் வழியும் காலம் விரைந்து வந்திட அகிலமே அற்ற குளமாகி அலுத்துப்போக உற்ற வளம் பற்றாது உயிர் வலியெடுக்க புவி பெற்ற சரித்திரமாம் புத்தம் பிறவி ஆளுமையுடையோன் அருளால் தரித்திரம் தானே தலைமறைவாகும் புரிந்திடு பொன்மகனே.
குன்றுகள் சூழ கோட்டான்கள் கூவ கண்ணீர் கன்றுகள் கதற காரிருளுறை கற்குகையுள் குடி பெயர்ந்து பெருங்குடி மாந்தரே பீதுயிலுறைந்து கூதிர் காலத்தில் குலை நடுங்க வாழும் கொடுஞ்சிறை காலம் கூடி வருகை தர அகிலத்தின் நகரமெரிய அந்நரகத்துள் வீழ்ந்தாற் போல் நானே உணர்கின்றேன். ஒடுங்குவோர்க்கு ஒப்பிலா மனமிரங்கி உன்னுயர் முடியுறைந்த நல்லரவின் விடமிறக்கி நலம் செய்தாற்போல் துயர் கொய்வாய் வல்லரசின் வல்லரசாய் வலிமை கொண்ட பரம்பொருளே.
மஞ்சளும் செம்மையும் மண்ணில் இணைய மாமலை குடக்கே மன்னுதிரம் நதிபோல் ஓட உலகே திகிலால் உறையும் காலம் உரைக்காமல் உருகும் மனிதநேயம். கண்களில் நீரும் நெஞ்சினில் இரக்கமும் ஒன்றாய் நிறைந்த நெகிழும் மாந்தரை ஏன் படைத்தாய் இறைவா. இன்னலில் உழன்று இன்னுயிர் வலிக்க இதயத்தை சிதைத்தாய் இறைவா. கருணை செய்து கல்கியை எழுப்பி அவனியை காக்க ஆவன செய்யும் அருளை வாரி புவி மீது இறைப்பாய் அன்பே
அறனே அகத்தில் நிறைந்த ஆதி சிவனே.
அநீதி அம்பெய்ய அரவணைத்த வம்பர்களை ஐயன் தலை காத்த வல்லறம் வதைத்தொழிக்க அதை எய்தோனும் எரிக்கப்படும் எதிர்காலம் தொலைவில்லை என்ற எம் மெய்வாக்கு மேதினியில் என்னாளும் பொய்வாக்காய் போவதில்லை புவித்தாயின் பொன்மகனே.
தமிழ் கூறும் நற்பாரில் அமிழ்தூறும் என்பாடல் பெரும்பான்மை மாந்தரின் கவனத்தை ஈர்க்காமல் ஏராளம் இளவல்கள் இலக்கினை எடுத்தியம்பும் சொற்றொடர் வரியாக்கலாம். இசையாலே இதயத்தை பறிக்கின்ற பூபாளக்குயில்கட்கு அது அடியாகலாம். புவிமார்பில் என் பாடல் பொல்லார்க்கு இடியாகி புரியாத பல பேர்க்கு புதிராகலாம்.
ஐயன் கையுள் அடங்கும் போழைக்குள் அவனேயறியாமல் பொய்யர் புகுத்திய மென்பொருளுறங்க எம்மான் அறிவை அண்டாதறிவர். அதிலகிலமே சுருங்க அகராதியும் அடங்க தடையமிலாது தலைமறைவாகி ஓயாதுயிர்க்கும் உறங்கா பொறியினை பதித்து காதம் பற்பல கடந்தும் கயவருடன் காவல் பூனைகள் கண்ணுறங்காது நோக்கும்.
அல்லல் பட்டு அலைக்கழிந்த அம்மி குழவி அண்டை கடல் நடுவில் மிதந்த வண்ணமது மீளா கடனால் சிதைந்த சின்னமது அன்னை தலைவி மேனியை அரவணைத்திணையும் பின்னம் செம்மை நிலமாகி பல பெற்று பூக்கும் சேதியை புதுமையென செவிக்குள் ஊட்டினேன். நிதி விதைத்து நிதியறுக்கும் மதியுடை நடுமேற்கு நஞ்சர் வந்துறையும் சித்தர் திருமண் நீதியிழக்கும் நாளில் பல்லிடத்தில் பற்றுகன்ற பாழ் தீயை பார்த்தும் பாராமல் இருப்பானொரு வல்லிடத்து வஞ்சினத்து வடக்குறை மன்னவனும்.
சொல்லிடவே மனமுருகும் சூழ்ச்சியுடை மதக்கொடியோர் சூளுரைக்கு நல்விடை கிடைக்காமல் நாட்டு மக்கள் அலறிடும் அந்நாளின் தென்னாட்டில் நெஞ்சீரம் கொண்டதொரு நெறியாளன் பார்வைபட பட்ட மரம் பட்டு போர்த்தி பன்னாடே பாராட்ட பார்வை பெறும்.
பாகம் 97
ஆயிழை மேற் ஐயனவன் அலகிலா கருணையுடையான் . அவர் மேவும் அன்புக்களவிலா பெருமையுடையான் . அச்சேயிழையிற் சிற்சிலர் தம் வேல் விழி பாய்ச்ச வேளிவனை வீழ்த்தி வேண்டியே இசைந்து வசந்தமாய் வருகை தரும் பூவினை தன் பொற்கரம் தழுவி எம் பொன்மகன் புதுமணம் புரிய நெருங்கையில் பாதகர் குறுக்கிட்டு பகல் வேடனென பாவையர் மனம் சிதைத்து பேதையை அகற்றி பிறிதிடம் பதித்த வேதனையாற் வேந்தனவன் விழிகள் சுரந்ததை விதி யென்றறிவேன் . பாமரனவனை பரிதவிக்க விட்டு பாராதிருந்ததேனோ பரம்பொருளே .
அம்பலத்துள் அவன் நுழையான் . ஆலயம் அவன் தொழான் . செம்புலத்து செழுநிலமாம் சீர்நெல்லை தென்திசை திரிகூட நாதனுக்கு குடதிசையில் வன்புயத்தான் வந்துறைந்து என்புருக்கி தவம் நோற்று ஈசன் மெய்யறிந்த ஆசான் கல்கி என்றே அகம் தெளிந்தோரவனொளி முகம் காண்பர் .
அவனியாளும் முன் ஐயன் ஆண்டியாவான். அவன் பின் அரசுகள் ஆண்டியாகி அகிலமே ஆண்டியாகும். மையத்து நிதிகளெல்லாம் மனம் வெம்பும் மன்னுயிர்க்கு நலம் தராது தரணியாளும் தான்தோன்றி உறவுக்கே பயன் தர வையத்துள் வறுமை வாழ்வாங்கு வாழும். மெய்பொருள் எழுதிய மீறா விதியிதை மேதினியர் எழுதவில்லை. வெய்யரை சபித்து அந்த விண்டுலகில் எழுதியாய் கண்டு கொண்டேன் பரம்பொருளே.
போர் தின்று புல்முளைக்கா பொட்டல் மேனியுடன் பூமகள் போர்வையிலா அம்மணமாய் புலம்புவதை யானன்று கண்டேன். ஏர்நின்று இயல் உணவு எழும்பா எரிவயல் ஊணின்றி உருகியதை உள்க்கண்ணூன்றி உயிருறைய உற்று யானன்று கண்டேன். பார் முழுக்க பசி உண்டு பலியாகும் பல்லாயிரம் கால பைம்பயிர் பாழாய் விழுவதை என் மேல் விழியால் மெய்யற கண்டேன். ஊருண்டு உறையும் மாந்தர் இல்லா வேரற்ற மரமாய் வீணாய் விறகுக்கும் உதவாது வீழாது வாழ்வதனை யான் கண்டு நொந்தேன் எம்முயிருறை பரம்பொருளே.
மாடு உண்ணும் மாநிலத்தார் மரணம் உண்ணா மன்னவனை காடு சென்றும் பின் தொடரும் கருணையில்லா வினை ஏற்று காலன் கெளவும் காலம் வரை களைப்படையா கருமம் செய்வர். காரிரும்புள் கனகம் அரும்ப அதன் ௧ரு எண்ணில் மாற்றம் செய்யும் மேன்கலையை கற்றுதந்து மேதைமுனி வரமருளும் கண்கொள்ளா காட்சியினை கண்டதனை ஊனுருக யானுரைதேன்.
இவ்வுண்மையினை உலகறிய ஓரிரு ஆண்டெடுக்கும் உத்தமரே அறிந்திடுக.
கண்டம் நெரித்து கணக்கு தீர்க்கும் கருணையிலா வஞ்சகனொருவன் வீட்டிற்குள் வீற்றிருக்க வேந்தன் வடிவில் வேடுவனொருவன் மண்டையில் மகுடமேறி மடையனாய் விதி சமைக்க கொட்டம் அடங்காமல் குதூகலிக்கும் மண்டுகள் பல் கோடி மண்டூகக் திரை ஏந்தி மனம் களிக்க மண்ணீது மாசுறைந்து மன்னுயிர் மனம் கொடுக்க பின்னரனைவரும் பேய்காற்றில் அணையும் விளக்குகெனவே ஆர்ப்பரித்து ஆடுவதை அருள்வாக்காய் அவன் சொல்ல அதையே உள்வாங்க அடியேன் யான் சொன்னேன்.
அன்று ஞானியர் முன்னடந்து நன்மக்கள் பின்தொடர சீறிய கடல் தணிந்து சீரிய தடம் பதிக்க மேவிய அலை பிளக்க காவிய இனம் தழைத்து கடல் கண்டம் தனில் வாழும். அத்துடன் தன் கறை கரம் இணைக்கும் ஐயன் காவிய நாடாளும் ஆளுநன் முடிவெடுத்து அவலம் பெறும் நிலை கண்டேன். பனியுறை பரந்த பாராண்டு பல்லுதவிசெய்த வல்லாளன் வேண்ட உறவறுக்க தயங்கா உயர் பரத
மண்ணாளும் பகல் வேட நட்பிலோர் பாழ் மன்னன் மீற குருதி வண்ண நிழல் வீழும் கோர கடற்கு குடக்கமைந்த கொற்றவ தேசத்துடன் தகுதியில்லா கரம்பிணைத்து தருமம் தனை இழப்பதுடன் தரைகளும் தகர்ந்த வண்ணம் தழல் வீழ்ந்து கருகக் கண்டேன்.
அன்பகமே என்னுரைக்கு அகலாது செவிசாய்ப்பாய் . வம்பு தனை விலைக்கு வாங்கி வாழ்க்கைக்கு உலை வைக்கும் நெம்புகோல் அறிவியல் நெறி பிறழ்ந்து வளமழித்து உறை கிணற்றுக் குழல் கருவி உள்ளாழ்ந்து ஊடுருவி நிலமகளின் மடிமுழுதும் நிறைந்திருக்கும் கருந்தேனை புறமுறிஞ்சி பொற்றேனாய் பிழிந்தெடுத்து புறவெளி புகைகக்க பொல்லாது சீரழிய நிலத்துள்ளே வெளி விழுந்து நிலமடந்தை நடு நடுங்க நிலையாது கிடு கிடுங்க புதைந்திடும் பன்னிலமே .
பின் போர்காலம் பூப்பெய்து பொல்லா விளைவு தந்து முற்று பெற்று அற்ற அவனியிலே அருள்வீசும் உற்ற செவ்வேளாய் ஒருவனெழுவானே . பாரேந்தும் விளக்காக பரந்தாமன் இலக்காக பைந்தமிழன் ஒளிர்வானே . ஏரேந்திய இனம் நடுவே ஏறெனவே மிளிர்வானே .
செம்புணரி சீர்குலைந்த சேதியை உலகறியும். கம்புறை காரிருள் கடல் சூழ் கண்டமே உருக்குலையும். செம்மாந்தர் சேனைகளால் கண்டமுறை கயவரினம் கண்சிவக்க பிண்டமாகி போர்களத்தில் பெருவாரி மண் சிவக்கும். பொன்மகளின் பூங்கண் மலர்ந்த வானுயர் வன்நாடே வாக்கு நீங்கி வரம்பிலா வசை தாங்கி பெரும்பாடடைந்துடுமே.
பேதைகளும் திருந்தாது வாழ்விழக்கும் வரம் வாங்கி வாதைக்கு வழிவிட்டு அதன் வாய்க்கரையாக வானுறைய வழியின்றி தீவினைக் கடிமையென தெரிந்து கொண்டேன் பரம்பொருளே. மூச்சுக்கு விடமூட்டி மூன்று
தலைமுறைக்கும் முடிவு கட்டி நாக்கினை வெளித்தள்ளும் நச்சுணவை நல்லுயிர் பைக்குள் இட்டுவிடும் இரக்கமிலா போர்களமாய் ஈனர்கள் அமைத்ததனை ஈசன் காட்௫க்குள் கண்பதித்து கனத்த என்னிதயம் தனை கரைத்தேனே.
கொண்டலைத் தீண்டி குளிர் தென்றலை மோந்து வாடையை வருடி மெல்லிய கச்சான் மேனியை தழுவி வென்றிடும் உயிரி மந்தையுள் நுழைய மனிதரில் விளைய மாசுறு வல்லார் மனம் கெட்டு விதைக்க கொல்லுயிர் தன்னின் கொடு இனம் நோக்கின் நம் கூரிய கண்ணோ குருடாகிப்போக நுண்ணிய விழியே நுட்பமாய் காணும் ஊமத்தங்காயொத்த உருவம் எடுத்து பல்லுடல் நீவி பாரெங்கும் தாவி மாந்தரை வதைத்து மனந்தனை கதைத்து மெளனமாய் சிதையில் ஏற்றிடும் பொருட்டு கூற்றுவன் எறியும் கொலைவெறிக் கயிற்றை ஏற்றிடாதறுத்துடும் இயற்கை ஒளடத இளந்தளிர் மகத்துவமுறைந்த குடமுனி மாமலை மடிதனில் தவழ்வது ஐயன்தானென அறம்பாடி இங்கிவன் அடிகளில் வைத்ததை ஆதரித்தருள்புரி அகிலாண்ட நாயகி.
பாகம் 98
கற்பகமாய் காந்திமதி நெல்லையப்பர் கால்பதித்து காத்தருளும் திருபொருநை நதியமுதை தீர்த்தமாய் அவன் சுவைத்தான் அகவை மூன்றினிலே ஆருயிரே அறியாயோ. அங்கவன் அன்னையே இடம் பெயர்ந்து அப்பனையும் பிரிந்து ஐம்பூதத்திலோர் அனல் பூதத்தடிபணிந்து ஐயனை வளர்த்ததும் அந்நதிக்கரையூராம் அழுக்கற அணிதுகில் வெளுப்பான் பேட்டையென்று தோன்றியதை அவன் தோன்றும் முன்னம் சொல்லவந்தேன். தூண்டிலில் வீழாத திருத்தொண்டன் மீண்டு வர தூது சென்று தூண்டிடுவாய் தூய்மையான அவ்வுயிர்க்கு வேண்டியதை நீ நல்கி வேதை நீக்கு பரம்பொருளே.
பெருமான் உறங்கியே பெரும்பொழுதை கழிப்பான். பிற்காலம் ஐந்தும் பொருளின்றி தவிப்பான். அதன்பின் ஐந்தை வனங்களில் கழிப்பான். வாழ்வில் ஒரு நாளும் தலை குனிந்து வணங்கான். வானோர் வாழ்த்து எம்வளநாடாள்வது ஐயிரண்டாய் அவனருளக் கண்டேன்.
வேந்தனிவன் வேர்விட்டெழும் வேளையில் வெண்தலைக்குள்ளே வேரிடும் வன்மம் வையம் இரண்டாய் வகுபட இயக்கும். செங்கொடிகளோடு கருங்கொடிகள் மோதும். அங்கு சிதறிய உடுமீன் ஐம்பதுன் நிலமே இதையும் முழக்கம் மையத்தை தாக்கும் வலியை என்னால் தாங்காது துடித்தேன்.
என்னாட்டையும் ஏற்காது ஈர விழிகலங்கி பொன் மகள் அகலும் பொல்லாத நாளில் பன்னகம் தன்னில் பள்ளி கொள் பன்முகனவனே பரிதியாய் வெடிக்கும் போது பங்கமாகி பாழ்பட்டு குலைந்த நிலமகள் உயிர்த்து நெஞ்சுரம் பெற்று நல்வரமேற்று நலம் கொளும் நாளை நாதனறிந்ததால் நானும் அறிந்தேன்.
ஐயன் அகன்ற இடம் அல்லல் பட்டழும். அவன் புறம் நகர்ந்து புக்கும் நிலம் பொன் விளையும் பூமெட்டாயெழும். அவனுறை திருத்தலம் சீற்றம் காணா செழுநிலமாய் நகும். அவன் பாதமுறையா பாழ் நிலத்தை பங்கம் செய்ய வாதையோடு வரும் புயலும் வருத்தி பேயென சீறி பீதியை தருமே.
அவன் துறவியாய் அகன்று துயருறும் போது இன்னலைத் தவிர இன்னிலம் தன்னில் இன்னொன்று ஏது. அவன் நிலைக்குமிடத்தில் எல்லாம் நிலைக்க இல்லற மாந்தர் இனிதாய் களிக்க என் விழிகளியிரண்டே ஈடிலா சாட்சி என்பதைத் தவிர ஏதுமில்லை எல்லாமறிந்த எம்பெருமானே.
முத்தமிழ் காக்க வரும் முப்பாட்டன் அவனே தான். முறை மாமன் மாயோனாய் முன் உதித்த சேயோன் தான். மொத்தமாய் சித்தர் சூழும் மூதறிவு பெட்டகமாய் உற்றதொரு பெற்றாள் போல் உயிர்துடிக்க கண்டேனே. புற்றீசல் சிற்றினங்கள் போரடித்த தென்னாட்டின் பக்தனாகி தெளியா பித்தனாகி நெறி பிறழா நீதியொடு நீணிலம் காப்பானே. பேராண்மை நீங்கா பின்புலமாய் எம்போல் பலரிருந்து ஈடிலா அறம் காப்போம். பிறப்பெல்லாம் தமிழ் வளர்க்க பேரிறையே
துணையிருப்பாய்.
பாகம் 99
கல்மனமுடை கறை குணமாம் கடைகுணம் எம் கண்மணிக்குள் காணேன் காக்கும் கணநாதா. முக்குணத்தின் முதல் குணமாம் பொற்குணமுடை பூமனத்தான் நற்குணத்தை நன்கறிவேன். அதனிடை பிற்குணமே பெருமகனிவனை பெரிதாய் இயக்கி பெருங் கோபமுற்று தெக்கண தீயரை தீதற அழிக்கும் நற்குணத்தானாக நனிதே நாதனொளிர் முக்கோணத்தென் முனை முல்லைநில மூலாதார குமரி குண்டலியில் எழுந்து பங்கய இதழ்கள் பதிற்று நூறென பாரினில் விரித்து அனைத்து இனங்களுள் அன்பிலுறைவதை அன்று கண்டேன் அதை இங்கு தந்தேன்.
உளம் நடுங்க கதிர்கக்கி உலகாண்ட நகரே உருக்குலைந்தழியும். உருண்டை கோளத்ததின் உச்சி வகுந்தெடுத்த நிமிர்ந்த நெடு ரேகை நேர சுழியத்தை கால கணிதத்தால் கற்பனையில் பிளக்கும். படுமரமாய் பார்க்கையிலே அப்பாழ் நரகை பாகையிற் ஐந்தடுத்து ஒன்றரையாய் அறம்பாடி அறிவேன். ஆங்கே கொடும் பாவிப் பேய்களெலாம் கூத்தாடி கொண்டாடி உலவும். வனார் புவியோ நம் செவ்வேள் தயவால் சிரம் தூக்கி உலகெழுந்து வயிறாற பெருஞ்சோறு படைக்கும். மீண்டுமொரு மிகை நாளில் மேற்கமைந்து மேதினியை இயக்கும் மதனார் மையலொடு மணம் மாற்றி மணாளனை வெளியேற்றும் மனை மோக மாநாடு மண்ணோடு புதையும். அத்தோடு அவனியெங்கும் அறம் ஓங்கி அருள் வீச பூக்குமிதை அறம்பாடி இங்கிருந்தே சென்றறியாது இன்றறிவேன்.
பாயும் பல்வரியின் பட்டு வாலை பார்வை கொண்டும் ஓநாய் வேந்தர்களே ஓசையின்றி பற்றிவிட ஓயா போர் வெடித்து உலகழிய அமைந்திடுமே. மாளும் கிலி பிடித்தே மண் பரப்பே நடுங்கிடுமே. தீயின் தழலெனவே திணறடுக்கும் கேள்விகளால் நாளும் சபை முடங்கும். நாடா பகை வளர்ந்து நாளுக்கு நாள் மிகுந்து மீளா பன்னகரும் மீட்பனின்றி எரிந்திடுமே. அருமணியே இணையிலியே அறநெறியர் அன்பகம் தான் நொந்து சிதையாமல் நீ நொடிப் பொழுதும் அகலாமல் வந்து காவல் செய்வாய் என் வாக்குக்கு செவிசாய்த்து வாழ மனமிரங்காய்.
உடுமீன் உச்சமுடை உறுமீன் முதல்வனாய் கலைக்களம் கண்டோன் வலக்கரமொன்று செம்மீன் பிடுத்து சேமித்த பணத்தில் கொலைக்கள மமைத்து குருதி குடிக்கும் குமரிக்கடல் கயல் வேடனொருவன் கருணை கெட்டு கயமையிலுதித்ததை கண்ணீர் ததும்ப யானே கண்டேன். வையத்து மெய்யர் வகையறியா வன்மைக் கரமது வாளொடு உறைந்து வான் மகன் தலைக்கு வன்தொகை பெற்றும் தேறாது வீழ்ந்து தீக்கிரையாவான்.
உடனலர்ந்த உயிர் கொடியுறை இளமலர்கள் உய்ய வழி செய்யா ஐயன் வாழ்வு அல்லல்பட்டு நெ௫ழ்ந்து அழுமே. கடன்பட்டு ௧௫கி வீழா கண்ணியம் இவனுடன் காலமெலாம் வருமே. அகம் கெட்டு திரிந்த தாடகையாள் தன் தமையன் தருமனாய் தெரிந்தும் தரங்கெட்டோருடன் உடன் பட்டு உறவாடி கெடுப்பதை உரித்தான கலையாய் வகுத்தாள் என்பதை வானோர் முன் யானறிவேன் வழி காட்டும் பரம்பொருளே.
திக்கெங்கும் வழி பிரிய தீது இழுக்கா நேர்வழியை தேர்ந்தெடுத்தான் தேவதேவன். வான் நடத்து வழிகாட்டி வாடிய அவன் முகம் கண்டே வாடிநின்றேன். நீ வாளாதிருப்பானேன் வாழ்வளிக்கும் பரம்பொருளே? தக்காரனைவற்கும் தன்னிறைவை தருகின்ற முத்தழிழ் மணம் வீசும் முக்கண்ணன் வடிவாய் தெக்கணத்தில் ஒளிர்கின்ற தீரன் முகமது கண்டு திகைத்து வந்தேன் மலைத்து நின்றேன். ஐயனொரு ஆலயமாய் அடியேனே வணங்கி நின்று அடியொற்றிப் பாடுகின்றேன். நலம் நாடும் நன் நட்பும் அவனுக்கில்லை. நஞ்சுறை நெஞ்சர்கள் நடும் தொல்லை தனை தாங்கி நன்னெறியை நெஞ்சகத்தே நாளும் நாளும் நட்டதனால் நாதன் நாடும் அகம் ஆனான்.
நானும் அவனுடன் ஆனேன். வேடர் அவன் வீடு சுற்றி விளைத்திருந்த போதிலுமே வினை விதைத்த அறுவடையை வீறுடனே அறம் பார்க்கும். இனி வீண் கவலை எமக்கில்லை. விடியல் வேளை வேல் சூழ வீரைய்யன் படையாள வெகுவிரைவில் யுகம் மாறி எல்லாமும் நலமாகும். நாதன் அவன் நலம் ஒன்றை நல்லறமே நாடுவதாய் நானறிவேன் பரம்பொருளே.
பாகம் 100
கொடியோரனைவரின் அகமேறி குரூரமனைத்தையும் அரங்கேற்றி கொண்ட கூட்டை விட்ட பின்னும் வீடடையா விழியமைக்கும் வீணன் கலியன் தலை கொய்ய விடை கண்ட வழியது மெய்யாய் வாழ்விது பொய்யாய் ஒளிர்ந்திடும் சாலையை ஒருவனேயமைத்து விழிவைத்துதித்தே வினையறும் நல்லற வீரியச் சோலையுள் மாளா தலையுடன் மடியாவுடலுடன் சூடாமணியென ஆறாதொளிர்வதை அடியேன் கண்டேன்.
விண்டுவிற்குணங்கி வேதம் பொழியும் வியத்தகு தாய் முலையொப்ப தமிழ் வளர் பாண்டியப் பைந்தமிழ் நாட்டுள் பல்லின மரபினர் புதிதாய் புகுந்த கோட்டைச் சோலையுள் குடிகளாய் பதிந்த குறைவிலா ஊற்றுள் பாசக்கயிறே பாயாத சாலையுள் பாயுமொளியொன்று பால் சங்கென உறங்கிடக் கண்டேனங்கு குன்றத்து விளக்கினை கொலுவென ஏற்றி கோபுர சூழுமுனை வாசலிற் நிறுத்தி தெய்வத்தை யானே தேடாதுணர்ந்தேன்.
சூது தீண்டா மாந்தர்கள் வாழ்வர். எம் சூரியன் தீண்டி சுட்டு எரிக்கும் பாத்திரமேற்ற பாவியரனைவரும் பரகதியடையா புதைக்குழி வீழ்வார். சூத்திரமறிந்து சூழ்ச்சியை தகர்த்து சுடர்கதியடைவது நாதன் எழுதிய நல்லோர் விதியே. மையக்குணக்கே மன்னன் புதையும் முன்னே பொல்லா மகவுகளிடையே குடிப்போரெழுமே.
மணிமுடி அரசுக்காய் மனத்தே வெறியேறி மண்ணாளும் நோக்கிலே தனையன்கள் தலைகள் தரைமீதுருண்டு குருதியிலுறைய கோட்டான் தமயன்
கொள்ளும் அரியணை தனிலமர தரையே மாறி தகரும் அரசே வாழ வரமாயமைந்த வயலே கருகும் வேளைவருமே. அன்று கதிவேள் தயவால் ஐயன் தலையே எழுமே. இதைக் கனா கண்டவரனைவரும் பெறுவது நலமே. அதன்பின் கண்ணால் காண்பதோ எல்லையில்லா எம்மான் இணைடி நிலமே.
அறம் பாடி அழிப்பேனே அகிலத்தை ஒழிப்பேனே. அத்தகு வல்லமையை அரவமதை ஆரமாக்கி அம்புலியை தோகையாக்கி புருவத்தின் மத்தியிலோர் பொறி விழித்தழல் தாங்கி பொல்லாது ஆடுகின்றோன் அவ்வரம் தந்துவிட்டான். அடியேனுக்கு அளவிலாது அதிகாரமுண்டென்று அருளோடு ஆணையிட்டான். அதை யான் செய்யாது அண்ணலுக்காய் காத்திருந்து அருந்தவத்தால் ஈட்டியதை திருவரத்தால் மீட்டியதை புலம்பாது தாரைவார்த்து தயங்காது தலைவன் தாளடிக்கே அர்ப்பணிப்பேன். தென்குமரி தீஅணங்காள் தேவர்களை அவள் வணங்காள் தீர்த்த அலை எழும்பும் திரிகடல் தலம் அடங்க அத்திருமார்பற்கருள் வழங்க எரிமலைபோல் எழுவானே எம்பெருமான் தெரிவானே.
குழலிற் வீழும் அரவென கொடியிடை அரம்பையரகமே மயங்கும் அழகுறு வேந்தன் விரியா செங்குமுத மொத்த குய்யம் விரித்தால் விரியும் மொட்டு இதழுடன் மொத்தமும் மூடும் தோகை போற் முன்னழகோர் முகுந்தன் சண்ணமாய் மூவுலகறிய பகர்வேன் கேளாய். எல்லா விழிகளும் இகத்தோருடனே பிணையும். அவன் வெல்லும் வேல்விழியோ விண்ணவருட னிணையும்.
ஐயன் வாசல்முன் ஆருமறியாமல் குந்தி குதம் பதித்த கூகையெனவே வெய்யர் பொறித்த விழிப் பொறிகள் விழித்தே அரவத்தலை தூக்கி ஐயன் அசைவிற்காய் ஆண்டெலாம் அக்கரையோ மருக்கும். காடுறைந் தவனிருந்தாலும் ஆங்கே கல்மறைவில வனொழிந்தாலும் காய்மறைவில் விழி பதுக்கி கதிரூட்டும் ஊணுண்டு கண் துஞ்சாது பூத்திருக்கும். ஊற்றரவம் ஊரும் இடங்கூட ஒற்றர் பதித்த ஒளிவிழி ஓழிந்தருக்கு மென்பதனை மெய்யகற்றி மேலெழுந்து மேன்மக னருகிலமர்ந்தவாறு மெஞ்ஞானக் கண்ணாலதை மெய்யாற கண்டேனிதை மேதினியே செவிசாய்ப்பாய். அவ்விஞ்ஞானக் கண்கள் அவனை வீழ்த்தாது கண்ணே.
பாகம் 101
மையத்து கண்டமுறை மாணிக்க கடலோரம் பாழ் பட்ட நிலந்தன்னை பட்டு மரகதமாய் பல்சுவைக்கு மாற்றியதும் இறை கூட்டம் யாமென்றும் ஈடுகட்டி நிதி கொட்டி மறை காட்டி நிலம் பிடுத்து மண் மைந்தர் யாம் என்றும் மார் தட்டியழைக்காமல் அம்மண்ணோரை மனம் மாற்றி மாநிலத்தை கவர்ந்தோராய் அங்கு கருங்குன்றின் கொண்டையிலே கற்கோவில் ஒன்றிருக்கும். நான்காயிரம் ஆண்டு முன்னரங்கு நட்டமைத்த முப்பிரிவின் முப்பாட்டன் ஆலயத்தை முறையோடு காப்பவராய் ஆளுகின்ற அவ்வினத்தை அன்றொரு நாள் ஆர்ப்பரித்த ஆரியத்து ஓநாய் ஒடியோடி உயிர் பறித்து ஊனுறவு துணையுடனே உயர் விடமருந்தி உயிர்துறந்த பின்னரதன் தொண்டர்கள் உடலெரித்த விந்தையினை மண்ணுறைந்த மண்டலமே நன்கறியும்.
அக்கொலைக்களத்துல் மிஞ்சிய கூரறிஞர் குழுவாக கூடி வந்து பாலை நிலந்தனை பைஞ்சோலை பரப்பாக்கி ஆளுகின்ற ஆட்சி கண்டு அடுத்தமைந்த அண்டை நாட்டு அரபுலக வேங்கைகளும் திறனமைத்து போர் புரிய திருமண் சிவக்கவும் திருமகள் பொருள் தேய்ந்து அத்திருநாடே ஏங்கவும் திரும்பிய திக்கெலாம் திணறிடும் வேளையிலே அறம் தளிர்க்க அனைத்தின்னலுக்கும் ஒர் அண்ணலே அருந்தீர்வு காண்பதுடன் பெருந்தமிழர் வாழ்விற்குள் பேரொளி பாய்ந்திடவே தன் திருத்தொண் டோங்கிடவே செவ்வேள் உதிப்பானென சேதி சொல்வேன் பரம்பொருளே.
இனியோன் எம்மையன் இளையோரில் இருவர் ஏறெனவும் மற்றிருவர் பூவெனவும் அமரர் எமக்கு ஓதியதை அப்படியே பரமன் தாள் பணிந்து பாரறிய பகருகின்றேன். பரிதியின் குலங்கொண்ட பண்புடை குமரன் பெயராய் முதலொருவன் பெற்றதையே மூவுலகறிய நானென் பாட்டுள் வைக்க பிறிதொரு பெருமகன் பெயரோ பூமுகம் தன்னில் பொறிவிழி மூடிக்கொண்ட பிறைமுடி பெருமான் பெற்ற குமரனின் உற்ற தோழன் போல் உலகறிய ஒப்புவிப்பேன்.
தங்கையுள் முதல்வி மட்டும் தங்கத்தின் தரக்கேடாய் தகுதி யிலாது மங்கைக்குரிய மாண்பிலா தமைந்தாலுமவள் அண்டங்காக்கும் அம்பையின் பெயர் தாங்க அநீதிக்கு தூது போயி ஐயன் அகம் தனை அகந்தையால் அழிப்பதுடன் அவளும் அழிவாளே.
விண்ணவ அரம்பைக்காய் வெறிபிடத்தேங்கி விடியுமுன் அறிவிலி பெயரும் வாங்க ஆயிரம் விழிகள் தாங்கி ஆனையூர்தி கொண்டோன் மனையுடை மறுபெயர் தாங்க மற்றோர் மலராய் இவன் பின்னாறாண்டுள் பூக்கக் கண்டேன் என்பதனை புவிமகளறிய பொன்வாக்கு தந்தேன் .
மயூர மணி விளக்கை மனமோங்க வணங்கிடுவர். ஆளும் அரபுலகால் அடங்கி வாழும் அருளாளர் அருஞ்சின்னம் எம்மான் எழில் கமல கைத்தல முள்ளாலே கண்கவர் காரேங்கல் கவின் மகுடம் சூட்டியதை சூரியவிழி பாய்ச்ச அதன் சூட்சுமத்தை யானுணர்ந்தேன். ஆங்கிவர் இன்னல் அனைத்தையும் இரிக்கும் இடிமின்னல் வடிவாகி இடர் துடைக்கும் மீட்பனிவனென்று மெல்லிசை மீட்டுகின்ற நாரதன் வீணையோ நாதம் எழுப்ப கேட்டேன். நாதனே உனக்கு நன்றி பலகோடி சொல்வேன்.
கடல் மகள் உடலுண்ண கருணையின்றி வருவாளே. உலகழித்த ஓநாய்கள் ஒன்றையும் விடாமல் உளமாற உண்பாளே. படகெனவே பல்லுடல்கள் பாழான படுமரமாய் நெடும்புனல் மேல் நீந்திவர நீலக்கரை நெடுக மனமுறையும் படியாக மருத நிலம் மறைந்துவிட மலர்ந்திருந்த மண்மாது மெளனத்தில் சுருங்கிடவே சொல்லொண்ணா வலிகொண்டேன். சொல்ல இனி சொற் சுனை சுரக்கவில்லை.
கல்கியை புறந்தள்ளி கண்ணீரை நிலம் குடிக்கும். கடல்நீரை மிக அள்ளி பொல்லாரை புசித்தபடி பொங்கும் கொடுங்கடல் புறமுதுகிடாமல் புகுந்தே நகரத்தில் நகராமல் மையம் கொள்ளுமிதை மன்னுயிரே நீயறியாய் மாதவத்தால் யானறிவேன். இங்கு மாதவனோ வந்து அறிவாய். சூது உண்ட பாழ் மனத்தார் சூழலுக்கே இரையாகும் சூழல் வெகு தொலைவிலில்லை.
ஆணி வேரிறங்கி ஆல்வளர்க்க வழியின்றி அவ்வேர் இறக்க வழி வகுத்தாய் வீணான வல்லினமே. ஊரிறக்க விதி வகுத்தாய். ஊழ்வினையே வலியதென்றும் வேதத்திலும் பெரியதென்றும் பாழ்மாந்தர் அறியாமல் பகலிரவாய் எம்மானை சல்லடையால் தேடியதால் மண் வளர்த்த அத்தனையும் எம் மனம் கொதிக்க கருகிடுமே. பொல்லரக்க மாமழையும் புயலோடு நிலம் சிதைத்து புன்னகைத்து மகிழ்ந்திடுமே.
நிறை கொண்ட தமிழ் பரப்பின் நெடுவாயில் தகர்ப்பதற்காய் முறை வாயில் நுழையாமல் புற வாயில் புகுந்தவனாய் முக்கறை அகம் கொண்ட முப்புரி அணிந்தோனாய் முக்கண்ணன் வெறுத்தோனாய் கண்ணொன்று சிறுத்தோனாய் கண்காணி பூனையொன்று கயமைக்கேவல் செய பெரும் விளைவை எதிர்கொள்ள கொடும் தலைமை நியமித்த குற்றம் புரி நரியாக கோன் நீதி கொன்றோனாய் மனு நீதி நிறம் கொண்ட மாண்பிலா வஞ்சகன் நெய்தலூர் சிரம் தன்னில் நிலை கொண்டு நேர்மை கொன்று அம்மண்ணி லடங்கி மரண வலியுணர்வானே.
பாகம் 102
வரையிரணடுள் வானெழும் இளங்கதிர் வன்கொடி வாழ்விடந்தன்னில் பன்கொடும் பாவியர் பதுங்கியதை பாரறியாது போனாலும் பகுத்தறிவோம் யாமே பரம்பொருளே. அப்பாசறையுள்ளே நெறி கெட்டு கறையுள கயவர் மறையுள் மறைந்த மன்னவனிவனை மாய்க்க எண்ணி விடம் விதைக்க வீராப்பாய் எம் வேந்தன ஆராட்டும் தேவி அமுத கலந்தழுவி அணைக்க எம்மையன் எழும் இடமெலாம் இவர் இடர் நிறுவி என்றென்றும் அறம் தவறி அகம் கெட்டு ஐயனடி தொடர்ந்து கடுஞ்செயல் புரியுயிடம் விடமுடை அங்கத கோனுறை ஆலயப் பெயருடை பெருநகராம்
அங்கு முதல் அவையின் முன்னமர்ந்த முதல் தாதையோரு குள்ளக் குறுமகனவன் வாதை மைந்தனாய் வன்செயல் வரம்பிலாது புரியும் சிற்றின சிறுநரி படைகளின் சீரிய தலைவனாய் சொல்வேனவன் நாகம் தனை தன் நறுமுடியில் நட்ட நாதரின் பிறிதொரு பெருந்தேவன் பெயர் தாங்கி நீதி நெறிகள் கற்றறிந்தும் நித்தமும் விற்று உடல் வளர்க்கும் நச்சுப் பாவியனை ஈசன் வெறுக்காமல் போவானோ எம்மையன் எழில் கண்டம் அறுக்க வந்தோனை. கண்டேனவன் அலறியழும் வாழ்விற்குட்பட்டு வாய்விட்டு அழுது அழிவதை அருள்வாக்கால் தந்தேனே.
ஊனுணவில் அணுவளவு உயிர் வளர்ந்து பயிராகும் உடனிருந்தே உடல் பறித்து நிலம் புதைக்கும் மானுடத்தை ஏப்பயிடும் மாகொலைகள் அரங்கேறி மண்ணெல்லாம் பதபதைக்கும். காய்கனியை கூட இங்கு நோய்நொடுக்குள் கொண்டுவிட நானிலத்து மாந்தருடல் நலம் கெட்டு சீரழியும் நாள் நான் அறிந்தேனதை நாதனவன் எனை விடவும் தன் ஞான கண்ணால் நன்கறிவான்.
மேலை ஒளடதம் மேனிக்கு ஒவ்வாத வேளையிற் உயர்முனி ஓலை உரைத்த உன்னத வைத்தியம் ஓதும் மருந்தினை உத்தமனுண்டே நோயினை விரட்டி பொன்னுடலோடு பூவுயிர் காத்து பொல்லாருடல்களை புவிதனில் சாய்ப்பான். திரப்பாலருந்தியவன் திக்கெட்டும் விருந்தினனாய் வீரப்பாலுண்டு விளைந்து வருவானே. வேந்தர் பலரும் இவன் கீழ் எழுவரே. வேண்டிய நலன்களை பூமியில் தருவரே. ஆண்ட இனங்கள் அனைத்துமொழியுமே. அற்பர் இனமோ புல் பூண்டோடழியுமே.
அடுத்து ஓட்டிய சிறுத்த மழலைகள் அன்ன ஆகாரம் ஏதுவுமின்றி கொழுத்து செழித்த பொறையுடை அன்னை பொன்மடி புக்க பெரும் பஞ்சம் தின்று பெருநிலம் அழுவதை கருத்து வடிவாய் கவிதை தந்ததை கண்ணே நீ ஏன் புரியவில்லை. இக்கண்ணீர் கதை உனக்கேன் தெரியவில்லை.
ஐவழியிற் ஆண்டவனை ஆராதிப்போர் அனைவருமே ஐயனை அழித்தொழிக்க அகமலர்ந்து முற்பட்டும் மெய்வழியிற் மேம்பட்டோன் புரிந்த நல்லறமழியாது நாயகன் தனை அகலாது காக்கும். வேண்டுவதை இயலன்னை வேண்டியே இன்முகத்தால் ஈந்து எம்மையன் வீழாது ஏந்திபிடிப்பது தயைகூர் தாய் நிலத்தின் தலையாய கடனாய் ஏற்றிடக் கண்டேன் எம்பெருமானே.
நீதிமகளை நெஞ்சம் பதைக்க பங்கம் செயும் நஞ்சுறை மாமன்ற நிழலில் கூட நொடிப் பொழுதும் நில்லான். நீசப்பூனைகள் நிறைந்த நிலைய வாயிற் கதவில் மறந்தும் கூட மழைக்கும் மறையான் மாண்பை கண்டு வானவர் வழங்ககிய வரமாய் கொண்டு இந்நெறிமகன் வாழ்வே அமைய எம் திருவிழி திறக்க திகைத்து நின்றேன்.
பாகம் 103
மலர்ந்தெழும் மாமன்னவன் மணவாட்டியொரு மாசுறை சேற்று மரையாய் சீருற மலர்வாளவள் உற்றாருறவும் உதவாது ஐயன் பொற்றாள் மறந்து புகுவது பொய்யரோடு புண்ணீர் கறையுறைந்த வெய்யர் வீட்டு விழியிலா பொருளுறை பொற்பேழையென பொறிவிழி துயிலும் எரிதழல் இடுகாட்டு எண்குணன் எனக்கு ஏதுவாய் எடுத்தியம்ப அறிவொளி சுடர் தீண்டிய அன்னை பகவதி அவனை அள்ளி எடுக்க அனைத்து வினையுமே அருநீர் குமிழ் போல் அற்றுப்போவதை யான் குற்றேவல் புரிந்து உற்றதோர் பிறப்பெடுத்து உடனு றைந்தே உணர்ந்தேன் பரம்பொருளே.
பூச்சி புழுவிற்கும் பொல்லா செயாது புண்ணியம் கோடி பெருஞ்செல்வமாய் குவித்த பூமகனிவன் பொன்மனமறிய இங்கு போதாது எமக்கு இவ்வொரு பிறவி. கரையில் துடிக்கும் கயல்களுக்கு இரங்குவான். கருணை வடிவாய் பறவைகட்கும் இரங்குவான். மறந்தும் கூட மாநிரைக்கின்னா மனதாலும் புரியாது இதயத்தால் நெருங்குவான்.
அழல் கொட்டும் அருணன் தழல் கரம் பட்டழுது சாய்ந்த பைம்பயிர் மீது பாசம் பொழிந்து வாரி அணைத்து வாய்விட்டழாத குறையாய் வாக்குரைத்து வருந்துவான். உடல் நோய்வாய் பட்ட உயிரனைத்தும் உடன் சிலிர்தெழ வேண்டி உரிமையொடு உமையொரு பாகனை உளமார நினைந்து ஓயா துருகுவான்.
அறம் வளர்க்க அடிகோலும் அழியா நூல்களை அவன் விழிகளால் விடிய விடிய வேண்டியே பருகுவான். அருளுறை அன்பர்க்கு அகம் நிறை அர்ப்பணம் புரிவதினும் பிறிதொன்றும் நினையாது பெளதிகன் புகழிசை தன்னை பொழுதெலாம் முழங்குவான். ஈடிலா எம்மான் வீடுறையும் முன்னம் விரியுலகின் வேந்தனாகி விடுதலையடைந்து விரும்பியே உறங்குவான் என்பதனை யானுரையாது இங்கே எவருரைப்பர் பரம்பொருளே.
கூர் வேல் பாய்ச்சிய குமரவேள் கைவண்ணம் சீரலைவாய் கடலோரம் தெளிவுற யான் கண்டேன். கண்ணனவன் கை வண்ணம் கார் குழலி பாஞ்சாலி கற்புக்கடம் காக்கும் காவிய தருணத்தை கெளரவரவை தன்னில் கண்ணார யான் கண்டேன். பின் கல்கியின் கைவண்ணம் கனாக் கண்டு கடுந்தவமே யானேற்று கனியும் நாளை கயிலையனருளாலே கரவாது யான் கண்டேன்.
கயவர்க்குதவிய கருணையிலா குரூர சேனையை குறிவைத்து கொன்று குவிக்க கொடுவலை விரித்து கடும் களையெடுக்க இனம் கண்ணீர் பூவுதிர்த்து காரிருள் பூனைகள் கதறி அழும் அவலத்தை அகம் குளிர யான் அம்மையப்ப னுடனங்கு கண்டேன். குற்றமுறை கோரப்பூனையெலாம் கூண்டை விட்டகலாமல் கொலை நடுங்கி குற்றுயிராக மடிவதையும் கூத்தனருளால் குறைவாலாது யான் கண்டேன்.
கொலை வெறியுற்று குருதி குடித்த கூர்நகப் பூனைகள் நல்லோர் வாழ்வை நரகாய் சிதைத்த நஞ்சுறை பூனைகள னைத்தையும் கொன்றொ ழிக்கவே எம் கொற்றவன் வருகை தர அற்ற குளமாக அழும் அல்லலுற்ற அவனி அறமோங்கி தளைப்பதையும் ஆறுதலை தாங்கி அரவமதை மாலையாக்கி ஏறு மீதமர்ந்த ஈசனுடன் யான் கண்டேன். நிலை மாறும் நிதிக்கு நெஞ்சம் மயங்காது நீசர்க்கு அடிவருடாது
நிறையுடை நீதியுடன் நிமிர்ந்து நிற்கும் நேரிய பூனைகள் அரண் அமைக்க ஐயனுடன் அடியேனும் அன்றிருப்பேன். சீரணி துகலணிந்து செம்புலத்தின் நீதி தனை சிதைத்த சிற்றின பூனைகள் ஓரிடமும் உய்யாது உயிர் மாய்க்கும் தருணத்தை பாமரனாய் அமர்ந்திருந்து பரமனுடன் பார்த்திருப்பேனிப்பாடல் தனை பதறாது செவிசாய்த்து பக்கமுறை மாந்தருக்கு பக்தியொடு செவி சேர்ப்பாய்.
கள்ளம் கபடம் கயமை மேலோங்க உள்ளம் ஊனமுற்று உய்யா மாந்தரை என்னென்று இயம்புவேன் எம்பெருமானே. திண்ணமிவர் தெருநாயினும் திண்டாடி தீண்டா நரகுறைந்து நண்ணமும் நலமடையாது நாய்க்கும் பேய்க்கும் உண்ண தம் ஊனுட்டி உயர்கதியிழந்தே ஓம்கார னருளிழப்பரென உயிலெழுது யான் உலகறிவிப்பேன்.
பாகம் 104
ஏறுதித்த எழிலில்லத்து இன்முகத்தன் கீழ்திசை தலைவாசல் முன்னமைந்த முறைவாசல் முற்றத்தை முத்தமிட்டு முன்தழுவி வட திசைக்கு வழி காட்டி வரிந்து கட்டி வண்டியோட பெருங்கோல் ஆயிரம் பிடிக்கும் தூரத்தில் பீடுடை பொய்கையை பிணைந்த பெருங்கரைக்கு தெற்கிலமைந்த ஆலயத்திலமர்ந்து அடைக்கலம் காத்தோனாய் ஆலகண்டன் அருள் பாலிக்க அவனையே யான் சேவிக்க மரை கோடுறை மண்டலமென மாந்தர்களறியாது போனாலும் எம் வேந்தன் வருகைக்கு முன்னம் விடிவெள்ளியாய் விழித்தெழவேண்டி தந்தேன் யானுனக்கு இத்திருவருள் வாக்கு. இதை தக்கபடி நீயறிந்து உற்றபடி பொருள் கொள்வாய். உண்மையை உறங்கவிட்டு தவிட்டிற்கும் உதவாத தரங்குறை தமிழ் பயின்று ஒவ்வாத பொருள் தவிர்த்து ஓய்ந்த உலகத்தார் உள்ளமது மேன்மேலும் உடையாது உற்ற வலுசேர்ப்பாய் உயர்திரு உயிர் மண்ணே.
தேவனையே வணங்காது தெருத்தெருவாய் நிந்தித்து தென்னிலத்தார் கண்திறந்த தீஞ்சித்தன் வழித்தோன்றல் இங்கு தெய்வத்தின் வழித்தோன்றி அறக்கோடி ஒளிவீசும் அனைத்துலகும் மேலோங்க மேதகு வான்புகழ மேதினியை அவனாள வடதுருவன் வன்னிலத்தான் செங்கரம் எம் செந்தமிழன் தோள் தழுவ என்னிலமும் எதிராகா ஏற்றமுறு இன்வழியை இவனேற்க போற்றிடும் புவிகாண பொற்கால முற்றிடுமே.
கண்ணனின் வகையை சேர்ந்த கண்களை புண்ணாய் கொண்ட தென்முனை தீயோர் கண்டேன். அத்திமிருறை நரிகளுக்கு தீரனின் திருபுகழ் கெடுக்க அழுக்குறு அருளிழந்த புதுபுது பொன்பொருளை பொழிவதோ வட்டியை பணியாயுற்று வான்புகா பிணியை பெற்று வடக்கினில் குடக்குறைந்து வாழ்ந்திட புலம்பெயர்ந்த வெய்யரின் கறைபடிந்த கைகளே அக்காரிருள் நெஞ்சினர்க்கு கரும்பென இனிக்க கண்டேன்.
கடும் பகை ஆடினாலும் கொடும் நிரை கூடினாலும் கயிலையன் முடியைக் காணது கண்டேனென்ற கமலனே தலை வணங்கும் காவிரிக்கரையோனிவன் பொன்னுடல் தனை எப்பொல்லா கரங்களும் புவியிலிங்கே எள்ளளவும் வதைக்க இயலாமல் இழந்துபோக இவன் இல்லத்துள் பாட்டன் பூக்குமுன்னே பதிக்குள்ளே பூத்ததொரு பருவக் கன்னியவள் பழியேற்று மாய்த்த உடல் விட்டு
மறுவுடல் ஒளியுடனே மாளாது உலவி வந்து ஓயாது உடனிருந்தே உற்றாள் போலிவனை உயிராய் காப்பதனை உமையாள் உள்ளத்துள் ஒளிந்து உண்மை அறிந்தேனிதை ஈசன் வாக்காக என் மேல் ஆணையிட்டு இயம்புகின்றேன் கேளாயோ.
பொல்லரக்க போரெழவும் புதுப்புது பிணி தின்று பிணங்கள் விழவும் வல்லரக்கர் நிலம் வெடுத்து வான் மிதந்து வந்திறங்ககி மெல்லரக்க தலம் பரவி மீண்ட நறும் பூவாய் மலர்ந்த புணரிகள் பூப்பெய்து பூக்காது போவது பூமாதர் முன்வினைப் பயனாய் வல்வினையறிந்து வாய்விட்டழவே எம் வினையகற்றி இவ்வகம் குளிர செவ்வன செய்யும் செவ்வேள் உதிக்க செம்பொன் விளையும் செழுநிலம் கண்டேன்.
குறுமுனியெனும் திருமுனி பெருங்கொடை ஈந்த தமிழெனும் தருமொழி தானே வளர்ந்த பொதிகை வரையுள் இரு பூந்தொடையிடை பூவிதழ் தனில் பூத்து பொலிந்த பொருநை உயிர் கொடியோடி உறங்கா கரையிற் ஒளியுதிர் கனகமாய் மலர்ந்தது முதல்வனவன் முன் மழலையே. பின் மழலை கமலமவன் விமலனருளொடு ஐந்தில் அருந்தேன் தமிழை அருந்து பயில பின் நோக்கியே பெருங்குமரி மடிபுகுந்தான் என்பதனை இசையோடு இயம்ப வைத்தாய் ஈடிலா இறையோனே.
பொன்னன் மகன் எரிவான் பொல்லாதவர் எரிவர் இன்னும் பலர் எரிய இழியோர் கனல் குளிக்க இனியோருடனிருப்பர். சிரசில் மதம் பிடுத்து சீறும் பெருங்கயவர் புதையும் இடம் கண்டு பூரிப்படைந்தேனே. அரசில் அறம் வளர்த்து அன்பையுடன் விதைத்து முரசை அறைத்தபடி முக்குரவை யொலியெழுப்பி முத்தியெழும் தெக்கணத் திருவடியில் தெள்ளுதமிழ் வளர்ப்பான் நேரிய நெறிநாடன். குன்றா வளம் பொழியும் கொற்றவை நிலமிணைத்து அவள் கன்றாய் கடன் முடித்து காவியம் தனை படைக்க ஒரு கற்பக தரு கிடைப்பான்.
பாகம் 105
அண்ணலின் அம்மை அப்பன் ஆருயிர் காதல் கொண்டே செம்மையாய் இணைந்தொரு செழுவாழ் வமைத்தாலும் உண்மையாய் வாழாமல் ஓயாது கடிந்தபடி உள்ளத்தால் பிரிந்தபடி ஒருவற்கொருவர் ஒற்றுமை சிதைப்பரென்று ஓம்காரன் ஒருமுறை எம் உட்காதில் புகுத்தியதை யான் வாங்க வாக்குரைத்தேன். இன்னும் பல உனக்குரைப்பேன்.
எம்மான் அன்னைவழி முன்னமைந்த அப்பன் குடி செம்பொன் செல்வமுறை செழுங்குடியாய் பொலிந்ததோர் ஊரறிந்த நற்குடியின் உயர்திரு நன்மனையுள் பெருமான் நம்மையன் நலமுடன் உதித்தாலும் தரித்திர குடிதந்த தேவநேய தாதை யொரு மேதையாகி தக்கதோர் பணியேற்று நீதியின் நிழலடியில் நெஞ்சார்ந்து விதி எழுதும் வேந்தர்க்கு உதவும் கரமாகியே ஊதியம் பெற்று தன் ஊழியம் முடிக்க முன்னர் உயிர் முடிச்சவிழ்ந்து அவ்வுயர் பறவை பறந்ததன் ஊழ் வினையை யான் அறிவேன். உத்தமரே கேளீரோ.
செல்வச் செருக்குடை சினமுறை அன்னையொரு சீறும் அரவம் போல் அசுர குணமுற்றிருக்க அம்மை குணம் அதில் கொஞ்சம் எம் அய்யனுக்கு தொற்றக் கண்டேன். ஆயின் அப்பனது அருங்குணம் தான் எம் அண்ணலுள் அசலாக அகமெலாம் அடியேன் கண்டேன்.
புனலாலே அனல் பூத்தெழும் பூதமாக பூவுலகில் ஒளியேற்றி புத்துலகை படைக்கின்ற பெருந்துறை நற்பணியால் பெற்றாள் பொருள் சேர்க்க உற்றபிதா உறவு தந்த யோனிக்குதவாது போனாலும் பொற்றாமரை போல் ஐயன் பொன்மகள் நிழல் போர்த்த புதுப்பொலிவுடன் பூப்பானே.
உற்ற சில மாமனுள் உயர்திரு மாமனாய் பெற்ற அன்னைக்கு பின்னுக்கும் நாதனாய் இட்ட நெஞ்சீரம் பெற்ற தயாளன் தன் சோலையுள் காயறுக்க கற்பகம் ஏறி கால் தவறி தாழே வீழ்ந்து தழல் போர்த்தி தகனமாகும் தாய்மாமன் தயவை தலைவனிவன் நோயுற்று துடிக்கும் போது நொந்து தூக்கி சுமந்தபடி ஒளடதமனை நோக்கி அழுதோடிய தருணத்தை என்றைக்கும் நினைத்தபடி இருவிழியை நனைத்தபடி எம்மானுருகுவானே. ஈசா நீ அருகமர்ந்து இதமாய்
அன்றிருந்து இனிதே தேற்றிடுவாய்.
அன்னை பெரு மலராய் அவளுடன் அலர்ந்ததொரு தங்கை சிறு மலராய் தந்தை வியக்கும் வண்ணம் சிற்றாள் எவருமின்றி சித்து அரவணைப்பில் சேயோன் துளிர்ப்பானே. மழலை தனை கடந்து மரையாய் களித்தபடி மீளிப்பருவத்தையும் காளி கடத்திவிட கன்னல் தளிராகி கனகன் துளிர்விடவே மறவோன் கழிந்த பின்பு திறவோன் காலத்தில் இறனை வளர்த்தெடுத்து விடலை விட்ட பின்னும் விரும்பும் காளையாகி கன்னியர் நெஞ்சத்தில் காதல் கணை பாய்ச்சி கண்களால் சாய்பப்பானே. கனியா கனவுகளை கன்னியர் நெஞ்சினில் கதிரெனவே குவித்தாலும் முதுமகனான பின்னே முற்றுமுணர்வானே.
தோற்கா பேரரசன் தோற்கும் தருணத்தில் ஏற்கா ௧திர்காயை எய்து முடிக்கையிலே இகமே மாறிவிடும் இருளே சூழ்ந்துவிடும். போர் காய் பூரித்து பொரிக்காய் பல பறந்து ஒர்காய் ஆயிருந்து உருக்காய் உறைந்ததொரு உலகை உலுக்கிவிடும். பூக்கள் பூக்காது புல்லே பொசுங்கிவிட பொறிகாய் கதிர் வீச்சில் பொசுக்கும் வீச்செழுந்து புவியே ஓலயமிட புண் காய் ஆகிவிடும் புழுக்காய் நாறிவிடும்.
விதியுள் வீழ்ந்ததனால் வெற்றிக்கனி பறித்த வேந்தர் வேந்தர்களும் வெந்து அழிவதுடன் மேற்கில் கொடிகட்டி மேதினி ஆண்டதொரு மாநாட்டின் மனை அழிய மதியை விலை கொடுத்த மாந்தர் சேர்ந்தழிவர். மாயோன் மண் காத்த மலர்கள் சில மட்டும் மாயாதிருந்திடுமே. மற்ற நிலமெல்லாம் மரண அடி வாங்க மயான அமைதி கொண்டு மண்ணுள் உறங்கிடுமே.
நாட்கள் பல அல்ல நான்கு தலைமுறைகள் புல்லும் தலைதாக்கா பொல்லா அவலத்தினை போரே சூழிபோட்டு போரே வழிகாட்ட எம்மான் இவன் முகமே இருளில் ஒளிர்கின்ற பொன்னாய் கண்டேனே. இதை உமையே நன்கறிந்தும் அவளுள் உறைந்தோன் நன்கறிந்தும் உரைக்கா திருந்தாலும் உயிரே யான் அறிவேன். உன் பயிர்கள் கருகாமல் பார்க்க வரமில்லை. பார்க்கும் விழிகட்கு பக்குவம் வலுவில்லை. சிவனே மன்னிப்பாய் இச்சேதி கசிந்ததற்கு.
பாகம் 106
கைக்கொடையிற் கதிர்மகனன்ன கமல கைத்தலம் கண்டு மெய்யுடை வாக்கு மேதினியறிய காதினில் தந்தேன். பொய்யா வானம் பூமாரி பெய்ய வெய்யரில்லா வேந்தனின் விரிநிலம் வீசும் தரை மரையொப்ப புகழ் மணம் மோந்து அமரர் அண்ணலே அமழுக் காறடைவான் அம்மையப்பனே நீயறிவாய்.
ஈன்று புறம் தந்து இதயக்கமலம் கவர்ந்து இனிதாயமைந்த பாட்டன் பரம்பரை வீடு பண்பாளன் படுத்துறங்கும் பாக்கியமிலாது போயினும் அவன் ஊக்கம் கெடாது உளம் தளராது தயை செயும் ஈசனே இடுக்கண் களைந்து என்றும் துணையிருக்க வானவர் வாய் மணம் வீசும் வாழ்த்துகள் பெற்று வல்லவனவன் ஏற்கும் வண்ணம் இல்லமதை வாழும் கிண்ணமாய் எழுப்பி வந்து பெரும்பேறு தந்து கனலன்ன கனகன்னை கடும் பணியாற்றி கைத்தலம் நிறை காஞ்சன மீட்டி கைவசமாக்கிய கவின் மனையாயினும் கடன் பட்டு கரம் பற்றி மணமுற்ற மனைக்கு கைமாறி ஆங்கடிமையாயுறைந்து அகமுடைந்து ஐயன் அறந்தாங்கி தவமேற்று அகன்று போவானென்பதையும் அடியேனறிவேன் ஆருயிரே.
ஓங்கிய இருநிலை உயர்வுடை இல்லம் உச் தலை வைத்து உற்ற வட திக்கிலொளிரும் திருவாசல் உறைந்திருக்க கொற்றவன் கண்ணோக்கும் தொலைவினில் குன்றென மலையொன்றின் கொண்டை முடியில் கோமானிவன் வரவிற்காய் கொலுவுற்றமர்ந்தபடி மதம் தீண்டா மிதமொடு மாதங்கம் மாதவம் பூணக்கண்டேனிதை யுன் பதமலர் பங்கயம் வருடி பார்க்கின்றேன் பரம்பொருளே.
அன்று ஈழம் கீழடக்கி ஈன குணம் மேலெழுப்பி முன்பொருவன் தன் தடந் தோளால் கங்கைவார்ச்சடைய னுறைந்த கயிலையை அசைத்த கர்வம் கொண்டு கற்புடை மயிலையும் சிறையெடுத்து சீர்வரம் காத்த செழுவாழ்வேயழிய நேர்விதியுமமைத்து நெடுவிண்ணிற் புகுந்து வீடுறைய மீண்டும் மண்ணில் மலர்வான்.
திருவரங்கப் பெருமானொரு தீரனாய் பிறப்பெடுக்க அவன் திருவாசல் காவிறை
இருவரில் இன்முகனொருவன் வைதேகி வாழ கரம் தந்தோன் திருவமுதாய் வாழையூரில் வாஞ்சைமிகு தேராய் வந்திறங்கிடுவான். வரவேற்றவனை என் நெஞ்சில் நிறைத்திடுவேன். உடன் வாராதின்னொருவன் வைகுந்த வாசலில் நிறைந்துடுவான்.
வீணரக்கன் வெற்று விலையறிந்து வீழ்த்தும் கலை நாலறிந்து வெற்றி முகம் தானறிந்து நாநிலத்து நன்மாந்தர் நலமுணர்ந்து திருச்சீரலைவாய் புரமெழுந்து ஆடவப் பேராண்மை அனலெனவே மேலெழுந்து அறவேள் வீரம் தோற்காது வேலெறிந்து விரிந்தகன்ற அவன் காரிருள் மார்துளைத் தெறிந்த கதிர்வேளமர்ந்த நூலறிந்து கருணைக்கடல் வாலறிவனிவனென்று வானவரே வாழ்த்துகின்ற ஆளரியாய் ஆர்பரிக்கும் வீரநடை வேந்திவன் வேண்டும்
ஈரமுறை அகமுடையோன் அங்கமதில் அரவமாடும் ஆலகால சங்கமுடை ஆதிரை அன்புநாதன் அருளாலே அழவந்தே இக்கோளரி தன் கொற்றம் முற்றும் நிறுவி குடையொன்றின் கீழ் வானமைதி வந்தமைய வழி வகுப்பான். வள்ளலான் வருகையொரு அதுவிரைவாய் அமைவதற்கு அருள்கூர்ந்து வரமருள்வாய் அகமுறைந்த பரம்பொருளே.
பாகம் 107
உழவினை தொடுவோர் உயர் குடி அமைவோரென ஐயனோங்கி அனுதினம் தொழுவான். அவ்வரமிலாது வளர் வயல் எழாது போயின் வாழ்வியல் எதுவுமில்லை. அவரிடும் பிச்சை இலாது போயின் பெருங்குடியே தகர்ந்து போகும். பேணும் ஊனுடலெல்லாம் பெற ஊணிலாது போனால் மண்ணுயிர் மடிவதே உண்மை. இந்த ஊழ்வினையறிந்து உண்மையையுணர்பவன் உலகினில் ஒப்பற்ற ஞானி.
பழைமையை ஏற்று பைந்தமிழ் காத்து பெருமையாய் கருதும் மங்கையர் மடந்தையர் மனமொரு மலராயுணர்ந்து அதென்றும் சிதையா வண்ணம் எம்மான் இமையென காப்பான். அரிவையர் தெரிவையர் அழுவதை அண்ணல் அறவே கண்ணால் தாங்காதவனாய் மாதர் குலத்தின் மலரடி பணிந்து மாண்புடன் மதிக்கும் வேந்தனையறிந்து விடுகதை போல புதிர் கதை தந்தேன். புழுதியுள் எழுந்த பொற்றாமரையானை புண்படாது பறித்து உன் பூமனத்துள்ளே பதிப்பாய்.
பழம் விதி அனைத்தும் பாழ்விதுயில்லை என சிலவிதி எடுத்து பல விதி தகர்ப்பான் ஐயன். உளவியலறிவில் ஊறியே திளைப்பான். அரிசியல் அறிவை அம்பென கொண்டு ஆடும் அரசுகள் அனைத்தையும் தகர்த்து அறம் சொல்லும் ஆளுமை தனை திறனம்பட கொண்டு ஆடா அரசிற்கடித்தளயிடுவான் புரட்சிகள் வெடுத்து போர்களமாக விழுச்சி கொள்ளென வீழ்ந்த மாந்தர் முன் எழுச்சியோடு ஏறேன நின்று ஆளவந்தான் ஆற்றலறிவேன். அதை அம்புலி தலைவனே என்னிலும் அறிவான்.
களவியல் புரியா காதல் புரிவான். கன்னியர் கற்பை காஞ்சனம் போலே கண்களில் ஒற்றி கடமை மதிப்பான். செம்பவள நகக்கண் கவர சீதள முகக்கண் கயலென ஒளிர செம்புல சிறுத்தையை கண்டேன். அவன் சீரிய நெற்றியில் கூரிய கண்ணது நீரு போர்த்திய நெருப்பென உறங்கிடக் கண்டேன். பவளப்பூவென மூக்கும் பளபளப்பென எழில் சேர்க்கும். பார்வை பாய்ச்சிடும் பாவையர் பால் நெஞ்சேங்கும் பங்கய மலரென வதனம் வேல் விழி வீழ்ந்தால் விடுமோ. வெண்டலையானே இதற்கு விரிவுரை யொன்றெனக்கனுப்பு. இது கன்னியர் தொடுத்த வழக்கு. அட காமனே வந்திங்கு அக்கள்வனின் கவர்ச்சி ரகசியம் விளக்கு.
மறலி அழைக்கா மாமருந்தாம் திருக்குறளமுதை தித்திக்க குடித்து தீர்த்த தீரனவன் குடிமகனாட கோனெ திரியும் நாள் வரைக்கும் அவனை துருவித்துருவி யானறிவேன். தூதுவனிலாது தெலைவறிந்து தொடர்பு கொள்வேன் பரம்பொருளே. தோற்றம் கண்டு யானுறைந்து தொய்விலாது வாக்கு தந்தேன். ஏற்று இயக்கும் எம்மானின் நோக்கும் விழிகள் உடுத்திக் கொண்ட குழியுடன் குவியும் ஆடிகளின் குறிப்பெடுத்த வேற்றுமையை அவன் விழிக்குளுறைந்த பாவைகளே விரைந்தறியும் முன்னரதன் பாகுபாட்டை யானுணர்ந்து பாடல் வடிவில் பகருகின்றேன். பார்ப்பது என்னொரு அனல்விழியே. அப்பக்குவம் வந்தது சிவனருளே .
பாகம் 108
புவிமகள் வரமாய் பெற்றவன் மர்மம் உரைக்கவந்தேன் ஓழிக்கா வண்ணம். அக்கொற்றவன் கொண்ட குறித்தண்டிடதே அழகுடை அரிமணியளவுடை ஆறு மச்சம் அறுபடை வீடென அமைய கண்டேன். வலப்புறத் தண்டில் வரிசை தவறி ஒன்பான் கோள்களை உரைக்கும் வண்ணம் ஒன்பது மருக்களை உற்று நோக்கு உள்ளம் நெகிழ்ந்த உண்மையை சொல்வேன். மரை மலர் மொட்டின் நுனியடி தன்னில் சிறுநீரருவி சீறிடும் துளைகீழ் ஆம்பல் விதைபோல் அங்கொரு மச்சம்
இருளின் நிறத்தில் எழில் வேள் குறியே ஏற்றிருப்பதை என் வெறும் விழிமூடி வெற்றிக்கண்ணாம் நெற்றியிலமைந்த நெடுவிழி திறந்து உற்று நோக்ககி உலகுக்கு தந்தேன்.
கருஞ்சீரகமாய் கண்ட மச்சம் இடப்புறமிரண்டும் வலப்புறமிரண்டும் விதையுறை மேலே வீற்றிருந்தை கண்ணால் கண்டேன் காதுகொடுப்பாய். நடுக்குறி மூடு நட்ட இடமாம் நற்றாமரை தண்டு முளைத்த அடிவயிற்றருகில் அங்கொரு மச்சம் கொள்ளென கொண்ட குறியதை குறித்துக் கொள்ளென சொல்வேன். அவன் அயர்ந்துறங்கிய அன்றொரு யாமம் தன்னில் அவனே அறியா வண்ணம் ஆடையுள் நுழைந்து அடியேனெந்தன் அழல் விழிபாய்ச்சி அடுத்தவர் கொண்ட பீடைக்கண்கள் பிடிக்கா வண்ணம் அனைத்தையும் கண்டு அளவீடெடுத்து பாடல் வடுவில் படிக்கத் தந்தேன். பரமன் அருளால் பக்குவப் பட்டோன் படிக்கக்கடவன்.
மனம் திறந்து மெய்யுரைப்பின் மாநிலத்தில் இன்னல் இங்கெவர்க்கு மில்லையே. பிணம் குவிக்கும் நோக்கினையே பெரிதாய் கொண்ட கனம் குவித்த காலன் அவன் கைக்கு கடமை என்பதில்லையே. பணம் குவிக்கும் அவாவில் பாவம் தனை மாந்தர் என்றும் விடுவதில்லையே. ஆதலால் பிறவிப்பெருங்கடலை பேதைகள் கடப்பதனென்பது இயலா பெரும் சாதனை என்பதுண்மையே.
பள்ளியிலுடன் பயின்ற யெம் பண்பாளன் மேல் பாதகப் பதரொருவன் பாசாங்காய் பாசம் பொழிய எம்மானுதித்த இன்னுரருகே இரவியென எழுந்து ஈடிலான் இதயக்கமலம் இழித்து இடரிழைக்கும் வஞ்சக வடமண் விலங்குடன் வாழ்வோங்கி வாழ வன்கரமிணைப்பான் கதிர்கண்ணாயிரம் என்ற கறையுடை மறுபெயர் தாங்கி கன்னன் காலடி வீழ்ந்து கழுத்தறுக்கும் காலனாய் தேர்ந்து புதிரெனவே புன்னகை பூத்து பொல்லா நட்புடை நெஞ்சில் நஞ்சுறை நாகம் மறைத்து தெள்ளென தெரிவான் திளைத்து.
செய்நன்றி கொன்றவனவன் \குற்றுயிர் நடுங்கி செவியற அலறி குற்றுயிராகி கூற்றுவன் கொடுக்கும் கொடிய அளற்றுள் குடிபுகாது அவனை ஆட்கொண் டகற்றிடுயென யான் பற்றிய நின் பாதத்தில் ஒற்றிய உவர்நீர் விழிகளால் ஒரு வரம் கேட்பேன் வான்பிறையணிந்த வரம்பிலா வல்லாளா.
சிலுவையை வழிபடுமிருவர் சீரிய நட்பெனும் போர்வையுள் வருவர் அக்கயவர். இளைமை முழுவதும் எம்மான் உதவிட உயர் தாழ் பணிந்து உதிரிப்பூவாய் பிரிந்து எதிரியின் ஏவலராகி எல்லா வளமும் சேர்த்து பெருமை பேசியே சதிப்பர். பீடுடை வேளிவன் கொண்ட பெருங்குணம் முற்றும் உணர்ந்தும் உணராமலகன்று உறவறம் பேணாதறுத்து உயிர் வதை கூட்டணி புகுந்து எருமை வாகனன் பிடிக்கும் ஈனர் மந்தையுள் விழுவர். கபடம் கண்களில் ததும்ப கருநாகமாய் திரிந்து வேண்டிய நலத்தை ஈட்டி விரைந்தே மண்ணில் புதைந்து மரணத்தின் வளையத்துள் நுழைந்து மறலி வாயுள் விழுந்து மலரா நிலையை அடைந்து மறுமைவீடே அடையார்.
பாகம் 109
மன்னனெழும் முன் மண்ணிலுறைந்திடுமவன் மனையுடை மறைவென் அடியேன் அறிவேன். அது எம்மன்னை மலைமகள் அழகு பெயருடை மற்றொரு புரத்தில் குற்றம்புரிவோர் கூடிவாழும் கோற்கொடியடியில் வஞ்சகர் குலமே வளைத்துக்கொண்டு இவன் வாழ வழிவிட மறுக்கும் வண்ணம் விடுப்பு கைதி போல் விடுதலை கொடுத்து வெளிவரும் வாயில் வரும் எண் சொல்வேன்.
அங்கு மறை எண் கொண்டு மன்னவனுறங்கும் முரசு கட்டிலின் கீழே உமையொரு பாகனுறைந்த எண்ணுடன் திருவுடை செல்வம் சேரும் எண்ணுடன் துரைமொழி தந்த மூன்றாம் எழுத்துடன் சுவைபொழி எண்ணும் அண்டி அருகிலமைய அதை அவிழ்க்க இயலும் புதிரென பொதிந்து பூ போலுன்னிடம் தந்தேன்.
வானில் மீனை இயக்கி வந்து வாஞ்சையில் கோனாய் அமர்ந்தவனொருனாள் குற்றுயிரிழந்து குண்டால் சிதைந்து அவனெழி லுடலறியா வண்ணம் அழிந்தவன் இரு பெயர் சொல்லும் சிற்றாரொன்று பேரூரென்னும் பெரும்பாம்பொன்றின் அரசனமர்ந்த ஆலயமுள்ளில் அருள்பெற கண்டேன் அறனே அறிவாய்.
மண்மகள் மார்பு கச்சையுள் மயங்கியே மறப்பாலருந்தும் மரகத மைந்தனவன் மைத்துனனிருவர் மரண வியாபாரக் குற்றேவல் புரிவோரென குறிப்பிட்டு கொன்றை வேந்தன் தன் கன்றாய் நினைந்தென் காதல் சொன்னான். மனங்கொன்றவனொருவன் ஐயனப்பன் முன்பிறந்தோளின் முகம் கறுத்து அகம் சிறுத்ததோர் வகையறியா தலைமகனவன் இணையிலா வரையடியில் வடக்கு தரைமடியில் வன்படை இயக்ககி கொலைக்கள ஓநாயாகி ஓய்வான் ஆங்கே அப்பாவி ஆயிழையரணிந்த அறமுறை முலைச் சரடறுக்கும் துப்பாக்கி சண்டாளனாய் முப்பாரும் சபிக்க முன்னரே அறிவேன். மற்றொருவன் தலை தங்கையெனும் தரப்பிழை பொற்கிளிக்கு தாலிதரும் தன்மானம் இழந்த மற்றொரு தற்குறியென பொற்றாமரைதாள் பணிந்து பூதநாதனை கேட்டறிந்தேன் .
கல்கியின் கையெறி தூண்டிலிலுறைந்த கடிமீன் புழுவாய் ஒரு சிலர் தங்கள் உயிர்வதை ஏற்று எந்தன் பாடலை நல்லோரறிய நாடுமுழுக்க பகர்ந்திட அவனின் அவனியுள் உறைந்த பக்தகோடி மாந்தருக்கெல்லாம் பரம்பொருள் ஈசன் பொழியும் அருளும் அகத்திய பாதம் பற்றியே அடிமைக்கடிமை அடியேனருளும் அளவிலாதமையும் என்பதை அறிவாய் எல்லாம் இனிதாய் நன்றாய் அடைவாய்.
வில்லில் இருந்து தெறிக்கும் அம்பாய் மின்னல் இடிபொல் மின்னிய படியே மேதினி அதிர மீண்டுவந்து அகிலம் முழுக்க ஆண்டு கொள்வான். சொல்லின் செல்வன் அகத்தியபெருமான் சொல்லாதெனக்கு சொல்லித் தந்தார். வல்லாதமைந்த வரமென சொல்வேன். அவ்வான் மகன் பூமியை நெருங்கி விட்டான். நில்லாதவன் வரும் நீதி நாட்கள் பொல்லாதவரைப் புதைக்குழிக்கனுப்பும். எல்லாம் வல்ல எம்பெருமானே எம்முயிர் காக்கும் ஈடிலா கல்கியை இம்மாந்தர்க்கு காட்டி கருணை உள்ளம் உளோரை மீட்டு காலம் சிறக்க அறநெறி காப்பாய்.
கொல்லா நோன்பு கோடி கொடுப்பினும் குழையா மனத்துடன் யாவர் செய்யினும் காலையா தவமாய் கருதுவான் எங்கள் கன்னி குமரியின் உந்திக் கனியென உதித்துறங்கி உயிர்த்தெழுந்த எம்மண்ணின் மைந்தனை காண வேண்ட காலங்கடந்தும் பனி போல் நெகிழ்ந்தேன்.
மண் புகழும் மாந்தரையெலாம் விண் அறிய வழியேயில்லை. வேதம் நான்கிலுமுறைந்த கண்கவர் மால் கணையொடு வில் தாங்கும் தோளெடுத்து விதிசூழ் பிறப்பெடுத்து கனல் கண்ணுடை காலகாலன் கழலடிக்கே மலர் சொரிந்து மன்றாடுவதை யுணர்ந்தேன். அகிலாண்டவன் யாரென ஐயம் தெளிந்தேன். இதை அறிந்தோனே அங்குறைய பெரும் பேறு பெறுவானென பிறப்பறுக்கும் பெருவழி சொன்னேன்.
பாகம் 110
அஞ்சன் நெஞ்சுறை அஞ்சை அருளிலா அசிதனை அம்மையப்பன் மெய்யுறை அணங்கவள் அருள்நிறை ஐயனை இங்கெவரும் நெருங்கா நெருப்பென நிமிர்ந்த நெடுவரை நிகர் தேவனை யெவரும் வஞ்சம் தீர்க்க இயலா வரமொடு வந்தோனை அறிய வல்லிலா வீண் வில்விழிகள் போதா விண்வெளி ஆண்டு வேதம் பூண்டு விளைந்தோனை அரிய ஆயுதமும் கொய்ய தேறாது கூற்றுவனும் கூடாது ஓடும் கொற்றவனிவனென்று மற்றவரெவரு மறியாது மண்ணுறைந்து போயினும் மாமுனியறிவர் உடனவர் சீடன் மடமுனி
யானறிவேன் முடமுடை மும்மல மனத்தொடு நடை பயில் நாணயிலாது நாறுமுலகே.
ஆடவள் கண்டம் சூழ்ந்தறந்தாங்கும் காஞ்சனச் சரடறுத்தோடும் கயவரினம் கண்டு எம்மான் இதயக்கமலமுருக எளியோர்க் கிரங்கும் பொன்மனம் புயலெழும் தென்முனை திருவாளன் முன்னில் வானமே வளையும் வள்ளல் வலக்கரக் கைத்தலமுள்ளில் கள்ளழகு காமுகன் கைதவழ் வலம்புரி தலைச்சங்கம் கயல் வாலொடு இணைய அக்கார்வண்ணன் கண்கவர் சங்கின் கடை முனை பாண்டியச் செஞ்சேல் படிந்த தலையொடு
அறுபத்தொன்பதாய் அணைத்து புணரக் கண்டே பெருவிரலதன் பேரவா பெருக்க சீர்மயில் சிரமாய் செவ்வெழில் தரமாயமர கண்டேனது கிடையாய் கிடந்து கீழ் செவ்வாயிற் உறைந்து இருவிரற்கிடைக்கொரு விரற்கடை உயர்வாய் திருமாலவன் மாதமர் பெருமலர் வலம் வருயமிதழொன்றில் குழலெழில் குந்தன் ஊதிய திருச்சங்கின் பாயை கண்டென் அஞ்சா நெஞ்சம் அஞ்சனரும் பிறப்பென்றே அடி பணிந்தெழுமே.
கற்றோரெல்லாம் கண் திறந்தோரிலையே. கண்ணிருந்தும் கசடற சொற்போர் புரிவோர்க்கும் சுழுமுனை விரிவதிலையே. விழிதழலெரியும் விமலனடி வீழ்ந்து வினையறுப்போர்க் கல்லால் பரம பதமதில் பதியக் கூடுமோ. விண்ணவர் வியக்க வண்டமிழை விற்போராயினும் வேண்டுவது யாதெனில் வெற்றிமுகமேறி விரும்பியே அறம் சிதைத்தால் அவனெச்சம் அனைத்தும் வேரொடு விரைந்தழிவது உறுதியே. அவர்க்குரைப்பதும் இறுதியே. அற்பர் உலகில் அழுக்கு இருளில் அறிவிலிகள் இயங்கி தற்குறி பொருள் தர தரம் பிழை உயிர்கள் உயர்வென கருதி ஊளையிடுமே உமையொரு பாகனே.
அரைக் கீமமைந்த அவ்விழி நாடி அதனில் கூட இரைத்து போவதில் எப்பயன் கண்டாய். மரை மலரிதமழுள் மதநீர் வடிந்தால் எதுவுமிங்கு இன்பமில்லை. ஈசன் பதமலரிதழில் படியும் கண்ணீர் பாழுலகை மீட்டு மேலுலகை காட்டும் காட்டா கன்னியர் கீழிதழ் உனக்கு கீழுலகுறைய கிடுக்கி பிடிக்கும் கேளாய் மனமே.
கறைக்குள் உறைந்து கண்களை மறைத்து சிறைக்குள் இருந்து சிந்தை மரத்து சிறுத்து போதலால் எவர்க்கும் பயனிலை அறிவாய். கரைக்குள் உறைந்து காமம் பெருத்து விறைக்கும் வெறியொரு வெறியா நீ சொல். அக்கரையை உடைத்து காட்டாறெனவே அவனியை துறந்து அவனிலுறைய நீ வா. யானுரைக்கும் ஒளியுரை உனக்கும் கேட்கும் ஓழியாதிங்கே வா வா.
எடைக்குப் போட்டால் எதுவும் இல்லை. இவ்வுடலால் வருவது மாபெரும் தொல்லை. எல்லாம் வல்ல ஈசனடியோ என்றும் நாறும் முல்லை. அதற்கீடுணை என்பது இவ்வுலகல்ல எவ்வுலகிலுமில்லை. சிரை மனம் செல்லும் இடமெல்லாம் இனி செல்லாது இங்கே வா வா. சுமைதனை தாங்க சூட்சுமம் சொல்வேன். இது சுந்தர சொக்கன் மீதாணை.
எம்மறையோதி மறுமையை வேண்டி எவ்வழி தேடிடனும் சுரைப்பாலருந்தி சரமறுப்போர்க்கு சுழுமுனை கருமுனையாகும். அது ஒளி முனை ஆகாதொருநாளும். அவ்வெய்யர் உய்ய வழிவேறில்லை யறிவாய். நரை விழும் முன்னே நாதன் திருவடி வீழ்வாய். அவன் நிறைதனை அறிய நின்னிருவிழி போதா நீசர் நிரையுடன் இணையாஅருமுரை அடியேன் அளப்பேன். மறுமொழியின்றி இவ்வருமொழி யொன்றை யான் தருமொழி யெனவே கேட்பாய்.
வரைக்குள்ளமர்ந்து வாய்க்கு வரும் வாக்குரைப்பேன். வையத்துள் வாழாது போவோர் தேறாது போகார். இரைக்குள் வீழ்ந்தவள் தென்னிலம் ஆழ்வாள். வலைக்குள் வீழ்ந்தவன் வஞ்சி அவளுடன் கொஞ்சி குலவியும் கூடி கலவியும் கடைவரை வாழ்ந்திட மறுப்பான். காமன் கலைகள் முழுமையும் சுவைப்பான் காதல் முடிந்ததும் அவள் கதையும் முடிய விலைபெற்றகலும் வெறும் வேடனாய் பறப்பான்.
அவள் தலைக்குள் செதுக்கிய இம்மை எழுத்தினை எம்மால் எடுத்து இயம்ப இயலுமே. மறுமையையன்று அந்த மாயோனையும் அறிந்து உண்மை உரைக்க என் ஊமையை கலைத்தேன். அவள் சின்னஞ் சிறுமியாய் சிலுவையை அணிவாள். பேரிளம் குமரியாய் பணந்தனில் புரள்வாள். பேரிளம் கடந்தும் பேதையாய் பின்னொரு சிவனிலணைவாள் பின் செய்வதறியாதவனையும் பிரிவாள்.
பெருந்துயர் தின்று பேயவள் மைந்தன் பொய்யையுணர்வாள். சீரும் வாங்கி சேர்க்கும் வீட்டினர் இவள் உள்ளம் அளக்காதவள் செல்வம் அளக்கவே சிதையும் மனத்தோடு சிறகுகள் சிதற பறப்பாள். அன்னை அன்னையே அவள்க்கிணையில்லையே. அம்மானின்பம் அனைத்தும் கசக்க அவனையும் துறந்து அரும் பணி தொடர்வாள். வயதையும் இழந்து வாலிபம் கழைந்து வளவாழ்வையும் மறந்து பரமன் மீது பாரமிட்டு பொதுவில் ஊழியம் புரிவாள். பல்லுயிர் மதித்து வெல்லுயர் அவை தனில் விழைந்தே அவளும் மன்னுயிர் வணங்கும் பொன்னுயிராவாள்.
பாகம் 111
அறனார் பொதிந்தரவம் குவிந்த அச்சிவனாருறைந்த சீர்மலை சூழ் உவர் திரவம் உயர்ந்தெழுமே. அதை அடிமை கொள்ள எவன் வரினுமவனுடன் அழிவை தேர்ந்தெடுப்பான். பல மருமம் புதைய அங்கு தருமம் உறைய அவன் வரமாய் மறைந்திருக்க அங்கு உதிக்கும்பேயது போராய் கொக்க கண்ணீர் கரைந்தோடும்.
கருணையன்னையின் கருக்கலைந்தே போயிட வறுமை பாயிடுமே. உறை பனியை உடுத்த துருவ நாட்டால் பல தருநிலம் உருக்குலையும்.
நெருப்பு மழையால் நிலங்கள் எரியவே நெஞ்சம் பதைபதைக்கும். உண்ண உணவே கிடைக்கா கிடையாய் பல்லுயிர்கள் வதை படுமே. வல்லூறு ஊர்திகள்
சொல்லாது கொள்ளாது பொல்லாத நமனாகும். அங்கு எண்ண முடியாமல் ஏராளம் பிணந்தின்று பணவைகள் விடைபெறுமே. விண்டுவின் நகலவனை விரைந்தே காண விரி வியலுள் சென்றேனங்கே வீசுமொளி வீழா வியலுடல் ஒன்று கண்டேனதில் செம்முளரி முகமாய் முளைத்ததோ என சிந்தை மயங்க அகமிழந்தேனவன் அறமோங்க அவதரித்த அண்ணல் கல்கயென அங்கடி பணிந்தேன்.
காமற் கரித்த கனல் கண்ணாருதிர்த்த கண்டிகை கழுத்திலாட கன்னிகழியா காக்குமன்னை குமரியாக வன்னிச் சுடர்போல் வாடா முகத்து மாமன்னனவன் மலர்த்தாளடி தனை தளராது தயவுடன் கண்டே மேன்மேலும் வாக்குரைத்து மீதமுள்ள ஊழ் வினையறுப்பேன். நீடுலகில் நிறைந்தொழுகும் நெஞ்சுறை பரம்பொருளே.
செஞ்சேள் ஒப்பாய் சீர் புயம் கொண்டோன் வலக்கரம் பொதிந்து வானருள் பொழியும் தேனினும் இனிய தென்னவன் கொண்ட காஞ்சனமொத்த கைத்தல முள்ளில் மாநிலம் மயங்கும் முண்டக இதழுள் முயங்கிய குண்டலி மயிற்சிகையாக மாதவன் தலையுறு மெளலியு மொளிர கண்டேனங்கே மறையாதருளும் தேவநகரியின் திருச்சொல் ஓமென்றமைய உயிர் மெய்யிணைந்த உறவிலி கரம்பிடி உடுக்கையும் மைத்துறைய உடையாளீன்ற செவ்வேள் உடுமீன் அறுமுனை அம்போருகமுள் அழகுறு இருக்கையும்
திருமால் கையுள் திடமாயுறைந்த திவ்விய சங்கமும் தெளிவாய் தெரிய அவன்
திருவழி மரபினர் நெற்றிகுறியென நெடுங்கொடி போன்ற திரிகோடுயர தெக்கண ஓவிய தென்னில பாகமும் ஆலய தீபமாய் அழகுறு ஈழமும் அருகினில் அமைய அனைத்தையுமொன்றாய் அன்பாயணைக்கும் ஆருயிர் தாயென தாமரை தாங்கும் கைத்தலங்கொண்ட எம்மானவனே உந்திக்கமலம் உயர்த்தியுறங்கி உலகை அளந்த பெருமாள் தோன்றும் பெரும் பிறப்பென்றென் கனலிமை காக்கும் கண்மீன் திறத்து உமையொடு கண்டதை ஓழியா துரைப்பேன். இனி உலகில் உதிப்பது ஒப்பிலா நலனே.
அருங் கொடையுள் பெருங்கொடை அன்னமிட்டு உண்ணுவதே. இதை அம்மையப்பன் மெய்யுறை அன்னையும் அருள்வாளே. அண்டமுறை அனைத்துயிரும் அனுதினமும் மகிழ்ந்தாலே அம்மகளகம் குளிர்வாளே. பெருங்கொடையுள் பேறுபெற்று பிறப்பகற்றும் நீதி பெற பிறைசூடி பெயர் ஓதி பிழையறியா வாழ்வமைக்கும் கறைபடியா அடியார்க்கு கரத்தாலே அன்னமிட்டு அமுதூட்டல் ஒன்றேயாம்.
கண்ணனவன் கலி மாய்க்க காடுறைந்து தவம் நோற்றால் திண்ணம் இந்நிலம் நடுங்கும். தீயெனவே கதிரெரிக்கும். மேகமது வானமதில் மின்னலொடு வெகு வெடுக்கும் திருவாழ்வமைத்தோரும் தெருவோரம் வந்து வீழ்வர்.. தீ தின்ன தினியோ தினம் தோறும் கிடைத்திடுமே.
திங்கள் சூடி தீரன் மகளை தன்பாது அங்கம் சூடி அண்டம் பகிரண்டம் இயக்கும் அடியாரினமே வியக்கும் வண்ணம் வையம் தனில் நின் வான்புகழ் நாமம் ஒலிக்க கேட்கும் செவியே நற்பயன் பெறவே நவில் தோறும் நற்கதி இழக்குமோ என் நாய் பிறவி. நாதா இதற்கொரு நல்வழி சொல்வாய். நானும் அவ்வழி ஊர்ந்தேனும் சேர்வேன்.
கந்தையணிந்த கனகவேள் ௧திர் மேனியை கண்டே கண்ணீர் பெருக அண்டமெங்கும் அமுதூட்டும் அன்னம் பொழியன்னையும் அகிலம் விட்டகன்று போவதை கண்டு தேவா தேவரின் திருவிழிகளொழுகிட திக்கண்ணாலதை சிவன் காண திருக்கண்ணாலதை இவன் காண திருநடனம் புரி தில்லையப்பன் நெடுவிழியால் எல்லையிலாது எல்லாம் கண்டேன்.
பாகம் 112
ஐந்தாறு அரவங்கள் அங்கமூர்ந்து ஆர்ப்பரிக்கும். அணங்குடை அருநிலத்தில் அறுவடைக்கு அல்லலெழா வழிவகுத்து பருவங்கள் பொய்க்காது பயிர் வளர்த்து பாருக்கே அமுதூட்டும் பண்புடை புவியாய் வளம் கொழிக்கும் பைந்தரையை சேர்ந்ததொரு கடல் பாகை கட்டியதோர் கடன் பட்ட கிழமொருவன் செல்வப்பூ மலரும் செழுங்கலையறிந்த சிந்தனை பழமொருவன் அறிவார்ந்தோர் திறம் பயின்று முண்டகத்துள் வீற்றிருக்கும் முப்பெரும் தேவியருள் காஞ்சனாத்தாள் பாலருந்து கற்பூர மதியுடுத்தி கனக அமைச்சாகி பின்னம் கண்ணிய பேரவையுள் காவியம் படைத்தோனின் அரியணையிற் நேரெதிராய் நீதிகொன்று நிலையுயர்ந்த தற்குறிதான் தலைதூக்கி தானாளும் தருநிலத்தின் தரம் கெடுத்து கொக்கரிப்பான்.
செய்யாளை புறம்போக்கு செழுநிலத்து செல்வத்தை சீரழித்து வாய் ருசிக்காய் வாழ்திடுமே பேயாளீன்ற பெருந்துயர்கள். பேராண்மை தனை மறந்து நாட்டவரை நாயாக்கி நடுத்தெருவிற் விடுகின்ற வெந்துயரை யானுணர்ந்தேன். வெய்யரெல்லாம் அவை நடுவே வீற்றிருக்கும் நெடுமரம்போற் வெறுமனே அமர்வதனை சாபமாய் பெற்றது தான் பாவத்திற் பாவமாகும். பரந்தாமா கண் திறவாய்.
பொய்யர் பூக்கும் வையத்து வன்னாடுக ளனைத்துமே உய்ய வழியின்றி உதவிக்கரமின்றி வீழ்கதியுள் உழலுகின்ற தாழ் நிலமாய் தரமிழக்கும் நிலை போக்க பரணியிசை முழங்க தரணியை ஏற்றேடுத்து தயாளா உயிர் காப்பாய்.
கன்னியவள் கொலுவிருக்கும் கடலோரம் செல்லுகையில் காதமொன்றரைக்கு கால் கடுக்க யான் தளர்ந்து தரை அளந்த கரையோரம் பொன்னையன் பொழிந்ததொரு பொல்லா சின்னமென கனகக்கனி வயிற்று கயமையின் கருவாய் உருவுற்று கனிவறியா கபோதியாய் கலியன் கைவலுக்க காரணமாய் உதித்தோனும் ஐயன் இடமறிவான். அதை அடியேனும் நன்கறிவேன்.
பாரெங்கும் பாம்பெனவே பற்பல புற்றுவைத்து பாவ இளவல்களை தன் பல்லறிவால் திசை மறித்து மங்கை பாகத்து கங்கை தலையர்க்கு கொங்கு வரையடியில் குன்றென சிலை எழுப்பி கூத்தாடும் கொலைக்கஞ்சா குடிசேர்த்து குணக்கேடனறிவதனை கோளறு பதிகம் பாடி கூடுதல் யானறிவேன்.
பூதனையும் பிறப்பெடுப்பாள். பொல்லாதாருடன் இருப்பாள். இதில் வேதனை யென்னவெனிற் விண்டுவின் வருகைதோறும் வாதையினை விதைத்தவாறு வன்முறையை கையாண்டு விளைச்சலின் பலனறுத்தும் விதியறியா அரக்கியாகி இடர் மகனாம் சாத்தனின் வாக்கியத்தை சதுர் வேதமாக எண்ணி சாதனை புரிவாளே.
ஆராதனை பெறுகின்ற எம் அன்பகத்து அணிகலனாய் புவியரசன் பூத்தெழுந்த பொன்னிலத்துற்கு பூவாடை கொண்டு வரும் திசை எண்ணிற் காதத்துற்கப்பால் கனிவின்றி கயல் கொல்லும் கடலறுவடையை கரையோரம் கரம் பிரிக்கும் சேரநாட்டின் சீரெழில் துறைமுகத்தின் தீதின் மகளாக தெரு மங்கை உருவெடுத்து திரை கடந்த புகழ் உடுத்து மாடமடம் அமைத்து மரை முகத்தான் தடமறிவாள்.
புண்டரீக மலரேந்தி பொன்னிலம் தகர்க்கவந்த சந்திர பதியுதித்து சண்டாளனாய் அமைந்து மோகமுடை இறை பெயரில் முறையறியா அந்தண குலமுதித்த அற்பனவன் முத்தமிழன் முழுமுகத்தை முன்பே அறிந்ததனை அடியேன் யானறிவேன். அறனே நீயறிவாய் !
ஆயிரங்கால் அட்டைக்குள் ஓராயிரம் பேரமர்ந்தபடி ஆயர்பாடி மன்னவனின் அரசவை மண்ணினிலே அமைதியோடு இடம்பெயர்வர். அதிலப்பாவி அறுபதனை எரிதழலுக்கிரையாக்கி நரியரசாய் நாடாள புவியரசன் பூப்பானே. அவனரவத்ததின் அருமகவாய் அரசர்க்கரசனாகி அமரேசன் பெயர் தாங்கி அரியணைத் தீயெனவே ஆணவம் தனிலுறைந்து அகிலத்தை வலம் வந்து அருள் நிலத்தின் வளம் சிதைத்து அகமறிய அறம் கெடுப்பான்.
கண்ணீருறை கனகமனைத்தையுமே காலடியில் குவிக்க விட்டு மன்னுயிரின் நலமறியா மாமடைய னாயமைந்து ஊர்கழுகன் உள்ளமர்ந்து உறு கண்டம் பல பறந்து அகிலத்தில் வலம் வந்து ஆடிடும் அற்பனவன் அழலோடு அழிவதனை அகக்கண் ஆறாது அடியேன் கண்டேனே. கொடுங்கலியின் கடைமகனாய் கூடொருவன் உடனிருந்து குடிகெடுத்து மடி நிறைத்து கொண்டாடி மகிழ்வதனை அகம் கொடுக்க யான் எழுந்து அறம் பாடி அழிப்பேனே. அறனே நீ அருள் பொழிவாய் !
பாகம் 113
இருகாணி சிறகமைத்து இலுப்பை மரக்கோடுயர்த்தி இதமாக நிழலூட்டி என்றென்றும் தாலாட்டும் புவிமாது மடி தன்னில் புன்னகை இதழ்விரித்து மலர் சிரிக்கும் குளமொன்று குணக்குன்று உதித்தெழுந்த குலமாதர் அணங்கு வாழ் மாடத்தின் பிற்குடக்கே ஐநூறு அடிகோலுக்கப்பால் இருள் சூழ்ந்தால் இனநரி இறங்கும் குன்றங்களில் மலையாட்டு முலை காட்டி தன் மழலைக்கு பாலூட்டி மனநிறைவு பெற்றது போற் சிறுகுன்றம் தலைதூக்கி சேயெவே வருகின்ற குயின் குஞ்சிற் கமுதூட்டி குளிருறை காரோட்டி கொஞ்சிவரும் அளவளாவிய காட்சிதனை அளவின்றி கண்டேன் இச்சிவனாண்டி.
வரிசையுள் நுழைந்து வஞ்சம் நிறைந்து குருதி குடித்து குற்றம் புரிந்து சூது துளும்ப விழியும் பதித்து விளங்கிய பூனைகள் விடியும் வரைக்கும் வளைந்து வந்திட மதியும் மழுங்கி மனமும் சுருங்கி மன்னன் பொன்னடி வீழுமெங்கும் அரவம் போலவே அருகிலுலவுமே. அதில் வெருகுகளாயிரம் வீராப்பாய் தோன்றினும் அவை சருகாய் எரியும் துயரமருகிலே என சாட்சி சொல்வேன்.
புனுகு பூனைகள் பொய்யகற்றி மெய்யை புரிந்திடும். அவைகள் பொய்ய ரினத்துக்குள் புக்காது புறம் வந்திட பண்பு கொன்ற சில் சீறும் பூவையர் பங்கு பூனையாய் படுகுழியுள் வீழ்வதை பரமன் சொன்னதாய் பாட்டில் தருகின்றேன். வரவு பல வந்து வாலை முறுக்கியே வேடர் வீரியம் விலையும் போனதால் வீடுறைந்திட வழிகளில்லையே .
அவை வற்றும் வாவிக்குள் வந்துறைந்திட்ட அற்ற பறவை போல் கெட்டு நாறுமே வெற்றி குவிப்பதும் வெகுவும் கடினமே. உற்ற வரமென உதித்த வேந்தனை நட்ட வாள்முனை நறுக்கி வெல்லுமோ. நெஞ்சில் கனிவிலா
நீச மாந்தர்கள் கொண்ட ஊழ்வினை கொடிய பாழ்நிலை கொண்டு வாழ்வதை கண்ட நானிதை கரிய நாளிதாய் கடிய நேர்ந்ததை வந்து பாடவே எந்தன் நாதனை எண்ணி கறையிலா கனகக் கல்கியை கண்ணில் கண்டுதான் இறைவன் உலகிற்கு எம்மை எழுப்பினான்.
காணும் வீரமோ அவன் கண்ணிற் கனலென தெரியும் நிலையிலும் வெறும் விழல் கன்றென யான் விட்டு விலகிடேன். வீணாய் வாழ்வில் எமக்கு விருப்பமில்லையே. விடியல் தந்திட அவன் வேர்க்கு உரமென வார்க்க என்னயே வரமாய் வந்திட்டேன்.
அளியனுதித்த அருநிலத்து வடதிசையிற் ஆறைந்து காதம் பெருக்கி ஆலகாலனை அண்டிய தொலைவிற் பழவம் பதிந்த பைந்தமிழர் களபக்காரூரு தனில் கால்பதித்த கடும் வெய்யன் கொங்கர் நிலம் கொள்ளா அடிபதித்து ஆங்கே அல்லியனாக்கி ஆயிரம் கைம்மா குடிகெடுத்தோனெம் கொவ்வை செவ்வாயுறை குமரி பொருந்த நம் நறுமுகத்தான் பொற்தலைக்கோர் அந்நரிமுகத்தான் விலை கொடுத்தானாயினும் எம்மானழியா தொளிர்வானிதை எம்மகவிளக்கேந்தி அறனார் நெற்றி அகல் விளக்கூன்றி யடியேன் பகலிரவாய் பத்தி பரவசமுற்றிவேன்.
பெம்மான் இவனை பிறையோனழைத்த பேராசாய் கண்டேன். இவன் பிறவான் இறவான் பிறப்பாய் கண்டேன். பெருமானிவனை பேரெழிலுற்ற எம்மையுறைந்து இறையனா ரமர்ந்த எழில் மலை சுற்றி வலம் வருமழகை வானோர் காண வரமாய் பெற்று யானோ வியந்தேன். எம்மான் எழில் கலை தன்னை இதமாய் இதயம் களிக்க செம்மான் கன்றுடன் செய்த குறும்பை உம்மையிற் கண்டேன்.
இனி மும்மையிலுழலும் முப்பிறப்பறுப்பேன். மூலவராக சீதளப்பொய்கை சூழ் நல்லூர் தனிலே சீரும் சிறப்பும் பெற்றவன் பெற்றோருடனே உற்றார்யெனவே பொற்றாள் பணிந்து உற்று நோக்கியே உலகினை மறப்பேன்.
நெருப்போடைக் கருகாமை நீரோடை கருகாதோ? உறுப்போடு உருகாதோ? உதவிக்கரமின்றி உலகு என்செய்யும் . பொறுப்பானாய் புதல்வா நீ! பொறை கொண்டு புறம் காட்டி தடம் பேணல் எவ்வறம் ? அறமறுத்து ஆயிழையர் அருங்கற்பு தனை பறித்து அவள் சிரமறுத்து மதம் பிடுத்து அகமகிழ்ந்தகலும் மறுமை ஈட்டா வறுமை தீண்டும் மாபெரும் கைதவன் போற் கைகழுவி போவது தீதுனும் தீதாகும்.
பாகம் 114
சின்னம்மை வடிவுடை செந்நாகம் சீறீயது. அது செந்தமிழ் குணக்கர் சீருடை புற்றில் சீறியே வந்து சேர்வோருடன் சேர்ந்து சேரமான் நிலமுதித்த செங்கமல முகத்தோனின் சின்னமதில் கன்னம் வைத்து தன் வல்லினத்தை வாழவைத்து வாழும் முத்திரையை வாள்முனையில் கவர்ந்திடத்தான் தோள் ஈந்த கள்வருடன் தூக்கிட திட்டமிட்டு தலைசிலிர்க்கும் தமரமைத்து தரை முழுதும் விடம் விதைத்து கொற்றவன் அவை பிடுத்து கொலுவிருக்க எண்ணிடுமே.
கொட்ட மடங்காதாள் பட்டத்தரசியாக படாத பாடுபட்டும் பார்ப்பனர்கள் படியகற்றி படு குழிக்குள் விழ்த்துவரே. பரந்தாமன் பகை ஈட்ட அறந்தாங்கும் உயிர் பறித்து மறமறியா அரக்கியாகி மாநிரையை ஏவியதால் கொடும்பாவி பேரெடுத்து கோட்டைக்குள் கூடாத கூகையாகி கொள்ளியுள்
சிதைந்திடுமே. உலகளந்தான் உலகுதித்து உய்த்திடவே உமையொடு உறைந்திட்ட உடுக்கையன் உடனிருந்து ஓயாமல் துணையிருந்து இடடுக்கண் அகற்றியதை யாரறியாதிருந்தாலும் யாம் அறிவோம் பரம்பொருளே. பொன்மனத்தான் புன்னகையை புலிநகத்தால் பறித்தவளின் பதிபக்தி பாழ்பட்டு பல்வளம் கெடுவதற்கு நல்லறம் பாடியே துர்க்கையை தூண்டுதால் தொழும் அவன் நன்மகற்கு தோடமைத்து துயர் தீண்டா கோடமைத்து சீருற காப்பதனால் கேட்டின் கீழ்மகளும் கேள்விக்குறியாக ஏட்டில் இடம்பெற்று இழிமகள் ஆவாளே. என் போற் ஈசனடி இருப்போர் இடும் சாபம் ஈசல் இறகெனவே எளிதில் உதிர்ந்திடுமோ?
இனியவன் வாழ்வுதனை இருட்டடிப்பு செய்வோர்க்கு இந்நிலையில்தான் தீர்வெனவே அரவம் முடிந்தவன் மேல் ஆணையிட்டு ஆர்ப்பரிப்பேன் முப்பார்க்கும் மூலவனாய் முத்தமிழ் காவலனாய் எப்பார்க்கும் தொண்டு செய்யும் எம்மான் மனம் சிதைத்தால் எப்பயனும் இல்லையென்று இறையனார் என்மூலம் எச்சரிக்க உறுதியாய் வாக்குரைக்க உலகே நீ செவி மடடிப்பாய். இதை அறுதியிட் டடியேனும் அகிலத்து அன்பரெலாம் அறிந்திடட்டும் என்றே அகம் கொதித்தாடுகின்றேன். இதை அந்தணர் குலம் துளித்து சந்தண மனம் வீசும் செந்தணலே அறியீரோ.
உயிர்க்கொலை செய்யானை உலகாள உருவெடுத்த ஒளிக்கதிர் மெய்யோனை பைம்பயிரை தருவென பரிவோனை பாரிணைத்து பல்லுயிருமொரு குடைகீழ் பலர் வியக்க கொணரும் பண்போனை பாவியர்கள் கொல்ல வந்து படும் பாட்டை கண்டோனாய் யான் துடுத்து போவதேனே ஈசனே நீ பதிலுலரைப்பாய்.
செம்மண் காத்து செம்மான் மகள் சேர்ந்து செவ்வேள் மீட்ட எம்மண் மணம் தன்னை எண்டிசையும் வீசவிட்டு எம்மானை மீட்க மட்டும் இன்னும் நீ தாமதம்
ஏன்? பரந்தாமனாய் கொடுத்த பல்யுகமாய் வகுத்த கறைகாணா செவ்வரத்தை செவிசாற்றி செவ்வனவே உசுப்பிவிட அகமுருக யானழைத்தேன். பதிலுரைக்கும் பண்பிலாது பாம்பணிந்து பரம்தனிலே படுத்துறங்கும் மாதொரு பாகனே நீ மனமிலாது ஒதுங்கலாமோ?
கடும் தவத்தை கைவிடாது காதலுடை நல்லோர்கள் பலர் புரிந்த புண்ணியமே இப்பாழுலக மீட்பனாக அவனெழுந்த கண்ணியமே. கடன் வழுவா கருணை மிகு கார்வண்ணன் கனிமுகத்தை யான் கண்டேன். கன்னியவள் கைத்தலம் ௧திர் பொதிந்து கைவிடாது காக்கும் தென்முனை தீபமென திருவுடல் கொண்டோனை தீண்டியான் நலம் பெறத்தான் வேண்டியான் விதியமைத்தும் வெண்டலை நீயணிந்து வினை அறுக்க தவறாலாமோ.
வேண்டி நிற்கும் வீணருக்கே உதவிடும் நீ ஆடவர்த்தலகினையே ஆரறியா தமிழ்த்தலாமோ? வானளித்த வல்லோன் வாள் பறித்து வாழ்வின் ஊழ் மறித்து வையத்தை வாட்டலாமோ. அவன் தோளறிந்து அமரரே தூண்டுவிட்டும் தொய்ந்து நிற்கும் அடியாரும் அறிந்திடவே ஆணையிடும் அருகதை ஏதுமின்றி
அடியேனுன் பொற்றாள் பொதிந்து வேண்டுகிறேன். புவி காக்கும் அவன் வருகைக்கேங்குகிறேன்.
ஆருக்கும் அடங்கானவன் அமரருள் அடங்குவான். அணங்கனுள் அடங்கும் அணங்கினையே அவதரித்தால் வணங்குவானவன் பாருக்குள் ஒதுங்கியே பன்னாட்டுள் பதுங்கினாலும் பரமவனருளாலே அப்பங்கயத்தான் பன்முகத்தை பால் பகுக்கும் அன்னமென பகலொளி பாய்ச்சும் வேல்போல் யானறிந்து அவ்வேளவனை கைதொழுவேன் ; கால் தளரா நடம் புரிந்து கண்டம்
விடம் கொண்டதோர் கயிலை வாழ் பரம்பொருளே !
கூதிக்கெங்கும் குறையாதேங்கும் இவனோர் கொடியே மேலோங்கும். கொல்லா நோன்பினை போதித்தோம்பும் பொன்னகத்தா னிவனை வாதிக்கே வணங்கத்தோன்றும் வள்ளலானிவன் வானவருடன் இணங்கியே வளமுறப் பெற்று வரம் தரும் நிலமுன்னை வாழ்த்த எமக்கும் வயதில்லை. உனை வணங்குவோர்க்கு அணுவளவும் குறையில்லை. மணங் குவிப்போர்க்கல்லாது மாற்றார்க்கும் மனமிரங்கும் மண்மகளே.
|
பாகம் 115
புகழீட்டா பூமுகம் பூத்து பொன்னுடலேற்று பகலவன் நீ வரும் வரையுள் யான் வன்மம் தீண்டியும் வஞ்சம் தர்க்கா வஞ்சி நிலப்பொறை பூண்டு வாளாதிருப்பேன். பழவம் போர்த்தி பருமம் தூக்கி பொதிகை மலையாள் மயங்கும் கதிரை முயங்க அழைக்கும் பொருநை குறியுள் பொங்கும் பன்னீர் பரகிபடியே பணிந்து நின்று பல்லுடலூர்ந்து பாயுமொளியாய் பதுங்கி யானுயிர்ப்பேன்.
ஆங்கு ஓங்காரம் ஓதும் உற்ற நாவுடன் உன்னடி வீழும் இம்மண்ணடியில் எனை எவரும் அறியா வண்ணம் நீள்வரையை ஈன்ற என் தாயெனவே நெஞ்சணைத்து நெடுதுயில் கொள்வதை நீயறியாது யாரறிவார் நிலம் மீட்க வந்த கலியுக காவலே !
ஊக்கமுடை உலகளந்தான் உயர்வானிற் ஆக்கம் அன்னையாய் அடிவருட அனந்தனாய் அங்குறைந்தாலும் அவனெம் ஐயனாய் அவனியில் அடியெடுத்தால் இங்கிறையோன் எழில் அணங்கனை ஏற்று வணங்குதல் மாண்புடை எம்மாலுக்கே உரித்தான செருக்கிலா சீர்பெருங்குணமென அவனடியார் அறியாது போயினும் எம்போற் சிவனடியார் அறிவது சீர்மிகு ஞானமே !
உழைப்போர் குறைந்தே உண்மை கொன்று புதைப்போர் நிறைந்தே வன்மை யோங்க பிழைப்போர் பெரிதாய் தோன்றி பேயுறக் காணின் பிறப்பெடுத் தெம்மான் பீரிட்டெழும் நிலையை சிறப்பற காட்டும் தெய்வக்குறியாய் காணுக என்றும் வெய்யரினமே வெந்து மடியுமே. ஐயம் இல்லையே இதற்கவனருளே அல்லல் தடுக்கும் அறத்துன் எல்லையே !
பைங்கிளிகள் இடமமர்ந்து பால்சுரக்கும் பருவமுற்று கைங்கர்யம் செய்கையிலெ கருணாமூர்த்தியும் கண்மூடி முகஞ்சுளிக்க களவியல் கரைபுரள களியாடும் சிலுவையர் சிற்றவைகள் இவன் சீர்மிகு இருபிடத்தில் புற்றீசல் போலவே பூத்திடவே திக்கெட்டும் தேன் சுரக்க தீந்தமிழை வான் சுமக்க செவியினிக்க பாடலூட்டும் திருச்சபைக்கு பொன் கொட்டி பாதிரியை பாவியாக்கும் பொல்லாத பங்கயத்தார் பாடுபட்டும் பார்த்திபனின் காயமது காயமுறா கமலமென காத்ததெந்தன் அரவணிந்தோன் அடியாரை அணைப்பது போல் அரவணைத்தான்.
அன்பகத்தான் துயரறுக்க தூக்கமற துணையிருந்தான். காகுத்தன் காலூன்றும் கரை முற்றும் கார் வண்ணன் கைவிட்டான் ஆயிடினும் அம்பிகையின் ஆலயமும் அச்சமூட்டும் அணங்கெனவே கண்முறைக்கும் காளிவாழ் கற்குடிலும் பற்பலவாய் பற்கடிக்க பயமூட்டும் படிகளை யான் பக்தியுற பார்த்திருந்தேன் பரம்பொருளே.
பெருவணிகர் தலையேற்று பேராண்மை தனையற்று கருநாக முகம்பெற்று காரிருண்ட கல்நெஞ்சக் கடைமகனோர் வீரவேந்தின் வெற்றிப் பேருடையோன். வெஞ்சின நெஞ்சில் விரியம் நின்ற வஞ்சகனொரு வளவன் வேடமேற்ற வகை இழிஞனவன் கொற்கையர் முற்றத்து கோன் அழகு முத்து பதியருகே மூதேவி ஈன்று முலைப்பால் அருந்தியே ஆளான நாள் முதலாய் அறவோரழுத அடும் பொருளால் அங்கம் மிளிர்ந்த வண்ணம் பங்கமுற்றுப் பாழ்வழிக்கஞ்சா தீவழி முண்டு தென்னிலத்து தெருவணிகரை தேர்ந்தெடுத்து உறுபாவ அறுவடையிற் ஓயாதுழன்றே நாணயமற்று நாணயம் பெற்றோனாய் நம்மையன் நல்லகத்தை நன்கறியா இழிமகனாய் ஏறொப்ப எழும் தலையகற்ற ஆளொப்ப ஆரவார நெய்தல் நகரினிலே அடியேனறிய வரைபிழுத்து குடையாக்கி வான்பசு நிரைதன்னை வாழ்வாங்கு காத்த மாயோனை வாளிறக்கி மாய்ப்பதற்கு மன்னுயிர் மதிப்பறியா மாறிரை மேய்ப்பானே.
அறவேளழகன் அறுகோண உடுமீன் கொடியுடை குறு நாட்டிற்குடதாய் எம்மதமும் சம்மதமாய் கடல் தொட்ட கரை நாட்டின் வலக்கரமாய் வடக்மைந்த சீரியதோர் சிறுநாட்டில் சிதறிய சில்வண்டோசையுடன் மாறிரை போற் மன்நிரை மடிந்து வீழ்வதனை மண்ணாளும் மன்னர்களே மனமிரங்கா ராயிடினும் கண்கலங்கும் கருணைக் கடலிவன் பெருமை சொல்லி பிறைசூடி தன் பெண்டுடனே பாட்டிசைக்க அதை பின்பற்றி அடியேனும் கேட்டிசைப்பேன்.
அதன் பாருலக ரேகைகளை பாகையிற் மூன்றுடன் ஐந்தணைத்து முத்தமிட படுக்கையை பங்கு போட்டு முப்பத்தொன் பதனை கீழ்கிடத்தியதை உடுக்கையடி ஓசையுடன் ஒங்ககியே பாடுகின்றேன். அங்கு கருகிடும் சருகுககள் போல் சிதறுகின்ற அரபுலக அரும்புகளை துரும்புகளாய் ஒதுக்கிவிட தூய நெஞ்சத் திருமகன் துணியாது தேய்பிறைபோல் தேய்வானே.
பிறை நோக்கி அறம் உடைப்போர் பெரிதாக வாழுகின்ற தணலெனவே மணல் கொடுக்கும் தலைப்பாகை கட்டியதோர் தங்கமூறும் எங்க நாட்டில் தலை கொய்து தரம் தாழும் மனம் பட்ட மாந்தர்கள் பிற இனத்தை வேர் அறுக்கும் பெரும் பிணி தொற்றி பெருந்துயரப்படுவாரே .
பாகம் 116
மன்னவர்க்குரிய மலர் முகக்கூறு இம்மாமன்னனுக்குற்ற மலர்ச்சியை கண்டேன். அச்சின்னமெலாம் இவ்வண்ணலின் மேனியில் சீருற ஒருங்கே கண்டேன். செம்மொழித்தாயின் சேவடி தழுவிய மலைமொழி மணக்கும் மண்ணுறை மாந்தர் நிறமது கண்டேனது மடந்தையரரிவையர் மயங்கும் மரைப்பூவினும் மென்னிறமவன் மேனியிலுறைய மேலுலகு தம்மெய்மறக்கும்
முக்கடல் பாலலை முக்கண்ணன் காதலி பாதம் வருடி பெருங்கடலுடுத்த பேரண்ட நாயகி நின்ற ஒப்பிலா கண்டத்து கோலக்குமரி முதல் கோடுயர்த்திய கோனுறங்க வானிறங்கி வரம் பொழியும் வட்டாற்றிற்கிடையில் வருகை தரும் அவன் வாசம் முகர்ந்தேன்.
நாசிக் காற்றை நன்றாய் இழுத்து ஓசை எழுப்பும் ஒருவித பழக்கம் உதித்த அவனின் மழலையில் துவங்கி அவன் உறங்ககி உறையும் தருண வரைக்கும் உற்ற நண்பனாய் விட்டபாடின்றி வேண்டாது வருமே. கண் விழித்திருக்கும் கணப் பொழுதுதான் அவ்வோசையை அவனிடம் கேட்டேன்.
சீர்புயச் செவ்வேளங்க சிறுநீர் சேரும் குவளையொத்த கொள்ளிடம் தன்னில் குப்பி ஒன்றரை நின்றிடும். ஆழாக்கில் யானதை சொல்லிட மென்னீரளவீடு ஆறென வந்திடுமது கோடியிலொன்றாய் கொண்டிடுமறிவாய். அவனாய்ந்தணைந்த அல்லியயிதழ்கள் புணர்ந்துணர்ந்த பூங்குவளை மொட்டடில் சொட்டும் சூலுறை விந்துயிர் பால்மணம் வீசும் பங்கயம் தானென கோளரி மீதமர் கோமகள் குறியுள் குறியுடை கூவிளஞ்சூடியே கூறிட அதை வானவரறிய அடங்கியே வாக்குரைத்தேன் வணங்ஒஇயே.
திரைக்கடல் கூடிடும் தென்னகம் பொதிந்த பொன்னகத்தானை பூஞ்சை தீண்டி பொன்முகம் பூண்ட பூவிழியிடது பழுதடைந்து எம்மான் விழியணையும் தருணம் இளமைத்துயர இதயமே இடியால் தாக்க புதுமை ஒளடதம் பொழிந்த பண்பால் பொலிந்த நலம் பெற்று போர் கண்ட வீரனாய் மீண்டெழும் வெற்றியின் மாட்சிக்குரியவன் மாதொரு பாகன் மாண்பினை யான் மறவாது சாற்றுவேன். ஏழ்பிறப்பும் இதயமூன்றி எம்மானிடரகற்றி உறும் எம் ஊழகற்றி பிறவா வீடளித்து பேறருளும் பரம்பொருளே.
பதின்மம் கடந்தும் பவளமொப்ப விரல் நகம் தனை வெறுமனே கடிக்கும் வீணர் வழக்கம் வீழ்ந்து வந்ததும் பருவப் பாழ் செயலகற்றி பக்குவப்பட்டு பாரறியும் பண்புடன் எழுவானென்பதும் எமக்கு வானோரளித்த வாக்கேயன்றி வையமுரைத்த வாக்கே அல்ல .
கண்டம் கறுக்க கட்செவி விடமுறையாதுண்டமுதம் காத்து கமலக்கருமாலகம் நிறைந்த கழற்செல்வன் கரம் பற்ற காத்திருந்த கன்னியொருத்தி தன் கனிந்த மணக்கோலம் நின்றே போக நித்தம் தவம் செய்யும் நீணிலம் தன்னில் கணியன் பெயருடை கமலவாவி ததும்பிய வாடை தென்றலை வாரி சுழற்றும் எம்மான் இல்லத்து கீழ்திசையில் வங்கத்தில் வாழ்ந்து வான்வரதை வணங்க ஆங்கே மேன்மகன் தன் சிங்கமொத்த சீடனை கண்டம் கடந்து கடமைக்கனுப்பி பொங்கும் பக்தியை முழங்கவிட்டோனுடன் பூண்ட இல்லாள் வாழ்ந்தும் வாழாது வாடா துறவை சூடிய பாரதி பிறிதொரு பெயரில் பூமாதர் மடமொன்று புன்னகைக்கும் இடமொன்று கண்டேனப்பெருவழி முன்னம் கால்வாயாகி சிற்றோடையொன்று செயற்கையாயோடீ செழுநிலமாக்கிய சேதியை சொல்வேன்..
நன்மாந்தர் நலங்கெட்டு நலியும் தருணம் தன் புன்கணீர் பூக்கா வன்பார் வகை மனம் வாழாது வீழும். எம்மானென்றும் ஈர மனமுடை மென்மான் போலவே பொன்மனப் பண்புடன் வன்பாலையும் துளிர்விடும் வரமளிப்பானென வானோர் சொன்னதாய் சொன்ன வாக்கையே யான் உருவாக்கியே யாக்கையும் துறந்து ஈசனையடைந்து என்னுயிரையளந்து என்னையுமறிந்தேன்.
பாகம் 117
நேர்த்தியுடை உயர்வொடு நேரெதிராம் கூன்முதுகு குறுமையில்லை. அவன் மாட்சி சொல்லும் மாண்புடை மடலுக்கு ஏதெல்லை. வான்புகழ்ச்சி சொல்லின் வார்தைகள் மாளாது வாய் வலிக்கும். வையமே வரம் பெற்ற வைர நெஞ்செழுப்பி தலை வீழா திமிர் நடையுடை நேர்வரையாமவன் நீதிக்குத்தான் வளைவான் என்றென்றும்.
நெடுக்கமில்லை. நடுக்கயில்லை நறுவிரல்கள் குறுக்கமில்லை. குறைவின்றி நிறைவு பெற்ற கொவ்வைக் கனியெனவே குழையா மெது விரல்கள் மலர்ந்த குவழையிதழ்கள் கொண்டு வேய்ந்த வேந்தன் கைத்தலம் கொட்டும் ஓவியமொத்த உயிர்மெய்யெழுத்தினை கண்ட கண் பேறடையுமதை கண்கவர் முத்தென கன்னியர் கனியிதழ் முத்தமழை பொழிய இதுவே மூவுலகை மூர்ச்சையாக்கு மதுவே முத்தமிழ் சாறுறையுமிதுவே சித்தர்களின் வாக்குத்தத்தமுயிரே சிவனது நாக்குரைக்கும் அமுதே .
கற்குன்றில் கணக்கூன்றி கைநிறையா பொருளீட்டி பொற்குன்றமேறியதாய் பூவிழிகள் கனா கண்டு பொல்லார் குழுமத்துள் புகுந்துள்ளும் புண்பட்டு வெல்லாது வாழ்வமைக்கும் வல்லானொரு வறிஞனாய் உழலும் தருணம் வில்லை வீழ்ந்தாங்கே வெட்டிய விபத்துக்கு விருந்தான விரலது பெருமயிடதில் பெயர்ந்த நகக்கண் நில்லாது குருதி கொட்டி நெஞ்சுறை வருத்தம் கக்கி நல்லோர் கண் பூத்து நகுமொரு நற்காலம் நாடி நலம் புரிய மொத்தம் முழுமையும் திங்கள் பத்தாய் தேறிடும் வித்தாய் ஐயன் திண்மையை
அறவே சிதைத்து தீண்டிய அரவாய் தீந்துயரளித்து வேண்டிய எண்ணம் வெறுமனே தளர்ந்து தாண்டிய கடலோ தரணியில் பெரிது.
தரம் கெட்ட வாழ்வால் தவம் பெற்ற நிலைபோல் ஞானியர் நாடும் நாடா நிலையை நாயகன் தொட்டான் நானதை அறிவேன். ஏனிதை யானும் இன்னமும் சொல்ல. எல்லோர் நெஞ்சையும் இடருற கிள்ள. வானிதையறியும் எம்மானுற்ற வலியையும் இயலும் எம்மால் செப்ப. நீதீயும் நெறியும் தவறாதுறைந்து நிறைவு தருவான் நீதி தவறான்.
நீந்தியோடி நீராடி நின்றொளித்து விளையாடி நெஞ்சினிக்கும் நண்பருடன் செஞ்சேல் குஞ்செனவே சென்ற இடம் இல்லம் மேல் வள்ளியொப்ப நாகமொன்று வளைந்தோடி நெளிந்தாடி நுரைதள்ளும் வானமுதுள் நுழைந்து செல்லும் போதினிலே நிலைதவறி வீழ்ந்தபோது விளிம்புப் பாறை வெட்டியதால் வீரவேளின் வலத்தொடைதான் வந்து செப்பு சேரும் சிறு பள்ளத்தில் சுட்டுவிரலகலத்தில் வாங்கியவன் வலிதாங்க வந்துதிரம் கொட்டியதும் எட்டகவை எட்டியதும் ஏற்பட்ட காயமது பொற்தகட்டில் பதித்ததொரு புண்பட்ட பதக்கமென பொட்டு கட்டி விட்டது போல் இன்றளவும் ஒளிர்ந்திடுமே இருபால் இறையன்பே.
எம்மையின் இடப்பாத எழில்கமலப் பூவிரியும் கடைக்கட்டை இதழ் விரலில் கண்ட இடம் கொண்டதோர் காயமது காளையாய் களித்த காலம் கல்வெட்டு கொடையான மாலன் கொண்ட மாயமதை மனக்கண் இமை திறந்து மற்றொரு பொறி திறந்து கனல் கண்ணால் யான் கண்டேன். கங்கையெனும் புனல் சூடி கருஞ்சடையில் திங்களெனும் பிறைசூடி சங்கமதில் சரடெனவே சாகா அரவமதை பொங்கிவரும் மாலையாக்கி பூம்பாதம் நடம்புரிய எங்களுயிர் தில்லையிலே எழுந்தாளும் திருவிளக்கே.
பதருறையா பங்கயமொத்த புதர்மறைக்கா பூமுகமுழுமையும் பொலிவாய் மழித்து சிவத்தின் சின்னமாய் செவ்வென அமைத்து செம்பணியொன்றை சிறப்புறயாத்து சிறுத்தைகள் உலவும் தலைப்புறம் பெயர்ந்து தென்னக தீபமாய் மருதம் விட்டு மாநகர நெய்தல் புகுந்து நெஞ்சமேங்க நேரிழை வீசிய செய்வினை வலையில் சிக்கிய மானாய் மெய்யற துடித்து மீண்டுமுயிர்த்து எட்டு திக்கிலும் எதிரியை விதைத்து ஏழ்மை சிதைக்க இன்னலே புதைத்து ஏழிசை குழலொலி இருகரமிசைத்து இன்னிசை எழுப்ப அவன் ஈரிதழ் இருந்தும் இறவா வரம் பெற திறவா கதவை தேடித் திரிந்து ஈற்றில் அவனோ எல்லாம் துறந்து ஈசனடியார் சடை முடிதரித்து இளநரையொளிரும் கிழமென திரிந்து கிடக்கும் தாடி பழமென முதிர்ந்து வலம் வரும் எம்மை வான்வரை செல்லும் இமயம் துவங்கி இறை மலையெங்கும் புதையல் தேடி புக்கும் வெறியன் பொன்னவா ஒத்த பக்தனெனவே பதியும் மன்னவன் பதமலர் தொழுதே பங்கயம் நிறைப்பேன். பாழுமுலகல் பற்றினையறுப்பேன். கோளில் ஒளியில் நீளும் அறனே. கொண்ட மேனியில் கொங்கையெழிலுடை எம்மம்மை
உறைந்தொரு முலையுடை சிவனே.
பாகம் 118
பிறப்பெடுத்த பின்னம் பிறைமுடுத்தோன் சிறப்பறியாது சிற்றின்பச் சிறகடித்து சிறப்பிலியாய் போவதற்கு செய்த வினை காரணமே. உறுப்பிலியாய் உதித்தாலும் உமையொரு பாகனில் உறைய நல்வழியுமுண்டு. உய்யவும் வழியிலியாய் உளம் கெட்டு உதவா பொறுப்பிலியாய் போகாமல் பொன்னகத்து வெறுப்பிலியாய் வேண்டுதல் வேண்டாமையிலான் வெண்டலையானை மறந்து பொல்லார் முன் வீழாமல் பிறப்பிலியாய் பித்தனடி சேர்வதுவும் அவ்விறப்பிலியை அண்டி யான் இப்பிறப்பறுப்பேன். ஈசனடி மறுப்பானேன் என்னுயிரே செவிமடுப்பாய்.
பொதிகைமலையொரு பூமணவாட்டி பேரெலெழில் கோடுயர் கொங்கைகள் தூக்கு கொட்டும் கொடையென மழையமுதூட்டி கோடியில் மன்னுயிர் நலந்தனை கூட்டும் கோலத்தமிழர் அன்னை மூதாட்டி . அவள் கொடியிடையுள் ளிலருளிற் குறையா சிவனார் உருவில் ஒளிரும் கல்கி கனலென காணா அறம் பாராட்ட கண்ணன் முன்னம் காலூன்றிய கைக்கோடரி காவலன் தோன்றி கடை வரை கரம் தந்து செங்கோல் ஏற்க காரணமாவான் கடுந்தவம் பூண்டு. நீணிலம் காக்க நெஞ்சம் மிஞ்சும் நன்னெறியோடு நிலையா உலகில் நிலைக்கும் நீதி
நீயேயறிவாய் எல்லாமருள்வாய் எமக்கே இறைவா .
கொல்லும் வல்லோர் கொடுங்கோல் கொடியகன்று நல்லோரகம் குளிர நானிலத்துற் குலம் ஒன்றெனவே கொள்கை முழங்கும் கொடி தானெங்கும் இயங்கும் ஏற்றம் கண்டேன். இவ்வையத்தார் கண் கவர் கதிர்காமத்து மலர் முகத்தான் கரம் தழுவ மன்னாதி மன்னர்களின் கொடியனைத்தும் மண்ணில் மரணமுறும். பன்னாட்டு கொடியனைத்தும் பலிபீடம் தனிலேறும். ஐயன் புவிமீது பவழப்பூக்காம்புடை பட்டொளி வண்ணக் கொடியொன்றே வானேறும்.
கயமையொடு காவல் பூனை தலமை கொள்ள தருமம் தனை கொல்லும் கருமம் பெறுமே. அது கருங்கல் உள்ளமைந்து கல்வியிற் கற்றாழை கற்றோங்க கரடுமுரடன் பணியேற்று பொன்னாளைத் தன் பூமனத்துள் பெற்றான் பொற்றாள் பொலிவறியா பொதிகதிர் கொல்லும் குணமுற்று கடுங்கர மெடுத்திடுமே.
அது காட்டாறாய் தறிகெட்டு தான்தோன்றித்தனமாகி மேன்மக்கள் நெறிகெட்டே
மீண்டுமது நெய்தல்புரி தன்னில் நின்று நிலைத்திடுமே. அதன் மனைக்கொடி உறவெல்லாம் மாநகரம் பதிந்தொரு மாநாகம் மண்டையிலே மனங்கெட்டு படர்வதுடன் கனகத்துள் கண் பதித்து கைகள் நிறைத்துடுமே.
கறவைப் பாலருந்தி கற்றே பன்னூலருந்தி கோளகம் குடை பிடித்த கோவிந்தன் தலை கொய்யும் குளுவக் குழுவோடு கூடும் கூட்டுப்புழுவாகி புழங்கும் பொல்லானாய் குற்றம் புரிவோர்க்கு குற்றேவல் புரிவோனாய் முற்றும் அறமுறைந்த மூலத்தை அறுத்திடுமே. மறவனுயிர் காக்கும் இறையோனுக் கெதிராக இதயம் தடுமாறி இழியோனாய் நிறமாறும் நெடுமாமரமொப்ப நெஞ்சுயர்த்தி கருமான் உருவில் கடும்போக்கு கொடியோர்க்கு கோடியராய் பணியும் படிக்கட்டெனவே படிந்து பைம்பொன் பொருள் படையல் பலகோடி பெறுமென பால் வடியும் விடலைப்பருவத்து பாண்டியன் வாலைக்குமரியே வந்து கொள்ள அது என் வாய் வழியே நின்று சொல்ல கூத்தனே யான் கூவிச் சொன்வேன். எம் கொற்றவன் ஆவிக்குற்றவன் நீயென கோளறு பதிகம் தந்தேன் அச்சாத்தனின் சாவுக்கு சற்றுமே தூரமில்லை.
அறிவார்ந்தவனியெங்கும் அமைத்த பொறிக்கண்ணகற்றியே பொழுதும் கொலை விழினும் நெறிகாக்கும் நீலகண்டன் நெற்றிக்கண்ணகலாகாது நெடுவழியன்றி கொடும்விழி கண்டு குற்றம் புரிவோனை கொத்தித் தலை கொய்யும் புற்றத்து பாம்பெனவே பொல்லாரனைவரையும் கெளவிக் காவு கொள்வான். வல்லானெவனையும் வாழா நரகுறைய வையும். மாளா மறுமை வெய்யரையும் விடாது வீழ்த்தும் விதியறிந்தேன் பின் பொய்யுரையான் என் சொல்ல போதும் வரை பாடி விட்டேன்.
பாகம் 119
கண்ணனெச்சத்தை கருங்குவளைத்தேன் சொட்டும் மிச்சத்தை கருவேற்கும் எண்ணத்தில் பொல்லரவு பூவையர்கள் போட்டியிட்டு கன்னம் வைத்து கனியிதழ் சூலகத்துள் கற்பறம் தவறியே பொற்குடத்தை பொதிந்தெடுக்க பொல்லாயிரம் எழுந்தாலும் வல்வினை வளையத்தும் வாழ்வமைக்கும் வேலைக்குதவாது வீணே கலைந்துடுமே. பல் திட்டமொடு பரிதியை மடியில் கட்ட படாத பாடுபட்டு தம் பங்கய இதழ்விரித்தும் படுக்கை கொள்ளாது பாரமுகம் கொள்வான் ஏறார்ந்த எம்பெருமான்.
கயல்விழி பற்றியே கரத்தலமாதுடன் கதிர்வேள் நின்றோங்கும் குன்றுறை நெடுவரைத் தொடையிடையுள் நீளரவக் காட்டாறுதிக்க அதை செவ்வேளணைத்த செம்மான் கொடியெனவே கொண்டாடி கொடியிடை குலமகளிர் குளிக்க காமன் கமலம் கனிந்தூறும் கள்ளெனவே வெள்ளமது விரைந்தோடி விளைநிலமே அமுதாகும்
வெற்றிக்கரையோரம் பங்கயமீன்று பதுமன் புரமீன்று(அ)ங்கமெடுத்தோன் அதன் முன்னே சங்கை பிடித்தோனவன் செம்பதம் பதிக்கும் செழிநீர் தரையுள் பளிங்கு வாளொப்ப படிந்த வில்லை மேல் விரிந்த இடப்பதமடு தன்னில் இருவிரல் நீளம் கிழித்துவிட அதன் மையத்திலுறைந்த மணிக்கோவைச்சரம் வெள்ளெரி விதையெனவே வெளிக்குவர வெறுமெட்டு தையலிட்டுமதை எளிதாய் குணப்படுத்த ஈசனருளே எம்மானை மிகைப்படுத்துமதன் மேல் கந்தராயுத முத்திரை கனல் கண்ணெனவே வீற்றிருக்கும்
வேந்தன் பாதம் விரைந்து பதப்பட பத்தே நாளெடுத்து படாதபாடுபட்டு விடா முயற்சிக்கே வெண்டலையான் வேங்கைக்கருள வெல்லும் வல்லமையொடு வேர்பதிப்பான் செம்புயத்து சீர்பதத்தான் பேரவலமோர் பெருந்திங்கள் ஓராறின் முன்னம் ஜயனணைக்கும் அம்மம் மணக்கும் ஐப்பசி திங்களென அடியேனுணர்வேன் அரவமணிந்த அறனேயுரைப்பாய்.
வாடை வரும் வடம் விட்டு வலம் வந்த வகையொன்று மேடையேறும் மிளகுதிரும் மேனாட்டில் மாயோன் பேரை மண்ணிலேற்று மனமிருண்ட மாந்தரவர் தேடிவந்து தென்றல் தீண்டும் திசையுறைந்து மாடு உண்டு மனம் மரத்து வந்தேறி பெயரேற்று வஞ்சகமாய் வேர் பதித்து வாழ்வோர் வளம் சுரண்டும் வீணர் குழுக்கென்ற வெறியர் குணங்கொண்ட நரியர் இனமொன்று வருவர் இடம் பெயர்ந்து .
ஈயார் கரங்கொண்டு ஈசன் நெறி ஏற்கா இடையன் நெறி ஏற்று எளிதாய் அறம் கொன்று நாட்டோர் சவமென்று நடுங்கத் தொகுக்கத் தகும் நாயோருறைவது நாரணன் பள்ளிகொண்டு ( நதிமூன்றும்) வெள்ளம் சூழ்ந்து நாமம் போல் வட்டமிட அங்காதியில் அறிதுயிலும் அழகெழில் குழலுடை குந்தன் கொலுவிற்கு குணக்கல் துவங்கி கொண்டல் வண்ணனுறையா கொற்றவனாய் அரவம் படமெடுத்து அரசாளும் ஆலயத்தின் குடக்கே முடியும் இடைக்கண்ட மதிலுறைந்து இருளிலுழலும் ஈடிலா பாவியர் தம் உதிரம் கொட்டி உயிரிழக்கும் தருணம் கொள தாளாத காலமதை யான் தலைசாயும் முன்னே காண்பேன்.
அது பொன்மகள் வரன் புவிக்குள்ளே எழும் நாள் எழும் போது அவன் கொண்ட வளவாழ்வை அடியொற்றி சிதைப்பதற்கும் அகமகிழ்ந்து களிப்பதற்கும் யுகம் தோறும் பெறும் ஊழ்வினையால் வருமவன் தடம் கண்டு தாமரையாள் தருவெனவே மலர்ந்தாலும் கருவறுத்து கைப்பற்றி காதோரம் பொய்யூட்ட கலைத்தோட்டும் கொடுந்திட்டம் கயவரவர் வகுப்பாரே.
ஆங்கே வெய்யர்கள் பலர் நின்று வெற்றியில் மிதப்பாரே. நறுசந்தனம் நடு இருக்க நாய்மக்கள் சூழ்ந்திருக்க நலமெங்கு அங்குததிக்கும். இதை விதி எழுதி சதி செய்து வினை விதைத்தோன் எவனென்று என்போன்றோர் நன்கறிவர். அவன் ஈசனையே துணைக்கழைத்து எம்மையும் அலைக்கழித்து எழுதியதை யான் அறிவேன். இதை இருவிழியை நகலாக்கி சுழுமுனையை அசலாக்கும் சூத்தரத்தார் நன்குணர்வர்.
சிவனார் சூடிய செம்பிறையை செவ்வான் அனுப்பிய தாமரையை தின்ற ஓநாய் ஒன்றையுமே உய்ய விடாது உலகாள்வன் உயிர் வதை புரிவான் உரைப்பேன் கேள். தென்கயிலை தீக்கண்ணன் திருவாய்மொழியை திரட்டியே பார்கடலான் பதிவேற்ற யான் பாடல் வடிவில் புதரமைத்தேன். பகலவன் பட்டொளியாய் இதில் பார்வை பதித்து சுழுமுனை இதன் பொருள் பெறுமே. திண்ணப்பன் எச்சிலையே தீஞ்சுவை அமுதென ஏற்றெடுத்து வாரியணைத்து வலம் அமர்த்தி வானோர் வாழ்த்தும் வரம் அமைத்த அம்மையப்பன் அனுப்பியதோர் அம்மதி தானுள்ளுண்ட உயர்குடி நரிகள் ஊட்டியதோர் ஊமத்தம் விருந்தின் உதவாத இரசமிறங்க தலைகிறங்கி சரிந்திடவே மயிலணிந்து மானம் காத்த துகிலுரித்து துச்சாதனரும் சிதைத்தழிக்க துணிந்தனரே.
மெய்யணிந்த மேற்கவசம் மெல்லிடையாளின் பொற்கவசமதைப் புண்ணீ ரொழுக கிழித்தவர்கள். பற்குறி ஏறி பாழாகி பொச்சிதழ் கெட்டு புண்ணான பொற்கிளி பொந்தில் பூத்துதிர்ந்த பொல்லாத கடைமக்கள். பிறைமகன் அனுப்பிய பெண்மரையின் பிறந்த மேனி மலர்மீது கொழுந்தாய் எரிந்த காமத்தை கொள்ள அதற்கு வலுவற்றும் கொன்று போட்ட அது எந்தன் கொன்றை வேந்தன் கிளிப்பிள்ளை.
இதை வானோர் நெஞ்சம் தாங்கிடுனும் அவ்வல்லூரினத்தின் வல்லுறவை மானார் காக்கும் மலர்மன்னன் மனதால் துளியும் தாங்காது தென்னவன் தினந்தினம் அதை நினைந்து தீ பட்ட நெய்போல் உருகுவதை சிவனாரளித்த செவ்வரத்தாலென் செவ்விழிதிறக்க காட்சி கொண்டேன். அன்றவன் முன்னே சாட்சி சொல்ல மண்ணை ஆளும் தருணத்தில் மன்னவராயினும் தவறாது மரணக்கொடையால் தலை கொய்வான்.
பிறப்புறுப்பின் வழி வந்த பேய்நாய்கள் அங்கவளின் சிறப்புறுப்பனைத்தையுமே சிதைத்த பின்னர் ஒரு சேர கபடமுறைந்த பூனைக்கு கைநிறைய் கருவாட்டை கெளவிக்கொள்ள தீனி போட்டு காட்சி முழுமையும் மாற்றினாலும் அப்பாதக பூனைகள் யானறிவேன். பாகை சூடிய பாவைப் பூனையும் உள்ளடங்கும். கொடுங்கோலேற்று கொலை புரியும் பயங்கர சேனை பாதகரை பார்த்தும் பாராதிருக்கும் அப்பங்கய முகத்தான் பதுங்கியிருப்பது பாய்ச்சலுக்கே.
பரமனையடைந்த அவ்வுயிரினையே பறித்து வந்து காயத்துள் மீள் சேர்க்கை புரிவதற்கு மேவிய வரமொன்றும் எமக்கு இல்லெனினும் கண்ட காட்சியால் புதைந்தேன் யான். கண்ணீரோடு உறைந்தேன் யான். சின்னம் சிதைத்தது மட்டுமின்றி அதன் சிறுநீர் மலமுடை மலரிதழை மென்னீரூற்றி கழுவியதை மேலோர் கண்டு உருகியதை யாரும் காணாருந்தங்கு கூகை பெண்டிரிருவருமே அக்குறியினை துடைத்து அழித்தனரே. ஆம்பல் பூவிற் காடைகளை அரைகுறையாய் அணியவைத்து உயரேயிருந்து உதிர்ந்து போல் புதினம் வரைந்து ஏய்த்தாலும் பொய்யா மொழியினை யான் தருவேன் பூதலம் நிறைந்த பரம்பொருளே. நீ பொய்க்கு உதவாது புவியின் நல்லறம் காப்பாயோ.
பாகம் 120
பொற்றாமரையொத்த பூமுக நெற்றியிற் அரவம் நிறைந்த அறநெறி வழுவா அரம்பை யரொப்ப பெண்டிர் பாதம் பற்றியுரைத்தே பாடல் தருவேன். அவர் முக்தியடைய முன்னுரை யருள்வேன். சித்தன் யாரென சிவனைப் பணிந்து என் சுற்றம் துறந்து சுழுமுனை திறந்தேன். பற்றும் பாதம் பரமனின் பாதம். பார்க்கடலானும் சிவனது பாதம் பற்றி பணிந்தே போரை முடித்து பாரை கடந்தானென வெற்றி முரசு கொட்டு விதியே எம் வேந்தன் வருவான் விண்மீதாணை.
ஒட்டு அவனது இருப்பிடம் அறிந்தே ஒங்கிய மலைகளுக்கிடையே அமர்ந்தே ஒட்டிய வயிறுடன் வற்றிய உதிரம் வரண்ட நாவுடன் வாழாது இங்கு சோராதெந்தன் சூழுமுனை குவித்து தவமே கடந்தேன். இகமே துயராய் எம்மையறியும் எம்மானறிவேன். வெட்டிவேராய் மண்ணில் புதைந்த வெற்றி வேளெனும் பட்டுப்புழுவை பகுத்து அறிந்தேன்.
தொட்டு தூக்கி தூண்டிவிடுவேன். தூண்டில் தூக்கா தூங்கா மீனேன மீண்டும் அவனே மீண்டு வரவே மீட்பனை தீண்டி மேதினி அறிய யாண்டும் இடும்பை இனியில மானே. என்னருள் வாக்கு இனிதாய் மலர எல்லாம் வல்ல இறையோனருள்வான். புனிதம் பூத்து மனிதம் காக்கும் பொற்புடை பெருமானவனது விதியை அவனே வகுத்து அவனே தொகுத்து அகிலம் இணைத்து அரசை அமைப்பான்.
இது அருள்வாக்கல்ல அறிவாய் இனமே. ஆதிசிவனே ஆமோதித்து என் அகத்துள் அமர்ந்து பொறிவாக்காக்கி பொய்யாதாக்கி அறிவார்க்கரிதாய் அறிவிலிக்கென்றும் புரியா புதிராய் புதையல் போன்றது இத்திருவாக்கு. இயக்கிய என்னை அன்னை உமையாள் அகலாதென்னில் அறமாயிருந்து எல்லாமுரைப்பதும் சொல்லின் செல்வமாம் யானே அவளின் அருள் நாக்கு. யான் சொல்லி மாளுமோ சுந்தரன் புகழை என்றும் மணக்கும் ஈசனுறைந்த இதழாய் எனது இதயம் கொண்டேன் அதை நோக்கு.
கல்கிக்கே விதித்த கமலமதை கைவசமாக்கும் கயவர்கள் கைக்கும் மாறி காலம் கடந்து கல்கியின் காலடிக்கே கதியென்றே வந்து வீழும். அது வங்கத்து வலையுள் வீழ்ந்து வாழ்வையே பங்கமாக்கி பங்கயப் புனிதம் கெட்டு பணிவுடன் வந்து சேரும். அதனவலத்தை யானறிந்து அருள் வாக்கை அழுது தந்தேன். அகிலத்தை ஆளும் அவனறிவுக்கு சொந்தமான குமுதமே அதுதான் என்று கொற்றவனுக்குற்ற தொரு குணக்குன் றன்னையென்றும் மற்றவர் அறிகிலாரே மன்னவா நீயறிவாய் . மானுடம் எல்லாம் பொய்யே . அம்மாதினை நம்பி நீயும் விடத்தையே பருகினாலும் வீழாது உயிர்த்தெழுவாய். அறத்தையே அவளும் காப்பாள். ஐயனே எனை நீ நம்பு. அவளோடு நீயும் இணைந்து அம்மையப்பனாய் எழுந்து எம்மையும் காத்து நிற்பாய்.
பள்ளியில் படித்த காலம் பாலகன் கடந்து வாழும் பசுவினை மேய்த்தவாறும் புல்பூண்டுகளறுத்து நாளும் புசிக்க அதற்கு கொடுத்தவாறும் மறவனின் மறவோன் நாட்கள் மறவாதோர் வசந்தமாகும். திறவோனாய் ஆன பின்னம் அத்தேவதையை காணோம் யானும். அது கருணையிலா கைமாறி கண்காணா கண்டமாறி மெய்யறுபட்டு பிறர் மென்றுதின்னும் பண்டமாகி மேனியை இழந்துடுமே. அவன் நலம்பேண பாடுபட்ட அக்குலமகள் கோமாதா கொண்ட விதி அதுவேயாகும்.
உறவுபோல் உறைந்த அவ்வுற்றதோர் அம்மையினை விற்றது பெற்றோரன்றோ. அலைமகளான அவளை விலைமகளாக்கியதாலே விண்டுவே அழுதது போல் என் வேந்தனும் கலங்குவானே. அய்யனே காட்சி கண்ட அமுத கலசம் கொண்ட தேவதை வடிவெடுத்த தெய்வமே அது என்பேனே. பிரிதொரு காமதேனு அவன் பிறவியில் தோன்றவில்லை. பிறரது காமதேனு பின்பெலாம் பால் பொழிய இளமையைக் கடந்த பின்னர் இதிலும் ஒர் நாட்டமில்லை .
வேற்றுவர் தோப்பில் நின்ற விண்தொடும் பனைகளேறி பதநீர் குடித்த காலம் வாழ்வெலாம் நினைக்க தோன்றும். வானவர் கொண்டதொரு வசந்தமே அங்கு தோற்கும். அனகனின் அல்லி விரல்கள் மூன்றும் அழுத்திய தடயம் கொண்ட அணில்களை அடித்துக்கொன்று அவ்வூர் சிறுவருடன் ஆக்கித்தின்ற அகவையோர் அறியாப்பருவம்.
தீரனவன் திருவீட்டிற்கெதிர் வீட்டில் தென்னோக்கி தீயோனொருவன் தேளாய் தெரிய எருமைகளிணைந்து இடிமுழக்ககியோடும் இருகோட்டுறை இரும்பு வடம் பார்த்து இருநூறு முழம் தொலைவில் இருமாப்புடன் எழுந்து நிற்கும் எம்மேழைக்காவலன் இல்லமதன் இருசுவரொட்டி கல்லுள்ளங் கொண்ட கடைமகன்கள் கீழ்மேலென கிடைப்பரிருவரே.
இதிலொருவன் நிதிவிதைத்து நிதியறுப்பான் நெஞ்சற்றோ னின்னொருவன் நெய்த துகிலை நித்தம் மலையாக்கி நிறையுடை பொருள் குவிப்பானுடன் பொல்லாரை குடியமர்த்தி பொழுதெல்லாம் பாவம் படைப்பானவன் பெயரின் முதற்சீரே நாணித்துவங்கும் நற்பெருமாளீன்ற பீடை மைந்தனவன் பெரும் நஞ்சுடை வஞ்சகன் நம் நாதன் தலையறுக்க நாய்களை ஏவிடனும் வேதம் பொதிந்து விழுதாய் பதித்தோனை யாரும் அசைப்பரோ ?
அவன் அண்டை அடுக்கு கட்டி அரவக் குடியமர்த்தி அரசன் கொடியறுக்கும் கொடியோர் பலரிணைத்து கூடி சதியமைத்து கொல்லத் துணிந்தவனே குரலொடுங்கி குற்றுயிராவானே. மற்றவரனைவருமே மரணக்கயிற்றுள்ளே விட்டு தலைதூங்கும் விதியை யானறிவேன்.
பாகம் 121
அன்னை நிலம் அழிவடையும் அகிலமெலாம் சிதைவடையும் கூற்றுவன் மனமகிழ்ந்து கொல்லும் போர் படையாலே கொண்ட நம் இமைகூட குத்திக்கொள்ள கூர்விழியும் குருடாகும். நாதனுயிர் குடியிருக்கும் நட்டவுடல் நலிவடையும். வேந்தர்களே நெறிமறந்து வீணர்களாய் அறம் மறந்து வாழும் காலம் தலை தூக்க வந்துசேரும்
வல்வினைகள் மாந்தர்களை நாளெல்லாம் மனம் குமுற செய்தபடி மேய்ப்பனுக்காய் ஏங்கிடுமே. விண் நோக்கி கரம் குவித்தும் வேண்டும் ஏதும் விளையாது விழலுக்கே வாழ்வளிக்கும் வினையா விழிவழியும் குலம் தளைக்கும் விளைச்சலின்றி கொலைக்கருவி விளைச்சலாலே கூக்குரல்கள் வலுவடைய குற்றுயிர்களறுவடையாம். வாக்குகளின் விலையழிந்து வாடும் இனம் வழியழிந்து வகை வகையாய் இன்னல் வரும்.
வரம்பிலாமல் எல்லை மீறி இயலன்னை இரக்கமற்று உரக்க சீறும் அரக்கியாகி ஓய்வெடுத்த பின்னரொரு குடைகீழ் உலகு வந்து ஒருவனுக்கே உரிமையாகும். அக்குமரன் வந்தமரும் தருணம் வரை கொண்ட நிதிகுறைவதோடு பன்னாடும் தலைகுனிய பாரதமும் நிலைகுலையும். அன்னமேற்கும் திருவோடு அரசன் கைக்கே வருவதோடு அனைவர் கையும் காலியாகும்.
தேடியோரனைவரையும் திகைப்பிலாழ்த்தி தென்முனை ஈன்றதொரு தெய்வமகன் தீயெனவே தீயோர்க்கு திகிலூட்டி நல்லோர்க்கே நலம்படைப்பான். திண்ணமிது மன்னுயிரே எண்ணமெலாம் இன்புறவே இறையோனின் கண்படவே எம்மையன் வரவறிந்தேன். மறுமலர்ச்ள தொலைவில் இல்லா மண்ணெல்லாம் பொன்னாகும் மன்னன் ஆட்சி மலர்ந்திடவே எண்ணம் போலவன் வருவான்.
முன்னம் அக்கொடுமரத்தில் மூர்ச்சையற்று மரிக்கும் போது கன்னிமகன் கனிவோடு கள்வரையும் மன்னித்தான். இம்மை தனில் எவரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் மண்டியிட்ட மாற்றான்கள் மனம் மாறியணுகினாலும் உண்மையிது எம்மையன் ஒருபோதும் விடமாட்டான். எமையென்றும் ஏமாற்றானென உமை மீதாணையிட்டு உலகறியச் சொல்லுகின்றேன்.
மாற்றான் கதை முடிக்கும் மன்னனவன் கதை சொல்வேன். இதை கூற்றாக கூறாமல் கொண்டதொரு அருள் வாக்காய் வெண்டலையான் வரவேற்க விதி எழுது நான் தருவேன். இதை முன்னரும் காதோரம் மொழிந்த கதை ஊரறியும். வெந்ததையே தின்னாமல் விளைந்ததையும் விடாமல் வாய்க்கு வந்ததையும் சொல்லாமல் வரிவரியாய் மெய்யுரைப்பேன்.
வானவர்கள் கைதூக்கி வாழ்த்து சொல்ல வழிவகுப்பேன். வேள் அவனின் விதியோடு இக்கதையும் வினையகற்ற உற்றதொரு மாலவனின் கதையாக மனம் மகிழ்ந்து சொல்ல வந்தேன். அவனியிலோர் ஆலமரம் அதனடி புற்றத்துள் அரவம் வாழ்ந்த கதை அதையும் நீயறிவாய். அதன் கோட்டுக்கிளை யொன்றில் கூடமைத்து முட்டையிட்டு குஞ்சுக்காய் அண்டங்காகம் தவமிருக்க அடிப்பொந்துள் உறைந்ததொரு அகமுருகா கருநாகம் அவ்வப்பொழுதெல்லாம் கிளையேறி மேல் வந்து கிடைத்த முட்டையத்தனையும் கெளவி தின்றுவிட வாரிசே இல்லாமல் வாடியது புள்மனமே.
ஊனுருகி உயிருருகி உளம்நொந்த காகமது உற்றதோர் தீர்வு காண ஒடும் நதி நீரில் ஒய்யார அரசி வந்து உளமாற நீராட உட்புகுந்து நெடுங்கரை தன்னிலவள் நெஞ்சணிந்த மாலையதை நீக்கியவள் அங்கேயே கழற்றிவைக்க காகம் அதை தன் அலகால் கெளவிக்கொண்டு தூக்கியோட காவலரும் பின்தொடர ஆலமரத்தடியில் அரவ வளைக்குள்ளே அணிகலனை இட்டதுடன் மேலே அமர்ந்தபடி மிச்ச நிகழ்வுகளை மெதுவாய் கண்டதுவே.
காவலர்கள் விரைந்துவர காஞ்சன மாலை தனை கருநாக வளைக்குள்ளே கிடந்தது அவர் கண்களுக்கு பட்டதுவே. கையிலுள்ள வாளைக் கொண்டு கண்டிகையை அகற்ற நின்று கடுமுயற்சி எடுக்கையிலே எழுந்த நாகம் ஏறெனவே அவர்மீது சீறியதும் கையுறைந்த வாளுக்கு மெய் இரையாய் போனதுவே. மேலமர்ந்த காகமது தானடைந்த இன்பமதை யான் உரைத்த கதை மூலம் எல்லோரும் அறிந்திடுக. இதில் அரவம் போன்றோர்கள் அறம் கொன்றோராயிடுவர்.
காகம் போன்றோர்கள் கண்ணனவன் குஞ்செனவும் கண்டிகை வடிவெடுத்த கல்கியின் கமலமதை கண்திறந்தோர் அறிந்திடுவர். அனல்விழியன் அரசியாக அவன் கழுத்து மாலையென மணிவண்ணன் திருவாட சிவன் கொடுத்த வாளாக புடைசூழும் படையொடு புயல் வேந்தனெழும் நிகழ்வை விழல் விழியோரறியாது தழல் விழியோரறிந்துடுவார் .
அணங்குடை அன்பகம் கொண்டோ ரனைவரையும் அரவணைக்கும் அணங்கனவன் அறந்தாங்கும் அணங்குகட்கே ஆணையிடும் அரவேந்தி முன்மொழியும் ஆக்கமுறை மறவேள் மறுமையவன் அகவை மூவாறில் அண்டம் தனிலுறைந்தோர் மகிழும் மதியொன்றில் கடகக் கரும்பிறைதான் உதிக்கும் நடுஇரவில் கண்ணீர் வழிவகுத்து தாயின் திருமார்பை தழுவி யணைத்தபடி அறுவர் அழுகுரலில் ஐயன் இணைந்தபடி கனிவின் வடிவான கரந்தை நிலை கொண்ட தாதை வானுயர்வானவன் இறவா உறவுற்றோன் இதயப்பிணியேற்று இயங்க மறுத்தது தான் இறப்பின் காரணமாய் இமயோ னுரைத்ததனை யானும் உரைக்கின்றேன்.
கொழிகனகக் கொற்றவப் பொநையை பெற்ற பெருமலைக்குள்ளே கிடந்து பொன்னியை மணந்த பூமுனி அமரக்கண்டே களிக்கின்ற கன்றாயானேன். கல்கியை காண கதிர்கண்ணுற்று காலம் சுமக்க ஞானமமைத்தேன். நாதா நீ ஏனென் நாபுலம்பவிட்டாய். போதாதாயென் பொழிப்புரையுனக்கு. பொன்னாம் எம்மையனை புடம் போட்டனுப்பு. பொறுமைக்கு எமக்கோ ரெல்லையுமுண்டு. மறுமை வேண்டாமெமக்கெம் மன்னனே வேண்டும்.
பாகம் 122
தெக்கணத் தென்முனையிற் தேமதுரனுதித்த திருவூருக்கருகனிலே பாமரர் பலருறைந்த பைம்பயிர் கதிர்காமம் சூழ் மூவருறைவிடம் தனில் முக்கண்ணன் வரமருளும் முல்லைமலர் மணம் கமழும் பெருமானவன் பிறப்பிடமருகே தரமாயமைந்த தடயம் ஒன்றை அருள்வாக்குரைத்து அடியேனிசைப்பேன். அது முக்கனிக்குள் வாராத முல்லைநிலக் கொடையான அக்கனியின் மூக்கடத்து அக்கினியில் வறுத்தெடுத்து உள்ளுறைந்த முத்துக்களை உயர்குடி மாந்தர்கட்கு
ஊண் உணவமுதாக பெரும் பேழை தனில் கொட்டி நெடுநாவாய் தனிலேற்றி வையத்து நாட்டில் கொட்டி வருமானம் ஈட்டிடுவர்.
ஐயன் வெளிப்படும் முன்னம் அவன் அழகெழில் அருமனையருகே விழுதுகள் இறக்கா மரமாய் விறகிற்குதவும் வரமாய் அது பொழியும் பாலை பதனிடும் ஆலை அது வெறும் கோல் ஆயிரம் அவன் வீதிக்கு வடப்புறம் சிறு ஓடைக்கு மறுபுறம் தூரத்தில் இருப்பதை பாருக்கு சொல்ல யாருக்கும் இயலா ஞானத்தால் அளந்தேன் எல்லாமறிந்த எம்பெருமானே !
புலனடக்கியோனவன் தாதை போனதும் புலாலெடுக்கா கடும் சபதமெடுத்த பெருங்கருணை பெம்மானாகியே பொல்லா நட்பிற்கு வல்லிரையாகியே வருந்திய நாளதை யாமறியாமலிங்கே யாரறிவர். நல்லவன் போலொரு நயவஞ்சகனொருவன் சிலுவை தாங்கிய சிற்றின தோழனெம் சிவனே காக்கும் செம்புய நாதனை நம்பவைத்தே நடுகண்டமறுத்ததை நன்றாயுரைப்பேன் நாடேயறிய.
அவனெம் அன்புநாதன் மேல் அளவு கடந்ததோர் நட்பு கொண்டவன் போலேயமைந்து நஞ்சொத்த பைம்பசு புலாலை நாருசிக்க நன்றாய் புகுத்தி போலியுணவாய் பூவேன சமைத்ததை எம்மான் பால்மனமறியாது. பொன்னான உணவென்ற பொய்யுரையை நம்பியே புக்க பெற்றதும் ஐயன் அறியாததை அப்படியே வாங்கி அடிவயிற்றில் நிறைத்ததும் வாய்மை வென்றதால் வாந்தி எடுத்தும் வாராத புலாலவன் வால்லுடலுள் வந்து இரண்டறக் கலந்ததும் அரவம் அணிந்தவன் அவ்விடத்தை எடுத்தெம் வேந்தனை காத்த விதியையும் அறிவேன். அவ்வினையை விதைத்து சதியை அமைத்தோன் வீழ்வது மீளா நரகெனும் நமனுடையுலகென நன்றாயறிக.
மானூரழகன் மண்ணூருதிக்க பெண்ணூர் அண்டப் பிறப்பொன்றெடுக்குமுன் மன்னுர் உழன்றி மாயோன் உறைந்த மணவர் தன்னில் சேயோனாகி சீர்பட வாழ்ந்து வானூர் விடுத்து விடையூர் பெற்று வடலூர் புகுந்து வரமாய் தளிர்த்து வாடிய கொடிக்காய் வாடிவருந்தி வாழ்வூர் தன்னை வளவூர் ஆக்கிய வள்ளல் பிரானின் உடலூர் வந்து உண்மையறிந்து உயிர்த்து நிற்பான்.
கருணை பொங்கும் கடலூருறைந்த கருமால் அவனென எவருமறியா உலகே இருக்க எம்விழி இங்கே உற்றுநோக்கும். ஊராரொன்றும் உதவாக்கரமாய் உதறிவிடவே உள்ளூர் வருந்தி காட்டூர் கடந்து கனவூர் கலைத்து பொருளூர் விடுத்து புகழூர் கெட்டு பொன்னுர் துறந்து புனலூரடக்கி பொறியூரொடுக்கி கண்ணூர் இறந்து கனலூர் ஒளிர அவனுர் அறிந்து அகிலம் ஆழ்வான். கீழோர் மேலோர் இல்லா உலகை வானோருறைந்த வாழ்வூராக்கி வேலன் ஆளும் வேளூரமைத்து வெற்றி முரசு கொட்டும் வீடென அவன் வேலூரமைப்பான்.
அங்கு இனியோரெல்லாம் இவனோர் இறையாய் புனிதர் பொன்னார் போற்ற மன்னுயிர் எல்லாம் எம்முயிர் என்ற மாண்புடை மறையை மேம்பட செய்தே எம்மான் துயில்வான். எமனே அழைத்தும் இதன்முன் துயிலான்.
பைம்பால் நிறமொப்பா பவளகண் நிற்ப இல்லத்தின் செல்லமென எலித்தோழன் இருந்ததனை யானறிவேனது எம்மையன் தன்னகவை ஈரேழில் அகமகிழ்ந்த காலமது. மற்றுமிரு மனமுருகும் மன்னனவன் கதை சொல்வேன். மரமுறைந்த கூடறிந்து மைனா ஒன்றெடுத்து மார்போ டதையணைத்து கலைமகளின் வடிவாக கண்டதற்கு பெயரிட்டு கனிவுடன் வளர்ப்பானது அன்பன் தோளில் பெருங்காலம் அமர்ந்தபடி வயல் வெளியில் பறந்தபடி வந்தமரும் பழையபடி.
வந்ததோர் நோய் தாக்கி கண்டதோர் ஓரிரவில் அதுகூட இறந்ததனால் நொந்து போன என்றன் வேந்தன் மாமதுரை மீனாளின் மனமுறைந்த கிளிபோல நாதனவன் கண்டெடுத்த நல்முத்தாய் அதுவமைய வளர்த்த அவ்வானுயிராம் வாஞ்சைமிகு பைங்கிளியை தோழனுக்கு தாரைவார்த்து தோயா கொடையளித்தும் அது கூண்டை விட்டு விடைபெற்று வில் விடுத்த அம்புபோல விண்ணோக்கி விரைந்ததாலே கொற்றவனே அதை நினைந்து குற்றுயிராய் மனமுடைந்தான்.
பாகம் 123
வேளை வரும் வெற்றிவரும் வில்வமாலை சூடிய நல் காளையூர்தி கொண்டதோர் கங்கைசூடி ஈன்றதொரு கந்தவேள் கைத்தரித்த கனகவேல் கண்டேன். அதை வாசமிகு வாழையூர் வந்து இங்கு வழியனுப்ப வானவரே வழிமொழிய யானவனை காட்சி காண யானை முகன் வாழ்த்துப்பாட கொற்றவையும் கூடப்பாட கொற்றவன் பெற்றவையில் கோமான்கள் கொலுவிருக்க உற்றதையும் கண்டேன். உலகநாதனருளாலே உய்ய பெரும் பேறு பெற்றேன்.
ஆரந்தாழ் அனந்தனோ ஆரம்பம் பயின்றதோர் ஆனந்த பயிலகம் கோமகன் கூடமோ கொற்றவர் பீடமோ அல்ல. அது அரசினன் அடுக்ககம் அல்லாத அடி சாளரம் ஒன்றுமே நில்லாத சத்திரம் போன்றதாய் ஓலைகள் வேய்ந்ததோர் ஓளிவிழும் நல்லகம். சந்தனம் தழுவியே பூமணம் சுமந்துடும் தென்றலின் உறவிடமாகுமே. வெறும் தூண்களால் நின்ற அத்தாயவன் கலையகம் கருங்கல் சாலையில் கண்கவர் சோலையுள் மானார் விளையுமுன் மண்வாவி வளைவு முன் நாடார் மத்தியில் கோடுடன் இணையுமே. பின்னாளது தன் பெருந்தலை தூக்கியே மாளிகை மிடுக்குடன் மனமற யிளிருமே.
தேவருலா வரும் அத்தென்னக பொன்னிலம் முன்னம் நலமுடன் தெய்வத்தின் திருநிலத்துடன் தன் திருவுடல் இணைத்ததாய் பக்தி பழங்கதை உரைக்குமே. அது மாலவன் பிறவியாய் மரிக்கா துறவியாய் மாமுனி கையுறை கோடரி வீசியே கொழிக்குமோர் மலைநிலம். கொற்றவர் மூவரில் குறியம்பு வில்லுடன் கொடி கொண்டோ னாண்டதாய் கொள்ளுமோர் நன்னிலம்.
குருதி யுண்ணும் கொசுக்களையே கொன்றெடுத்து தகுதி கொள்ளும் எரும்பினத்துள் தரம் பிரித்து தீங்கிழைக்கா தேவகுண ஆனைமுகன் பெயருடன் அழதொடும் சூகைகட்கு ஐயனவன் அன்றாடம் உணவளிக்கும் அறம் மாறா செய்கை கண்டு அகம் மகிழ்ந்து உளம் நெகிழ்ந்தேன். சிவனதை தினம் கண்டு சிரிப்பதையும் உமையவள் அதை மெச்சி நகைப்பதையும் எவரிங்கு அறிந்திடுவர் இவ்வுலகில்? எமையல்லால் யாரிதை புரிந்துடுவர்.
மன்நேயம் மாநேயம் மரநேய மாண்புடையோனெனைக் காட்டும் புள்நேய பொன்மனத்தான் புகழ் நேயம் இல்லாதான் எம்ஆயன் பூவயலுள் புகுந்திருக்கும் புழுநேயம் கொள்வானே. செடி கொடுக்கும் சீர் வழங்கும் செம்மலவன் சாவில்லா விடிவெள்ளி ஆவானே. இவ்வுலகில் எவர் நேயம் கொண்டாரோ அவர்க்கே அவ்விண்நேயம் விளையக்கண்டேன். விண்ணிலவர் வெற்றி யுடனுறையக் கண்டேன்.
பொன் குவித்த ஆணவத்தால் பொல்லாராகியே வன்பாவம் பல குவித்து வளமொடு திளைப்பரே. உடன் வஞ்சித்து வாழ்வமைத்து வறியோர் நலமனைத்தும் வழிமறித்து வரம்பின்றி கொழுப்பெடுத்து அகந்தை யிலுறைவோனவன் ஆண்டவனே யானாலும் எம்மாமன்னன் வாளுக்கு மறுக்காது பதிலுரைக்கும் மறுமை நாள் நெருக்குவதும் மன்னிப்பு சுருங்குவதும் கனவல்ல நனவென்று கடன்பட்டு நவில்கின்றேன்.
தேடித்தேடி அழிப்பான். தீரர்களை இணைத்து தேவர்களை அழைத்து பாவிகளை ஓழிப்பான். மேதைகளின் திறனை மேன்மையாக மதித்து தீமைகளை அறுத்து தெய்வநிலை வளர்ப்பான். தேவை யாவும் அறிந்து தேவனென பதிந்து யாவரையும் கனமாய் எவ்வுயிரும் தனதாய் மன்னவரும் சின்னவரும் மண்மீது சமமாய் நாடி வந்து நலம் புரிந்து நிலம் செழிக்க நித்தம் நீதி குவிப்பான்.
பேடிகளாய் மதம் பிடித்த பீடையினம் தலையெடுத்து கோடிகளாய் குருத்தாலும்
கொலைக்கருவி குவிந்தாலுமதை வேரோடு அறுத்தெடுக்க வீரனவன் துணிவான். இது வெற்றுவாக்கு அல்ல விண்ணவரே உவந்து முழுவீச்சுடனே பணிந்து எந்தனுக்கு அளித்த இறைவாக்கெனவே இங்கு யானுரைத்தேன்.
கல்கி தான் கண்ணசைக்கும் கட்டளைக்கு கீழ் படிந்து கரம்வலுக்க நூறாயிரம்பேர் கழுத்து வெட்ட ஓராயிரம் பேரென கருமவீரர் மனமுழுக்க ஈரத்தோடு மண்சிவக்க விடுவரே. பிணம் குவிக்கும் இவ்வாயிரம் பேர் பிறிதெவரும் இல்லை அவர் புடைசூழ மன்னனுடன் போர்படை திறனோடு சிரம் தரித்த பாகையோடு தீரர்களாய் தெரிவரே. அவர் கர்த்தரின் பிள்ளையில்லை. கண்ணபிரான் மக்களில்லை. திண்ணப்பன் தேவனுக்கு தெரிந்தவர்கள் எவருமில்லை. அவர் கடும் பாலை மணல்மேட்டில் அன்று கண்ணீரால் கதறியதோர் கைம்பெண்ணின் கைக்குழந்தை வழி வந்து கிளை விடுத்த கிள்ளை வழி நீதிமான்கள் செல்லும் வழி என்று யானும் சொல்ல வந்தே உள்ளங்களை வெல்ல வந்தேன்.
பாகம் 124
கண்ணுக்ககப்படா அணுவுக்குள் கருவானாய். உன் காலடியில் கரம் குவிக்க காலமெலாம் தருவானாய். உள்ளது உள்ளபடி ஒப்பற்ற வடிவாகி உண்மையே உருவானாய். உன் ஒப்புதல்க்கு சிரம் தாழ்த்தி உனை துதித்தேன் வாக்காவாய். ஒப்பரியோன் அவன் உள்ளங்கையுள்ளில் ஓம்கார முத்திரைதான் கைத்தலம் வலதில் ௧திர் வீசி கண்கவர அப்பெருமாள் அனைத்தும் ஒரு சேரும் வார்ப்பாய் ஒன்பது பிறவிகளின் உயரியதோர் நோக்காய் ஒருவனே தாங்க வித்தகன் வடிவில் விரிவதை இத்தர்கள் மட்டுமே சிந்தனையுன்றி சிதறாதறிவர்.
உன் சேவடியறியா வஞ்சக வைதிகர் வரம்பிலா நிந்தனை செய்வர். வானவர் அவனை வாழ்த்தி வணங்கி வந்தனை செய்வர். சிவபக்தரும் புரியா புதிராய் பத்தாம் பிறப்போ பாவைப்பொன்னிதழ் வழி வித்தாய் விளைந்து முத்தாய் ஒளிரும் முற்றுமுணர்ந்த சித்தை சுமந்து முலவராணைக் கிணைங்கியே முத்தமிழ் சொத்தை சுமந்து மூதறிவு சூத்திரமறிந்து சுடரொளி பாத்திரமேற்று பங்கய இதழ் குறி நெற்றியில் தாங்கி பாராள வருவானே.
சக்கரதாரியாய் சங்கை வலக்கையுள்ளில் தாங்க எங்கும் நிறைந்தோன் இங்கோர் உடலுடன் இறுதிப்பிறப்பெடுத்து பொங்கும் நிதிகுவித்து பொல்லாரை கொன்று குவித்து எல்லார்க்கும் நீதியளித்து எமையாள வருவானே. எம் ஈசன் உமையோடு எம்மானுக்கருள்வானே.
மைதவழ் மான்விழி வீசும் மையலுள் வீழா மலர்மன்னனிவன் காலடிதோறும் கைதவர் கண்ணிகள் பதித்தும் கற்கியை கருமம் நெருங்காது காலனையே கதறிக் கழன்றோடவிடும் அரவ நஞ்சுறை அன்புநாதன் துஞ்சாதிருந்து தூமணியை தொடர்ந்தம்மையுடன் அரவணைக்க அகிலமே அடைக்கலம் புகுந்து ஐயனடி தொழும் நாள் அகலாதருகில் வருமே.
கற்கி தான் நீராட கமலவாவி சென்றபோது கண்பட்ட புள்ளொன்று பூவென மிதக்க கண்டு அதன் அருகே நீந்தி சென்று அடையாளம் கண்ட போது அது அன்னமே அல்ல ஓர் அழகெழில் புறா என்றே அறிந்ததனை எடுத்து வந்து இல்லத்து மாடத்திலே இதற்கொரு கூடமைப்பு செல்லமாய் வளர்த்ததற்கு சிதியொன்றை தேர்த்தெடுத்து குஞ்சுகள் பல பொரிக்க கொண்டாடி குதூகலித்தான்.
நஞ்சுறை நண்பனொரு நரியனாய் வாய்த்ததோடு நெஞ்சற நீதிகொல்ல ஐயனை நாடி வந்து இணையுடன் குஞ்சு பெற்று இன்புடன் வளர்ப்பேன் என்று அன்புடன் பேசி சென்று அதையே பொறியிலிட்டு பொசுக்கியே தின்றான் பாவி. அவ்வுண்மை அறிந்ததாலே ஐயனும் அகமுடைந்து அவனுக்கு சாபமிட்டு ஐயகோ என்றழுதான். ஆதலால் அக்கயவன் அழல் நோய்க்கு ஆட்பட்டு குடியோடு நொந்தழுதான்.
கொற்றவன் முற்றத்தில் கற்புக்கு பேர் போன கண்களை கவரும் பல பொற்புடை புறாக்களவன் பொன்னகம் பறிக்கக் கண்டேன். அவை கைமாறி போனாலும் கண்டங்கள் கடந்தாலும் கழுகுகள் கிளித்தாலும் சிறகுகள் ஒடிந்தாலும் செய்நன்றி மறவாது உறைவிடம் வந்துறங்கும் அவ்வொப்பிலா உடன் பிறப்பை பலவாறு தீனியிட்டு உளமார நேசித்தான். அத்தகு உயிரினத்தில் அவன் மீட்ட முதல் புறாவோ ஐயனின் அன்பகத்தை அத்துமீறி தாக்கியே கொடும் நோய்க்கிரையாகி கூற்றுவனால் பிணமாகி தோட்டத்துள் தூங்குவதை ஏக்கத்தில் இன்றளவும் எம்மான் நினைத்தபடி பெருமூச்சிவிடுவானே.
பிள்ளையாய் நீரருந்தி பெருமகளாய் தலைநிமிர்ந்து அன்னையாய் முலையூட்ட அன்றாடம் குளிரூட்டி அன்பகத்தின் வலக்கரமாய் அழகாக நின்றதொரு அமுதகலம் காய்க்குமொரு அழகான தென்னை மரம். இலம் என்று கரம் விரிக்காது இம்மையில் ஈசன் தந்த இணையிலா பிள்ளைவரம். மனை உயர்த்த இடையூறாய் மண்மீது நிற்கக்கண்டு மணவாட்டி ஆணையிட அதை மாபாவி வெட்டிபோட குலமகனார் அழுதுருக கூட உள்ள நன்றி கொன்றோர் நறுக்கியதன் குருத்துண்ண மன்னவன் மனம்குமுறி மறுப்பானதன் ஊன் உண்ண. என்னதான் இருந்தாலும் ஈர நெஞ்சே அமைந்தாலும் தென்னம் குருத்துண்ணா தெய்வ மகன் உலகில் உண்டோ?
ஜயன் விரலுக்கு அறுவிரலுயரத்தில் அன்னைநிலம் தொட்ட அழகெழில் மலர்ப்பதம் இடதின் வலதில் கொள்ளிடையும் வலதின் இடதில் எள்ளிடையும் இருக்கக்கண்டேனிரு மருக்களவை கணுக்கால்களில் இடம் பெற்று எதிரெதிரே உள் நோக்க ஒருவரையொருவர் கண்ணோக்கி காதலிப்பரென என்னோக்கி இறையோனுரைக்க அதை பொன்வாக்காயுரைத்தேன் பூமகனே.
பூவையர் இவனகத்துல் பூக்க தன் பொன்னுடலணுகாது மோப்ப பேரின்பப் பெரும்பயனறியான் சிற்றின்ப சிறகை விரிக்க உதிரத்துள்ளுறைந்த உயிர்மணி ஊறிச் சொட்டுமவன் செவ்வாம்பல் மொட்டே ஒளிமணியை விரையம் செய்து வாதைக்கு வழி வகுக்கும் வரம்பிலா செய்கை கண்டேன். விண்ணாணை வரும்வரைக்கும் விந்துமணி உருக்கிவிட்டு பொன்னாளை வீணாக்கும் பூம்பாவை முயக்கத்தினும் புயமசைத்து இரசமெடுத்த பொழுதே பெரிதென அவன் பூங்குறியே புறம் சொல்லுமது இடம் சற்றே சாய்ந்திருக்கும். அவனந்தரங்கம் அத்தனையும் அடியேன் யானறிவேன். இத்தனையும் கசிந்ததற்கு இறையோனே மன்னிப்பாய் !
பாகம் 125
அறனுக்கு அரணாய் முரணுக்கு முரணாய் ஆருக்குமஞ்சானவன் ஆல்லிப் பெருவிரல் வலதெம் அன்னை நிலம் நோக்க அகத்தலம் நோக்கின் முன்னழகு முகத்தோற்றத்தொடு முறக்காதுடன் இருகோடுடை எழில் களபமங்கு செங்குத்து பாகையில் சரிபாதி சாய்வினில் அங்குற்று அடியேன் கண்பறிக்குமே. மூவருள் இருளன் விரல் சுழற்றும் எழிற் சங்குடன் அங்கயற் கண்ணிணைந்து ஆனையாகுமதன் அல்லியங்குலி (அல்லி -அங்குலி)
அவன் பெருவிரல் அடுத்து பிறைபோல் வளைந்து அருநிலம் நோக்கியே அருவியாய் விழும் அவ்வாம்பல் நிறத்து ஐயன் கைத்தலம் வலதுள் அது அறிவின் வேர் நட்டு அரும்பொன்னுல் தொட்டு ஆயுள் வேர் விட்டு ஆனையின் முகங்காட்டி அழகேதும் சிதையாது மையத்துற் மேலுதிரன் உறைந்த மலைக்குன்றிற் மறையாதொளிர அவன் மரையடியிற் மலர் கூட்டும் கரம் பட்டால் மறுபிறப்பறுத்து மாயோனடி சேர்வதற்கு வழிவகுக்க வரமொரு கோடியுறும். வாக்கிது பொய்யில்லை. வானமே அதற்கெல்லை.
அவனிதயம் எழில் வில்லாய் வளைந்திருந்து புலவன் பாதம் பணிந்து கீழ்ஆரன் சிரம் தன்னில் ஆழவேரூன்றி அதன் பின்னர் நீலன் குன்றில் நிமிர்ந்த இளைவிட்டு மேலேறும். மதிவில்லின்னொரு முனையோ மாமேதைக்குற்றது போல் உயர் செவ்வாயில் உச்சி வைத்து அதனொரு கால் இதயத்துள் ஈட்டியாக இன்னொரு கால் விதி தழுவி மகதிமடிக்குள் குறியிறக்கி விரலரையாய் நின்றுவிடும். ஆயுளல்லிக்கொடி ஆரல் மேட்டிற் அறிவொடு தொப்புள் கொடி யுறவெடுத்து தோன்றியே நிலவுக்கு வலமும் நீண்டு வெள்ளிக்கு இடமும் கொடுத்து மணிக்கட்டிற் மையங்கொள்ளும் மலர்க்கரம் இதுவே.
கொற்றவனே தனை மாய்த்து கொள்வதற்கே அழுத்தமளித்துடும்மாற்றா ரனைவருமே மனைக்குடியொடு தனை மாய்க்கும் விதியினை வலுசேர்க்கும் எம் வேந்தனின் வரமாகும். உற்றது சிவமாகும். உயிரவன் மகனாகும். பெற்றது பிறப்பறுக்கும் பெருமாளின் உடலாகும். மற்றதை என் சொல்வேன். மாளாதவன் மகத்துவமே. கற்றது கைதேர்ந்த கனி ரசவாதமுடன் கானகமென் கொழிக்குமது
கண் பறிக்கும் கனகம் குவிக்கும் கலையாகும்.
அற்றது கரும்பொன்னாய் அவனருளாலே அரும்பொன்னவ தாரமுருவாகும். ஒற்றனாய் உள்ளுறைந்து உள்ளதை யானறிந்து உலகுக்குரைக்க வந்தேன். பொற்றலை வனவன் பொல்லுலகில் புணராது பூவிலக்கி முற்றுமைம் பொறியடக்கி மூலாதார கனலெழுப்பி சிற்றின்பத்தேனடக்கி சேராமல் முத்தடக்கி தன் சிரம் தனில் சரோருக இதழ்களொரு சகரம் விரிய பெற்றதொரு இன்பமது பேரின்பமே.
உலகாளும் ஒரு மொழியின் உதவாத மூவெழுத்தை நரியார்கள் வெகுகாலம் நஞ்சுறை கொடியாக நயமாக வளர்த்தெடுத்து நா நயத்தால் பிறப்புரைத்து வஞ்சித்து பெரும் சங்கம் தனையமைத்து பேரவா கொண்டபடி செவ்வறம் சிதைத்தபடி சரித்திரத்தை திரித்தெழுதி சண்டாளர் தீர்ப்பெழுதி நாயோர்கள் துணையாலே நமையாள வருவாரே. மன்னீதி கொண்டுவந்து மறை நீதி என்று சொல்லி மண்ணாள துணிவாரே. பரதத்தில் துளிர்விட்டு பாமரர்க்கு துயரளித்து உயிர் வதைக்கும் புயம் துடிக்க உருக்குலைக்க வருவாரே.
அது கலி காலம் எழும் போது கற்கியவன் வரும்போது திருமாலின் அவதார திருமார்பன் பேரோதி தீனெறியின் வேராகி நல்லோரை வதம் செய்து நாடெல்லாம் குருதிபட கரம் வலுக்கும் காலம் வரும். அக்கொடுங்கோன்மை கொண்டவர்கள் துரை மொழியை உருவாக்கும் இருபத்தாறு சவமுறங்கும் எழுத்துக்களின் பிணவறையில் பதிணெண்ணாய் அதையடுத்து பாவியராய் துணைபோகும் ஒரு எண்ணிருமுறையும் உருவெடுக்க குறுக்கெழுத்தாய் பிறப்பெடுத்து குரூரமுறைந்தவராய் சிறப்பறியா உயிர் பறித்து செழுநிலத்தை சீரழித்து மூலவராய் அவரிருந்து முப்புரி நூல் தரித்தபடி ஆழமாய் வேரூன்றி அறம் சிதைத்து காலூன்றி வேலவன் குடி அகற்றி வெற்றி பல குவித்தாலும் மாலவன் வந்துதித்து மரணத்தை கொடையளிப்பான்.
மலர்களுருகும் மண்ணே தாங்காது விடலைகளலறும் வேதனையுணராது விண்டுறை விண்ணரும் விலகுவர். இவ்வாதை கண்டு வருந்தியே இங்குறை அமரரும் அகலுவர். எம்முயிர்கள் ஓலம் கேட்டு புல்லும் உருகுமே. கல்லும் கரையுமே. இங்குறைந்து அங்கு கண்டேன் எம்மானே எழுந்தருள்வாய்.
ஆள்காட்டி விரலில் ஆழிதாங்கியோனை அரவணை தாங்கியே அறிதுயில் புரிவோனை பாலாழி தாங்கியே படுத்துறங்கும் பொன்னிப் புனலரங்கன் புகழ்பாடாது கல்கி போல் தலை எழுப்பும் கயவரனைவருமே கருவறுக்கப்படுவர். அது அறம் வகுத்த விதியன்று அவனவனமைத்த விதியுமதை அகம் குளிர காண்பதுவும் அடியேன் விதியுமென விதித்தவனே விரும்பியதும் எனை விதைத்தவனே வேண்டியதும் அறம் சிதைத்தவரை சிரமறுத்து இவன் சேவடியிற் குவிப்பதனை எவன் காணா இருப்பினும் யான் காண்பேன் பரம்பொருளே .
விண்ணற வீடிலா ஊழினை கண்ணறக் கதறியே கடும் வழியகற்றி காக்கும் ஈசனின் கமல திருவடி சேர்க்குமிடமது ஏர்மிகு மறுமையை என் சொல்வேன் ;
பாகம் 126
அறம் உயிர்நாடியாய் அருந்தமிழனன்னையாய் மறம் மாறா மல்லன் புறம் காட்டா திறமுடையோனவன் தினவெடுத்து புயம் துடிக்கும் தென்னிமயம் எழுவது; தீரப்புயல் தாக்கியும் கோரத்தீ மூட்டியும் பொய்துயில் கலையா பொன்னரங்களன் அறிதுயிலும் பூநிலத்தெற்கில் தேவதேவப் பொறியெழுமே. அவன் ஆயகலை அறுபத்தி நான்கும் ஆதிமுனியருளு முன்னர் உற்ற குடிக்கும் நயம் கொடாதவன் ஊருக்குள் உருப்படாதவன்.
பாருக்கே பயன்படுவானவன் யாருக்கும் பயப்பாடானவன் நீதிக்கே உடன்படுவானென நெஞ்சார வாக்குரைத்தேன். நஞ்சர் நரிகளை நாடெல்லாம் கருவறுத்து நல்லோரகம் குளிர்வித்து அஞ்சாப்புலிகளை அரவணைத்து பொல்லா அடும் பூனையை புறம் ஓட்டு அனைவர் வலியையும் அவனுணர்ந்து ஆழமாய் நிலைக்கும் இன்பமுற காலமெலாம் வாழவைக்கும் வள்ளல் அவனுக்காய் வானமே வாழ்த்து பாடும்.
அகரம் முதலாயின் ஆகரம் அவன் அப்பன் முன் தோன்றி ணகரம் மெய்யா குமரன் பெயர் சொல்லி குழந்தையாய் முடியும் கொற்றவன் தாதை கொண்ட பெயருரைத்தேனதை மற்றவரறியாது மாமுனிகளறிவரே. பகரமெய்யுடன் பைந்தமிழ் ஓகரம் புணர செங்கனக மொலிக்குமவனை பெற்றாள் பெயர் சொல்லின்.
இனி அவனைச் சொல்லின் அதிலிருவருறைவரே. இனிய காதலாற் இருகரம் தழுவியும் இணை தவறியவள் இகரமுயிராய் எழுந்து நின்ற பின் ரகர நெடிலுடன் தகரமோங்கி தங்கத் தலைவி நிற்க தளரா ஈகைக்கோர் இறைவி துணையாள் அவன் சிகரம் தொடும் பொழுது சீரடி தொட வருவாள்.
பின்னம் வருகின்றவன் பெயரின் முன்னம் ககரம் அங்கமாய் இகரம் இன்பமாய் உயிரெடுத்து உறைய ரகர உடலுடன் உகரம் உட்கார ஒட்டுமொத்த திக்கெண்ணுடன் தேனுறையும் எம்முயிர் மொழியிருக்க ; உலகேற்கும் ஓர் மொழியின் அகரம் ஈற்றிலமைய அனைத்தும் எமையாளும் வேலவன் வெற்றிக் கரங்களின் எண்ணில் மாலவன் நாமம் தன்னை மறைத்து வைத்தேன் மாமணியே. மறையுறைந்து மனமேவும் தூமணியே .
அங்கம் இடம் கொண்ட செவ்வாம்பல் கைதலத்துள் அரியமர் அரியணையாம் அக்கன் இறகுயர்த்தி அறுமுகவேல் பொதிய அவ்வேலின் தலை காக்கும் வேலையை ஏற்று நிற்கும் விண்டுவின் விரல் தாங்கும் வீரிய சக்கரமே வேந்தன் பொற்கரத்துள் மையப்புள்ளி கொண்டு எம்மனதை கொள்ளையிடும்.
இக்கைத்தல முத்திரையிலாது இக்கவிதையுள் எதையும் சொலாது எத்தகு சின்னமும் இலாது எம்மானெழுதலென்பது கதிரவப்பகவனிலாது கோளங்கள் சுழற்வதற்கொப்பாகும். இஞ்ஞாலமே முற்றிலும் தப்பாகும். மெஞ்ஞானமே இதற்கோர் தீர்வாகும். மெய்யகற்றி பொய்யமைத்து மெருகேற்றி கதைகட்டி கள்வர் திருத்திய எம்பாடல் கடும் வேதையை கொணர்ந்து வாதை தரும். கண்ணீர் பெருகும் வெய்யருக்கே கற்கி கனலாய் பூக்கையிலே. காப்பியம் புதைத்த இப்புதிருக்கு காலம் நல்லொரு விடை நல்க காலன் வரும் வரை காத்திருப்பேன் கண்துறவாய் எம்பரம்பொருளே.
உந்தக் கமல முடையான் ஒளிர் கைத்தல முறை கனகக்கொடியோ கட்செவியுடை கருநாக முடியான் கரமுடை முச்சூலமதன் முடி கவிந்து மூதறிவன் மணிக்கரம் நோக்க அதன் நடுவேல் நெடுங்கோடென நீண்டு கமலக்காம்பாய் கைபிடி பூண்டு இதயத் தமனியுடன் இணைந்தேறி நீலன் மேட்டில் நிற்குமிருகளையாய். கண்டேனவனை காலன் நெருங்கா கல்லென ஆயுள் உறைந்தோனது ஆருடம் சொன்னேனிதை ஆரிடம் சொல்வேனிதை அனைவருக்கும் சொல்லேனிதை மானிடம் வெல்லும் போது எம்மானுடன் யானிருப்பேனவன் மலரடி தொடர்ந்தே சிவனடி சேர்வேன்.
வெட்டிய கோணம் விழாமல் விரைந்தே வேறிடம் பெயர்ந்தாலும் அங்கு பாட்டன் பதிந்து பண்போடு கட்டிய குடிசையும் ஒன்றுண்டு பின் கட்டிடமாக எழுந்ததுண்டு. அது சேயோன் குன்றின் புறமாகும். எம்நேயன் நாற்சிரன் பெயருடைய ஆயபணிக்கோர் புரமாகும். அங்கு மாயோன் வகையினர் மண்ணிறைய நம் தாயோன் தோன்றா மனையுள்ளே அவன் தோன்றும் காலம் முன் தோன்றி துவளா ஐந்துவிரல்களிலே ஐயன் தாதை அதில் நடு விரலாவான்.
அதில் முற்றிய மூத்தவள் நிலமுறைந்து முக்கணன் சேவடி சேர்ந்தாளே. அதிலிளையோன் மட்டும் உதிராமல் எம்மான் வரவை காணும் வரை உயிரை கையில் பிடுத்தபடி உறங்காதுலவிட யான் கண்டேன். அவன் பகவதி அம்மன் பதம் தன்னை பற்றியே பணிவுடன் திரிவானே.
ஐயன் தோன்றி இரு அகவையுள்ளே அவன் அப்பனப்பன் வீழ்வானே. அப்பாட்டன் தலையில் வேலிருக்க பக்க பலமிடை ஆயுதமாய் பிள்ளைத் தமிழொடு வால் இருக்கும் வெள்ளை மனமுடை இல்லாளோ கிள்ளை மொழியுடை நல்லாளாய் அவுரி நிறமுடை பெயரெடுத்து அத்துடன் பாயொடு கால் பதிந்து பக்தி நெறியுள் தழைத்தபடி அவனப்பன் மெய்யுடல் பொய்த்த பின்னர் ஐயன் அகவை ஐநான்கில் அங்கம் கூனி குறுகியதால் அவளும் மீளா துயில் கொள்வாள்.
பாகம் 127
எங்கு காண்பினும் இதயபூர்வமாய் தயக்கம் தளர்த்தியே தயை கூர் எம் தங்கரதமவன் இத்தகைசால் உயிர் மேல் கருணை கொள்வதை கண்டு பகருவேன். அது ஆளைப் பார்த்ததும் அகம் குளிர்ந்திட வாலை வீசியே வஞ்சமிலாமலே வாஞ்சை கொண்டதோர் நன்னெஞ்சமுற்றிடும் ஞாளிப்படைகளை நடக்கும் இடமெல்லாம் நேசம் செலுத்தியே நெஞ்சை நிமிர்த்திடும் சிங்கத்தழிழ்மகன் செவ்வடி தாங்கிடும் இல்ல வளாகத்துள் எண்ணெட்டு வைரவருள் வெறும் ஐவர் வாழ்க்கையை அங்கு கண்டிட்டேன். அருட்பாண்டவருற்ற வீரத்தில் ஐம்பெரும் பூதங்கள் பெற்ற கோலத்தில் அவனடி பூமியில் ஒன்று சென்றபின் ஒன்று வந்திடும் கால இடைவெளி விட்டுவிட்டுத்தான் காக்கும் தேவர்கள் பூத்து உதிர்ந்ததை காலந்தோறும் யான் கண்ட காட்சியை ஞானக்கண் வழி இங்கு தருகிறேன்.
மல்லனாகவே மறம் வீழா வல்லவன் வீட்டை வலம் வந்த காவல் தெய்வத்துள் ஒன்று மட்டும் காலன் அழைத்த நாள் வரைக்கும் கடமை பூண்டு பணியாற்றி அரவம் ஒன்றையும் விடாது அஞ்சா நெஞ்சுடன் போர்புரிந்து வருடம் பத்தாய் வாழ்ந்த பின்னர் கொற்றவை குலமகன் முற்றத்தில் குருதி சுருங்கி வயதாகி இறுதி பயணம் கொண்டதுதான் உள்ளம் உள்ள நாள் வரைக்கும் உள்ள உள்ள உருகுவானே எம் உத்தமன் மனதில் குடி கொண்ட மாயோன் பெயருடை நாயோனை இந்நாயேன் நன்கு அறிவேனே.
புன்கண்ணுடை பூமானோ பிரிதொரு குட்டியை ஏற்றெடுத்து இன்பமுற வளர்த்ததற்கு வடக்கர் விரும்பும் குளிர் பண்டம் தனை வாய்க்குள் குச்சியை திணித்துண்ணும் சிறப்புமிக்கதோர் பெயரிட்டு செல்லமாய் வளர்த்துவந்த பின்னர் அதற்கும் நோய் வந்து தாக்கிடவே ஐயோ ஆயுள் நான்காண்டே அன்புடை அசுழமும் மாண்டதுவே.
மீண்டும் கூரன் குட்டியொன்றை மேன்மகன் எடுத்தே வளர்த்தாலும் ஐந்திங்களில் பிணிவந்து அதற்கும் ஊழ்வினை முடிந்ததுவே. பின்னர் ஒருவன் பீமனாக ஐயன் வீட்டிற் காவலாக பாட்டனை அழைக்கும் மொழியாக பாசமாய் அதற்கொரு பேரிட்டு பண்புடனே வளர்ப்பானே. அதுதான் கற்கி உருவெடுத்து கண்டம் முழுமையும் ஆள்வதனை கண்ணாரக் கண்டபடி துணைவன் போல உடனிருந்து அமரர் உலகை அடைந்திடுமே.
இதில் ஒருவன் மட்டும் உடல்முழுதும் தொழுநோய் பட்டு துயருற்று உள்ளமுருக எழில்கெட்டு ஐயன் அகவை பத்திற்குள் அன்று வாகன சக்கரத்துள் சிக்கி சிதையும் ஓர் இரவில் அதை சேர்த்து எடுத்து தோட்டத்துள் அவன் அத்தன் அடக்கம் செய்வானே. புதையல் போலே புவிக்குள்ளே பொன் விழி மூடி தூங்குகிடுமே. மனிதனே தோற்கும் நன்றியுடன் மாண்புடன் வாழும் பைரவரின் அகமுறைந்த அண்ணலவன் அடிபணிந்தே வாக்குரைப்பேன். சிவம் நிறைந்த இவ்வுலகில் தவமேற்று அறம் வளர்த்து அவன் வருகைக்காய் வான்பார்த்து அகல் விளக்கை ஏற்றி வைத்தேன். புகழ் துறந்து புகலடைந்தேன். பொறிவிழி திறந்தே என்னையறிந்து பெம்மான் இணையடி சரணடைந்தேன்.
அன்னையின் அப்பனுடன் அக்குடியில் அன்றலர்ந்தோர் ஆடவரே மூவருண்டு முப்புரத்தில். பாட்டன்களில் அப்பாட்டன் பண்புடை சின்னையன் பெயருடை செழுங்கிளை செல்வருள் சொல்வேந்தன் கடையனாய் இருந்தாலும் கண்மணியே பெற்றோர்க்கென காலகாலன் அறுதி செய்ய கள்ளழகன் உறுதி செய்தான். நல்லோர் புடைசூழ ஞாயிறின் விரல் தழுவி நாற்றெழும் நல்லூரில் நற்குடியாய் உள்ளோரில் மூத்ததொரு கிழவியோ பின்னுதித்த பிறைசூடி தம்பியுடன் மின்மினி தங்கையுடன் பிறப்பெடுக்க சிறப்புறு பெயரில் செல்லமொரு அம்மையவள் சீர் சுமந்து வேர் பதித்த வேலன் முன்னம் நாணலன்ன நாணி நின்று கரம்பிடிக்க அவ்வில்லறத்தாள் வேண்டுதலால் நம் நல்லறத்தான் பாட்டனது வில் விடுத்த வித்து வீழ்ந்து பெற்றதொரு பிள்ளைக்கு ஆநிரைக்கு குடைபிடித்த ஆழிவண்ணன் பெயரிட்டும் அடங்கா பேயோனாய் உற்றதோரு தாதைக்கு உதவாப் பெருவிரலாய் சொத்தையாய் அமைந்திடுவான்.
பின்னமொரு முத்து போலே பெருங்குடியின் மூச்சை காக்கும் சுறுசுறு சூத்திரமாய் அன்னமூறும் பாத்திரமாய் அக்குடியிற் பூத்திட்ட பொன்மகளோ பெற்றோரின் சுட்டுவிரல் வலுவெனவே சொற்செல்வி வரமுடனே ஐயனன்னை அறிவொளியாய் அமைந்த பின்னம் நெட்டை நரி போன்றொருவன் உற்ற நடுவிரலாகி உடலெல்லாம் நஞ்சோடும் உரகமுறை நெஞ்சமைத்து குன்றத்து குமரனையே கூப்பிடும் பெயரெடுத்து பாகப்பிரிவினையால் பைம்பொன் தமக்கையுடன் பகைவளர்த்து தந்தை வீழ்ந்த பின்னரவன் தலையணை வலைக்குள் வீழ்ந்து தருதலையாய் ஒழிவானே.
கணையாழி விரலொப்ப கருணைமிகு மாமனாக மனை தாண்டா மரையாக மற்றவர்க்கு மூடனாக மனம் வெளுத்த தாய்மாமன் தகுதியுடை அமைதிமிகு குமரனாக அங்கொருவன் கிடைத்ததனால் ஆனந்தக்கூத்தாடி அனந்தனவன் களிப்பானே! ஐம்பதின் முன்னமே அம்மானோ அகால மரணமெய்து அத்தையும் கைம்பெண்ணாய் முத்துக்கள் ஈனாமல் முலைகளும் சுரக்காமல் மூர்ச்சையற்று வேற்றோர் முற்றத்தில் வீழ்ந்து விதிமுடித்து காற்றோடு அவள் கலந்து கயிலாயம் தனில் நுழைந்தாள்.
பின்னுதித்து பேருதவி புரிந்திடவே அன்னையுடை தங்கையொரு அடிப்படை அன்பகமாய் பொறுப்பேற்று தமிழீன்ற தென்னிலத்து தேன்மொழியிற் நற்குமரி நாமமுடை சுண்டுவிரலொப்ப சுண்டெலி உடலொப்ப சுந்தரி அழகொப்ப சுறுசுறுப்பில் எறும்பொத்த விண்டு மகளொப்ப விரல் தழுவும் சங்கொப்ப வந்து உதித்தவளாய் வானவனை வளர்ப்பதற்கும் மென்மையினும் மேன்மையுடன் மேதினியே திகைப்பதற்கும் அன்னையினும் சிறப்புற்று அம்பை போற் கிடைப்பாளே.
கொடுங்கையுடன் கொலைக்கஞ்சா கொங்கர் இனமென்றை கண்டேனது பாழரசின் பங்கயவேர் பதித்து பங்கமுறு குழுவில் பங்கெடுத்து இங்குறையுமதனுடன் நரகுறையும் நனி தகுதியுடை குலமொன்றும் நம் நற் குணக்குன்றோன் தலைக்கு நாளெல்லாம் வலைவீசி நஞ்சருடன் விலைபேசி அரும்பொன் விளம்பிடுமே.
அதில் அங்கம் வகித்து அறமறியா பொய்யன் புரட்டு வெய்யனொருவன் விண்மீன்கள் மின்னிடும் பெருந்திரை பெண்மீன் பிறப்பிழ் வெறியனாய் இல்லறமே எற்காதோன் இளமலர் இன்னிதழ் குறிக்கலைவானவன் தொலைக்காட்சி விழியமுடன் தோற்றமுறும் சேதி சொல்லி இரு விழிக்கு விருந்தமைக்கும் பெருவிழியம் பெற்றோனவன் திருமண அழகனெனும் திருப்பெயருடை கருமகனுடன்படுவானவன் கன்னித்தமிழெழுத்து காணாத கறைமொழியை அதற்கமைப்பான்.
அம்மொழிக்குடையோர் அகிலமெலாம் கள்வராய் மறம் மீறி மண் புகுந்து அறம் கொன்று புறங்குத்தி போர் புரிந்து பொன்பரத கண்டமாண்டு நம்மவரை அடிமை கொண்ட நாயரசின் மொழிகொண்ட இழவெடுத்த ஏழெழுத்தை ஏற்றெடுத்து அதைத்தொடுத்து புகழமைக்க பல்லுறுப்பு பெயரமைத்து பைந்தமிழர் பாருக்குள்ளே ஊடகப் புகழ்படைத்து உள்ளூர விடமுறைந்த நாடக நன்மகனாய் நாளெல்லாம் நம்பவைத்து நம்மையன் நடமாடும் நாற்றிசையும் பரிகளை பரிசளித்து நரிகளை ஏவிடுவான்.
பாகம் 128
அறுபடை வீடவன் அருள் வீடாயினும் எம்மையனை காக்க ஆறிரு வீடமைப்பேன். செறு பகை சிறகடித்து சேயோனிடம் சேராது பலர் சிந்தையின் சிறகொடிப்பேன். உறுமிடும் ஓநாய்கள் உட்புகா தாழிட்டு உண்மையை மறைத்திட்டு உலகத்தின் கண்களை நமன் திசை திருப்பிடுவேன். திட்டங்கள் தோற்கின்ற திருமுருக கரம் போன்று கட்டங்கள் யானமைத்து கற்கியை ஒழித்து வைப்பேன். கருமம் மாற்றியே கண்ணைகளை குருடாக்கி கதிரோனை இருளாக்கி கயவர்க்கு புதிரமைப்பேன். நாட்டம் அவன் மீது நன்றாய் கொண்டதால் நட்டத்தை நானெடுத்து நரியோர் கொட்டத்தை அடக்கிடுவேன். கொற்றவனவனையே கொலைக் களம் அனுப்பாமல் மலை நிலம் வரவழைத்து மாமன்னன் உருவமைத்து மக்கட்க்கு தந்திடுவேன். நாளை மறுமலர்ச்சி கண்டிடுவேன்.
எவனும் எதிர் நோக்கா ஈசனருளாலே எளியோர் உடலெடுப்பான். அதை பிரமன் முதற்கொண்டு அமரர் வரை உள்ள அனைவரும் அணுவளவும் அவனுடல் வடிவத்தை கற்பனை செய்யாரே. இதை அகிலம் தனில் உள்ள அறவோர் எவர் கூட எளிதில் உணராரே. ஆயின் அறத்தை கொலை செய்தே மறத்தை தீவழிக்கு மாற்றி அடகு வைக்கும் நரியோர் மெதுவாக நாளும் நயமாக மென்னறிவு மிகையாலே மீட்பன் எழுந்ததனை அறிந்தும் அறியாமல் அரிதாய் அறிந்தபடி கொடும் அரணைகள் பொன்பெற்று அரவணை மாலவனின் அரணை சூழ்ந்திருக்கும்.
ஆயின் அவனிந்த அகில உயிர் எவரும் அறிய இயலாது புகல்வான் ஓருடலில். அங்கு புற்றுப்பாம்பெனவே புக்கும் மூலமதில் வித்தின் வேரூன்றி விரியா குண்டலியாய் விதியை அவனமைத்து அதுவும் அறியாது அவனுள் ஒழிந்திருப்பான். அவன் அறியும் காலம் தனை அரவம் மேலெழும்ப அவன் விழியை சிவன் திறப்பான். அந்நாள் வரும் வரைக்கும் அரவம் எழுப்பாது அவனுள் புதைந்திருந்து உரிய நேரத்தில் உறைவிட்டு கரமிழுத்து உருவிய வாளெனவே கொடியோரனைவரையும் கூர்வாள் ஒன்றேந்தி அகிலம் வலம் வந்து அறத்தை நிலைநாட்டி இகத்தில் நலம் வளர்த்த ஈடறு வளம் குவிப்பான். இச்சேதியை யானறிய இரு செவிக்கு விருந்தளித்து சோதியாய் சிவன் சொன்னான். அதன் சூட்சமம் உமை அறிவாள். இக்கவிக்கு கரு அமைக்க கண்முன் அவன் தோன்றி ஐயம் இடமுற்ற எம்மகத்திற்கு மருந்தளித்தான்.
திருடன் வால்மீகி தேர்ந்த கவியாகி அண்ணல் கதை பாடி அறத்தை விதைக்கல்லையோ. மூடன் காளிதாசன் முன்னோர் குலம் தோன்றி அஞ்ஞானம் அறுத்த படி ஞாலம் திகைத்தபடி நற்காவியம் படக்கல்லையோ. பாண்டியன் தலைமேலே பதிந்த செழுஞ்சோழன் ஆண்டக் கடையூரில் ஆண்டி கோலத்தில் அடியார் ரூபத்தில் வேண்டி கவி பாடி அன்னை அபிராமி அருளிய பௌர்ணமியை அடியேன் நினைவூட்டி நாட்டில் இவனொருவன் ஈசன் மகனுருவில் நஞ்சை பெருநிலத்தில் நஞ்சர் சூழலிலே வெஞ்சின பகை வளர்த்து விடியல் அறுவடையை விரைந்தே அவனறுப்பான்.
அவன் புதையல் போன்றங்கு புதைந்தும் புதையாது மிகுந்திருப்பானே. மீதியை அவன் அறிந்தும் மீண்டும் அறம் தோன்றும் மனு நீதியும் உடன் தோன்றும். இமய முடிகொண்ட எழில் விமலன் விடுவிக்க பொய்க்கா கொடையொடு பொய்கை பூமரை வலக்கரத்துள் சங்கம் புடைத்திருக்கும் சதுர் வேதன் கைத்தலத்துள். அங்கம் கொண்டிருக்கும் அகவல் ஊதும் அழகன் அகிபுசம் அதன் அரை மெய் கொண்டிருக்குமவன் சூலக்குறி கொண்ட சுழுமுனை நெற்றியுடன் ஞானம் சுமப்பானே.
நன்னெறி போதிக்கும் நாடாய் ஒருமித்த பொற்குடை அமைப்பானே அவன் நற்கொடி உலகெழுந்து நாற்றிசை மணமுடைத்து புவிபோற்றியே பொலிந்திடவே புல் முதற் மன்னுயிரும் புண்ணியம் பெற்றிடவே எம்மவன் பதினெண்ணில் எழுந்திடும் சித்தருள்ளில் விண்ணருள் முத்தெனவே வேதம் மொழிந்தேனே அவன் முத்தமிழ் மொழிதேனை முப்பார் முழங்கிடவே முடக்கம் தகர்ப்பானே.
காதற் தோல்வி தாங்கிடினும் கற்கி தோல்வி தாங்காது மோதல் கொள்ளும் மூடர்களே ! வேதம் எதிலும் உறைந்தவனே விதியினை எழுதி தந்தவனே. வானம் விட்டு பிறப்பெடுத்து வையம் தழைக்க வைப்பானே. பாரில் எவனை பாதுகாத்து பத்திரப்படுத்த வேண்டுமென ஆற்றுச்சூடி அனல் கண்ணன் அவனே என்னிலும் நன்கறிவான்.
யாரை பாரில் எழ வைத்து யுகத்தை முடிக்க வேண்டும் என்று தீயை மெய்யாய் உருவெடுத்த தேவி பகவதி கண்டறிவாள். தாரை வார்த்து என்னுயிரை தந்தே ஆயிரம் நோற்ற பின்னம் வேரை பிடித்து அவன் விதியை விண்ணே அதிர பாட்டிசைப்பேன்.
பொன்மகள் வாழாதிருந்தும் பூமகள் வாளாதிருந்தும் எம்மகள் காணாதிருந்தும் இதழ்விரிந்தொளிர் வெண்மரை மேல் வீணை மீட்டியே மென்மகளருளை மிக்க கொள்வானவன் கண்மலர் கனிவின் உருவாய் கைமலர் கொடையில் மழையாய் பெண்மலர் வணங்கும் இறையாய் பேரருளாளன் பிறவியைச் சொல்வேன். அத்தேற்றறிவாளன் துளிர்விட்ட நிகழ்வை வெண்டலை யானவனன்றி வேறு தேவராளனும் அவன் திசுவையும் அறியான்
.
பாகம் 129
நெய்தல் நிலம் கண்ட மருதம் கரம் தந்த தமிழன் நிலமொன்றில் ஆறேழகவையிற் அன்பாலையனடி பதிந்த அங்கொரு தோட்டத்தில் பைங்காணி வாவியாய் பைம்புல் மேனியாய் கரையுடை நெடுமழை நிரப்பியும் மாந்தர்க்கே நிலைக்காத நீர்நிலை நடுவிலே சிறுகோல் ஆயிரம் தொலைவுடை வெள்ளத்தில் ஆம்பல் கூட்டம் அலர்ந்ததோர் பள்ளத்தில் அருநீர்ப்பறவையாய் தெரிந்தொரு கருநீர்காகத்தின் கால் அகப்பட்டது சிறுநூல் வலையொடு சிக்கயே துடித்திட பெருமான் விழியது அதன் பெரும்பாடு கண்டிட ஐயனின் அன்பகம் அகழிக்குள் இறங்கிட ஆணைகள்
இட்டதால் சோதனை தாண்டியும் வானவன் நீந்தியே வந்து அப்புள்ளிடம் வசதியாய் சேர்ந்திட்டு வலைதனை அறுத்திட்டு அப்பறவையை விடுவித்து வாழ்ந்திடும் வரத்தினை எம் வானவன் வழங்கினான். இதை கரையினில் அமர்ந்த நன்மாந்தர்கள் அனைவரும் கைமலர் தட்டியே கரவொலி எழுப்பினர். அக்கடமையாற்றிட்ட பழமைப்பதியது தமிழர் பாகையாய் தரையிலுறைந்திடும் தலையில் உலவியே கைபணமீட்டிட கடும் பணியாற்றியும் உறைவிடம் இரவலாய் உற்றதோர் கொற்றவனுற்ற பல்லின்னலை பெற்றதை பெற்றத்தாய் போலவே உருகியே இறைவியும் உரைத்ததை கேட்டு யான் இருகரம் கூப்பினேன்.
ஐயன் தேசத்திற்கு அதிகம் போனாலொரு அறுநூறு காதத்தில் ஆழிசூழ் தென்கிழக்கு வெள்ளத்துள் திருமதியின் தேயா நிறையொத்த ஐநூறிலொரு கூறு அனல் பொதிந்த ஆனையொன்று அந்தரத்தில் அரவணைக்கும் ஆடவனின் கரம் விடுத்து அவன் பிணைத்த சரடறுத்து ஆழிகோள் உருவெடுக்க அங்காருயிர்கள் அலறியழும் அபத்தத்தை விளைவிக்கும்.
அதன் ஆரம் தொடும் நீளமது நம்மன்னை நிலம் அண்டை நிலம் ஆறடுத்து அன்னமூட்டும் தாய் நிலமும் அதை அணைத்திருக்கும் மென்னிலமும் அழலடி விழும் திசையில் கருணையொத்த கவின் நிலமும் கருங்கண்டமுள்ளுறைந்த சிறு கண்டம் புதைந்திடுமே. பெருங் கண்டம் சிதைந்திடுமே. மந்தை போன்று மாந்தரெல்லாம் மரண ஓலம் எழுப்புவதை எந்தை சிவன் எடுத்தியம்ப உந்தைக்கு சொல்வதோடு உன் உதிரத்தை எச்சரித்தேன். ஆதலால் நன்று செய்க இன்று செய்க. அதை இன்முகத்தோடு என்றும் செய்க. நமை ஈசனடி கொண்டு சேர்க்க இம்மையொடு மறுமையிலா ஈடற்ற நற்கதியை என்றென்றும் ஈட்டி தரும். வீடற்றோரில்லாத விதி எழுதும் மதியமைத்து வினையறுக்க வழி வகுப்போம்.
அனந்தன் தலை வீழ்த்தும் அற்ப நோக்கத்தில் அறங்கொன்றோனொருவன் மாற்றானாய் உள்ளில் மறைத்து வைத்த விடம் விளைய தோற்றம் புதைத்து தொலைவிலிருப்பானவன் கனகம் ஈழத்து கலைஞன் தலை பத்தாய் தரித்த தளிர் கிளையில் உதித்த ஒரு கொடியோன் உறுமி எழந்தபடி ஒட்டிய தமிழ் நிலத்துள் ஒழிந்தே பதிந்திருப்பான்.
பாதகன் அவன் பணியை பரமன் முதலானோர் தினமும் யானறிய தேவரும் முன் அறிவர். பங்கய உந்தி கொண்டோன் பரந்த இடம் சுற்றி பாதக சூனியர்கள் உறைந்த மலை நாட்டில் நிறைந்த பொன்னளந்தும் நெறிமான் திருவடிதான் நிலம்படும் மண்ணள்ளி நித்தம் ஏவல் செய்தும் நெருங்கா தீயாவி நொறுங்கி வீழ்ந்திடுமே. திறந்த விழியோடு தென்னில வரையோரம் அங்கம் மறைத்தொழுகும் அவன் மேனியிற் நாக நாணொன்று நஞ்சு கண்டம் போல் அங்கு மிளிரக்கண்டேனவன்.
ஐயனுதிக்கும் அகவைகள் கடந்தே அங்கலர்ந்து பொய்யர் புடை சூழ வெய்யர் கரம் கொடுக்க அவன் அனந்தன் அலர்ந்த பின்பு அகிலம் வருவானே. அரியை இழித்தபடி அவன் செயலை பழித்தபடி அவதூறுரைத்தபடி சினமோங்குமொரு சிறு குழுவை இணைத்தபடி வனங்கள் பல புகுந்து வளவன் உயிர் நாடி வரம்புகள் பலமீறி ஒளிமகன் ஒளிர்ந்த பின்னே உதிரம் தெறித்தபடி உயிரை மாய்ப்பானே. எம்வளவன் வேரறுக்க எவ்வுயிர்க்கும் போர் தொடுக்கும் வரங்கள் வழங்காத சிவனை என் செல்லி சேவடி தொழுவேனே.
பாகம் 130
அம்பாள் துணை இருக்க ஆதி சிவனுடனிருக்க அருட்பண்பன் கிடைத்தானே பரம்பொருளே. அண்டமெலாம் பெரும்பேறு பெற்றதற்கு அலகிலா நன்றி சொல்வேன் பரம்பொருளே. வெண்டலையான் அருளாலே கொண்ட துயர் விலகிடவே வந்த வரம் இவனெனவே வையகத்தை உணர வைத்தாய் பரம்பொருளே. பகுத்தறிவு பூமலர பயனுடை விதையூன்றி புகுத்திடும் அவன் நெறியை புடம்போட்டு சொல்லிடவா! பூமான் புகழ் மணக்க புறமுரைத்து புண்ணியம் கோடி யான் ஈட்டிடவா! அறம்பாடி இவன் வாழ்த்தி அவன் வாழ்க நீடூழியென உளமாற பரிமாற உலகுடை நிலமனைத்தும் வளவாழ்வு இனி பெறுக என்றிடவா !
பைந்தமிழர் இனம் சிறக்க பட்டொளி கொடி பறக்க வான் மகனே என்புருக்கி எமை வாழ வைக்க வந்துதித்தான். இதயம் இயங்கும் வரை இயலும் காலம் வரை இறுதிமுச்சோடும் உறுதியிருக்கும் வரை புதையல் அவனாக பூமகள் புன்னகைக்க இம்மை முழுமையும் செம்மையாக்கிடவே நம்மை காக்கின்ற நன்மை பொழி மாரியென தன்னுயிரை தாரை வார்க்கும் பைம்பொன் பெட்டகமாய் பன்னாட்டிற்கமைவானே. இதை சிவனாரும் அறிவுறுத்த சித்தர்களும் அறிவாரே. சிற்றின்பமுற்றோனும் சிவனெறியை விட்டோனும் கருவமுற கற்றறிந்து காமன் கணை பட்டோனும் சினமோங்கி மனங்கெட்டு சிரம் தாழ்த்தா கொற்றோனும் சிறிதளவும் அறியானே. பேரின்பமறிந்தாற்போல் பெருங்கூத்தமைப்போனும் காரிருள் உள்ளத்தால் கண்ணொளி இழந்தோனும் இம்மேன்மகனொளி முகத்தின் மென்மையினை அறியானே.
கைத்தலம் அகத்தே கமலம் மலர்ந்து காந்தமெனவே கண்ணைக்கவர அரவம் நெளியும் அண்ணல் கரத்தின் புறத்தே நரம்பென தெரியும் நாதன் மேனியில் நற்புயமோங்கும் நறுங்காயமதன் நலம் சொலின் முருக்கேறிய முருகின் முற்றிய வைரக்கட்டை மெய்யாயுறைந்து மையலுற சித்தம் கவர்ந்தே சேயிழை பலரும் பித்தமடைவர் பெருமான் நடப்பின்.
ஔடதன் ஆயுதம் யாதுமே ஐயன் ஆருடல் தீண்டிட வரம் பெறாது அவன் அங்கம் மிளிரும். சிவன் ஆயுதம் காத்திடும் சரவணன் எந்திரம் வாய்த்திடும் கைத்தலமுற்ற கைங்கரியம் செய்யும் எம்மான் முகமெழில் நோக்கிடின் எமனாயுதமே ஆயினும் எதிர்த்தெழ இயலாது உயிரற்றே தலைகவிழும்.
உச்சி வகுந்தெடுக்கா உயர்வுள்ளும் உத்தமனிவன் ஊழ்வினை சொல்வேனவன் கச்சியே கம்பன் கையுறை உடுக்கை இடுப்பெடுத்து ஒய்யாரம் கொண்டிருப்பான். அடிவயறு தொங்கா ஆணழகன் அங்கம் கொண்ட அரிமா நடையை அன்றாடம் யான் கண்டேன்.
படுக்கையை பாம்பணையிலிட்டவன் எனை துடிக்க விடாது துணையிருப்பான் என்ற உடன்படிக்கையொடு உலகிறங்கியே உத்தமரை அச்சுறுத்தும் உறுபகைக்கஞ்சாது அருந்தமிழர் பண்பாட்டு மரபையெல்லாம் பத்திரமாய் பாதுகாக்க முத்திரை பதிப்பானவன் மூத்தவரை மதிப்பானவன். சித்திரம் கைப்பழக்கம் செந்தமிழவன் நாப்பழக்கம் என அத்தனை அறிவரையும் அலங்கார மாலையாக்கி அறிவுக்களஞ்சியமே அவனமைப்பானென ஓம்காரம் உலகதிர பூங்காதில் இதையுரைத்தான் இறையோனென பெயரெடுத்தான்.
ஐயனுதித்த ஆதிசிவனொளி பதிந்த அருளில்லத் திருவாயிற்படிக்கு தெரியும் கிழக்கே தீங்கிழைக்கா எம்மானுறவு அம்மான் முறை வரும் அறவோன் ஒருவனின் பொழிற்பொதி புத்தன் வீட்டு முற்றமுறைந்த பத்தடி கேணியுள் பாரில் பிறந்தே அறுமதி கடந்த இளம் மறி மழலை அவனுடன் வந்து மறுகடக்க அறியாததன் கால் இடறி கண் முன் வீழ்ந்து நீரில் மிதக்க நெஞ்சம் பதைக்க கருணைக் கடலாம் கனிவின் பெருமான் தன்றுயர் நோக்கா தக்க பொழுதிற் ஈரேழகவையுள் நீருள் பாய்ந்து ஈரநெஞ்சோடணைத்து ஆட்டை மீட்டு ஆருயிர் காத்த அரும்பெருஞ்செயலை அனைவரும் போற்ற ஆகாயம் வந்து அமரர் அரம்பையருடன் அடியேனும் வாழ்த்த சேதாரம் இல்லா செவ்வேள் பண்பினை ஆதாரமோடும் அவனடிதொழுது ஆதாயம் இன்றி அருள்வாக்காய் உரைத்தேன்.
பாகம் 131
ஓயா பிணிகள் உலகையே தாக்கி ஆறா வடுவை அமைத்து செல்லும். வடக்கர் தெற்கின் வளம் பல சுரண்டி வன்மம் ஓங்கும் நெஞ்சம் பூண்டு வஞ்சம் தீர்க்கும் நஞ்சம் கொண்டு நினைவால் உயர்ந்தோரென்றே நீசருள்ளின் நீலம் கொண்டு வாழ்வில் கொழுத்து வாலை ஆட்டும். நிதியை வழித்து நெருக்கடியளித்து விதியை அவர்க்கு வேண்டி யமைத்தும் வெய்யர் கூட்டம் வேதமோதி மோதும் மூடரின் முடை வீசும் மதத்தின் பெயரால் மண்ணை சிதைத்தும் மாண்புடை மாந்தரின் எண்ணம் மறுத்தும் நரியார் பலபேர்
நன்னிலம் ஏய்த்தும் நாட்டோரனைவரும் துயருறும் வேளை தென்னிலம் ஈன்ற தேவனொருவன் வன்னிலமமைத்து வாய்க்குள் இட்ட அரியெனும் வரியை வாதம் எழுப்பி வதங்கள் செய்து அந்த வானம் தொட்ட வரையையும் மீட்டு ஞாலம் தொட்டு நன்னெறி படுத்தி நல்லுரை சொல்லும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றவன் கனவினை இங்கீடேற்றி பூமகள் காக்கும் மேன்மகனவனே ! பொன்னியில் பூத்து பொருநை யூறும் பொதிகை வரையுள் பொறிமலர் பறக்க புயலாய் சிறக்கும் முல்லையிலுதித்த முக்கண் முதல்வனின் முண்டக முகனே!
ஓடுமீன் நடுவிற் உறுமீன் வடிவெடுத்து பாதகனை சிதைத்து வேதம் மீட்டு விதி எழுதும் நான்முகற்கே மீண்டும் ஒப்படைத்த மாதவப் பெருந்கையுமிவனே. அமுதெடுக்கும் ஆயத்தம் பெற்று ஆழியுறை ஆகாயம் தொடும் நெடுமலையின் நிறை சாய நிறையாப்பணி ஓய கருங்கமடம் உருவெடுத்து கார் வண்ணன் கடல் புகுந்து கீழுறை கிடை மலை நிமிர்த்தி கிடைக்கரிய அமுதம் விளம்பி ஆனையூர்தி குலத்திற்கு ஆருயிரளித்து அமரர்க்கே அத்தனுமாயினன் இவனே.
கூரேனம் வடிவெடுத்து குளிர் நீராழியுள் குதித்து பாரெடுத்து பதித்தோனும் இவனே. குறளாய் தனை குறுக்கி கொற்றவன் முற்றம் வந்து குறை கோரி கொடையாய் மூவடி இரந்துப் பெற்று மூன்றாம் அடியாம் மணி முடிக்கு உற்றவனும் இவனே ! பக்தனை காக்க பாதி மெய்யுடலில் பாரியின் மேலுடலெடுத்து பாரதிர கோளதிர பதினான்கு உலகதிர சிங்கப்பெருமாளாய் சிரமுதறி சீறியே அந்தரத்தில் அரண்மனை வாயிற்படியில் அரக்கனலற குடலுருவி கொன்று அகிலத்திற்கு உற்ற
அறங்காவலனுமிவனே. அவனே அனைத்து அரக்கரும் ஒருங்கே பெற்ற அழியா வரமனைத்துமுற்று உலகிறங்கிஓயாது சிவனை நினைந்து சிதறா சிந்தை கொண்டு குமரனை நோக்கும் குலமாந்தர்க்கு கதிர் காமனாய் கோவிந்தனை நோக்கும் நலமாந்தர்க்கு குறைதீர்க்கும் கொதிக்கும் கற்கியாய் மந்தையோடு மந்தையுள் கலந்து மண்ணிலுதித்ததை எவன் சிந்தையும் உணராது போயினும் இவன் சிந்தையுள் சிக்காது போவானோ அச்சிங்காரச் செவ்வேளவன் சேதி சொல்வேன் பரம்பொருளே.
முதல் நோக்கம் முகுந்தன் ஏங்கும் மூவைந்தில் முப்புரமுறைந்து உள்ளூர் அடுத்து அறிவரங்கம் தன்னில் அமர்ந்து அவரவர் உள்ளரங்கம் திருடி ஒலிக்காதொழுகும் வாய்மொழிகள் முடங்கி நால்விழிகள் பேசியும் பூக்கா இதழொடு அவளது பேதை துவங்கும் பைங்கிள்ளைப் பருவம் பகருமவள் பெயரது முகமென பட்டத்தரசியின் பாங்குடை சொல்லாய் பந்திக்கு முந்திச்செல்லும் அது பன்னாடேற்கும் பரங்கியர் மொழியில் துவங்கிய பின்னம் பொன்னை இடையில் புகுத்தி பூக்கும் பூவின் நுனியில் விண்மீன் பெயரது விளைந்தே காக்கும் பெருமான் சிவனின் பேரருள் பொழியும் காலடி வீழ்ந்து சீருறு வாக்கியம் வாயில் வருவதை சிந்தை ஊன்றி செவ்வனே கேளாய்.
கடைநோக்கம் கற்கிக்கமைவது கன்னிக்கனியன்னையெனும் கற்புடை மாதின் பொற்புடை புதல்வனுதித்த பொய்யா திருக்குடி பெயரமைந்த தேவனாலயமுற்றமிருப்பது திருமாலழகுறு தீரப்பிறப்பெடுத்து சனகிக்கு இணை சேர்ந்தோன் சார்ந்த புதுப்பதியது அம்மை அழகுறு வாலை குமரி பாதம் தழுவும் கடலடிக்கு காதமொரு தூரம் குடக்கேயமையுமாங்கே ஐயன் தன்னின் அல்லல் பொழுதை மெல்ல போக்க நுழைந்த போழ்து மேய்ப்பனை தொழும் பொருட்டு மீட்பனாயன் திருத்தலமமர்ந்த பூவிழி இரண்டொடு பொழிந்த கணையால் ஐயனிருவிழி ஆங்கவளிதயம் ஈர்க்க இணைய இயலாதேங்கும் எம்மானுருகிய நாளை உள்ளூர உள்ளி உமையொரு பாகன் ஒளிர் பதம் வருடி எமையொரு அடிமை இழியோனென்றே என்றும் எண்ணி சுமையினை தளர்த்தி சொல்லும் சொல்லில் அவன் விதி முடிந்த காதலை சொன்னேனதை அறியாதகன்றாலது அடியேன் பிழையோ?
முதலும் கடையுமாய் முகுந்தன் உடலிணையாவது முடியா காதலொடு முடிந்த கனவின் கருச்சிதைந்தது கர்த்தரின் முத்திரையணிந்த முண்டக முகமலர் பேதையொன்றும் பின்னம் வருபவள் பேரானந்த வாழ்வுள் புகுந்தங்கொருவனுக்கு புணர்முத்தம் கொடுத்ததன் பயனாய் பெண் முத்தீன்றும் பொற்சரடறுத்தும் கண் கொத்தி ஈர்க்கும் கனிகளை யொத்த கவின் முலை நிற்க பேரிளமடுத்த பெண்மயிலொருத்தி என்பதை யானும் இளம்பிறை சூடி இணைபிரியாது எமையும் உமையும் இமையென காக்கும் பித்தன் பெருவிழி எடுத்தே எம்மானவன் பீடைக்காலமதை பெரும்பாடுபட்டறிந்தேன் மேலும் அவ்வரும்பாடறியாய் அறனே.
பாகம் 132
சேரமான் பரித்த செழுநிலத்தில் ஆரந்தாழ் அழகெழில் அனந்தனுறங்கும் பாம்பணையான் பக்தி பதியுறை பணில முகத்திற்கெதிராய் கதிரவனெழும் கவின்திசையை கால் வைத்தளந்து முக்காதம் தொலைவிற் முந்திச்சென்று மூவேந்தர் முதல்வேந்தன் முற்றத்தில் ஆழ்வாரோதும் அரவணை மாலனுறங்கும் மாமண் குணக்கே மரகதன் மண்டியிடும் மலர்மகள் பிறப்பாம் மைதிலி மன்னன் பைம்பதி தன்னில் திருக்குடி ஆயன் செவ்வரமொத்த அருட்பெரும் அறிவாலயம் உள்ளில் அகவை பதினான்கு அடியெடுத்து வைத்த ஒன்பான் நிலையுள் உண்டு உறைவிடமுற்று நன்று பயின்றும் நாதன் தேறாது நலமற அவனவலம் கண்டேனங்கு
கண்ணும் கருத்துமின்றி காலிடறி கற்கி நிலை உயராது கலைமகளே கைவிட்டு ஊழ்வழி கெட்டு ஒருவருட.ம் பாழான விடலைப் பருவம் விரும்பாது வருந்தி திறவோன் திணறி தேவனை அழைத்தும் பயிலகம் சேர்க்க பாதிரி மறுத்தும் ஏளனம் செய்து எவரும் வெறுத்தும் பின்னரவனே பின்வாங்கி சென்று கவிழ்நத தலையுடன் கற்றே சிறந்து பிறந்த ஊருள் பெயர்ந்து வந்து பத்தாம் நிலையில் புத்தொளிவீசி பைம்பொன்னாகி பல்கலை முன்னம் பட்டயம் நாடி பாம்பரசன் பாவம் தீர்க்கும் பட்டணம் சேர்ந்து பயின்ற ஆண்டொரு மூன்றும் முடிந்தும் முடியா முடமுற்ற பருவம் முறிந்தும் படுமரம் போலே மின்னியல் உருவம் முடங்கிய பொறியின் படிவம் சிதைத்தான் .
பூமகள் முதல் மலராய் பொறையுடன் அமைவாளே. அவள் புத்தக அறிவோடு பட்டமே எட்டாமல் சித்தர்கள் அருளோடு சிட்டென வீட்டிற்குள் சிறப்புற விளங்கியே விளக்கொளியேற்றிடும் குலமகளாவாளே. அவள் அக்குடி ஒன்றியே ஐயனின் ஆருயிர் தொப்புள் கொடியினை தொடங்கிய பொற்கொடி துயருற்று வீழ்ந்ததும் துவளா தொண்டுடை புண்புரையோடிடும் புழுதியை அள்ளியே மெய்ப்பணியேற்பாளே. பின்னம் வருகின்ற பிறிதொரு பொன்மகள் ஆறிரண்டாண்டுகள் ஐயன் நினைவுடன் அவளுடல் பிரிந்தாலும் அவனுலகெழுந்ததும் அருளொடு அவனியில் புகழொளி பொழித்ததும் கனிக்கொடியிறக்கியே காலம் கடந்தவள் கண்ணீர் வலுவின்றி கைத்தலம் தருவாளே.
இவள் கண்ணன் கோவில் கவின்மிகு மாடத்தில் கருங்கொடியோன் கைபட்டு கற்பகம் கலங்கியே பேரொளி பாய்ந்ததும் பிறவிப்பயனொடு ஊழ்வினை அறிந்தபின் உத்தமன் காலடி ஒன்றியே சேர்ந்ததும் மறுப்பவர் பணிந்தபின் மரகதப் பொலிவுறும் மணமுடை பொன்னேட்டில் புகழ்வீசும் வரலாற்றில் இவள் முகம் நிலைகொளும் ஈடிலா திறனோடு பாராளும் வல்லமை பன்முகம் பெற்றிருப்பாள். வான்மகன் ஆளுமைக்கு இம்மேன்மகள் பாங்கொரு பெரும்பங்காற்றிடும் அருந்தொண்டின் மாட்சி சொலின் மிகையாகி போகாது மேதகு பண்புடன் மீண்டு வந்த வான்மரைக்கு இப்பூதலமே கைகூப்பி புகழ்பாடும் தினந்தோறும். அன்று மாயோனுடன் மலர்ந்து மற்றோர் காயம் மணந்து மாளாக்காயமுற்று மங்கைக்குரிய பூரா கடன் தீர்த்து பொன்வண்ணன் பூவிதழ் முத்தும் குழலோசை கேட்டு மீளா துயலுற்ற மென்மயிலுமிவளே.
அறிவுப்பண்ணையாம் அருட்பெரும் திருத்துவத் திண்ணையில் முன்னம் பயின்ற முறைப்பள்ளி தன்னில் அன்னம் போன்றே அறனுக்கஞ்சும் ஐயன் அறவே செய்யா பாவம் சுமந்து புறங்காட்டாது பூநெஞ்சுருக புண்பட்டொரு பெரும் பழியேற்பான். ஆங்கு ஆராயாது அந்தண ஆசான் அவைதனிலமர்ந்து பிரம்படி கொடுத்ததை பெற்ற நம் பெருமகன் கண்ணீர் பெருக கதறித்துடித்த அக்கருநாள் தந்த கனிவிலா துயரின் கடும் அலகை எவன் கண் அளக்காவிடினும் அக்கனல் கண்ணன் அளந்ததை கண்டு செப்பிட என்னிரு சவக்கண் அயர்ந்தென் அகக்கண்ணுற்றதை கண்டோரெவருளர் கதிர்வேலனுடன் உளேன். அன்றைய்யனுடன் பயின்ற அகமுறை விடம் கொண்ட அருங்கயமையின் சின்னமாய் கண்டேனொருவன் அன்று கர்த்தர் கனியுமுன்னம் கணவாய் புகுந்து கண்டம் வடக்கை கைவசப்படுத்திய பின்னம் கொண்டவனுக்கே கொடையளித்த குணக்கோன்
கொண்ட பெயரை கொண்டவனாவான். அவன் எம்மானேற்ற இதழ் கையேடொன்றின் கற்பகத் தமிழ் வரைந்த காகித ஓலையுள் பாரே மயங்கும் பாவையர்க்குரிய பங்கய குறியை பதமாய் குறிக்கும் அருவருப்புடைய அச்சொல்லெழுதி ஐயனின் தலைமேல் அபாண்டம் சுமத்தி அவ்வெய்யனளித்த வெட்கக்கேடுடை வேதனை செயலை ஊழ்வினையென்று உதறியதை உலகேயறியா. சிவனார் மானம் சீரழிந்தது போல செம்மகனிவனின் சீர்மலர் மனத்துள் மாளா வடுவாகி ஆலாய் விழுதூன்றி அங்கே நின்று நிலைத்து நெடுநாள் நினைவை சுட்டு வந்ததையறிந்தே வானவர் அழாது வருந்தி நெருடலுற்றதை யானறிந்திடத்தான் துஞ்சாது துதித்தபடி தூயாதி தூயவனை கெஞ்சாமல் கெஞ்சியே கீழுருண்டு மெய்சிவக்க மிஞ்சியதை மண்குடிக்க நஞ்சுண்ட நீல கண்டன் நாடறிய செய்யாது நானறிய செய்திடவே பஞ்சொத்த என் காதில் பதமாய் ஓதியதை பதமாக்கி சுரம் சேர்த்து பாடலாய் புறம் தந்தேன் பாவியர் அல்லாரறிவதற்கே.
பாகம் 133
அகிலத்தின் அன்பனென அருளாளன் பெயருற்று அறம் மாறா ஏழ்முனிக்குள் அவனொரு ஞானியுமாய் முடி துறந்த அரசனவன் முற்றுணர்ந்த முனிவனுமாய் அரம்பையுடன் அன்றிணைந்து அழகுடை பூமழலை அலரக் காரணமாய் மாகவிஞன் காவியத்தில் மறதியுறம் சாபமுற்ற நீள் கூந்தல் நேரிழைக்கு நெறிபிறழா தாதையவன் முன் வந்த முதுகுத்தண்டுவடம் சிதைந்த முடவனொருவன் முறை தவறி காமன் கண்ணாயிரம் கரமோங்கும் உலகுறைய உடன்பட்டும் உள்ளுறைய விடாது உம்பர்கோன் மறுத்ததனால் ஆரம்பையருலகமொன்றை அவனுக்காய் அமைத்ததொரு பிரமமுனியை பெயர் சொலாது நீயறிவாய் ! அம்மாமுனிவன் அருமகள் மறவன் குலம் தோன்றி மாலனுறங்கும் மண்டபம் மேற்கே மலைவாழை மணக்கும் மணவீடே சிறக்கும் மகிழ்மண் செழிக்கும் கதலி கண் சிமிட்டி கரை எல்லாம் சிரிக்கும் நுரை ததும்ப குடகுக் குய்யமீன்ற புனல் குழலி புறப்பட்டு பொற்புடை சிலம்புச் செல்வி பூத்த புகாரை தொடும் இடையில் பொங்கும் வளம் கொழித்து புன்னகைக்கும் பழம் பதிக்குள் தன் பொற்கரத்தால் அயலார் அகம் குளிர அன்னமூட்டி அன்றாடம் குடி நகர்த்தும் அருள் அம்பையின் கொற்றவன் வீழ்ந்தும் குணம் வீழாது
கொலுவுற்று கொள்கையால் தனிநின்று இருகண் மணிகளது இடர் நீக்கி இருள் தீண்டா திருக்கரம் தழுவும் சுடரொளியை வாதை தரும் வல்வினை வந்தணைத்திடாது ஈரிமையாய் அணைத்து இதயம் ஏற்கா இழியோர் நடுவினிலே பரிதியை ஈன்ற பைம்பொன்னன்னைக்கு இளமலர் குடத்துள் இட்ட விளக்காகி இறையருள் பெற்று இல்லறம் மலர்ந்திடுமே. முதல்மலர் வலுப்பெற்று வானவர் வரமுற்று வரைமுடியில் சுடராகி கோள்கள் அனைத்துமே கும்பிட்டு தலை வணங்கும்.
எம்கொற்றவன் கிழிக்கும் கோட்டினை இவன் மிறாது குறையொன்றுமில்லாது நிறை கீர்த்தி நில்லாது குவிந்திடவே நித்தம் நலம் செயவே அஞ்சா நெஞ்சுடை எம்மண்ணல் நெஞ்சுறைந்திடுவான். வானரசே வந்தமைக்கும் வல்லரசு விரிந்தபடி பரதத்தின் பக்கமெல்லாம் பன்னாடு இணைந்திடுமே. பைந்தமிழர் பண்பாடு பாரெல்லாம் ஒளிர்ந்திடுமே. அன்று மும்மை வடிவுடை மூலவர் தலைமேல் முள்முடி தாங்கி எம்மை மீட்க்க ஈனச்சிலுவையை இனிதாய் அவன் சுமக்க இறையென்றறியாது இருள்மாந்தர் கொக்கரிக்க மண்ணை விடுத்து மாலன் உலகுறைய உம்மையிற் உயிர்த்த உத்தம மைந்தன் பின்னம் உதித்தது இம்மையிற் இவனெழுமிடமது ஈரேழு உலகே வணங்கும் பெண் மயிலன்னையின் பேரருள் வேண்டி எண்டிசை ஏங்கும் எம்மானிறைவியாய் இலங்கும் இயற்கன்னிக்குமரியின் காலடி மலரே.
அணுவுக்குள் அணுவாகி அகிலத்தை அச்சுறுத்தும் ஆட்கொல்லி அரவம் கொன்று அங்கத்தின் ஆயுள் காக்க அனைவரும் உடன்பட்டும், அயராது ஆயுதமேந்தி ஆர்ப்பரிக்கும் வீரர்களை உதிரத்துள் உறையவிட்டு உயிர் காக்கும் பொருட்டுக்கு ஒருநாளும் உடன்படான். வேதைகளும் வாதைகளும் எவ்வீரனையும் வெற்றி கொள்ளும். வேந்தனவன் வேரறுக்க இங்கு யாவர்க்கும் வரமுல்லை. வீழ்த்தி இம்மண்ணில் சாய்க்க மும்மண்ணில் கூட எவருமில்லை.
பட்டம் வாங்காமல் பட்டயம் வாங்கிடத்தான் பத்தில் அவன் பெற்ற பாராட்டு பத்திரமாய் உற்ற மதிப்பெண்ணாலுற்ற விழுக்காடோ ஏழை இரட்டையராய் இணைத்து பொட்டு வைத்து இரண்டை வலம் பெற்று மொத்தம் மூன்றடுத்து முத்தும் எட்டுடனே ஒட்டும் ஆறிணைந்து உறவு நடத்தியதால் எளிதில் அவன் நுழைந்து எட்டிய கூடத்தில் எட்டுடை சுன்னத்தில் கற்றிட கதவுகளை கலைமகள் திறந்தபடி பெம்மான் அகனமர்ந்து பெருங்கனவுள் உறைந்தபடி வேந்தர்கள் எண்ணிக்கை வெளிப்படும் வருடம் வரை மூலத்தமிழ் விடுத்து முறையற்ற மொழியான பரங்கியர் வழியெடுத்து படாத பாடுபட்டு மொத்த ஆண்டுகளை முடித்து வெளிவந்தும் பெற்ற காகிதத்தின் பீடை பட்டியலில் பிறழுற்று போனதுதான் அனைத்து சித்தர்களில் அகத்தியர் நீங்கலாக கிட்டும் எண்ணம் வரும் கீழ் வீழ்ந்த இதழ்கள் கூட கிட்டாது உருகினாலும் ஐயன் தலைவிதியை அமரர் எழுதாது அவனே எழுதியதே.
சிலுவையுள் முளைவிட்டு சிவவழிதனை மனம் தொட்டு கொடுமனம் மாறாமல் குழுவுக்குள் புழுவாகி கொத்தும் பாம்பெனவே முற்றும் புதைந்திருந்து முகுந்தன் கொடி அறுக்க அரக்கருடனிருந்து அகங்கள் பல கவர்த்து சித்தன் தோலுடுத்தி சிறப்பாய் தெரிவானே. அவன் தென்திரை தொட்டபடி தீயோர் உற்றபடி பல்கலை பெற்றிருப்பான். பாடலை அள்ளித்தரும் அருள் பாக்களை போலியென்று என் சேய்களை திசை திருப்பி உறுபேய்களை உடனமர்த்தி மன நோய்க்கு மருந்தெடுக்கா நாய்களை துணையிருத்தி என் நாதனை நாறடித்து அவன் நாமத்தின் புகழ் கெடுப்பான். கற்கிக்குற்றவரை கையில் எடுத்தபடி மெய்யுள் விடமுறைந்து மீண்டும் மாற்றானாய் மன்னுயிர் மலரும் வரை மன்னவன் எழும் தோறும் மறுபடி பிறப்பமைப்பான். அவன் கண்ணன் இசைவோடு கயவன் பாத்திரத்தை முன்பும் எடுத்தது போல் இங்கும் பிறப்பெடுத்து இழிய நிதி குவித்து ஐயன் கையாலே அழியக்கண்டேனே.
பாகம் 134
.நெடுங்கொடிகள் நிமிர்ந்து நின்று நிலவுலகில் இடம் பிடிக்க நலம் புரியும் தினகரன் தெரிகின்ற திசையினிலே தெக்கணத் திருமகன் பிறப்பெடுத்த திருப்பதியும் தென்பட்டு வாகை சூடி வலம் வரும் பாகை சொல்லும் பத்திரத்தை பலரறிய யான் பதிப்பேன். அது ஏழுடனே ஏழிணைந்து இடும்புள்ளி அடுத்தமைய இரண்டடுத்து ஆறிணைந்து எட்டு தனை ஈன்றெடுத்து ஒன்றொடு உயிர் வாழ படுத்திருக்கும் பைங்கொடிதான் பருவம் பெற வாடை வரும் வான் திசையில் வாஞ்சையுடன் எட்டடுத்து பொட்டு வைத்து இரண்டு முறை இரண்டமைந்து ஐந்தடுத்து ஆறுறைந்து அங்கிருக்கும் சங்கமத்தில் அரவமுறை அரங்கநாதன் அரவமின்றி பிறப்பெடுப்பான். அவன் அர்த்தநாரி அரவணைப்பில் அன்பு மகனாயிருப்பானென சித்தனாகியானறிந்தே சிவபாதம் தாழ்பணிந்தேன். வரும் பாவம் அத்தனையும் வந்த இடம் தெரியாது சருகாகி பொசுங்கிவிடும். இச்சங்கதியை சொல்லிவிட்டேன்.
சாம்பல் பூசி மேம்படுவாய் சாம்பலாகும் மானிடனே. சாம்பசிவன் சாபம் பெற்றால் ஓம்பவொன்றுமுலகிலில்லை. உம்பர்கோனாய் ஒளிர்ந்தாலும் ஊனுடலும் உய்வதில்லை. பாம்பணிந்த பரமசிவன் பார்வைபடவில்லையெனில் பொன்னுலகே பொலிவிழந்து போகுமிடம் தெரியாது. மண்ணுடலே மக்கினாலும் மறுபடியும் மறுமை வந்து மாளாது கொடுமை தரும் என்பதாலே என்னுடலை பதியமிட்டு இதழ் மரையை விரிய விட்டு எங்கெங்கோ யான் பறப்பேன். எவ்வுலகும் எல்லை மீறி வெள்ளுடலில் தான் மிதப்பேன். விளைந்ததையும் விளைவதையும் விளக்கமுற அறிவதற்கே ஆண்டியாகி யான் அமர்ந்தேன். ஆதி சிவன் அடிபணிந்தேன்.
இரு கோழி ஒரு முட்டையிட்ட பின்னே அவ்விரு கோழி அடைகாக்க அமர்ந்தவுடன் வருங்குஞ்சு ஐந்தாகி வெளிவருமே. அவன் வரம் வாங்கி வையத்தை ஆண்டுகொள்ளும் அரிசங்கம் முழக்கமிட அதிரும் நாதம் அகிலமெல்லாம் அண்டமெல்லாம் பிளக்க கேட்டேன். ஆதவனே அவன் வாழ்க என்று சொல்லி அவனுக்கு ஒளி வழங்கி அகம் மகிழ்வான். நஞ்சரவில் துயில்கின்றோன் வருவானென்றும் நடன நாதன் நல்லருளால் விரிவானென்றும் நாகமென புற்றம் விட்டு முற்றம் வந்து நல்லுலகை சிகரம் தன்னில் நடுவானென்றும் நாக்குடன் திடம்பட பாடுகின்றேன். நாளாக நாளாக நம்முலகில் நனி தூயோர் அனைவரையும் மீட்க வந்த மேலான மேய்ப்பனென்று மேதினியே மெய்யறியும் பொய்யில்லை பூதலமே. அதன்முன்னே அண்டமோடு பிண்டமெல்லாம் அளவின்றி அழுதாலும் தொழுதாலும் அரவம் மேல் அறிதுயிலும் அழகெழிலன் யாரழுகை குரலையுமே கேட்கமாட்டான். எம் ஈசன் கூட அதற்கிரங்க மாட்டான். அக்கார்முகிலன் காற்தடத்தை கணித்தவாறு கடமையினை பூர்த்தி செய்தேன் பரம்பொருளே.
ஊற்றை இழியோன் யான் உள்ளுறைந்து ஒன்றுக்குமுதவாது உலகிற்குப் பளுவாய் காற்று நிறை கழிகாயமேற்று கதிர்முகச் சேற்றுக் கமலமன்ன செவ்வொளி சிரம் நீட்டி சேர்த்த நின் செவ்வருள் சாதித்து கண்டதென்ன. சாவு தீண்டா சாதனை ஏற்றதோர் மேதகு கற்கியின் மிதியடி தழுவாதென் தவவாழ்வே தகர்வதென்ன. தான்தோன்றி தனமாய் தழல் கணம் எனை தாளாது தாளித்து தினம் தினம் தயவற்று தகனம் செய்வதென்ன. இனியுமேனுன் கருணைக் கடலின் இம்மியும் எம்மேல் வீழாது எம்மானுக்கு கடன் படும் எண்ணமூன்றி நெடுவேள் நெய்யடி நெருடாது என் நெஞ்சடி நீடித்து நிலைப்பதென்ன. நெறிபிறழா நீதிமானவனை நேரில் தீண்டாது தினம் நொந்து நோயுற்று பாழாய் போகும்படிக்கு பாரில் பழிபிறப்பெடுத்து பாவம் சேர் இம்மையையும் மாய்ப்பேனோ இறையோனே இயம்பாயோ.
அரும்பணியமர்த்த ஆணையம் அமைத்த அரசுத் தேர்வினில் அதிகாரம் குவிந்த ஆய்வாளன் பணிக்கு மனுக்கள் இட்டு மதிப்பெண் பெற்று நேர்முகம் சென்று நேர்த்தியாய் நின்றும் ஏமாற்றமடைந்து ஏறாது இறங்கி எம்மானிருந்த காத்திருப்போரில் கால் காசு பயனும் காணாது சோர்ந்து கைவிரல் பத்தின் கடையில் பூத்தும் பூப்போலுதிர்ந்து போனான் புன்னகையிழந்த பொன்மகன் அவனோ இதயத்துள் அழுததை ஈசனே இயம்ப என் மார்பு வலித்ததை மன்னுயிரறியா மாதவன் உள்வலி உணர்ந்து என்னுயிர் துடித்ததை எவரறிவாரோ. அது தீயினை அணைக்கும் தீரர்கள் துறையென்றும் எம் தென்னக திலகத்தின் திறமையை ஏற்காது மடைமை செய்தது மடியா மன்னனின் மாற்றான் ஒருவனின் மட்டற்ற சதியென அறியாது அவனும் அகன்று போனதை அடியேனறிந்து அனைவருமறிய அருள்வாக்குரைத்தேன்.
பாகம் 135
வெட்டுக்காயம் வீழ்ந்திடினும் வீரிய ஒளடதம் வேண்டாது விரைவிலாறும் அவன் காயம். நட்டப்படுத்தும் பிணிகளேதும் நாதன் மேனியிலொட்டாத நறுங்காயம் அவன் காயம். பாகு நோய்தான் பதம் பார்க்கா பரமனங்கம் அவனங்கம். பரிதியின் பண்புப்பெயர் கொண்டு பாயும் குருதி நலம் என்று உறுதியோடு உரைக்கின்றேன். உமையாள் பாகன் தயவாலே.
உலகாள்வானுதிரம் உலகாண்டோர் உறுமொழியுற்று ஒன்றடுத்தைந்தாம் ஒகரத்திற்கொத்த உயற்றமிழ் உயிரொற்றையாய் உடன்பட்டொலிக்க அம்முதலெழுத்துருப்பெற்றதன் பின்னிற்றல் நேர்மறையாய் நிலைக்க கண்ணால் கற்றது நெற்றிக்கண்ணுடை நீலகண்டனிடமென நெஞ்சம் நிமிர்ந்தி நீதிமானிவன் குருதி குறித்து வரையுறுதி வாக்களித்து வான்மீது ஆணையிட்டேன்.
எம்மானிரு விழியில் இடவிழியின் நோக்கு தூரம் நோக்கினது இரண்டிருக்கும். வருமவன் வலவிழி தான் வைத்த புள்ளி வலமுறையும் இரண்டுடன் ஐந்திருந்து எழில் நோக்கிலது கழிய எஞ்சி வந்து மிஞ்சியதை எடுத்துக்கொண்டு ஏடுகளை படித்தலில் பிழையமைக்கும்.
மாசிலா மனங்கொண்டான் தன் மண்டைக்கு மழித்தலிரண்டு கொண்டானொன்று கொங்கையூட்டி குவலயம் உலவவிட்டு கொழிக்கும் மெய்க்குரமிட்டு மேனியிற் மிளிர மெய்வரமிட்ட மேதகு மாதுக்கொன்று கண்ணீர் கரும்பிறை கடந்த வளர்மதி மூன்றில் முடியிழப்பானென்றும் மற்றொன்று மாதாவின் சூலகத்துள் மகரந்தச் சாறிறக்கி மன்னவனை விளையவிட்டு மண்ணிறக்கி தோளில் தூக்கியும் துவளா தாதைக்கொன்று கடன் படுவானதை அகிலத்தார் ஆண்டுக்கொருமுறை ஆடி அடங்கும் தம் அமரர்க்கு செய்து அருள் பெறும் கரும்பிறை காலைப்பொழுதன்றும் பின் காலம் நாற்பதை கடந்து கருமம் அன்னைக்குரியதாய் அண்ணலே புரிவானென்றும் பைந்திங்கள் பொதிந்த பன்னீர் குடமுள்ளில் பாற்கடலென படுத்திருந்த பரந்தாமன் உயிர் கொடி ஒடிந்து விழும் நேரமதை ஒளிவிரலால் யானளந்தேன். உமையாளும் உடனிருந்தாள்.
ஒற்றை முழிக்குள்ளே உலகின் அரசுகளை நிழல்கள் இயக்குவதை நேரில் காணாது நெஞ்சமும் உணராது. அதன் கற்றை கைவிரல்கள் ஒன்றில் உருப்பெற்று மூன்றில் முடிவுற்று மொத்தம் கூட்டுதற்கு நான்காய் இறுதியுறும் அவ்விரட்டை இலக்கத்தில் இருந்து விரிந்தபடி படர்ந்து பரந்திருக்கும். அதன் பாதக விழுதுகளின் பாழகம் முழுவதுமே ஆலகாலமுறை அரக்க வடிவெடுத்து அவனியில் மறைந்தொழுகும். கொற்றவரனைவரது குடுமிகளனைத்தையுமே அதன் கொடும்பிடி கொண்டுவிடும். அது கண்களில் வீழாமல் அதன் கதவுகள் திறவாமல் கண்டது அனைத்தையுமே கைக்குள் அடக்கிவிடும். அது கற்கியின் குருதியினை கயவர்கள் துணையாலே அவன் கதிர்விடும் முன்னாலே ஆய்வக அறிவுடனே ஆய்ந்தவர் முடிவாலே அவன் மேதகு மரபினது மெய்யுடை ரேகைகளை நாகங்கள் பிணைந்திருந்து நற்கலை புரிந்ததனை நூதன நுட்பமுடன் நாதனுக்கெதிரான நஞ்சகர் அறிவாரே.
மாடுகள் அடித்துண்ணும் மாமலை நிலத்தவரை நாடிக் குழுவமைத்து அத்தீயோர் திட்டமிட்டும் தேடுதல் பல செய்து தீரனை கண்டறிவார். ஆடும் அவர் கொட்டம் அடங்கும் நாள் வருமே. அந்தண அறிவிலிகள் பலர் அடங்குவர் இவருடனே. காலங்கள் வந்ததுமே கலங்கிய விலங்குகளின் ஐயமும் தெளிந்துவிட அவன் அரவில் அறிதுயில்வோன் என்ற ஆரூடம் உறுதிபட அவன் உயிரை புறம் எடுக்க உதவிக்கு அரசர்களை ஒருமித்து அழைப்பு விட்டும் அவன் அலையும் காலடிகள் அனைத்தையும் பதிவிடவே நிலத்தில் புதைந்திடுமாம் நித்தம் தகடுகளே. நாலாபுறமெங்கும் நங்கையை தூண்டிவிட்டு கொங்கையை கூராக்கி கொண்ட தேன் பொறியுள் கூடுவானென்றெண்ணி அமைத்த சதிவலைகள் அறுந்து போயிடுமே. ஊழிக்காலத்தில்
அவன் ஊழ்வினை யறிந்ததனால் காளிக் கொற்றவைக்கு கன்னியை கொலையிட்டு குருதியால் குளிக்க விட்டு அவன் கருமத்தை திசை திருப்பி ஒருமித்தழிப்பதற்கு ஊதியப் பொன்பொருளை ஒருவாறு விதைத்தபடி அவன் போக்கிடம் எல்லாமும் புல்லர்கள் கவனம் வைக்க இதை யாவருமுணராமல் இமையெதும் திறவாமல் எவரும் அறிவதில்லை. அதை உமையவள் உள்வாங்கி எம் உள்விழிக்கூட்டியதால்
இங்கு எமையொத்த பல முனிகள் இருப்பிடமறிவார்கள். ஐயன் நகரத்தில் அவர்கள் கையாலே அள்ளி விதைத்தபடி ஆடகம் நிறைத்திருப்பார். அதனால் பெரும்பாலோர் கனகக் குளியலிட்டு கடினவாழ்வில்லா செழுமை கண்டிடுவர். வீடு அங்குறையார் வீடு இங்குறைய வேண்டிய பொன்னளந்து வெய்யர்க்குதவிடவே விண்டுவின் விதி மாற்றி வேரொடு மாத்துவிட மனப்பால் குடித்திடுவர். பூனைகள் பெரும்பாலும் பொல்லா பாதகரின் காலடி வீழ்ந்தபடி அவர் மிதியடி முத்தாடி மெய்யை பதப்படுத்தி மேனியில் பொய்யுடுத்தி வெய்யரினத்திற்கு வேண்டியே வளைந்து நிற்கும்.
வாய்மை காத்து நிற்கும் வரமதை பெற்றதனால் தாய்மை தரமுற்ற தகையோர் துதிக்கின்ற நாதன் விதி தன்னை நன்கு அறிந்தவனாய் யானே எனையமைத்தேன். மதியே மழுங்கிவிட மாண்பே சுருங்கிவிட வெஞ்சினம் கொண்டவரே வீண் சதி வகுத்ததனால் சாம்பலுள் சங்கமிக்கும் சாவுக்குள் விழுகின்ற விதியினை வகுத்தவனே வேந்தர் வேந்தனான வெண்டலை வேந்தனவன் விழியால் மொழிகின்றான். அதை மொழிவேன் தெளிவாயே. குதிரை பாதி விலை கொண்ட பாதர்கள் மிதிலை மாப்பிளையின் மேனியை மாய்த்திடவே புதரருள் புதைந்திருந்து அரியமுற்படுவர். அறனார் அருகிருக்க அனைத்தும் அறிந்தவனாய் அறிவை முதலாக்கி திறனாய் சதிவலையை தீரன் சிதைத்திடவே சிவனார் சினமோங்க அவன் தீயோர் திகைத்தபடி தீவினை தின்றபடி தீக்கிரையாவாரே.
அரவம் பொதிந்தொளிரும் அர்த்தநாரி இவன் அல்லல் முழுமையுமே அறவே முறியடிப்பான். மாயோன் மறுபிறப்பை மண்ணில் மாய்ப்பதற்கும் நாயோர் நரிகளுடன் பேயோர் பலர் எழுவர். தென்றல் வானெழுந்து பொங்கும் எரிமலையை எங்கெனும் அணைத்ததுண்டா? எங்கள் இமயத்தின் சிங்க இதயத்தை சிதைக்க துணிவுள்ள அங்கம் ஒன்று கூட அவனியிலரும்பவில்லை. அமரரினம் கூட அரங்கனுக்கு துணையன்றி அங்கும் எதிர்ப்பில்லை. கொலையிற் தேர்ந்தவனோ குருவின் வேடமிட்டு கொங்கில் குடியமர்வானவன் மலைக்கு மலையடி தன் மனையடியாக்கி மாதங்கம் சிதைத்து சிலைக்கு பெருஞ்சிலை சிவன் மெய் பாதியை தன்மெய்சிலை போலமைப்பான்.
அவன் செங்கடலோரத்தில் சிறுதேசம் கண்டவர் சீழ்மனங்கொண்டவர் ஒருவிழியிழந்து ஒளிந்திருக்கும் உருவம் பூண்டு உலகத்தை ஆளும் ஓந்தியினத்தவருடன் ஒத்துழைத்து உத்தமன் எம்மான் உயர் பிறப்பறிந்து உயிரெடுக்க துடித்திடுவான். கண்ணில் கருணை காணா வடக்கின் வாதையர் மதவெறிசாதியர் வட்டியிற் வணிகம் கண்ட வஞ்சக கபோதியருடன் வன்கரம் பிணைத்து கண்ணிகள் பல புதைத்து மண்ணில் தோற்ற மாற்றானாகி மன்னிப்பருளா மறுமையை ஈட்டி கண்ணீர் பெருக்கி கதறித்துடித்து கழிவுடல் மாய்ப்பான். ஆட்ட இறுதியில் அண்ணலிவனே கொங்கு வனம் மீட்டு கூர்தந்தத்து களபக்காரினம் காத்து கணநாதனருள்பெறுவான்.
பாகம் 136
நீதிவழுவா நேர் சட்டம் யாத்து நெறியற்று குவித்த நிதியரை நிமிர்த்தும் நடுவடம் நொறுங்கும் நல்லாட்சி நடுவான். ஆதலால் நாணயம் கெட்ட நரகுறை எச்சத்தின் இன்னல் பெருகும் ஏழ்மையிலடங்கும். மிச்சம் மீதி மிகை பலபுரிந்த மேற்குடி பூத்த பாழ் பதரெல்லாம் பீதியில் உறைந்து பெருங்கடல் கடந்து ஆழியில் மிதக்கும் அம்மரை நிலத்தில் அல்லல்பட்டு அங்கே புதையும் அற நீதி கண்டு அம்மையப்பர் அகமகிழ்வாரே. நெல்லையப்பர் நிலம் தொட்ட நீதி நெடுவரை தாண்டி இமயம் பரந்து துருவம் கடந்து சுழற்சியுற்று துஞ்சா குமரித்தாயடி தொழுதே துரையவன் பூமியில் மறைமலர் அலரும் இறைநிலமாகி மடியா மன்னவன் மணிமுடியேற்று மன்னுயிர் நலமே இதை யறியாயோ ! மன்னர் மன்னனின் புகழறியாயோ !
இழித் தாயின் புதல்வரெலாம் இவ்வுலகில் ஒருங்கிணைந்து உமையன்னை ஒளி பாய்ச்சும் ஒப்பறிய நன்மகன ஒழித்துகட்டும் நோக்கமெல்லாம் ஒரு நொடியில் உருக்குலையும். ஊர்க்குருவி பறந்தாலும் உயர் பருந்தை நெருங்காது. ஓநாய்கள் உறு புலியை ஒருநாளும் வெல்லாது. உருகி வரும் உடைவாளும் ஒரு கணத்தில் இவன் முன்னம் செயலிழக்க செய்யும் வரம் செவ்வரமாய் அளித்தது தான் சீர்மதியை செஞ்சடை மேல் சிகையலங்காரமிட்ட ஆற்றுச்சூடியென்று அறம்பாடி புறம்பாடி அகமகிழ்ந்தேன் ஆருயிரே.
இலமென்று இயம்பா எம்மன்னை நிலம்தன்னை இனமென்றும் குலமென்றும் ஏற்காது வளமருளும் வரம்தன்னை வல்லூறாய் வாழ்ந்தொருவன் வகை வகையாய் கூறு போட்டு வன்நிதி குவித்த வண்ணம் வெய்யனொருவன் விளைந்து நெய்தல் நெடுநகரில் நேர்மைக்கெதிராய் நிறை பொன்குவிப்பான். அந்நாய்மகனை நாடியே நன்னெறி வாய்மைச் சின்னமாம் வான் மகன் வசப்பட்டும் வரம்பு மீறியே தன் வாக்கை விற்றும் வளங்காணா வறியோன் வாழ்வை பெற்றும் வேலையளித்த அவ்வீண்மகன் எம் வேலவன் இம்மையை தன் வெற்றி கொடி கட்ட வெகுவாய் உட்படுத்தி உற்ற ஊதியமளிக்காது உருஞ்சுவானவன் உதிரம்.
இதைக் கற்றறிந்த காஞ்சனப்புதல்வனோ கடுங்கோபமுற்ற உச்ச வெப்பத்தால் பெற்ற பணியை பீடையென உதறிடத் துணிந்ததை அறிந்த ஆண்டை இழியோன் ஆணவத்திமிரில் ஐயனை அழைத்து அறைக்குள் அடைத்து அறையாது மிரட்டி அரை நாளவன் அலுவல் சிறைக்குள்ளிட்டு சீறிச் சினத்தும் சிதையா சிங்கத்தின் வீரியம் கண்டு வியந்த கயவன் வெளியே விடவே ஊதியமின்றி உத்தமன் துறந்தது உதவாப் பணியென்றறிவேனது நிகழ்ந்தது ஐயன் அகவை மூன்றடுத்த மூன்றெனவமையும். அம்மூடனாடிய முன்வினைப்பயனாய் ஆடகம் குவித்த அற்ப வாழ்வில் தேடியதென்னவோ தீநோய் தின்றவன் தெருவில் மடிந்தது ஆதிசிவனின் அளப்பரிய சினமென அவ் வோநாய் பெற்ற ஊழ்வினை பற்றிய உண்மையுரைத்து ஆண்மகன் அவலத்தை இங்கு அருள் வாக்கு வடிவில் அழுதே சொன்னேன்.
கருணை மாந்தரின் கதறலோசையும் பெருமை பெண்டிரின் பெருந்துயரழுகையும் கடமை மாந்தரின் கடும் இடர்பாடுமே கற்கிக்கழைப்பு விடுப்பதாய் விளையுமோ ? வேந்தன் கெடுத்து வெய்யர் பெருத்து வீணர் கொழுத்து விளையும் மண்ணில் பொற்பதம் தூக்கி பொறிகனல் பறக்க நர்த்தகம் புரியும் நாகர் நாதனை நாளும் நினைந்து சித்தர் பலரும் சிதையிலெரிய கற்கியை இழுப்பது கயவரின் அழைப்பென அழற்கண் திறந்து அம்பையை கேட்டு அருள்வாக்குரைத்தேன்.
உள்ளங்கைகளுள் ஒளிந்ததொரு உண்மையை உன்னிடமே சொல்வேனதை ஊரறிய கேளடியோ. அங்கு பதிணெண் முத்திரைகள் பதிந்ததொரு இரகசியத்தை பளிச்செனவே போட்டுடைத்தேன் பரந்தாமன் கைதனிலே பாரடியோ. அறுமத மயல்மதமென் றில்லாது அனைத்தையும் அரவணைத்து அறம் வளர்த்து அனைவருள்ளி லிடம்பிடித்து அங்கவன் அஞ்சனாய் அமர்வானென ஆரிடம் சொல்வேனடி அம்பையே ! இதைச் சொல்ல யான் யாரிடம் செல்வேனடி ! அவனை யாவரும் வெல்லாரடி !
முக்கடலூரான் முத்தமிழ் ஏறான் முண்டக மேனியில் அம்மூவரும் உள்ளாரடி . இதையுணரா மூடரும் அவனியில் உள்ளாரடி ! கண்கள் திறவா கவிஞரும் கயவரும் கற்கிக்குற்ற நேர்கதை மறைத்து நியதியை ஏய்ப்பதில் கருணையே கொள்ளாரடி ! ஆருடம் கணிப்போரும் அருள்வாக்குரைப் போரும் வான்கணிதம் வகுத்து வயிறார புசிப்போரும் வஞ்சக நோக்குடை வெஞ்சின பகைவரால் வேண்டும் பொன்பொருள் வேண்டியே பெற்றதும் வேண்டுமென்றே
எம் வேந்தனை தூண்டி சோர்த்தவன் ஆக்கிச் சுடரொளி அணைக்க துடிக்கும் துச்சர்கள் வகுத்த துட்ட வினையெலாம் தொலைந்து போகும் பொய்யர் வாக்கென போதித்த பெருமை மெய்யில் பாதியை மேதகு மங்கைக்கு மேம்பட்டளித்த ஆறூர்ச்சடையோன் அடிதனை தொழுது மேலூர் வீட்டை மேவி அடைந்து ஆரூர் நாதன் அன்பில் மலர்ந்து அம்மை உமையின் அருமடி மீது அடியேனமர்ந்து உரிமை கொள்வதை உமையே மறுக்காளடி.
பாகம் 137
அரியென்றும் சிவனென்றும் அழுக்காறு சினமுற்று அழுக்குறு அகம் பெற்று தெளிவற்ற நிலை கெட்டு தேறாதோர் ஆன்மாவால் ஆறாது போராடும் அறிவற்ற அற்பர்களே. அரியென்றால் என்னென்று உமியொப்ப உமையரசி இமைபோலே காக்கின்ற அரிசியையே கேளுங்கள். அரிசிவத்தை அறிவுறுத்த ஆன்மீக ஆர்வலர்கள் அதனாலே புதிரமைத்து அரிசியென்று பதம் குறுக்கி அரவணிந்தோன் அரவுறைந்தோன் இருவரையும் இணக்கமுற எளிதாக குறிப்பதற்கே சிறு திருத்தம் செய்ததனை செஞ்சடையோன் ஒத்துக்கொண்டான். சிவராமன் சேதுவிற் சிறிதளவும் பேதமின்றி உளமாற ஓதியே ஊழ்வினையை அறுத்துக் கொண்ட உண்மைதனை உணராது உறஙகுகின்ற உள் மனமே உன் சிந்தையிலே சீழ்பிடிக்க சேவையினை பாழ்படுத்த சிவ நிந்தையினை மேம்படுத்தி அரி வந்தனையை செய்வதனால் ஆழி வண்ணன் அகம் மகிழான். அர்த்தநாரி மனம் தளரான். அமரர் முதல் அடிமை வரை அனைத்துலகும் ஏற்காது நரகுறையும் வழியின்றி நமன் கூட ஏற்காது நாய் மகனாய் பிறப்பெடுத்து நடுத்தெருவில் கல்லடியை நாளெல்லாம் வாங்கிடுவாய்.
அறிவுக்கு விருந்தாகும் அறிவியலை கூறுகின்றேன். உன் ஆணவத்தை செருப்பாலே அடித்த வண்ணம் சாடுகின்றேன். அணுக்குள் கருவாகி அங்குறைந்த அரவணிந்தான் அம்மையப்பனாயுறைந்தான். அவனிருபால் உடலெடுத்து இரண்டுமுற்றவனாய் இருந்து இவ்வண்டம் முதல் பிண்டம் வரை அனைத்துலகும் நிறைந்தான். இணக்கமுறும் இயல்போடு அந்திவண்ணன் அருகமைய ஆழிவண்ணன் அரவணை மேல் அறிதுயின்று ஆண்மையோங்க அண்டமெலாம் ஒளிர்ந்தான். அரிசிவனார் அருள்கொழிக்கும் அணுக்கதிர் கருவறையை ஈரிரண்டு முகமெடுத்தோன் ஈசனுடன் இணையாது எம்மால் எழுப்பிய எழில்மரை மீதமர்ந்து உந்திக் கொடியுறைந்து ஒளிர்முகங்காட்டி நீள்வட்ட நெறிவகுத்து நிற்காது விசையெடுத்து நில்லாது நேரெதிராய் நறுநங்கை இயல்புற்று நன்மனதை பறிகொடுத்து திருமாலை மையமிட்டு திரள் திறன் பல பெற்று இமைப்பொழுது இயக்கத்தில் ஈசனொளி வீச்சினையும் எள்ளளவும் மிஞ்சாத விழுக்காட்டு வேகத்தை வெல்லாத ஆரத்தில் விண்டுவின் விரலாழி விசையொப்ப விடிய விடிய சுழல்வானே. அரவமின்றி அங்குறைந்த அரவேந்தி ஆர்ப்பரித்தால் அணுவுக்குள் அழல் வெடித்து அத்தனையும் சுட்டெரித்து சாம்பல் கூட மிஞ்சாமல் சாம்பசிவன் சபிப்பானே. ஆதிசிவன் முன்தோன்றி அணுவுறைந்த காரணத்தால் மண்ணுயிர்க்குள் மன்னுயிராய் மாதவனே பிறப்பெடுத்தான். மன்னுயிரே அறியாயோ.
மும்மண்டலம் இணைந்தபடி முற்காலம் நமை ஆண்டபடி எம்மண்டலமும் கீழடக்கி இருமாப்பு கொண்டதோர் இகரத்தை இங்கு வைத்து ஏழெழுத்தை அங்கு வைத்து எழிலரசி ஆளுமைக்கோர் அகிலாண்ட நாடொன்று அன்னை பரதத்தின் வடமேற்கே ஆறேழு காதத்தை அப்படியே பெருக்கி வைத்து அதன் அருகே முட்டையிட்டு அங்கு வரும் விடைக்கப்பால் ஆழியை உடுத்தவண்ணம் அதன் நடுவே நிலம் மிதக்கும் அவ்வல்லரசு நாட்டுடன் வாழ விருப்பமற்று வலுசரடை அறுத்துவிட்டு மெல்லரசு பிரிந்திடுமே. அங்கு மொத்தமாயமைந்த அம்முதுபெரும் பெயருக்கு முழு உரிமை தமக்கென்றே தகரராறு செய்தவண்ணம் பல்வேறு பூசல் எழும். பாராண்ட புகழ்கொண்ட பரங்கியர் நிலத்துள் எழும் பல்வித தொடர் பிணக்கால் அவிழ்ந்து போகும் சிற்றரசால் அங்கு உதிக்குமொரு புதுவழக்கு. பன்னிரு எழுத்துடன் பாராண்ட பழம் பெயர் எமக்கு என்று பிரிவினையர் உரிமை கோர பெரும்பதட்டம் அங்கு தோன்ற அற நிலத்து அன்பு மகன் அருந்தீர்வு ஒன்று சொல்லி அம்முரண்பாட்டை முறையாக கையாண்டு நம் மறைநாட்டான் அம்மண்ணிற்கும் அருமை செய்து நம்மண்ணிற்கும் பெருமை செய்து அங்கனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி அவர்களையும் அரவணைப்பான் நம் மன்னாதி மன்னனவன் மண்ணுயிரே அறியாயோ.
கற்கியின் சாபம் பெற்ற கடும்பாலை கிணறுகளெல்லாம் கொடையள்ளி கொட்டுமாங்கே கனகக்கனியூறுகின்ற கழனிகளை கனலுண்ணுமென்று காலக்கணிதனாய் யானும் கணித்ததில் கருத்துண்டு. காரணம் என்னவென்று கந்தவேள் பகிர்ந்தொன்றை காதோடு பகருகின்றேன். அது பரியோட நரியோட பாதகர்கள் தேரோட பொன்னீர் விரயமாகி பெம்மானை வட்டமிட்டு பீதியில் அச்சுறுத்த வீணர்க்கு உதவியே வினையேற்று ஆதரித்த ஆழ்கிணறு அனைத்துமே அழலேற்று எரிகவென்று ஆழி வண்ணன் அகம் குமுறி அழுத வண்ணம் சாபமிட்டான். ஆகவே தான் அனல் தேவன் அதை அழிக்க ஆர்ப்பரித்து உடன்பட்டானென யானும் உலகறிய உரைக்க வந்தேன் உத்தமனே கேளாயோ.
அருந்தமிழ் அறநிலத்துள் அடிவைத்து அன்பர்களின் அகம் சிதைப்பின் அவனாளும் ஆதவனாயினும் அலறியே உயிரிழப்பான். மாதவனே பிறப்பெடுத்து மண்ணாள வருவதனால் மாமலை கண்டத்துள் மறம் மறந்த மன்னவரும் மன்றாடி துடி துடிக்க செருபகைவர் சிரமிழக்கும் சீர்மிகு மறுமலர்ச்சி செவ்வேளால் சிறப்புறவே பரமதிர பாரதிர ஊன் உதிரம் உருகியோட சிவன் மீதும் மகன் மீதும் செயலாற்றும் எமன் மீதும் தவமோங்க ஆணையிட்டேன்.
பாகம் 138
களப முகத்தானருள் கனிவுடை கமல முகத்தான் கற்கிக்கு கனம் உண்டென்றறியா கயவர் கூட்டம் களிறு நோயுண்டாக்கிடவே கடும் யாகம் வளர்த்தும் கரும்பேய்களை தொடுத்தும் பூமான் பொற்பதம் பதியுமிடத்தில் புதைத்த சுருள்தகடு மறைத்தும் வெய்யர் பெற்றது விளையா வெற்றியாயினும் வேந்தன் பொற்றாள் நோயுற்று போராடி வற்றா நலமுடன் வந்த வரலாற்றுக்கு உற்றான் இவனெனினும் உய்ய வைத்தது உமையொருபாகன் தலைமகனென்ற உண்மைதனை உலகத்தாருணரும் வண்ணம் உருவாகும் அருள்வாக்காய் உரைக்கின்றேன் பரம்பொருளே.
அஞ்சன் அவதாரமிவன் முன் அரவம் படமெடாததை அறியவே எந்தன் எண்குணனிட.ம் இரந்து பெற்றேன். இம்மந்தணம் எவரும் அறியாததாய் எங்கும் கிடையாதாய் உனக்கு பகர்வேனிதை. வஞ்சிக்கொடி வள்ளியை சூடிய வல்வேலவன் வான்மயில் வலக்கையுள் உருவம் பொறித்து உவகையுற்று வாழும் வரமுடை புள்போல் வாழ்த்தும். இடமெய்யுடை எம்மான் கமலக்கைத்தலத்துள் எழில்மாலின் கருடாழ்வாளுறைந்து கண் கவர்ந்தருள்வார் . இருபுள் இருகரமாய் அமர்ந்து இதயபூர்வம் அருள் பாலிக்க பொல்லரவுகள் அறியாது கூட பொன்மகன் திசைக்கு அறவே தன் தலை காட்டாது அறனே.
மரித்தும் மரியாது உயிர்த்தும் மறைப்புகழெடுத்தும் மறைந்தும் இனி மறுமுறை மாமிசம் தரித்தும் மரியாள் மகன் வரானென்று மறுமதம் மறுதலிக்கும். மணக்கா புலாலுடல் மன்னுயிருர்க்கே எனின் புழுக்கா பொன்னுடல் எம்போல் பூமுனிக்கே ஆயின் பொன்னுடலெடுத்து புருடோத்தமனாய் வெடித்து பொல்லார் தலை குவிப்பானென்றும் மன்னர் மன்னனாய் மாட்சியுற்றாட்சி புரிவானென்றும் அரலை மூன்றின் அழகுக்கரையில் அரிவையரோதும் அன்னைகுமரியை ஆறாது போற்றி அருள் வாக்குறுதியாக்கி சேயாம் அவனை சீருற வாழ்த்தி சிவனார் சேவடி வணங்கி சேதிசொன்னேன்.
கோள்கள் வலுவிழந்து கொற்றவரை கொல்வதற்கு குற்றேவல் பலபுரியும். பின் மற்றவரை என் சொல்வேன். மன்னுயிரே இது மயானம் காக்கும் மதிசூடன் சாபமமென எண்ணுயிரே. மன்னவனிவனின்றி மறுமை தரும் இறை உண்டோ. தென்னவனிவன் திறனுக்கன்றி திருமுடி தான் எவர்க்குண்டோ. தீயோரை தீண்டாது திமிரோடு போவதற்கு எமனுக்கு வலுவுண்டோ.
முன்னவராயிரமாயிரம் பேர் முறை தவறி பொருள் குவித்து முத்தலைமுறைக்கும் வளம் அமைத்ததனை எம்மவன் இனி நூறாயிரம் தீரருடன் இடியிறக்கி ஏய்த்த வளம் பறித்து நம்மவன் போல் நலம்படைப்பார் பரம்பொருளே.
வாசலுக்கு வலம் வந்து வன்வீடமைத்து வஞ்சமுடை பூனைகளே வரிசை நின்று நேசனின் தலை கொய்ய நிதியளித்த நஞ்சருக்கு நிறை நன்றி செலுத்திடவே வேந்தன் வீட்டிற்கு வெளிப்புறமெங்கும் வேலிகள் வேய்ந்து வீணர்கள் வீடமைத்து விடியும் வரை விழித்திருக்கும் மாந்தர் பொன் பெற்று மனப்பூ கண்கெட்டு மாசுறுபண்புற்று மரணம் முன் பயன் பெற்று வீதி தோறும் வேடர் அயராது விழித்திருக்க அவன் அருமனை அருகே ஆந்தையர் புகுந்த அடுக்கு மாடத்துள் பீலிக்கண்ணுடன் பிடாரிகள் பின்னும் நோக்க நீதியுரைக்கா நீலிப்பூனைகள் நிறைவேள்வி வளர்க்கும் விடமுறை மலை மண் மாற்றாருடன் பலமுறை அவன் மலர் பாதம் முடக்கப்பட்ட பாடனைத்தும் பகலவன் முன் விழுந்த பனித்துளி போல் அகலுமே.
இச்சிறுத்தை சக்தியுற சிவனாரருளுவாரென சிரத்தை பணிந்து சேதி அறிந்தேன். இக்கதிர் கமலம் இதழ் விடா வண்ணம் கடுங்கயவர் இயக்கும் அவலம் இவ்வுலகில் எவர்க்கும் வாய்க்கா இழிவாழ்க்கை கொண்டோன் எவனோ அவனே எவரும் அருகில் எளிதில் நெருங்கயியலா நெருப்பு குஞ்சென அடியேனெளிதாய் அருகே அமர்ந்து அவனிடர் கண்டேன் உடனே அவனுடன் இருப்பது அரனார் என ஆரும் அறியாததை ஆருடம் சொல்வேன். அற்பர் உணராததை அம்மையப்பன் அருளால் அமைத்த அவிழா புதிரிதை அவிழ்க்கும் பேற்றை அவனே அடைவானதை சிவனே என் சிலேடையை சீருற உடைத்து செவ்வேளறிய சிந்தை திறப்பான். இறையோன் இறுதி செய்து எம்மானருகே இணைபிரியாதிருக்க எவனுமங்கு எள்ளளவும் இன்னா செய்ய இயலான். இமைப்பொழுதும் காக்கின்ற உமையின் பிடி மீறி உயிரகன்றுதான் போகுமோ ? அவ்வுமையோன் உறுதி செய்து ஒருவனின் உயிரகற்ற துணிந்தால் ஈரேழுலகும் எழுந்து வந்து ஈசனுக்கெதிர் நின்று காத்தல் இயலாதென்பேன். இயலாததையும் எளிதாய் முடிப்பான் இமயம் முடிந்து இதயமுறைந்த எழில்சடையோனென ஏனறியாய் அறனே .
பாகம் 139
பாரறிய வானமதில் பார்ப்போர் கண் கவர படியளந்தோன் கோள் மகனின் நிறமிட்டு கொடியொன்று கையிரண்டை விரித்தபடி கோலமுற்று மிளிருமதை குல மகளே கோடி இன்பமுற்று கொண்டாடி மகிழ்ந்தாலும் அது கால்பிடித்த கதையொரு கண்ணீர் விதைக்க வருமென காதோரம் சொல்வேன் கேள். அது பல்லிடர் படமெடுத்து பன்னகம் தலைவிரித்தாடிடவே பன்னாடுகள் தீக்குளிக்க கூற்றுவன் எச்சரிக்கும் கூக்குரலாய் அமையும். மண்மகள் மடி மீது மகவெனவே தவழும் மரகதக் கிள்ளையொப்ப பைம்பிள்ளைகளை தகனமாக்கும் செந்தழல் செங்கொடியேற்றும். பின் சீதளம் தீண்ட திங்கள் பலவாகும் என்று திங்களை திருமுடியிற் சூடி திருவாசகம் பெற்றோன் எங்களுக்கின்னா செய்யாது இருவிழிதன்னை இமை காப்பதாய் கடனுற்றான் கற்பகநெஞ்சானவன் கற்றை செஞ்சடையான். கன்னியரையும் கண்காணிக்கும் கடனென வெண்டலையான் மீது விதி எழுதி வேந்தன் வரவை விழிவைத்து தென்றல் தீண்டும் திசையில் தென்பட்டதை தேவையென கருதி கண்பட்டதை காப்பாரில்லா கைம்பெண்ணாய் கருதி உரைக்கின்றேன்.
இறைமறுப்போன் எவனும் வந்தெம்மான் எழில் கரத்தலம் காணின் இங்கேதான் இறையோன் உண்டென்று உறுதியுற்ற உளத்தோடு உலகநாதனை இறுதி செய்வான். அத்தகு அமைப்பை அதீதனிவன் ஆம்பல் கைத்தலம் செம்மையாய் செப்பிடுமதில் தாமரை சங்கம் தரும் திருமால் பெருமையை திறம்பட போற்றி புகழுமே. அங்கறுமுக கோணமுடன் அழகு மயில் சின்னமெல்லாம் முருகன் உண்டென்ற மூதறிவை ஊட்டிடுமே. உமையுடன் உறைந்த உயிருறு பாகன் உடலொடு இணைந்து உறுப்புறும் லிங்கம் பிறப்பறுக்க உரைத்து பேரருள் புரிகின்ற சிவசக்தி உண்டென்ற சேதியை செப்பிடுமே. ஐங்கரன் நாற்கரமது அம்பையின் ஆயுதக்கைப்பிடி தன்னின் அழகுற காண்பவன் கண்களும் கனிவுடன் திறந்திடுமே. அங்கு வேழமுகத்தான் வெற்றி முகம் கண்டே ஞால முதல்வனாய் நயந்து நில்லாருலகிலில்லார் என்றே உலகுக்குணர்ந்திடுமே. உலகநாதன் கை யுடுக்கையை ஒட்டியே உலகளந்தான் விரலாழியை கண்டதும் இறை மறுப்பது எத்தகு இழிமையென்று எவரையும் திருத்திடுமே. பார்த்திபன் பவளக்கையிலுறைந்த பருந்தினை கண்டவனின் பகுத்தறிவே பளிச்சிடும் பின்னவன் பாழறிவு பறந்திடுமே.
அறுமதமுறைந்த அரிமகன் கைத்தலம்தான் நல் லான்மீகப் பாதையிட்டு அகிலம் திகைக்க அறநெறியோங்க அன்பே தழைக்க இறைவன் மேல் ஈடுபாட்டை இன்னமும் எழுப்புமோர் ஈடிலா ஆலயமாய் இருகரம் ஒளிர்ந்திடுமே. உள்ளங்கையுள்ளேயுள்ள ஓரத்தையொட்டி உயர் மேடுகள் உற்றதாலே உயிர்களை கொல்லாதவனாய் பயிர்களை கிள்ளாதவனாய் பாவங்கள் ஏதுவும் கொள்ளாதவனாய் சிறக்க அவன் மெய்யில் படிந்து மிகை நோய் பரப்பி வையம் மிரட்டும் வாதை கொசுக்களை கூப்பிய கரங்களால் அவன் கொல்ல துடித்தும் கொல்லப்படாது தப்பியோடி அடித்தவன் அண்ணலென்றறிந்தே அதுவும் கூட எள்ளி நகைத்து ஏளனம் செயுமே.
பெற்றமிகு பெற்றமகன் பிள்ளையென உற்ற வரன் உயிரூட்டும் பொற்குளத்துள் ஓராயிரம் பறவை வரும். அவன் அற்ற குளம் ஆன பின்னர் அவையனைத்தும் அறிவிப்பு தராமலே அகன்று விடும். அவன் கெட்ட குடிபோல் கெட்டதனால் கேள்விமேல் கேள்விக்கணை கேடுகெட்டு எழுப்பப்படும். நட்ட நடுநிசியினிலே நாதனருள் சிறப்பு வந்து நம்மவனை உயர்த்தி விடும். நான்மறையும் நலிந்து விடும். அம்பையருள் ஒளிர்ந்து அவன் அதரம் வாக்கு வேதமாகி வல்வினைகள் அறுக்குமென வேந்தனுக்கு ஆதரவாய் விதியெழுதி யான் தருவேன்.
பாலுடன் பன்மலர் தேனும் இங்கு யாவும் பகல் கொள்ளையே ஆயின் அவை அதிஊன் இல்லையே. இதை அறிந்தோன் அண்ணலதை தவிர்ப்பான் அறியாதவன் புசிப்பான். தோல் தரித்த எதையும் தொடான் தூயோனிவன் ஆன்மா தொண்டையில் விடம் உறைந்தோனுடன் தோழனாய் உறைவான். முக்குணத்தில் முதற் குணம் அமைய எண்குணனுடன் எளிதாய் இணைய இவ்வுணவுதனை இன்னா செயாது ஈரநெஞ்சுடன் இனிதாய் எடுப்பான்.
கலிங்கத்து வேந்தன் பெயரில் கடைதனில் குமரன் நிற்பான். அவன் மணி முன்னம் கட்டிய பின்னம் மாலவன் பெயரை கொண்ட மாநிற வண்ணம் நின்ற கண்காணிப்பூனைக்கென்று கடமையில் கீழ்ப்படிந்து உதவிடும் வெருகு போன்று உதவிகள் புரிந்த வண்ணம் தீயவர் ஆணைபெற்று திருஅரவக்கோயிலுக்கு தென்புற வாயிலுக்கு ஒருநூறு கோல் தொலைவில் உற்றதோர் அலுவல் மடத்தில் உறைந்தோர் பணியை கொள்வான். அவன் அன்பெனும் அகல் விளக்கை அகத்தினில் அணைத்து விட்டு கயவரின் நட்பு ஏற்று கடை மகனாக கெட்டு நம் ஆயனின் ஆயுள் முடிக்க அங்குறை மலை நிலத்து உறவினருடனிருந்து ஒளிமுகன் வீட்டருகில் தன் மனைதனை வேய்ந்து கட்டி மமதையில் மிதந்த பாவம் கற்பக காய்தான் தானாய் கழன்று அவன் பூந்தலை உடைய உச்சி மேல் வீழ்ந்ததாலே அவன் ஊழ்வினை முடித்துக்கொண்டு நமனுடை நாட்டிற்குள்ளே நாறிய புழுவைப்போலே தினமவன் துடித்துடிக்க தீயோர்க்கு வையமுண்டோ ? நாயோர்க்கு நல்லோருறையும் மேலுலகு அமைவதுண்டோ ?
அண்ணலை மாய்க்க எண்ணி அறிவிலிகள் ஒன்றுபட்டு அடும் பகைவர் அமைத்ததொரு கொடுங்குழுவில் கொண்டவரும் குறைவின்றி கொலைச்செயல்கள் புரிந்த வண்ணம் மமதையில் மிதப்பவர்கள் மிகுதியாய் யாரென யான் வினவ அதில் குருசணிந்த வேடுவரே கூடுதலாய் இருப்பரென கொற்றவை கூறக்கேட்டேன். குற்றத்திற்குற்றபடி அவள் கொடி காட்ட பின் கொள்ளொண்ணா கனி கொட்டி கூற்றுவன் கூப்பிட்டு அங்கங்கள் செறிவூட்டி அழிக்குள் அடக்கிடுவானென்றும் அதை அர்த்தநாரி சுவைத்தபடி அரவுறைந்தோன் துயின்றபடி அத்தனையும் ரசித்திடுவானென்றே ஆணையிட்டு அவளுரைத்தாள். இது அரலை மூன்றடுத்த அருநிலத்து அன்னை வாழும் மண்ணையுண்டு மரணம் தந்து மாகடல் விழுங்கிவிடுமே
அன்னம் புதைப்போரும் அதன் கிண்ணம் சிதைப்போரும் அவ்வணங்கை மதியாமல் மண்ணில் விரிப்போரும் அதை மனமுடன் மிதிப்போரும் அறத்தை சிதைப்பதற்கும் அவளருளை இழப்பதற்கும் பின்னம் பிறப்பெடுத்து பிச்சை உணவுக்காய் பெருந்துயர் படுவதற்கு உற்ற சாபமுண்டு. உண்ணும் உணவுதனை ஒன்றுக்கும் உதவாது மண்ணில் வீணாக்கும் மானிடப் பதர்களது கருமம் என்னவெனில் இக்கயவரனைவருமே மறுமை பல பெற்று மரண பட்டினியில் அழுகி புழுத்தபடி அதுவும் கிடையாமல் கழிவுக்கால்வாயில் காணும் உணவு கூட அறவே அண்டாது அழுகை குடித்தபடி கதறிதுடித்திடுமே. கிட்டும் இரையனைத்தும் கீழ்விழ விடலாமோ ? விட்டுவின் நெஞ்சத்தில் விரிந்த கமலத்தில் அமர்ந்த தேவியென கண்ணில் ஒற்றிடுக. கனக பருக்கையென கண்ணிய படுத்திடுக. உமையாள் உருவெடுத்து நம் உயிர் சக்தி படைக்கின்ற அன்னபூரணியின் அருளே கிடைப்பதனால் உண்ணும் உணவுதனை உயரமுதென்றிடுவோம். ஊனுணவு எதனையுமே உட்கொள மறுத்தபடி உள்ளத்தை வெளுத்தபடி மரணத்தை வென்றபடி மறுவீடடைவதற்கு மண்ணில் கிடைக்கின்ற ஆகாரம் வகுத்தபடி மாமிடம் கொள்ளாத ஆதாரம் அடுக்கிடுவேன்.
ஒரறிவு பைம்பயிர்கள் ஊட்டுகின்ற உணவுகளை உண்ண வலியுறுத்தி உலகை அளந்தோனும் உமையுள் உறைந்தோனும் ஒருசேர ஓதியதை ஒளியாது யானுரைப்பேன். மரங்கள் மரித்தபடி மண்மீது நெடுநாள் கிடந்தாலும் வரும் வாசம் வகை கேடாய் வந்து மூக்கில் வீசாது. மலருதிர்ந்து போனாலுமதன் மணம் கேடாய் ஆகாது. மாமிசத்தை வெட்டியிட்டால் மறுநாளே அழுகிவிடும். மன்னுயிர்க்கு குமட்டல் வரும். புழு நெளிந்து ஈமொய்க்க புலாலில் மேல் வெறுப்புவரும். இதைமீறி எடுத்துண்ணும் ஈனமிலா பிறவிகனே உன்னுடல் நோவுகண்டால் உனக்கு வலிப்பது போல் எவ்வுடலும் துடிதுடிக்கும் என்றறியா மூடர்களே ! உம் மழலைச் செல்வத்தை மரணம் தீண்டும் போது மறுப்பு சொல்லாமல் சிரித்து மகிழ்வாய்வோ ! சிந்தனை செய்யாயோ !
உட்கொள்ளும் ஊனுணவு அத்தனையும் உடலிலுள்ள நாடிகளில் நஞ்சுதனை நிறைத்து விடும் நாண்களையே கெடுப்பதோடு இதயத்து தமனிகளை இயக்காது சுருக்கிவிடும் இரத்தந்தான் பாயாது நாளங்களை தடுத்துவிடும். இன்னும் யான் எளிதாக இயம்புகிறேன் கேளாயோ. இம்மைதனை செம்மையாக்கா இடையூறாய் இருந்தபடி இறைவனடி சேர்வதற்கு எதிரியாய் எழுந்தபடி அங்கத்துள் அமைந்துள்ள ஆழிகள் எட்டையும் அசைக்கவே எட்டாது ஆயிரம் இதழ் அலரும் அருங்கமலம் சுழலாது சுழுமுனையை பாழ்படுத்தி சுந்தரனார் நல்லுறவை துண்டித்து தடைபடுத்தி இன்னும் பிறப்பெடுத்து ஏராளம் இன்னலுற இம்மையிலும் வழி வகுக்கும். ஏழ் பிறப்பை முடக்கிவிடும்.
ஊனுண்ணும் விலங்கிற்கும் உயர் மானிட பிறப்பிற்கும் உற்றதொரு வேற்றுமையை உனக்குரைப்பேன் கேளாயோ. இரை காணிண் அதன் நகங்கள் எழுச்சியுற்று புறம் விரியும். நம்போன்றில்லாமல் அதற்கு நடுநிசியிலும் விழி தெரியும் . வேர்வையது வெளியேற நாக்கதற்கு துணை புரியும். நம்முடலில் அது வடியும். அரைத்துண்ணும் பற்கள்கூட அங்கதற்கு அமையாமல் கிழித்துண்ணும் உணவுகளை கிடைத்தபடி அது விழுங்கும். நாயொப்ப ஊனுன்னி நக்கியே குடிப்பதற்கும் நம்போன்ற மாநிரைகள் மேலுறிஞ்சி சுவைப்பதற்கும் புலால் உண்ணி கொண்ட குடல் மும்மடங்காய் நீளம் கொள புல்லுண்ணும் மாநிரைக்கு முன்னான்கு மடங்காக முளு நீளம் அமைந்தபடி நம்முடன் ஒத்திடுமே. அரைத்துண்ண இயலாது அடித்துண்ணும் உணவுகளை அப்படியே விழுங்குகின்ற வாய்ப்பில்லா வாய்பற்கள் அதற்கிருக்க அண்டிவரும் உயிரையெல்லாம் அரவணைத்து காக்கின்ற ஆருயிராம் மனிதனுக்கு அரைத்துண்ண கடவாயில் கடனுற்ற கடும் பற்கள் ஏதுவாய் இருக்கிறது என்பதனை இயம்புகிறேன் இன்னுயிரே !
உறு ஆயுள் கொண்டிருக்கும் உயிரினங்களத்தனையும் ஊனுண்ணாதென்பதனை உணராத மானிடமே பைங்கிளிகள் பலகாலம் பாறையொப்ப ஓடுடைய ஆமைகளும் வெகுகாலம் வாழுகின்ற மந்தணம் தான் சித்தர்களே வகுத்துக்கொண்ட சீரிய உணவு முறை என்பதனை நீயறிந்து இயன்ற வரை தொகுத்து கொள்வாய். எவ்வுயிரும் நம்முயிராயதன் இன்னல்களை நமதெனவே எடுத்துக் கொள்வாய். தங்கமொத்த அங்கத்தை தழலுக்கு இரையாக்கி தகாத சமன்பாட்டை சூழலுக்கு சுமையாக்கி சுற்றுப்புற கேடு செய்யும் உற்றதொரு கெட்ட செயல் உலகத்தார் குவிக்கலாமோ ? உயிரிழந்த பிணவுடலை பூமிக்கி உரமாக்கி அன்னை நிலம் அகமகிழ அங்கங்களை உண்ணும்படி அத்தனையும் ஊட்ட வேண்டும். அதன் பகரம் அனலுண்டு புசித்த பின்னர் அங்குறையும் சாம்பல் கொண்டு எப்பயனும் இப்புவிக்கி இல்லையென்றும் மண்ணுயிர்கள் இறக்குகின்ற மலத்தையெல்லாம் மண்ணுண்டு மரம் செடிக்கு மாபலத்தை இன்னும் அது கொடுத்திடுமே இயற்கை அது வலுத்திடுமே.
உயிர்க்காற்றை உள்ளிழுத்து உமிழுகின்ற கருங்காற்றை மரம் செடிகள் உள்ளிழுத்து மாசறு கதிரூட்டும் மதிப்புறு பச்சபத்தை சோறென எடுத்தபடி சூட்சியேதும் செய்யாமல் கயமை கொண்ட மனிதருக்கும் காற்றை கொடை செய்தபடி உயிர் பிச்சை இட்டபடி உறவாடும் புற்பூண்டு கொடிகளுக்கும் புவித்தாயே உரமிட்டு பொன்மகளாய் வரமளிக்குமதன் மெய்யினில் குருதியில்லை. மேதினியை நாசமாக்கும் நாசினியாம் நம்மவர்க்கோ குருதி உண்டு. மெய்யுரைத்தேன் பொய்யில்லை. மீட்பனாக நீயிருந்து அவற்றை காப்பனாக கரைசேர்ப்பாய். உதிரமோடும் உயிர்க்கெல்லாம் உன்போற் உயிர்த்துடிப்பு உண்டென்ற உண்மை தனை ஏனின்னும் அறியவில்லை இரக்கமிலா மானிடமே . இதை நீ யறிந்திருந்தால் இதனுடை ஊனுடலை எளிதாக பறித்தெடுத்து கழிவான உன்னுடலை கண்டபடி வளர்ப்பதில்லை. சிவநாமம் நவின்றபடி செடிகொடியின் பயன் பெற்று வருமுணவை நீ புசித்தால் அவன் நாமம் உனைக் காத்து அவ்வுலகிற்கிட்டு செல்லும். ஒரு பாவம் உறாது உலகை விட்டு போனாலும் மறுமையே இராது. மண்ணோடு மண்ணாகி மக்கியுடல் போனாலும் மரணமில்லா அவ்வுலகில் மறுமலர்ச்சி கண்டிடுவாய். புலாலை உண்பதாலே நின் பொன்னாவி கெடுவதுடம் பூவுடலும் நட்டமுறும் நல்வாழ்வே நாசமுறும். போகாத நரகிற்கு போக நீ வேண்டுவியோ ?
பகுத்தறிவு என்பதெல்லாம் பாழுடலை கெடுப்பதற்கும் பரமனடி தவிர்ப்பதற்கும் உதவுகின்ற கருவியல்ல. உத்தமனாய் வாழ்வதற்கும் ஒளியுடலை அடைவதற்கும் பிறப்பறுக்க பயன்படும் பேரருளை பெற்றுத் தரும் பெட்டகமாய் அமைய வேண்டும். மீறுகின்ற மனிதனுக்கு மேதினியில் அமைதி வர என்றுமே வழியுமில்லை. அல்லலுக்கு குறைவுமின்றி ஆசைக்கும் எல்லையின்றி அதனாலே தொல்லை வரும். அளவின்றி கோடியுறும் அருள் பெற தகுதியில்லை . வெய்ய குணம் கொன்றபடி விண்ணுலகை வெல்லும் விதி யாருக்கு இங்குளதோ அவ்வுயிரே அந்தணனாய் அம்மையப்பன் வந்தனையை என்றென்றும் பெற்றிடுமே. சிவ வேதம் சொல்லுகின்ற கொல்லாமை நோன்பு கொண்ட சித்தருக்கு மட்டுமின்றி சைவ நெறி கடைபிடிக்கும் சாத்தனுக்கும் சாத்தியமே சாவில்லா வீடடைய சரக்குகளை உனக்கு விற்று சலுகை விலை பெற்றதனால் எனக்கு என்ன பயன் என்பேன்.
பிராணனை இழுக்கின்ற பிராணியும் நம்முடன் பிறவா நல்லுறவாய் நினைக்கின்ற பேரறிவு எவனுக்கு சிறந்திடுமோ அவனுக்கும் சிவனுக்கும் அழியாத தொடர்புண்டு. அவனுக்கே அழல் விழியை அர்த்தநாரி திறந்து வைப்பார் அளவின்றி ஆதி சிவன் அருள் தொண்டும் அவருக்கு செய அறம்பாடி புறம்பாடி ஆக்கினையை ஊக்குவித்து துரியத்தை விரியவிடும் விடியல் வந்தது போல் விழியத்தை தந்தவண்ணம் சூத்திரத்தை யான் உனக்கு சுருக்கியே தந்தபடி வெந்ததையும் தின்றபடி வினைகளையும் அறுத்தபடி நன்றய் வாக்கரைத்தேன். நல்லுலகே செவிசிய்ப்பாய்.
பாகம் 141
எத்தகு இழிநிலையேற்றும் எம்மான் இடர் கோடியுற்றும் எள்ளளவும் இன்பமிலாது எழும் துன்பமது தோளுயர்த்தி தூண்டில் வீசி எம் தூயோனை தூக்கியே வாதைக்கு விருந்தாக்கி வதைத்தாலும் வெகு வேதனையை வீறிட்டு வேந்தனுள்ளில் விதைத்தாலும் அதன் விளைவாய் வேங்கையவன் தாழ்ச்சியுற்று சாய்ந்தாலும் தலை மீது வான் வெடித்து விழுந்தாலும் தளர்விலான் தடம் மாறி விபரீத முடிவெடுத்து விடம் குடித்தோ வேறேதும் முடிவெடுத்தோ விடுதலையை வேண்டானவன் பரமுறைய அண்டானவன் பாதியிலே பட்ட கடன் விடுத்து பாழுடலை மாய்க்க எண்ணானவன் வேருடனே வீழானவன் தன் தாருடல் தகனம் ஆக்க எத்தருணமும் தயாராகான் எம் தரணி மீட்க வந்த தளரா தலைவன் என்றவாறே ஆருடம் சொன்னதற்கு அம்புலியன் சாட்சி சொல்வான் . வள்ளலிறை வாழ்விட முள்ளுறைந்து வகைகெட்டோ ரமர்ந்து வஞ்சித் தொழுகுவாரங்கு கள்ளங்கபடர்கள் பலரும் புகுந்து கஞ்சி தொட்டியில் கன்னமிடவே என் பிள்ளைக்கனியின் பெரும்பசியேற்று பேழைக்கமுதூட்ட மறுத்த பேயோரங்கு நாதன் இருந்த நறுமேனியறியாமல் நல்லுணவு தனை நாய்க்கும் கொடாமல் நெல்லன்னம் நிறை தரும் நிலமெனும் நல்லாளின் நன்றி கொன்ற பொய்யரை சபிக்க அவர் வாய்க்கே அரிசியின்றி வறுமை அரவையிட வானில் இடம் கிடைக்கா வாழ்வை நிரந்தரமாய் புண்ணில் புழு நெளிய மண்ணில் சூழற்சியுற்று மரித்தும் உதித்து வந்து மண்ணில் நிலைப்பாரே.
தீரா தோல்நோய் தீர்வதற்கே தீர்வு தந்து வாக்குரைப்பேன். கேளாய் கவின்மிகு பொன்னுடலை கிடையா வரமென பெற்றிடுவாய். மூடாகடனென புலால் தவிர்ப்பாய். முறையாய் முற்றிய வேம்பினது உடலாம் விறகில் அடுப்பெரித்து ஒத்த கீரையை கொள்வதுடன் உள்ளுறைந்த கிழங்கு முதல் கெடுதல் செய்யும்
கத்தரியும் ஒட்டாது சமையல் செய்து உப்பும் புளியும் ஊற்றாது புத்தம் புதிய பாண்டமது புலாலுணவே சமைக்காத மண்பானையாய் அமைந்திடவே மாப்பிளை மணம் தரும் அரிசி கொண்டு ஆறாதாக்கிய சுடுசோற்றை ஆவிபறக்க அப்படியே முற்றா முகுந்தன் இலைமீது முத்துக்களெனவே இட்டுடனே.
மும்மண்டலமும் முறையோடு கதிரவன் பிறந்த பின்னரும் காரிருள் பிறக்கும் முன்னரும் இடைவிடாது இருநேரம் உண்டி புடைக்காதுட்கொண்டு ஊறுகாயெதையும் தவிர்த்துண்டால் உன்னை முடக்கிய ஊழ்வினையாய் உயிரையெடுக்கும் தோல் நோயும் ஊனில் பதிந்த சொறி சிரங்கும் உடலை சிதைத்த கரப்பானும் ஓயா நாற்றமுற்றுபடி உறைந்திருந்த மீன் செதிலும் அறவே அகன்று போயிடுமே அறிவுரை கேளாய் பொன்மகனே.
வாக்கு எதுவும் பொய்யில்லை. வரமுடை நலமுறும் நறுமேனி வாழும் நாளெல்லாம் பளபளப்பாய் பவளமெனவே மிளிருமென அறுவுறுத்தி அருளியது கொண்டையில் நாகப்பூ கொண்ட கூத்தனின் சீடனாம் குறுஞ்சித்தர் கூற்றினை கொள்ளுவோர் குறைவிலாது கூடமைத்து வாழ்வதற்கே !
தார்மீக சபதமேற்று தாரகையாம் தங்கத்தை போரிட்டு புவி சாய்க்க புயம் இயலா ஆண்மையிலி ஆடவர்கள் ஆவியர் சிலுவை தாங்கும் அருளிலா சூழ்ச்சியர் பல சூழ தேவனின் பாடலோதும் தெய்வீக ஓநாய்கள் வெள்ளாட்டுத் தோல் தரித்த விடமுறைந்த பாவியர் வேடனாய் புகுந்து வேந்தனை அடக்கம் செய்ய வெய்யரால் இயக்கப்படும். அவை ஒப்பிலானுக்குற்ற தோழனுக்கெல்லாம் ஊற்றாக பொருளூட்டி தேற்றறிவாளன் திருமெய் புதைக்க புறப்பட்டும் அவர் போக்கிடம் தடைபட்டும் பெரும்பாவம் குவிக்க வைத்து பிறழா தோல்வியுறும் தருணம் தான் தொடர்கதையாய் தொடர கண்டேன்.
வள்ளலிறை வாழ்விடமுள்ளுறைந்து வகைகெட்டோரமர்ந்து வஞ்சித் தொழுகுவாரங்கு கள்ளங்கபடர்கள் பலரும் புகுந்து கஞ்சி தொட்டியில் கன்னமிடவே என் பிள்ளைக்கனியின் பெரும்பசியேற்று பேழைக்கமுதூட்ட மறுத்த பேயோரங்கு நாதன் இருந்த நறுமேனியறியாமல் நல்லுணவு தனை நாய்க்கும் கொடாமல் நெல்லன்னம் நிறை தரும் நிலமெனும் நல்லாளின் நன்றி கொன்ற பொய்யரை சபிக்க அவர் வாய்க்கே அரிசியின்றி வறுமை அரவையிட வானில் இடம் கிடைக்கா வாழ்வை நிரந்தரமாய் புண்ணில் புழு நெளிய மண்ணில் சூழற்சியுற்று மரித்தும் உதித்து வந்து மண்ணில் நிலைப்பாரே.
மலங்கழிக்கா மண்ணுயிரில் மணி விடும் நெல்லுயிரும் உதிரமிலா ஊனுயிரே. ஊணுண்ண உற்ற கனிவகைகள் அத்தனையும் கனிவுடையோர் கொள்ளுகின்ற கருணைகூர் நல்லமுதே. கனல் தீண்டா பழமுண்டு காலனையே கதறவிட்டு காலடியை வணங்கவிடும் மேன்மைமிகு உணவுதனை மேதினிக்கு சொல்லிவிட்டேன். அதனையே தானெடுத்து அனகனவன் காடுறைந்து ஆயகலை அத்தனையும் வான் புகழ் பொதிகையுள்ளே வரமளிக்க பதுங்கிவாழும் பூமுனிவன் தாரைவார்க்கும் பொலிவருள் பெற்றுவிட்டு குவலயம் ஏற்றெடுத்து கொற்றவனாவதற்கும் எம்போல் சித்தர்களும் இறை நிகர் முத்தர்களும் ஈரேழுலகினரும் எழுந்து நின்று தொழுதபடி எம்மானை முன்மொழிந்து ஈடற்றருள்புரிவோம். வளமுடன் வாரி வழங்கும் வஞ்சக வடக்கர் வளம் தேய்ந்த தெற்கரினும் தேர்ந்த நிதி குவித்ததெவ்விதமென யான் தீக்கண்ணனை திரும்பத் திரும்ப திருவடி பணிந்ததற்கு அத்தீயோரவர் திருமகளின் திருக்கமலம் திருடியதோர் கொடுங்குழுவே கூடி கொடியமைத்த கூகைகளை பெற்றெடுத்த குறை பிறவி கோட்டானது பாட்டனது பரம்பரை பங்காளியரிவர் பரப்பு மீறி பறந்து வந்து பாவியென குவிந்த பின்னர் தீநெறியை பின்பற்றி தினம் ஊறும் வட்டியின் குட்டிபெற்றும் வாரா கடனுற்றும் வங்கிகளில் கொள்ளையிட்ட வன்தொகையை கள்வருக்கும் கயவருக்கும் கனிவிலா ஓநாய்க்கும் கபடமுறை நரிகளுக்கும் நல்லோராய் வேடமிட்டு நாடெங்கும் புலம்பெயர்ந்து வள்ளலென கொடை செய்து கொற்றவனாம் கற்கியை கொல்வதற்காய் கண்மறைவில் கணையெய்து கடும் தோல்வியுற்றதனால் காலத்தின் இறுதிதனில் கண்ணீர் குடித்தபடி கதறித் துடித்தபடி குருதி குன்றியதும் கூடுவதோ கூற்றுவன் கோட்டையில்தான் என்றுகூறி கொன்றைவேந்தன் எந்தன் குறையறிவின் கொள்ளளவை கோடிட்டு காட்டி என்மேல் குறுநகை புரிந்தானே ! கோனாய் உலகுயர்ந்து கொங்கு தமிழ் வளர்ப்போனே ! இனி கேளாய் எனுரையை உன் கீர்த்திக்கு எல்லை இல்லை. வானோர் வாழ்த்துரைத்து உனை வரவேற்கும் காலம் இதோ வரிசை கட்டி நிற்கிறது. யானோர் சித்தனாக எம்பெருமான் பக்தனாக இமைப்பொழுதும் பிரியாது என்றென்றும் உடனிருப்பேன் என்பதை நீயறியாயோ !
பாகம் 142
பொழிலகமன்ன பொன்மகன் மனத்தே பொழுதெலாம் நினைவில் பிறைதனை புதுமுகிழ் போன்றே சடையினில் சூடினாரே. அவர் இறைவனே அன்றி என் உயிருறை தேவன் உமைக்கோர் நாதன் உலகையும் இயக்குவாரே. அணுவெல்லாமுறைந்து அகிலத்தை நிறைந்து அண்டத்தை இயக்குவாரே. மலர் முகன் கொண்ட மருளிலா மன்ற மனத்தையும் மயக்கியே அவன் மேல் பேரருள் பொழிந்தவாறே மறைகளை மறைத்தவர் தமிழ் மரபினை சிதைத்தவர் மன்னனால் சிதறுவாரே. இதை மறுபடி சொல்லிட வாய்ப்புகள் வந்ததால் உறுதியாய் ஓதினேனே !
கண்ணன் விருப்பம் என்னவென்று கண்டுவந்தேன் கனங்குழாய். கண்டம் முழுமையும் ஆட்சி செய்து கருவம் தலைமீதேறிநிற்கும் மன்னனாகிடும் மனப்பாலை மறுதலிப்பது மட்டுமன்றி அண்டம் முழுமையும் ஆண்டு கொண்டு ஆணவச்செருக்குடன் ஆடுகின்ற அற்ப எண்ணம் அவனுக்கு அறவேயில்லை அறிவாயே. இக்கடமை ஏதும் ஏற்காது மெய்க்காதல் பைங்கிளியொருத்தியொடு இறுதி மூச்சு இயங்கும் வரை இன்பவாழ்வை தொடர்வதற்கும் காமம் தன்னை தணிப்பதற்கும் கருணை கொண்ட நெஞ்சமுடன் கனிவாய் இல்லறம் பேணிடவும் பிள்ளைச்செல்வம் பெற்றெடுத்து பெரும் மகிழ்வுறும் எண்ணந்தனை பெறும்பேறாய் கொண்டிடவும் புவிமீதெங்கெனும் மூலையிலே புகழை விரும்பா பூமகனாய் புண்ணியம் குவிப்பதை குறிக்கோளாய் கண்ணிய வாழ்வே கடமையென்ற அண்ணலின் ஆசைகள் அத்தனையும் அடியேனுக்குச் சொன்னது தான் அணுவுள் கருவாய் அடங்கியுள்ள அருட்பெரும் சுடரென அறிவாயே அவன் அறிதற்கரியோன் தெளிவாயே.
வாழ்க்கை வளம் கொழிக்க வாக்கு விற்று வயிற்றுக்கு பயன்பெறுவோர் வஞ்சித்து மன்னுயிரை நான்கெனவே நகைக்கும் வண்ணம் வகுத்தாலும் நாதனவன் நல்லறிவு ஆக்கும் அந்தணன் இயல்புறுமே ! அடுத்துவரும் அரசகுல ஆளுமையும் அதற்குற்ற தோள்புயமும் ஆண்மையோங்க அமைந்தபின்னம் மூன்றாம் குலமாகி முரண்படும் வணிகனுடை மூளையின் வலிமையையும் முற்றுபெற்று நான்காம் குலமுதித்த நாதனவன் நாடாள வந்தபின்னம் நல்லோர் புடைசூழ நன்னெறி குடை கீழே நாயாய் உழைத்தவாறே நன்றியுடன் பாராண்டு பைம்பொன் சிறகடித்து பரம்பொருளாய் சிறப்பானே !
எக்கனிக்கும் நாட்டமிலான் இடையினத்தின் இருகனிக்குள் எளிதில் வீழான். முக்கனியில் முதற் கனியும் முள்ளுறைந்த இடைக்கனிக்கே முக்கிய இடமளித்தும் மூலதனம் பொறுத்ததனை பருவங்கள் வருந்தோறும் பையுறைந்த பொருளிருப்பு பொறுத்ததனை புட்களுடன் பகிர்ந்துண்பான். கதலியெனும் கடைக்கனிகள் கன்னியவள் காலடியில் காலமெல்லாம் கிடைப்பதனால் காஞ்சன ஒளிமுகத்தான் எப்பொழுதும் எடுத்துண்பான்.
அம்மையை அங்கத்து அரையில் வைத்து அண்டம் எல்லாம் அணுவை புதையல் வைத்து அதனுள்ளே அவனை வைத்த அரவேந்தி அதிசிவன் அறம்பாடி வாக்கிற்கு அகனமர்ந்து உடனிருந்து ஆதரவாய் அரவணைக்க வாஞ்சையோடு செவி சாய்க்கும் வானவர்கள் கரமெழுப்பி வாழ்த்துகள் தனை எழுப்ப வாய்மை கொன்றோர் வன்கோடியோர் வழங்கிடாதோர் அங்கீகாரம் எனை வசைப்பாடி என்ன பயன் ? அறத்தையே சிதைக்கும் அர்க்கர்கள் அழுக்காறு அடைவதனால் அவர்கட்க்கு என்ன நயன் ? அவா வெகுளி இன்னா சொல் இத்தனையும் இழுக்குக்கு இலக்கணமாய் இருப்பதனால் என் வாக்கு எமனையே தூண்டி விட்டு எம்மானுக்கு எதிரியாய் இருப்போரை எரித்தே சாம்பலாக்கும்.
வரை ஏழும் உயர்ந்தபடி அதற்கப்பால் வான்வண்ணன் அமர்ந்தபடி ஆநிரை பாலருந்தி அன்படியார்க்கருள் பொழிய அரவணையில் துயிலாது அன்னையுடன் அங்கு நின்ற கோலத்தில் நெய்யன்னம் பாலிக்கும் திருவரைக்கு கீழ்பதியில் தென்னவனின் அகவை தொடும் அறுநான்கில் ஆம்பலொப்ப அழகியோடு அவனேற்ற பண்பறு பாவம் சூழ் பாலுறவை பற்றிய முதலிரவாய் பரமனொடு பரந்தாமன் பார்வையிட்ட பரிதாபம் அமரரொடும் யானறிவேன்.
பொறியில் உயிர்க்கும் புருவமிலா பொறிக்கண் பொறியாகி பொல்லார் செயல் கண்டும் காணாது கயவர் கையுறைந்து நல்லார் நகர்வையே நாணாது நாய்மக்களுக்குரைத்து தடையம் தந்தும் தருமம் கொன்றும் தருணம் எழும்போது தகுந்த காலமாய் உணர்ந்தும் அத்தரங்குறை காலத்திற்கே நன்றி கூறி நான் கடன் பட்டது நாயகனை கற்கியாயுயர்த்தி நல்லுலகை மீட்பதற்காய் நன்னெறியை காப்பதற்காயென்றே நாடறிக இன்றே !
உள்ளதை யான் உற்றபடி சொல்வதெனில் உலகத்து கலகம் கொண்டு உள்ளமதை உளைச்சல் தின்று உயிர்மாய்போர் கோடியுற்று எஞ்சியுள்ள இடர்தொகையில் நான்கிற்கு ஒன்று வீதம் நாசி வழி நுழைந்த பேய்கள் நன்றாக தின்னும் முன்னம் நமன் விட்டுச் சென்றோரை பெரும் பஞ்சம் தின்ற பின்னம் மண்ணுக்காய் போர்வெடித்து மாளாது பிணம் குவிய பெண்ணிலையை என்சொல்லி பிஞ்சுக்கனி பேணிடுவேன். பிறவுயிர்க்கு என்ன சொல்லி பெருந்துயர் துடைத்திடுவேன். பிறைசுடன் பெயரழைத்து பின்வாங்கா வேண்டுதலால் கறைபடியா கரம் குவித்து கற்பூர நெஞ்சுருக கண்ணீர் பூச்சொரிய அங்கு தென்குமரி திருமுனையிற் தீரனவன் தேரெனவே தெரியவந்து ஆரவாரம் விண்பிளந்து அடியார்கள் முன்மொழிந்து தெய்வமகன் ஆளவந்து தேவர்களின் துணையுடனே அரியணை ஏறியவன் அரிசிவனார் அடையாளம் அத்தனையும் காட்டிவிட்டு திருமுடியை ஏற்றிடுவான்.
தேன் தமிழை திருமொழியாய் திக்கெட்டும் திணித்தபடி திருப்பணியே செய்திடுவான். திருச்சபையை புதுமையாக்கி தெய்வங்களை ஒருமையாக்கி உலகினையே ஒரு குடைகீழ் உண்மை அன்பு இறைமை என்ற ஒப்பரிய கொள்கையினை காப்பவனாய் கடன் படுவான். பின் கூற்றுவன் கொள்ளையிட குற்றுயிர்கள் இல்லாத கொற்றவன் தேசம் கண்டு கூத்தனுக்கு நன்றி சொல்லி கோடிமுறை கும்பிடுவேன்.
பன்னாடு தன்னில் பகட்டு பூக்கள் பக்குவப் படாமல் பொன் பொருள் பொதியும் பொதுச்சொத்தனைத்தையும் புடம் போட்டடக்கியாளும் அரை மதி மூடர் அனுபவமுமில்லாது அறிஞருடன் கூடாது எவர் சொல்லும் கேளாது இருள் வழியில் தேறாது மருள்மனத்தொடு எல்லாமுண்டு இயன்றதை திருடி எக்கடல் தாண்டி எங்கதை புத்தாலும் பொன்மகன் எழுந்து பொற்றொளி பாய்ச்சி பொறிகண்ணூன்றி செழுநிதிதன்னை சீருரற மீட்டு குடிதனை சிறைபிடிப்பான் .
ஆனையொப்ப ஆடகம் குவித்தும் அறம் பிறழா அன்னையின் அன்னிய மழலைகள் அறுவருக்கும் அமுதூட்டி அரும்ப நினைத்தும் நாளொரு வண்ணம் பன்னீர் பூக்க புண்ணீர் சொரிந்தவள் பொருள் காக்க துணிந்தவள் பொன்னூறும் பூமார்பது சிதைந்து போய் வீழ்ந்தவள் தன் வயிற்றுக்கே வழியில்லாதழும் ஓலம் கேட்டெம் அன்னபூரணியும் அழுவதை அகக்காதுக்குள் கேட்டழுவதும் அறனே.
பொன்பொருளை பொதுவாய் வைப்பினும் மன்னுயிர் மாண்பறியா மடமையுடை மண்ணரசன் கைக்கது மாறிடினது மாசுறு எண்ணம் நிலைத்து மக்கட்பண்பிலான் இரக்கம் சிதைத்து எளியோர் மீது வன்மம் வளர்ந்து தன்னலம் விரித்து தன்குடி தானுண்ணும் இயல்பை ஏற்றால் ; கொள்கைகள் கொடியிலும் கொழிக்கும் கொற்றவன் உரையிலும் இருந்து ஏழைக் குடிகளுக்கிதனால் எப்பயனென எல்லாமறிந்த ஈசனே இயம்பாய்.
பாகம் 143
செருக்குறு சீழ்த்தலைகள் சிறுமையொடு இயக்குகின்ற அழுக்கியலுள் அங்கம் புதைக்காது அறனுக்கு அடிபணியும் எம் அஞ்சான் இழிநிலை இயக்கம் எதனையும் இயக்கிடும் ஈடுபாடு எள்ளளவும் கொள்ளான். அழுக்குறு வேந்தர்களால் அழுக்காறு மாந்தர்களால் செழித்திடும் அரசியல் ஆலம் தொட்டு அகங்கெட்டு அலப்பறையாகிட அண்ணலே துயிலிலும் உள்ளான். எள்ளளவே ஆயிடினும் இயலும் பொருள் விதைத்து இருள் மாந்தர் மனம் பிடித்து பயனறுக்கும் பண்பு கூட பாவம் அவனுக்கில்லை யென்று பரமனே சொன்னானென்றால் பாராய் ! எம் பரிமேலழகனே பரந்ததோர் பேரரசையே வெல்வான் கேளாய் !
கோன் உயரும் நேரத்தில் கொடுவாளுக் கெதிராக கொதித்தெழுவோரனைவருமே கரம் கோர்த்தெழுகின்ற குற்றமுற்றோர் புற்றத்து பாம்பெனவே புயல் போல பொங்குபவர் முயல்யெனவே மங்கிடுவர். பொன்மகளின் கண்மறைத்து அவள் பூஞ்சரடு அறுத்தோரும் கண்ணறுத்து புதையல்களை கடல் கடந்து பதித்தோரும் கடுங்கொடிமை பல புரிந்து கனகமெலாம் குவித்தோரும் கொள்ளையிட்ட பொருள்காக்க குழுவெனவே ஒன்றுகூடி கொள்கைகளை குழி தோண்டி கொல்லையிலே புதைத்து விடும் குங்கும கதிர் குழுவும் குமுதம் போன்ற மரை மலரும் இருள் சூழ்ந்த இலை தளையும் இன்னும் பல சிறுமைகளும் கருச்சிதைந்த கழிவுகளும் காழ்ப்புணர்ந்து கருச்சிதைந்த கழிவுகளும் காழ்ப்புணர்ந்து களவனைத்தும் தர மறுத்து கட்டம் கட்டி நட்டப்பட மனமேயின்றி எட்டப்பனாய் மாறி வந்து எந்நிலைக்கும் செல்லுவரே.
பட்டயத்தை பார்க்கும் வரம் பழுதாகி போயிருந்தும் பண்பாளன் படிக்கும் எண்ணம் படுக்கை போட மறுத்தவண்ணம் தொடுத்தான் தன் முயற்சியினை. தோல்வியுற்றோன் வாங்கிய துண்டுச் சீட்டு பத்திரத்தின் மதிப்பெண்கள் மரணித்து போயிருந்தும் அவன் சிதையாத கனவிற்காய் சிந்தையுறும் மகிழ்விற்காய் சிறப்போடு திறந்ததொரு பல்கலைக்கோர் கழகமொன்று. அதில் இணைந்தவாறு தொடர்வான் துவளா எம் கடமைவீரன். அது பைந்தமிழர் நிலம் தன்னில் பலகாலம் புகழெடுத்த பண்புடை முதல்வனது பெயருடுத்த பெருமையொடு செம்மொழி தமிழ் வளர்த்த சீருறு நகரினிலே மெய்யுறைந்து மணம்பரப்பி நாடெங்கும் கிளைநிரப்பி நிற்குமதன் நெய்தல் நகரின் நெடுந்தலைதனிலே நீதியை சமூகத்துள் நிற்கவைத்தோனவன் சனகியின் அனகனுக்கும் சாமியானோன் திடலுள் நின்ற அதன் கிளைதனிலே நெறியோடு அவன் புகுந்தான். அங்கு முறைசாரா கல்வியொடு மூதறிவின் துணையொடு எம் ஆதவன் எடுத்த அரசியல் அறிவியலும் அதிலுறை ஆளுமை பொதுவியலும் இரண்டும் இணைந்ததொரு முதுகலையை முறையாக தொலை கலையிற் பெற்றதொரு பட்டத்தை பெரும் பேறாய் எண்ணி அறுபதிற்குள் அண்ணல் பெற்ற விழுக்காடு அவ்வளவாய் இல்லெனினும் அடுத்ததொரு பட்டத்தை அவன் தொடர முற்பட்டு பிறிதொரு பாடம் மேல் பேரவா கொண்டவனாய் அறிவுக்கு உறவுடை உளவியலை ஒத்த கலையாயுற்று நுழைவானே.
அது அமுதினுமினிய அருந்தமிழ் நாட்டின் அழகு பெயரெடுத்து அதனுடன் திறந்த பல்கலைக்கோர் கழகமென அமைந்த ஆலயம் நெய்தல் பெருநகர் நிலத்துள் அறம் கொன்று ஆணவச்செருக்குடன் ஆடகம் குவித்தோரமர்ந்து சூதில் இறங்கி சுருங்கும் பண்புடன் பரியோடும் களத்திற்கு வடகுணக்கே வான்மழை வரம்பிலாது பெய்தாலும் வாய் அடையா ஆற்றோரம் ஆண்மையுற எழுந்து நின்றிடுமே அழகெழில் அறிவுக்கழகமதில் ஆழ்ந்து அரும் இயலை பயின்று ஒருவாறவன் பட்டம் பறக்குமது ஆண்டதொரு மொழியான அன்னிய மொழியெழுத்தில் முதுகலையை மொத்தமின்றி முத்தாக பதித்த படி பத்தடுத்த மூன்றது பாசமுடன் ஈன்றெடுத்து ஈரிலக்கம் இயல்புற்றிணைந்தபடி ஏறெனவே நிமிர்ந்தபடி இணைக்கவருமதன் அறிவியல் அரும்பு முன்னம் அழகான பொட்டு வைத்து குறுக்கமுற்று கொலுவிருக்க அது மொத்தத்தில் மூவெழுத்தாய் முயங்கிடுமே. முக்கண்ணன் இயக்கிடவே மூதறிவு ஒளிவிடவே அவன் மூலமிதை வெளியிட்டேன் தெக்கணத்தின் திருவுளமே தேடரும் திருவரமே ! பிறைசூடன் பேரருள் மறைசூடன் நிகராய் பேரண்டத்திலோ ஏதண்டத்திலோ பெருந்தக்கதோர் பெருமான் வேறிலரே வெண்டலையானே. நரை விழும் முன்னர் நாதா நின் நல்லடி வீழ்வது நலமாயமையும். இறையோனே நீங்கா நினைவொடு நெஞ்சக நிறைவொடு நித்தம் உமையொடு நினையும் சிரை சேரறையுள் சிறை வைத்தேன்.
அன்புநாதன் வீடருகில் அமைந்ததொரு அரைகுறை ஆருடனோ வெய்யருக்கு வேண்டியோனாய் விழுதிறக்கி தொழில் செய்வான். அவன் ஐயன் அருள்நிறை ஆவிக்கே ஆபத்து என்று சொல்லி அகம் விட்டு புறம் வந்து அல்லல் பட்டு தலையிழக்க வேண்டாமென தகாதோர் அறிவுரையை தக்கபடி தந்தபடி நம் அகிலம் காக்க அவதரித்த அரும் பிறப்பின் மதி மாற்ற உடன்பட்டு மனம் போல பொய் புனைவான். விண்ணுலக வேந்தரெல்லாம் எம்மன்னவனை வேந்தனாக்கும் விதி எழுதி முடித்த பின்னம் நரி மகன்கள் சதி என்ன நன்றாக செய்திடுமோ ? எம்முலகே பொறுத்திடுக ! இனி என்றென்றும் வளம் பெருகும் நல்லோர்க்கு காலமது நலிவுறாது நலம்செயும். இது நாதர் மீது ஆணையென வேதவாக்காய் விடைதந்து வினவுவோர்க்கு தடை தந்தேன்.
இறையோனருள் இன்னலகற்றி அவன் இம்மையமைக்கும். ஈடிலா எம்மானெழில் பீதக மேனியிற் பீடுடை பூங்கைத்தலம் இடதுள் இரவிக் குன்றிற்கெதிர் வலமமைந்த சுண்டுவிரற் கீழுற்ற சுந்தர இதழ்கள் மூன்றுமொட்டிய முண்டக முகை கொண்டதோர் மேட்டுக்குரியவன் மேதகு புலவனேயென்று இயன்றதை புகன்று அவ்வெழில் கமலம் மீது நறுங்கமலனமர்ந்து நம் நலக்கண் பறிக்கும் சேதியை விமலன் சொல்லி விந்தை செய்தானவனே கொன்றை வேந்தன் கூடுறைந்த குலமகளாம் கோமதியை கொங்கையோடு தழுவிக்கொண்டு குவலயத்தை ஆளுகின்ற கொற்றவன் இவனே என்று கோடிமுறை கூவிச் சொன்னால் மற்றவர்கள் மதிப்பற்ற மயிரொப்பரவர் மனப்பால்தான் என்செய்யும். மன்னன் விதி மாற்றிடத்தான் எத்தகைய மாந்தருக்கும் இவ்வுலகில் வலுவுமில்லை. எதிர்த்திடத்தான் ஈரேழுலகினிலுல் எவருக்கும் வரமுமில்லை .
பாகம் 144
ஐம்பூதத்திலனைத்துமே அண்ணலுக்கு நன்று செய்து அவன் ஆசானிடம் கொண்டு சேர்க்கும். அதிலொன்று ஆணவ மிகுதியாலே அனைத்து அறிவற்ற அரசராலே அதி பயங்கரம் விளைவிக்கும் ஆபத்தின் 'செறிவினாலே அணுவையே பிளந்து அண்டம் அதிர்ந்து அனலே எரிந்து அகிலம் கரிக்கு நிகராய் அலகை எடுக்கும் . பிறிதொன்று பேய்மழை பொழிந்து பிணைந்த புனலாய் சினத்து புயலை மணந்து பூமகளே தத்தளிக்க நீர் நேயன் ஒத்துழைக்க பொன்மகன் புறப்பட்டு 'பொதிகை சேர்வான்.
கோளுலகே கொண்டாடும் கொற்றவன் அன்றொரு நாள் குடிகொள்ள வீடின்றி கொண்டதோர் வறுமையாலே கோழிக் கூடொன்றில் ஆறகவை காலமாக அயர்ந்துறங்கி அதனுள்ளே அல்லலுற்ற காலந்தனை அழுகுரலில் சொல்ல வந்தேன் ! அது தமிழகத்தின் வடமுனையில் தயை இழந்தோர் நிறை கொண்ட நெய்தல் பெரு நகரில் நிறமது வெண்மையுடன் நெடும்கழுகுகள் இறங்கி ஏறும் பெருங்களத்தின் தென்கிழக்கே பிற தேசம் தரும் பனையின் விலைமலிந்த வெறும் கொழுப்பை வேள்வி கொண்டு பதப்படுத்தும் கோட்டையொன்று கொற்றவை பெயரொன்றாய் கூறக்கேட்டேன்.
கொடுங்கண்ணி குடிலொன்று அருகிருக்க ஆளுயர கோரைபுற்கள் அச்சுறுத்தும் பற்களென கரை சுமக்க அதன் அழகெழில் ஏரியிலே அகம் குளிர தினம் தினம் உடல் குளித்து தேறா கனவொடு திண்டாடி வாழ்வமைத்து வளம் கொழித்த வாசல் வந்து வளை பார்த்து வலை வீசி வானுயர விலை பேசி வேண்டும் பொருள் அவன் ஈட்டி வெறும் வாழ்வை பூண்டிருந்தான். வான்மகன் வரம் பெற்று பின் வஞ்சிநிலம் நலமுற வசந்தம் வருவதற்கும் முன்னரவன் ஈரைந்தாண்டாக இழிவாழ்வு இவன் பெற்று இங்கு வந்து வாழ்ந்ததாக அணங்குகளின் அப்பனவன் அருள்வாக்கு பாடச் சொல்லி அடியேனுக்காணையிட்டான்.
அண்ணலை அச்சுறுத்த அகம் தன்னில் கல்லுறைந்தோர் அளவிலா வழிகள் பல அன்றாடம் தேர்ந்தெடுத்து வகைவகையாய் வஞ்சம் புகுத்தி வரம்பற்று கொலை நிகழ்த்தி நெஞ்சமே குமுறும் வண்ணம் நிமலனின் நிறை மனைக்கு நேரெதிர் நிலமுறைந்து நெடும் தொடர் வண்டியோடும் வடமது இரும்பாக வரும் தடம் அருகே சிலபிணங்களை கொண்டு வந்து பேய் மக்கள் இட்டுச் செல்வார் சில தலைமகவை ஆடொப்ப பலியிட்டு அண்ணலை அடக்கிடவே அவனைச் சுற்றி தடை செய்வாரென அணங்கவள் சொல்லக்கேட்டேன். அவன் வடக்கிருந்து வாஞ்சையோடு வாழ்ந்திட குமரி வந்து சேர்ந்ததோர் இளைஞனென செவி சாய்க்க சொல்லியே என் சென்னீரை ஒழுக வைத்தாள். அறம் கொன்றோர் வாக்களித்து அரும்பணி வாங்கித் தந்து வறுமையை போக்க வைத்து வாழ்வையும் செழுமையாக்கி வைப்பதாய் நம்ப வைத்து உறுதியை தந்த பின்னர் உளமிலார் செய்த செயல் உயிர்க்கொலை என்றெவரும் உணராது போயிடினும் அதை கொடுங்கொலை என்றே யானும் கோடிட்டு காட்டிவிட்டேன்.
அந்த அபலையை கூட்டி வந்து நம் அறமகன் வீட்டின் முன்னே அவன் அலறிட மேனியெங்கும் நெருப்பினை பற்றவைத்து நெஞ்சினை உறைய வைக்க அவன் துடித்திட்டான் அலறியழுது ஊரையே கூட்ட எண்ணி ஓலமிட்ட ஓசை கேட்டு ஐயனின் அருகில் உள்ளோர் அதிகாலை மூன்று தன்னில் வெளிவந்து பார்த்தபோது வேந்தனின் வீட்டுமுன்னில் அந்த விபரீதம் நடந்ததற்கு தடயங்கள் எதுவும் இல்லை. விடிந்ததும் மாந்தரெல்லாம் வினை தன்னை தேடி தேடி விழிகளால் கண்ட காட்சி பீதியை கிளப்ப கண்டார். அருகினில் புதர் மறைவில் அரை உடல் எரிந்த நிலையில் அகவையோ இருபதிருக்கும் இளைஞனின் சடலம் தன்னை அங்கிருப்போர் கண்டுவிட்டு அடுத்த அமைந்த பூனைகட்கு அழைப்பு விட்டு வரவழைத்தும் அதிகார பூனை வந்து தடயத்தை அழித்ததன்றி தர்மத்தை தகர்த்தபடி பிணத்தையும் கொண்டு சென்று பெயருக்கு வழக்கு இட்டு பிறகங்கு பொய் புனைந்து சடலத்தை சொந்தத்திற்கு சண்டாளர் சமர்ப்பிக்காமல் பணம் பெற்று வாய்மையினை வன்கொடுமை செய்தனரே.
வாழ வேண்டி வந்ததொரு வலுவிழந்த இன்னொருவன் வறுமைக்கு இரையாகி வாழ்ந்ததொரு சேரிமகன் ஏழ்மை கொல்லும் முன்னாலே இழிமக்கள் கொன்றனரே வேறொரு நாள் வேந்தனிவன் வீடருகே வரவைத்து ஏரிக்கரை மீதினிலே ஏறவனை பலியிட்டு எடுத்து வீசி சென்றனரே. அவன் ஏழைத்தாயின் மூத்ததொரு இதயமுறை பதின் பருவ பாசமூறும் மகனென்று பைரவரே பகன்றாரே. ஐயனின் அகம் நடுங்க அற்பர்கள் செய்த கொலை நரபலியாய் அன்று கண்டு நாபுலர வாக்கிசைத்தேன். நஞ்சை கூட நல்லமுதாய் நாடி உண்ட பெருமானே அந்நரியோரின் கதை முடிக்க உன் நறும் சடைமேல் குடியிருக்கும் நல்லரவை ஏவி விட்டு நாடெல்லாம் களையெடுப்பாய். அவன் சுவடெல்லாம் தடம்பதித்து சுடரெனவே ஒளி கொடுத்து சூழ்ச்சியரின் பிணம் குவிப்பாய் சுந்தரனே போற்றி போற்றி ! சோதனையை மாற்றி தேற்றி சாதனைக்கோர் வித்தை ஊன்றி மேதகனை மீட்பனாக்கி மேதினியில் விந்தை செய்வாய்.
வையத்து மாந்தர் எல்லாம் வளம் பெற்று உய்யவே நலம் செய்யும் உலகளந்தான் உதயமாக உன் வரமே போதும் என்று உளமார உனை பணிந்து உத்தமர்க்கு உயிர் வரத்தை ஒப்பிலாது அருளிடுவாய் அது ஒன்றே போதுமென்று அடிபணிந்து வேண்டுகிறேன். நீ உமையுறைந்தது உடல் புணர்ந்து உல்லாசம் உணர்வது போல் இமைப்பொழுதும் கைவிடாது எம் போன்று ஈரநெஞ்சம் உள்ளோரை இடைவிடாது அருள் புரிந்து உண்மை அன்பு அறவழியை ஒப்பற்ற உயர்நெறியாய் கொண்டோரை ஒருபோதும் ஒதுக்காது பரம்பரை பயிர்வளர்த்து நின் பரமபதம் சேர்ப்பதற்கு யுகமுழுதும் இன்பமுற இனிமை செய்வாய் இறையோனே !
மின்னிய இயல்போடு மேதகு நாயகனோ பட்டயம் நட்டப்பட்டு பருவங்கள் பாழ் பட்டு கிட்டிய பட்டியலால் கிடையா பயனுற்று பற்றிய தொழில் ஒன்றை பார்த்து செய்தாலும் கிட்டிய பெருந்தொகையோ பத்து சவரத்திற்கும் பளுவான பெருந்தொகையை அவனுக்கீன்றதுதான் அன்னை பரதத்தில் ஆனையாய் அமைந்த வங்கியென மோனைப் பிழையுற்று முரண்பட்ட எதுகையுடன் யானே பாடல் தந்தேன். இரும்பை கொண்டமைத்து எழில் மிகு கலை நயத்தில் இல்லத்தின் சாளரத்தில் இணைக்கின்ற கம்பி கொண்டு எழிலுறு கைவண்ணம் எழுப்பிடும் அணிகலன் போல் அமைக்கும் பணி ஒன்றை பணியாள் உதவியுடன் பதித்த பாழ் தொழில் தான் அவன் அகவை ஐநான்கில் அரசின் உதவி பெற்று வங்கிக் கடன் பெற்று வாழ்ந்தும் வளர்ச்சியற்று பின் வாரா கடனுற்றான். இதை பன்னக பேரரசன் படமெடுத்தாடுகின்ற அம்பலப்பதி தன்னில் அண்ணலை சுற்றியுள்ள அனைவரும் அறியும் முன்னே அழல் விழி திறந்த வண்ணம் அடியேன் அறிவேனே.
பாகம் 145
மது மோகம் கைவிட்டு மாது மோகம் மெய்விட்டு சூதுயென்றும் அகம்விட்டு சுடர்விடும் ஒளி வேண்டும். இவையெல்லாம் நலவாழ்வின் நிலை தகர்த்து நாதனையே அகலச் செய்து நரகம் சேர்க்கும் என்றறிவாய். பின்யேது மோகம் இப்பிறவிக்கு வேண்டுமென்று பிறையோனை கேட்டதற்கு இம்மை மட்டுமன்று எம்மையிலும் எக்கணமும் எந்தன் மேல் இணையிலா பக்தி கொண்டு இடைவிடாது எனை நினைந்தால் மும்மைக்குள் மூழ்கடிக்கா மூதறிவை யான் தந்து எமன் தீண்டா காப்புக்கு என்றென்றும் பொறுப்பேற்பேன் என்றவனும் வாக்களித்தான். நன்றவனை நான் நினைக்க நாதனவன் நமக்களித்த நல்வாக்கின் நாக்கோடாமை நன்னெறியை நீயறிக நீடுலகே !
மன்னவனை மகிழ்விக்க மனதினை குளிர்விக்க நான்முகன் நன்மைந்தன் நறுங்கை வீணை போன்றே நலம் செய்யும் ஏழிசை கலைஞர்கள் எல்லோரும் வானகக் கோள்விடுத்து வரம் பெற்று கீழிறங்கி காதினிக்கும் தேனிசைக் குரலேந்தி தென்னகத் தீரனுக்கு தெள்ளமுதால் விருந்து வைத்து மன்னவனை மகிழ்வித்து மண்ணை விட்டு சென்றிடுவர். அதிலொருவர் பொன்னி புகுந்தோடும் பூம்பாதம் சீர் சேரும் காளியூர் கர்வம் கொள்ளும் கற்கண்டாய் கானம் தந்து கண்ணனெனும் கள்வனுக்கு மன்னனென பெயரெடுத்து மாயோனவன் கீதம் பாடி மறுமையின்றி சேயோன் சீரடி சேர்வானவன். கழைக்குழல் வடிவமீன்ற காட்டு மூங்கில்களை கார்வண்ணன் புகழ் பாடக் கட்டளையாய் கானம் பாடி நம் பூங்காதுக்கு பாகு தந்து புசிக்கப் பணிந்த பாணனும் பிறப்பறுத்து பாருலகு வரும் வரைக்கும் விண்ணிலே இவன் அருகில் பண்களால் பணி செய்வான். சிவனாரின் மைந்தனாய் சிலுவை தாங்கி மறைந்தோனின் அடிமைப் பெயர் தாங்கி அண்ணலின் அரும்பு பருவம் முதல் ஆளாகும் நாள் வரைக்கும் கரும்பு குரலால் கனிரசமளிக்க பிறந்து பெயரெடுத்து பெம்மான் பேரரசு பேணும் போது அம்மானும் புகுந்திடுவான். கலை மகளின் பெயர் எடுத்து கடை பெயரில் மைதிலியின் நாயகனை இணைத்ததொரு தேவதையும் இசையரசி கருங்குயிலும் இன்னுமொரு சிறு குயிலும் மன்னுயிரை மகிழ்விக்க வந்ததென்று எண்ணற்க.
இத்தனை பறவைகளை தன் இசை கோர்வையில் இட்டு வைத்து ஏழிசை அமைத்த நம்பிக்கை நாதனவன் நம்மண்ணிற்குரியவனாய் சேர்த்த இடம் சீர்மிகு சென்னையம்பதியாய் கண்டேன். இவரெலாம் மன்னாதி மன்னன் வரும் தோறும் அவன் மண் வாசல் வந்தவண்ணம் மாளாது வாய் இனிக்க பாடிப் போகும் வானவர்கள் என்றறிக . சனகியென்றொரு சலிக்காத வானம்பாடி வந்துதித்து வரம் பல பெற்று போகும். எம்மானின் இதயத்தை இளமையெலாம் இனிக்க வைத்து இவன் எழுந்ததும் இங்கிருந்து பறந்திடுமே.
ஆதியிலே காதலர்கள் அருள் வனத்திலன்று யாதொரு இறைச்சியையும் ஏற்காது இயல்புறு பசியாற்ற ஈடறு கனியுண்டே இல்வாழ்வில் இன்பமுற வாழ்ந்து வந்தும் வஞ்சக சாத்தனவன் மாற்றியதால் சைவ நெறி மாறியது. ஆதலாலே சரித்திரமே நாறியதும் சாகும் வரம் சாபமென சந்தித்த தாபங்களை சந்ததியர் கொண்டதாலே பின்னர் வந்த பிள்ளைகளும் பிறப்பறுக்க இயலாமல் பிழையுற்றே வளர்ந்ததனால் பேரின்ப குறைவுற்று அவர் பேரன்பை இழந்தபடி பெருந்தேவன் அகன்றதனால் மன்னுயிரே மாசுற்று மனம் கொன்று சுழன்ற பின்னும் மறுபடியும் மீட்பனவன் மனமிரங்கி மண்ணிறங்கி தெக்கணத் தென் முனையில் தேவதேவி நன்முனையில் எக்கணமும் தலைவணங்க திருமார்பன் திரும்பவந்தான். மேதினியில் மாண்புடையோர் மேன்மையுடன் மனம் களிக்க மேய்ப்பனவன் விரும்பி விட்டால் மீளாதோ பாழுலகம் ? உள்ளொளி தான் ஒளிர்ந்து விட்டால் ஊனுண்ணா உயர் நெறியோர் உலகெல்லாம் நிறையாரோ ? கற்கியின் காலமினி காஞ்சனமாய் கனியுமென கடினம் என்ற வார்த்தைகூட கவிதையிலும் காணாத காவிய ஆளுமை கீழ் பூமகளே புன்னகைக்க புல் பூண்டும் கண் வடிக்கா பொற்கால ஞாலம் வரும் கண்ணனது விதி என்று கருடாழ்வார் சொல்லிச் சென்றார். கழலூதும் கருஞ்சடையன் கண்காணா காட்டுக்கு கனவில் கூட வழியமைக்கான். புருடோத்தமன் ஒருபோதும் போகாத ஊருக்கு பொல்லாத வழி சொல்லான். கனவோடு காத்திருந்திருப்பேன். புனல் சூடி சடை முடித்த பொறிவிழியன் புதல்வனைப் போல் பொலிந்ததனால் அவன் எழவே வழிவகுப்பான். அண்டத்தார் பழி சொல்லும்படியெந்தன் அருள்வாக்கை பழுதாக்கான். அனைவர்க்கும் படியளக்கும் அர்த்தநாரி அம்மையினை அணைப்பது போல் அரவணைத்து விந்தைக்கு விந்தை செய்து விழுதிறக்கி எமைக்காப்பான். இமைப்பொழுதும் ஈசனவன் எனக்கெதிராய் எழுகின்ற இடர் தாங்கான். இதயமிலார் கொள்கைக்கு என்றளவும் இசைவளிக்கான் என்பதனை எம்மை விட யாரறிவார் மும்மையிலும் மூடாத விழி தருவாய் முக்கண்ணா மூலவனே !
உலகின் நலம் விரும்பி உலகநாதன் அருளோடு இமயத்தலைபுகுந்து இடருற்ற நகருண்டு. அது புதையும் தருவாயில் புன்கணீர் பொழித்திடுமே. அங்குறையும் எம்மானுடன் உயிர் வதைப்போர் வந்திட்டே உடனிருந்து சதி செய்வர். இறையோன் இதைக்கண்டு எவ்வுடலும் புதையும் துயர் செய்வான். ஆயின் பொன்மானை தப்பவைத்து புவி மாது நலம் செய்வாள். பொதியப்படாது பூவுக்குள் சென்றவன் போல் புண்படாது பொன்மேனியொடு பூமான் மீண்டெழுவான். விழுந்தோர் சடலமாகி விழுவது வெளிவரா நமனூர் என்றும் வேந்தன் வெளிவந்து வெண்டலையான் அருளுற்று சேர்ந்த இடம் எந்தன் சிறுமுனியை பொதிந்த நறுமலையென தெளிந்த ஒளி கொண்டு தெய்வத்தை யான் கண்டேன் !
துப்புடை தூயோன் துவளா நுட்பமே தொடர்கதை ஆயினும் அதை தூரத்தில் நின்றவன் துன்பத்தைக் கண்டேன் யான். துப்பாக்கி தூக்கியே நால்வர் துணிந்தும் எம்செம்புயத் தாமரைத் தாயின் செம்மலை தீர்த்திட எண்ணியும் தீயோர் கையெழவில்லையே. அதிலொன்றை கள்வர் பூனைகள் கைது செய்து கம்பிக்குள் வைத்தும் பின்னம் ஊர் வழக்குரைஞனின் உறுவலிமை பாய்ந்ததால் தீரனாய் அத்தெருமகன் நிமிர்ந்து திரிந்த வெளியெலாம் தெரிந்தே வீணாகும் கயவர் கொண்ட கனிவள வாழ்வதை வேரறுக்க வல்லவன் பன்னகம் அணிந்த பைந்தமிழ் தேவனின் தென்னகம் போற்றிடும் திருக்கண்ணொன்றே தேயாத சாட்சியே !
பாவம் புரியா பத்தரை மாற்று பைம்பொன் கற்கியால் பாரிலிங்கு யாதொரு இன்னலும் எவர்க்கும் எழுந்திடவில்லையே. ஆயினும் எம்மாலுக்கெதிராய் எழுந்தோரனைவரும் முன்னம் மூலமாய் ஊழ்வினை ஊன்றிய வீரிய விதையே அன்றி முறையொடு முளைத்தவையன்று. முகுந்தன் முகம் சினக்க மோதும் மடமைக்குற்றவர் மண்ணில் வேறெவர் மாசுறு இருளர். அண்ணலின் பிறவிகள் தோறும் அறத்தை அழிப்போர் அரக்கர் பாத்திரமேற்று சிரங்களை இழப்பது சிற்றறிவுக்குற்ற செயற் குழுவே இதுவே. அது அகிலம் ஆண்டோன் ஆணவ மொழியின் பெரிய எழுத்து பெரும் கருவமுற்று உரிய பதிணெண் உதித்து முன்வர பின்னம் ரெட்டை பிள்ளையர் பதினொன்பான் பாவியர் எழுத்துகள் பக்கம் பதிந்து மூவெழுத்துடன் முடங்கியபடியே முற்றுப்பெறுமே. இதில் அங்கம் அணைத்தோர் அனைவரன்னையும் அற்பர் பாதையில் அழகுற நின்று பல்லை காட்டி பல் பொருள் ஈட்டிய பாவையர் மைந்தர் என்பதை அறிக. தீங்கே செய்யா தென்னவ தீரனை தேடித்தேடி தீர்த்திட துணிந்தோர்க்கு யாதொரு இன்னலும் இன்முகன் இவனால் எள்ளளவும் கொள்ளா குறைமக்களென்றே கங்கை சடையோன் கனலென எழுந்து அக்கயவர் கதையை முடிக்க துணிந்து பொழுதெலாம் காத்து பொறிகளை வைப்பான் அப்பொல்லார் புகுவது நரகெனும் உலகே.
*********************** தொடரும்******************
இந்த பாடலின் தொடக்கம் அப்படியல்ல. பாட்டின் Preface இதுதான்
ReplyDeleteபாகம் 1
அலைகடல் பாலாய் ஆடிட்டக் கண்டோமதன் நடுவினில் ஆதி அரவம்தனை அருமெத்தையாக்கி அறிதுயில்கொள் எழிலனந்தன் திருக்கமல பாதம் வருடி திருமகள் பணியக்கண்டோம். கனிரச காப்பியம் போற்றும் கலைப்புகழுலகில் தோன்றி கலி அகற்ற வேண்டி நிதமவனை நெஞ்சிறக்கி நோற்றோர் கண்டோம். அஞ்ஞானிகளறியா வண்ணம் மெஞ்ஞானியர் பணிவிற்கிணங்கி இயலழகு சூழ் கண்டம் தன்னில் இவனெடுத்த பிறப்பிடம் இதுவாய் கண்டோம்.
மலை நாட்டோரம் நல்லரவாய் ஓடும் கால்வாய் கரையில் உயிர் வரம் பெற்றிருப்பான். பாம்பை பஞ்சணை ஆக்கி உறங்கும் அனந்தன் புரிக்கருகே இவன் பிறப்பான். இருவருறைவிட தூரமது அரை நாள் நடை பயணம்.
கன்னி ஒருத்தி கலங்கரை அருகில் மணநாளன்று தன் வரன் துறந்து காட்சி தருவாளே. இவள் மூக்குத்தி மின்னும் முத்தமிழ் அன்னை தெற்கில் வசிப்பாளே. தீரனிவன் திருமெய் காப்பாளே.
அவன் பெயர்
DeleteMy whatsapp 8667294169
This comment has been removed by the author.
Deletehttps://sivapathasekara.blogspot.com/2020/07/aboute-me.html?m=1
DeleteCall: yessamraj@gmail.com
ReplyDeleteHi SamRaj
Deletehttps://sivapathasekara.blogspot.com/2020/07/aboute-me.html?m=1
பாகம் 11��
ReplyDeleteசிவன் பேணும் இவன் தாதை தென்பழனிக் கோலம் பூண்ட குமரன் நாமம் கொள் குலப்பிள்ளையாம் குமரிக்கன்னி அருளாளன் என்பதனை யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே ! வேள்விமலைத் திருக்குமரனருள் பெறவே எழிலழகன் துதிபாடி அதிகாலை மலைஏறி அருள்மழையில் நனைந்தே இவன் தாதை பெற்றானிவனை என்பதை யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே !
தயைகூர் தாதைக்கிவனே தலைமுத்தாய் உதித்தாலும் உதிர்த்த கனகன்னையெனும் சிப்பி நாலின்னல்களையுமுடன் தந்தே ஓய்ந்த்ததென்பதனை யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே !
நம்பிநங்கை நால்வருமாய் எண்ணற்ற பதி வளர்ந்ததன் விதி ஈன்றோர் பணி அரசடிமை என்பதனை யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே !
தரணி போற்றும் தலைவன் இவனென்றறியா தாதை அன்றிவன் அவதாரப்பயனறியாதிருந்து பித்தன் பேரடியடைந்தின்றறிவான் என்பதனை யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே !
இவனுதித்தக் குலமதை கோராமல் கூறுகிறேன் நீயும் கேளாய். ஆநிரைகள் அமுதூறக் குழலூதும் கோபாலன் வகையென கோரிநின்றோர் அறிந்திடுக. ஆயினுமிக்குலமழிய இதிலுதித்தோர் புல்லுக்கும் புவியிலெவ்வுயிருக்கும் தொல்லைதரா நல்லோனிவனுக்கெதிராய் வன்கொடியோர் கரமிணைத்து இன்னல் பல செய்வாரென்பதனை யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே !
தென்முனை திக்கின் மேலழகன் மலையில் பிறக்கும் குமரன் குறவஞ்சி கொடியாள் நதியாய் ஓட அதிலிவன் குளித்தே குளிர்ந்தது பதினகவை பருவம் அன்றோ. அது பங்கயநாபன் நகரமென்பதனை யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே ! கோட்டையிவனைக் காக்க குடிபுகுந்த ஈன்றோர் ஈராண்டே வாழ்ந்தே விடைபெற்றார்.
முன்னர் இவனுறைந்த பூவூர் தானென சொன்னதோ வாளை ஏந்தும் தீரனிவன் வாழ்வூரும் அதுவேதான். தீரனிவன் வாழ்ந்த இந்நல்லூரில் பிரமன் முகம் போலாண்டுகள் மலர்ந்தானங்கே. மலைக்குன்றான் மயில்வாகனனுக்கு பாற்குடமெடுத்தே பாலகனை வழிபட்டானே. அங்கப்பன் சாமி சுப்பையனிடம் இப்பையன் குருகுலம் புகுந்ததனை யாரறியாதிருந்தாலும் யாமறிவோம் பரம்பொருளே !
தென்குமரி நன்னிலத்தில் திருவருளான் பொன்னிலத்தில் நெஞ்சமதில் நஞ்சோடும் நரியினமும் நாவினில் வேதமூறுமந்தணனும் ஒன்றாய் கூடி பாதகம் புரிந்தே புண்ணியமிழப்பாரே. இம்மான் கதை முடிக்க இணைவாரே. எங்கெவர்க்கும் தீதறியா தேவநேயன் இவனன்றோ.
நன்னெறியை நல்லடியாய் பின்பற்றும் இம்மாயோனிதை நன்கறிவான். எங்கெவரும் அண்ட ஒண்ணா அழிவிலா இவ்வாற்றலின் வருகை பேரிடியாய் எழும் போது எண்ணற்றோர் தனை மாய்ப்பர். கூண்டோடே குடிமாய்ப்பர். தப்பிப்பதரிதே என்றுத் தார்மீக முடிவெடுப்பர். எஞ்சியதும் மிஞ்சியதும் எண்ணற்ற கொடியோர்கள் இவன் கைவாளுக்கிரையாகி காலடியில் வீழ்ந்திடுவார். எவர் கண்ணீரையும் ஏற்கமாட்டான். இவனோ கடும் சினத்தான் சேர்க்க மாட்டான்.
அப்பா பெயர்-- ஆறுமுகம்
DeleteIndha paadaluku meaning sollunga sir
ReplyDeleteயார் இது
ReplyDeletethese poems were about an immortal ruler. there were many prophecies told, in which many people predicted about him.
Deletewhat is meaning of immortal ruler?
Deletesir could you please update further.. after 145 poem.. i have been watching your daily videos without fail.. congrats sir!!
ReplyDelete🙏
ReplyDeleteநண்பரே இந்த அறம்பாடி சித்தர் எங்குள்ளார்......🙏
ReplyDeleteஎங்கு கிடைத்தது இந்த பாடல்
ReplyDeleteஇந்த பாடல் மேல சந்தேகம் இருக்கு..எங்கிருந்து கிடைத்தது சொன்னால் சந்தேகம் தீறும்..உபயோக தமிழ் ரொம்ப பிந்தயகால தமிழ் மாறி தெரியல
ReplyDeleteஇந்த பாடல் பற்றிய முழு தகவல் தெரிந்தால் ...என் சந்தேகத்தை தீர்த்துவைக்கவும் call 8883439696
ReplyDeleteeverything going to be alright very soon
ReplyDeletecomming soon
ReplyDeleteஒப்பரிய தேவனிவன் உதய நாளை ஒப்புவிப்பேன் உத்தமனே கேளாய். ஐந்தடுத்து சுழியம் வந்தே ஆறை ஐந்தரவணைக்கும் நாலிலக்கக் கலியாண்டில் நமக்காறுதலைத் தரவே மாதம் மறைந்தொழுகிடுமாம் வருமிரு சீர்சேரின். இவ்வரிமா சிவனருள் பெற்றுதித்திடும் வளர்மதியாம் கரும்பிறை கழிந்த பதினொன்றாம் நாளில் தைத்தொட்ட கும்பத்திங்களொளி காலைப்பொழுது
ReplyDelete5065 கலியாண்டு
கிமு 3102 துவக்கம்
5065-3012= 1963 +1 = 1964