koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Friday, August 28, 2015

மகர ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

மகரம் : 




                  மகர ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் நீண்ட உயர்ந்த கம்பீரமான உடல் அமைப்பையும் உடம்பில் மச்சங்களையும் பெற்று காணப்படுவர். படிப்பில் தேர்ச்சியும் கஷ்ட்டப்பட்டு படிப்பவர்கலாகவும் இருப்பர். ஆடை ஆபரணங்களில் பிரியமும் சுத்தம் சுகாதாரத்துடனும் இருக்க விருப்புவர்.

                இவர்கள் பிறந்ததற்கு அடுத்து இவர்களது குடும்பம் செல்வம் செல்வாக்குடன் புகழ் பெற்று வளர தொடங்கி இருக்கும். தன் விருப்பம் போல் வாழக்கூடியவர்களாகவும் மனைவி மக்கள் மீது அதிக பிரியத்துடனும் இருப்பார்கள்.

                  சனி ராசி அதிபதியாக வருவதனால் நீதி நேர்மையை கடைப்பிடித்து வாழ்வார்கள். முதல் 30 ஆண்டுகள் கொஞ்சம் கஷ்ட்டங்கள் இருந்தாலும் பின் வருகாலங்களில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைவார்கள். குடும்பத்திற்கு இறை அருளும் சந்தோசமும் நிறைந்து இருக்கும்.

              உத்திரட்டாதி 2, 3, 4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2, ஆம் பாதங்களில் பிறந்தவர்கள் மகர ராசிக்காரர்கள் ஆவர். 

No comments:

Post a Comment