koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Friday, August 28, 2015

மீன ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

மீனம் : 




            மீன ராசியை ஜென்ம ராசியாகக்கொண்டு பிறந்தவர்கள் சத்தியம் தவறாதவர்கள். யாருக்கும் தீங்கு எண்ணாதவர்கள். இளமையில் இளைத்த தேகத்துடனும் பின்பு திடகாத்தியமான உடலமைப்பையும் பெறுவார்கள். கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெறுவர். அனைவரிடமும் மனம் விட்டு வெளிப்படையாக பழகக்கூடியவர்கள்.

             இவர்கள் பின்னால் வருவதனை நினைத்துப் பார்த்து மிகவும் எச்சரிக்கையாக வாழக்கூடியவர்கள். வருங்காலத்திற்கு தேவையானதை இப்போதே செய்து வருவார்கள். விடாமுயற்சியுடன் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பார்கள். தாய், தந்தை, சகோதிர சகோதிரிகள் மீது அதிகமான பாசம் வைத்திருப்பார்கள். 

           குரு ராசி அதிபராக வருவதனால் கடவுளின் ஆசியும் உயர்ந்த பதவியும் நல்ல ஞானமும் கிட்டும். உதவி செய்தோரை ஒருபோதும் மறவாத குணம் கொண்டு அனைவருக்கும் நல்லதே செய்யக்கூடிய அமைதியானவர்கள் மீன ராசிக்காரகள்.

          பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மீன ராசிக்காரர்கள் ஆவர்.   

No comments:

Post a Comment